“உன் சகி எனக்கு தான். அதுவும் எனக்கு சலிக்கிற வரை தான். அதுக்கு பிறகு குப்பையா வீசி எரியிறேன்... வந்து பொறுக்கிட்டுப் போடா...” என்று வெஞ்சினத்துடன் உரைத்தான் சர்வேஸ்வரன்.
அதை கேட்ட சகிக்கு கண்களில் நிற்காமல் கண்ணீர் வழிந்தது. யாரும் பார்க்கவில்லை என்கிற தைரியத்தில் அப்படியே கதவில் சாய்ந்து காலில் முகம் புதைத்துக் கொண்டு சிறு ஒலி கூட இல்லாமல் மனம் குமுறினாள்.
“ச்சீ ஜெயிலுக்கு போன எனக்கு இருக்குற மனசு கூட உனக்கு இல்லய்யா... நீயெல்லாம் ஊருக்குள்ள பெரிய மனுசன்னு சொல்லிக்கிட்டு திரியிற... உனக்கெல்லாம் நல்லதே நடக்காது... எல்லாரோட சாபத்தையும் வாங்கிக்கிட்டு உன்னால ரொம்ப நாள் நிம்மதியா இருக்க முடியாது...! உன் அழிவு நிச்சயம் நடக்கும். அதை நான் பார்க்க தான் போறேன்” என்று கார்த்திக் சொல்ல, வேகமாய் எழுந்து நின்று சர்வாவின் முகத்தில் வந்து போன உணர்வுகளை அவதானித்துக் கொண்டு இருந்த சகிக்கு உள்ளுக்குள் வேதனையாக இருந்தது.
என்ன இருந்தாலும் காதல் கொண்டவள் இல்லையா? மனம் கலங்கி தான் போனாள். ஆனால் அவளது கலங்களுக்கு கொஞ்சமும் நியாயமாய் நடக்காமல்,
“இப்போ சவால் விடுறேன்டா. உன்னால என்ன செய்ய முடியுமோ அதை செய். சகி எனக்கு மட்டும் தான்... அவளோட கண்கள்ல வெறும் கண்ணீர் மட்டும் தான் மிச்சம் இருக்கும். என்னை அவமான படுத்தினவளை நான் அவமானப்படுத்தியே தீருவேன்.” என்று உச்ச பட்ச திமிருடன் சர்வா சொல்ல கார்த்திக் பல்லை கடித்தான்.
“இந்த பணக்கார திமிரை என்கிட்ட காமிக்காதய்யா... அப்படி காண்பிச்சா இது வரை நீ பார்க்காத ரொம்ப மோசமான விளைவுகளை சந்திக்க நேரும்... ஏற்கனவே ஒருமுறை உன்னால சகி பட்ட அவமானங்களும் சரி வேதனையும் சரி இன்னும் அவளால மறக்கவே முடியல. மறுபடியும் அதை கீறிவிட்டு அதுல நெருப்பில் காய்ச்சின அம்பை பாச்சுரதுக்கு நான் விட மாட்டேன். சகியோட நிழலை கூட உன்னால தொட முடியாது.. அவ உனக்கு கிடைக்கவே கிடைக்க மாட்டா...”
“சகி இந்த கார்த்தியோட முழு சொத்து... அவ எனக்கு மட்டும் தான். அவ என்னோட சொத்து. ஒருமுறை நழுவ விட்டது விட்டது தான். இனி அவளை அடையணும்னு நினைக்காதய்யா... அதுக்கு நான் விட மாட்டேன்” என்று உக்கரத்துடன் சொன்ன கார்த்திகை மிக ஏளனமாக பார்த்தான் சர்வா.
“அவ எனக்கான பொருள்டா… அதனால தான் நாலு வருஷத்துக்கு முன்னாடி கைநழுவி போனாலும் மறுபடியும் என்கிட்டே வந்து சேர்ந்து இருக்கா. மறுபடியும் அவளை விட்டுக் கொடுக்க நான் என்ன முட்டாளா?” என்று சர்வா கேட்க அவனை கட்டுக்கடங்காத ஆத்திரத்துடன் பார்த்தான்.
