“நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியில்லை சர்வா... கார்த்திக் பாவம் அவனுக்கு எதுவும் தெரியாது. என் மேல உள்ள பாசத்துல அவன் உங்ககிட்டே அப்படி நடந்துக்கிட்டானே தவிர உங்களை எந்த விதத்திலும் பகையா நினைக்கல...” என்று சகி கார்த்திக்காக பேச,
அவனோ, “சரிங்க சார்... எனக்கு ஒரு நாள் போதும்.. நான் நல்லா கத்துக்குறேன்” என்றான் உறுதியாக.
“கார்த்திக் ஏன்டா நான் சொன்னா என் சொல் பேச்சு கேட்கவே மாட்டிக்கிற... இந்த வேலையே உன்னை அசிங்கப்படுத்த தான் குடுத்து இருக்காரு இவரு. அதை கூடவா உன்னால புரிஞ்சுக்க முடியல...” என்று வேதனையுடன் கேட்டவளை ஏறெடுத்துப் பார்த்தவன்,
“அது எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா? ஆனா இந்த பெரிய மனுசன் கிட்ட உன்னை தனியா என்னால விட முடியல... நானும் இங்க வேலைக்கு சேர்ந்தா உனக்கு ஒரு நிழலா நான் இருப்பேன் இல்லையா? அதோட எவ்வளவு நாள் தான்டி உனக்கு நான் சுமையா இருக்கிறது...” என்று கேட்டான் இலயாமையுடன்.
“டேய், நீ எனக்கு சுமையா? என்னடா இப்படி எல்லாம் பேசுற? உன்னை என்னைக்குடா நான் அப்படியெல்லாம் நினைச்சி இருக்கிறேன். நீ எனக்கு இன்னொரு அப்பாடா..” என்று கண்களில் நீர் நெகிழ சொன்னவளை தோளோடு அணைத்துக் கொண்டவன்,
“நீயே சொல்லிட்ட என்னை அப்பான்னு. அப்போ இந்த அப்பாவுக்கு ஒரு கடமை இருக்கு இல்லையா? உன்னை ஒரு நல்லவன் கையில பிடிச்சி குடுக்கணும்னு... அதை செய்யிற வரை நீ என் கண் பார்வையில தான் இருக்கணும். அதுக்கு எவ்வளவு அவமானம் வந்தாலும் நான் தங்கிக்க்குவேன். ஏன் இவ்வளவு நாள் நீங்க எனக்காக அவமானப் படல..”
“டேய்,..” என்று அவள் கலங்க,
“இந்த ஊரு எவ்வளவு பேச்சு பேசுனுச்சு... ரவுடி பயல வீட்டோட வச்சுக்கிட்டு கூத்து அடிக்கிறீங்கன்னு... அப்பா ரெண்டு பெண் பிள்ளையை வச்சு இருந்தும் ஒரு நாள் கூட என்னை வீட்டி விட்டு அனுப்பல... நாளைக்கு இந்த பிள்ளைங்க வாழ்க்கை என்னத்துக்கு ஆகும்னு கூட யோசிக்காம என்னை சீராட்டுனாரே... ஏன் நீங்க ரெண்டு பெரும் என் கையை பிடிச்சுக்கிட்டு நின்னீங்களே... அந்த அன்புக்கு நான் என்னடி செய்ய போறேன். என்னால எதுவுமே செய்ய முடியாது. ஏன்னா என் கையில எதுவுமே இல்லை.. ஆனா என்னோட உழைப்பையும் பாதுகாப்பையும் உங்களுக்கு என் உயிர் இருக்கிறவரை குடுப்பேன்” என்றான் ஆத்மார்த்தமாக...! அதை கேட்டு உள்ளம் நெகிழ்ந்தவள் அவனை விழிகள் கலங்க நோக்கினாள்.
அதை பொறுக்க முடியாமல்,
“ப்ச்... போதும் உங்க ட்ராமா முடிஞ்சதுன்னா போய் வேலையை பாருங்க.. காலங் காத்தாலையே நாடகம் போட்டுக்கிட்டு... எரிச்சலை கிளப்பாம போய் வேலையை பாருங்க...” என்றான் கடுப்புடன் சர்வா.
