“தீர்க்க சுமங்கலியா வம்சம் பெருகி பெரு வாழ்வு வாழணும்...” என்று மூவரும் ஒத்து வாழ்த்த கண்கள் கலங்கியது அவர்களின் ஆசிர்வாதத்தில்.
அதை மறைத்துக்கொண்டு புன்னகையுடன் எழுந்தவள் சின்ன பாண்டியனை வாங்கினாள்.
“இன்னைக்கு எங்க கூடவே இருக்கட்டும் மாதுமையாள்... நாளையில இருந்து உங்க கூட இருக்கட்டும்...” மீனாச்சி சொல்லிவிட, அவரை மறுக்க முடியாமல் பெரிய பாண்டியனின் அறைக்கு உடல் உதற சென்றாள்.
அங்கே அவளை எதிர்நோக்கி பாண்டியன் அமர்ந்து இருந்தான். வந்தவள் அவனிடம் பாலை கொடுத்துவிட்டு நகர்ந்து சென்று நின்றுக்கொண்டாள். அவளின் அந்த செயலில் சினம் எழுந்தது பசும்பூண் பாண்டியனுக்கு.
படுக்கைக்கு அருகே இருந்த திராட்சை பழத்தை எடுத்து அவள் மீது குறி பார்த்து வீச, திரும்பி பார்த்தாள் முறைப்புடன்.
“இங்க வாடி...” என்றான் கட்டிலை காட்டி.
“இங்க பாருங்க.. நீங்க பண்ணுனது கட்டாய கல்யாணம். இதுல நீங்க என்னை ரொம்பவும் நெருக்கிட்டு இருக்கீங்க. எனக்கு கொஞ்சம் அவகாசம் குடுங்க. எடுத்த உடனே எல்லாத்தையும் ஏத்துக்க முடியாது.” படபடப்பாய் பேசியவளை ஆழ்ந்து பார்த்தவன், எழுந்து சென்று விளக்கை அணைத்துவிட்டு அவளிடம் நெருங்கினான்.
“ப்ச்... நான் உங்ககிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன்... இப்படி விளக்கை அணைச்சா...” சொல்லி முடிக்க விடாமல் அவனது இதழ்கள் அவளது இதழ்களை சிறை செய்துக்கொண்டது.
அவனது அணைப்பில் இருந்து திமிறியவள் வெளியே வர முயல அவனது இரும்பு பிடியில் அவளால் ஒரு அங்குலம் கூட நகரமுடியாமல் திணறிப்போனாள்.
“என்ன இது விடுங்க...” என்று அவள் எவ்வளவு போராடினாலும் அவனது கைச்சிறை மட்டும் விலகவே இல்லை.
“எனக்கு நீ வேணும்... இப்பவே..” என்றவன் அவளது ஆடையை கலைத்து எறிய, அவனது அதிரடியில் வெளிப்படையாகவே நடுங்க தொடங்கினாள்.
“இது வேணாம்... என்னை விட்டுட்டுங்க...” என்றவளது கெஞ்சல் அவனை கொஞ்சமும் அசைத்து பார்க்கவே இல்லை.
மிக மெலிதான அவனுடைய தீண்டலை தவிர்க்க முடியாமல் தடுக்க முடியாமல் தடுமாறிப்போனாள்.
ஆடைகளை நீக்கி அவன் முன்னேறும் சமயம் அவளே அவனை தன்னோடு அணைத்துக்கொள்ள, பாண்டியன் வெற்றி பெருமிதம் கொண்டான்.
கர்வமாய் இருந்தது அவனுக்கு அந்த நொடி... தன் வெற்றி பெருமிதத்தை தன் வேகத்தில் அவளுக்கும் உணர்த்த அவனது வேகம் கண்டு தடுமாறிப்போனாள்.
மிக மெலிதாக தன்னிடம் விட்டு அவனை விலக்க பார்க்க, முன்பை விட அதிகமாய் அவளிடம் ஒன்டினான். அவனது ஒன்றுதல் அவளை பலமிழக்க வைக்க, சேயாய் அவனை தன்னோடு தாங்கிக்கொண்டாள்.
அவளது தடைகளை கடந்து செல்லும் ஒவ்வொரு வேலையும் இன்பத்தின் சாயல் அவனது முகத்தில் தெரிய அந்த முகத்தை தன் நெஞ்சோடு பொத்தி வைத்துக்கொண்டாள். அவளது நேசம் சுமந்த விழிகள் அவனுக்கு புரிய, அவனையும் அறியாமல் அந்த நேரத்தில் அவனது கைகள் தன் வீரம் செறிந்த மீசையை முறுக்கிக்கொண்டது.
அவனது அந்த செயல் அவளை இன்னும் வெகுவாக கவர, தன் வெட்கத்தை துறந்து பற்களைக்கொண்டு அவனது மீசை முடியை கடித்து இழுத்தாள்.
அதில் அவனது வேகம் இன்னும் அதிகரிக்க, விடிய விடிய அவளை கொண்டாடி தீர்த்தான். அவளை சிறிதும் யோசிக்க விடாமல் தன் கைவசம் வைத்துக்கொண்டவன் தன் தீராத ஆசையெல்லாம் அந்த ஒற்றை இரவில் தீர்த்துக்கொள்ள முனைந்தான்.
அவனது அதிரடியிலும் மென்மையிலும் தன்னை தொலைத்தவள் முழுதாக அவனுக்கு தன்னை கொடுத்துவிட்டு விழிகளை மூடிக்கொண்டாள்.
“கண்ணை மூடாதடி... என்னை பாரு...” அதட்டல் போட்டான்.
