அத்தியாயம் 3

 
Admin
(@ramya-devi)
Member Admin

எந்த வேலையும் இல்லாமல் போக டிவி பார்த்துக்கொண்டு இருந்தாள். அப்பொழுது தான் அந்த செய்தி மிக பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டு இருந்தது.

ஒரு ஐடி நிறுவனத்தில் தொடர் கொலைகள் மர்மமான முறையில் நடைபெற்றுக்கொண்டு இருந்ததும் அதை அந்த வட்டார காவலர் விசாரித்துக்கொண்டு இருந்ததும் தெரியவந்தது.

அப்படி அவர் விசாரணை செய்தும் எந்த முன்னேற்றமும் இல்லாத நேரத்தில் மறுபடியும் அந்த ஐடி நிறுவனத்தில் இன்னொரு கொலை நடந்து இருப்பதும் தெரிய வந்தது.

இனிமேலும் பழைய ஆய்வாளாரே இந்த கேசை நடத்தினால் உண்மை ஒரு நாளும் வெளியே வரப்போவது கிடையாது. அதனால் இதை ஸ்பெஷல் க்ரைம் ப்ரெஞ்சிடம் ஒப்படைக்குமாறு நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து அதற்கு தீர்ப்பும் வழங்கப்பட்டு இருந்தது.

அதன்படி க்ரைம்பிரெஞ் ஆட்கள் அவர்களது டீமில் போர்கால அடிப்படையில் சிறப்பாக பணி புரியும் விக்ரமசேனனை அந்த கேசை எடுக்க சொல்லி பணித்தார்கள்.

ஏற்கனவே நிறைய அதிரடி காட்டி இருந்தான் அவனது பணியில். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்றாலும் நீதிக்காக தன் தலையையும் கொடுப்பவன் என்ற பெயர் மக்களிடையே இருந்தது விக்ரமனுக்கு.

அவர்களின் கோரிக்கையும் அது தான். ஏசிபியாக இருப்பவனை இந்த கேசை அவர் தான் கையாள வேண்டும் என்று பலரிடமிருந்தும் கருத்துக்கள் வர, ஸ்பெஷல் ப்ரெஞ் ஆபிசர்கள் தங்களது டீமில் அவனையும் இணைத்துக் கொண்டார்கள். அந்த செய்தி தான் ஊடகங்களில் பெரிதாக வந்துக்கொண்டு இருந்து.

“ஐடி கம்பெனியில் தொடர் கொலைகள் மிகவும் மர்மமான முறையில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இதன் பின்னணி என்ன என்று இது வரை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த இரண்டு வருடத்தில் மொத்தம் ஐந்து கொலைகள் நடைபெற்று இருக்கிறது. இன்றைக்கு அதில் ஆறாவது கொலையாக ஒரு பெண்ணை கொலை செய்து இருக்கிறார்கள்...”

“இப்படி தொடர்ந்து கொலைகள் நடந்த வண்ணமாகவே இருக்கிறது. பிள்ளைகளை இழந்த பெற்றவர்கள் தவிக்கும் தவிப்புக்கு காவலர்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள். இதுவரை இருந்தது போல மந்தமாகவே இவர்களின் செயல்பாடுகள் இருக்குமா? இல்லை மிக தீவிரமாக செயல் பட்டு அந்த கொலையாளியைக் கண்டு பிடிப்பார்களா? விடை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.”

“அதோடு கூடுதல் தகவலாக இந்த கொலை வழக்கு ஏசிபி விக்ரமசேனனிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அவரின் அதிரடி நடவடிக்கைகள் நமக்கு எல்லோருக்குமே நன்றாக தெரியும். ஆனாலும் இந்த கேசில் அது எவ்வளவு சாத்தியமடையும் என்று தெரியவில்லை.”

