அங்கு வந்து நின்ற மூவரையும் கார்த்திக் கண்களை இடுக்கி புருவம் சுருக்கி பார்த்தான். சகி பட்டென்று அவனிடமிருந்து விலகிக் கொண்டாள். ஆனால் கார்த்திக் அவளை இழுத்து தன் தோளோடு சேர்த்து அனைத்து நிற்க வைத்துக் கொண்டான். வந்தவர்களுக்கு இந்த காட்சி இலவசமாக கிடைத்தது... வந்தவர்களின் பார்வையில் கூனி குறுகி நின்ற சகியை பார்த்து ஏளனமாக சிரித்தார் செல்வநாயகம்.
‘அன்னைக்கு என்னை எட்டி மிதிச்சில்லடி... இப்போ பாரு உன்னை எவ்வளவு அசிங்க படுத்துறேன்னு...’ என்று கருவிக் கொண்டவர் தன் வக்கிர கண்களால் அவளை இன்னும் எப்படி எல்லாம் அசிங்கப்படுத்தலாம் என்று கணக்கு போட்டுக்கொண்டு இருந்தார்.
இதெல்லாம் முழுக்க முழுக்க செல்வநாயகத்தின் ஏற்பாடு.. அதனால் எவ்வளவு சேற்றை வாரி சகியின் மீது எரிய முடியுமோ அந்த அளவுக்கு சேற்றை வாரி இறைக்க முடிவெடுத்தார். அதற்கு கவிதாவும் பின்பாட்டு பாடினார்.
“ச்சீ ச்சீ... இவளெல்லாம் ஒரு பொம்பளையா? இவளை எல்லாம் எப்படி தான் வீட்டுல வச்சி இருக்காங்களோ... இப்படி ஆம்பளை சுகத்துக்கு அலையிறாளே... இவ்வளவு நாளும் இவ இப்படி தான் வாழ்ந்து இருக்கா போல... எனக்கு தெரிஞ்சி இவ லண்டனுக்கு படிக்க போய் இருக்க மாட்டா... யார் யாரை எப்படி மடக்கலாம். தன்னோட கைக்குள்ள போட்டுக்கலாம்னு படிச்சிட்டு வந்து இருப்பா. அதனால தானே முதல்ல உன்னையும் வளைச்சி போட்டா... நல்ல வேலை உன் வாழ்க்கை தப்பியது. இதோ இப்பவும் கடவுள் நமக்கு இவளோட நடத்தையை காட்டி குடுத்துட்டாரு. இனி ஒரு நிமிடம் கூட நாம இங்க இருக்க கூடாது... ச்சீ ச்சீ.... மானம் கெட்டு போய் எதுக்கு இதுங்க எல்லாம் உயிரோட இருக்குங்களோ...” என்று கவிதா வார்த்தையிலே நஞ்சை கக்க, சகி முற்றிலும் சுருண்டு போனாள் அவமானத்தில்.
சகியும் முதலில் தன்னக்கு பாதகம் செய்பவர்களை ஏறி மித்து தான் போட்டாள். ஆனால் செல்வநாயகம் தன் பண பலத்தை உபயோகித்து சர்வா வெளியூர் சென்று இருக்கும் பொழுது கார்த்தியின் மீது திருட்டு கேஸ் குடுத்து உள்ளே தள்ளிவிட எல்லா பிளானும் செய்தார்.
அதை சகியிடமே காட்டவும் செய்தார். “இப்போ அவன் என் கம்பெனியில தான் வேலை செய்யிறான். சர்வா தான் பழி பாவத்துக்கு அஞ்சுவான் நான் இல்ல. சர்வாவும் ஊருக்கு போயிட்டான். இந்த சமயத்தை நான் எனக்கு சாதகமா எப்படி வேணாலும் பயன் படுத்திக்குவேன். பேங்க்ல டெப்பாசிட் செய்ய சொல்லி நானே கார்த்திக்கிட்ட குடுத்து எடுத்துட்டு போக சொல்லுவேன். பிறகு நானே என் ஆட்களை விட்டு திருட சொல்லி பணத்தை எடுத்துக்கிட்டு அவன உள்ள தள்ள முடியும்... செய்யவா?” என்று மிகவும் பழைய யோசனையை சொல்லி கேட்டார். பழசு தான். ஆனா ஏழைகளை பொறுத்தவரை அது உயிரை பறிக்கும் கொடூர செயல் அல்லவா... அதனால் அவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு சர்வாவின் கண்ணில் படுமாறு இந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்ய வற்புறுத்தினார் செல்வநாயகம்.
