மெல்ல திரும்பி பார்த்தாள் பயத்தில். மை பூசிய விழிகள் அவனது தொடுகையால் சிவந்து போய் இருப்பதை ரசித்துக்கொண்டே அவளின் வெற்றிடையில் தன் கரத்தை பதித்து அழுத்தி பிடித்தான்.
அதில் ஜெர்க்கானவளின் விழிகள் அகண்டது இன்னும் பெரிதாக. அதையும் ரசித்தவன் அவளின் காதோரம், “இப்பவே போகலாமாடி..?” என்று கேட்டான்.
“ஏ... எங்க...” திணறினாள்.
“அந்த மலை அருவிக்கு தான்...” என்றவனது உதடுகள் அவளின் காதில் உரச, தன்னுள் ஒடுங்கினாள்.
“அது நான் சும்மா பையனுக்காக...” சொல்லி முடிக்கும் முன்பே,
“அம்மா அம்மா...” என்று முன்னிருந்த பொற்கையன் துள்ளிக்கொண்டு அழைக்க, அதில் அவன் கீழே விழுந்து விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டவள்,
“என்னடா ஆச்சு... எதுக்கு இப்படி துள்ளுற...” என்றவளிடம் தூத்தில் தெரிந்த மயிலை சுட்டிக்காட்டினான்.
“மயில் டா அது பேரு... தொகை பாரு எவ்வளவு பெருசா இருக்கு...” மகனுக்கு பதில் சொன்னவளை இம்சை பண்ண பாண்டியனுக்கு மனம் முரண்ட, இடுப்பில் பதித்திருந்த கையை இன்னும் சற்று அழுத்தி பதிக்க ஒரு நொடி திகைத்து போனாள்.
திரும்பி அவனை பார்த்தாள். பார்த்தவளின் இதழ்களை ஒரு நொடி தன் இதழ்களால் பற்றி விடுவித்தவன், கட்டிலில் சென்று படுத்துவிட்டான்.
அவன் விலகி சென்றபின்பே ஆசுவாசம் அடைந்தவள் தன் மகனிடம் கவனத்தை திருப்பினாள். மீனாச்சியம்மையுடன் இன்னும் சில ஆளுக்காரர்களும் உணவினை எடுத்துக்கொண்டு மேலே வந்து பரிமாற,
“இவ பார்த்துக்குவா ம்மா.. நீங்க போய் வந்தவங்களை கவனிங்க...” என்றான்.
“சரிப்பா...” என்றவர் கீழே செல்ல, மாதுமையாள் இரண்டு தட்டில் உணவை போட்டு ஒன்றை பாண்டியனிடம் கொடுத்தவள், இன்னொன்றை கொற்கையனிடம் கொடுக்க,
“ஊட்டி விட சொன்னேனே...” அவன் முறைப்பாக சொல்ல,
“மறந்துட்டேன் டா செல்ல குட்டி..” கையில் தட்டை எடுத்துக்கொண்டு கொற்கையனை இடுப்பில் தூக்கிக்கொண்டு மீண்டும் குறுங்கண்ணோரம் சென்று நின்று வேடிக்கை காட்டிக்கொண்டே உணவினை ஊட்டி விட்டாள்.
அதை அமர்ந்த படி கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான் பசும்பூண் பாண்டியன். தன் முதுகில் ஊசி குத்துவதை போல் ஓர் உணர்வு ஏற்பட, திரும்பி பார்த்தாள்.
பாண்டியன் அவளை தான் துளைப்பது போல பார்த்துக்கொண்டு இருந்தான். அவனது பார்வையை கண்டவளுக்கு திக்கென்று இருந்தது.
பட்டென்று திரும்பிக்கொண்டாள். ‘எப்போ பாரு ஆளை முழுங்குற மாதிரியே பார்க்க வேண்டியது.’ மனதோடு புலம்பியவள் மகனிடம் கவனத்தை வைக்க அவனது விழிகள் கலங்கி போய் இருந்தது.
“ஏன்டா தங்கம் கண்ணு கலங்கி இருக்க...” கேட்டவள் அவனை இறக்கிவிட்டு தன் முந்தானையில் முகத்தை துடைக்க போக, அதில் பாண்டியனது வியர்வை மனம் வர, அப்படியே இடுப்போடு சொருகிக்கொண்டவள் கட்டிலின் மீது இருந்த துண்டை எடுத்து துடைத்தாள்.
அதை பார்த்தாவனுக்கு சட்டென்று அவளை இழுத்து அணைக்க தோன்றியது. ஆனால் அதை செய்யாமல் விழிகளால் தான் செய்ய நினைத்ததை செய்தான்.
அதை உணர்ந்தவளுக்கு முகம் சிவந்து போனது. மகனுக்கு ஊட்டி முடித்தவள் அவன் சாப்பிடாமல் அப்படியே இருப்பதை பார்த்து,
“சாப்பிடலையா..?”
“ஊட்டிவிடுடி...” என்றான்.
“ஹாங்...” திணறியவள் அவனது பிடிவாதத்தை உணர்ந்து ஊட்டி விட ஆரம்பித்தாள். அவளது விரல்களை உணவோடு கடித்து விழுங்க பார்க்க மாதுமையால் அந்த உணர்வுகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உடம்பு தூக்கிவாரிப்போட்டது.
ஒரு குரல் அவளது காதில் விழுந்துக்கொண்டே இருக்க நிமிர்ந்து தன் கணவனை பார்த்தாள். அவளது விழிகளில் இருந்த பாவத்தை கண்டு என்ன என்பது போல கேட்டான்.
