Notifications
Clear all

அத்தியாயம் 3

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 12 months ago
Posts: 961
Topic starter  

அதன் பின் ரவி அவனுடைய வேலைகளை கவனிக்க செல்ல நந்தா வசதியாய் தன்னுடைய இருக்கையில் சாய்ந்து அமர்ந்துக்கொண்டு கணினியில் வேலை செய்துக்கொண்டு இருந்த ரியாவை பார்த்தான்.

அவள் கட்டி இருக்கும் சேலை அவனை உசுப்பி விட்டது.. முன்பு இருந்ததுக்கு இப்போ அவளிடம் இன்னும் மெருகு ஏறி போய் இருந்தது.. கண்கள் அவளுடைய மேனியில் அத்து மீறி பயணிக்க அதை ரசித்தவனாய் இன்னும் அவளை ஆழ்ந்து பார்த்தான்.

அதிகாலையில் எழுந்து இருந்ததால் அவளிடம் ஒரு சுணக்கம் இருந்தது.. அது அவளது கண்களில் நன்கு தெரிந்தது. லேசாய் அணங்கும் இங்குமாய் சில முடிகள் களைந்து போய் இருந்தது..

அவன் அதிகம் விரும்பி மயங்கும் இடம் அவள்அணிந்து இருக்கும் மூக்குத்தி தான்.. அவன் ஒரு முறை அதிக மயக்கத்திலும் ஆசையிலும் அவளுக்கு வைர மூக்குத்தி ஒன்று வாங்கி தந்தான். அதை தான் இன்னும் அவள் போட்டு இருக்குறாள். அதை கண்டவனுக்கு இன்னும் அவள் மீது மயக்கம் அதிகமாகியது..

சதை பற்றுடன் இருந்த இதழ்கள் அவனை அழைக்க நேற்று அவள் இதழில் கவி பாடியது நினைவுக்கு வந்து உசுப்பேத்தி விட்டது.

மெல்ல அவளது கழுத்தில் பார்வை படிந்தது.. அங்கு ஒற்றை சங்கிலி அவள் திரும்பும் அழகில் புரண்டு புரண்டு செல்லம் கொஞ்சிக்கொண்டு இருக்க அதன் முடிவு மட்டும் எங்கோ மறைந்து இருக்க அதை கண்டு இவனுக்கு பொறாமை வந்தது..

மெல்ல பெருமூச்சு விட்டவன் தலையை இருக்கையில் சாய்ந்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான்.

அவனுக்கு உணர்வுகள் வரும் வேளையில் சுற்றம் முற்றம் எதுவும் பார்க்க மாட்டான். அது அலுவலகம் என்றால் கூட அப்படிதான். உடனே அவனுக்கு அவள் வேண்டும்..

பாதி பொழுது அவளுடன் மஞ்சத்திலே தான் கழித்து இருக்கிறான். எவ்வளவு முக்கியமான கூட்டம் என்றாலும் சரி அவள் வேண்டும் என்று நின்றாள் அவளால் ஒன்றும் செய்ய முடியாது.. அவனுக்கு அவள் பியேவாக இருப்பதால் எல்லாவற்றையும் அவள் தான் ஹேண்டில் பண்ணுவாள். அந்த மாதிரியான சமயங்களில் இவள் தான் திண்டாடி போவாள். கிளைன்ட் ஒரு பக்கம் அவளை விரைவாக வர சொல்லி படுத்த இவனோ இவளை படுக்கையில் படுத்தி எடுப்பான் நேரங்காலம் தெரியாமல்.

“நமக்காக அங்க வெயிட் பண்றாங்க நந்தா.. பிளேஸ் போகணும் விடுங்க..”

“ப்ச் வெயிட் பண்ணட்டும் ஒன்னும் அவசரம் கிடையாது” என்று அவன் விரும்பியபடி அவளுடன் கூடிவிட்ட பின்னே இருவரும் சேர்ந்து க்ளையிண்டை மீட் பண்ணுவாங்க.. அப்போதெல்லாம் அது அவனுக்கு பெரிய விசயாமாகவே தெரியாது.. ஆனால் இன்று அதை எண்ணி பார்க்கும் போது அவனை நினைத்தே அவனுக்கு வெட்கம் வந்தது.

