“ஏண்டா ஒண்ணுமே இல்லாம வந்து கோடி கோடியா இருக்குற சொத்தை நோகாம கொள்ளையடிக்க எப்படி எல்லாம் ப்ளான் பண்றீங்க.. முன்னாடி உன் மாமன் காரன் வந்து என் நண்பனோட பாதி சொத்தை கொள்ளை அடிச்சிட்டான்.. இப்போ உன்னை அனுப்பி என் சொத்தை முழுசா எடுக்க பாக்குறானே.. மனுசனாடா அவனெல்லாம். அவன் சொன்னான்னு நீயும் இதுக்ககாவே ஊருல இருந்து கிளம்பி வந்து இருக்க பாரு.. ஆனா நல்லா ப்ளான் பண்ணி வர்றீங்கடா..” என்று கால் மேல் கால் போட்டு ரொம்ப எகத்தாளமாய் பேசிக்கொண்டு இருந்தவரை கண்டு ரவிக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது..
“சார் என் மாமன மரியாதை இல்லாம பேசாதீங்க.. நான் முன்ன பின்ன கூட உங்க பெண்ணை பாத்தது இல்ல..”
“நீ எதுக்குடா பார்க்கணும் அதான் உன் மாமன் காரன் இருக்கனே என் பொண்ணுக்கிட்ட உன்னை பத்தி பேசி பேசியே அவளை உன்னை காதலிக்க வச்சுட்டான்ல. இப்போ என் பொண்ணு உன்னை தான் கட்டிக்குவேன்னு நிக்கிறா.. இது போதாதா உங்களுக்கு.. இதை செய்ய தானே ரெண்டு பெரும் ஆளா பறந்து வந்து இருக்கீங்க.. அவ எவ்வளவு பெரிய கிரிமினல் லாயர் தெரியுமா.. டெல்லில இருந்து கூட அவளுக்கு கிளைன்ட் வர்றாங்க.. அப்படி பட்டவள ரொம்ப ஈஸியா வளைச்சி போட பாக்குறீங்க..” இன்னும் எகத்தாளம் பேசினார் அவர்.
“சார்..”
“என்னடா சாரு.. நீயும் அவளை காதலிக்கனும்னு தானே உன் மாமன் காரன் உன்னை என் பொண்ணுக்கிட்ட ஜூனியரா சேர்த்து விட்டு இருக்கான்.. இதுல இருந்து என்ன தெரியுது.. உன் தாய் மாமனே உனக்கு மாமா வேலை பார்த்துக்கிட்டு இருக்கானே.. நீங்க எல்லாம் நல்ல குடும்பத்துல இருந்து பிறக்கலையா.. உங்களை இப்படி தான் வளர்த்து இருக்காங்களா உங்களை பெத்தவங்க.. நீங்களே இப்படி இருக்கீங்க.. இன்னும் அவங்கள்ளாம் எப்படி இருப்பாங்களோ.. ஒரு வேலை நீங்க உங்க வீட்டு பொம்பளைங்களை வச்சு பிசுனஸ் பண்ண...” முடிக்கும் முன்பே அவரை ஓங்கி அறைந்து இருந்தான் ரவி..
“யோவ் பெரிய மனுசா உங்கிட்ட சொத்து பணம் இருந்தா அது உன்னோட.. அதுக்காக என்னையோ என் குடும்பத்தையோ முக்கியமா என் மாமன பத்தியோ அதை விட முக்கியமா என் வீட்டு பொண்ணுங்களை பத்தியோ ஏதாவது தப்பா பேசுன பேசுறதுக்கு வாய் இருக்காது..”
“உனக்கு என்னய்யா தெரியும் என் மாமன பத்தி சொக்க தங்கம்யா அவரு.. அவர போய் சொத்துக்காக வந்தவன்னு சொன்னியே.. உன் கிட்ட மூணு வருசமா ஜூனியரா இருந்தாரே அப்ப அவரோட குணம் உனக்கு தெரியலையா.. நீ யெல்லாம் என்னய்யா பெரிய வக்கிலு.. இதோ பாரு உன் பொண்ணை” அவரின் முன் சொடுக்கு போட்டு “இப்படின்ற நேரத்துக்குள்ள தூக்கிட்டு போய் தாலி கட்ட ரொம்ப நேரம் ஆகாது.. ஆனா நீ சொன்னியே என் மாமன் காரனை பத்தி.. முக்கியமா என் பெத்தவங்களை பத்தி.. அவங்களுக்கு இந்த தகாத செயல் எல்லாம் பிடிக்காது.. அப்படி நான் செஞ்சா என்னை வெட்டி கொன்னு போட்டுட்டு மகனே இல்லன்னு சொல்லிட்டு போய்டுவாங்க.. அப்படியாப்பட்ட குணம் கொண்டவங்க என்னை பெத்தவங்க.. அவங்களை என்னால நோகடிக்க முடியாது . குறிப்பா என் மாமனை. அந்த மனுசருக்காக தான் உன்னையும் உன் பொண்ணையும் சும்மா விடுறேன்.. ஏன்னு பாக்குறியா.. உன்னை பத்தி அவரு மனசுல உயர்வா நினைச்சு வச்சு இருக்காரு.. அந்த பிம்பத்தை காப்பத்திக்க தானே நீ அந்தாளுக்கிட்ட இருக்க உன் நல்ல பேரை தக்கவச்சுக்க உன் பொண்ணுக்கிட்ட ஜூனியரா சேர ஒப்புதல் கொடுத்துட்டு இங்க என்னை இப்படி பேசுற.. ஆனா நான் எப்பவும் நேரா தான் பேசுவேன்.. இங்க பாரு எப்ப நீ என் மாமன பத்தியும் என் குடும்பத்தை பத்தியும் என் வீட்டு பொண்ணுங்களை பத்தியும் தப்பா பேசுனியோ அப்பவே நான் உன் பொண்ணை வெறுத்துட்டேன்..”