“விக்ரமசேனனின் அதிரடி நடவடிக்கைகளை நாம் ஒரு தொகுப்பாக காணலாம்...” என்று அவனை பற்றிய தகவல்களை எல்லாம் திரட்டி ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது தொலைக்காட்சியில். அவனது பணியின் சிறப்புகளும் இது வரை அவன் ஆற்றியச் சிறப்பு பணிகளும் அதில் பல முக்கிய கொலைகளில் யாரும் கண்டு பிடிக்க முடியாத பல தடையங்களை இவர் கண்டு பிடித்து குற்றவாளிகளுக்கு தக்க தண்டனையும் வாங்கி தந்து இருக்கிறார்... என்று அவனது பராக்கிரமங்களை சொல்லி அவனது சிறுவயது புகைப்படங்களோடு தற்போதைய புகைப்படம் வரை வெளியிட்டு இருந்தார்கள்.

அந்த புகைப்படங்களை பார்த்து தன்னவன் என்கிற எண்ணம் எழுந்தது நறுமுகைக்கு. அதுவும் அவனது பார்க்கிரமங்களை இப்படி தானே ஒரு செய்தியில் முதன்முறையாக தான் இரசித்தது பார்த்தது என்று எண்ணி அந்த நாட்களை நினைவு கூர்ந்தாள்.

அதற்கு அவளது அப்பாவும் மிக முக்கிய காரணம். எப்பொழுதும் நியூஸ் வைத்து பார்த்துக்கொண்டு இருப்பார். அதில் இவனது பராக்கிரமங்கள் எல்லாம் வர வர அதை இவளிடம் அவர் பகிந்துக்கொள்வார் மிக எதார்த்தமாக. அப்பொழுது இருந்தே அவனின் மீது ஒரு எண்ணம் வந்தது நறுமுகைக்கு.

அதை தெடர்ந்து அவனது பேட்டியும் வர நினைவுகளில் இருந்து மீண்டு அவன் மீது கவனம் வைத்தாள். ஆளுமையான குரலில், “குற்றம் கண்டுபிடிக்க படும்...” என்று மிகவும் எளிமையாக முடித்துக்கொண்டான் விக்ரமசேனன். அவ்வளவு தானா என்று அனைவரும் அவனை பார்க்க,

“முதல்ல கடமையை செய்யவிடுங்க. பிறகு பேட்டி காணலாம்.” என்று விடைபெற்றுக்கொண்டான் அவன்.

அவனது வார்த்தைகள் எப்பொழுதும் இரத்தின சுருக்கம் தான். ஆனால் செயல்களும் புகழும் பனைமரத்தை போல உயர்ந்து விளங்கிக்கொண்டு இருந்தது.

அதற்கு மேல் விளம்பரம் வந்துவிட மாற்றியவள் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு இருந்தாள். செய்ய ஒன்றுமே இல்லை. மாடிக்கு செல்லலாம் என்றால் யாராவது இந்த கோலத்தில் தன்னை பார்த்தால் என்ன ஆவது என்று வீட்டுக்குள்ளே நடைப்போட ஆரம்பித்தாள்.

சிறிது நேரத்தில் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தாள். அங்கே காவலர் சீருடையில் விக்ரமசேனன் வந்துக்கொண்டு இருந்தான்.

அவனது இந்த தோற்றத்தில் மூச்சடைத்து நின்றாள் ஒரு கணம். அவன் கூர்ந்த பார்வையில் சட்டென்று இயல்புக்கு வந்தவள் அவன் பருக தண்ணீரைக் கொடுத்தாள்.

வாங்கி குடித்தவன் அவளது கையில் வாங்கி வந்திருந்த பார்சலைக் கொடுத்துவிட்டு குளியல் அறைப்பக்கம் சென்றுவிட்டான்.

அவள் அதை பிரித்து வைக்க இருவருக்குமான உணவு அதில் இருந்தது. சிறிது நேரத்தில் அவனும் இரவு உடையை இடுப்பில் மட்டும் அணிந்து வர, அவனது வெற்று மார்பு அவளை சங்கடப்படுத்தியது.

விழிகள் அவனது தோள்களில் பதிய முயல சிரமப்பட்டு அதை அடக்கிக்கொண்டு அவன் புறம் உணவை தள்ளி வைத்தவள் அவனை நிமிர்ந்தே பாராமல் தலையைக் கீழே குனிந்துக்கொண்டு உணவை உண்டு எழுந்தாள்.

