சிறிது நாட்கள் கழித்து...
பரபரப்பாக காலை வேளை விடிந்தது...! கார்த்திக்கை படிக்க எல்லா ஏற்பாடும் செய்தான் சர்வா... தனியாக அவனுக்கு வீட்டிலே வந்து பாடம் எடுக்க சிறப்பு ஆசிரியர்களை வர வைத்து இருந்தான். அவனது சொத்துக்களை எல்லாம் பிரித்து குடுத்தாலும் மேற்பார்வை எப்பொழுதும் சர்வாவிடம் தான் இருந்தது.
அதோடு மிருவை மேற் படிப்பு படிக்க சொல்லி நல்ல கல்லூரியில் சீட் வாங்கி கொடுத்தான். அதுவும் மேலாண்மை பிரிவு. அவளும் ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தாள். அது போதாது என்று கார்த்திக் எடுக்கும் குடும்ப பாடத்தையும் இடை விடாது படித்தாள். இல்லை என்றால் முரடனிடனம் தக்க தண்டனை வாங்க வேண்டி இருக்கும்.
பிள்ளைகளோடு கிருஷ்ணனும் அலுவலகம் செல்ல ஆரம்பித்தார். பாதி நேரம் சர்வாவும் சகியும் எல்லா கம்பெனியும் மேற்பார்வை பார்ப்பார்கள். அதனால் அவர்கள் நாள் பொழுதில் சந்திக்க கூட இயலாமல் போகும். ஆனால் இரவு பொழுது எப்பொழுதும் அவர்களுக்கானது.
அதில சில பல கட்டில்கள் உடையும் நிகழ்வும் நடக்கும்.. அதற்கு சாட்சியாய் சகியின் வயிற்றில் கரு வந்து உதித்தது...!
அதை எல்லோரும் மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். முக்கியமாக கார்த்திக். அவனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இன்னொரு குட்டி அவனை போட்டு டார்ச்சர் பண்ணா வந்தால் அவனுக்கு இன்னும் கொண்டாட்டமாக தானே இருக்கும்.
ஏற்கனவே அவனை இரவு பொழுதில் தூங்கவிட மாட்டார்கள் பிள்ளைகள் இருவரும். இப்பொழுது இன்னொன்னும் சேர்ந்து அவனை தூங்க விடாமல் செய்ய வளர்ந்துக் கொண்டு இருந்தது. அதை எண்ணி மகிழ்ந்தவன் சகியை கொண்டாடினான்.
அதே நேரம் தன் மனைவியிடம் “உனக்கு கோவமா செல்லம்மா.. நாமளும் வேணா குழந்தை பெத்துக்கலாமா?” என்று கேட்டான்.
அவனது நெஞ்சில் சாய்ந்துக் கொண்டவள்,
“என்ன அவசரங்க.. நீங்க நினைச்ச மாதிரி டுவல்த் பாஸ் பண்ணுங்க. நானும் அதே போல என்னோட படிப்பை படிச்சு முடிச்சுடுறேன்... அதுவரை நமக்கு இந்த மூணு பிள்ளைகள் போதும். வாழ்க்கையில ஒரு கோல் வச்சுக்குறது தவறு இல்லை...” என்று அவனது எண்ணத்தை பிரதிபலித்தவளை இறுக கட்டிக் கொண்டான் கார்த்திக்.
பிள்ளைகளை எல்லாம் கார்த்தியோடும் கிருஷ்ணனுடனும் துரத்தி விட்டவன் தன் மனைவியிடம் அடைக்கலம் ஆனான். எப்பொழுதும் சகியை விட்டு நீங்காமல் அவளின் முந்தானையை பிடித்துக் கொண்டு அலையும் பிள்ளைகளை தனக்கு வில்லனாக பார்த்து முறைத்து வைத்தான்.
அன்று ஞாயிறு என்பதால் சொல்லவே வேணாம். பிள்ளைகள் அவளை விட்டு விலகவே இல்லை. அப்பொழுது தான் தங்களின் ஹோம் ஒர்க் எல்லாவற்றையும் முடித்து விட்டு கட்டில் பாடத்தை படிக்க ஆரம்பிக்க இருந்த கார்த்திக் மிருவிடம் பிள்ளைகளை போட்டுவிட்டு ஓடி வந்துவிட்டான் சர்வா..