“சர்வா இந்த ட்ரிப் முடிஞ்சி வந்த பிறகு உன்னை பெண் கேட்க போறதா என்கிட்டே சொல்லிட்டு போய் இருக்கான். அப்படி நாங்க பெண் கேட்டு வந்தா உனக்கு விருப்பம் இல்லன்னு சொல்லு..” என்றார் முதலில்.
“ஆனால் என் மகன் பின் வாங்கவே மாட்டான்... ஏன்னா அவன் என்கிட்டையே ‘எனக்கு தேவையான, என் மனம் விரும்பிய பொருளை நான் எப்பவும் யாருக்காகவும் விட்டுக் குடுக்கவே மாட்டேன்... அது என்ன விலைன்னாலும் எவ்வளவு செலவுன்னாலும் வாங்கிடுவேன்...’ என்று சர்வா சொல்லி இருக்கான்... அதனால அவன் உன் மறுப்பை எல்லாம் தூசி போல தட்டி விட்டுட்டு போய் கிட்டே இருப்பான். அதோட அவனுக்கு ஒண்ணு வேணும்னா எந்த எல்லைக்கு வேணாலும் போவான்” என்று தன் மகனை நன்கு அறிந்தவராய் சொன்னவர், சிறிய யோசைனைக்கு பிறகு இந்த கேவலமான திட்டத்தை சொல்லி அதன் படியே நடிக்கவும் சொன்னார்.
“இப்பவாச்சும் திருட்டு கேஸ் தான் போட்டு இருக்கேன். நான் சொன்னபடி என் மகன் முன்னாடி நீ நடிக்கலன்னா அனாதை பொணத்தை விலைக்கு வாங்கி அதை கொலை பண்ணதா சொல்லி கொலை கேஸ்ல உள்ள தள்ளிடுவேன் உன் கார்த்திக்கை” என்று மிரட்டினார்.
தன்னுடைய மானத்துக்கு ஒன்று என்றவுடன் வீரமங்கையாய் வாள் வீசியவள் தன் குடும்பம் என்றவுடன் அவளது வீரம் எல்லாம் பின்னங்கால் பிடரியில் பட ஓடி ஒளிந்துக் கொண்டது...!
கார்த்தியின் நல்வாழ்வு மட்டுமே கண் முன் வர தன்னை எரித்து சுடர்விடும் மெழுகாக மாற்றிக் கொண்டாள். ஏற்கனவே சகி எரியும் மெழுகு தான். இப்பொழுது சொல்லவும் வேண்டாம்.
தன் வாழ்வை இழந்து மற்றவர்களை வாழ வைக்கும் தியாகியாக மாறினாள்.
பெண் கேட்டு வந்தவர்களின் முன்னால் நடத்தை கெட்டவளாக நின்ற சகியை கண்ட சர்வாவின் விழிகள் மழை நீர் விழுந்த செம்மண் போல சிவந்து போனது. அவனை ஏறெடுத்து பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்து நின்றவள் தோளை விட்டு நழுவ இருந்த புடவையை தோளோடு இறுக்கிப் போட்டவள் குற்றமே செய்யாமல் குற்றவாளியாய் நின்றாள்.
கார்த்திக் எதுவும் பேசவில்லை. பேச வேண்டியது அவன் அல்லவே. அதனால் பொங்கி வந்த கோவத்தை இரு கரங்களையும் கட்டிக்கொண்டு அமைதியாக அங்கு நடக்கும் நாடகத்தை வேடிக்கை பார்த்தான்.
சகியை பேசிய பேச்சுக்கு இந்நேரம் கவிதாவின் தலை துண்டாக கீழே விழுந்து இருக்கும். ஆனால் சகி எதற்காகவோ இந்த வேடம் தரித்து இருக்கிறாள் என்று புரிய அமைதியாக இருந்தான். இல்லை என்றால் கவிதாவின் தலையையும் செல்வனாயகத்தின் தலையையும் பந்தாடி இருப்பான் கார்த்திக் அடுத்த ஒரே நொடியில்.