“ஒன்னு ஞாபகம் வச்சுக்கோ.. தூய்மையான காதலை யாராலும் அழிக்க முடியாது.. என்னை பார்க்கமலே காதலிச்ச உன் பொண்ணோட மனசு எனக்கு ரொம்ப புடுச்சு போச்சு.. நான் கட்டுனா அவளை மட்டும் தான் கட்டுவேன்.. ஆனா நீ உன் பொண்ணுக்கு யார வேணாலும் மாப்பிள்ளையா பாரு.. நான் கண்டுக்கவே மாட்டேன்.. என் காதல் என்னோடயே இருந்துட்டு போகட்டும்.. வர்ட்டா..”
“ஆங் அப்புறம் இன்னொன்னு உன் பொண்ணுக்கு கிரிமினல் லாயர் செட் ஆகாது.. அவ மனசுக்கு கண்டிப்பா நள்ளவங்களுக்கு தான் உதவி செஞ்சுக்கிட்டு இருப்பா.. நீ இடையில உன் ஆசையை அவ மேல தினுச்சு அவளை வழி மாற்றி வச்சு இருக்க.. கண்டிப்பா உன்னை எதிர்க்க முடியாம இல்ல. உன் மனசு கோண கூடாதுன்னு தான் அவ ஆசையை கூட ஒதுக்கி வச்சு உனக்காக வாதடிக்கிட்டு இருப்பான்னு எனக்கு தோணுது..
அப்படி பட்டவள நீ நோகடிக்காதைய்யா.. நீ நல்லாவே இருக்க மாட்ட.. அவள அவ இடத்துல இருந்து யோசிச்சு பாரு.. என்னைன்னு நான் சொல்லல.. வேற யாரையாவது வரும் காலத்துல காதலிக்கிற மாதிரி சூழல் வந்தா கண்டிப்பா அந்தஸ்த்து பேதம் பார்க்கம கல்யாணம் பண்ணி வையி.. அவ சந்தோசமா இருக்கணும்” என்று அதிரடியாய் சொல்லிவிட்டு அதன் பிறகே அவளின் அலுவலகத்துக்கு வந்தான் ரவி..
அதை இப்போது நினைத்தது பார்த்தவன் அவளிடம்
“என் மாமன பத்தி கொஞ்சம் அசிங்க மா பேசிட்டாரு உன் அப்பா.. அதனால என்னால உன்னை கட்டிக்கிட முடியாது ஸ்வரா.. உனக்கே தெரியும் எனக்கு என் மாமன்னா உசுருன்னு.. அப்படி பட்டவரை போய் உங்க அப்பா தேவை இல்லாம பேசி போட்டுட்டாரு.. அதோட இல்லாம உன் அப்பாவை கை நீட்டி வேற அடுச்சுட்டேன். அது எங்க ரெண்டு பேருக்குமே மறக்க முடியாது. கண்டிப்பா உங்க அப்பாவால அதை மறக்கவே முடியாது.. உள்ளுக்குள்ள அவ்வளவு வன்மம் இருக்கு எங்க ரெண்டு பேத்துக்குள்ள. அதை மறைக்கவும் முடியாது.. அது வெளிப்படும் போது வருத்தமா இருக்கும். இதே வருத்தத்தோட என் குடும்பத்தை அழைச்சிட்டு வந்து உன்னை பொண்ணு கேட்டா கண்டிப்பா உங்க அப்பா என் குடும்பத்தை ரொம்ப அசிங்க படுத்துவாறு.. இதெல்லாம் வேணாம்னு தான் நான் ஒதுங்கி போறேன்.. இனி உனக்கு வாழ்க்கையில வேற ஒரு நல்ல துணை கிடைக்கும் ஆல் தெ பேஸ்ட் ஸ்வரா..” என்று கை நீட்டியவனை கண்டு கண்கள் பணிக்க அவனிடம் கையை கொடுத்தாள்.
“அப்புறம் இன்னொன்னு ஸ்வரா..”
என்ன என்பது போல அவனை பார்த்தாள்.
“இந்த விஷயம் மாமாவுக்கு கண்டிப்பா தெரிய கூடாது.. தெருஞ்சா ரொம்ப வேதனை பாடுவாரு.. ஏற்க்கனவே அவரு வாழ்க்கையில ரொம்ப வேதனை பட்டுட்டாரு.. இனியும் அவரை என் வழில நானும் கஷ்ட்டப்படுத்த விரும்பல.. அதனால இந்த விசயம் நமக்குள்ளே முடியனும்னு நான் நினைக்கிறேன்..” என்றான். அதற்க்கு ஒப்புதலாய் தலை அசைத்தவள் திரும்பி நடக்க “இன்னொன்னு சொல்லணும் ஸ்வரா” என்றான் சற்றே உள்ளடங்கிய குரலில்.
அதிலே அவனது சங்கடம் தெரிய “என்ன ரவி” என்றாள் முட்டிய கண்ணீரை அடக்கிய படி.





