அத்தியாயம் 24

 
Admin
(@ramya-devi)
Member Admin

பூவரசி தமிழை கூட்டிக்கொண்டு சென்றார்.

“என்ன ஆச்சு தமிழ்?” விசாரித்தார்.

“அது ஒன்னும் இல்ல அத்தை...” என்று தலையை குனிந்துக் கொண்டாள்.

“நீ தலையை குனிஞ்சு நின்னாலே எனக்கு தெரியும் ஏதாவது செய்து இருப்பன்னு” என்றார்.

“ப்ளீஸ் அத்தை.. அப்படி எல்லாம் எதுவும் இல்லை. நீங்க எதுவும் நினைக்காதீங்க.. எனக்கு கொஞ்சம் அவசரமா ஒரு வேலை இருக்கு... நான் கிளம்புறேன்” என்றவள் ஓட்டுனரை அழைத்து காரை எடுக்க சொன்னவள் முதன்முறையாக அகத்தியனுக்கு போனை போட்டாள்.

அவன் எடுக்கவே இல்லை. சிவலிங்கத்தை பிடித்து அகத்தியனின் பிஏவுக்கு போனை போட்டு தகவல் சேகரித்துக் கொண்டவள் அகத்தியன் இருந்த அலுவலகத்துக்கு சென்றாள்.

வழி நெடுகிலும் இந்த ஒரு வாரம் நடந்த நிகழ்வுகளை எண்ணி பார்த்துக் கொண்டே வந்தாள்.

தொட்ட தொண்ணூறுக்கும் அவளை தான் நாடி இருந்தான் அகத்தியன். அவளிடம் பெரிதாக பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்றாலும் அவளின் அருகில் அமர்ந்துக் கொண்டு போனை பார்ப்பான். வேலை பார்ப்பான். இவளுக்கு அவனது நெருக்கம் அசவுகாரியத்தை கொடுத்தது.

அதை வெளிப்படியாக அவனிடம் காட்டிக் கொள்ளாமல், நகர்ந்துக் கொள்வாள். அதை அறிந்தவன் அவளை முத்தத்தால் தினறடிப்பான். அதை எல்லாம் இப்பொழுது எண்ணி பார்த்தவளுக்கு அவனின் சொல்லாத நேசம் புரிந்தது.

அன்றைக்கு ஏதோ ஒன்று குறைந்தது போல இருந்த உணர்வு இன்றைக்கு மாயமாய் மறைந்துப் போனது. அவன் அன்றைக்கு உப்பரிகையில் பேசும் பொழுது உன்னை கடமைக்காக தான் கட்டிக்கிட்டேன். உன் மேல எந்த மயக்கமும் இல்லை என்று சொன்னாரே.. அப்போ என்கிட்ட எதையும் சொல்லாம மறைச்சு இருக்காரு... பிராடு... அதனால தானே நான் ரொம்ப வருத்தமா இருந்தேன்.

அவரோட விருப்பத்தை சொன்னா என்னவாம்... மனைவியா நான் வேணுமாம். ஆனா உள்ளுக்குள்ள காதலை வச்சு இருப்பாராம்.. பிராடு.. என்று திட்டிக் கொண்டவளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியின் சுக ஊற்று எடுத்தது. 

இட்டு நிரப்ப முடியாத அளவுக்கு இருவருக்கும் இடையில் மிகப்பெரிய பள்ளம் இருந்தது என்னவோ உண்மை. அதை அன்பால் மட்டுமே நிரப்ப முடியும் என்று புரிந்துக் கொண்டவளுக்கு அகத்தியனை இப்பொழுதே பார்க்க வேணும் என்று தோன்றியது..

இந்த நீயா நானா என்கிற ஈகோ மட்டும் விட்டுட்டா நல்லா இருக்கும் என்று எண்ணியவளுக்கு நீ முதல்ல விட்டியா அவர் விடுறதுக்கு என்று குட்டிக் கொண்டாள்.