“எதுய்யா ட்ராமா? உனக்கு எங்களை பார்த்தா ட்ராமா ஆர்டிஸ்ட் மாதிரி தெரியுதா? ரொம்ப பேசாதய்யா என் சகிக்காக மட்டும் தான் உன்கிட்ட வேலைக்கு வந்து இருக்கேன்.. மத்தபடி உன் கூட எனக்கு என்னைக்கும் சண்டை தான்...” என்றான் தன் தொடையை தட்டி.
அவனது மேனரிசம் கண்டு வந்த புன்னகையை அடக்கிக்கொண்டு சகி சர்வாவை எப்படி என்பது போல பார்த்தாள். ஒன்றும் சொல்லாமல் தன் இருக்கையில் முன்பை விட சொகுசாக அமர்ந்தவன்,
“சகி எனக்கு ஒரு டவுட்... இந்த பைல்ல என்ன கொட்டேஷேன் ரெடி பண்ணி இருக்க?” என்று கேட்டான்.
“எது...?” என்றபடி அருகே வந்தவளை இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டவள், இரு கரங்களாலும் அவளது இடையை அழுத்தி பிடித்து சிறை செய்தவன், கார்த்தியின் கண் முன்பே அவளது கழுத்தை வளைத்து அவளின் இதழ்களை கவ்விக் கொண்டான்.
அதை சிறிதும் எதிர் பாராத சகி தடுமாறி விலகும் முன்பே சர்வாவின் ஆளுமையில் கட்டுண்டு போனாள். கார்த்திக்குமே மிகப்பெரிய அதிர்ச்சி...
தன் கண் முன்னாடியே தன் சகியை இப்படி செய்தது கண்டு ஆத்திரம் மிக எழ இருவரையும் பிரிக்கும் நோக்குடன் வேகமாய் வந்தான். அதற்குள் சர்வாவே சகியை விடுவித்து விட்டு, கால் மேல் கால் போட்டு தோரணையுடன் அமர்ந்தவன்,
“நான் சகியை அடையணும்னு நினைச்சா அது அவளால கூட தடுக்க முடியாது. பிறகு நீ எல்லாம் எம்மாத்திரம்... போடா” என்று கார்த்தியை சீண்டி விட,
“யோவ்...” என்று அவனது சட்டையை இரு கரங்களாலும் கோர்த்து பிடித்து அவனை தூக்க, சகிக்கு பக்கென்று போனது.
ஏற்கனவே இப்படி செய்ததுக்கு தான் கார்த்தியை வைத்து செய்துக் கொண்டு இருக்கிறான். இப்பொழுதும் அதே போல செய்தால் கார்த்தியின் நிலையை பற்றி எண்ணி பார்க்கவே பயமாக இருந்தது.
“கார்த்திக் அவரை விடு...” என்று அவனது கையை எடுத்து விட பார்க்க, அவனுக்கு கோவம் நுனி மூக்கில் வந்து அமர்ந்தது.
“அவன் என்ன காரியம் பண்றான். நீ என்னன்னா அவனை விட சொல்ற?” கார்த்திக் கடுப்படிக்க,
“இதுக்கும் சேர்த்து உன்னை தான் பழி வாங்குவாரு.. ப்ளீஸ் கார்த்திக் எனக்கு உன்னோட ரெபுடேஷன் ரொம்ப முக்கியம்... ப்ளீஸ் அவர் மேல இருந்து கையை எடு” என்றாள் மன்றாடளுடன்..
அதற்குள் கார்த்தியை ஓங்கி அறைந்திருந்தான் சர்வா. அந்த அதிர்ச்சியில் சர்வாவை வெறித்து பார்த்தாள் சகி. கார்த்திக் அடியை வாங்கிக்கொண்டு சர்வாவை முறைத்துக் கொண்டு நின்றான். அப்பொழுது கூட அவனிடம் ஒரு பணிவு இல்லை.
“இன்னும் எவ்வளவு அடி வேணாலும் அடி... ஆனா நான் செய்வதை தான் செய்வேன். என் சகியை உன்னை நெருங்க விட மாட்டேன்..” என்கிற பிடிவாதம் அதில் அதிகமாகவே இருந்தது.!
இவர்களுக்குள் நடந்த இந்த அக்கபோரை மறைந்து இருந்து பார்த்துக் கொண்டு இருந்த செல்வானாயகத்துக்கு மகிழ்ச்சியில் முகம் சிவந்தது...!
