தில்லை மற்றும் சிவனாண்டியிடம் ஸ்வராவை அழைத்து “இவ தான் உங்க மருமக.. கவி கல்யாணத்தோட என் கல்யாணத்தையும் நடத்துங்க” என்று அறிமுக படுத்த
“ஏலேய் என்னடா இது..” அதிர்ந்து போய் ஆண்டி கேட்க
“ப்பா இப்பவாச்சும் அறிமுக படுத்துனேன்னு சந்தோச படுங்க..” என்று தெனவட்டாய் சொன்னான் ரவி.
அவனது தலையிலே நங்கென்று கொட்டினார் தில்லை.
“அப்பா கிட்ட இப்படி தான் பேசுவியா.. அடி போட்டன்னா பாரு.. இன்னும் முளைச்சி மூணு இலை விடல அதுக்குள்ள கல்யாணம் கேக்குதா உனக்கு.. இன்னும் மூணு வருசம் கழிச்சு தான் கல்யாணம்.. உனக்கு முன்னாடி வனா மதி கல்யாணம் பிறகு நந்தன் கல்யாணம் அதுக்கு பிறகு தான் உனக்கு..”
“ஒன்னும் பிரச்சனை இல்லை.. இன்னும் பத்து மாசம் கழிச்சு உனக்கு பேர புள்ளைய ரெடி பண்ணிடுறேன்.. ஊர்ல இருக்குறவங்களுக்கு நீயே பதில் சொல்லிடு.. இது மாதிரி என் புள்ள என்னைய கல்யாணம் பண்ணி வைக்க சொன்னான்.. நான் தான் கேக்கல.. அதான் புள்ளகுட்டிய ரெடி பண்ணிட்டான்னு” என்றவனை மூவரும் முறைத்து பார்த்தார்கள். ஸ்வரா வெக்கபட்டுக்கொண்டே அவனை முறைத்து பார்த்தாள்.
“இந்த வாய் இருக்கு பாரு.. அதுல அப்படியே வசம்பை வச்சு தேய்க்கணும்..” முறைத்தார் தில்லை.
“அதெல்லாம் இருக்கட்டும் பாப்பா வீட்டுல ஒத்துக்கிட்டாங்களா...” ஆண்டி கேட்க
ஒரு கணம் முகம் வாடினாலும் “அவங்களுக்கு தான் இதுல மொத சந்தோசமே.. என்னை இப்பவே மருமகனே மருமகனேன்னு தான் கூப்பிடுறாங்க தெரியுமா..” என்றான்.
“சரி இந்த விஷயம் ராயருக்கும் நந்தாவுக்கும் தெரியுமா” மேலும் கேட்டார்.
“ம்ம் தெரியும் ப்பா.. அண்ணாவோட கம்பெனி வக்கீலோட பொண்ணு தான் இவ. அதோட இல்லாம மாமா ஜூனியரா இருந்தாருல அவரும் இவரும் ஒன்னு தான்.. அவங்க பொண்ணும் இவ தான்” என்று சொல்ல
அதில் திருப்தி வந்தவர் “அப்பன்னா சரிடா” இருவரும் ஒத்துக்கொண்டார்கள். இருந்தாலும்
“ஏங்கண்ணு உனக்கு இதுல பூர்வ சம்மந்தம் தானே..” ஸ்வராவிடமும் ஒப்புதல் கேட்டுக்கொண்டார்கள். அவள் வெட்கத்துடன் தலை அசைக்க தில்லை அவளை அணைத்துக்கொண்டார் சந்தோசத்துடன்..
“அப்போ நீ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பாப்பாவை வெளிய போக சொன்னியா” என்று சரியாய் தில்லை கணிக்க ரவி திருட்டு முழி முழித்தான்..
அதில் கோவம் வர பெற்று அவனை மீண்டும் கொட்ட
“இந்தம்மா சும்மா என்ன கொட்டிக்கிட்டே இருக்க.. நீயெல்லாம் ஒரு மாமியாரா வகையா மருமக கிடைச்சி இருக்கா.. அவளை வச்சு செய்யிறத விட்டுட்டு என்னை கொட்டிக்கிட்டு இருக்க”
“எதுக்கு நாங்க ரெண்டு பேரும் அடுச்சுக்கிறத பாத்து நீ குளிர் காயவா.. இந்த கதையே இங்க வேணாண்டா மகனே.. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வேணா உன்னை அடிக்கிறோம்” என்று சொல்லி ஸ்வராவையும் கூட்டு சேர்த்துக்கொண்டு அவனை அடிக்க
“ஆகா நம்ம ப்ளனையே உல்ட்டா பண்ணிடுவாங்க போலயே..” சுதாரித்தவன் அடி தாங்க முடியாமல் எழுந்து ஓட தொடங்கினான்..