“எனக்கு என்னவோ போல இருக்கு...” கெஞ்சியவளின் வார்த்தைகள் எல்லாம் அவனது இதழ்களுக்குள் சங்கமம் ஆனது.
“என்னை மட்டும் தான் பார்க்கணும்...” மீண்டும் மீண்டும் அவன் முரண்ட, சின்ன பாண்டியனை போல இவனது இந்த பிடிவாதம் அவளுக்கு பிடிக்கவே செய்தது.
விடிய விடிய அவளை கொண்டாடி தீர்த்தவன் அவளை இறுக கட்டிக்கொண்டே தூங்கிப்போனான். அவனது பிடியிலிருந்து வெளியே வர முடியாமல் அப்படியே படுத்து கிடந்தவளுக்கு உடலெல்லாம் பெரிதாக வலி எடுக்க ஆரம்பித்தது.
“குளிக்கணும் விடுங்க...” அவனது காதோரம் சொல்ல,
“அப்போ என்னை கவனிச்சுட்டு போ..” என்றவன் செயலில் இறங்க, முகம் சிவக்க அவனுக்கு ஒத்துழைப்பு கொடுத்தவள், இரவில் தூர எறிந்த புடவையை எடுத்து தன்னை சுற்றிக்கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்துக்கொண்டாள்.
தீயாய் எரிந்த உடலை குளிர் நீரினால் சமாதனம் செய்தவள், மாற்று உடை இல்லாததை அறிந்து கண்கள் கலங்கிப்போனது.
அந்த நேரம் கதவு தட்டப்பட, லேசாய் எட்டடி பார்த்தாள். அறையின் உள்ளே யாரும் இல்லை. கொக்கியில் மாட்டி இருந்த துண்டை சுற்றிக்கொண்டு வெளியே வந்தாள். கட்டிலில் சிவப்பு நிற புடவையும் மற்ற உடைகளும் இருக்க அடக்கிய கண்ணீர் விழிகளில் வழிந்தது.
நேசமான அழுகையுடன் அதை எடுத்து உடுத்தி முடித்தாள். அந்த நேரம் அவளின் இடையை பசும்பூண் பாண்டியன் வளைத்து பிடித்து அவளின் தோளில் முகம் புதைத்தான்.
அதை எதிர்பாராதவள் தடுமாறி போனாள்.
“கீழே போகணும்...” என்றாள்.
“மாமா சொல்லுடி... எப்போ பாரு மொட்டையாவே பேசிட்டு இருக்கிறவ...” காதல் மயக்கத்தில் பேசினான்.
“மிரட்டி கல்யாணம் பண்ணினவங்களை எல்லாம் அப்படி கூப்பிட முடியாது..” என்றாள் நறுக்கென்று. அதில் அவனது முகம் சிறுத்து போனது. வலிக்க அவளது இடையே இருக்கி பிடித்தவன்,
“கட்டாயப்படுத்தி கல்யாணம் கட்டுனதுல இப்போ நீ எங்க தேஞ்சி போயிட்டியாம்... எல்லாம் நல்லா தானே வச்சு இருக்கேன்..” கடுப்படித்தான்.
“ஆமா ரொம்ப நல்லா வச்சி இருக்கீங்க... என் குடும்பத்தை எனக்கு ஆகாம பண்ணி போட்டுட்டீங்கள்ள... அது ஒண்ணு பத்தாதாக்கும்...” சிடுசிடுத்தாள்.
“ஆமா அப்படியே உன் வீட்டுல இருந்தப்ப நல்லா மூணு வேலையும் கறியும் சோறும் திண்ண. இங்க வந்து உன்னை முழு நேரம் பட்டினியா போட்டு இருக்கேன் பாரு...” முறைத்தான்.
“மூணு நேரம் நல்ல சோறு குடுத்தா போதுமா...? வேற எதுவும் வேணாமா...?” என்றாள்.
“என்னை பொறுத்த வரைக்கும் உனக்கு இது போதும். உங்க வீட்டுல நீ இருந்த இருப்புக்கு உன்னை இங்க நல்லா தானே வச்சு இருக்கேன். அதனலா ஒழுங்கா வாயை மூடிக்கிட்டு இரு... சும்மா காலையிலையே கடுப்பேத்தாதடி... அப்புறம் வாங்கி கட்டிக்குவ சொல்லிட்டேன்...”
“ஆமா நான் எதுவும் பேச கூடாது. எதுவும் கேட்கவும் கூடாது... அப்படியே ஏதாவது பேச வந்தா உடனே வாயை அடைச்சிடுறது... இது தான் வேலை.” அவனை முறைத்து பார்த்தாள்.
“உன்னை பேசவிட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கேன் ல.. அதனாலா நீ இன்னும் பேசுவ, இதுக்கு மேலையும் பேசுவடி..” என்றவன் அவளின் கையை பிடித்து ஒடித்து திருப்ப,
“அம்மா...” என்று அலறினாள்.
“அம்மா இல்ல மாமான்னு சொல்லு. உன்னை விட்டுடுறேன்...” என்றான்.
“முடியாது சொல்ல மாட்டேன்...” வீம்பு பண்ணினாள்.
“அப்போ சேதாரத்துக்கு நான் பொறுப்பு இல்லடி...” என்றவன் தன் வெற்று மார்போடு அவளை நெருக்கி அணைத்தவன், அவளின் வயிற்றில் தன் கரங்களை தவள விட, உதடு கடித்து தன் உணர்வுகளை அடக்கப் பார்த்தாள்.
ஆனால் முடியாமல் அவனது நெருக்கத்திலும் தொடுகையிலும் அவளையும் அறியாமல் அவளது இதழ்கள் “மாமா...” என்று அலறியது.
Yen hero ivlo virappa irukkaru





