அவனது பார்வையில் அவளுக்கு உயிர் உருகி போனது.. ஆனாலும் செல்ல கடுப்பும் வந்தது.
யாவரும் அறியாமல் அவள் முறைக்க அவன் உல்லாசமாய் புன்னைகையை சிந்தினான். அவனது சிரிப்பு அவளை வெகுவாய் தாக்க உள்ளுக்குள் என்னவோ செய்தது.. ஆனாலும் அதை மறைத்துக்கொண்டு வெகு இயல்பாய் மேற்கொண்டு நடந்த மீட்டிங்கை கையாண்டாள்.
அவளது திறமையை கண்டு நவீன் வாயை பிளந்து நின்றான்.. வந்த அன்னைக்கே அதும் நூறு கோடி ப்ராஜெக்ட்ல எப்படி சார் இன்வால்வ் ஆக விட்டார். அதோட மட்டும் இல்லாம எந்த ப்ரிபரேசனும் இல்லாமலே நிறுவனத்தின் ஆதி முதல் அந்தம் வரை தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.. இதெப்படி சாத்தியம்..
வியந்து போய் அவளை பார்த்தான். மீட்டிங் முடிந்து அவளிடமே அதை கேட்க வெறும் புன்னகையை மட்டும் சிந்தியவள் நந்தாவின் அறைக்கு சென்றுவிட்டாள்.
அங்கே நந்தன் அவளை கூர் பார்வையுடன் வரவேற்க அவனை கண்டுகொள்ளாமல் தன்னுடைய இருக்கையில் அமர்ந்து அன்றைக்குறிய மீதி வேலையை செய்ய ஆரம்பிக்க நந்தா எழுந்து அவளிடம் வந்தான்.. அவன் எழும்போதே ஒரு வித அவஸ்த்தை அவளை ஆக்கிரமிக்க இருந்தாலும் அவனை கண்டுக்கொள்ளாதவளாய் மும்மரமாய் வேலை பார்ப்பது போல கீ போர்டில் தட்டிக்கொண்டு இருந்தாள். வந்தவன் அவளை நெருங்கி நிற்க டைப் பண்ணிக்கொண்டு இருந்த விரல்கள் ஒரு கணம் செயல் இழந்து அதன் பின் முன்பை விட அதி வேகமாக செயல் பட அதை உணர்ந்துக்கொண்டவனின் இதழ்களில் இன்னும் புன்னகை விரிந்தது..
“சோ மேடம் அப்டேட் ல தான் இருக்கீங்க ரைட்...” அழுத்தம் திருத்தமாய் அவளிடம் கேட்டவனின் குரலில் இருந்த ஆளுமையும் சரி அவளை துளைத்து எடுப்பது போல ஆராய்தலும் சரி அவளை விதிர் விதிர்க்க செய்ய படபடப்புடன் அவனை பார்த்தாள்.
“ம்ம் சொல்லுங்க மிஸ்செஸ் ரியா..” அவனது அடக்கப்பட்ட கோவத்தை கண்டு வேகமாய் எழுந்தவள் அவன் மீது உரசாதவாறு தள்ளி நின்று
“ப்ளீஸ் நந்தன்..”
“எதுக்கு மேடம் இப்போ ப்ளீஸ் போடுறீங்க.. இன்னும் என்ன காரியம் என் கிட்ட சாதிக்கலாம்னு பிளான் போடுறீங்க..”
“வலிக்குது நந்தா..”
“சோ அப்போ எனக்கு மட்டும் வலிக்காது இல்லையா..”
“நந்தன் நான் அப்படி சொல்லல..”
“ஆமா தான்... நீ இன்னும் நான் கேட்ட எந்த கேள்விக்கும் பதிலே சொல்லல்ல..”
“நந்தன்..”
“ம்ம்ம்..” என்று உறுமினான்..
“எனக்கு ட்ரீட் வேணும்..” உடனே பேச்சை மாற்றினான்.. அதில் அவள் தான் இன்னும் தவித்து போனாள்.
“நந்தன்..”
“எப்பவும் செலப்ரேட் பன்னுவோமே.. ஒரு மீட் சக்செஸ் ஆச்சுன்னா.. இப்பவும் அதே மாதிறி வேணும்..”