ரவியின் பிரச்சனை ஓரளவு தீர்ந்து விட, ராயர் நந்தனின் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று யோசித்தான்... அதற்கு ஒரே தீர்வு ரியா இங்க வருவது மட்டுமே என்பது புரிய அவளை இங்க வரவைத்தால் என்ன.. என்று யோசித்து அவளை வர வைத்து விட்டான் ராயர்..
திடுதிப்பென்று ரியா வந்து நிற்க நந்தன் ஒரு நொடி மகிழ்ந்து தான் போனான்.
ஆனால் அடுத்த நொடி தன்னுடைய பழைய நிலைக்கே திரும்பிவிட்டான்..
அவனது முகத்தில் தெரிந்த மகிழ்வும் பின் இறுகி போன நிலையம் கண்டு தவித்தவள் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.
ஆனால் அவனோ திரும்பி தன் அறைக்கு சென்று விட பெரு மூச்சு ஒன்றை விட்டுவிட்டு திகம்பரி காட்டிய அறையில் தன்னுடைய பொருட்களை வைத்து விட்டு வெளியே வந்து அவனுடைய அறைக்கு சென்றாள்.
அங்கே கண்களை மூடி படுத்து இருந்தவனை கண்டு மனம் கனத்து போனது..
“நந்தன்..” மெதுவாய் அவனை அழைத்தாள். அவனோ அசையாமல் அப்படியே படுத்து இருந்தான்.
“சாரி நந்தன் ப்ளீஸ் என் கிட்ட பேசுங்க.. இப்படி என்னை ஒதுக்காதீங்க..” என்றவளை கண்விழித்து பார்த்தான் அவளை பார்த்து ஏளன புன்னகை சிந்தினான்..
“ம்ஹும் தப்பே செய்யாதவனை இத்தனை வருசமா தண்டிச்சுட்டு இப்போ வந்து சாரின்னு கேட்டா எல்லாமே சரியா போகுமா..” வேதனயுடன் கேட்டவன் எழுந்து வெளியே சென்றுவிட்டான்.
அவனை எப்படி சமாதன படுத்துவது என்று தெரியாமல் கண்ணீர் விட்டாள்.
ராயர் போன் செய்து நந்தனின் பக்கம் இருந்த நியாயத்தை சொல்லி அவள் மீது அவன் கொண்ட காதலையும் சொல்ல நிலைகுலைந்து போனாள். ‘அதுவும் ராஜுவும் திகம்பரியும் மருத்துவமனையில் இருந்த போது தானே அவள் பிரிந்து சென்றாள்.. தான் எப்படியா பட்ட நிலையில் அவனை தவிக்க வைத்து விட்டு சென்றிருக்கிறோம் என்பதை அறிந்தவளுக்கு தன்னையே மன்னிக்க முடியாமல் போனது. அந்த நிலையில் அவன் தன்னை கண்டிப்பாக தேடி இருப்பான் என்று அவள் நன்கு உணர்ந்தாள்.
அவன் தன்னை காதலிக்கிறான் காதலிக்கவில்லை என்பதெல்லாம் அடுத்த பட்சம்.. தன்னுடைய காதல் உண்மையானதா இருந்து இருந்தா அவனை மடி தாங்கி இருந்திருப்போம். ஆனால் நான் அப்படி இருக்காமல் என்னுடைய காதலுக்கே நான் நேர்மையாக இல்லையே.. சுயநலமாக இருந்துவிட்டேனே’ எண்ணியவள் இன்னும் கலங்கி போனாள்.
இத்தனை வருடம் காதலித்தும் அத்தனையும் வீண் என்பது போல ஆகிப்போச்சே என்று மிகவும் வருந்தினாள்.
அவன் வெளிப்படியாக அவனது காதலை சொல்லவில்லை என்றாலும் ஒவ்வொரு நிமிசமும் தன் காதலை அவன் உணர்த்திக்கொண்டு தான் இருக்கிறான் என்பதை மிகவும் தாமதமாக உணர்ந்தாள் ரியா...
அவன் அவளிடம் சில நாட்கள் மட்டுமே உறவு கொண்டு இருக்கிறான்.. பல நாட்கள் இருவரும் ஒன்றும் செய்யாமலே அப்படியே படுத்து இருந்து இருக்கிறார்கள். அவளுடைய மூச்சு காற்றை உள்வாங்கி அவன் சுவாசித்த நாட்கள் ஏராளாம். குழந்தையாய் அவளிடம் அவனிடம் நெருங்கும் போது அவள் பல நாள் தலையை வருடிக்கொடுத்து அவனை தூங்க செய்து இருக்கிறாள்.
