அத்தியாயம் 31
“நந்தா....” அதிர்ந்து போய் ராயர் அவனை ஏறிட்டான்...
“என்னடா நந்தா இல்ல என்ன நந்தா... ன்னு கேக்குறேன். தப்பு தான் உன் இடத்துல நான் கார்த்திய வச்சு பேசுனது என் தவறு தான்... அதுக்காக முழுசா மூணு வருஷம் ஒட்டு மொத்தமா பிச்சுகிட்டு போய்ட்டீள அப்படியே போய்டுடா தயவு செய்து மறுபடியும் வந்து ஒட்ட முயற்ச்சிக்காத. இப்போ என்ன உனக்கு இவ வேணும் அதானே” என்று திகம்பரியை சுட்டி காட்டியவன்
“உன்னோடயே கூட்டிட்டு போ... நீ இல்லனா இவ வெறும் பொணம் தான் அதை பார்க்க என்னால முடியல.. அதுக்கு உன் கிட்ட நாலு திட்டு வாங்கிகிட்டு நாலு சண்டை போட்டுக்கிட்டு உன் கூடவே சந்தோசமா இருக்கட்டும். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
ஆனா எந்த காரணமும் கொண்டு என் கிட்ட வரதாடா... வரவே செய்யாத.. எனக்கு எவனுடைய நட்பும் தேவை இல்லை... எவனுக்காகவும் நான் காத்துகிட்டு இருக்கல... எவனையும் எனக்கு பார்க்க விருப்பமும் இல்லை” என்றவன் மீண்டும் கம்பீரமாய் எழுந்து ராயரை ஒரு உதரில் தள்ளிவிட்டு தன் அறைக்கு செல்ல
நந்தாவின் கைகளை இருக்க பற்றி நிறுத்தியவன் அவனின் முன் வந்து நின்று “அவ்வளவு சுலபமா என் கிட்ட இருந்து உன்னால தப்பிக்க முடியாதுடா மச்சான்.. நீ என்னோட தான் இருந்து ஆகணும்...
உனக்கு ஒன்னு தெரியுமா எனக்கு திகம்பரி மேல எந்த கோவமும் கிடையாது... என் இடத்துல அதுவும் உன் மச்சான்ற இடத்துல எப்படிடா இன்னொருவனை வச்சு பார்த்த... அப்படி வச்சு பார்க்க எப்படிடா உனக்கு மனசு வந்தது.
அப்போ என் மேல உன் அன்பு அவ்வளவு தானா... நீ என்னை எப்படி வேணாலும் நினைச்சு இருக்கலாம் ஆனா நான்...” என்று நிறுத்தியவன் ரவியை அருகில் இழுத்து நந்தாவின் மேல் தள்ளிவிட்டு
“இவனோட நான் இருபத்தி அஞ்சு வருஷம் வரையிலும் ஒண்ணா இருந்து பழகி இறுகி போன நட்பு என்னோடது... அதே அளவு மூனே வருசத்துல ஒரு சில நாட்களில் அதுவும் சில பொழுதுகள் மட்டுமே நேரில் பார்த்து பழகி, பார்க்கும் நேரம் முழுவதும் சண்டை போட்டு,
சில நிமிடங்கள் மட்டுமே போனில் உரையாடி உன் மேல் உண்டான நட்பு என்னோடதுடா... ரவியிடம் நான் எந்த மாதிரி உணர்கிறேனோ அதே அளவு அந்த உணர்வை அந்த அன்பை நான் உன்கிட்ட உணர்ந்தேன்டா..
ஆனா நீ அதெல்லாம் குப்பைனு நினைச்சு ஒதுக்கி தள்ளிட்டு கார்த்தியை என் இடத்துல உன் நட்புக்கு கொண்டு வந்த பத்தியா செத்துட்டேண்டா...” விரக்தியாய் பேசியவன்
“தப்பு தான்.. நன் செஞ்சது அத்தனையும் தப்பு தான். திகம்பரியை அந்த நிலமையில நான் கல்யாணம் செஞ்சு இருந்திருக்கணும்... ஆனா பண்ணல. அந்த சமயம் ஏதோ புத்தி கோளாறு ஆயி போச்சு... நீ சொன்ன சொல் தான்டா என்னை மிருகம் ஆக்கிடுச்சு.. யாரும் இல்லா பெண்ணிடம் வரை முறை இன்றி அதுவும் அபார்ட் ஆன பதினைந்தே நாளில்.... மிருகம் தான் நான்” என்று தன்னையே மன்னிக்க முடியாமல் தன் கையிலிருந்த பெல்டை கொண்டு அவனையே அடிக்க தொடங்க பதறிப்போனவள் சட்டென்று சுதாரித்து அவனின் கையிலிருந்ததை உருவி தூர தூக்கி போட்டாள் திகம்பரி..
“ஏன் இப்படி பண்றீங்க ராய்” வேதனையுடன் கண்கள் கலங்கியவளை கண்டு “சத்தியமா உன் மேல எந்த கோவமும் இல்லடி எனக்கு. ஒரு நட்பு பொய்த்து போய் அதனை எப்படி வெளிபடுத்துவது என்று தெரியாமல் ஏதேதோ பேசி... உன் மூலமாதானே எனக்கு உன் அண்ணன் அறிமுகம் கிடைத்தது.. அது தான் உன்னையே...” என்று மேற்கொண்டு சொல்ல முடியாமல் தன் தொடைகளை தன் கையால் குத்திக்கொண்டான்.
‘அடேய் உங்க சண்டையில என்னை ஏண்டா உதை பந்தா மாத்துறீங்க...’ என்று ரவியின் புலம்பலை அங்கு யாரும் கவனிக்கும் நிலைமையில் இல்லை.
ராயரின் பேச்சை கேட்டு நந்தாவுக்கு பெருத்த வருத்தமாய் போனது...
அப்போ கூட என் தவறுனாலா தான் அப்படி பேசினான்.. ஆனால் எனக்கு தான் எதையும் யோசிச்சு பார்க்க புத்தி இல்லாம போய்டுச்சு... முழு தப்பும் என்னோடது மட்டும் தான்... எல்லாத்துக்கும் காரணம் நான் மட்டும் தான்... என்று ராயர் வறுத்த பட்டதை கண்டு நந்தாவும் வருத்த பட்டான்...
“இல்ல மாப்பு நான் தான் காரணம்... நீ என் தங்கையை அந்த நிலைமையில் விட்டுட்டு போகவும் என்னால கட்டு படுத்த முடியல.. அதனால தான் அப்பாவும் அதை முழு மனசோட அதை சொல்லல டா..” ராயரை ஆர தழுவிக்கொண்டான்.
“மன்னிச்சுடுடா மாப்பு...”
“நீ எந்த தவறும் செய்யலடா மச்சான்.. நான் தான் எல்லாத்தையும் தவறா எடுத்துகிட்டு தவறா நடந்துகிட்டேன்.. என்னால் உங்க எல்லோருக்கும் வேதனை தான். அதுவும் திகம்பரிக்கு எவ்வளவு பெரிய வேதனை...” கலங்கியவன் திகம்பரி இருக்கும் இடத்தை பார்க்க அவ்விடம் காலியாய் இருந்தது...
“எங்கடா போனா இவ....” ரவியிடம் கேட்க
“ம்ம்ம்ம் மாப்பிள்ளையும் மச்சானும் கட்டி புடுச்சு கொஞ்சிகிட்டு இருந்தீங்கள்ள அப்பவே அவங்க போய்ட்டாங்க” என்றான் ரவி நக்கலாய்.
“எங்கடா போனா..”
“அவங்க அறைக்கு போயி இருப்பாங்கன்னு நினைக்குறேன்..” என்றான்.
“ஓ” என்று நந்தாவை பார்த்தான் ராயர்..
அவனது பார்வையின் அர்த்தம் புரிய “நீ திகம்பரியை திருமணம் செய்வதற்கு எனக்கோ உன் மாமாவுக்கோ எந்த தடையும் இல்லை.. உன் ஆளு தான் சம்மதிக்கணும் ராசா...
போ போய் அவளை சம்மதிக்க வை.. எனக்கு எப்பவும் நீ மட்டும் தான் மாப்பு” என்றான் அவன் தோளில் ஆதரவாய் தட்டி...
“தேங்க்ஸ் டா மச்சான்...” அவனின் அன்பில் நெகிழ்ந்தவன் திகம்பரியை நோக்கி சென்றான்.
தோளில் தூங்கிய பிள்ளையை படுக்கையில் படுக்கவைத்த நேரம் அவளின் பின்னால் ராயரின் வருகையை உணர்ந்தவளுக்கு பக்கென்று இருந்தது...
அவனை எப்படி எதிர்கொள்வது என்று சட்டென்று தடுமாறி தான் போனாள். இவ்வளவு காலம் தன்னோடு தன் அண்ணன் இருக்கிறான் என்ற உணர்வு அவளை நிமிர்வாக இருக்க வைத்தது...
இப்போது எல்லோரும் ஒன்று கூடிவிட்டார்கள்.. அவள் மட்டும் தனி தீவாய்... இதுகூட சுகம் தான். அதுவும் அவள் நீண்ட காலம் விரும்பிய நிகழ்வு... இன்று கண்ணெதிரே நிறைவாக நடந்தேறிவிட்டது...
ஆனால் அவளால் ராயரை ஏற்றுக்கொள்ள முடியுமா... முடியாதே.... இதயத்தில் கல்லை வைத்தது போல கனத்தது....
தனியாய் அவனை எதிர்க்க முடியுமா... அவ்வளவு கோவமாய் இருந்த நந்தாவையே தன்னுடைய வழிக்கு கொண்டு வந்துட்டான்... நானெல்லாம் எம்மாத்திரம்.. அவன் லேசாய் ஒரு பார்வை பாவமாய் பார்த்தாலே போதும்... நானே அவன் வசம் ஆகிவிடுவேன்... முதலில் அவனை தன்னை நெருங்கவே விட கூடாது... கூடவே அவனது கண்களை பார்க்கவே கூடாது” என்று நொடிகளில் பல எண்ணங்கள் உதித்தது.....
“திகம்பரி” என்று உயிரை உறையவைக்கும் குரலில் அழைத்தவனிடம் தஞ்சம் அடைய துடித்த மனதை வெகுவாய் கட்டுப்படுத்தி சலனமற்ற ஒரு பார்வையை அவனுக்கு கொடுத்தாள்.
அவளது பார்வையில் பலத்த அடி வாங்கினான் ராயர்.
“ரீகா..” என்று அழைத்த போதே கைகளை தூக்கி காட்டியவள்
“ராயர் எனக்கு சில விசயங்களை பேசி தீர்த்ததா ஞாபகம்... தயவு செய்து மறுபடியும் சொன்ன விசயத்தையே என்னை சொல்ல வைக்காதீங்க... எனக்கு உங்களை பிடிச்சிருக்கு அதில் எந்த மாற்றமும் இல்லை. அதே போல என் வாழ்வில் உங்களுக்கு ஒரு துளி கூட இடம் இல்லை. எல்லாமே கார்த்திக்கு மட்டும் தான்.
எனக்கு எதாவது நல்லது செய்யனும்னு உங்களுக்கு தோணினா என்னை விட்டு விலகி என்னை வாழ விடுங்க.. இல்லையா... உங்க கையாலே என்னை கொன்னு போட்டுடுங்க...” என்றவளின் பேச்சில் கொடிய திரவத்தை அள்ளி தன் மீது கொட்டிவிட்டது போல உணர்ந்தவன்
“ரீகா..” ஆத்திரமாய் கத்தினான்.
“எனக்கு எந்த சத்தமும் சவடாலும் தேவை இல்லை ராய்... தயவு செய்து என்னை விட்டுவிடுங்க... உங்க காதல் எனக்கு இப்போ தேவை படல... அது சுயநலம்னு கூட எடுத்துக்கோங்க.. எனக்கு எந்த அக்கறையும் கிடையாது.. எனக்கு இப்போ கார்த்தி தான் எல்லாமே... அதுக்காக கார்த்தியின் மேல ஏதாவது கை வச்சீங்க நான் மனுசியா இருக்க மாட்டேன்.” என்று எச்சரிக்கவும் செய்தாள். அவனை அறிந்தவளாய்.
“அதை நீ சொல்ல கூடாதுடி... என் கூட வாழுறேன்னு சொல்லு அவனை ஒன்னும் செய்ய மாட்டேன். ஆனா அவன் தான் வேணுமுன்னு பினாத்திகிட்டு இருந்தீன்னா...” என்றவன் அவளை ஆழ பார்த்து
“இப்போ அவன் இருக்கிறது என் ஊர்ல.. என் பாதுகாப்புல... என் வீட்டுல எப்போ வேணா அவனை தூக்க சொல்லிடுவேன்... நான் லாயர் அதுவும் கிரிமினல் லாயர்... தெருஞ்சு வச்சுருப்பியே... அப்படி தெருஞ்சு வச்சுக்கலைனாலும் இனிமே தெருஞ்சு வச்சுக்கோ... பின்னாடி தேவை படலாம்” என்றான் திமிராக.
அவனது திமிரை பார்த்து உள்ளுக்குள் ரசித்துக்கொன்டாலும் வெளியே அலட்ச்சியமாக “அதுக்கு எந்த அவசியமும் எனக்கு நேராது... அது தேவையும் அற்றது” என்று அவனை பார்த்து சொன்னாள்.
அவளது அலட்ச்சியத்தில் அவனது திமிர் சினமாய் உருமாறியது..
‘உங்களுக்கு வலிக்க விடமா பிரியலாம்னு பார்த்தா என்னை பேச வைத்து பேசவைத்தே உங்களை நோகடிக்க வைக்கிறீங்க மாமா’ அவனை பேசிவிட்டு உள்ளுக்குள் வலியை அவள் சுமந்தாள்.
“ஓ அந்த அளவுக்கு வந்தாச்சா... அப்போ அன்னைக்கு காமிச்ச பக்கத்தை மறுபடியும் காட்டவா..” என்று அரக்கனாய் கேட்டான். வெறும் அனுமதி மட்டும் அவன் கேட்கவில்லை.. இது தான் செய்வேன் என்ற பொருளும், தெனவட்டும் அதில் அடங்கி இருந்தது.
அதை உணர்ந்தவளின் இதயத்தில் சுருக்கென்று ஒரு வழி எழுந்தது.
“இதை தவிர வேற என்ன உங்களுக்கு செய்ய தெரியும்... கோழையிடம் வீரத்தை காட்டி வெற்றி கொடி நாட்டுவது தானே உங்களது செயல் வீரம்...” என்றாள் நக்கலாக...
“ரீகா... வரம்பு மீறி பேசுற... யாருடி கோழை.. இதனை வருஷம் கடந்த பின்பும் நீ எனக்கு துரகம் செய்துவிட்டாய் என்று தவறாய் தெரிந்து கொண்டாலும் இன்று வரை எனக்கு உண்மை தெரியாது.. இந்த நேரம் தான் எனக்கு தெரியும் தவறு நீ செய்ய வில்லை என்று. அப்படியாப்பட்ட வெறுப்பிலும் உன்னை மட்டும் தாண்டி நான் காதலுச்சுகிட்டு இருக்கேன்.. உன்னை தான் நான் தேடி வந்தேன். ஆனா நீ என்னை கோழைனு சொல்ற.. எப்படிடி உனக்கு அப்படி சொல்ல மனசு வந்தது.”
“சரி கோழைன்னே வச்சுக்க... ஆனா என்னை கல்யாணம் பண்ணிக்கோ..” என்றான் பிடிவாதமாய்.
“ராய் உங்களுக்கு புரியவே புரியாதா... எனக்கு கார்த்தியோட தான் கல்யாணம்”
“ப்ச்.. எனக்கு நீ வேணும் அவ்வளவு தான்..”
“ராய்” என்று பல்லை கடித்தாள் திகம்பரி...
“நீ என்னை உண்மையா விரும்பி இருந்திருந்தா என்ன காரணம் நமக்குள்ள நடந்து இருந்தாலும் என்னை விட்டு உன்னால போக முடிஞ்சிருக்காது...... ஆனா உன் அடிப்படையே தவறா இருக்கு... அதேப்படிடி என்னை உண்மையா விரும்புறேன்னு சொல்ற... ஆனா கார்த்தியை தான் கல்யாணம் செய்வேன்னும் சொல்ற... பிரச்சனையை உன் மனசுலையா... இல்ல உன் உடம்புலையா...” என்று இரு அர்த்தத்துடன் அவளை மேலிருந்து கீழாக பார்த்து கேட்டவனின் கேள்வியில் துடித்து போனவளின் கண்களில் என்ன அடக்கியும் கண்ணீர் வழிந்தது.
அதை கண்டு கொஞ்சமும் இளகாமல் பிடிவாதத்துடனே நின்றான்.
அவளின் முகத்தில் வந்த வலியை கண்டு மின்னலாய் ஒரு நிம்மதி எழுந்தது ராயருக்கு.
“சொல்லுடி... உன் உடம்புல தான் கோளாறா.. அப்போ நான் அன்னைக்கு சொன்னதை உண்மைனு இன்னைக்கு நிருபிக்கிரியா...” என்று மேலும் திருகு வாளை கொண்டு அவளின் இதயத்தில் துளைத்தான்.
அப்போது கூட உண்மையை சொல்லாமல் திடமாய் இருந்தாள் திகம்பரி... ராயர் எதுக்காக இப்படி பேசுகிறான் என்று அறியாதவாளா அவள்.
அவளை ரொம்பவும் தாழ்த்தி பேசிவிட்டு வலியில் துடித்துக்கொண்டிருப்பான் என்று உணர்ந்தவள் தன் கண்ணீரை துடைத்துக்கொண்டாள்.
அந்த நேரம் கூட அவளது சுதாரிப்பில் மனம் உடைந்து போனான் ராயர். “ப்ளீஸ் எனக்கு நீ வேணுமடி.. அப்படி என்ன பிரச்சனை உனக்கு. என்கிட்ட சொன்னா நான் அதை தீர்த்து வைக்கிறேன்டி” என்று அவளின் மனதுடன் பேசியவன் இவளை இப்படியே விட்டாள் சரிபட்டு வர மாட்டாள் என்று புரிந்துகொண்டு
“சரி எல்லாத்தையும் விடு... எதுக்காக நான் இருக்கும் ஊரை தேடி வந்த... நான் அந்த ஊரில் தான் இருப்பேன்னு உனக்கு நல்லாவே தெரியும்... அப்படி இருக்கும் போது உன் காதலன்னு வருங்கால புருசன்னும் சொல்லிக்கிட்டு இருக்கியே அந்த கார்த்தியோட எதுக்குடி வந்த...” என்ற கேள்வியில் உடைந்த மனதை இறுக்கியவள்
“ம்ம் உன்னை கடைசியா ஒருமுறை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்னா சொல்ல முடியும்..” எண்ணியவள்
“நான் பிசினஸ் விசயமா வந்தேன்..” என்றாள் நிமிர்வாகா
“சரி வனா என் தம்பின்னு உனக்கு தெரியாது...” கொக்கி போட்டான்.
“ம்ஹும் நினைவு இல்லை... இங்க வந்த பிறகு தான் அவன் உங்க தம்பின்னே தெரியும்” என்று முழு பூசணியை சோத்தில் மறைத்தாள்.
அவள் சொன்னதெல்லாம் உண்மை என்று நம்ப அவன் ஒன்னும் திகம்பரியை அறியாதவன் அல்லவே... அவளை உணர்ந்தவன்
“அப்படியா... அப்போ எதுவுமே நினைவு இல்லை..” அவனது கேள்வியே அவளை பதற வைக்க
இருந்தாலும் சொன்னதை மெய்ப்பிக்க வேண்டுமே...
“ஆமாம்” என்றாள்.
“ஓ அது மட்டும் தானா.. இல்லை என்னோட பழகியதும் சேர்த்தா...”
“ம்ம் அதோட சேர்த்து சில விஷயங்கள் எல்லாம்” என்றபோதே ராயர் திகம்பரியை சமீபத்திருந்தான்.