“இப்படியாப்பட்ட பொண்ணை தான் நீ கட்டணுமா சர்வா... ச்சீ ச்சீ... நம்ம குடும்பம் எப்பேர்பட்ட குடும்பம், எவ்வளவு மதிப்பு மரியாதை மிக்கது.. அதுல இப்படி ஒரு சாக்கடையை கலக்க நான் விட மாட்டேன்...” என்று கவிதா குதித்துக் கொண்டு இருந்தார்.
அவர் பேசிய பேச்செல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த சர்வாவின் பார்வை சகியை விட்டு அங்கும் இங்கும் எங்குமே அசையவில்லை.
அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்... அவமானத்தில் கூனி குறுகி நின்றவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.
செல்வனாயகத்தை அடித்து உதைத்த பிறகு சகி சர்வாவிடம் வேலைக்கு போகவில்லை. கார்த்தி மட்டும் போய் கொண்டு இருந்தான். சர்வாவின் பிள்ளைகள் சகியை கேட்டு அடம் பிடிக்க, வேறு வழியில்லாமல் பிள்ளைகளை மட்டும் காலையில் வரும் பொழுதே அவளிடம் விட்டுவிட்டு வேலைக்கு வந்து விடுவான். அதே போல வேலை முடித்து போகும் பொழுது பிள்ளைகளை கூட்டிக்கொண்டு போய் விடுவான்.
கிருஷ்ணனிடம் சர்வா அனுமதி கேட்க,
“என்ன தம்பி இப்படி சொல்லிட்டீங்க... இந்த பிள்ளைகளை பார்த்துக்குறதுல எங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு தெரியுமா... இவங்கலால எங்களுக்கு எந்த சிரமமும் இல்லை. தாராளமா நாங்க பார்த்துக்குறோம்...” என்று சொல்லி பிள்ளைகளை வாங்கிக் கொண்டார்.
சகி அதுக்காக கூட வெளியே வரவில்லை. அவளது உறவு பிள்ளைகளுடன் மட்டுமே நின்றுக் கொண்டது... அவனும் தன் மனதை மாற்ற இது ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டான்.
அவளை காணாதவரை எல்லாம் ஓகேவாக தான் இருந்தது. ஆனால் அவளை தேடி ஓடும் நெஞ்சை என்ன செய்து நிறுத்துவது. அவளை விட்டு தாண்டி வரவே முடியாமல் அவளின் விழி அசைவில் அவனது உலகம் சிக்கி இருக்கையில் எங்கிருந்து விடுதலை கிட்டும்.
தன்னுடைய பைல்ஸ் எல்லாம் சர்வாவிடமே இருப்பதால் அடுத்த வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் அது வேண்டுமே என்று அவனை அடுத்த நாள் காலையில் சந்திக்க அவனது அலுவலகத்துக்குச் சென்றாள்.
தன்னுடைய இருக்கையில் கால் மேல் கால் போட்டு நிதானமாக தன் முன் நின்றிருந்தவளை அளவிட்டான் விழிகளாலே...! அவனது விழி தொடுகையில் உள்ளுக்குள் பெரும் நடுக்கம் கொண்டாலும் தன் குரலை செருமிக் கொண்டு,
“எனக்கு என்னோட பைல் வேணும். அது இருந்தா தான் நான் அடுத்த வேலைக்கு போக முடியும். அதோட உங்க கண்ணுலையும் படாம இருக்க முடியும்” என்றாள் சற்றே மிடுக்காக.
அவளது அசையும் இதழ்களை வெறித்து நோக்கினான். அதிலிருக்கும் சிறு சிறு கோடுகளை கூட அவளை மட்டுமே இரையாக உண்ணும் அவனது விழிகள் விட்டு வைக்கவில்லை...
“உங்க கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன்... இப்படி காது கேட்காத மாதிரி இருந்தா என்ன பண்றது..? எனக்கு என்னோட சர்டிபிகேட்ஸ் வேணும்” என்றாள் சற்றே கோவமாக.
அவளது கோவத்தை கூட விழி அகலாமல் இரசிக்க சர்வாவல் தான் முடியும் போல... அவளது அந்த கோவத்தில் மனதை பறிகொடுத்தான். இவ்வளவு பார்க்காத உருவம் கண் முன் வந்து நின்று சண்டை போடுகையில் எங்கிருந்து உணர்வு வரும்... வைத்த கண்ணை எடுக்காமல் உச்சி முதல் உள்ளங்கால் வரை தன் எதிரில் இருக்கும் பொம்மையை இரசித்தான்.