சிறிது நேரம் வெளியே வந்து உலாவினாள். மெல்லிய காற்று அவளை வந்து தழுவியது. மனம் சற்றே ஆசுவாசப்பட்டது. விக்ரமசேனனை கண்டாலே அவளுக்குள் ஒரு படபடப்பு வந்தது. அவனது ஆளுமை நிறைந்த தோற்றமும் கூர் விழிகளும் அவளை கொத்திப்போட படபடத்துப் போனாள்.

நேற்றைய இரவை எண்ணி மேலும் உடம்பு உதறல் எடுத்தது. இன்றைக்கும் அப்படி இப்படி என்று ஏதாவது நிகழ்வு வருமோ என்று வியர்த்துப் போனாள். மனதுக்கு பிடித்தாலும் ஏனோ ஒரு வெட்கமும் தயக்கமும் அவளிடம் இருந்தது.

வந்ததிலிருந்து ஒரு வார்த்தை கூட பேசாதவனின் நெருக்கம் அவளை பெரிதாக தகித்தது. பேசி மெல்ல மெல்ல ஆரம்பித்தால் இந்த தயக்கம் வந்து இருக்காதோ என்னவோ.

எவ்வளவு நேரம் உலாவினாளோ தெரியவில்லை. வெளியே இருந்த தோட்டத்து விளக்கை அவன் அணைக்க,

‘ஏன் வாய் திறந்து உள்ள கூட கூப்பிட மாட்டாரா? இது தான் சமிக்க்ஷையா?’ எண்ணிக்கொண்டவள் உள்ளே வந்தாள். வந்தவளுக்கு வழியை விட்டு நின்றவன் அவள் உள்ளே நுழைந்தவுடன் கதவை சாற்றி விட்டு அவனது அலுவலக அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.

‘இதுக்கெதுக்கு விளக்கை அணைக்கணும். நானாவது வெளியே காத்து வாங்கிக்கிட்டு இருப்பேன்.’ முணகியவள் படுக்கை அறைக்குள் நுழைந்து கீழே படுத்துக்கொண்டாள்.

விக்ரமசேனன் தன் முன் இருந்த கோப்புகளை எல்லாம் உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தான். எந்த வகையான தடையமும் கிடைக்கவில்லை. தொடர்ந்து ஆறு கொலைகள். ஆனால் எந்த வித சம்மந்தமும் இல்லை.

அந்த ஐடி நிறுவனத்தில் வேலை செய்வது மட்டும் தான் ஒத்துப்போனது. மற்ற படி எதுவுமே இந்த கேசில் சிக்கவில்லை. இரவு நேர கொலை செய்யப்பட்டு அடுத்த நாள் காலையில் அனைவருக்கும் கொலை நடந்தது தெரிய வருவது போல செய்யப்பட்டு இருந்தது.

அதை தவிர வேறு ஒன்றும் புலப்படவில்லை. நாளையிலிருந்து அங்கு சென்று விசாரிக்க வேண்டும். என்று எண்ணியவன் இறந்தவர்களோடு சம்மந்தப்பட்ட  நண்பர்களையும் மேலதிகாரிகளையும் பற்றி இருந்த தகவல்களை அனைத்தையும் பார்வையிட்டான்.

கூர் விழிகளால் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்தான். ம்ஹும் ஒரு துப்பு கூட கிடைக்கவில்லை. ஆனால் கொலை நடந்து இருப்பது எப்படி அவனது மூளை அதிகமாக யோசித்தது.

ஏதாவது லிங்க் இருக்குமே. அதை பற்றியே அதித் தீவிரமாக யோசித்தான். மேலும் இரண்டு மணிநேரம் போனதே ஒழிய ஒன்றுமே சிக்கவில்லை. இப்படியே இருந்தால் மண்டை சூடாகிவிடும் என்று வெளியே சென்று ஒரு வாக் போனான்.

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் நடை பயின்றிருப்பான். ஆனாலும் அவனால் அதிலிருந்து வெளியே வரவே முடியவில்லை. ஆறு கொலைகள் தான் கண் முன் வந்தது.

ஒரு வேலையை எடுத்துக்கொண்டால் அதை முழுதாக முடிக்கிற வரை அவனால் வேறு எதையும் பற்றி சிந்திக்க முடியாது. அதோடு அவனுக்கு வீணாக பொழுதை கழிக்கவும் பிடிக்காது.