“ஒண்ணும் இல்ல... அதான் பாதி ஊட்டி விட்டுட்டனே... இனிமே நீங்களே சாப்பிட்டுக்கோங்க...” என்றவள் கைகழுவ செல்ல, அவளது கையை பிடித்து இழுத்து தன் மடியில் போட்டுக்கொண்டவன்,
“நான் என்ன சொல்றானோ அதை கேட்டு நடக்க பழகுடி... இல்ல ரொம்ப வருத்தப்படுவ...” காதல் மன்னனாய் இருந்தவன் காத்தவராயன் போல கர்ஜிக்க அவளது உடல் பயத்தில் வெடவெடத்தது.
“ம்ம்ம் ஊட்டி விடுடி..” என்று கடுமையாக சொல்ல, அவள் வேறு வழியில்லாமல் ஊட்டி விட்டாள். மனதில் லேசான சினம் மூண்டது.
இவள் கட்டுப்பாடுகள் அற்றவளாய் வளர்ந்து இருந்தாள். ஆனால் இப்பொழுது இவன் அவளை ரொம்பவும் கட்டுப்படுத்த தன் இயல்பான குணம் வெளியே வர பார்த்தது.
அதை அடக்க மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது. முயன்று பொறுமையை வர வைத்துக்கொண்டவள் அவன் சொன்ன படியெல்லாம் செய்ய ஆரம்பித்தாள்.
அவன் இது தான் சாக்கு என்று இன்னும் அவளை படுத்த உதட்டை கடித்து தன் பொறுமையை இழுத்துப்பிடித்தாள்.
“என்கிட்டே உன் திமிரை காண்பிக்காதடி... பொறவு இந்த பாண்டியனின் திமிரை பார்க்க வேண்டியது வரும்..” காதோரம் சொன்னவன் எழுந்து சென்றுவிட்டான்.
போனவனையே முறைத்து பார்த்தவள், தானும் உணவை உண்டு முடித்துவிட்டு எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள். ராக்காயியும் பிச்சாயியும் மேலே வந்து,
“இந்த புள்ள மாத்து துணி.. உடுத்து...” என்று கொடுத்துவிட்டு அங்கேயே இருக்க, தான் அணிந்து இருந்த நகைகள் எல்லாவற்றையும் கழற்றி வைத்துவிட்டு குளித்து மாற்று துணியை கட்டினாள்.
“இங்கன வா...” என்று தரையில் அமர்ந்து இருந்த பிச்சாயி கூப்பிட, அவரின் அருகில் அமர்ந்தாள். அவளின் தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்து துவட்டி விட்டார். மீனாச்சி சாம்பிராணி புகையுடன் வர, அதை வாங்கி அவளது நீண்ட முடிக்கு போட்டார்.
ராக்காயி பேரனை கொஞ்சிக்கொண்டே,
“ஏட்டி உங்க குடும்பத்த ரொம்ப தேடுறியோ...?” கேட்டார்.
‘இல்லன்னு சொல்ல ஆசையா இருக்கு. ஆனா சொல்ல முடியாதே...’ எண்ணியவள்,
“ஆமா ஆத்தா...” என்றாள்.
“அப்போ நம்ம பாண்டியன கூட்டிக்கிட்டு ஒரெட்டு போயிட்டு வர்றியா...?”
என்ன சொல்வது என்று தெரியாமல் “சரிங்க ஆத்தா...” என்றாள்.
பொழுது சாய தொடங்க, நிலா வானில் உதயமாக தொடங்க எல்லா சடங்கும் நடந்தேறியது.
கொற்கையனை மீனாச்சி வைத்துக்கொண்டு பூம்பொழில் மதுமயாளை அலங்கரித்து ஒரு அறைக்கு அழைத்து சென்றார்.
அங்கே ராக்காயி மற்றும் பிச்சாயி இருவரின் கணவரான வடிம்பலம்ப நின்ற பாண்டியர் நாற்காலியில் அமர்ந்து இருந்தார். அவரின் இரு பக்கமும் ஆத்தாமார்கள் இருவரும் நின்று இருந்தார்கள்.
“வணங்கிக்க மாதுமையாள்...” சொல்ல, மூவரின் காலிலும் விழுந்து வணங்கினாள்.
“தீர்க்க சுமங்கலியா வம்சம் பெருகி பெரு வாழ்வு வாழணும்...” என்று மூவரும் ஒத்து வாழ்த்த கண்கள் கலங்கியது அவர்களின் ஆசிர்வாதத்தில்.
அதை மறைத்துக்கொண்டு புன்னகையுடன் எழுந்தவள் சின்ன பாண்டியனை வாங்கினாள்.
“இன்னைக்கு எங்க கூடவே இருக்கட்டும் மாதுமையாள்... நாளையில இருந்து உங்க கூட இருக்கட்டும்...” மீனாச்சி சொல்லிவிட, அவரை மறுக்க முடியாமல் பெரிய பாண்டியனின் அறைக்கு உடல் உதற சென்றாள்.
அங்கே அவளை எதிர்நோக்கி பாண்டியன் அமர்ந்து இருந்தான். வந்தவள் அவனிடம் பாலை கொடுத்துவிட்டு நகர்ந்து சென்று நின்றுக்கொண்டாள். அவளின் அந்த செயலில் சினம் எழுந்தது பசும்பூண் பாண்டியனுக்கு.





