தன் மேல் படர்ந்து இருந்தவனை விலக்க முயன்று முடியாமல் போக அவளது எதிர்ப்பை உடம்பை இறுக்கி அவனுக்கு காமிக்க
எப்போதும் அவளிடம் இருக்கும் நெகிழ்வு இல்லாமல் இருப்பதை உணர்ந்தவன் தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்து அவளை ஏன் என்பது போல பார்த்தான்.
அவள் எதுவும் சொல்லாமல் அவனது கண்களை பார்க்காமல் தவிர்த்தாள்.
“என்ன ஆச்சு..” நிதானமாய் அவளிடமிருந்து பிரிந்து எழுந்தவன் கேட்க
“எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு..”
“அதுக்கு..”
“அவர் கிட்ட எல்லா உண்மையையும் சொல்லி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. இப்போ போய் உங்களோட படுத்துட்டு அவர் கிட்ட போனா எனக்கு பேரு பொண்டாட்டி கிடையாது.. அதுக்கு பேரு வேற..” என்றாள்.
“ஓ.. அப்போ உனக்கு நிஜமாவே மேரேஜ் ஆகிடுச்சு இல்லையா..” மிகவும் நிதானமாய் அவளிடம் கேட்க
“ஆமா ரெண்டு பசங்க வேற..” என்றாள்.
“மூணு வருசத்துல ரெண்டு பசங்க.. கிரேட் தான்.. ஆமா எப்படி வேலைக்கு கூட போகாம ரெண்டு பேரும் இந்த வேலையை தான் பாத்தீங்களா..” நக்கலாய் கேட்டவனை முறைத்து பார்த்தாள்.
“ஓவரா பேசுறீங்க நந்தன்..”
“அப்படி தான் பேசுவேன்.. நீ இந்த ரிலேசன் சிப் பிடிக்கலன்னு தானே போன.. அப்புறம் எதுக்கு கல்யாணம் பண்ணி அதே வேலையை முழுசா பண்ணிக்கிட்டு இருக்குற.. ம்ம்” என்றவனை பார்த்து இவனுக்கு எப்படி விளக்குவது என்று கோவமாய் வந்தது..
“இது இல்லீகல்”
“ஓ அப்போ எதையும் முறைப்படி செஞ்சா அது பேரு லீகல் இல்லையா..”
சுத்தி சுத்தி அதே இடத்துக்கு வந்தவனை என்ன செய்யலாம் என்று வந்தது..
“நந்தன் எனக்கு இன்ரஸ்ட் இல்லன்னா விடவேண்டியது தானே.. ஏன் இப்படி பண்றீங்க..”
“உனக்கு இண்டரஸ்ட் இருக்கு பேபி.. ஆனா அது என் மேல இல்ல சரியா..” நங்கூரமாய் பாய்ச்சியவனை கண்டு அவளுக்கு ஒரு மாதிரி ஆனது..
“ப்ச் அப்படி இல்ல நந்தன்.. ஒரு பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி வேணா இருக்கலாம்.. ஆனா அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னா கமிட்மென்ட் அதிகம்.. அதுல ஒன்னு ஒழுக்கமா இருக்குறது..”
“சரி அப்போ உன் புருஷனை நான் பாக்கணுமே..”
“இதெதுக்கு நந்தன் தேவை இல்லாத வேலை உங்களுக்கு..”
“உன் புருஷன் கிட்ட கேட்டுட்டு அவன் அனுமதியோட உன்னை..” என்றவன் பார்வை அவளது விலகி இருந்த புடவையின் மேல் இருக்க இரவு வெளிச்சத்தில் அதை உணர்ந்தவள் வேகமாய் தன் உடைகளை சரி செய்துக்கொண்டாள்.
“வேணாம் நந்தன் நான் ஒரு பாதையில போயிட்டு இருக்கும் போது நீங்க மறுபடியும் உள்ளே நுழைவது சரி இல்லை..”
“எல்லாம் சரியா வரும்.. வேலையை விட்டு அவ்வளவு ஈசியா போறேன்னு கிளம்புநீள்ள.. அதே போல இப்பவும் வேகமா ஜாயின் பண்ணு.. மோர்னிங் நீ ஆபிஸ்ல இருக்கணும்.” என்றவன் களைந்த உடைகளை போட்டுக்கொண்டு கிளம்பி செல்ல ரியாவுக்கு கண்கள் கலங்கிக்கொண்டு வந்தது..