அந்த நேரத்தில் நாட்டில் நடக்கும் பல அக்கிரமங்களை கண்டிக்கலாம் என்று எண்ணுபவன். அதனால் தான் அவனது திருமணத்தின் போது கூட தாலி கட்டிய பின்பு நடந்த சடங்குகளில் எல்லாம் அவனால் ஒன்ற முடியாமல் போனது.

அவனை பொறுத்த வரை அது வீண் பொழுது போக்கு. ஆனால் இது வாழ்வில் ஒருமுறை மட்டும் தான் அனுபவிக்க முடியும் என்று பாவம் அவனுக்கு புரியவில்லை.

அதை சொல்ல முயன்ற தீபனையும் ஒற்றை பார்வையில் அடக்கிவிட்டான். இப்பொழுது இந்த கொலை வழக்கில் ஆழ்ந்து இருக்கிறான். இனி இதிலிருந்து வெளியே வருவது மிகவும் கடினம்.

இந்த கேசை முடிக்கிற வரை அவனுக்கு வேறு எதுவும் நினைவில் இருக்காது. அவனுக்கே அவனை பற்றி தெரியும் தான். அதனால் தான் அந்த சிந்தையில் இருந்து வெளியே வர முயன்றான். ஆனால் அது அவ்வளவு எளிதாக செய்யமுடியவில்லை.

அதிக பிரஷர் ஏறியது. அதோடு வீட்டுக்குள் நுழைந்தான். மறுபடியும் ஒரு குளியல் போடலாம் என்று வந்தவனுக்கு தரையில் படுத்து இருந்த நறுமுகை கண்ணில் விழுந்தாள்.

நெற்றி ஒரு கணம் சுருங்கியது. அதன் பின்பு தான் நேற்று நடந்த கூடல் நினைவுக்கு வந்தது. அவனையும் அறியாமல் அவனது இதழ்களில் ஒரு புன்னகை உதயமானது. அதை மீசைக்கு அடியில் ஒளித்து வைத்தவன் குளிக்கச் சென்றான்.

குளித்து துண்டுடன் வந்தவனின் சிந்தை நேற்று நடந்த கூடலுக்கு தாவ, அவனது உடம்பில் ஒரு வித மகிழ்வு தோன்றியது. ஏசியை அதிகம் வைத்தவன் பெண்ணவளை தூக்கி கட்டிலில் போட்டு விளக்கை அணைத்து அவளையும் சேர்த்து தன்னோடு அணைத்தான்.

தன் மீது பாரத்தை உணர்ந்தவள் மெல்ல கண் விழிக்க தன் மீது மொத்த பாரத்துடன் கிடந்த ஆணவன் கண்ணில் பட ஜெர்க் ஆனாள். அவளது விழிகளை பார்த்துக் கொண்டே அவளது இதழ்களை சிறையெடுக்க மூச்சு முட்டிப்போனாள் நறுமுகை.

அதன் பின்பு அங்கு அவளது மெல்லிய சிணுங்கள் மட்டுமே விடியும் வரை கேட்டுக்கொண்டு இருந்தது. அவனது தேடுதல் விடியும் வரை தொடர்ந்துக்கொண்டே இருந்தது. அவனது இடைவிடாத தேடலில் தோய்ந்து போனவளை தன் நெஞ்சில் போட்டுக்கொண்டு நிம்மதியாக தூங்கிப் போனான்.

நீண்ட நாட்களாக அவன் தேடிய நிம்மதியான தூக்கம் அவனை வந்து சேர்ந்தது. எந்தவித அலைப்புருதலும் இல்லாமல். கேஸ் பற்றிய எந்த சிந்தையும் இல்லாமல் நிச்சிந்தையாக தூங்கினான்.

அவனது தொடுகையில் தூக்கம் கலைந்தவளுக்கு அதன் பிறகு தூக்கம் என்பதே இல்லாமல் போனது. விடியும் வேளையில் தான் தூக்கம் அவளை தழுவியது. நிம்மதியாக தூங்கி எழுந்தவன் ஜாகிங் சென்றுவிட்டான்.

Loading spinner
Quote
Topic starter Posted : March 14, 2025 11:35 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top