“நந்தன்..”
“பட் எல்லை மீரா மாட்டேன் வா..” என்று அவள் சுதாரிக்கும் முன்பே அவளை அலேக்காக தூக்கியவள் அவனது கட்டிலில் போட அவள் மறுப்பு சொல்லாமல் அவனுக்கு உடன்பட்டாள்.
லேசாய் அவளை வதைத்துவிட்டு அவளது முகத்தை பார்க்க அதில் ரசனையுடன் உதடு கடித்துக்கொண்டு இருப்பது புரிய பெருமூச்சு விட்டவன் எழுந்து அமர்ந்தான்.
“என் தொடுகைய ரசிக்கிற, இவ்வளவு நாளும் யாரு கூடவும் சேர்ந்து இருக்கல.. அது மட்டும் இல்லாம என்னையும் எல்லை மீற விட மாட்டிக்கிற.. என்னதான்டி உனக்கு பிரச்சனை..” அவளை உலுக்கி எடுத்தான்.
“நந்தா ஏன் இப்படி..”
“பின்ன வேற என்னை என்ன பண்ண சொல்ற..” அவனது நிலைக்கொள்ளா உணர்வில் தவிப்பில், ஆழ்ந்து மூச்செடுத்தவள் ஒன்றும் பேசாமல் படுக்கையில் படுத்து அவனது கைகளை பிடித்து இழுத்து தன் மீது போட்டுக்கொண்டவள் அவனுக்கு முழு மூச்சாக உடன் பட நந்தனின் கேள்விகள் எல்லாம் அடங்கி போய் விட்டது ரியாவின் ஒரு செய்கையில்.
அவளை முழுவதுமாக அவன் வசம் வர வைத்தவன் மீண்டும் மீண்டும் அவளுடன் கூடி கழிக்க ஒரு கட்டத்த்க்கு மேல் ரியாவால் அவனது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் போக அதை உணர்ந்தும் அவனால் அவனை கட்டுபடுத்த முடியாமல் அவளிடமே அடைக்கலம் ஆனான்..
விழியோரம் வழிந்த கண்ணீரை அவனுக்கு காட்டாமல் தலையணையில் மறைத்தவள் அவன் விருப்பப்படி இருந்தாள்.
அலுவலகம் விட்டு அனைவருமே சென்று இருக்க இவர்கள் மட்டும் இருந்தார்கள் அங்கே..
களைப்பில் நந்தன் நன்றாக உறங்க அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள் ரியா.. அவளது இதழ்களில் விரகத்தி புன்னகை பரவி இருந்தது.. எழுந்து சென்று குளித்துவிட்டு உடைகளை அணிந்துக்கொண்டவள் வெளியே வரும்போது நந்தன் படுக்கயில் கைவிட்டு அவளை தேடிக்கொண்டு இருந்தான். அதை கண்ட போது தொண்டை அடைத்து கேவல் ஒன்று வெளிவர அதை தன் இரண்டு கைகளாலும் வாயை பொத்தி அடக்கிக்கொண்டு முன் புறம் இருந்த அறையில் சென்று அமர்ந்துக்கொண்டாள்.
கண்கள் கலங்கி போய் சிவந்து இருக்க கூடவே உடம்பின் சோர்வும் இருக்க இன்றைய பொழுது எங்கே கழிப்பது என்ற எண்ணம் வந்தது.. இனி மும்பை போய் பயன் இல்லை. ஆனால் தன் உடமை.. இப்போது மாத்திக்க கூட துணி இல்லை.. எல்லாமே ஹோட்டல் வசம். அதுவும் இரண்டு உடைகள் மட்டுமே கைவசம் இருந்தது..
எதிர்காலம் பற்றிய பயம் அவளை படுத்தி எடுக்க கண்கள் கலங்கிக்கொண்டு வந்தது.. அதே நேரம் நந்தனிடமிருந்து ‘ரியா’ என்ற அழைப்பு வர கண்களை அழுந்தி துடைத்துவிட்டு மலர்ந்த முகமாய் அவன் முன்பு போய் நின்றாள்.