நீ எப்படி என்னை தவறாக சித்தரிக்கலாம் என்பது அவளின் வாதம். ஆனால் அதை அவன் களைந்து விட்டு அல்லாவா அவளின் முன்பு வந்து நின்றான். அவனது நேசத்தை உணர தவறி விட்டோமே என்று இவள் கவலை கொண்டாள்.

இத்தனை நாளும் அவனை ஏங்க வைத்து விட்டேனே என்று மருகினாள்.

அலுவலகம் வந்து விட்டது. காரை விட்டு இறங்கியவள் நேராக அவனது அறைக்கு சென்றாள். அங்கே ஒரு பெண்ணோடு அலுவலகத்தை பற்றி பேசிக்கொண்டு இருந்தான்.

அதை சட்டை செய்யாமல் அகத்தியனின் முன்பு வந்து நின்ற தமிழோ, “எனக்கு ஒரு கப் காபி குடிக்கணும்” என்றாள்.

“பெர்மிஷன் கேட்டு உள்ள வரணும்னு தெரியாதாடி” பல்லைக் கடித்தான்.

“நான் ஒன்னும் மூணாவது மனுசி இல்லை.. இது என் புருசன் ஆபிஸ்.. என் புருசன் ஆபிஸ்ல நான் எதுக்கு அனுமதி கேட்டு வரணும்” என்று கேட்டவளை பல்லைக் கடித்துப் பார்த்தவன், “வர முடியாது போடி” என்றான்.

அவனை முறைத்து பார்த்தவள் அலுவலகத்தில் இருந்து கிளம்பி அருகில் இருக்கும் காபி ஷாப்புக்குள் நுழைந்துக் கொண்டாள்.

தன் எதிரில் இருந்த பெண்ணை பெருமூச்சு விட்டு பார்த்தவன்,

“ஐ ஹவ் வன் அர்ஜென்ட் ஒர்க்” என்று சொன்னவன் அவளின் பதிலை கூட எதிர்பார்க்காமல் கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

அகத்தியனால் தமிழை அப்படியே போ என்று விடமுடியவில்லை.

மிடில்க்ளாஸ் காபி ஷாப்பில் அமர்ந்து இருப்பவளின் எதிரில் அவளை முறைத்துக் கொண்டு வந்து அமர்ந்தான் அகத்தியன். அவனை நிமிர்ந்து பார்க்காமல் போனிலே மூழ்கி இருந்தாள்.

அவளுக்கு அவன் வந்தது தெரியும் இருந்தாலும் நிமிர்ந்து பார்க்கவில்லை அவள். தான் வந்ததை உணர்ந்தும் நிமிர்ந்து பார்க்காமல் இருந்தவளை உருத்து விழித்தவன் எழுந்து வெளியே போக பார்த்தவனை இதழ்களை கடித்துக் கொண்டவள் வேகமாய் அவனது பின்னாடி கைபையை எடுத்துக்கொண்டு விரைந்தாள்.

காரில் ஏறி அமர்ந்து அவன் காரை இயக்க, ஓடி வந்து அவனுக்கு பக்கத்தில் அமர்ந்துக் கொண்டாள்.

அகத்தியன் எதுவும் பேசவில்லை. தமிழும் எதுவும் பேசவில்லை. நீண்ட தூரம் பயணம். எங்கே போகிறோம் என்று அவளும் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை. இலக்கின்றி பயணம் போனது.

ஒரு கட்டத்தில் அகத்தியன் போதும் என்று எண்ணினானோ என்னவோ உயர்தர காபி ஷாப்பில் வண்டியை நிறுத்தினான். கதவை திறந்து அவன் போக அவளும் இறங்கி உள்ளே சென்றாள் அவனை தொடர்ந்து.