“ஏன்டா இப்படி ஆளாளுக்கு அவளை போட்டு டார்ச்சர் பண்றீங்க? உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா? அவ அப்படி என்னடா உங்களுக்கு துரோகம் பண்ணினா... அவ செய்த ஒரே ஒரு நல்ல காரியம் எது தெரியுமா? உன்னை கல்யாணம் செய்துக்கமா போனது தான். இனிமேலும் உன்னை அவளை நெருங்க விட மாட்டேன். போதும் போங்கய்யா உன்னால அவ பட்டது..” என்று முழு வேதனையுடன் கார்த்திக் சொல்ல சர்வா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
“நான் அப்படித்தான். எனக்கு சகி வேணும். அதுவும் என் பிள்ளைகளை வளர்க்கறதுக்கு கண்டிப்பாக அவ வேணும். என் பிள்ளைகள் கிட்ட அவ பாசமா இருக்கிறது பார்த்து தான் இந்த முடிவுக்கு வந்தேன். எவ்வளவு சம்பளம் குடுத்தாலும் வேலைக்கு வர்ற ஆளுங்க கிட்ட இந்த மாதிரி எல்லாம் வர மாட்டிகித்து...” என்று சர்வ சொல்ல, பல்லைக் கடித்தவன்,
“அப்போ உன் பிள்ளைகளை வளக்குறதுக்கும் ஆயா வேலை பாக்குறதுக்கும் தான் நீ அவளை கூப்பிடுறியா?” என்று கார்த்திக் பல்லை கடிக்க,
“அப்கோர்ஸ் அதுல என்ன உனக்கு எதுக்கு இவ்வளவு சந்தேகம்... இவள மாதிரி ஒரு ஆயா கிடைச்சா எப்படி விட முடியுமா? அதனால் அவ என் பிள்ளைகளுக்கு ஆயா வேலை பாக்கறதுக்காக மட்டும் தான். வேண்ணா அப்பப்போ என் பெட்ரூம் தேவையை தீர்த்துட்டு போகட்டும்...” என்று சொன்னவனை கொல்லும் வெறியுடன் நோக்கினான் கார்த்திக்.
“ச்சீ நீயெல்லாம் ஒரு மனுசனா? பணம் இருக்கிறதுக்காக ஒரு பெண்ணோட வாழ்க்கையில இந்த அளவுக்கு விளையாடி பார்க்கிறியே உனக்கு மனசாட்சி இருக்கா? இல்ல நியாயமா தான் படுத? உன் பணக்காரத் திமிர காமிக்கிறதுக்கு சகி தான் கிடைச்சாளா?” முழு வெறுப்புடன் கார்த்திக் சர்வேஸ்வரனை பார்த்து கேட்க,
அதற்கு சர்வா ஒரு அலட்சிய புன்னகையை வீசினான்.
“என்னை அத்தனை பேரின் முன்னிலும் அவமானபடுத்தியவளை பழிக்கு பழி வாங்காம விட்டா நானெல்லாம் என்ன ஆண்பிள்ளை... என் அவமானத்துக்கு பதில் அவ என் காலடியில விழுந்து கிடப்பது மட்டும் தான்...” என்று எகத்தாளம் பேசியவன் கார்த்தியை அவ்வளவு சுலபமாக விடவில்லை.
அவனிடம் இன்னும் மல்லுக் கட்டியவன் அவனை அனுப்பிவிட்டு கதவுக்கு இந்த புறம் இருந்த சகியிடம் சென்று நின்றான் தெனாவட்டாக..