“அது எந்த எந்த விசயம்னு சொல்லு நான் நினைவுக்கு கொண்டு வர்றேன்” என்றான் கூர்மையான பார்வையுடன்.
“அ... து.. அது தான் எனக்கு நினைவு இல்லையே..” திக்கி திணறி சொல்லியபடியே பின்னல் நகர்ந்தாள்.
“ஓ சூப்பர்.. அப்போ எல்லாத்தையும் உனக்கு நான் சொல்லி தரேன்...” என்று அவளை இன்னும் நெருங்கியவன்
“முதல்ல எதுல இருந்து ஆரம்பிக்கிறது” என்றபடி அவனிடமே கேட்டுக்கொண்டவனாய் அவளை மேலிருந்து கீழாக பார்த்துவிட்டு
“அதை முதல்ல சொல்லி தரேன்” என்றபடி அவளை சொடுக்கி விட்டு தன் கை வளைவுக்குள் கொண்டுவந்தவன் அவளின் இதழ் நோக்கி குனிந்தான்.
அத்தியாயம் 32
அவனது செயல்களில் அசையாது சிலை போலவே நின்றாள். அதில் உள்ளம் துணுக்குற்றாலும் பின் வாங்கவில்லை ராயர்.
அசந்தர்ப்பமாக திகம்பரியின் வார்த்தைகள் அவனது காதில் விழுந்தது...
“இப்பவும் எனக்கு உங்களை பிடிக்கும்.. எப்பவுமே பிடிக்கும்... ஆனா உங்க தொடுகையை தான் என்னால ஏத்துக்க முடியல... அதுக்கு காரணம் உங்க பார்வை.. உங்க பார்வையை என்னைக்கு மறக்குரனோ அப்போது உங்க தொடுகையை ஏற்றுக்கொள்ளுவேன்... ஆனா உங்களுக்கு நான் வேணும்னு நினைச்சா கண்டிப்பா என்னை மறுக்க மாட்டேன்” என்று சொன்னது நினைவுக்கு வர கூடவே அடுத்த சில நாளில் அவளிடம் மிகவும் மோசமாய் நடந்துக்கொண்ட நிகழ்வுகளும் வர துடிதுடித்துப்போனான்.
அப்போ கூட அவள் தன்னை தடுக்க வில்லையே.... மாறாக அவள் பேச தானே செய்தாள். தான் தான் அதற்க்கு கூட அவகாசம் கொடாமல் என்னென்னவோ செய்து விட்டேனே என்று மருகினான்..
சிந்தையில் செயல் இழந்து நின்றவனை அப்போது கூட திகம்பரி விலகவில்லை. அவன் எப்படி விட்டானோ அப்படியே இருந்தாள்.
அதை உணர்ந்துக்கொண்டவன் பெருமூச்சு விட்டு தன்னை நிதானத்துக்கு கொண்டு வந்து அவளிடமிருந்து விலகி நின்று அவளையே கூர்மையாக பார்த்தான். அவனது விலகலில் நிம்மதி அடைந்தவள் அவனை ஏறிட்டாள்.
“அன்னைக்கு ஏதோ தவரான புரிதலால் அப்படி நடந்துகிட்டேன். ஆனா இப்போ என்னால உன்னை முன்பு போல நெருங்க முடியல.. எனக்கு முழு சம்மதமும் வேணும் உன் கிட்ட இருந்து.. அதுக்கு பிறகு தான் என் கைகள் உன்னை தழுவும்..... அதுவரை நான் காத்திருக்கிறேன்” என்றவனின் பேச்சில் உள்ளம் உருகியது.
“ஆனா அதுக்கு அவசியம் இல்ல ராய்... நீங்க வேறு பொண்ணை பார்த்து திருமணம் செய்துக்கோங்க.. எனக்காக காத்திருப்பது விரயம் தான்” என்றவளின் பேச்சில் எரிச்சல் தான் வந்தது..
“எனக்கு நீ தான் வேணும்னு சொல்றேன். அதை காதில் வாங்காம வேற கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னா நான் என்ன சொல்றது” என்று நினைத்தவன்
இவளிடம் பொறுமையாக தான் பேசணும் என்று முடிவெடுத்து “உனக்கு நான் வேணாம் தானே” என்று அவளை பார்த்து தெளிவாய் கேட்டான் ராய்.
அவனது அழுத்தமான வார்த்தையில் “ஆமாம்” என்று தலை அசைத்தாள்.
“அப்போ எனக்கு சரியான காரணத்தை சொல்லு. நான் விலகிக்குறேன்” என்றான் முடிவாய்.
“அது என்னால முடியாது ராய்.. அந்த காரணம் தெரியாமல் இருப்பது தான் எல்லோருக்கும் நல்லது” என்றாள் அவசரமாய் அவள் கூறும் காரணத்தை மறைக்கும் நோக்கத்தோடு.
“திகம்பரி உனக்கே தெரியும் அடிச்சு போட்டா கூட எனக்கு பொறுமையே இல்லைன்னு..... ஆனா உன் விசயத்துல நான் எவ்வளவு பொறுமையா போறேன்னு இந்த மூணு நாள்லயே நீ தெருஞ்சிருப்ப... என் பொறுமையோட அளவு கடந்து போச்சுன்னா நீ என் மனைவியா தான் இந்த அறையை விட்டு வெளியே வருவ… என்ன திகைத்து போய் பார்க்குற... உடல் அளவுல என்னைக்கோ நீ என் மனைவியாகிட்ட.. இப்போ வேதத்தின் படி” என்று எச்சரித்தபடியே தன் கால் சட்டை பையிலிருந்து தாலியை எடுத்து அவள் முன்பு நீட்ட அதிர்ந்து போனாள் திகம்பரி....
காரணம் சொல்லாமல் அவனை எப்படியாவது இவ்விடத்தை விட்டு அனுப்பி விடலாம் என்று எண்ணி இருந்தவளின் எண்ணத்தில் ஒரு கூடை மண்ணை கொட்டினான் ராயர்.
எல்லாத்துக்கும் துணிஞ்சு தான் வந்திருக்கிரானா என்று தளர்ந்து போனாள்.
உண்மையை சொன்னாள் இன்னும் வறுத்த படுவானே என்று அவனுக்காய் வருத்தம் கொண்டாள் அந்நிலையிலும்.
“ராய் ப்ளீஸ்.... அவசர பட்டு எதையும் செஞ்சுடாதீங்க.... எனக்கு நீங்க வேணாம்... அதே போல தான் உங்களுக்கு நான் வேணாம்.. அதை அப்படியே ஏத்துக்க முயற்சி செய்யுங்களேன்” கெஞ்சியவளை அப்படியே விட அவனால் முடியுமா என்ன..
“காரணமே தெரியாமல் நிராகரிக்க படுவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா.. என்னை ஏன் கல்யாணம் செய்துக்க மாட்டேங்குற... காரணத்தை சொல்லிட்டு நீ போயிட்டே இருக்கலாம்” என்று உறுதியாய் நின்றவனை எப்படி சமாளிப்பது என்று தடுமாறி போனாள்.
“ராய் என்னை நீங்க நேசிப்பது உண்மை என்றாள் என் கிட்ட எந்த காரணமும் கேளாமல் என்னை விட்டு விலகி போங்க.. அது தான் உங்களை என் மனதில் சுமந்ததுக்கான மரியாதை” என்றாள் சற்றே வரவளைத்த திடத்துடன்.
“நானும் அதை தான் சொல்றேன் திகம்பரி..... என்ன காரணமுன்னு சொல்லு உன்னை திரும்பி கூட பார்க்காம அப்படியே போய்டுறேன்.. எந்த விதத்திலும் உன்னை நான் மறுபடியும் வந்து தொந்தரவு செய்ய மாட்டேன்” என்றவன் அவளது வாயிலிருந்து உண்மையை வரவழைக்க முடியாமல் சினம் தான் எழுந்தது.
“ப்ளீஸ் ராய்..” என்று கெஞ்சினாள்.
“ஓ அப்போ உன் கிட்ட பழகுன நாள்ல நான் உன்னை திருப்....” என்று முடிக்கும் முன்னவே அவள் அவனது வாயை பொத்தி இருந்தாள்.
“ஏண்டா இப்படி எல்லாம் பேசுற....” கண்கள் கலங்கி விட்டது அவளுக்கு. அவளின் கைகளை விளக்கியவன்
“வேற எப்படி பேச சொல்ற சொல்லுடி... ஒருவனை மனசு முழுக்க சுமந்துகிட்டு அவனை வேணாம்னு சொன்னா வேற எப்படி பேச சொல்ற.....” என்று கத்தியவன் “கொஞ்சம் கூடவா உன்னை நான் திருப்..” அதற்க்கு மேல் தாங்க முடியாமல் அவனது கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டாள் திகம்பரி....
“நீ உன்னோட சேர்த்து என்னையும் அசிங்க படுத்துற ராய்..” வெகுண்டு எழுந்தவள் “உண்மை தானே தெரியனும் உனக்கு” என்றவள் தன் அலமாரியில் இருந்து ஒரு டைரியை தூக்கி அவன் மேல் போட்டாள்.
அதை சரியாய் பிடித்தவன் அது என்ன என்று திருப்பி பார்க்க அது அவனுடையதாய் அதுவும் ஆறு வருடத்திற்கு முன் எழுதிய குறிப்புகளை தாங்கி இருந்தாய் இருந்தது அந்த தினக்குறிப்பு நூல்.
“இதுல அப்படி என்னடி இருக்கு... அதுவும் இல்லாம இது எப்படி உன் கையில” என்றவன் அதை லேசாய் புரட்டி பார்த்தான். அவனை பொறுத்த வரையில் அதில் எதுவுமே இல்லை என்பது அவனது கருத்து...
ஆனால் அதில் இருந்த சில வரிகள் தான் திகம்பரியை ராயரோடு சேர்ந்து வாழ விடாமல் தடுக்கும் முட்டு கட்டையாய் இருந்து கொண்டிருக்கிறது.
“உனக்கு எதுவுமே தெரியலையா ராய்...” என்றாள் வருத்தம் மிஞ்சிய குரலில்..
“ம்ஹும் எனக்கு எதுவுமே தெரியலடி... அதுவும் இல்லாம இதெப்புடிடி உன் கையில....” என்று அதை விரித்த படியே கேட்டான்.
இனி எல்லாமே தெரிய வர போகுதே அதனால் எல்லாதையும் சொல்ல முடிவெடுத்தாள் தன்னையும் தன் உணர்வுகளையும் கட்டுக்குள் கொண்டு வந்து.
“நீங்க ஒரு வாரம் ஊருக்கு போறேன்னு சொன்னீங்கள்ள”
“ஆமாம்”
“நீங்க போனதுக்கு பிறகு எனக்கு உங்க ஞாபகமாவே இருந்தது.” என்றவளை காதல் வழிய பார்த்தான்.
ஊருக்கு செல்வதற்கு முன் நிகழ்ந்த சம்பவத்தில் ராயரின் மீது வருத்தத்தில் இருந்தவள் அவளை தன் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து சமாதானம் பேசினாலும் அவள் சமாதானம் ஆகமால் ‘மறக்க முயற்ச்சிக்கிறேன். மறந்தால் தான் உங்களை என்னால் ஏத்துக்க முடியும்’ என்று சொல்லியவள் அவன் ஊருக்கு சென்ற பின் அவன் வாழ்ந்த வீட்டை தேடி வந்து அவ்வளவு வெறுப்பிலும் அவனை உணர முயன்றிருக்கிறாள். என்ற நிகழ்வே அவனை பறக்க செய்தது....
“எப்படிடி அவ்வளவு வருத்தத்திலும் என்னை தேடின” என்று அவன் உடம்பு சிலிர்க்க கேட்க அவனது பரவசத்தை கண்டு வருத்தம் கொண்டவள்
“ஏன்னா நான் உன்னை காதலிக்கிறேன் ராயரு......” என்றாள் உடைந்து போன குரலில்.
அப்போது தான் அவளது ராயரு என்ற அழைப்பும், அவளது குரலில் இருந்த மாற்றமும் புரிய
“ரீகா..” அதிர்ந்தான் அவன்.
“ம்ம்ம் உன்னை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ராயரு.... உன் கூட வாழ எனக்கு கசக்குமா சொல்லுடா மாமா... உன் கூட வாழ தான் நான் இந்த பிறப்பையே எடுத்து இருக்கேன்டா அப்படி பட்டவ உன்னோட வாழ மாட்டேன்னு சொல்றேன்னா...” என்று இடைவெளி விட்டவள் அவனையே ஆழ்ந்து பார்த்தாள்.
பின் சற்று தெளிந்து சுதாரித்து “நான் உண்மைய சொன்ன பிறகு நீ வேறு கல்யாணம் பண்ணிக்கிறேன்னும். என்னை விட்டு போறேன்னும் சொல்லு. நான் உண்மையான காரணத்தை சொல்றேன்” என்று கூறியவளை கண்டு ஆத்திரமாய் வந்தது.
அவள் கேட்கும் உறுதி மொழியை அவனால் கொடுக்க முடியுமா... முடியாதே... செத்தாலும் அவனுக்கு அவள் வேண்டும்... சாகுரதுக்கே அவளை கேட்பவன் வாழ்வதற்கு அவளை தவிர வேறு யாரை கேட்ப்பான்..
“நீ சொல்லு முடிவை நான் எடுக்கிறேன்” என்றான் ராயர் உறுதியாய்.. அவனை விட அதிக உறுதியாய் திகம்பரி நின்றாள். அந்த சமயம் ரவியும் நந்தாவும் கதவை தட்ட ராயரை ஒரு பார்வை பார்த்த படியே கதவை திறந்தாள்.
உள்ளே நுழைந்த நந்தா குழந்தையை ஒரு பார்வை பார்த்தான். அது பொட்டாட்டம் அவ்வளவு சத்தத்திலும் துயில் கலையாமல் அழகாய் ஒரு பக்கம் சுருண்டு படுத்திருந்தது..
நந்தாவை தொடர்ந்து எல்லோரும் குழந்தையை ஒரு பார்வை பார்த்தார்கள். ரவிக்கு குழந்தையை இப்பவே தூக்கி கொஞ்சனும் என்று கைகள் பரபரத்தது... இதுவரை அங்கேயும் இங்கேயும் ஏதோ நிகழ்ந்ததை கணக்கு போட்டு வைத்திருந்தவனுக்கு நந்தா நடந்து முடிந்த அனைத்தையும் விளக்கமாய் சொன்னான்.
அதை எல்லாம் செவி மடுத்த ரவிக்கு திகம்பரியின் மீது அபரிமிதமான பாசம் எழுந்தது..
“ஆனா ஒன்னு மட்டும் புரியல ரவி எனக்கு... எதுக்காக ராயரை விட்டு விலகுறான்னு எனக்கு புரியல” என்றவனை குழப்பத்தோடு பார்த்தான் ரவி..
“எண்ணன்ணா சொல்ற மாமா தான் எல்லாத்தையும் உணர்ந்து மன்னிப்பு கேக்க போயிருக்குறாரே பொறவு என்ன..”
“என்கிட்ட விளக்கமா எதுவும் சொல்லலடா திகம்பரி... கடைசியா ஒரு முறை ராயை போய் பார்த்துட்டு வரேன்னு சொல்லிட்டு போனா.. அதுவும் ஒரு வாரம் இருக்கேன்னு சொன்னா. பிறகு என்ன ஆச்சுன்னு தெரியல மூனே நாள்ல திரும்பி வந்துட்டா..” என்றான் குழப்பமாய்.
ரவி நந்தாவுக்கு ஊரில் நடந்த விசயங்களை சொல்ல..
“இவனுக்கு ஏண்டா இப்படி பொல்லா கோவம் வருது... காதலியை கொஞ்ச மாச்சும் மதிக்குறானா பாரு” கடுகாய் பொரிந்தான் அதுவும் கிளம்பும் அன்னைக்கு திகம்பரியிடம் ராயரு நடந்துக்கொண்ட முறையை கேள்வி பட்டு..
“மாமாவுக்கு எப்படி நடந்துக்குரதுன்னு தெரியல அண்ணா.. அதான் அது மட்டும் இல்லாம அவரு ஏதாவது கேட்டு இவ மறுத்திருப்பா.. அதனால மாமாவுக்கு பயங்கர கோவம் வந்திருக்கும். அவரோட கோவம் தான் உங்களுக்கு தெரியாதா என்ன” என்று கேட்டான் ரவி.
“அதெல்லாம் சரி தாண்டா ஆனா இந்த திகம்பரிய எப்படிடா வழிக்கு கொண்டு வரது.. இன்னும் நாலு நாள்ல அமெரிக்க போறேன்னு இருக்கா”
“கவலை படதாண்ணா மாமா எல்லாத்தையும் பார்த்துக்குவாறு... அவரை மீறி அவளால எங்கேயும் போக முடியாது.. அவரால முடியலைனாலும் நீயும் நானும் இருக்கோம்ல நாம் வழிக்கு கொண்டு வருவோம்” என்று உறுதியாய் சொன்னவனின் பேச்சில் மெல்லமாய் ஒரு நம்பிக்கை உதயமானது நந்தாவுக்கு.
“சரிவாண்ணா இவங்க ரெண்டு பேத்தையும் தனியா ரொம்ப நேரம் விட கூடாது.. ஏதாவது ஏடாகூடமா செஞ்சு வச்சு தேவை இல்லாம ஒரு சண்டையை இழுத்து வச்சு இருப்பாங்க” என்று நந்தாவை கூட்டிக்கொண்டு மேலே வந்து திகம்பரியின் அறை கதவை தட்டினான்.
இருவரும் உள்ளே நுழைந்து அறையில் நின்றிருந்த மற்ற இருவரையும் ஆராய்ந்து பார்த்தார்கள். ரொம்ப சேதாரம் ஆகவில்லை இருவரும். எப்படி வந்தார்களோ அப்படியே இருந்தார்கள். முகம் கூட மாறவில்லை.. அப்பாடி என்று நிம்மதி கொண்டார்கள் ஒருவரை ஒருவர் பார்த்து ரகசியமாய்..
அதை கலைக்கும் வகையில் ராயர் வந்த இருவரிடமும் பஞ்சாயத்து வைத்தான்.
“உன் தங்கச்சி என்னென்னவோ சொல்றா என்ன ஏதுன்னு எனக்கு விளங்குராப்போல கேட்டு சொல்லு” என்று நந்தாவிடம் எரிந்து விழுந்தான் ராயரு.
அதை கேட்டு பக்கென்று இருந்தது நந்தாவுக்கு. பதறி போய் ரவியை பார்க்க, அவனோ கண்களிலே ஆறுதல் கொடுத்துவிட்டு
“மாமா எதுக்கு இப்போ இவ்வளவு கோவமா இருக்க... கொஞ்சம்...” என்று முடிக்கும் முன்னவே அவனை பார்த்து முறைத்தவன் “கோவ படாம வேற என்னை என்ன பண்ண சொல்றடா... இவளுக்கு என் கூட சேர்ந்து வாழ முடியாதாம். காரணம் கேட்டா சொல்ல மாட்டிகுறா.. நான் வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கனுமாம்.. ரொம்ப பேசுராடா..” என்று கத்த அவனது கத்தலில் திகம்பரிக்கு உடல் தூக்கி வாரிப்போட்டது.
ஆனால் அவளை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் “உன் தங்கச்சிக்கு கிறுக்கு எதுவும் பிடுச்சுடுச்சா... ஏண்டா இப்படி நடந்துக்குறா... உனக்காது அவ விலகி போற காரணம் தெரியுமா தெரியாதா..” பல்லை கடித்தான் ராயர்.
“இல்ல மச்சான் எனக்கும் எதுவும் தெரியாது.. அமெரிக்க போறான்னு மட்டும் தான் தெரியும்” என்றன் பாவமாய்.
“ஓ அப்போ அந்த முடிவுல தான் என்னை கடைசியா ஒரு முறை பார்க்க வந்தாளா” என்று சரியாய் திகம்பரியின் நாடியை பிடித்தான்.