இருவரும் எதிர் எதிராக அமர்ந்துக் கொண்டார்கள். வெயிட்டர் வர ஆளாளுக்கு அவர்களுக்கு பிடித்ததை சொல்லிக் கொண்டார்கள். மிகவும் மெல்லிய வெளிச்சமே நிரம்பி இருந்தது அவ்விடத்தில்.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் தான் மேசை நிரம்பி இருந்தது. அதுவும் ஒரு மேசை இரண்டு நாற்காலிகள் அவ்வளவு தான். ஒரு மேசைக்கு நான்கு நாற்காலிகள் கூட போட்டு இருக்கவில்லை.

கப்பிலாக வருபவர்களுக்ககவே ஏற்பாடு செய்த காபி ஷாப் போல எண்ணிக் கொண்டவள் தன் எதிரில் இருந்தவனை பார்த்தாள். அவன் அவளை கண்டுக் கொள்ளவே இல்லை.

“ரொம்ப தான்” வாய்க்குள் முணகிக் கொண்டாள்.

அவளது முணுமுணுப்பை செவியுற்றவன் நிமிர்ந்து அவளை பார்க்க இவள் விழிகளை அவன் மீதிருந்து எடுத்துக் கொண்டாள்.

இப்படியே கண்ணாமூச்சி ஆடினார் இருவரும். காபி வர இருவரும் எங்கோ பார்த்துக் கொண்டு குடித்து முடித்தவர்களுக்கு கிளம்ப மனம் வரவில்லை.

அகத்தியனுக்கு தமிழ் தன்னை தேடி வருவாள் என்று கொஞ்சமும் எதிர்பார்த்து இருக்கவில்லை. அவள் வரவுமே அவனால் கோவத்தை பெரிதாக இழுத்து வைத்துக் கொள்ள முடியவில்லை. அதற்காக அப்படியே அவளது காலில் விழுந்து விடவும் மாட்டானே இவன். ஈகோ பிடித்த கழுதை ஆயிற்றே... அதனால் கண்ணாமூச்சி ஆடினான் அவளிடம்.

அதுவும் அவள் வந்து நின்றதில் அவனுக்குள் அடங்கி இருந்த உணர்வுகள் எல்லாம் பேயாட்டம் போட ஆரம்பித்தது.

என்னென்னவோ உணர்வுகள் இருவரையும் ஆட்க்கொண்டது. ஆனால் அதை செயல் படுத்த இருவரும் முனையவில்லை.

தாலியை கூட விட்டு வைக்காமல் அவளை முழுமையாக ஆட்கொண்டு இருந்தவனுக்கு இன்று இந்த விலகல் என்னவோ செய்தது. அவளை பார்த்தால் மட்டுமே அவனது உணர்வுகள் கிழர்ந்து எழுந்து அவனை மிச்சமில்லாமல் வதம் செய்கிறது.

கவிதையாய் அவளை தேட மனம் இப்பொழுது தவித்தது. ஆனாலும் மெல்லிய நூலிழை இருவரையும் பிரித்து வைத்தது. அதும் அவளை நெருங்க நினைக்கும் பொழுது எல்லாம் அவள் விலகி விலகி போனதில் அகத்தியனுக்கு கொம்பு முளைத்து விட்டது. இனி நீயா வந்தா தான் ஆச்சு என்று நின்றான். ஆனாலும் அவனது உணர்வுகள் கிளர்ந்துக் கொண்டே இருந்தது.

தமிழுக்கும் அதே சந்தேகம் தான். தன் கழுத்தில் தாலியை கூட மிச்சம் வைக்காமல் அவளை வன்மையாக தேடியவன் தானே அவனை தேடி வந்தும் இன்று நாகரீகமாக எட்டி நிற்பதை பார்த்து அந்த அகத்தியன் தான் இந்த அகத்தியனா என்று சந்தேகம் எழுந்தது.

தன் தயக்கத்தை விடுத்து அவனை நெருங்க இவளுக்கும் அதே நூலிழை தயக்கம் இருந்தது. பெண் என்கிற கூச்சம் அவளை தடுத்தது.