அவள் படும் அவஸ்தையை கண்டு எத்தனையோ நாள் ரசித்து இருக்கிறான்.

“இவ்வளவு பதட்ட படுற அளவு அவனுங்களுக்கு அவ்வளவு சீன் கிடையாது.. ஜஸ்ட் ஹண்ட்ரட் கோர்ஸ்” என்றபடி அவளது இதழ்களை காய படுத்தி இருக்கிறான்.

“ப்ச் பணத்துக்கு சொல்லல.. பேர் கேட்டு போயிடுச்சுன்னா நல்லாவா இருக்கும்.. புருஞ்சுக்கோங்க வாங்க போகலாம்.” என்று வலுக்கட்டாயமாக அவள் தான் அவனை இழுத்து செல்வான்.

அப்போதெல்லாம் நந்தனுக்கு பிசிநேசை விட ரியாவை படிக்கதான் அதிகம்விரும்பினான்.. அவளிடம் அவனுக்கு அப்படி ஒரு மயக்கம்.. இப்போதும் அது இருக்கு..

இன்றும் உணர்வுகள் பொங்கியது அவனுக்கு. ஆனால் அவளை அடைய முடியாது.. கண்முன் நடமாடிக்கொண்டு இருந்தவளை கண்டு அவனால் அவனையே கட்டு படுத்த முடியாமல் வேகமாய் அவளருகில் வந்தான்.

வேலை செய்துக்கொண்டு இருந்தவளுக்கு அவனின் வேகமான வருகை எதையோ உணர்த்த அவனை தடுக்கும் முன்னவே அவளை அலேக்காக தூக்கியவன் அவள் இதழில் இதழ் பதித்து முத்தமிட ஆரம்பித்தான். கூடவே அவனது ஒய்வு அறைக்கு நடக்க ரியாவுக்கு பயபந்து தொண்டையை அடைத்தது.

“அய்யய்யோ..” என்று அவள் மனம் கூச்சல் போட அவனை உதறி தள்ள முயன்றாள்.. ஆனால் அவனது பிடி இறுக்கி இருக்க அவளால் முடியாமல் போக அவனுக்கு ஒத்துழைக்க மனமில்லாமல் எப்பொழுதும் போல அவள் உடம்பை இறுக்கி பிடிக்க முயன்றாள். ஆனால் அவனது தொடுகையில் அவளது உடல் நெகிழ தன்னையே நொந்துக்கொண்டாள்.

படுக்கையில் விட்டவன் தாமதமின்றி அவள் மீது சரிந்துக்கொண்டான்.

“நந்தா காலையில என்ன சொல்லி என்னை அலுவலகத்துக்கு கூட்டிட்டு வந்தீங்க..” அவனை தேக்க பார்த்தாள்.

அவனோ அவளது மார்பில் முகம் புதைத்துக்கொண்டு நிமிராமல்

“இன்று ஒரு நாள் மட்டும் என் பிஏவா இருன்னு சொல்லி கூட்டிட்டு வந்தேன்..” என்றான்.

“பின்ன நீங்க இப்போ இப்படி நடந்துக்கிறது சரியா..”

“என் பிஏவா இப்படி தானே இருந்த..”

“அது  அப்போ நந்தா..”

“எனக்கு என் பழைய பியே தான் வேணும்..” என்றவன் அவளுடைய உடைகளை கலைக்க ஆரம்பிக்க அவனை தடுக்க முயன்று அவள் தான் தோற்று போனாள்.