அதில் திகம்பரிக்கு இன்னும் நடுக்கம் கூடியது.
“சொல்லு திகம்பரி எனக்கு உன் காரணம் தெருஞ்சே ஆகணும்... அது தெரியாம ஒரு அடி கூட இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன். உன்னையும் நகர விட மாட்டேன். நேரம் உனக்கு ரொம்ப குறைவா இருக்கு... பையன் விழித்து விட்டான் என்றால் நம்மால் பேச முடியாது.. அதனால் இன்னும் ஒரு நிமிடம் மட்டுமே உனக்கு நேரம்.. அதற்குள் நீ சொல்ல வேண்டும். இல்லை என்றாள் என் கையிலிருக்கும் தாலி உன் கழுத்தில் ஏறிவிடும் பார்த்துக்க” என்று அவளுக்கு கெடு வைக்க காலடியில் பூமி நழுவி செல்வது போல உணர்ந்தாள். நழுவி தன்னை மட்டும் அது இழுத்துக்கொல்லாதா என்று பேராசை பட்டாள்.
ஆனால் அது நிகழவே நிகழாதே...
“சொல்லு திகம்பரி..” என்று ரவியும் நந்தாவும் வேறு சேர்ந்து கொள்ள அவளிடம் மௌனம் மட்டுமே...
அவளால் அவ்வளவு எளிதாக அதற்குரிய காரணத்தை சொல்லிவிட முடியவில்லை. சொன்னால் காய பட்டு போவது அவன் தானே என்று தயங்கினாள். ஆனால் சொல்லாமல் ராயர் விடமாட்டானே கழுத்தில் கத்தியை வைத்து கேட்பது போல தாலியை கண்முன் வைத்து மிரட்டிக்கொண்டிருக்கிறான்.
எல்லாத்துக்கும் துணிந்து தான் வந்திருக்கிறான் என்று எண்ணியவள் சோர்ந்து போனாள். தப்பிக்கவே முடியாதா.. அவன் காயபட்டு போனால் அதை தன்னால் கண் கொண்டு பார்க்க இயலுமா...
அவன் துடிக்கும் துடிப்பை தான் பார்க்க முடியுமா.. கடவுளே எதுக்கு இந்த சோதனையானா கால கட்டம். எதெல்லாம் நிகழ கூடாதுன்னு நான் நினைத்தேனோ அதெல்லாம் இப்பொழுது நடந்து கொண்டு இருக்கிறதே...
இதிலிருந்து விடுபடவே முடியாதா... கண்கலங்கியவளின் அமைதி அங்கிருந்த மூன்று பேருக்கும் பெருத்த யோசனையை தந்தது.. கூடவே ஏதோ மிக பெரிய பூகம்பம் வர இருக்கிறது என்று புரிந்து கொண்டார்கள். அதை உணர்ந்தவகள் அதை விரும்பவில்லை. எத்தடை வந்தாலும் அதை உடைத்து போட்டு இருவரையும் சேர்த்து வைக்கும் வெறி வந்தது நந்தாவுக்கும் ரவிக்கும்.
ராயருக்கும் அந்த எண்ணம் தான் எந்த காரணம் வேணாலும் இருக்கட்டும் அத்தனையும் தூசு போல தட்டி போட்டுட்டு ரீகாவை என் வசமக்கிக்கொள்வேன் என்று உறுதியாய் இருந்தான். அதனால் எவ்வளவு பெரிய இடர் வந்தாலும் சமாளிப்பேன் என்ற நிமிர்வாகவும் திடமாகவும் எண்ணியவன் ரீகாவின் பதிலுக்காக காத்திருந்தான்.
“சொல்லுமா என்ன காரணமாக இருந்தாலும் நாங்க பார்த்துக்குறோம்” என்று நம்பிக்கையை விதைத்தவர்களை கண்ணீருடன் ஏறிட்டு பார்த்தாள் திகம்பரி..
“நான் சொல்றேன் ஆனா ராயை கல்யாணம் செய்துக்கொள்ள என்னை கட்டாய படுத்த மாட்டேன்னு சொல்லுங்க.. நான் எல்லாத்தையும் சொல்றேன்” என்றாள் திடமாய்.
அவளது இந்த கெடுவை கேட்டு நந்தாவும் ரவியும் ஒருவரை ஒருவர் திகைப்புடன் பார்த்துக்கொண்டார்கள்.
நாம ஒன்னு நினைச்சா இவ ஒன்னு நினைக்குறாலே என்ற எண்ணத்துடன் சரி என்று தலை அசைத்தார்கள். அவளிடமிருந்து முதலில் காரணத்தை வாங்கி விடுவோம் என்று.
“இப்போ சரி சொல்லிட்டு அப்புறம் மாத்தி பேசுநீங்கன்னா உங்க யாருகிட்டயும் சொல்லாம எங்காவது போய்விடுவேன் பார்த்துக்கோங்க..” என்று மிரட்டியவள் ஒரு கணம் அமைதியாய் நின்றாள்.
அவளது இந்த முடிவு கேட்டு ராயர் பல்லை கடிக்க மற்ற இருவரும் ரகசியமாய் புன்னகைத்துக்கொண்டார்கள்.
“எங்களை மீறி உன்னால் இங்க இருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது” என்று இறுமாப்புடன் அவளை பார்த்தார்கள் இருவரும்.
“சரி சொல்லு” என்று அவளை பேச வைத்தார்கள் மூவரும்.
எப்படி ஆரம்பிப்பது என்று பெரும் தயக்கம் அவளை தாக்க ஆழ மூச்செடுத்து தன்னை சரி செய்தவள் காரணத்தை விளம்ப ஆரம்பித்தாள்.
அதை கேட்டு மூவரும் வேதனையுடன் அவளை பார்த்தார்கள் என்றால் அதை விட அதிக வேதனையாய் ராயரை பார்த்தார்கள்.
அத்தியாயம் 33
அந்த அறையில் இருந்த அமைதியை தன் சொற்களின் மூலம் கலைத்து எறிந்தாள் திகம்பரி..
அவளது பேச்சில் இருந்த சாராம்சம் ராயரை வெகுவாய் வதைத்தது..
“சொல்லு சொல்லுன்னு சொல்றீங்களே... சொன்னா அதை தாங்க இவனால் முடியுமா.. துடுச்சு போயிடுவான்னு தானே நான் சொல்ல மறுக்குறேன். அதை ஏன் யாரும் புருஞ்சுக்க மாட்டிகிறீங்க” என்று ராயரை காட்டி கண்களில் கண்ணீருடன் வெடித்தவள்
“இப்போ என்ன, என்ன காரணம்னு நான் சொல்லணும் அது தானே... சரி சொல்றேன்... எல்லாரும் காது கொடுத்து நல்லா கேட்டுக்கோங்க” கத்தியவள்
“ரவி ராயர் எப்படி சாப்பிடுவான்” என்று ரவியிடம் கேட்டாள்.
இதுக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம் என்று குழம்பி போனவர்கள் ரவி என்ன பதில் சொல்லுவான் என்று பார்த்தார்கள் ராயரும் நந்தாவும்.
ரவியோ நக்கலாக “நல்லா நிறைய தட்டு நிறைய போட்டு வயிறு நிறையுற அளவுக்கு சாப்பிடுவான்..” சொல்ல
“நான் அதை கேக்கல ராயர் சாப்பாட்டுல காரம் சேர்த்துக்குவானா இல்லையா அதை சொல்லு..” என்றாள் அவனை முறைத்த படி..
ஒரு கணம் யோசித்தவன் “இல்லையே எங்க குடும்பத்துல யாருமே அதிக காரம் சேர்த்துக்க மாட்டமே...” என்றான் தெளிவாய் யோசித்து
அதை கேட்டு சட்டென்று திகம்பரி திரும்பி ராயரை பார்த்தாள்.
அவள் எதை சொல்ல வருகிறாள் என்று அந்த நிமிடமே புரிந்து போக அவன் தலை குனிந்து நின்றான் அவளை ஏறெடுத்து பாராமல். அவனால் திகம்பரி அடுத்து சொல்ல வருவதை கேட்க முடியாமல் மனமில்லாமல் எதிர் வருவதை தாங்கிக்கொள்ள முடியாமல் மனம் கனத்து போய் நின்றான்.
“உங்க ராயரு காரம் சாப்பிட பழகி பத்து வருஷம் மேல ஆகுது... அதுவும் அதிக காரம். அது தெரியுமா உங்க குடும்பத்துக்கு..” என்று சொன்ன திகம்பரியை புரியாமல் ரவியும் நந்தாவும் பார்த்து
“என்ன சொல்ல வர்ற திகம்பரி... கொஞ்சம் தெளிவா சொல்லு எதுவுமே புரியல..” நந்தா பொறுமை அற்ற குரலில் தங்கையை கேட்க
“இன்னும் உனக்கு புரியலையா அண்ணா... ராயர் வண்டிக்கு வேலைக்கு சென்ற பின் தான் அதிக காரம் சாப்பிட ஆரம்பித்தார். அவரா அதை விரும்பி சாப்பிடல.. கூட சமைக்கிறவங்க புகை இலை போட்டு மறுத்து போன நாக்குக்காகவும், ரோட்டோர கடையில் குடி மகன்களுக்காக வைக்கப்படும் குழம்பு சால்னாவிலும் அதிக காரம் போடுவாங்க.. அதை மூணு வருஷம் இடை விடாம சாப்பிட்டு ராயரின் நாக்கு அதுக்கு பழக்கமாகி போய் இருக்கு...
நம்மளால அதாவது சாதரனமானவங்க அந்த காரத்தை சாப்பிட முடியாது..” என்றவளின் கண்களில் கண்ணீர் நிறைந்து இருந்தது.
“அதை தான் இவன் அவனது டைரியில் எழுதி வச்சு இருக்குறான்..” என்று திகம்பரி முடிக்க
“அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்” நந்தா கேட்க
“இருக்கு. ராயரின் வீட்டுல யாருக்கும் தெரியாது ராய் அதிக காரம் சாப்பிடுவது. எங்கே தான் அதிக காரம் சாப்பிடுவது தெரிந்து தன் மாமாவும் அக்காவும் அதிகமா வறுத்த படுவாங்கலோன்னு இன்ன வரையிலும் இவன் சொல்லல்ல..
அது ஏன்னு தெரியுமா” என்று ராயை தவிர்த்து விட்டு மற்றவர்களிடம் கேள்வி கேட்டாள் திகம்பரி...
“ஏன்”
“வீட்டில் ஏற்பட்ட வறுமையின் காரணமாக தான் ராயரு வேலைக்கு சென்றான். அதுவே அவங்களால தாங்க முடியல.. இப்போ வரையிலும் அதாவது கிட்ட தட்ட பத்து வருடம் சென்ற பின்னும் அவங்க அதுக்காக வறுத்த பட்டுகிட்டு இருக்காங்க.. பாலும் நெய்யும் பருப்பும் பழமுமா சாப்பிட்டு வளர்ந்தவர் ராய்..
அப்படி இருக்கும் போது சில நேரம் சோறு கிடைத்து பல நேரம் சோறு இல்லாமல், அப்படி கிடைக்கும் சோறு கூட நாக்கு வெந்து போகும் அளவு அவன் காரம் சாப்பிட்டு தான் தாங்களது வயிறை வளர்த்தான் என்ற உண்மை தெரிந்தால் எப்படி துடுச்சு போவாங்கன்னு தெருஞ்சு தான் இவன் யாரிடமும் எதையும் சொல்லவில்லை.” என்றபோதே ரவியின் கண்களிலும் திகம்பரியின் கண்களிலும் கண்ணீரின் கரை படிந்தது..
“என்னம்மா சொல்ற” நந்தாவுக்கு இது புதிய செய்தியாய் இருந்தது.. இப்படி ஒரு பக்கம் இருக்கா என்பது போல ராயரை பார்த்தான். அவன் குனிந்த தலையை நிமிரவே இல்லை.
ரவி கட்டுக்கள் உடைந்த அனையாய் ராயரை பார்த்தான். அவன் பார்வையில் அத்தனை அன்பு..
‘என் கிட்ட கூட மறைச்சுட்டீயே மாமா’ என்ற பார்வையை வீசினான்.
“ஆமாண்ணா இவரு அவங்க மனசு கஷ்ட பட கூடாதுன்னு இப்போ வரையிலும் அவங்க போடுற கொஞ்சம் காரத்தை மட்டும் தான் சாப்பிடுறான். உனக்கு ஒன்னு தெரியுமா நம்ம நாக்கு காரமும் உப்பும் சாப்பிட்டு பழகிடுச்சுன்னா அதிலிருந்து அவ்வளவு சுலபமா வெளிய வர முடியாது..
அதனால இவன் தொடர்ந்து அப்படியே தான் சாப்பிட்டுகிட்டு இருக்கான். தில்லை அக்கா சமையல் இவனுக்கு உப்பு சப்பு இல்லாம தான் இப்ப வரையிலும் இருக்கு. ஆனா ஒரு நேரம் கூட இவன் அதை அவர்களிடம் காட்டிக்கொண்டது இல்லை. இது எனக்கு எப்போ தெரியும் தெரியுமா..“ இடைவெளி விட்டவள்
“என்னால இவனை மறக்க முடியல.. அதனால நானே மூணு வருஷம் கழிச்சு அவனை தேடி போனேன்.. அதாவது மூன்று நாளைக்கு முன்னாடி..” என்றவள் ராயரை கூர்ந்து பார்த்தாள்.
“இவனோட மறுபடியும் வாழலாம்னு தான் நான் போனேன்” என்ற போது ராயர் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“அப்படியா..” என்ற பார்வை பார்த்தான்.
அவள் “ஆம்” என்று தலை அசைத்தாள்.
அவனிடம் பெரும் அமைதி. அவளை உள்ளார்ந்த அன்போடு மனம் கனிந்த பாசத்தோடு பார்த்தான்.. ‘என்னை பத்தி இவ்வளவு புருஞ்சு வைச்சு இருக்கியாடி..’ என்று வாய் மீது கை வைத்து அவளின் அன்பை தனக்குள் உள்வாங்கிக் கொண்டு அவளையே பார்த்து கொண்டிருந்தான் ராயர் மிகுந்த காதலில்.
அவன் புரிந்து கொண்டு விட்டான் என்று புரிய மேலும் கண்ணீர் பொங்கியது திகம்பரிக்கு..
“தில்லை அக்காக்கிட்ட பேசுன வரையிலும் இந்த குடும்பத்தோட நானும் சேர்ந்து வாழலாம் என்று நினைத்திருந்தேன்.... ஆனா..” என்றவளின் குரலில் இருந்த பிசிறில் ரவி திகம்பரியை கண்ணீருடன் பார்த்தான்.
“அன்னைக்கு தில்லை அண்ணி சூப் வச்சு இருந்தாங்க.. நான் குடிச்சு பார்த்தேன்.. அதை எல்லோருக்கும் கொண்டு வந்து குடுத்துட்டு ராயருக்கு மட்டும் அதிகமா அவன் குடிக்கிற மாதிரி மிளகு தூள் கலந்து குடுத்தேன்.
அப்போ கூட எனக்கு தெரியாது அவன் இவ்வளவு காரம் சாப்பிடுவான் என்று வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாதுன்னு. ஆனால் அவனே வந்து என் கிட்ட ‘அக்கா இவ்வளவு காரம் போடாதே... அப்போ நீ தானே போட்டன்னு’ கேட்டான்.
ஆக இத்தனை வருசமா அவன் சாப்பிடுற சாப்பாட்டை கூட அவங்க மனசு கஷ்ட பட கூடாதுன்னு நினைச்சு இவன் மறைச்சி வச்சிருக்கிறான்னா அவங்க மேல இவன் எவ்வளவு அன்பு வச்சிருப்பான்..
அவங்க மட்டும் சும்மாவா பெத்த புள்ளைய விட அதிகமா இவன் மேல அன்பு வச்சு இருக்காங்க.. மூணு வருஷம் மட்டும் தான் இவன் கஷ்டப்பட்டான். ஆனா அவங்க இவனை வேலைக்கு அனுப்பி வைத்துவிட்டு இந்த நிமிஷம் வரையிலும் கஷ்டப்பட்டுகிட்டு இருக்காங்க.. அது இவனுக்கும் தெரியும்..
அதனால தான் இவன் தான் அனுபவித்த எந்த கஷ்டத்தையும் அவங்க கிட்ட சொல்றது இல்ல...” என்று நிறுத்தியவள்
“காரம்ன்ற சின்ன விசயத்தையே அவங்க கிட்ட இவன் சொல்லல அவங்க மனசு கஷ்ட படும்னு... என்னால மட்டும் ‘இவன் உங்களுக்கு தெரியாம கல்யாணம் கட்டாம குடும்பம் நடத்தி ஒரு புள்ளையும் குடுத்து இருக்கான்னு சொல்லி அவங்க மனசை நோகடிக்க சொல்றீங்களா?” என்று கேட்டவள் விழிகளில் வழிந்த நீருடன்
“இதோ இப்படி என் முன்னாடி தலை குனிந்து நிக்கிறானே. இதே மாதிரி அவங்க முன்னாடி இவன் தலை குனிந்து நின்னா அதை தாங்க என்னால முடியுமா... இல்லை நான் வளர்த்த பிள்ளை இப்படி ஒரு காரியம் பண்ணிட்டு என் முன்னாடி தலை குனிந்து நிக்குதேன்னு வேதனை பட மாட்டாங்களா அண்ணாவும் அண்ணியும்...
ராயரை தலை குனிய வைக்க தான் அவங்களால முடியுமா.. இவன் கிட்ட எதையும் காட்டிக்காம உள்ளூறிய அன்போடு என்னையும் எங்க பையனையும் ஏத்துக்கிட்டாலும் உள்ளுக்குள்ள நொறுங்கி போய்ட மாட்டாங்களா..” என்று கேட்டவளின் அன்பை கண்டு ரவி ஸ்தம்பித்து நின்றான்.
காதலித்தவன் மீது அன்பு கொண்டிருப்பது இயற்க்கை தான். ஆனால் மூன்றே நாள் அறிந்த காதலனின் குடும்பம் கஷ்டப்பட கூடாதுன்னு அவங்களுக்காக யோசித்தவளை பார்த்தவனுக்கு மனம் நெகிழ்ந்து போனது.
ராயருக்கு நிமிரவே முடியவில்லை. இது அத்தனைக்கும் இவன் மட்டும் தானே காரணம். இவன் சரியாய் இருந்திருந்தால் இப்படி ஒரு நிலைக்கு வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே.. கூனி குறுகி நின்றான். இப்போது தான் அதுவும் திகம்பரி சொன்ன பிறகு தான் அவனுக்கு இந்த நிலை வேறு இருக்கே என்று நினைத்தான்.
தன் மாமாவின் முன்னாடியும் அக்காவின் முன்பும் தன்னால் இது என் மகன் இவள் என் மனைவி அதுவும் தாலி கட்டவில்லை என்று போய் நிற்க முடியுமா என்ற கேள்வி பூதாகாரமாய் எழுந்தது..
அவர்கள் வைத்த நம்பிக்கை முற்றிலும் சிதைத்து விட்டு எப்படி அவர்களை ஏறெடுத்து பார்க்க இயலும்.
ம்ஹும் முடியவே முடியாது... அதற்காக திகம்பரியை அப்படியே விட முடியாது.. அவர்களை விட்டு தனியாய் வசிக்க வேண்டியது தான் என்று முடிவெடுத்து திகம்பரியை பார்த்தான்.
அவனது எண்ணத்தை உணர்ந்தவள் “அது மட்டும் என்னால முடியாது ராயரு.. உன்னை உன் குடும்பத்தோட பிரித்து எடுத்துவிட்டு என்னோடு சேர்த்து வாழ நான் ஆசைபடல.. நீ எங்க இருந்தாலும் என் மனசு உன் கிட்ட தான் இருக்கும். அது எப்பவும் மாறாது..”