விடிய விடிய விழித்து இருந்தவள் அதிகாலை மும்பைக்கு செல்லும் ப்ளைட்டுக்கு கிளம்பி ஏர்போர்ட் வர அங்கே அவளுக்கு முன் நந்தன் அமர்ந்து இருந்தான். அவனை கண்டு கையிலிருந்த பேகை நழுவ விட்டவள் சத்தமின்றி அவ்விடம் விட்டு விலகி செல்ல, அவள் போகும் ஒவ்வொரு இடத்திலும் அவனது உருவம் தெரிய
“இது நம்ம பிரம்மையா.. இல்ல உண்மையாலுமே வா..” குழப்பத்துடன் நின்று இருந்தவளின் அருகில்
“என்ன ஷாக்கா”
அவனை பற்றி நன்கு தெரிந்து இருந்த போதும்.. முன்பு போல இருக்கும் அதே நந்தன் தானா என்ற சந்தேகம் இருந்தது அவளுக்கு.. அதனாலோ என்னவோ அவள் அவனை கொஞ்சம் பொருட்படுத்தாமல் வந்துவிட்டாள். ஆனால் அவன் முன்பு போலவே இப்பவும் இருக்கிறேன் என்ற பிம்பத்தை அவளுக்கு உணர்த்த ரியா தான் தடுமாறி போனாள்.
“என்ன நந்தன் இது..”
“என் பேச்சுக்கு நீ எவ்வளவு மரியாதையை குடுக்குறன்னு பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்..” என்றவன் அங்கிருந்த இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்துவிட அவனை தாண்டி அவளால் போகமுடியவில்லை..
“ப்ளீஸ் நந்தன்..”
“நான் தடுக்கலையே”
“பட் என்னால முடியல நந்தன்..” என்றவள் அவனருகிலே அமர்ந்துவிட்டாள் ஓய்ந்து போய்.
தன் முன் அமர்ந்து இருந்தவளின் ஆளுமையில் திகைத்து போய் பார்த்தான் ரவி..
ஸ்வரா ரவியை லேப்ட் ரைட் வாங்கிக்கொண்டு இருந்தாள்.
“என்ன மிஸ்டர் ரவி இது தான் நீங்க லாயருக்கு படுச்ச லட்ச்சனமா.. எப்படி இப்படி ஒரு மிஸ்டேக் பண்ணீங்க... லேண்ட் விசயமா பத்திரம் பதியும் போது இதெல்லாம் கவனிக்க மாட்டிங்களா.. காட் எப்படி தான் உங்களை வச்சு அப்பா மாரடிக்கிராரோ”
“மேடம் நானும் பெரிய வக்கீல் தான்..” ரோச பட்டான் ரவி.
“ஏதோ ஒரு கேசுல பேசி வாதாடி ஜெயிச்சா பத்தாது மிஸ்டர். ஒவ்வொரு கேசுளையும் ஜெயிக்கணும்.. இல்லையா உங்களை பீட் பண்ண ஒரு கூட்டமே இங்க இருக்கு மைன்ட்இட்..” சத்தம் போட அமைதியானான் ரவி..
“சாரி மேம்..”
“இட்ஸ் ஓகே ரவி.. பட் இனி கேர்புல்லா இருங்க.. முதல்ல லேண்டை பத்தி விசாரிங்க பிறகு ரெஜிஸ்டர் பண்ணலாம்.. கூட கோதாண்டத்தை கூட்டிக்கோங்க” என்றவள் தன் ஜூனியரை அவனுடன் அனுப்பி வைத்தாள்.
நந்தன் இன்னொரு நிறுவனம் ஆரம்பிக்க அதற்க்கான இடம் ரெஜிஸ்டர் பண்ணுவதற்கான வேளைகளில் இருந்தார்கள் இவர்கள். சதாசிவம் அவ்வப்போது ரவிக்கு கைட் பண்ணிக்கொண்டு இருப்பார். அவருக்கு சற்றே உடல் நலம் குறைவு வர, அவருடைய மகள் ஸ்வரா தான் ரவிக்கு உதவி செய்வாள்.