“அடேய்... அண்ணா... நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட.. தூங்கும் போது உனக்கு கண்ணு தெரியாம தான் போகும் பாரு...” என்று வசை பாடியவன் தன்னவளை நெருங்க முடியாமல் தன் தோளையும் புஜத்தையும் பிடித்தும் தொங்கும் பிள்ளைகளை வாரி எடுத்துக் கொண்டான்.
“அது பாத்துக்கலாம் போடா...” என்று அங்கிருந்து வேகமாய் போய் விட்டான்.
“அது தானே இதுக்கெல்லாம் நின்னு பதில் சொல்ல மாட்டியேடா நீயி...” என்று காண்டானான்...
“அட போடா... என் அவசரம் உனக்கு புரியல...” என்றவனின் குரல் காற்றில் கரைந்தே போனது...!
சங்கடமாய் மிருவை பார்க்க அவளுக்கு அந்த சங்கடம் எல்லாம் எதுவும் இல்லை. பிள்ளைகளோடு ஒன்றிவிட்டாள். அவர்களோடு சேர்ந்து அவனை போட்டு படுத்தி எடுக்க ஆரம்பிக்க கார்த்திக் காதலாய் தன்னவளை பார்த்தான்.
அவனது பார்வையில் என்ன என்பது போல பார்த்தாள்.
“உன் மடியில படுக்கணும்டி...” என்றான். அதுக்கென்ன... என்றவள் பிள்ளைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவனை மடியில் சாய்த்துக் கொண்டவள், இரு பிள்ளைகளையும் தூக்கி அவனது நெஞ்சில் போட்டுக் கொண்டாள்.
அவனது நெஞ்சு முடியை பிடித்து இழுத்து அவனை வம்பிழுக் மிரு கமுக்கமாய் அவனை பார்த்து சிரித்தாள்.
“ஏய்... நீ செய்யிறது பத்தாதுன்னு உன் பிள்ளைங்களுக்கும் கத்து குடுத்துட்டியாடி...” என்று பல்லைக் கடித்தான்.
“பின்ன எப்போ பாரு என்னை பாரு என் அழகை பாருன்னு சட்டை போடாம நெஞ்சை காட்டிக்கிட்டே இருந்தா நாங்க என்ன செய்யிறதாம்...” என்று அவனது முன் முடியை ஒதுக்கி முத்தமிட்டாள்.
அவளது சீராட்டலில் மனம் மயங்கியவன் பிள்ளைகளுடன் சேர்ந்து அவளையும் தன் நெஞ்சில் தாங்கிக்கொண்டான்.
கதவை அடைத்து விட்டு இரு கரங்களையும் ஒன்றை ஒன்று தேய்த்துக் கொண்டு பக்கா வில்லன் பார்வையுடன் சகியை நெருங்கினான் சர்வா...
“எப்போ பாரு பயம் காட்டுறதே வேலையா போச்சு...” என்று அவனது தோளில் ஒன்று போட்டவள் பிள்ளைகளின் துணையை மடித்து வைக்க,
மடித்து வைத்த துணிகளை எல்லாம் கலைத்துப் போட்டவன், இன்னும் மேடு போடாத அவளின் வயிற்ரை ஆசையாக தடவிக் கொடுத்து, முத்தம் கொடுத்தவன், லேசாக கடித்தும் வைத்தான்.
“ப்ச்... பையன் வெளிய வரட்டும்.. கடிக்கிற உங்களை ரெண்டு அடி போட சொல்றேன்...” மிரட்டினாள்.
“ஹேய்.. போடி அவ என் பிள்ளை... எனக்கு தான் அவ சப்போர்ட் பண்ணுவா...” என்று மகளை வைத்து பேச,
“இல்ல அவன் தம்பி தான்”
“நோ... எனக்கு பாப்பா தான் வேணும்... அதுவும் உன்னோட ஆளுமையோட, உன் திமிரோட, உன்னோட அதே கர்வத்தோட என் பிள்ளையை நான் வளர்க்கணும்டி... உன்னோட சாயல் என் மகள் கிட்டயும் நான் பார்க்கணும்” என்று கர்வத்துடன் சொன்னவனை கொண்டாடி தீர்த்தாள் சகி..
“இவ்வளவு பிடிக்குமா என்ன...?” இரு புருவம் ஏற்றி கேட்டாள். அதில் நிறைந்து இருந்தது அவ்வளவும் கர்வம் மட்டுமே...
“என்னை உனக்கு எவ்வளவு பிடிக்குமோ அதை விட ஒரு பங்கு கூட உன்னை எனக்கு பிடிக்கும்டி” என்று அவனது காதலை உயர்த்தி சொல்ல, முறைத்தாள்.