“எனக்கு உன் கூட வாழ்ந்த மூணு வருஷ வாழ்க்கை போதும்.. நீ உன் அக்கா மாமாவுக்காக இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ ராய். என்னை மறந்துடு.. அது தான் எல்லோருக்கும் நல்லது... அவங்க உன் மேல வச்ச பாசத்தை என்னால சரிக்க முடியாது.. அது மட்டும் இல்லாம இப்போ நீ உலகம் போற்றும் வழக்கறிஞர். உன் குடும்பத்துக்கு முன்னே நீ தலை குனிந்து நிற்பதையே என்னால் தாங்க முடியாது... அப்படி இருக்கையில் உலகுக்கு முன் உன்னை தலை குனிய விடுவேனா...” என்றவளின் அன்பில் நெகிழ்ந்து கரைந்தவன் திகம்பரியின் முன் மண்டியிட்டவன் அவளது காலை பற்றிக்கொண்டு
“பாவிடி நான் பாவி... கொடும் பாவி... யாருக்குமே நான் உண்மையா இல்லை... உனக்கும் சரி என் குடும்பத்துக்கும் சரி... அயோக்கியன் நான்.. என் முகத்துல முழிக்கிறது கூட பெரிய பாவம்.
ஆனா நீ எனக்கு வரமா வழங்கிகிட்டு இருக்கடி... உன் வாழ்க்கையை ஒட்டு மொத்தமா அழிச்ச எனக்கு நீ தயவு காட்டுற.. எப்படி கண்ணம்மா உன்னால முடியுது... ஆனா என்னால முடியலடி.. என்னை நினைச்சு தான் என்னை தவிர்த்தியா கண்ணம்மா...” அவனால் முடியவில்லை திகம்பரியின் பேரன்பை தாங்க...
உடைந்து நசிந்து போனான் அவளது கருணையில்.
“எப்பவும் என் நினைப்பு தானா கண்ணம்மா... எனக்காக பார்த்து உன் வாழ்க்கையை கேள்வி குறி ஆக்கிட்டியேடி... இப்படி உன் வாழ்க்கையை மாற்றி போட்டதுக்கு நான் உன் வாழ்க்கையில் வராமலே இருந்திருக்கலாம் இல்லம்மா..” என்று கண்களில் கண்ணீர் வழிய தன் ரீகாவை அண்ணாந்து பார்த்து கேட்டவனை காண காண திகம்பரிக்கு உள்ளம் உடைபெடுத்தது அன்பினாலும் அழுகையினாலும்...
அவளுக்கு தீஷிதனும் ராயரும் ஒன்று போலவே தெரிந்தார்கள்.. வேணும் என்று ராயர் தவறு செய்ய வில்லையே... இப்படி பட்ட சூழலை அவன் முன்பே யோசித்து வைத்திருக்கனும்... யோசியாமல் போனது அவனது தவறு தானே...
அவனை பொறுத்த வரையில் இரு பக்கமும் அவனுக்கு முக்கியம்..
திகம்பரியை காதலித்தது தவிர அவளுக்கு இன்று வரையில் எதுவும் செய்தது இல்லை. செய்தது எல்லாமே மன்னிக்க முடியாத குற்றங்கள் மட்டுமே.. அதுக்கே இவள் அவனை இப்படி தாங்கி இன்னும் இன்னும் அதிகமாக காதலித்துக்கொண்டு இருக்கிறாள்.
இனி ஒரு நொடியும் அவளை பிரிய கூடாது எப்படியா பட்ட சூழல் வந்தாலும் இவளை விட முடியாது.. நான் தானே மத்தவர்கள் முன் தலை குனிகிறேன்.. பரவாயில்லை.. என் திகம்பரிக்கா நான் இன்னும் எவ்வளவு அவமானம் ஏற்பட்டாலும் தாங்கிக்கொள்ளுவேன்.
எனக்காக அவள் தாங்கிக்கொள்ளாத அவமானத்தையா நான் புதிதாக ஏற்றுக்கொள்ள போகிறேன்.
கழுத்தில் தாலி இல்லாமல் வயிற்றில் கருவை சுமந்து என் காதலுக்கு மகுடம் சூட்டியவளுக்காக நான் என்னவெல்லாமோ செய்யணும்... கண்டிப்பா செய்வேன். இனி ஒரு பொழுதும் தாமதிக்காமல் மாமாவின் முன்பு போய் நிக்கணும்.. திகம்பரியை இனி தனிமையில் தவிக்க வைக்க கூடாது...
போதும் அவள் அனுபவித்த வலி...
“நீ என்ன சொன்னாலும் இனி உன்னை தனியாய் விட முடியாது ரீகா.. அவமானம் நான் தானே படுறேன்.. உன்னோட வாழ்வதற்கு நான் அதை கூட தாங்கிக்க மாட்டனா... அதுவும் நான் செய்த தவறால் தானே இத்தனையும் நிகழ்ந்தது... என்னால் முடியும்... அதுக்கு துணையா நீ வேணுமடி... என்னோட வா ரீகா” என்று கைகள் நீட்டி அழைத்தவனை உள்ளம் நடுங்க பார்த்தவள்
“இதெல்லாம் நடக்க கூடாதுன்னு தான் நான் உனக்கு உண்மை தெரியும் முன்னாடியே போறேன்னு கிளம்பி வந்தேன்.. ஆனா நீ இப்படி பிடிவாதம் செய்றீயேடா.. முடியாது ராயரு... நீ மத்தவங்க முன்னாடி தலை குனிந்து நிற்பதை பார்க்க நான் உயிரோட இருக்கணுமா... அது இந்த ஜென்மத்துல நடக்காது..” என்று உறுதியாய் சொன்னவள் அங்கிருந்த மூன்று பேரையும் தீர்க்கமாய் பார்த்தவள்
“நான் அமெரிக்கா போறது உறுதி... ரவி நீ உன் மாமானுக்கு வேறு ஒரு கல்யாணம் செய்து வைக்க சொல்லி உன் பெத்தவங்க கிட்ட சொல்லு... அண்ணா இவனை” ராயரை சுட்டி காட்டி “என்னோடு தொடர்ந்து வராம பார்த்துக்க வேண்டியது உன்னோட வேலை”
“அப்புறம் ராய்.. இனி என்னை மனசால கூட நீங்க நினைக்க கூடாது... இது உங்க பிள்ளை தான்..” தீஷிதனை காட்டி “ஆனா உங்களுக்கு இவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை... இருக்கவும் கூடாது..”
“உங்க அக்கா மாமா என்ன சொல்றாங்களோ அதை தான் நீங்க செய்யணும்... அவங்களை மீறவே கூடாது. முக்கியமா அவங்களை கஷ்டபடுத்தவோ, யாருக்கும் பதில் சொல்லும் நிலைக்கோ அவங்களை தள்ள கூடாது.. அதுவும் உங்க செயல் மூலமா.. அதை விட முக்கியம் என்னை மறந்துட்டு அவங்களுக்காக அவங்க சந்தோசத்துக்காக கல்யாணம் பண்ணிக்கணும்.. இது என் மேல சத்தியம்”
“இங்க நடந்த விஷயம் நம்ம நாலு பேத்துக்குள்ள மட்டும் தான் இருக்கணும்.. ரவி முக்கியமா உனக்கு தான்.. இங்க மண்டைய மண்டைய உருட்டிட்டு ஏதாவது கிறுக்கு தனம் பண்ணினா உன்னை எப்பவும் நான் மன்னிக்க மாட்டேன்.. அண்ணா உனக்கும் சேர்த்து தான்.
எனக்கு சந்தோஷம் என் மாமாவோட நினைவு மட்டும் தான்.. நான் அதுலயே சந்தோசமா இருப்பேன்.. கூடவே எங்க மகன் இருக்கான். அவன் என்னை பார்த்துக்குவான். நான் போகும் வரையிலும் யாரும் இவ்விடத்தை விட்டு வர கூடாது.
இதுல ஏதாவது ஒன்னு மாறினாலும் நீங்க என்னை உயிரோட பார்க்க முடியாது..” என்றவள் எல்லோரையும் சிலையாய் நிற்க வைத்து விட்டு தன் பைகளில் தன் உடமைகளை நிரப்பி விட்டு தூங்கும் பிள்ளையை தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள்.
அத்தியாயம் 34
திகம்பரி வீட்டை விட்டு வெளியே வந்த சமயம் சரியாய் அவளது கை பேசி அழைத்தது. இந்த நேரத்தில் யாரு என்று எண்ணமிட்ட படியே பேசியவளின் கரங்களில் கை பேசி நழுவியது.
“என்ன சொல்றீங்க..” அதிர்ந்து நிலை குலைந்து போனாள்.
“....”
“நான் இதோ இப்போதே கிளம்பி வரேன்” என்று படப்படப்பாய் சொல்லியவள் திரும்பி வீட்டிற்குள் வரமால் காரில் ஏறி ஓட்டுனரிடம் “பெங்களூரு வேணாம் மதராஸ் போங்க” என்றாள் விழிகளில் வழியும் கண்ணீரோடு..
கை பிள்ளை தூங்கிக்கொண்டிருக்க திகம்பரிக்கு கண்ணீர் அணை உடைத்து கொண்டு வந்தது.
“ஏன் பா இப்படி உங்களுக்கு மட்டும் அடி மேல் அடி பட்டுகிட்டு இருக்கு...” புலம்பியவள் விரைந்து வந்து ராஜ் அனுமத்திக்க பட்டிருக்கும் மருத்துவமனைக்கு சென்றாள்.
அங்கே அவசர பிரிவில் இருக்க உள்ளே அவளை அனுமத்திக்கவில்லை.
“இப்போ எங்களால எதையும் சொல்ல முடியாது திகம்பரி. மாடியிலிருந்து கீழே விழுந்து, படியில் உருண்டு வந்ததால் அடி பலமாக பட்டிருக்கு.. கூடவே ஸ்ட்ரோக் வேற வந்திருக்கு. அதனால எங்களுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் வேணும்.. உங்க அப்பாவுக்கு ரத்த போக்கு வேற அதிகம் இருக்கு.” என்று மருத்துவர் சொல்லிவிட்டு செல்ல தோய்ந்து போய் அமர்ந்தாள்.
“எதுக்கு பா இந்த அவசரம்.. நான் வாழ்க்கையில அவசரப்பட்டு நிகழ்ந்ததெல்லாம் போதாதா.. இப்போ நீங்களுமா..” எண்ணியவளின் கண்களில் ராயரிடம் பேசிய பேச்சுக்கள் வளம் வந்து அவளை மேலும் வதைத்தது..
இங்கோ மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அப்படியே நின்றார்கள். ரவிக்கு ராயரின் மேல் கட்டு படுத்த முடியா அளவு கோவம் வந்தது..
“உன்னால எப்படி மாமா இப்படி எல்லாம் நடந்துக்க முடிஞ்சது... திகம்பரி மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க நீ குடுத்து வச்சு இருக்கணும்... ஆனா நீ இப்படி அவசரப்பட்டு அவங்களை மொத்தமா இழந்துட்டு நிக்கிறியே. கொஞ்சம் கூடவா நீ யோசிச்சு பார்க்கல. காரம் அதிகமா போட்டு சாப்பிட்டா உன் மாமா உன் அக்கா வறுத்த படுவாங்கன்ற அளவுக்கு யோசிச்ச நீ,
இப்படி கல்யாணம் கட்டாம ஒரு பெண்ணிடம் முறை தவறி நடந்துகிட்டு குழந்தையும் குடுக்குற அளவுக்கு போய் இருக்கா அதோட இல்லாம இத்தனை வருஷம் தள்ளி வேற வச்சு இருக்க. இதெல்லாம் செய்யும் போது நீ கொஞ்சம் கூட யோசிக்கலையா. நீ யோசிக்கலன்னு சொன்னா அதை என்னால நம்ப முடியல...
சொல்லு ஏன் இப்படி பண்ண.. இப்படி பட்ட காரியம் செய்றதுக்கு முன்னாடி ஒரு அணு அளவு கூடவா உன் வளர்ப்பு முறை உன்னிடம் கேள்வி கேக்கல...”
தலை குனிந்து நின்ற ராயர் கேள்வி கேட்கும் ரவியை வலியோடு பார்த்தவன் “இந்த கேள்வியை என் ரீகா வந்து என்னை கேக்கட்டும் ரவி. அப்போ பதில் சொல்றேன்” என்றவன் விடுவிடுவென்று அவ்விடத்தை விட்டு அகல ரவிக்கும் நந்தாவுக்கும் அவனது வலி புரிந்தது..
ஆனால் திகம்பரியின் இழப்பு அதிகம் இல்லையா... யாராவது ஒருவராவது ராயரை கேள்வி கேக்கணுமே.. அது ரவியாய் இருந்தது ராயருக்கு பெருத்த நிம்மதி தான்.
ஆனாலும் அந்த கேள்வியை ரீகா தன்னிடம் கேட்காமல் விலகி போனது அவனுக்கு பெருத்த வலியை கொடுத்தது...
“என்னோட சின்ன சின்ன உணர்வுகளை கூட புரிந்து கொண்டவளுக்கு முக்கியமான தருணத்தில் நான் கூட இருப்பேன் என்ற நம்பிக்கை ஏன் இல்லாமல் போனது...” வருத்தம் கொண்டவன் அதற்க்கு மேல் அங்கு நில்லாமல் ராயரும் சென்னை நோக்கி பயணமானான் கூடவே மற்ற இருவரும்.
அவனது பெரும் அமைதி நந்தாவையும் ரவியையும் அலைகழிக்க அவனுக்காக வருத்த படுவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாமல் நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
வரும் வழியில் அவர்களுக்கும் தகவல் தெரிய வர மூவரும் ஓடினார்கள் மருத்துவமனைக்கு.. அங்கே தீஷிதனோடு அவசர பிரிவுக்கும், மருந்து வாங்கும் பிரிவுக்கும், பணம் செலுத்தும் இடத்துக்கும் மாத்தி மாத்தி அலைந்து கொண்டிருந்தாள் திகம்பரி.
ஒண்டி ஆளாய் எல்லாவற்றையும் பார்த்ததால் மிகவும் சோர்ந்து போய் இருந்தாள். அவளது முகமே அப்பட்டமாய் அதை எடுத்து காண்பிக்க ராயருக்கு உருகி போனது... இப்படி பட்ட நிலையில் கூட ராயரின் மன நிலையை கணித்து அவனுக்கு துணைக்கு ஆள் வேணும் என்று நந்தாவுக்கு தகவல் தராமல் சமாளித்தவளை கண்டு ராயருக்கு உருகி போனது.
“என்னமா ஆச்சு” என்று கேட்டது தான் தாமதம் பாதுகாப்பை தேடும் கோழி குஞ்சு போல அவனின் நெஞ்சில் சாய்ந்தவள் நடந்ததை அவனிடம் சொல்ல
“எல்லாம் சரியாகி போகும்.. அதான் நாங்க மூணு பேரும் வந்துட்டோம்ல. நாங்க பாத்துக்குறோம்.. நீ கவலை படமா கொஞ்ச நேரம் தூங்கு” என்றவன்
நந்தாவை அழைத்து திகம்பரியை வீட்டுக்கு அழைத்து செல்ல சொன்னவன் மறந்தும் மகனை ஓர கண்ணால் கூட பார்க்க வில்லை.
திகம்பரியோ போக மாட்டேன் என்று அடம் பண்ண “இதுலயாவது என் மேல நம்பிக்கை வை... உன் அப்பா கண்டிப்பா கண் விழிப்பாறு. பிறகு நீ அவரோடு வந்து இரு.. இப்போ உன்னையும் பையனையும் கவனி...” என்றவன் திரும்பிக்கொண்டான்.
அவளை அதன் பிறகு பார்க்கவே இல்லை..
மருத்துவமனையிலே இருந்தான் ராயர்.. நந்தா கார்த்திக்கு போன் பண்ணி விவரத்தை சொல்ல கார்த்தி அங்கு இருந்தவர்களிடம் சொல்ல, பிள்ளைகளை விட்டுவிட்டு சிவனாண்டி, தில்லை, வனா, கார்த்தி நாலு பேரும் வந்தார்கள்.
தில்லை வந்தது திகம்பரிக்கு பெரும் ஆறுதலாய் இருந்தது. திகம்பரியை ஆறுதலாய் அணைத்துக்கொண்டு தாயாய் மாறினார் அவர்.
சிவனாண்டி மருத்துவரின் ஆலோசனை கேட்டு இன்னும் ஒரு வாரம் கழித்து தங்களுடைய ஊருக்கு அழைத்து செல்லலாம் என்று சொல்ல
திகம்பரி மறுத்து விட்டாள்.
“அதெல்லாம் வேணாம் அண்ணா.. அப்பா இங்கயே இருக்கட்டும்..” என்றவளின் பேச்சை யாரும் காது குடுத்து கேட்கவில்லை.
நந்தா கூட ஒத்துக்கொண்டான். “இல்ல திகம்பரி நீயும் அமெரிக்கா போய்டுவ.. நானும் வணிகம் வணிகம்னு அது பின்னாடியே ஓடிகிட்டு இருக்கேன்... அப்பாவுக்கு பேச்சு துணைக்கு கூட ஆளு இல்ல.. அதனால அப்பா அங்க போறது தான் சரி...
தில்லை அண்ணி நல்லா பாத்துக்குவாங்க... நீ கவலை படதா.. நானும் வாரத்துக்கு ஒரு முறை போய் பார்த்துக்குறேன்” என்றான்.
“ஐயோ அண்ணா நான் சொல்றது புரியலையா உங்களுக்கு.. உறவே வேணாம்னு வந்த பிறகு போய் ஒட்டிகிறது ஒரு மாதிரி இருக்கு... ப்ளீஸ் அண்ணா..” என்று கெஞ்சியவளை
“உனக்கு விருப்பம் இல்லன்னா நீ இங்கயே இரு திகம்பரி... நான் அப்போவோட அங்க இருந்து ஒரு மாசம் வரையிலும் பார்த்துக்குறேன்... அதன் பிறகு அப்பா அந்த சூழ்நிலையோடு ஒத்து போன பிறகு நான் வணிகத்தை பார்த்துக்கொள்ளுகிறேன்” என்றான் முடிவாய்.
“இப்படி பட்ட சூழலில் நான் எப்படி அமேரிக்கா போக முடியும்... நம்ம வீட்டுல வச்சு நான் நம்ம அப்பாவை பார்த்துக்குறேன் அண்ணா.. ப்ளீஸ் அங்க மட்டும் வேணாம்” என்று கெஞ்சியவளை இரக்கமே இல்லாமல் பார்த்தவன்
“இப்போ இல்லைனாலும் எப்பவாவது போவ தானே... அப்போ அப்பா ரொம்ப தனியா பீல் பண்ணுவாரு... அப்புறம் மறுபடியும் அவரோட உடம்புக்கு ஏதாவது வந்துச்சுன்னா என்ன பண்றது திகம்பரி... அதனால நீ கவலை படாம இப்போவே கிளம்பி போறதுன்னாலும் போ... அப்பாவை நான் பார்த்துக்குறேன்..” என்றான் முடிவாய்.
“எனக்கும் அப்பா மேல பாசம் இருக்கு அண்ணா..” விசும்பலாய்.
“ஹேய் நான் எப்போடா சொன்னேன். உனக்கு அப்பா மேல பாசம் இல்லன்னு..” தன்னோடு அணைத்துக்கொண்டவன்
“இப்போ இருக்க அப்பாவுக்கு உடம்பு நல்லா இருந்தாலும் மனசு கொஞ்சம் சரி இல்லடா... ரொம்ப லோன்லியா பீல் பண்றாரு... அங்க அந்த வீட்டுல இருந்தா தனிமை தெரியாமா யாராவது ஒருவர் அவர் கூட இருந்துகிட்டே இருப்பாங்க... கிராமம் வேறயா இயற்கையான காத்து வரும்.. அவரோட உடம்புல நல்ல மாற்றம் ஏற்படும். அதனால அவரோட மனம் வெகு விரைவா நலமாகும்.. அதுவும் இல்லாம அது உன் நண்பன் வனா வீடு.. என் நண்பன் ராயரோட வீடுன்னு நினை... கண்டதையும் நினைச்சு உன்னை மேலும் குழப்பிக்காம இரு... அப்பாவை கொஞ்சம் புருஞ்சுக்கோடா..” என்ற தமயனை பார்த்தவள் மனமே இல்லாமல் தலை அசைத்தாள்.