அவனை ஏறிட்டு பார்க்க முடியாமல் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு விருட்டென்று கிளம்பி வெளியே போக பார்க்க,
போனவளை பிடித்து இழுத்தவன், அழுகையில் சிவந்து போய் இருந்த அவளது முகத்தை ஒரு கணம் கூர்ந்து பார்த்தவன், நொடி நேரம் கூட தாமதிக்காமல் அவளின் இதழ்களில் தன் இதழ்களை வைத்து அழுத்தி முத்தமிட்டவன், பெண்ணவளின் இதழ்களை கவ்விக்கொண்டு உதிரம் கசியும் அளவு அவளை ஒரு வழி செய்து விடுவித்தவன், மேற்கொண்டு அவளின் மென்மையான உணர்வுகளோடு விளையாட ஆரம்பித்தான்.
அவளிடம் நெருங்கும் போதே தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டு இருந்த செல்வநாயகம் அதற்கு மேல் அங்கு நிற்காமல் சென்றுவிட்டார். அவர் போவதை ஒரு பார்வை பார்த்தவன் சகியிடம் ஒன்றிப் போனான்.
அவனது பிடியில் இருந்து வெளிவர போராட, “எனக்கு உன் வாசம் வேணும். உன் நெருக்கம் வேணும்...” என்றான் அழுத்தமாக..
“அதுக்கு வேற ஆளை பாருங்க...” என்று அவள் கடுமையாக சொல்ல, அவளின் காதோரம் சரிந்து,
“அப்போ உன் கார்த்தியை ஜெயில்ல தள்ளட்டுமா?” என்று கேட்க அந்த ஒற்றை வார்த்தயில் தன் உணர்வுகள் மறுத்துப் போக அப்படியே கதவில் சாய்ந்து நின்றாள். அதுவரை அவனுடன் போராடிக் கொண்டு இருந்த போராட்டத்தை கை விட்டாள்.
“இப்படி மரக்கட்டையா எனக்கு வேணாம்...” என்று அதற்கும் அவன் சீண்டி வைக்க, வருகிற ஆத்திரத்தில் அவனை அப்படியே பிடித்து ஏதும் பாலுங் கிணறு இருந்தால் அதில் தள்ளி கொலை செய்து விடலாம் என்று தோன்றியது அவளுக்கு... ஆனால் நினைத்ததை செய்ய விடாமல் அவன் மீது கொண்ட மானம் கெட்ட காதல் தடுக்க மரத்துப் போன உணர்வுகள் வெளிப்பட சர்வாவின் இதழ்களில் வசீகரப் புன்னகை எழுந்தது...
மெல்ல மெல்ல தன் தொடுகையை அவளுக்கு பழக்கப் படுத்தினான்... எல்லை மீறாத அவன் தொடுகை இது நாள் வரை பழகியவளுக்கு இப்பொழுது அவன் அத்துமீறி தொடும் தொடுகையில் திறக்கத பல இரகசிய பக்கங்கள் அவது நெஞ்சில் திறக்க வெடவெடத்துப் போனாள்.
இருவரின் இடையே இருந்த அவளின் மாராப்பு சேலையை நழுவ விட்டவன், தன் பிள்ளைகள் மிக சுதந்திரமாய் அவளின் மார்பில் சாய்ந்து படுத்துக் கொண்டு அவனை வெறுப்பேற்றி பார்த்த சமயம் எல்லாம் ஏற்பட்ட ஏக்கம் தீர அவளது மார்பில் தன் முகத்தை புதைத்துக் கொண்டான்.
அவனது உதடுகள் கட்டுக் கடங்காமல் வெற்று தேகத்தில் ஊற அவனது தலை முடியை பற்றிக் கொண்டு அவனது வேகத்தை கட்டுப் படுத்த முயன்றாள். ஆனால் காட்டாறு வெள்ளத்தை அணை போட்டு தடுக்க முடியுமா என்ன? அது போல அவனது வேகம் இருக்க தடுமாறிப் போனாள் சகி.
விழியோரம் வழிந்த கண்ணீர் இப்பொழுது காய்ந்து போய் இருக்க ஆடை கலையாமல் சர்வேஸ்வரன் செய்யும் அத்துமீறல்களை தாங்க முடியாமல் தவித்துப் போனாள்.