அவனது இரசனையான பார்வையில் இவளுக்கு பத்திக் கொண்டு வர,
“ஹலோ மிஸ்டர்...” என்று அவனின் முகத்தின் முன்னாடி கையசைத்து அவனது கவனத்தை கலைத்துப் போட்டாள். அதில் சுயத்துக்கு வந்தவனது கோவம் எல்லாம் எங்கு போனதோ தெரியவில்லை...! விழிகளால் அவளை அள்ளி பருகியவன்,
“இந்த காட்டன் சேலையில கூட மனசை பறிக்க யாருக்கிட்டடி கத்துக்கிட்ட... மூச்சு முட்ட வைக்கிற சகி... நீ இயற்கையாவே எல்லாரோட மனசையும் பரிப்பியா? இல்ல என்னோட மனசை மட்டும் தான் இப்படி கொக்கி போட்டு இழுக்குரியா?” என்றான் திடுதிப்பென்று...
“வாட்...?” என்று அவள் அதிர,
தன் இருக்கயில் இருந்து எழுந்தவன் அவளின் முன்பு கம்பிரமாக நின்றான்.
“எனக்கு பதில் வேணும் சொல்லுடி?” என்றான் பிடிவாதமாய்.
அதில் அவளுக்கு கோவம் கட்டுகடங்காமல் வர,
“மிஸ்டர் சர்வா உங்க மனசுல நீங்க என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க...? இஷ்டத்துக்கு பேசிக்கிட்டு இருக்கீங்க... உங்க மனசு ஒரு நிலையில இருக்காதா? நீங்களா வருவீங்க... அப்புறம் எதுக்குடி என் வாழ்கையில வந்தன்னு கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணுவீங்க...? பிறகு இந்த கேள்விக்கெல்லாம் கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லாம இதோ இப்போ புத்தி கெட்டுப் போய் கேள்வி கேட்க வேண்டியது...” என்று கடுகாய் பொரிந்தாள்.
அவளது கோவத்தை கூட விடாமல் இரசித்தவன்,
“சகி...” என்று மிக மிருதுவாக அவளின் காதோரம் உச்சரிக்க கோவத்தையும் மீறி அவளது உடம்பு மொத்தமாக சிலிர்த்தது...!
அதை கண்ணுற்றவனுக்கு இதழ்களில் கர்வ புன்னகை எழுந்தது...! “இப்படி நான் கூப்பிட்டா இதோ இப்படி நீ உடம்பு சிலிர்க்காம இருடி... அப்புறம் வந்து என்கிட்டே கேள்வி கேளு...” என்று உல்லாசமாய் அவன் சிரிக்க தன் நிலையை எண்ணி நொந்துப் போனாள்.
“எனக்கு சர்டிபிகேட் வேணும்.. தேவையில்லாம பேசாதீங்க... இப்போ குடுக்க முடியுமா முடியாதா?” தன் பிடியில் இருந்து நழுவாமல் அவள் கேட்டாள்.
“ம்ஹும்...” என்று ம்ஹாரம் கொட்டியவன்,
அவளின் காதோரம் இன்னும் நெருங்கி, “எனக்கு நீ வேணும்டி... கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று தன் மனதில் உள்ளதை சொல்லி கேட்டான்.
அதில் அவள் அதிர்ந்து பார்க்க,
“இந்த கண்ணுல எனக்கு மட்டுமேயான தேடலை பார்க்கணும்டி. அதுக்கு நான் உன்கிட்ட இருக்கணும்.. இவ்வளவு தள்ளி இருந்தெல்லாம் பார்க்க நினைச்சா நான் தான் ஏமாந்து போவேன். இனி என்னை ஏமாற்றம் அடைய விடாம உன் நெஞ்சுல பூட்டி வச்சுக்கோடி... நானும் என் பிள்ளைங்க மாதிரி தான் உன்னையே தேடி தேடி வரேன்... ஆனா நீ என்னை மட்டும் ஒதுக்கி வைக்கிற... அது என்னை எவ்வளவு வேதனை படுத்துது தெரியுமா?” என்றவன் அவளின் இடையில் கைக்கொடுத்து தன்னோடு அவளை சேர்த்து அணைத்தான்.