இப்படி ரவி எப்பவாது சொதப்பும் பொழுது விளாசி தள்ளிவிடுவாள்..
சீனியர் ஜூனியர் என்பதெல்லாம் லாவில் கிடையாது.. யார் திறமை வாய்ந்தவர்களோ அவர்களுக்கு கீழ் அவரை விடவும் சீனியர் ஜூனியராக பணி புரிவார்கள்.
இப்போது இங்கேயும் அது போல தான்.. ரவி சீனியர் என்றாலும் அவனை விட ஸ்வரா அதிக டேலன்ட் கொண்டவள்.
அதில் சதாசிவத்துக்கு அவ்வளவு பெருமை.. கிரிமினல் லாயர் அவள். அவள் ஒரு கேசை எடுத்து நடத்தினால் கண்டிப்பாக வெற்றி பெறுவது உறுதி.. இளம் வயதிலே அவ்வளவு புகழ் அவளுக்கு..
அவளிடம் கர்வம் என்பதே கிடையாது.. ஆனால் கோவம் மட்டும் பட்டு பட்டு என்று வந்துவிடும்..
ஸ்வரா சொல்லிய விசயங்களை அலசி ஆராய்ந்து பார்த்து கொதாண்டத்தையும் வேலை வாங்கியவன் எல்லாவற்றையும் சரி செய்து நிலத்திற்க்கு உரியவர்களிடம் பேசி ரெஜிஸ்டரை அடுத்த நாளே செய்ய ஏற்பாடு செய்தான்.. அவனது வேகம் கண்டு ஸ்வரா சற்றே மிரண்டாள்.
“சூப்பர் ரவி..” பாராட்டினாள்.
“னோ மேன்சன் மேம்.. நீங்க சொன்னதுனால தான் என்னால இவ்வளவு வேகமா செயல்பட முடிந்தது..” எளிமையாக சொன்னவனை கண்டு புன்னகைத்தாள்.
“ம்ம் இன்னும் ரெண்டு நாள்ல ஒரு க்ரைம் கேஸ் இருக்கு.. எனக்கு அசிஸ்ட் பண்ண முடியுமா..”
“இட்ஸ் மை ப்ளசர் மேம்.. கண்டிப்பா செய்யிறேன்..” என்றவன் கேசை பற்றிய விவாதத்தில் இறங்கினான்..
அவனது புத்தி கூர்மையை கண்டு வியந்து போனாள்.
“ரவி இது சரியா வருமா..”
“கண்டிப்பா அவனே அவன் வாயில இருந்து உண்மையை சொல்லுவான் ஸ்வரா.. நீங்க கவலை படாதீங்க.. அதோட அந்த இல்லாம நீங்க கலெக்ட் பண்ணி வச்சு இருக்குற எவிடன்ஸ் எல்லாம் பக்காவா இருக்கு.. சோ வெற்றி உங்க பக்கம் தான்..” என்று அவளை வாழ்த்திவிட்டு நந்தனின் அலுவலகத்துக்கு வந்தான்.
“அண்ணா” என்று கத்தியபடி வந்தவனை கண்டு சட்டென்று பயந்து போனாள் ரியா..
திடீர் என்று நந்தாவின் அறையில் ஒரு பெண்ணை கண்டு ரவியுமே அதிர்ந்து தான் போனான்..
“அண்ணா யாரு இவங்க..” என்று ரியாவை பார்த்துக்கொண்டு கேக்க
“எல்லாம் சொல்றேன் நீ முதல்ல இந்த சூசை குடி..” என்று அவனுக்கு தன்னுடைய சூசை குடுக்க வாங்கி பருகியவன் ஆசுவாசமாக டேபிளின் மேல் காய் போட்டு இருக்கையில் இன்னும் சாய்ந்துக்கொண்டு சொகுசாய் அமர ரியாவுக்கு கண்கள் ரெண்டும் தெறித்து விழுந்து விடும் அளவு விரிந்தது..
நந்தனை பொறுத்தவரை அவன் எவ்வளவு பெர்பெக்ட்டோ அதே அளவு சிடுமூஞ்சி வேறு. அவன் யாரிடமும் அவ்வளவவாக பேச மாட்டான். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவன்.