“கிடையவே கிடையாது... நான் தான் உங்க மேல அதிக காதலோட இருக்கிறேன்” என்று அவள் வம்புக்கு நிற்க,
“அதை இப்படி நின்னு சொல்ல கூடாதுடி...” என்று அவளை அலேக்காக தூக்கிக் கொண்டு கட்டிலில் கொண்டு வந்து போட்டு அவள் மீது பரவி படர்ந்தான். சகியின் சேலை அவளை அலங்கரிக்காமல் தரையை அலங்கரிக்க அதன் பிறகு அவனது காட்டாற்று வேகத்தை சொல்லவும் வேண்டுமா என்ன? சத்தமில்லாமல் ஒரு கூடல் அங்கு நடைபெற குறுங்கண் வந்த மந்த மாருதம் வெட்கப்பட்டு ஓடியே போனது.
வெளியே போன கிருஷ்ணன் தன் சகாக்களிடம் மனம் விட்டு பேசி கோல்ப் விளையாட்டில் பிசியாக இருந்தார். எப்பொழுதும் ஞாயிறு இப்படி தான் போகும்...
கிருஷ்ணன் வீடு திரும்பிய உடன் இரவு பொழுது அனைவரும் ஒன்றாக கூடி மொட்டை மாடியில் உணவு உண்டு அங்கேயே ஒருவரின் மேல் ஒருவர் உருண்டு புரண்டு தூங்க ஆரம்பித்தார்கள்.
மற்ற நாட்களில் வேலை வேலை படிப்பு படிப்பு என்று பறப்பார்கள். ஆனால் ஞாயிறு மட்டும் அவர்களுக்கானது... எவ்வளவு கூத்து கும்மாளம் அடித்தாலும் இரவு பொழுதில் அவ்வளவு ஆர்ப்பாட்டமும் அடங்கி ஒருவருக்கு ஒருவர் துணையாகிப் போவார்கள். அன்று மட்டும் தூக்கம் அனைவருக்கும் ஒரே இடத்தில் தான்.
கிருஷ்ணனின் மடியில் சர்வா, சர்வாவின் மடியில் கார்த்திக், கார்த்திக்கின் மடியில் சகி, சகியின் மடியில் மிரு, மிருவின் மடியில் பிள்ளைகள் இருவர் என்று வட்டமாய் தூங்குவார்கள்.
ஒருவரை விட்டு ஒருவர் பிரியா உறவு நிலை இது... எந்த புயல் காற்று வீசினாலும் சரியாத கோபுர கலசம்...
அடுத்த நாள் திங்கள் கிழமை... பரபரப்புடன் தான் விடியும். அனைவரையும் பேக் பண்ணி கிளப்பியவள் தந்தையையும் பிள்ளைகளையும் தன்னோடு கூட்டிக்கொண்டு தந்தையின் அலுவலகத்தில் கொண்டு போய் இறக்கி விட்டுட்டு தன் அலுவலகம் கிளம்பியவளை ஆசையாக பார்த்தார்.
அவரின் ஆசையே சங்கரேஸ்வரி தனித்து ஆளுமையுடன் பல நிறுவனங்களை கட்டி ஆள வேண்டும் என்பது தானே.. அவரின் ஆசையும் சர்வாவின் ஆசையும் அது தானே... தன்னவளை ஈடு இணையில்லா நிர்வாகியாய் உருவாக்க வேண்டும் என்பது தானே... அவளின் திறமைக்கு சவால் விடுவது போல அவளின் கையில் சர்வாவின் பாதி நிறுவனம் ஒப்படைத்தான்.
அவனின் எதிர்பார்ப்பையும் தந்தையின் ஆசையையும் கொஞ்சம் கூட குறைக்காமல் திறமையாக நிர்வகித்து இதோ ஒரு புதிய நிறுவனத்தை தொடங்கி இருக்கிறாள்.
இன்னும் சில நாட்களில் அதன் திறப்பு விழா... அவளின் ஒவ்வொரு செயலுக்கு பின்னாடியும் சர்வேஸ்வரன் துணை இருக்கிறான். கொண்டவனின் மனம் நோகாமல் அவனை அன்னையாய் தாங்கி தாரமாய் மார்பில் சுமந்து குடும்ப கடமையையும் குறையில்லாமல் வாழ்ந்து வருகிறாள் சர்வாவின் மனம் நிறைந்த சகி...