“என்ன ஆச்சு அதுக்குள்ளே பிரெஷ் ஆகிட்ட..” என்றவன் அவளிடம் கையை நீட்ட மனம் கனத்து போனாலும் அவன் நீட்டிய கையை பற்றிக்கொண்டாள். பற்றியவுடனே அவன் ஒரே இழுவையில் அவளை படுக்கயில் வீழ்த்த அமைதியுடன் அவனுக்கு உடன் பட்டாள்.
சின்ன எதிர்ப்பு கூட அவளிடம் இல்லை.. அவ்வளவு ஒத்துழைப்பு.. மெல்ல நிமிர்ந்து நந்தா அவளை பார்க்க சட்டென்று தன் முகத்தில் வெட்கத்தை கொண்டு வந்தாள்.. அதில் மனம் நிறைந்தவன் மீண்டும் தன் வேலையை பார்க்க ரியா தனக்குள்ளே நொறுங்கி போனாள்.
அடுத்த நாள் காலையில் நந்தாவிடம் ரவி கத்திக்கொண்டு இருந்தான்..
“யார கேட்டு இந்த வேலையெல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்கீங்க எல்லாரும்.. நான் பாட்டுக்கு தோப்பு வரப்பு அடிதடி வெட்டுகுத்து பஞ்சாயத்துன்னு ஜாலியா இருந்தேன். இங்க வந்து என்னை எல்லாரும் ஒட்டு மொத்தமா ஒழிக்க பாக்குறீங்க. இதெல்லாம் நல்லதுக்கே இல்ல சொல்லிட்டேன்..” என்று அவன் பாட்டுக்கு கத்திக்கொண்டு இருக்க
நந்தா காதிலே விழாதது போல உணவை உண்டுக்கொண்டு இருந்தான்..
அவ்வளவு தூரம் வீர வேசமாய் கத்தியவன் நந்தா அசையவில்லை என்றவுடன்
“அண்ணா, ப்ளீஸ் அண்ணா அந்த ராட்ச்சசி கிட்ட போய் என்னை கோத்து விடுறியே இதெல்லாம் உனக்கே நல்லா இருக்கா.. வேணான்னா நான் பாட்டுக்கு உன் நிறுவனத்தோட அட்வைசர அப்படியே சிலபல சொத்து விவரங்களை பாத்துக்கிட்டு இப்படியே இருந்துடுறன்னே.. அவ ரொம்ப படுத்துவான்னா.. அது சாதா ஆள் இல்ல ஒரு கிரிமினல் லாயர் கிட்ட போய் சேத்து விடுறேன்னு சொல்றியே நியாயமா..”
“அதற்கும் பதில் பேசாமல் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவனின் தட்டில் இன்னும் சில பதார்த்தத்தை எடுத்து வைத்து உபசரிக்க நந்தாவுக்குசிரிப்பு வந்தது.
இதெல்லாம் பன்றேன்ல இதுக்காகவாவது கருணை கட்டலாமே அண்ணா..”
“ரவி உன் நல்லதுக்கு தான் இந்த ஏற்பாடு.. ஸ்வரா ரொம்ப நல்ல பொண்ணுடா.. என்ன அவளுக்கு அவ வெளியை சரியா விரைவா செய்யணும் அது ஒன்னு தான். மத்த படி நீ நினைக்கிற மாதிரி அவ டெரர் கிடையாது.. அவ உனக்கு செம்மையா கோச் பண்ணுவா.. உன்ன வெறும் நிறுவனத்தோட அட்வைசரா மட்டும் இருப்பதற்கு கூட்டிட்டு வரல ரவி.. உன் கேரியர் இங்க வந்தா இன்னும் இம்ப்ரூவ் ஆகும்னு தான் வர வச்சது..
உன் மாமானும் இங்க வந்து தான் அதும் சதாசிவம் அங்கிள் கிட்ட தான் கத்துக்கிட்டான்.
நீ அவர் பொண்ணுகிட்ட கத்துக்க போற அவ்வளவு தான்..”
“அண்ணா” அவன் மறுப்பாய் தலை அசைக்க
“கொஞ்சம் கஷ்ட படு பியுச்சர் ப்ரைட்டா அமையும்” என்றவன் எழுந்து செல்ல அவன் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்.