“நந்தா ப்ளீஸ்..” நீண்ட நாட்களுக்கு பின் அவன் தொடுகையில் அவளும் மயங்கி தான் போனாள். தன்னையே கட்டுப்படுத்த முடியாமல் அவனிடம் அவளும் இளைய ஒரு கட்டத்துக்கு மேல் அவனால் பொறுமையாக இருக்க முடியவில்லை அதும் அவளே வசதி பண்ணி கொடுக்க பித்து பிடித்து போனான் நந்தா... தன் வேகம் அத்தனையையும் அவளிடம் காட்ட

“நந்தா வலிக்குது ப்ளீஸ்..” என்று கண்கள் கலங்க அவனிடம் சொன்னவளை இகழ்ச்சியாக பார்த்து

“இது தான் நீ உன் புருஷன் கூட இருக்குற அழகா” என்று அவளின் காதோரம் சொல்ல விலுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“தினமும் கணவனுடன் குடும்பம் நடத்தியவள் அதுவும் இரண்டு பிள்ளைகள் இருக்கிற நிலையில் எப்படி வலிக்கும்.. சோ என் கிட்ட போய் சொல்லி இருக்குற இல்லையா..” என்றவன் அவளிடமிறுந்து அவன் பட்டென்று விலக டான் இருக்கும் நிலையை உணர்ந்து அருகில் இருந்த போர்வையை எடுத்து போத்திக்கொண்டவள் தலையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள் அவனை பார்க்காமல்.

“உண்மைய சொல்லு.. உனக்கு இன்னும் கல்யாணம் ஆகல தானே” அவன் விசாரிக்க ஆமாம் என்பது போல தலையை அசைத்தாள்.

“எதுக்கு பொய் சொன்ன..”

அவளிடம் மௌனம் மட்டுமே..

“ஓ மேடம் சொல்ல மாட்டீங்க இல்லையா.. ஓகே பட் இனி என்கிட்டே இருந்து உனக்கு விடுதலையே கிடையாது..” என்றவன் அவள் போத்தி இருந்த போர்வையை வெடுக்கென்று பற்ற, ரியா பதறி போனாள். அவளது பதற்றம் கண்டு பெருமூச்சு விட்டவன் நிதானத்துடன்

“என்னை உனக்கு பிடிக்கவே இல்லையா பேபி..” வருத்தமுடன் கேட்க

அவள் மவுனமாகவே இருந்தாள்..

அவளை ஆழ்ந்து பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் எழுந்து வெளியே சென்றுவிட்டான்..

உணர்வுகள் வடிந்தாலும் அவள் வேண்டும் என்று ஒவ்வொரு அணுவும் அவனை கொள்ள அப்படியே போய் நீருக்கடியில் நின்றுக்கொண்டான்.

நீண்ட நேரமாய் தண்ணீர் விழும் சத்தம் கேட்க எழுந்து தன்னை சரி செய்துக்கொண்டவள் குளியல் அறையின் கதவை தட்டினாள்.

அவன் பதிலே சொல்லவில்லை.. அவளும் தட்டுவதை விடவே இல்லை..

“ப்ச் என்ன வேணும்..” சலிப்புடன் கேட்க

“உங்களுக்கு ரொம்ப நேரம் தண்ணில இருந்தா சேராது நந்தா முதல்ல வெளிய வாங்க..” பரிதவித்து போய் அவள் சொல்ல

“ஆமா இந்த கிரேஸ்க்கு ஒன்னும் குறைச்சல் இல்ல..” முனகிவன் வெளியே வர அவனிடம் துண்டை நீட்டினாள்.

அவள் கொடுத்த துண்டை தூக்கி காலில் போட்டு மிதித்து காலிலே எட்டி உதைக்க அது எங்கேயோ பறந்தது..

“நந்தா ப்ளீஸ்..”

“போடி..” என்றவன் அப்படியே போய் படுக்கையில் படுத்துக்கொள்ள

“சரி நான் எங்கேயும் போகல.. இனிமே இங்கயே வேலை செய்கிறேன் சரியா..” ஒருவழியாய் அவள் தான் இறங்கி வந்தாள்.

“அதும் பழைய பிஏவா” அவன் விடாமல் கேட்க

அவள் முறைத்து பார்த்தாள்.

“சரி முழுசா வேணாம்.. அங்கே இங்கே கொஞ்சமா டச் பண்ணிக்கிறேன்.. அதுக்கு கூட அலவ் பண்ணலன்னா போடி..” என்று மீண்டும் தலையனையில் முகம் புதைத்துக்கொண்டான்..