அவளின் தயக்கமும் வார்த்தைகளும் இன்னொருவனை கொன்று போட்டது தெரியாமல் ஊருக்கு கிளம்பினாள். தந்தையை தனியே அங்கு விட மனம் இல்லாமல் தானும் ராயரின் வீட்டுக்கு சென்றாள்.
தேவையானவற்றை எடுத்துக்கொண்டு அனைவரும் அடுத்த வாரத்தில் ராயரின் ஊருக்கு வந்து சேர்ந்தார்கள்.
அந்த வீட்டின் வாசலில் காலடி எடுத்து வைக்கும் போதே திகம்பரியின் உடம்பு நடுங்க தொடங்கியது... இவ்வீட்டிற்கு எந்த முறையில் நுழைய வேண்டியவள் இன்று இப்படி பட்ட நிலையில்..
முக்கிய சொந்தம் உடையவள் இன்று யாரோ போல...
நினைக்கவே அவளுக்கு கண்கள் கலங்கியது.. நிமிர்ந்து ராயரை பார்த்தாள். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பின் இப்போது தான் அவனை பார்க்கிறாள். அவள் இருக்கும் திசை பக்கம் கூட அவன் வருவது இல்லை. ரொம்பவே ஒதுங்கி போனான்.
ஊருக்கு வரும் போது கூட தில்லை, ஆண்டி, ராஜ், திகம்பரி, தீஷிதன் ஒரு காரிலும், நந்தா, ரவி, ராய், வனா, கார்த்திக் ஒரு காரிலும் தான் வந்தார்கள்.
அவளை பார்க்கவில்லை என்றாலும் அவளது உணர்வுகளை புரிந்துக்கொண்டவன் எதுவும் செய்ய முடியாமல் அருகில் இருந்த மரத்தை வெறித்து பார்த்தான்.
தில்லை வேகமாய் வந்து ராஜுக்கு ஆராத்தி சுற்ற அவர் ஒத்ததாய் நிற்பதை பார்த்து திகம்பரியை கூட நிற்க சொன்னார். அவள் மகனோடு நிற்பதை பார்த்து மூணு பேர் நிற்க கூடாது.. நாலு பேரா நில்லுங்கன்னு சொல்லி திகம்பரியின் அருகில் ராயரை நிற்க வைத்து நான்கு பேருக்கும் ஆராத்தி சுற்றினார்.
பின் அனைவரும் உள்ளுக்குள் வர, ராஜுக்கு உணவு கொடுத்து தனியாரை ஒதுக்கி அவரை ஓய்வெடுக்க விட்டவர்கள் உணவு உண்ண அமர்ந்தார்கள். தில்லையோடு திகம்பரியும் மதியும் ஆண்களுக்கு பரிமாற சந்தடி இல்லாமல் நகர்ந்தது நேரம்... மாலை நேரம் சிவனாண்டி ராயரை அழைத்து
“உங்க அக்கா உனக்கு ஒரு பெண்ணை பேசி வைத்திருக்கிறாள்.. நாம போய் பார்த்துவிட்டு வரலாமா..” என்று ராயரிடம் கேட்க அவனோ திகம்பரியை பார்க்க கூட இல்லாமல் ‘சரி’ என்றான்.
அவனது சம்மதம் ரீகாவை வால் கொண்டு வெட்ட துடிதுடித்து போனாள். கைகளில் இருந்த பிள்ளை தில்லையின் இடுப்பில் ஜம்பமாய் அமர்ந்திருக்க பற்றிக்கொள்ள கூட எதுவும் இல்லாமல் தவித்து போனாள்.
இது தான் விதி என்பது போல சிவனாண்டியின் முடிவை ஏற்றுக்கொண்டாள் தவிப்பான இதயத்தோடு..
சுற்றி நின்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் இருந்தார்கள். அதில் திகம்பரியின் நிலையும் ராயரின் நிலையும் தான் மோசமாய் இருந்தது..
ராயரின் சம்மதம் கிடைத்த உடன் பொண்ணு பார்க்கும் சடங்குக்கு அவ்வீடு தயாரானது. திகம்பரியையும் அழைக்க அவள் மறுத்து விட்டாள். ஆனால் தில்லை விடவில்லை.
“என்னம்மா நீ சுப காரியத்துக்கு போறோம். இப்போ போய் மாட்டேன்னு சொல்லலாமா அதுவும்.. சுமங்கலியா இருந்துகிட்டு... வா” என்று மேற்கொண்டு அவளை பேசவிடாமல் அவளையும் இழுத்து சென்றார்.
உண்மை தெரிந்த மூன்று இளைஞகர்களுக்கும் ராயரையும் திகம்பரியையும் பார்க்கும் போது பாவமாய் இருந்தது.
இதை எல்லாம் இவர்கள் தாண்டி தான் வந்து ஆகணும் என்று எண்ணினாலும் ராயரு ஏதாவது செய்து இருந்திருக்கலாம் என்று மனம் முரண்டியது.
இவன் ஏன் இப்படி கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கிறான் என்று ஆத்திரம் கூட வந்தது அவர்களுக்கு.
திகம்பரிக்கு மட்டும் நன்கு புரிந்தது.. இவன் தன் வார்த்தைக்கு மதிப்பு குடுக்கிறான் என்று... ஆனாலும் மனசு லேசாய் வலிக்கத்தான் செய்தது.
இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் சிரித்த முகத்துடன் பெண் வீட்டிற்கு வந்தாள்.
“அய்யா ராயரு பொண்ணை பாரு சாமி” என்று அங்கிருந்த பாட்டி ஒருவர் அவனின் தவத்தை கலைக்க
அதில் நிமிர்ந்து பெண்ணை பார்த்தாள். அங்கே அவனது ஒன்று விட்ட அக்காவின் மகள் கவி இருக்க கண்களில் எந்த மின்னலும் இல்லாமல் சாதாரணமாய் அவளை ஏறிட்டு பார்த்து வலுகட்டாயமாய் வரவழைத்த புன்னகை ஒன்றை சிந்தினான்.
ராயரின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த திகம்பரிக்கு ஏமாற்றம் மிஞ்சியது.. பெண்ணை பார்க்க சொன்ன வேளை அவன் ஒரு கணம் தன்னை பார்ப்பான் என்று நினைத்தாள்.. அவனோ கொஞ்சம் கூட அவளை சீந்தவில்லை.
அவனுக்கு திகம்பரி மீது வெறுப்பு இல்லை... இப்போதும் அவனுக்கு அவள் மீது அளவு கடந்த அன்பு இருக்கிறது.. ஆனால் அவன் எல்லாவற்றையும் சரி செய்வான் என்ற நம்பிக்கை அவன் மீது அவள் வைக்கவில்லையே என்ற வருத்தம் தான் அவள் மீது...
அதோடு அவள் வாங்கிய சத்தியம் அவனை கட்டிபோட்டது... பெரியவர்களின் எந்த செயலையும் அவன் மறுக்கவில்லை.. அவர்கள் தலை குனியும் படி அவன் அந்த சபையில் திகம்பரியை அவன் ஏறெடுத்து பார்க்காமல் கண்ணியம் காத்தான் அவளை கண்களில் கபாளீகரம் செய்ய விளைந்த மனதை அடக்கி.
கவி அவனை பார்த்து மென்மையாய் சிரித்தாள்.. அதில் திகம்பரியின் நெஞ்சு நொறுங்கி போனது..
“இது எல்லாம் ஒரு சம்ரதாயத்துக்கு தான் மா.. நீ எப்போதும் எங்க வீட்டு பிள்ளை தான்... ரெண்டு பேரும் ஒரே இடத்துல வேலை பார்க்குறீங்க... ரெண்டு பேருக்கும் நல்லாவே ஒத்து போகும்.. அது தான் நாங்க பெரியவங்களா இந்த முடிவு எடுத்தோம்.. இதுல உங்களுக்கு சம்மதம்னா மேற்கொண்டு பேசலாம்.. இல்ல பிடிக்கலன்னா இப்படியே விட்டுடலாம்..” என்று தில்லை முடிக்கும் முன்னவே
கவி “எனக்கு பிடிச்சுருக்கு” என்று கன்னம் சிவக்க சொல்ல அங்கே கொள் என்று சிரிப்பலை எழுந்தது.
“பொண்ணே வெட்கம் விட்டு சொல்லிட்டா மாப்பிள்ளை நீங்க என்ன சொல்றீங்க” என்று கவியின் தகப்பனார் கேட்க
“கவிக்கு சம்மதம்னா எனக்கும் சம்மதம்..” என்று சின்ன சிரிப்போடு சொல்ல தில்லையின் மனம் நிறைந்து போனது...
அப்பாடி என் தம்பிக்கு விரைவா நல்லது நடக்க போகுது என்று ஆசுவாசம் ஆனார்..
பேச்சு வார்த்தை மேற்கொண்டு செல்ல, வரும் முதல் முகுர்த்தத்தில் நிச்சயமும் அதற்க்கு அடுத்த முகுர்த்தத்தில் திருமணமும் செய்ய முடிவெடுத்த போது அங்கு சத்தமில்லாமல் ஒரு இதயம் வெடித்து சிதறியது...
அத்தியாயம் 35
கார்த்திக்கு கோவம் கோவமாய் வந்தது... ஒரு நாளுக்கு முன்னாடி ராயர் எப்படி எல்லாம் துள்ளினான். ஆனால் இப்போ கிணத்தில் போட்ட கல்லு போல இருந்தவனை கண்டு ஆவேசம் வந்தது..
அன்று இரத்த வெள்ளத்தில் மிதந்து மருத்துவமனையில் போராடியவள் நிலை இன்னும் கண்முன் நிழலாடியது. யாரும் துணைக்கு இல்லாமல் பெண் துணை தேவை பட்ட நேரத்தில் யாரும் இல்லாமல் தனித்து நின்று அச்சூழ்நிலையை கையாண்டவளை வேதனையுடன் பார்த்து தன்னால் உதவி செய்ய கூடிய உதவியை மட்டும் செய்து அவள் படும் வேதனையை கை கட்டி நின்று வேடிக்கை பார்க்கும் நிலைமையில் இருந்த தன்னையும் சேர்த்தே அவன் அப்போது வெறுத்தான்..
அப்போது கூட அவனை வெறுக்காத திகம்பரியின் அன்பை எப்படி இந்த ராயரால் உதறி தள்ள முடிந்தது.. அவனது சட்டையை பிடித்து அவ்விடத்திலே கேள்வி கேட்க வேண்டும் என்ற எண்ணத்தை வெகுவாய் அடக்க சிரமப்பட்டான்.
ரவிக்கு கூட ராயரின் இந்த செயல் வருத்தத்தை கொடுத்தது... ஆனால் நந்தா மட்டும் ராயருக்கு பக்க பலமாய் துணை இருந்தான்.
ராயரின் காதலை அவன் மட்டுமே அருகில் இருந்து பார்த்தத்தால் வந்த நம்பிக்கை அது...
திகம்பரியே விட்டுட்டு போனாலும் ராயர் அவளை விட மாட்டான்.. எப்படியாவது போராடி திகம்பரியை அவனிடம் கண்டிப்பா வரவைத்துக் கொள்ளுவான் என்பதில் நந்தாவுக்கு .கடுகு திணை அளவு கூட சந்தேகம் இல்லை...
நந்தாவுக்கு கோவம் எல்லாம் குழந்தை உண்டான பிறகு தாலி கட்ட மறுத்ததால் மட்டுமே... அதுவும் அவன் மாட்டேன் என்று சொல்லவில்லை... கால அவகாசம் மட்டுமே கேட்டான். அப்போது கூட திகம்பரியை விட்டு அவன் விலக வில்லை. அவளோடு தான் இருந்தான்.
ஆனால் திகம்பரி தான் பிரிந்து போகும் முடிவை எடுத்து இருக்கிறாள். மறுபடியும் கரு உருவானதை அவனிடம் சொல்லவும் இல்லை. அதை மூன்று வருடமாக மறைத்து வைத்திருக்கிறாள். ஒன்று அப்படியே இருந்திருக்க வேண்டும்.. வீணே அவனை பார்க்க வேண்டும் என்று ராயரை தேடிவந்தவள் அவன் மீது மறுபடியும் காதல் கொண்டு பின் தில்லையின் பேச்சால் பிரிவு நிலையை தேர்ந்தெடுத்தது எல்லாமே அவள் மட்டும் தான்.
ராயருக்கு முன்பிருந்த கோவம் இப்போது இல்லை... குழந்தையை பற்றி தெரியும் முன்னவே அவளை முழு மனதாக ஏற்றுக்கொண்டவன். அதை அறிந்து அவனுக்கு வலிக்க வலிக்க பிரிவை கொடுத்து விலகி சென்றவள் திகம்பரி தான்.
அப்போதும் விடாமல் துரத்தி சென்று காதலியை கை பிடிக்க நினைத்தவன் அவன். இப்போது குழந்தையும் இருக்கு என்று தெரிந்த பின் ராய் சும்மா இருப்பானா...
எவ்வளவு அவமானம் வந்தாலும் திகம்பரியையும் தன் குழந்தையையும் அவன் அவ்வளவு சுலபமாய் விட்டுவிடுவானா என்ன...
பக்காவாய் பிளான் பண்ணி அமெரிக்கா செல்ல இருந்தவளை தன்னுடைய வீட்டில் சிறைவைத்து விட்டு கெத்தாய் கவி வீட்டில் கவியிடம் கண்களில் ரகசியம் பேசி சிரித்துக்கொண்டிருந்தான் திகம்பரியின் காதல் தீவிரவாதி...
இது எதுவும் தெரியாமல் அறியா பிள்ளை போல திகம்பரி அழுது கொண்டிருந்தாள். கூட துணைக்கு மச்சினன் இருக்க அவன் சுலபமாய் மலை ஏறி வெற்றிக்கொடி நாட்ட தயாராய் இருந்தான்.
திகம்பரி பேசும்போதே அந்த அறையில் இருந்த ஒருவருக்கும் கூட தெரியாமல் ரகசியமாய் ராஜுவுக்கு கால் பண்ணிவிட்டான் ராய்... அவள் பேசிவிட்டு அறையை விட்டு வெளியேறிய உடனே ராஜுவுக்கு மொபைலில் தகவலை எழுத்து மூலம் இந்த மாதிரி நடிங்க” என்று சொல்ல அவரும் ராயரின் பேச்சுக்கு உடனடியாய் செவி சாய்த்து மருத்துவமனையில் சேர்ந்துவிட்டார்.
இவ்வளவு ஏற்பாடும் நின்ற இடத்தில் செய்துவிட்டு ரவியின் முன் எதுவும் தெரியாதவன் போல நின்றுகொண்டான். அவனது பீப்பீயை ஏற்றும் நோக்கோடு...
ஆனால் ரவி கேட்ட கேள்வி ராயரை அறுக்க அதுக்கு தன்னுல் மட்டுமே விடை இருக்கு... அதுவும் திகம்பரியே அவனை புருஞ்சுகிட்டு அவனிடம் வந்து கேட்கணும்.. அப்போது தான் அவளது இழப்புகளுக்கான காரணம் சரியான முறையில் வெளிப்படும்.. என்று பெருமூச்சு விட்டுக்கொண்டவன் வெளியே எதையும் காட்டிக்கொள்ளவில்லை.
ராயாரா கொக்கா... நின்ற இடத்தில் சிக்செர் அடித்து தூக்கிவிட்டு சலனமின்றி இருந்துகொண்டு கார்த்தியை ஆழமாய் நோட்டம் விட்டான்.
அங்கு உடைந்து சிதறி போன மனம் திகம்பரி என்று நீங்கள் நினைத்திருந்தால் சோரி.... அது கார்த்தியின் பிஞ்சு இதயம் தான்...
ஐயோ பாவம்....
ஒரு பக்கமாய் காதலித்து இங்கிருந்து போகும் முன் கவியையும் தன்னுடன் அழைத்து செல்ல வேண்டும் என்று எண்ணியவனின் எண்ணத்தில் மண்ணள்ளி போட்டான் ராயர்... ஆனால் அதை விட காதலித்த பெண்ணே அதில் செடியையும் நட்டுவிட்டு செல்வாள் என்று அவன் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை..
அதுவும் சம்மதம் கேட்கும் முன்பே ராயரின் தகவலின் படி கவி வெக்கமாய் சம்மதம் என்று சொன்னாள். சிவனாண்டி ராயரை அழைத்து வந்தது அதும் கவியின் வீட்டுக்கு என்றவுடன் போனிலே தகவலை சொல்லி அவளையும் அவனுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டான்.
தன் மாமனுக்காக அவள் செய்ய மாட்டாளா என்ன, முழு மனதோடு அவனுக்கு சம்மதித்தாள்.
எல்லா இடங்களிலும் வெற்றிக்கொடி நாட்டியவன் அப்போதும் திகம்பரியை நோக்க வில்லை.
அவனது கோவம் அவளை தன்னிடம் கொண்டு வந்து சேர்க்கும் என்று நம்பினான். அதுவும் தன் மகனுக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்று அவள் சொன்ன வாயாலே இது உன் குழந்தை தாண்டா பிடி என்று அவளே அவனிடம் குடுக்க வேண்டும் என்று பேராசை கொண்டான்.
அதுவரை அவளை விட்டும் குழந்தையை விட்டும் விலகி இருப்பது என்று சிரமம் தான் என்றாலும் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு திகம்பரியின் மன மாற்றத்திற்காக காத்திருந்தான் அந்த காதலன்.
“குழந்தையையும் சரி உன்னையும் சரி இந்தா பிடிடான்னு.. நீயே என் கைல குடுக்கனும்டி அதுக்காக தான் காத்துகிட்டு இருக்கேன்” என்று வைராக்கியமாய் இருந்தான். ‘உன் கண்ணு முன்னாடியே நான் இன்னொருத்திக்கு சொந்தம் ஆகுறதை உன்னால பார்க்க முடியுமா.. நீ உன் கூட்டை விட்டு உடைச்சிக்கிட்டு வெளிய வரணும் அதுக்காக தான்டி இந்த ஏற்பாடு’
அதை செயல் படுத்துவதற்காக தான் சிவனாண்டியின் பெண்பார்க்கும் வைபவத்தை ஏற்றுக்கொண்டான். நான் அடிக்கிற அடில நீ என்னை மட்டும் தான் நினைக்கணும் திகம்பரி... உனக்கு நல்லாவே தெரியும் நான் எவ்வளவு சுய நல காரன் என்று.. அதுவும் உன் விசயத்தில் நான் ரொம்ப மோசம்..
“அது எனக்காவே என்றாலும் கூட நீ என்னை விட்டு பிரிந்து செல்வதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது.. உன் எண்ணத்தில் நான் மட்டும் தான் நிறைந்து இருக்கணும்.. அதுவும் நல்ல முறையில் மட்டுமே... அதற்காக தான் உன்னை அந்த பார்வை பார்த்து என்னை விளக்கி வைக்க முனைந்தேன்...
ஆனால் அதுவே உன்னை நிரந்தரமாய் என்னிடமிருந்து பிரித்து வைக்கும் என்று தெரியாமல் செய்துவிட்டேன். அதை கூட சரி செய்ய முயன்றேன்... ஆனால் காலம்” என்று எதையோ எண்ணியவன் அப்படியே அதை அடக்கிவிட்டு அங்கு நடக்கும் கூத்தை பார்த்துக்கொண்டிருந்தான்.
திகம்பரியால் தன் கண் முன் நடக்கும் நிகழ்வை காண முடியவில்லை.. மூச்சு முட்டுவது போல இருந்தது... ஆனாலும் அடக்கிக்கொண்டாள். எங்கே அங்கிருந்து சென்றாள் ராயரிடம் தான் தோற்று போனது போல ஆகிவிடோமோ என்று பயந்து அங்கேயே இருந்தாள்.