“சார்ப்பா பத்து மணிக்கு எல்லாரும் ஆஜர் ஆகிடனும் அவ கிட்ட. ஒரு நிமிசம் லேட்டா போனாலும் அவ சேத்துக்க மாட்டா. மணி இப்போவே நைன் தேர்டி” என்று போகிற போக்கில் வெடியை கொளுத்தி போட்டான் நந்தா.. அதன் பிறகு ஒரு நொடி கூட வீண் செய்யாமல் அடித்து பிடித்துக்கொண்டு அவளது அலுவலக வாசலில் வந்து நின்றான் ரவி..
இவன் வரவும் ஸ்வராவின் வரவும் ஒன்றாய் இருக்க அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றாள் அவள்.
அவளது பார்வையில் ஒன்றும் விளங்காதவன் அலுவலகத்தின் உள்ளே நுழைய அதே சமயம் அவனை அவள் உள்ளே வர சொல்லி சொல்ல இவனும் உள்ளே சென்றான்.
“எஸ்..” என்று ரவி கேள்வியாய் நிறுத்த
“விஷ் பண்ணும்ங்குற மேனர்ஸ் கூட தெரியாத..” சூடாய் கேட்டாள்.
“நீ என்னை விட சின்ன பொண்ணு சோ நீ தான் என்னை விஷ் பண்ணனும்.. நான் விஷ் பண்ணனும்னு எதிர் பார்க்காத அது கண்டிப்பா நடக்காது..” இவனும் சூடாகவே பதில் கொடுத்தான்.
“ஹலோ இங்க நான் தான் பெரியவ.. அதனால தானே உங்க மாமாவும் அண்ணாவும் என் கிட்ட உங்களை சேர்த்து விட்டு இருக்காங்க மறந்து போயிடுச்சா” எள்ளலாய் கேட்டவளை கொலை பண்ணும் வெறியோடு முறைத்து பார்த்தான்.
“அவமானம் உச்ச கட்ட அவமானம்.. டேய் ரவி என்னடா இது உனக்கு வந்த சோதனை.. என்னை விட்டா இந்த சுண்டெலியை ஒரு கை பார்ப்பேன்.. ஆனா கால சூழ்நிலை கையை கட்டி போட்டு வச்சு இருக்கு.. எனக்கும் காலம் வரும்.. அப்போ இருக்குடி ஸ்வரா..” கருவியவன் வெளியே அவளை முறைத்தபடி
“விஷ் பண்ண முடியாதுடி உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோடி” அசால்ட்டாய் அவன் டி போட
“ஹேய் யூ..”
“எஸ் ஐ அம் ரவி.. யூ நோ” நக்கலாய் சொல்லிவிட்டு அவளின் முன் அமர்ந்து கால் மேல் கால் போட்டு தெனவட்டாய் அமர அவளின் முகம் கருத்து போனது..
“ரவி திஸ் இஸ் டூ மச்..”
“இங்க பாரு நானே கடுப்புல தான் உன் கிட்ட வேலைக்கு வரேன்.. அப்படி வர்றவன சும்மா ரூல்ஸ் பேசி கடுப்பேத்தாத.. இல்லன்னா இப்படி தான் நடந்துக்குவேன்” என்றவன் எழுந்து வெளியே சென்று மற்ற ஜுனியர்களோடு சேர்ந்துக்கொண்டான். கோதாண்டமும் அவனுடன் சேர்ந்துக்கொள்ள அவனுக்கு எப்பொழுதும் போல பொழுது கலகலப்புடன் சென்றது.. ஸ்வராவுக்கு தான் அவனது மரியாதை அற்ற தனம் கடுப்பை கிளப்பிக்கொண்டு இருந்தது.. கூடவே அவன் மற்றவர்களோடு கலகலப்புடன் இருப்பதை கண்டு இன்னும் காந்தியது..
“ம்கும் வேலையை பார்க்க சொன்னா கதை பேசி கூத்தடுச்சுக்கிட்டு இருக்கான்.. எதையாவது கேட்டா ரூல்ஸ் பேசாத அப்படின்னு சொல்லுவான். என் தலை எழுத்து இவனை கட்டி மாரடிக்கணும்னு.. ச்சை..” அவனை கண்டு எரிந்து விழுந்தாள் மனதுக்குள்..