“நான் எதுவும் செய்ய வேணாம்... இவங்க மூணு பேருமே ஒருத்தவங்களை ஒருத்தவங்க அடிச்சி சாய்ச்சிகிக்குவாங்க” என்று மகிழ்ந்தவர் மைதிலிக்கு போனை போட்டார்.
“என்னமா நீ நேத்திக்கே வர சொன்னேன். ஆனா நீ இன்னும் வந்து சேரல... உனக்கு சர்வா வேணும்னா உடனே வா... இல்லன்னா அவன் கை மீறி போயிடுவான். அப்புறம் எங்களை குத்தம் சொல்ல கூடாது...!” என்றார் அதிகாரமாக.
அதை அந்த பக்கம் இருந்து கேட்டுக் கொண்டு இருந்த மைதிலிக்கு பற்றிக் கொண்டு வந்தது.
“இந்த கிழவன் தொல்லை தாங்க முடியல... எப்போ பாரு நொச்சு நொச்சுன்னு” கடுப்படித்தவள்,
“வரேன் அங்கிள்...” என்றவள் பட்டென்று வைத்துவிட்டாள். சர்வாவிடம் சென்றால் அவன் ஏறெடுத்து கூட பார்க்க மாட்டான். எனக்கு இன்னொரு கல்யாணத்துல இண்டரெஸ்ட் இல்லன்னு சொல்லுவான். ஆனா இந்த ஆளு அவனை எப்படியும் சம்மதிக்க வை.. என்று உயிரை எடுக்குறாரு..” சலித்துக் கொண்டவள்,
அருகில் இருந்த தன் தாயிடம் புலம்பிகொண்டாள்.
“உனக்கு இன்றேஸ்ட் இருந்தா சர்வாவை அப்ரோச் பண்ணுடா. இல்லன்னா விடு... எதுக்கு நீ தேவை இல்லாம டென்ஷன் ஆகிக்கிற” என்றவர் தன் மகளுக்காக பாதம் கீரை வர செய்து பருக கொடுத்தார்.
பருகி முடித்தவள் “தேங்க்ஸ் ம்மா” என்று தன் அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டாள். அவளின் தலையை கோதிக் கொடுத்தவர் போனில் தன் பிசினேசை பார்க்க ஆரம்பித்தார். தன்னுடைய பிஏவுக்கு போன் போட்டு எதில் எதில் இன்வெஸ்மென்ட்மென்ட் செய்யணும் என்று சொல்ல அதன் படி முதல் போட்டு பல லாபங்களை அள்ளிக்கொண்டு இருந்தார் அவர்.
வீட்டிலிருந்த படியே பங்கு சந்தையில் முதலீடு செய்து பல சொத்துக்களை குவித்து இருந்தார். கணவன் கிடையாது... மகள் சிறு வயதில் இருக்கும் பொழுதே நோய்வாய் பட்டு இறந்து போனார். அதன் பிறகு அவர் விட்டு போன பிசினஸ்களை எல்லாம் இவர் பார்வையிட்டு எல்லாவற்றையும் காண்ட்ராக்ட் பேசி குத்தகைக்கு விடுவது போல பிசிநேசையும் விட்டு இருக்கிறார்.
அதில் ஒரு பெரிய தொகை மாதமாதம் கைமாறும்... அதோடு பிள்ளையை பார்க்க வேண்டும் என்று வீட்டில் இருந்தபடியே பங்கு சந்தையில் முதலீட்டு திட்டத்தை தொடங்கினார்.
அதன் பிறகு அவரின் வளர்ச்சியை பற்றி சொல்லவும் வேணாம்... வருடா வருடம் பிசினெஸ் குயின் என்கிற பட்டத்தை அவர் தான் தட்டி செல்கிறார்.
அதனால் அவர்களின் சொத்தை கையக்கப் படுத்துவதில் பெரும் ஆர்வம் காட்டிக் கொண்டு இருக்கிறார் செல்வநாயகம். ஆனால் அதற்கு சர்வாவும் சரி மைதிலியும் சரி ஈடுபாடு காட்ட மாட்டேன் என்கிறார்கள். என்பதில் செல்வநாயகத்துக்கு பெரும் கடுப்பு...