அவளது போராட்டத்தை உணர்ந்தவனாய் சட்டென்று அங்கிருந்து எழுந்தான்.
“என்ன” என்று எல்லோரும் கேள்வியாய் பார்க்க அப்போது தான் தன் நிலை உணர்ந்தவன் “போன்” என்று சொல்லிக்கொண்டு வெளியே வந்து நின்றான்.
கார்த்தியும் பின்னோடு வந்து அவனை காய்ச்ச தொடங்க அவனை ஆழ்ந்து பார்த்தவன் பதிலேதும் சொல்லாமல் கல் போல நின்றான்.
“ராய் உன்கிட்ட தான் கேட்டுகிட்டு இருக்கேன்.. பதில் சொல்லு..” என்று அவனின் சட்டை காலரை பிடிக்காத குறையாய் கேட்டவனை கண்டு
“இது உன் தோழிக்கான போராட்டமா.. இல்லை உன் காதலுக்கான போராட்டமா” என்று அலுங்காமல் அவன் தலையில் குண்டை போட்டன் ராயர்.
“என்னடா சொல்ற..” அதிர்ந்து அவனை பார்த்தான் கார்த்திக்..
“நீ இங்க வந்து மூணு நாள் தான் ஆச்சு அதுக்குள்ள என் அக்கா வீட்டு தெருவுக்குல்ல நூறு முறை போயிட்டு வந்துட்ட...” என்று சொன்னவனை கண்டு திகைத்தவன்
“அதான் தெருஞ்சுடுச்சுள்ள பிறகு என்ன.. ஒதுங்கிக்கோ ராய்... நான் நந்தா மாதிரி கிடையாது... இது காதலுக்கான போராட்டம் கிடையாது.. திகம்பரியின் வலியை உடன் இருந்து கண் கூடாக பார்த்து வந்த உண்மையான நட்புக்கு உண்டான ஆவேசம்..” என்றவனை தோளோடு அனைத்து
“எனக்கு தெரியும் டா... கவி உனக்கு தான்.. எனக்கு என் திகம்பரி இருக்காடா...” என்று சந்தோசமாய் சொன்னவன்.
அவனை இன்னும் இறுக்கி அனைத்து “திகம்பரிக்கு நான் கூட இருந்து செய்ய வேண்டிய சேவையை நீ செஞ்சுருக்கடா... அதுக்கே உனக்கு நான் என்ன கை மாறு செய்ய போறேன்னு தெரியல... ஆனா நீ இன்னும் இன்னும் அவளுக்கு ரொம்ப ரொம்ப ஆறுதலா பிவேர் பண்ணிக்கிட்டு இருக்க.. தேங்க்ஸ் டா... மச்சான். ம்ஹும் கவிய கட்டுனா நீ என் தம்பி ஆய்டுவ.... சோ நீ என் இன்னொரு வனாடா...” என்று நெகிழ்ந்து அவனை கட்டிக்கொண்டான் ராய்.
ராயின் இந்த மாற்றம் கார்த்தியை திகைக்க வைத்தது..
“டேய் நீ நல்லவனா கெட்டவனாடா...” கேட்டவனை பார்த்து குறும்பு புன்னகை புரிந்தவன்
“உங்க எல்லோருக்கும் கெட்டவன்...” என்று சொன்னவன் அவனை பார்த்து விஷமமாய் கண்ணடித்தவன் “திகம்பரிக்கு ரொம்ப ரொம்ப கெட்டவன்” சொல்ல
அதை கேட்டு அவனுக்கும் புன்னகை வந்தது.. “டேய் நீ எந்த மாதிரி அர்த்தத்துல சொல்ற...”
“தம்பி நீ எந்த அர்த்தத்துல எடுத்துக்குறியோ அந்த அர்த்தத்துல தான்..” என்றவனிடம் விஷமம் கொட்டி கிடந்தது...
“உன்னை ஏன் திகம்பரியால வெறுக்க முடியலன்னு இப்போ காரணம் புரியுதுடா...” என்றவனின் பேச்சில் சட்டென்று உடைந்தவன் “ஆனா நான் வேணும்னு அவ நினைக்கலையேடா..” வார்த்தையில் அவ்வளவு வேதனை.. வார்த்தையிலே இவ்வளவு வேதனை கொண்டவன் மனதில் எவ்வளவு வேதனைப்படுவான் என்று உணர்ந்த கார்த்திக்கு ராயரின் வலி புரிய தன்னோடு அனைத்து
“திகம்பரி உன்னிடம் திரும்பி வருவதற்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை கண்டிப்பா செய்வேன்..” என்று உறுதி கொடுத்தவனின் அன்பில் நெகிழ்ந்தான்.
‘சப்பா.. முக்கியமான ரெண்டு பீசை மடக்கியாச்சு... இனி ரவியை கணக்கு பண்ணனுமே.. அவன் இது தான் சாக்குன்னு ஓவரா துள்ளுவானே... சமாளிடா ராயரு... உன்னால முடியும்.. இப்படி சின்ன சின்ன விக்கெட்ட வீழ்த்தி தான் திமிங்கலத்தை பிடிக்க முடியும்.. திகம்பரி நீ இனி திகம்பரி இல்லடி... திமிங்கலம்...’ என்று ராயரின் மனம் அவளை கலாய்த்துக்கொண்டிருந்தது..
எப்படியாப்பட்ட நிலையில இருந்து மீண்டு வந்திருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் சாதித்த நிகழ்விலிருந்து குசியாகிக்கொண்டான் தன்னை.
திகம்பரிக்கு இனி வேறு வழியே இல்லை.. எல்லா கதவுகளையும் அடைத்து விட்டான். இனி நெருப்பை மூட்டி அவளை தன்னிடம் வர வைப்பது மட்டும் தான் பாக்கி..
“நான் எல்லாத்தையும் சரி பண்ணுவேண்டி... உனக்கு என்ன நான் அவமான பட கூடாது அதானே... கண்டிப்பா உன் புருஷன் யார்கிட்டயும் அவமான பட மாட்டான்... ராயரா இருந்த வரை அது பத்தி கவலை இல்லை..
ஆனா இப்போ இருக்கிறது உன்னோட அதாவது என் ரீகாவோட ராயரு... அவனை எந்த சூழ்நிலையிலும் தலை குனிய விடமாட்டாண்டி இந்த ராயரு... யாருக்கும் நீ பதில் சொல்லனும்னு அவசியமும் இல்லை.. நானும் தான்.
உன்னை விட நான் அதிகம் காதலிக்கிறேன்னு உனக்கு தெரிய வரும்போது என்னடி பண்ணுவ... உன் மார்புல என்னை சற்று நேரம் புதைத்து வச்சுக்கோடி... ரொம்ப நாள் ஆச்சு உன்னோடு தூங்கி.. என் தூக்கத்தை மூணு வருசமா களவாடி உன்னோடே எடுத்து போய்ட்ட.. அதுக்கெல்லாம் சேர்த்து வச்சு ஒரு மாசம் தூங்கனும்.. அதும் உன் நெஞ்சில்.. உன் இதய துடிப்பை கேட்ட படியே... அந்த நாளுக்காக் காத்திருக்கிறேன்..
‘அப்பவும் வந்து உன் பார்வையை நான் இன்னும் மறக்கலன்னு சொன்னேன்னு வை... காண்டாய்டுவேன் பார்த்துக்க... ப்ளீஸ்டி... ஒரு மாசம் கழிச்சு அதை நினைவு வச்சுக்கோயேன்’ என்று சிறுபிள்ளையாக அவள் எதிரில் இருப்பது போல கெஞ்சினான் என்றால்... காதலோடு அவளது செயலுக்காக இப்போதே கனவுடன் காத்திருக்க தொடங்கினான் ராயர்...
“அடுத்து என்னடா செய்ய போற...” நந்தா கேட்க, அதே பாவனையை தாங்கி ராஜும் கார்த்தியும் அவ்வறையில் ராயரை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
“எனக்கும் புரியலடா..” என்றவனை கொலை வெறியுடன் பார்த்தார்கள் மூவரும்.
“ஹிஹிஹி... சும்மா... கவியை வீட்டுக்கு வர சொல்லி இருக்கிறேன்.” என்ற போதே ஒருவனுக்கு வாட்டர் பால்ஸ் ஆரம்பிக்க
நந்தாவும் ராயரும் அவனை முறைத்தார்கள்.. கார்த்திக் அதில் அசடு வழிய
“ப்ளீஸ்டா ராய் எனக்கு அவளை அறிமுக படுத்தி வைடா...” கெஞ்ச துவங்க நந்தா தலையிலே அடித்துக்கொண்டான்.
“ஏண்டா நான் இங்க என்ன பிரச்சனையில இருக்கேன்.. உனக்கு இப்போ கவி ரொம்ப முக்கியம்மா”
“டேய் அதை நீ பேசாத... நீ தான் எல்லாம் அனுபவிச்சு உனக்கு தான் ரெண்டு வயசுல பையன் வேற இருக்கான்ல.. ஆனா நான் அப்படியாடா.. இன்னும் ப்ரப்போஸ் கூட பண்ணலடா.. உன்னோட கம்பேர் பண்ணும் போது நான் இன்னும் ஜூனியர் லெவெல்ல தான் இருக்கேன்.. சோ கண்சிடர் மை அப்ளிக்கேசன்..” கெஞ்சினான்.
“அட சீ கெஞ்சி தொலையாத பண்ணி தொலைக்கிறேன்... ஆனா ஒன்னு”
“என்னடா..”
“இவ திகம்பரி மாதிரி கிடையாது... கராத்தேல கருப்பு வார் வாங்கினவ.. பார்த்துக்க” என்று எச்சரித்தான் ராயர்.
“அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம்” என்றன் கெத்தாய்.
அன்று மாலை பொழுதில் கவி வீட்டுக்கு வந்து ராயரின் அருகில் அமர... பக்கத்தில் இருந்த திகம்பரிக்கு கை பொருள் களவு போனதை போல உணர்ந்தாள்.
அதுவும் இல்லாமல் அவளோடு அவன் தனியறைக்கு செல்ல, முற்றும் முழுதாய் உடைந்தாள் திகம்பரி...
அத்தியாயம் 36
உள்ளே நுழைந்த கவியிடம் வரும் நாட்களில் செய்ய வேண்டிய வேலை மற்றும் எடுத்து நடத்த வேண்டிய வழக்கு பற்றிய விவரங்களை விவாதித்துக்கொண்டிருந்தன் ராயர்.
“உள்ளே போன நாதன் சும்மா இருக்க மாட்டன் கவி ஏதாவது செய்வான் அவன் முந்திக்கிறதுக்குள்ள நாம ஏதாவது செய்யணும்..” என்றவனை பார்த்து
“என்ன மாமா செய்றது... அவன் தான் ஏற்க்கனவே உள்ளே இருக்கனே...”
“அவன் செய்ய முடியாட்டி என்ன அவனை வெளியே எடுக்க துடிக்கிற அவனோட மச்சினனை செய்வோம்..”
“மேலும் மேலும் பிரச்சனையை வளர்த்துகிட்டே போற மாதிரி இருக்கு மாமா..” என்றாள் தயக்கமாக..
“வேற வழி இல்ல கவி அவனோட டார்கெட் நாமாலா இருந்தா ஒன்னும் பிரச்சனையை இல்லை. அதே நம்ம குடும்பமா இருந்தா சேதாரம் அதிகம் நமக்கு தான். அதானால அவனுங்களை கவனிக்க விட்ட குழுவிடமிருந்து எந்த தகவல் வந்தாலும் உடனே எனக்கு தெரிய படுத்து..
அவனுங்க மூவ் எந்த அளவுல இருக்குன்னு நாம தெருஞ்சுகிட்ட தான் நம்முடைய அடியை சரியா எடுத்து வைக்க முடியும்.. நாளைக்கு கோர்ட்ல எல்லா எவிடன்சையும் சமிட் பண்ணனும் கூடவே எதிர் தரப்பு வக்கீல் எதுவும் பேச முடியாத படி ஏற்பாட்டை செய்து விடு..
ஈசனையும் கவனமா இருக்க சொல்லு... இப்போ சிறைக்கு போனதுல சில தகவல்களும் கிடைச்சு இருக்கு... இந்தா அதுக்குண்டான விவரம்..” என்று சில காணொளி தகடுகளை அவளிடம் கொடுத்தவன் அவளிடம் ஒரு துப்பாக்கியை கொடுத்தான். நீயும் கவனமா இரு.. கார்த்தியை துணைக்கு அனுப்பவா” என்று கேட்டான் ராயர்.
“அது யாரு மாமா.. பாடி காடா”
“ம்ம் ஆமா உனக்கு மட்டும்” என்றவன் மேலும் சில விவரங்களை பேசினான்.
வெளியே திகம்பரி தன் மகனுக்கு சோறு ஊட்டியபடி மூடிய கதவை அவ்வப்போது நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள் என்றால் கார்த்திக் பிரசவ வார்டில் மனைவியை உள்ளே அனுப்பி விட்டு தவியாய் தவித்து போகும் கணவனின் நிலையில் இருந்தான்.
“அடேய் கவி கிட்ட என்னை அறிமுகப்படுத்தி விட்டு எங்க ரெண்டு பேத்தையும் தனி அறைக்குள்ள அனுப்புவன்னு பார்த்தா இப்படி பண்றியேடா நீ” என்று வயிறு பற்றி எரிய வெளியே உர்ரென்று மூஞ்சியை வைத்துக்கொண்டு இருந்தான்.
அவனது முகத்தை பார்த்து நந்தா கேலியாய் சிரித்தான்.
“டேய் வேணாம் இந்த மாதிரி நிலை உனக்கு வந்தா தான் தெரியும்.. மரியாதையா சிரிக்காம இரு...” என்றவனின் பொங்கலை கண்டு வாய் விட்டே சிரித்தான் நந்தா..
“டேய் வேணாம்” கொலை வெறியுடன் அவனது கழுத்தை நெருக்க வர அவனது கைகளை அசால்டாய் தட்டி விட்டவன்
“விடுடா இதெல்லாம் பெரிய விசயமா.. என் மச்சினன் திகம்பரி கிட்ட தான் மோசமா நடந்துக்குவான்.. உன் பொண்டாட்டிகிட்ட இல்ல” என்றான் ரகசியமாய்.
அவனது பொண்டாட்டி என்ற சொல்லில் கண்கள் மின்ன பார்த்தவனை கண்டு நந்தா தலையில் அடித்துக்கொண்டான்..
“ஆமா என் பொண்டாட்டி” என்று வழிந்தான் கார்த்திக்.
“ம்ஹும் எல்லாம் முத்தி போய் அலையுதுங்க..” என்றவனின் பார்வை திகம்பரியிடம் இருந்தது.. அவளது தவிப்பை கண்டு மனம் பாகாய் உருகியது...
“இவ்வளவு அவஸ்த்தை தேவையாடா... பட்டு” என்று அவளிடம் மென்மையாய் கேட்டான்.
அவனது பேச்சில் தன்னை நிலை படுத்திக்கொண்டவள் “அதெல்லாம் ஒன்னும் இல்லை அண்ணா..” என்று தலை கவிழ்ந்து வழிய துடித்த கண்ணீரை அடக்கிக்கொண்டு மகனோடு தன் அறைக்கு சென்றுவிட்டாள்.
அவளது இந்த உறுதி எப்போ கலையுமோ என்று தவித்து போனான் ஒரு அண்ணனாய்.
கவியிடம் பேசிவிட்டு வெளியே வந்து கூடத்தில் இருந்த நந்தாவை கண்டு என்ன ஆச்சு என்று கேட்க அவன் உதட்டை பிதுக்கி இல்லை என்று காட்ட ராயர் சோர்ந்து தான் போனான்.
ஆனால் இதுக்கெல்லாம் அவள் அவ்வளவு விரைவா தன்னை மாத்தீக்கொள்வாள் என்று தெரிந்தது தான்.. ஆனாலும் மனம் எதிர் பார்கிறதே..
கவியிடம் கார்த்தியை அறிமுக படுத்தி வைத்தவன் “பார்த்துக்கோ” என்று குறிப்பும் இருந்தது அதில்..
அதை பாதி புரிந்தும் புரியாமலும் தலை ஆட்டியவனிடம் “போலாமா பாடிகாட்” என்று கவி அவனை அழைக்க
“என்னது பாடிக்காடா” அதிர்ந்து போய் ராயரை பார்த்து முறைக்க நந்தனும் ராயரும் கமுக்கமாய் சிரித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் பாராமல் அனுமானத்துடன் கை நீட்டி அடித்துக்கொண்டார்கள் கார்த்தியை வெறி ஏற்றும் வகையில்.
அதை கண்டவன் முன்பிருந்த கோவம் பல மடங்கு உயர அவர்களை அடிக்க வர
கவியோ “நேரமாகுது பாடிகாட்.. போகணும்.. ஆமா உங்களுக்கு கார் ஓட்ட தெரியுமா” என்று அவனை மேலும் கேள்வி கேட்க
இப்போதைக்கு கவி தான் முக்கியம் என்று எண்ணியவன்..அவர்களிடம் திரும்பி “இருங்கடா உங்களை வந்து கவனிச்சுக்குறேன்” வாயசைத்து அவர்களை எச்சரித்து விட்டு தன் காதலிக்கு ஓட்டுனராக சென்றான்.
பாதி வழியில் கவிக்கு அவளது போனில் தகவல் வந்தது..
“கார்த்திக் நீ நினைப்பது போல படி காட் இல்ல... நமக்கு உதவிக்கு வந்திருக்கிறான்.. கொஞ்சம் மரியாதையா நடத்து கவி” என்று ராயார் அனுப்பி இருந்தான்.
ஆனால் கவிக்கு ஏனோ அவனை சீண்டி பார்க்கணும் போல இருந்தது..
“ஏங்க பாடி காட்.. எனக்கு ஒரு சந்தேகம். பாடிகாட் ஆக என்ன படிப்பு படிக்கனும்.. அதுல எவ்வளவு மார்க் வாங்கணும்” என்று கேட்க
அதில் திரும்பி அவளை முறைத்தவன் பதில் எதுவும் பேசவில்லை.
“பாடி காட் உங்க கிட்ட தான்” என்று அவனை வாக்கியத்துக்கு ஒருமுறை பாடிகாட் என்று அழைக்க காண்டானான்..
“ஏய் யாருடி பாடிகாட்.. தொலைச்சுடுவேன் உன்னை” என்று காரை நிறுத்திவிட்டு அவளை மிரட்ட
“அப்போ நீங்க யாருங்க ஆபிசர்.. இந்த ஜில்லா கலேக்டரா...” என்று நக்கல் பண்ணியவளை கண்டு சினம் பொங்கியது..
“ஏய் வேணாம் கடுப்பாகுது”
“தோடா... கார் ஓட்டுற பாடி காடுக்கு வர்ற கோவத்தை பாரு” என்று மேலும் அவனை சீண்டி விட
“உன்னை எல்லாம்..” என்று அவளை முத்தமிடுவது போல நெருங்கியவனின் வேகத்தில் மிரண்டவள்
“ஐயோ என்ன செய்ய போற” என்று பயந்து சீட்டோடு ஒன்றி தன்னை அவனிடமிருந்து காத்துக்கொள்ளுவது போல ஒட்டிக்கொள்ள அதை கொஞ்சமும் சட்டை செயாமல் அவளை இன்னும் நெருங்கியவன் முதுகின் பின் கை விட்டு ஒத்தையா இருந்த ரோசை எடுத்து அவள் முன் நீட்டி
“இங்க பாரு நான் உன்னை காதலிக்கிறேன்... அதும் மூணு மாசமா... என்ன முழிக்குற நீ சென்னைல ஒரு கேசு வாதாடா வந்தல்ல அப்பவே உன்னை பார்த்து நீ தான் என் பொண்டாட்டின்னு பிக்ஸ் பண்ணிட்டேன்.. விசாரிச்சப்ப தான் நீ ராயரோட அக்கா பொண்ணுன்னு தெரிய வந்தது..”