காமம் என்பதை தாண்டி அவன் பலமுறை அவளுக்கு காதலை உணர்த்தி இருக்கிறான்.. போகும் பார்ட்டிகளுக்கு அவளையும் அழைத்துக்கொண்டு செல்வான். ஆனால் யாரையும் அவளை நெருங்க விடவே மாட்டான்..
அவள் சாப்பிட வில்லை என்றால் என்ன ஏது என்று கேட்காமல் “ஹோட்டல் போகணும் கம்பெனி குடு..” என்று அழைத்து சென்று அவளை சாப்பிட வைத்து இருக்கிறான். பலநாட்கள் அவனுக்கு உடை எடுக்கும் போது உனக்கு இந்த உடை நல்லா இருக்கும் அதும் அந்த நேரத்தில் இன்னும் தூக்கலா இருக்கும்” என்று சொல்லி பல உடைகளை எடுத்து கொடுத்து இருக்கிறான். அத்தனையும் கண்ணியமான உடைகள் மட்டுமே.. அதை அவள் இரவு நேரத்தில் போட்டு அவனிடம் வரும் பொழுது சின்ன புன்னகையுடன் அவளை அனைத்துக்கொள்ளுவானே தவிர மேற்கொண்டு செல்ல மாட்டான். இதோ இப்பொழுது கூட அவளது உடைமைகள் எல்லாம் மும்பையில் வைத்து விட்டு வெறும் மூன்று உடைகளோடு இருந்தவளுக்கு தன்னுடைய அலுவலகத்தின் அருகில் இருக்கும் பங்களாவை சுத்தம் செய்து அவளை தங்க வைத்து அவளுக்கு தேவையான உடைகளை வாங்கி தந்து அவளுக்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கொண்டான். அதெல்லாம் அப்போது புரிந்துக்கொள்ளதவளுக்கு ராயர் சொன்ன பிறகு தான் ஒவ்வொன்றும் அதெல்லாம் காதலின் வெளிபாடு என்று புரிய வந்தது..
தான் எவ்வளவு பெரிய முட்டாள் தனம் செய்துவிட்டோம் என்று தன்னையே நொந்துக்கொண்டாள்.
முட்டி போட்டு மோதிரம் கொடுத்து ரோஸ் குடுத்து ஐ லவ் யூன்னு சொன்னா தான் காதலா.. அதெல்லாம் இல்லாமலே தன் நடத்தையின் மூலம் இது அத்தனையும் காதல் தாண்டின்னு சத்தமே இல்லாமல் நிருபிச்சுக்கிட்டு இருக்கனே இவனுக்கு நான் என்ன செய்துவிட்டேன். இது எல்லாவற்றையும் விட எந்த ஒப்பந்தம் என்றாலும் அவன் அந்த காகிதத்தை ஏல்லாம் படித்து கூட பார்க்காமல் தன் மீது கொண்ட நம்பிக்கையில் தான் காட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து இட்டானே இதைவிடவா ஒரு காதலை சொல்ல வழி வேணும்.. என்று கண்ணீரில் மிதந்தாள்.
உடனடியாக அவனிடம் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்று எண்ணி ஊருக்கு வந்துவிட்டாள்.
ஆனால் அவன் முகம் குடுத்து கூட பேசவில்லை.
“நந்தன் வெரி சாரி நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருக்கேன்னு எனக்கு இப்போ தான் தெரியுது.. ப்ளீஸ் எனக்கு நீங்க வேணும்.. நீங்க இல்லன்னா கண்டிப்பா நான் இருக்க மாட்டேன்..” என்று கதறிவளை திகம்பரி தொட்டு
“அண்ணா வயலுக்கு தான் போயிருக்காங்க நீயும் போ” என்று சொல்லி வனாவை அங்கு விட சொல்ல கண்ணீருடன் “சாரி திகம்பரி..” என்று அவளிடமும் மன்னிப்பு கேட்க
“அண்ணி என்கிட்டே எதுக்கு மன்னிப்பு கேக்குறீங்க.. எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நீங்க போய் முதல்ல அண்ணா கிட்ட பேசுங்க. மீதியை பிறகு பார்த்துக்கலாம்” என்று சமாதனம் செய்து அனுப்பி வைத்தாள்.
வனா ரியாவை கொண்டு போய் நந்தன் இருக்கும் வயலில் இறக்கிவிட்டு திரும்பிவிட ரியா நந்தனை தேடி அவன் இருக்கும் இடத்துக்கு வந்தாள். அங்கே அவளை கண்டவுடன்
அங்கிருந்து செல்ல பார்க்க
“நந்தன் ப்ளீஸ்..” அவனை வழி மறைத்தாள்.