என் ஆசையை நிறைவேற்றாமல் நான் விட மாட்டேன்...! என்று சூளுரைத்தவர் அதற்கான வேலைகளில் ஈடுபட்டார்.
மைதிலியின் அம்மாவிடம் முறைப்படி பெண் கேட்க தன் மனைவியுடன் சென்றார். அதை கேள்வி பட்ட சர்வா அலட்ச்சியத்துடன் ஒரு புன்னகையை சிந்தினான்.
கார்த்திக் ஓட்டுனராக பயிற்சி எடுத்தான் அன்றைக்கு முழுவதும்... மாலை நேரம் சற்று தடுமாறாமல் ஓட்டினான். அந்த கார் முழுதும் ஆட்டோமேட்டிக் என்பதால் மிகவும் ஈசியாக இருந்தது.
சர்வாவின் விலை உயர்ந்த காரில் தான் அவன் பயிற்சி எடுத்தது. பழைய ஓட்டுனர் கூட வியந்து தான் போனார்.
“தம்பி நீங்க யாரு...?” என்று கேட்டார்.
“நானா ஒரு ரவுடிண்ணே... பலவாட்டி ஜெயிலுக்கு போயிட்டு வந்து இருக்கேன். இப்போதைக்கு இது தான் என்னோட கெமிஸ்ட்ரி..” என்றான்.
“அது கெமிஸ்ட்ரி இல்ல தம்பி ஹிஸ்டரி...” என்றார் அவர் அவனை வியந்து பார்த்துக் கொண்டே..
“அது தான் அண்ணே.. அது எனக்கு வர மாட்டிகித்து.. என்ன பண்ண?” என்றவன் ஓட்டுவதில் கவனம் வைத்தான்.
“தம்பி உங்களுக்கு சர்வா சாரை இதுக்கு முன்னாடியே தெரியுமா? அவரு உங்க சொந்தமா?” என்றார்.
“அப்படியெல்லாம் எதுவும் இல்லை ண்ணே... நானே ஒரு அநாதை...” என்றான்.
“அப்புறம் எப்படி தம்பி இவ்வளவு விலை மதிப்புள்ள காரை உங்களுக்கு கத்துக்க கொடுத்து இருக்காரு..?” என்று கேட்டார்.
“ஏன் அண்ணே... இதுக்கு முன்னாடி இந்த காரை யாரும் யூஸ் பண்ணலையா?” என்றான் புருவம் சுருக்கி.
“ஆமா தம்பி... இந்த கார் வாங்கி ரெண்டு மாசம் ஆச்சு. ஆனா யாரையும் ஓட்ட விட்டதில்ல சார்...”
“ஓ...! அப்படியா?” என்று கேட்டுவிட்டு ஓட்டுவதிலேயே குறியாக இருந்தான் கார்த்திக்.
“இப்ப கூட இந்த ட்ரைவர் சீட்டுல என்னை உட்கார சொல்லல.. உங்களை தான் உட்கார சொல்லி என்னை கவனிக்க சொன்னாரு” என்றார் வியப்புடன்.
“இதுல என்ன இருக்குண்ணா” என்றவனின் கவனம் மொத்தமும் காரை செலுத்துவதிலே தான் இருந்தது.
“புதுசா கத்துக்க யாரும் புது காரை குடுக்க மாட்டாங்க தம்பி... அது தான் கேட்டேன்...” என்றார் அவர் மேலும்..
“ஓ...! அப்படிங்களா?” என்றவன் கொஞ்சம் கூட கலையவில்லை.
அன்று மாலை காரை நன்றாக ஓட்டிக்கொண்டு அலுவலகத்துக்கு வந்தவன், ஏதோ ஒன்றை சாதித்ததை போல சாவியை தூக்கி போட்டு பிடித்தபடி சர்வாவின் அறைக்குள் நுழைந்தான்.
அங்கே சர்வா மட்டும் இருந்தான். சகி இல்லாததை கண்டு முகம் சுருங்கிப் போனான். தான் முதன்முதலில் கற்றுக் கொண்ட வித்தையை அவளிடம் சொல்லி காண்பிக்க வேண்டும் என்று ஆசையாக வந்தான். ஆனால் அவள் அங்கு இல்லாமல் போனதை கண்டு வருந்தினான்.