அதனால தான் வீணா போன உன் ஊருக்கு தொழில் தொடங்கும் சாக்கை வச்சு உன்னை லவட்டிகிட்டு போகலாம்னு வந்தேன்.. ஆனா பாரு எனக்கு முன்னாடி உன் மாமன் முந்திக்கிட்டான். பிறகு அவனே எல்லா விசயத்தையும் சொல்லிட்டான். நீ சும்மா நடிக்கத்தான் ஒத்துகிட்டு இருக்கன்னு... அதனால என்னை ஏத்துக்கோ என் காதலை ஏத்துக்கோ..
வாழ்நாள் பூரா உனக்கு அடிமையா இருக்கேன்.. மூணு நேரம் சுட சுட ஆக்கி போடுறேன்.. உன் துணிமணி எல்லாம் ஒரு சுருக்கம் இல்லாம துவச்சி போடுறேன்.. கை கால் அழுத்தி விடுறேன்.. எல்லா சேவையும் செய்றேன்.. ஆனா நீ என்னை இந்த பாடிகாட்னு மட்டும் கூப்பிடாதா... கேக்கவே நாராசமா இருக்கு” என்று கெஞ்சியவனை பார்த்து கவிக்கு சிரிப்பு தான் வந்தது..
அவள் என்னவோ ஏதோ வென்று பயப்பட இவன் டம்மி பீசாய் ப்ரப்போஸ் பண்ண ஏனோ அந்த நிமிடம் அவளுக்கு அவனை பிடித்து விட்டது.. ஆனால் எதையும் வெளிகாட்டிக்கொல்லாமல்
“முடியாது” என்று மறுத்துவிட்டாள்.
“ஏன்”
“உங்களை பிடிக்கல”
“ஏண்டி இப்போ தானே பார்த்தா அதுக்குள்ள முடிவு பண்ற.. நாம வேணா கொஞ்ச நாள் பழகி பார்க்கலாமே.. பிறகு பிடிக்கலன்னு முடுவு எடேன்” என்றவனை பார்த்து உருகினாலும் வெளியே
“அதுக்கு எனக்கு நேரம் இல்லை” என்றாள் கெத்தாய்..
“நாமா உருவாக்கிக்கொள்ளலாம் கவி.. இதோ இப்படி உனக்கு கார் ஓட்டும் போது பேசிகிட்டே வா... உன்னை பத்தி நன் தெருஞ்சுக்கிறேன்.. என்னை பத்தி நீ தெருஞ்சுக்கோ” அவசரமாய் சொன்னவனின் வேகத்தில் இருந்த காதலை கண்டவள் ராயரிடம் முதலில் பேச வேண்டும் எண்ணிக்கொண்டு அவனுக்கு ஒப்புதலாய் தலை அசைத்தாள்.
“ஆனா எனக்கு பிடிக்கலன்னா நீங்க ஒதுங்கிக்கணும் ஓகே வா” என்று கூரியவளை கண்டு புஸ் என்று காற்று போன பலூன் போல அவனது முகம் போக கவிக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது.. ஆனாலும் அடக்கிகொண்டாள்.
இவனிடம் லேசாய் சிரித்து பேசினாலும் தன்னை மடக்கி விடுவான் என்று அறிந்துக்கொண்டாள். எனவே கார்த்தியிடம் எச்சரிக்கையுடன் இருக்க முடிவெடுத்துக்கொண்டாள் கவி.
தில்லை நிச்சயத்துக்கு புடவை எடுக்கலாமா என்று வீட்டினரை படுத்தி எடுக்க சிவனாண்டி இன்னும் இரு பொழுது போகட்டும் பொறவு பார்த்துக்கலாம் என்று சொல்ல தில்லை
“ஏங்க”
“ஒன்னும் இல்ல.. விதை பணம் வர வேண்டியது இருக்கு.. அதை வாங்கிட்டு பிறகு போகலாம்னு சொன்னேன்” என்றார்.
ராயருக்கு வீட்டில் இருந்த பொழுதுகள் நரகமாய் சென்றது... மகனின் குரல் காதில் தேனாய் வந்து விழுந்தது.. ஆனால் அவனை நெஞ்சில் போட்டு கொஞ்ச தான் முடியவில்லை.. தோட்டத்தில் ரவி, திகம்பரி, மதி, வனா, திஷி எல்லோரும் விளையாடிக்கொண்டு இருக்க அதை காண்டுடன் பார்த்துக்கொண்டிருந்தான் ராயர்..
திகம்பரியின் பார்வையும், கவனமும் முழுவதும் தன் மீது மட்டுமே இருக்க வேண்டும் என்று எண்ணுபவன் அவன்.. அப்படி இருக்கையில் இவனை அதுவும் ஒதுக்கி வைத்து விட்டு அவள் மட்டும் கும்மாளம் அடித்துக்கொண்டிருக்க அதை பார்த்துக்கொண்டு ராயர் சும்மா இருக்கலாமா... அவனால் சும்மா தான் இருக்க முடியுமா..
“முடியவே முடியாது” என்று சினந்து எழுந்தவன் வேகமாய் அவ்விடம் வந்தான். அவனின் வேகத்தை பார்த்து திகம்பரி திகைத்தாள்.
நடு வீட்டில் வைத்து ஏடாகூடமாய் ஏதாவது செய்து வைத்து விடுவானோ பயந்துபோனாள்.
அவனது வேகத்தை பார்த்த ரவி தன் மாமாவை முறைக்க அவனை விட அதிகமாய் ரவியை முறைத்தவன்
“நாம எல்லோரும் கண்ணா மூச்சி ஆடலாம்” என்று திகம்பரியை பார்த்து கூற
“இது கூட நல்லா தான் இருக்கும்” என்று நந்தாவும் அங்கே வர திகம்பரிக்கு பீதியானது..
ராயர் ஏதோ செய்ய போகிறான் என்பது நல்லாவே புரிய “நான் வரல” என்றாள் சட்டென்று ராயரிடமிருந்து தப்பும் நோக்கத்தோடு..
“அதெல்லாம் முடியவே முடியாது. நீயும் வந்து தான் ஆகணும்” என்று வனாவும் கார்த்தியும் அடம் பண்ண மதியும் “வாங்க கா” என்று சொல்ல வேறு வழியில்லாமல் அவளும் ஆட்டத்தில் சேர்ந்தாள்.
ஒருவர் கண்ணை பொத்த மற்றவர்கள் அனைவரும் ஒளிய தொடங்கினர்.. அதில் ராயர் திகம்பரியின் பின்னே வந்து அவள் ஒளிந்து இருக்கும் இடத்திலே அவளை இடித்துக்கொண்டு அவனும் நிற்க திகம்பரி முறைத்தாள்.
“சொன்னது எல்லாம் மறந்து போச்சா..” என்று அவள் பல்லை கடிக்க
“உன் கூட கண்ணாமூச்சி தானே ஆடுறேன்.. அதை எல்லாம் நீ ஆட கூடாதுன்னு ஒன்னும் சொல்லலையே” என்று கேட்டவனை என்ன செய்யலாம் என்பது போல பார்த்தாள்.
“என்ன பார்வை எல்லாம் பலமா இருக்கு..”
“டேய் நீ அடங்கவே மாட்டியாடா..”
“ம்ஹும்..” என்று தலை ஆட்டியவனை கண்டு திகம்பரிக்கு தான் ‘ஐயோ’ என்று வந்தது..
“உனக்கு கவியை பேசி முடிச்சு இருக்காங்கடா...”
“ம்ம் ஆமா” என்று கதை கேட்பவனை போல பேசி வைப்பவனை கண்டு அவள் தான் தலையில் அடித்துக்கொண்டாள்.
“முடிலடா உன்னோட... சரி இப்போ என்ன வேணும்.. எதுக்காக இப்போ என் பின்னாடியே வர”
“நீ தான் வேணும்..” என்றான்.
“சரி அப்போ ரூம் போடு வரேன்” என்றாள் ஆத்திரமாய். அவளது பேச்சில் கோவம் வந்தாலும்
“ரூமெல்லாம் வேணாம்.. என் வாழ்க்கை முழுசுக்கும் வா..” என்றான் அழுத்தமாய்.
“ராய் வேணாம் முடுஞ்சு போனதை மறுபடியும் ஆரம்பிக்காதீங்க..” என்றாள் எரிச்சலாக.
“எதுடி முடிஞ்சு போனது... நீ நிஜம்.. என் பிள்ளை நிஜம்... உங்களை விட்டுட்டு என்னால இன்னோருத்திய நினைச்சு கூட பார்க்க முடியாது... உன் இடத்துல இன்னொருத்தி நினைக்கும் போதே கடுப்பாகுது... ஆனா நீ ரொம்ப அனாசியமா தூக்கி குடுக்குறல்ல இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு என்கிட்டே அனுபவிப்படி...” என்று கோவபட்டான்.
“மறுபடியும் முதல்ல இருந்தா..” அலுத்து போனது திகம்பரிக்கு.
“உனக்கு என்னடி அவ்வளவு அலுப்பு.. நான் இங்க எவ்வளவு அவஸ்த்தை பட்டுகிட்டு இருக்கேன்னு தெரியுமா.. என் இடத்துல நீ இருந்து பாருடி எவ்வளவு வேதனைன்னு..” கத்தியவனின் சட்டை காலரை பற்றி..
“என்னைவிட நீ ஒன்னும் அதிகமா வருத்தபடல... உனக்கென்ன நீ நாளைக்கே புது மாப்பிள்ளை.. ஆனா நான் உன் நினைப்புல நிதமும் தீ குளிச்சுகிட்டு இருக்கேன்டா..”
“எதுக்கு இவ்வளவு அவஸ்த்தை வா வந்து என்னோட வாழுடி”
“அது மட்டும் முடியாதுடா..” என்றாள் கண்ணீருடன்
“உன் வாயாலே நீ தான் வேணும்னு சொல்ல வைக்கிறேண்டி.. அப்படி சொல்ல வச்சுட்டா நீ என் கூடத்தான் வாழனும்” என்று அவளை பிடித்து உலுக்கியவன் அவளை விட்டு விலகி சென்றான் கோவமாய்.
அத்தியாயம் 37
ராயரின் கோவத்தில் உள்ளம் பதறினாலும் திகம்பரி திடமாகவே தன்னை காட்டிக்கொண்டாள். குழந்தையை அவன் பார்க்கவே இல்லை. கொஞ்சமும் தீஷியை கண்டு கொள்ளாத அவனது போக்கு அவளை மேலும் இறுக செய்தது... அவள் விலகினாலும் அவளது மனம் அவனை பிரிய மறுத்து அடம் செய்துக் கொண்டிருந்தது..
எப்போது இந்த சூழ்நிலையிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று மூச்சு முட்டி போனாள்.
அது அவ்வளவு எளிது அல்ல என்பது அவளுக்கு புரிந்து தான் போனது.. கண்முன் கவியின் வருகை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.. மாறிவிடுவானோ என்று பயந்தவள் ராயரே தேடி வந்து மிரட்டிட்டு போனது மனதுக்கு இதமாய் இருந்தது..
எவ்வளவு தான் அடக்கி வைத்தாலும் காதல் கொண்ட மனது துணையை நாடுவது இயற்க்கை தானே...
ரவிக்கு ராயரின் மீது கோவம் இருந்தாலும் ராயர் அவனிடம் விளையாடி விளையாடி அந்த கோவத்தை போக்கி இருந்தான். ஆனாலும் ரவி ராயரை முறைப்பதை தடுக்க முடியவில்லை.
ரவியையும் கவியையும் நாதனின் நடவடிக்கைகளை உளவு பார்க்க விட்டவன் வீட்டில் நிச்சாந்திறையாகி படுத்து இருந்தான். தன் மார்பின் மீது துயில் கொள்ள தன் சேய் இருந்தும் அதை தாலாட்ட முடியவில்லையே..
என்கிற ஏக்கம் அவனை வாட்டி வதைத்து... இது எல்லாத்துக்கும் காரணம் தன்னுடைய அவசர குணம் மட்டுமே என்று புரிந்தாலும் ‘அந்த கணம் எனக்கு அவ தேவை பட்டா... அதில் என்ன தவறு’ என்று மனம் முரண்டியது... ‘அதுக்காக இவ்வளவு பெரிய தண்டனையா.. எப்போ உன் மனசு மாறும் ரீகா... உன் மனசு மாற நான் எந்த எல்லைக்கும் போவேன்.
ஆனா உன் வார்த்தை தான் எனக்கு முக்கியம். நீ சொல்லும் வார்த்தைகளில் மட்டுமே என் மீத வாழ்வு அடங்கி இருக்கு... நீ முடியாது என்று சொன்னால் நான் உயிரோடு இருந்து என்ன பயன்.. இன்னும் சில நாட்களே உனக்கு நேரம்.. அதுக்குள் முடிவெடுத்து விடு.. அப்படி இல்லை என்றால் என் முடிவை நான் எடுத்து விடுவேன்..’ என்று எண்ணியவன்
“அது நிரந்தரமா உன்னை விட்டு செல்வது தான்” என்று நினைத்தவன் இகழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டான்..
“உனக்கு எதுவுமே நிரந்தரம் இல்லை ராயர்..” என்ற போதே அவனது மார்பில் ஏதோ வந்து விழ சட்டென்று என்னவென்று பார்த்தான்.. பார்த்தவன் இனிதாய் அதிர்ந்தான். ஆனாலும் கோவமானவன்
“நந்தா” என்று கத்த அந்த கத்தலில் அவன் மார்மீது இருந்த குழந்தை வீரிட திகம்பரி அடித்து பிடித்துக்கொண்டு ஓடிவந்தாள் அந்த அறைக்கு..
நந்தா சாவகாசமாய் வந்தான் அங்கே...
ஓடிவந்தவள் என்னவென்று பார்க்க கண்ட காட்ச்சியில் ஒரு கணம் உறைந்தவள் வேகமாய் அவனிடமிருந்து குழந்தையை வாங்கியவள் நந்தாவை முறைத்து விட்டு சென்றாள்.
“ஏண்டா நந்தா இப்படி பண்ற..” வருத்தமாய் கேட்டான்.
“நீ வறுத்த படுறத பார்க்க முடியலடா அதான் உன் பிள்ளையை உன்கிட்ட கொண்டு வந்து விட்டேன்” என்றான்.
“வேணாண்டா உன் தங்கை என்னை முழுதாய் ஏத்துக்கட்டும் அதுக்கு பிறகு இதெல்லாம் பார்த்துக்கலாம்...” என்றான் வலியுடன்.
“டேய் என்னடா ஆச்சு” அவனது வலி கண்டு நந்தா பதறினான்.
“ஒன்னும் இல்லடா.. ரொம்ப வலிக்குது.. கண்ணு முன்னாடியே மனசுக்கு புடிச்சவள வச்சுகிட்டு அவளிடம் எந்த உரிமையும் எடுத்துக்கக்கூடாது என்று கையை கட்டிவைத்து வேடிக்கை பார்ப்பது எவ்வளவு கொடுமை தெரியுமா.. அதும் அதை மனசுக்கு பிடிச்ச காதலியே சொன்னால் என்றாள் அதை விட கொடுமை வேறு இல்லை காதலித்தவனுக்கு..” என்றவனை எப்படி தேற்றுவது என்று பாவமாய் பார்த்தான் நந்தா.
“ராயரு...”
“ப்ச்.. விடுடா என் தலை எழுத்து அதுதான்னா யாரால மாத்த முடியும்” விரக்தியுடன் திரும்பி படுத்துக்கொண்டான். அறைக்கு வெளியே சுவறில் சாய்ந்த படி ராயர் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த திகம்பரிக்கு அழுகையாய் வந்தது.
“நான் என்ன பண்றது ராய்... எனக்கு உன் கௌரவம் பெருசா தெரியுதே... நான் நினைச்சது தப்பா..” என்று ஒரு பக்கம் அவள் தேம்பினாள்.
இதற்கு இடையில் உளவு பார்க்க வந்த கவிக்கு கார்த்திக் துணையாய் இருந்தான் என்றாலும் அவனது தொல்லை கவியால் தாங்க முடியவில்லை..
பேசிக்கொண்டே இருந்தான்... அவனை பற்றி... அவனது குடும்பம் பற்றி... வேலை.. என்று ரம்பம் போட்டுக்கொண்டே இருக்க
“உங்களோட ஒரு நாள் கூட முழுசா என்னால குப்பை கொட்ட முடியல அவ்வளவு அறுக்குறீங்க நீங்க... இதுல வாழ்கை முழுவதும் கூட வருவதா என்னால முடியாது பா... நீ வேறு ஆளை பார்த்துக்க..” என்று கவி குண்டை தூக்கி போட கார்த்திக்கு சுருக்கென்று ஆகிப்போனது... அதன் பிறகு அவன் அவளிடம் எதுவுமே பேசவில்லை..
அவளை எங்கே கூட்டிக்கொண்டு செல்ல வேண்டுமோ அங்கே கூட்டிக்கொண்டு போனான். வரும் போதும் அப்படி தான் எதுவும் பேச வில்லை.. கவி வேலை மும்மரத்தில் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவனை விட இப்போ முக்கியம் இந்த வழக்கு தான். இதை சரிவர செய்து முடித்துவிட்டால் தமிழகத்தின் மொத்த பார்வையும் இவர்களின் மீது தான்.. அதோடு இல்லாமல் மறைந்து போன பல குற்றங்கள் வெளிச்சத்துக்கு வரும்... அதனால் கவிக்கு அது தான் பெரிதாய் இருந்தது..
லேசாய் எதையோ இழந்தாலும் தன் கவனத்தை தன் வேலைகளின் மீதே பதித்தாள்.
கார்த்திக் அவளது செயலில் இன்னும் அடிபட்டு போனான்.. ரவியும் ஓடிக்கொண்டே இருந்தான் சாட்சிகளை ரெடி பண்ண... ராயர் இருந்த இடத்திலே எல்லா வேலைகளையும் சரி செய்து வந்த தகவல்களை தொகுத்துக்கொண்டு சரியான ஆதாரங்களை மீண்டும் சரி பார்த்துக்கொண்டு இருந்தபடியே தன் குடும்பத்துக்கும் பாதுகாப்பாய் இருந்தான்.
ஏனெனில் அவன் கைவைத்த இடம் அப்படி... ஆளும் கட்சியின் நிதிதுறை அமைச்சர் நாதனை கைது செய்ய உதவி செய்து உள்ளே வைத்து நிரந்தரமாய் தண்டனை வாங்கி தந்து இருக்கிறான்.
அவனது சகாக்களும் கை ஆட்களும் கொந்தளித்து போய் இருக்கிறார்கள்.. கூடவே பல அமைச்சர்கள் அதில் சம்மந்த பட்டு இருக்க ராயருக்கு எதிர்ப்பு பலமாய் இருந்தது. அதை அத்தனையும் முறியடித்து விட்டு தான் இன்னும் சில நாட்களில் அவன் கோர்ட் வளாகத்தில் காலடி எடுத்து வைக்க முடியும்..
கிட்ட தட்ட தன் உயிரை பணயம் வைத்து இந்த கேசில் ஈடுபட்டு இருக்கிறான். இது பற்றி யாருக்கும் ராயர் மூச்சு விடவில்லை. தெரிந்தால் எல்லோரும் பதட்ட படுவார்கள் என்று எண்ணி மறைத்து விட்டான். அதைவிட ஊரில் யாராவது புது ஆள் தென்பட்டால் உடனே அவனுக்கு தகவல் வரும்படி செய்து இருந்தான்.. அந்த கிராமமே அவனது கட்டுபாட்டில் தான் இருக்கிறது.. ஆனாலும் எச்சரிக்கையாய் இருந்தான்.
சாதாரண நாட்களிலே அவனது கவனத்தில் படாமல் அங்கு எதுவும் நிகழாது. இப்போது கூடுதல் கவனம் கொண்டிருந்தான். ஊர் முழுவதும் தன் ஆட்களை நிறுத்தி இருந்தான். இவனும் சாதாரண ஆள் இல்லையே... காவல் துறைக்கு உற்ற நண்பன். இவனும் நினைத்ததை நினைத்த படியே நடத்திக்கொள்ளுவான்.