“எப்படியோ போங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல முக்கியமான மீட் இருக்கு கிலம்புங்க” என்றவள் கண்ணாடியை பார்த்து தன் அலங்காரத்தை சரி செய்ய முயல நந்தா வேகமாய் எழுந்து அவளை பின்னிருந்து அணைத்துக்கொண்டான்.

“அம்மா எதுக்கு இவ்வளவு முரட்டு தனமா.. பிளீஸ் விடுங்க..”

“ஹாப்பி டி..” என்றவன் அவளை திருப்பி அவளின் இதழில் இதழ் பதித்து லேசாய் காயமும் செய்ய அவன் கொடுத்த வலியில் அவளுக்கு கண்கள் கலங்கி போனது..

“தினமும் இப்படி தான் பொறுத்துக்கோ” என்றவன் அழகாய் கிளம்பி வந்தான்..

அவனுடன் அவனுடைய இப்போதைய பியே நவீன் மீட்டிங்ல பேச வேண்டியதை பற்றி தெளிவுடன் கூற “எனக்கு எதுவும் தேவை இல்ல இவ கிட்ட சொல்லிடு..” என்றவன் இருக்கையில் அமர்ந்து அழகாய் கிளம்பி வந்தவளையே பார்த்துக்கொண்டு இருந்தான். அவனது பார்வை அவளுக்கு பெரும் அவஸ்த்தையை கொடுத்தாலும் நவீன் முன் எதையும் காட்டிக்கொள்ளாமல் அவன் விளக்கியவற்றை தன் கருத்தில் பதித்துக்கொண்டாள்.

ஏற்க்கனவே அவள் அப்டேடில் இருப்பதால் ஒன்றும் தடுமாறவில்லை.. நவீனுக்கு தெரியாத சில பாயிண்டுகளை கூட நோட் பண்ணி வைத்துக்கொண்டாள். அவளது சாதுரியம் பற்றி நந்தா அறியாததா என்ன..

 

அவள் அவனுக்காக எவ்வளவு வேலை செய்து இருக்கிறாள் என்று அவனுக்கு தான் தெயரியுமே.. அவள் மீது அவ்வளவு நம்பிக்கை அவனுக்கு.. பொறுப்பு என்று வந்துவிட்டாள் யார் என்ன என்று கூட பார்க்க மாட்டாள் விளாசி தள்ளிவிடுவாள். அவளுக்கு வேலை தான் முக்கியம்.. இந்த குணம் நந்தாவிடமிர்ந்து அவள் கற்றுக்கொண்டது.. அதே போல சில நெளிவு சுளிவுகளை ராஜிடமிர்ந்தும் கற்றுக்கொண்டாள். திறம்பட நிர்வாகி அவள்.. ஆனால் அவள் சறுக்கும் ஒரே இடம் நந்தா தான்.

நரேனிடம் பேசி அவளை எதற்கும் மும்பை அனுப்பாமல் இங்கயே வைத்துக்கொண்டு உடனே அவனது அலுவலகத்திலே அப்பாயின்ட்மென்ட் ஆடர் கொடுக்க செய்தவன் ரிலாக்சாக அமர்ந்துக்கொண்டு உரிமையாக அவளை பார்வையிட ஆரம்பித்தான்..

அவனது பார்வை அவளுக்கு தான் கடுப்பை கிளப்பியது..

“எப்போ பாரு உரிச்சு சாப்பிடுற மாதிரியே ஒரு பார்வை..” கடுப்புடன் புலம்பியவள் மீட்டிங் அறையிலும் நந்தா அவளை அப்படியே பார்க்க, கிளைன்ட் கேட்கும் கேள்விக்கு கூட அவன் பதில் சொல்லாமல் அவளையே பார்த்துக்கொண்டு இருக்க லேசாய் அவனது கையை சுரண்டி கண்ணை காட்ட அதன் பின்பே சுதாரித்து அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலை சொன்னான் நந்தா..

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top