அப்படி இருக்கும் போது அவனிடம் இவ்வளவு உரிமையாக அதும் அலுவகத்தில் இப்படி ஒரு தோரணையில் ரியாவால் கற்பனை கூட பண்ண முடியவில்லை..
கூடவே நந்தனின் உபசாரணை வேறு..
“என்ன நடக்குது இங்க” என்ற விதமாய் அவள் வியந்து போய் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
“இது என்னோட தம்பி” என்று ரியாவுக்கு அறிமுகம் செய்துவிட்டு “என்னோட வொர்கர் மிஸ்செஸ் ரியா..” என்று ரவிக்கும் அறிமுகம் செய்துவிட்டு
“என்ன டா ஆச்சு.. சக்செஸ்ஸ இல்ல, ஆள் வச்சு பேசிக்கலமா..”
“இந்தா ண்ணா” என்று அடவான்ஸ் குடுத்த பணத்துக்கு ஒப்புதல் பத்திரத்தை அவனிடம் குடுத்தான்.
அதை வாங்கி கூட பார்க்காமல்
“தெரியும்டா உன் தீரத்தை பத்தி..” என்று தன் தோளோடு அணைத்தவன் “இன்னும் திகம்பரியும் ராயரும் சேரலையாடா..” சகோதரனுக்குரிய பாசத்தோடு கேட்க
“திகம்பரி தான் இன்னும் மனசு மாறலண்ணா..”
“ப்ச் என்ன செய்யிறது..” என்று வேதனை பட்டவனை
“அண்ணா இது அவங்க லைப்.. அவங்களே முடிவு பண்ணட்டும்.. அவங்க ரெண்டு பேத்துக்குள்ள மனசு ஒன்னு பட்டு போச்சு.. பிசிக்கல் லைப அவங்க விருப்பத்துக்கு விட்டுட்டலாம்..”
“அதுவும் சரி தான்.. ஆனா தீஷிதனுக்கு வயசு ஆகிட்டு இருக்கே அதுக்குள்ள இன்னொரு பேபி வந்தா நல்ல இருக்கும்.. அதோட அவளுக்கு பேபி வந்தா அதை வச்சு அடிக்கடி அவளை மீட் பண்ணலாம்.. கூடவே எல்லோரடையும் இருந்த மாதிரி இருக்கும்” என்று நந்தன் சொல்ல ரியாவுக்கு அவ்வளவு வியப்பு அவனது மாற்றத்தை எண்ணி..
எத்தனையோ நாள் இவருடைய கூடல் பொழுதில்ம் சரி இல்லை முக்கியமான மீட்டிங் பொழுதிலும் சரி திகம்பரியின் அழைப்பு வந்து இருந்தது.. ஆனால் ஒரு நாள் ஒரு பொழுது கூட அவன் எடுத்து பேசியது கிடையாது.
அவளே சொன்னாலும் பிறகு பேசிக்கிறேன் என்று சொல்லிவிடுவானே தவிர பேச மாட்டான்.
அதே போல தான் ராஜிடமும்.. ஆபிஸ் சம்மந்தமான நிகழ்வுகளை மட்டுமே அவன் பேசுவான்.. தனிப்பட்ட பேச்சு என்று யாரிடமும் வைத்துக்கொள்ள மாட்டான்.
ஏன் ரியாவிடம் கூட அப்படி தான்.
“இன்று இரவு எனாகு நீ வேணும் வந்துவிடு..” என்று கூட சொல்ல மாட்டான். ஹோட்டல் நேம் அரை என் என்று சுருங்க சொல்லிவிட்டு சென்றுவிடுவான்.
இவள் தான் அவன் பின்னாடி போகவேண்டியது வரும்.. அப்படி இருந்தவன் இன்று இப்படி மாறி இருப்பது கண்டு அவ்வளவு ஆச்சர்யம் ரியாவுக்கு..
“ம்ஹும்...” என்று பெருமூச்சு விட்டவள் “இந்த மூணு வருசத்துல தான் எவ்வளவு மாற்றம்..” எண்ணியவள் தன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.