இனி ஒரு போதும் குறையில்லை... எல்லாம் சுகமே...
அந்த மீட்டிங் ஹாலில் அனைவரும் காத்துக்கொண்டு இருக்க, சகியின் பெர்சனல் அறையில் சர்வா சட்டமாய் படுத்துக் கொண்டு காலை ஆட்டியபடி சகியிடம் பேரம் பேசிக்கொண்டு இருந்தான்.
“இப்போ நீ எனக்கு ஆபர் குடுக்கலன்னா இன்னுக்கை உன்னால அந்த மீட்டிங்கை அட்டென் பண்ண விட மாட்டேன்... ஒழுங்கா என்னை கவனிடி” என்று தன் வெற்று மார்பை காட்டினான்.
“ப்ச்... படுத்தாதீங்க ங்க... அது எவ்வளவு பெரிய ப்ராஜெக்ட்டுக்கான மீட்டிங் தெரியுமா? ஒழுங்கா எழுந்து போங்க சர்வா. வேலை இருக்கு” என்று கண்டிக்க அவனோ மாட்டேன் என்று அசையாமல் அங்கு படுத்து இருந்தான். அவனை கடந்து போக பார்த்தவள், கால்கள் அவனை தாண்டி போக முடியாமல் அடம் பண்ண, கடுப்புடன் அவன் மீது வந்து விழுந்தாள்.
அதில் உற்சாகம் ஆனவன் தன் விருப்பம் போல அவளை வளைத்தான்...
“நினைச்சத சாதிச்சுட்டீங்கல்ல...” கடுப்புடன் அவனது இதழ்களை கடித்து வைத்தவள், “ஒரு நிமிடம்..” என்று அவனது போனை எடுத்து சர்வாவின் பியே கிரிக்கு போன் செய்து,
“சாரும் நானும் வர கொஞ்சம் லேட் ஆகும் கிரி... அதுவரை அந்த ப்ராஜெக்ட் பத்தி சொல்லுங்க. ப்ளஸ் அவங்களோட கருத்துக்களையும் கேளுங்க... உங்களுக்குள்ள ஒரு டிஸ்க்ஷனையும் முடிச்சுட்டு பீட் பேக்கை மட்டும் எனக்கு சென்ட் பண்ணிடுங்க. பிறகு நாங்க வந்து மத்த டீட்டையில்ஸ பார்த்துக்கலாம்...” என்று ஆளுமையுடன் சொல்லி விட்டு வைக்க அவளின் அந்த கம்பீரத்தை இரசித்த படியே, கழுத்தில் ஆழமாக முகம் புதைத்தவன் அப்படியே கீழிறங்கி அவளின் மார்பின் வாசத்தை தன் நாசிக்குள் உள் வாங்கிக் கொண்டவன்,
“நான் கேட்ட ஆபரை ஓகே பண்ணதுக்கு ஒரு சின்ன கிப்ட்...” என்று சொல்லி எந்த ப்ராஜெக்ட்டுக்காக டிஸ்கஷன் போட சொன்னாளோ அந்த ப்ராஜெக்ட் அவளின் பெயரில் வந்து இருந்தது..
“சர்வா... இது...” என்று அவள் திகைக்க, அவளை பார்த்து கண்ணடித்தான்.
அவனது இந்த வேலையில் பேச்சற்று தான் போனாள் சர்வாவின் சகி.
“அப்போ எனக்கு முன்னாடியே எல்லா வேலையும் பார்த்து வச்கிடீங்களா... பிராடு சர்வேஸ்வரன்...” என்று அவனை கொஞ்சினாள்.
“பின்ன என் பொண்டாட்டி திறமைக்கு சவால் விடுவது போல இருக்கும் ப்ராஜெக்ட்டை டெண்டருக்கு விட்டு அதுல எடுத்து அப்படி இப்படின்னு இழுத்து அடிக்க சொல்றியா?” என்று கேட்டவன் அவளிடம் புதைய, அவனின் ஆளுமையில் மனம் மயங்கியவள், அவனின் காதலில் நெகிழ்ந்து போனாள்.
சகி என்றும் சர்வா தான். சர்வா என்றும் சகி தான்..! இதில் எந்த மாற்று கருத்துமே இல்லை...
எல்லாம் சுகமே...! இத்துடன் நாமும் இவர்களிடம் இருந்து விடை பெறுவோம்..!
நன்றி... வணக்கம்..!





