உயிர் உருக உன் வசமானேன்.. கதை உயிருள்ள தீஞ்சுவையே உயிரே.. கதையின் அடுத்த பாகம்
அதில் பார்த்த கதை மாந்தர்கள் தான் இதிலும்..
நந்தன் - ரியா
ரவி- ஸ்வேதா
ராயர் - திகம்பரி
கண்ணாடி முன் நின்று தன்னை சரி செய்துக்கொண்டு இருந்தாள் ரியா.. எல்லாம் திருப்தி அளிக்க, கிளம்பி விழா நடக்கும் விடுதி கூடத்திற்கு வந்து சேர்ந்தாள். கூடவே பரிசு பொருளோடும் வந்தாள்.
அவளை ஆவலுடன் வரவேற்றனர் அங்கிருந்த அனைவரும்.. “வெல்கம் ரியா... நீங்க வந்ததுக்கு பிறகுதான் இந்த இடமே வெளிச்சமானது போல இருக்கு..” என்று ஆண் பெண் பாராமல் அவளை புகழ அனைவரின் அன்பையும் சமமாக ஏற்றுக்கொண்டவள் தன் நெருங்கிய தோழமைகளுடன் அமர்ந்துக்கொண்டாள்.
“அண்ணா என்ன இது.. என்னால இந்த சாக்கை எல்லாம் போட்டுட்டு நிக்க முடியாது..” கடுப்படித்துக்கொண்டு இருந்தான் ரவி..
“அடேய் தினமும் அதை போட்டுக்கிட்டு தாண்டா நான் வீட்டை விட்டே வெளியே போறேன். பொசுக்குன்னு இப்படி சாக்குன்னு சொல்லிட்ட..” பரிதாபமாய் நந்தன் கேட்க
“அப்படி கஷ்ட பட்டுக்கிட்டு இந்த பந்தா வேணுமா.. காட்டன் சட்டியிலயே நீ நல்லா தான் இருக்க.. பொறவெதுக்கு உனக்கு இது”
“மீட்டிங்னா இது அவசியம்டா..”
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. முதல்ல இந்த துணிய தலைய சுத்தி தூக்கி ஏறி..” என்றான் கடுப்புடன்.
“சரி விடு இன்று உனக்காக நான் இதை போடல டா..” என்றவன் போட்டு இருந்த கோட்டை கழட்டி விசிவிட்டு ரவியை கூட்டிக்கொண்டு கீழே வந்தான். கீழே ராஜும் தயாராய் இருக்க மூவரும் சேர்ந்து விடுதிக்கு வந்து அங்கிருந்த தங்களுக்கு என்று இருந்த அறைக்கு சென்றார்கள்.
அங்கு ராயரின் குடும்பம் கிளம்பிக்கொண்டு இருக்க அவர்களோடு இவர்களும் சேர்ந்துக்கொண்டார்கள்.
“எல்லா ஏற்பாடும் சரியா இருக்குல்ல நந்தா..” மீண்டும் ஒரு முறை கேட்டுக்கொண்டார் ராஜ்.
“அதெல்லாம் பக்காவா இருக்கு பா... ராயரும் திகம்பரியும் வந்தா ஆரம்பிச்சுடலாம்.. நீங்க பொறுமையா வாங்க, நானும் ரவி வனா மூணு பெரும் கீழ போறோம். வந்தவங்களை வரவேற்க்கனும்..” என்று சொல்லிவிட்டு இருவரையும் அழைத்துக்கொண்டு கூடத்திற்கு வந்து அனைவரையும் வரவேற்றான்.. எல்லாம் சரியா இருக்கிறதா என்று மேற்பார்வையும் பார்த்துக்கொண்டான்.