இருவரு ஆடும் கண்ணாமூச்சியை பார்த்து காலமே இருவரையும் சேர்த்து வைக்க காத்திருந்ததோ என்னவோ... வெளியே அடைமழை பொழிந்தது.

காபி குடித்து விட்டு இருவரும் மழையை இரசித்தபடியே பயணம் மேற்கொண்டார்கள்.

இந்த இரவு இருவருக்கும் மிகப்பெரும் சுமையாகியது. மூச்சு விடும் சத்தம் கூட காரில் அப்படியே எதிரொலிக்க கைகளை கோர்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள் தமிழ்.

அகத்தியனோ ஸ்டீரிங்கை இறுக்கமாக பிடித்து இருந்தான். அளவுக்கு அதிகமாக மழை பெய்தது.

வீட்டுக்கு தான் போகவேண்டும்... எங்காவது ஓரமாக நிறுத்தலாமா என்று கூட இருவரின் மனமும் எண்ணியது. ஆனால் அதை இருவருமே வாய்விட்டு பகிராததால் அகத்தியன் காரை எங்குமே நிறுத்தவில்லை.

ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தனர். வீட்டில் இருப்பவர்களுக்கு அப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது. போகும் பொழுது தனி தனியாக போனவர்கள், வரும் பொழுது ஒன்றாக வருவதை கண்டு மனம் நிறைந்துப் போனார்கள்.

சாப்பிட சொல்லி சொல்ல, வேணாம் என்று இருவருமே மறுத்து விட்டு மேலே சென்றார்கள். இருவரும் ஒரே அறை தான். பெருமூச்சு விட்டு குளியல் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள் தமிழ். அவள் குளித்து வெளியே வர இவன் உள்ளே நுழைந்துக் கொண்டான்.

போகும் அவனை பார்த்தவளுக்கு சுத்தமாக தூக்கம் வரும் என்ற நம்பிக்கையே இல்லை. உப்பரிகையின் கதவை திறந்துக் கொண்டு வெளியே சென்றாள்.

ஒரு பக்கம் உப்பரிகை... இன்னொரு பக்கம் நடைபாதை நீண்டு மாடி தோட்டம் போடப்பட்டு இருந்தார்கள். அந்த இடத்தை அடைந்த பொழுது மழை நீர் அவளை வெகுவாக நனைத்தது.. அதையும் தாண்டி சென்றவளுக்கு நீச்சல் குளம் தெரிய அப்படியே கண்களை மூடி அதில் தொப்பென்று விழுந்து விட்டாள். தலைக்கு மேல் மழை நீர் கொட்டிக் கொண்டு இருக்க என்னவோ ஷவரில் நிற்பது போல இருந்தது அவளுக்கு. கண்களை அழுந்த மூடிக் கொண்டாள்.

ஒரே ஒரு விளக்கு மட்டும் மிக மெல்லிய இருளை நீக்கி இருந்தது. மற்றபடி இருள் தான் அதிகம் நிரம்பி இருந்தது அவ்விடத்தில். நீரில் நின்றவளுக்கு கணவனின் எண்ணமே மனமெல்லாம் தேனாய் நெகிழ்ந்து வழிய, விழிகளை திறக்க மனமே வரவில்லை. அவன் தன்னை பார்த்து ஆசை பட்டு தான் கல்யாணம் செய்தான் என்கிற உணர்வு அவளை மகிழ செய்தது. என்னவோ கணவனின் நெருக்கம் இந்த நிமிடம் வேண்டும் போல அவளின் பெண்மை உணர்வுகள் அவளை அதிகம் தூண்டியது.

“ம்ஹும்... நானா போக மாட்டேன்” என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவளின் முதுகில் சூடான மூச்சுக் காற்றுப் பட வேகமாய் திரும்பினாள் தமிழ்.

 

Loading spinner
Quote
Topic starter Posted : March 14, 2025 11:30 am
(@gowri)
Eminent Member

Aww🥰🥰🥰🥰🥰

Loading spinner
ReplyQuote
Posted : March 14, 2025 2:33 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top