சலுகைகள் இருந்தாலும் எந்த பக்கம் இருந்து தாக்குதல் வரும் என்று தெரியாத நிலையில் எச்சரிக்கை உணர்வு அதிகமாய் இருந்தது அவனுக்கு.. மகனின் நினைவும் மனைவியின் நினைவும் பின்னுக்கு தள்ளி போனது என்றால் முழுதாய் போகவில்லை... ஒரு உயிர் என்றால் பரவாயில்லை. அவனை நம்பி பல உயிர் வீட்டில் இருக்கிறதே...
சிந்தனை முழுவதும் அதிலே இருக்க திகம்பரிக்கு ராயரின் இந்த செயல்பாடுகளும், முகத்தில் குடியிருந்த சிந்தனை கோடுகளும் உருத்திக்கொண்டே இருந்தது..
“என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்கிறான்..” என்று திகம்பரி ஒரு பக்கம் சிந்தனை வசம் இருந்தாள். என்றாலும் தினசரி வேலை அது பாட்டுக்கு சென்றுகொண்டுதான் இருந்தது.
ஆனால் ராயரின் திடீர் மவுனம் வீட்டில் இருந்த எல்லோரையும் யோசனைக்குள் ஆழ்த்தியது.. நந்தா அவனது இருக்கம் தாளாமல்
“என்னடா ஆச்சு.. ஏன் எப்ப பாரு எதை பத்தியோ யோசிச்சுகிட்டே இருக்க.. ஏதாவது சொன்னா நானும் என்னால முடுஞ்ச உதவியை பண்ணுவேன்ல” என்றவனிடம்
“அதெல்லாம் ஒன்னும் இல்ல மச்சான்.. நான் பார்த்துக்குறேன்” என்று அங்கிருந்து போய்விட நந்தாவால் அதை இலகுவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ரவிக்கு உடனே போன் செய்து என்ன நிலவரம் என்று துளைத்து எடுக்க அவன் அந்த கேசின் முழுவிவரமும் சொன்னான்.. அதை கேட்டு நந்தாவுக்கு வியப்பு ஏற்பட்டது..
“எப்படி டா இவ்வளவு பெரிய இடத்துல கைவச்சீங்க”
“ஏக பட்ட தப்பு செஞ்சுருக்கானே அவன்.. அதுவுமில்லாம நில மோசடின்னு ஒரு ஏழை பட்ட விவசாயியோட நிலத்தை அவனுங்க பெயருக்கு மாத்தி இருந்தானுங்கன்னு அந்த ஏழை விவசாயி வந்து போலீஸ்ல புகார் குடுத்து இருந்தாரு.
போலிஸ் அந்த புகாரை எடுத்துக்கல... அங்க இருந்த ஏட்டு அவருக்கு உதவி செய்யிறேன்னு சொல்லி எங்ககிட்ட கொண்டு வந்து விட்டுட்டு போயிட்டாரு.. அதனோட தொடக்கமா ஏட்டோட பொண்ணை கடத்தி வச்சுகிட்டானுங்க..
மாமாவுக்கு அவனுங்க மேல இருந்த சந்தேகம் இன்னும் வலுவா ஆகிடுச்சு.. பொறவு ஏட்டு பொண்ணை அவங்க கஸ்டடியிலே விட்டுட்டு அந்த அமைச்சரோட பின்புலத்தை துப்பு துலக்க ஆரம்பிச்சாரு.. அப்போ தான் இந்த ஆளு எவ்வளவு பெரிய கிரிமினல்னு தெரிய வந்துச்சு..
அதோட மட்டும் இல்லாம அந்த விவசாயியோட நிலத்துல வைரம் புதைஞ்சி இருக்குறதா எவனோ ஒருவன் அமைச்சருக்கு சொல்லி இருப்பான் போல அந்த ஆளு இதை நம்பி களத்துல இறங்கிட்டாரு.
இப்போ மாமாகிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறாரு... மாமா அவனுங்க தப்பை எல்லாத்தையும் ஆதார பூர்வமா ரெடி பண்ணிட்டாரு.. கூடவே அந்த பொண்ணையும் காப்பாத்தியாச்சு.. அந்த நாதனையும் தூக்கி உள்ள போட்டாச்சு.. இன்னும் ரெண்டு நாள்ல மறுபடியும் கேஸ் ஹியரிங் இருக்கு.. அதுக்குள்ள என்ன வேணாலும் நடக்கலாம் அது தான் மாமா எல்லாத்தையும் அலெர்ட்டா இருக்க சொல்லி இருக்காரு..” என்றான் விவரமாய்.
“என் பக்கம் ஏதாவது உதவி வேணுமா ரவி..”
“அதெல்லாம் எதுவும் வேணாம் அண்ணா மாமா எல்லாத்தையும் பார்த்துக்குவாறு..”
“ம்ம்ம் இருந்தாலும் நான் என் செக்யூரிட்டிஸை இங்க வர சொல்றேன்.. ஆல்ரெடி கொஞ்ச பேர் இந்த ஊர்ல தான் இருக்காங்க இருந்தாலும் இன்னும் கொஞ்ச பேரை வர சொல்றேன்.. முதல்ல ராயருக்கு தான் போடணும்” என்றவன் தன் செக்யூரிட்டி டீமுக்கு கால் பண்ணி ராயரு, கவி, ரவி மூணு பேருக்கும் பாடிகாட்சை போட்டவன் வீட்டை சுத்தி ராயரின் ஆட்களோடு தன் ஆட்களையும் சேர்த்து போட்டான்.
“எங்களுக்கு எதுக்கு அண்ணா..” ரவியும் கவியும் கேட்க
“உங்களுக்கு தான் முக்கியம்.. நீங்க தான் வெளில அடிக்கடி போறீங்க.. சோ அவனுங்க பார்வை உங்க மேல தான் இருக்கும்..” என்று சொன்னவன் ராயரை நோக்கி சென்றான்.
“என்னடா நடக்குது இங்க.. என்ன விசயம்னு என் கிட்ட கூட சொல்ல மாட்டியா நீ” என்று கேட்டவனை வாஞ்சையுடன் பார்த்தவன்
“நீ உன் பிஸினசை பாருடா.. எனக்காக எல்லாத்தையும் அப்படியே போட்டுட்டு வந்துட்ட.. இங்க நடக்குற பிரச்சனையை நான் பார்த்துக்குறேன்” என்ற சொல்லியவனை முறைத்தவன்
“நான் முதல்அமைச்சர் கிட்ட பேசட்டுமாடா..”
“தேவை இல்லடா நான் சமாளிச்சுக்குவேன்.. கூடவே போலிஸ் துணை இருக்கு... நம்ம ஊரு அமைச்சர் என் கூட இருக்காரு.. அதனால பயம் இல்ல..” என்று மறுத்து விட்டான்.
ராயர் மறுத்தாலும் முதல்அமைச்சரிடம் ஒரு வார்த்தை சொல்லி வைத்தான் நந்தா..
ராயரிடம் வந்து நிச்சய புடவை எடுக்க போகலாமா என்று தில்லை கேட்க.. ”இன்னும் ரெண்டு நாள் போகட்டும் அக்கா பிறகு பார்த்துக்கலாம் முக்கியமான கேஸ் போயிட்டு இருக்கு” என்று சொல்ல
ராய் மறுத்து பேசாமல் ஒத்துக்கொண்டதை எண்ணி மனம் நொந்து போனாள் திகம்பரி..
“அட பாவி அவ்வளவு தானா நீ.. அன்னைக்கு என்னமோ பெரிய இவனாட்டம் அப்படி சொல்லிட்டு போனியேடா..” என்று தனக்குள்ளே புலம்பிக்கொண்டும்
“உன் காதல்ல போட்டு ரெண்டு அடி அடிக்க.. திகம்பரின்னு வருவல்ல அப்போ இருக்குடா உனக்கு.. வசமா சிக்கு உன்னை கொத்து கரி போட்டுறேன்” திட்டிக்கொண்டும் இருந்தாள்.
அன்றைய இரவு பொழுது வந்தது.. ராயர் எதிர் பார்த்த எந்த வித சம்பவமும் நிகழவில்லை.. அனைவரும் தூங்க போக ராயர் மட்டும் தோட்டத்தில் உலவிக்கொண்டு இருந்தான். வேட்டை நாய்களை அவிழ்த்து விட்டவன் யோசனையுடன் இருட்டில் பார்வையை துளைத்த படியே நடந்து கொண்டிருந்த போது சன்னமாய் காலடி ஓசை கேட்டது. காலடி ஓசையை நெருங்க விட்டவன் சமீபமாய் வந்தவுடன் ஓசை கேட்கும் திசை நோக்கி வேகமாய் திரும்பினான்.
திரும்பிய போது ராயரின் கைகளை லேசாய கீறி விட்டது அவன் வைத்திருந்த கத்தி... அதை பெரிது படுத்தாமல் அவன் சுதாரிக்கும் முன் தன் கைகளை கொண்டு ராயர் வந்தவனை வளைத்து பிடித்து முதுகில் தன் முட்டியால் மடிர் மடிர் என்று குத்திய படி அவனது கத்தியை வாங்கி எறிந்தான். ராயரின் அடியில் அவன்
“ஐயோ அம்மா” என்ற சத்தம் கேட்டு வீட்டில் விளக்கு எரிய எல்லோரும் பதறி அடித்துக்கொண்டு சத்தம் கேட்ட திசை நோக்கி வேகமாய் வந்தார்கள்.
அங்கே ஒருவனை போட்டு ராயர் அடித்து கொண்டிருப்பதை கண்டு, அதும் அவனுக்கு அருகில் கிடந்த கத்தியை கண்டு எல்லோருக்கும் நெஞ்சு உலர்ந்து போனது போல் ஆனது...
“ஐயா ராயரு... ஐயோ யாராவது வந்து காப்பாத்துங்களேன் எங்குல சாமிய..” தில்லை கத்திக்கொண்டே அழ
வனாவும் நந்தாவும் வேகமாய் ஓடிவந்து ராயரை குத்த வந்தவனை ராயரிடமிருந்து விளக்கி இரும்பு பிடியாய் அவனை வளைத்து பிடித்துக்கொண்டனர். கார்த்தியும் ரவியும் ராயரின் கையில் வழிந்த இரத்தத்தை அழுத்தி பிடித்து மதியை ஒரு துண்டு எடுத்து வர சொல்லி கட்டு போட்டனர்.
சிவனாண்டி திக் பிரம்மை பிடித்தது போல இருந்தார்.. ஒரு நாளும் இந்த மாதிரி நடந்தே இல்லை.. தன் வளர்த்த பிள்ளை இப்படி தன் கண் முன்னே அடிபட்டு நிற்கும் நிலையை அவரால் கொஞ்சமும் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. ஆனால் நடந்து இருக்கும் சம்பவம் அவரை ரொம்பவே உலுக்கி விட்டிருந்தது.
இது நடந்திருக்கு என்றால் ராயர் ஏதோ பெரிய வில்லங்கத்தில் சிக்கி இருக்கிறான் என்று தானே அர்த்தம்.. உயிர் கூடு காலியானது போல இருந்தது அவருக்கு...
“அய்யா ராயரு” அவனை கூப்பிட
அவரது வார்த்தையிலே இருந்த பரிதவிப்பு ராயருக்கு புரிய
“அதெல்லாம் ஒன்னும் இல்லை மாமா.. சும்மா லேசான கீறல் தான். இவனுங்க தான் ரொம்ப பெரிய கட்டா போட்டுட்டானுங்க..” என்று அவரை தேற்றினான்.
“அய்யா யாரு மேலயா கேசு போட்டு இருக்க”
“மாமா” என்றான் தயக்கமாய்
“எனக்கு தெரியும் ராயரு நீ தவறா யாரு மேலயும் போட மாட்டன்னு.. ஆனா நீ கவனமா இருக்கணும் இல்ல சாமி” என்று கேட்ட படியே அவனை தடவி கொடுத்தவரின் அன்பில் அங்கிருந்த எல்லோரும் நெகிழ்ந்தார்கள்
“இனி கவனமா இருக்கேன் மாமா இப்போ எல்லோரும் போய் தூங்குங்க” என்று அனுப்பி வைக்க தில்லை இன்னும் தன் அழுகையை அடக்காமல் அலுத்து கொண்டு இருக்க
“அக்கா எனக்கு ஒன்னும் இல்ல... வெறும் கீறல் தான் இந்தா நீயே பாரு” என்று கட்டை அவிழ்த்து காட்ட அந்த காயத்தை பார்த்து தில்லை ஆறுதல் அடைந்தாலும் இனி என்னென்ன வருமோ என்று பயந்து போனார்.
அவரால் அதிலிருந்து அவ்வளவு இயல்பாய் வெளியே வர முடியவில்லை. கண் முன் ராயரின் ரத்தம் வழிந்த கைகளே வந்து கொண்டிருக்க முற்றத்து தூணில் சாய்ந்து அமர்ந்துகொண்டார்.
சிவனாண்டி முன் வாசலில் கட்டிலை போட்டு அண்ணாந்து வானத்தை பார்த்த படி தூக்கம் வராமல் அமைதியாய் படுத்து இருந்தார். ராயரின் கை காயம் பார்த்து ஆடி தான் போய் இருந்தார் அவரும்.. இது நாள் வரையிலும் எந்த சம்பவமும் வீடுவரை வர விட்டது கிடையாது ராயர்..
அவன் பார்ப்பது ரிஸ்க்கான வேலை தான்.. ஏழைகளுக்கு குரல் கொடுப்பவன் அவர்களின் அநியாயத்தை கண்டு பொங்கி அவங்களுக்காக வாதாடி நீதியை நிலை நாட்டுவான். அதனால் அவனுக்கு எப்பவுமே எதிர்ப்புகள் அதிகம். எத்தனை பேர் எதிர்த்தாலும் ராயர் எப்பவுமே முன்னேச்செரிக்கையாக தான் இருப்பான்.
இன்றைய சூழலில் அவனது கவனம் திகம்பரி ஒரு பக்கம் சுருட்டிக்கொள்ள அதனால் லேசாய் ஒரு பிசகு அவ்வளவு தான் அவனை பொறுத்த வரையில். ஆனால் அவன் மீது உயிரையே வைத்து இருக்கும் மற்றவர்களின் நிலை அப்படியா.. உயிர் துடிக்க உள்ளம் பதற கடத்திக்கொண்டு இருக்கிறார்கள் ஒவ்வொரு நொடியையும்..
ரவியும் கார்த்தியும் குத்த வந்தவனை புரட்டி எடுத்துக்கொண்டு இருக்க, நந்தாவும் வனாவும் செக்யூரிட்டி ஆட்களிடம் விசாரணை செய்துக்கொண்டு இருக்க, மதியும் கந்தனும் தூங்க சென்றிருக்க, ராஜ் மாத்திரை சாப்பிடுவதால் அவருக்கு என்ன நிகழ்ந்தது என்று இப்போது வரையிலும் தெரியாது.
ராயரின் கண்கள் சுற்றிலும் அவ்விடத்தை அலசிக்கொண்டு இருக்க மெதுவாய் அவனின் காதில் ஒரு விசும்பல் சத்தம் கேட்க அப்போது தான் அவனுக்கு திகம்பரியின் நினைவு வந்தது..
எல்லோரையும் ஆறுதல் படுத்தியவன் திகம்பரியை மறந்து இருந்தான்.
தன் தலையிலே அடித்துக்கொண்டவன் மரத்தின் மறைவில் இருந்து அழுதுக்கொண்டு இருந்தவளை நோக்கி வந்தான் ராயர்..
இரு கையாலும் முகத்தை மூடிக்கொண்டு அழுது கொண்டு இருந்தவளை கண்டு பாவமாய் இருந்தது ராயருக்கு.
“திகம்பரி எனக்கு ஒன்னும் இல்லடி... ப்ளீஸ் அழதம்மா” என்று அவளை தேற்ற
“எப்படிடா அழாம இருக்க முடியும்... எத்தனை முறை சொல்லி இருக்கிறேன் கவனமா இரு கவனமா இருன்னு.. சொன்னா சொன்ன பேச்சை கேக்கவே மாட்டியாடா நீ.. எப்போ பாரு என்னை துடிக்க வச்சுகிட்டே இருடா.. உன்னை பத்தி நினைச்சு நினைச்சு எனக்கு தான் பீப்பீ அதிகம் ஆகுது..” அவனது மார்பில் அடித்த படியே விசும்பியவளை கண்டு அவனுக்கு ஆனந்தமாய் இருந்தது.
“ரீகா..”
“ம்ம்”
“லவ் யூ டி..” என்றான் ரசனையாய்
“ஆனா நான் வெருக்குறேண்டா... உன்னை.. எனக்கு பிடிக்கல.. ஐ ஹேட் யூ” அழுத படியே அவனது மார்பில் தஞ்சம் கொண்டவள் தன்னோடு சேர்த்து அவனை இருக்க அணைத்துக்கொண்டாள்.. சற்று முன் நிகழ்ந்த நிகழ்வு அவளை பயபடுத்தி இருந்தது.
அவளின் சொல் வேறு செயல் வேறாய் இருந்ததில் ராயர் புன்னகை புரிந்தான்...
அந்த சமயம் ராயரின் பின் பக்கம் இருந்து நீண்ட குறு வாள் சத்தமின்றி அவனது முதுகை துளைத்து வெளியே வந்தது..
அத்தியாயம் 38
ராயரை தன்னோடு இறுக்கி அனைத்து இருந்தவளின் கைகளை தாண்டி தான் ராயரின் முதுகை அந்த கத்தி பதம் பார்த்திருந்த படியால் வலியில் கத்திவிட்டாள் திகம்பரி...
அவளின் சத்தம் கேட்டு குத்தியவன் தப்பி போக பார்க்க ராயர் தன் கைகளை பின்னல் விட்டு அவனை இறுக்கி பிடித்தான். அவனோ ராயரின் பிடியில் தப்பி மறுபடியும் அவனது முதுகில் கத்தியை எடுத்து சொருக திகம்பரி
“அய்யோ” என்று அலறிவிட்டாள்.
“விடுடா அவரை” சட்டென்று ராயருக்கும் அவனுக்கும் இடையில் வந்து புகுந்து அவனை ராயரிடமிருந்து விலக்க பார்க்க நொடி நேரத்திலும், இருந்த பதற்றத்திலும், அவளின் கூச்சலிலும் மூணாவது குத்தை திகம்பரியின் வயிற்றில் குத்தினான் அவன்.
திகம்பரியை குத்தும் முன் ராயரின் முதுகில் ஒரு குத்து குத்தி அவனை வலுவிழக்க செய்திருக்க, அவ்வளவு வலியிலும் திகம்பரியை அவனிடமிருந்து காப்பாத்த துடித்து தனக்கு முன் நின்றிருந்தவளை வலுகட்டாயமாக விலக்க பார்க்க.. அவளோ
“மாமா நீ போ... நீ போடா..” என்று அவனை அங்கிருந்து அனுப்ப பார்த்தாள்... அவனோ அவளது காதலில் திளைத்தவன் நொடியில் எங்கிருந்து அவ்வளவு ஆவேசம் வந்ததோ திகம்பரியை ஒரே இழுப்பில் தள்ளி நிறுத்தியவன் குத்தியவனின் மீது ஆவேசமாய் பாய்ந்து அவனது கை கத்தியை தன் கைகளால் பிடுங்கி தூர எறிந்தவன் அவனின் முகத்தில் தன் சக்தி முழுவதும் திரட்டி ஓங்கி ஒரு குத்து விட்டான்.
அதற்குள் திகம்பரியின் குரல் கேட்டு அனைவரும் ஓடி வந்து பார்க்க திகம்பரியும் ராயரும் ரத்த வெள்ளத்தில் நின்ற படியும், ராயரின் கை பிடியில் முக மூடி அணிந்தவனையும் கண்டார்கள். அதை கண்டு உள்ளம் துடித்து போனது அனைவருக்கும்...
ரவி “நீ இவனை பார்த்துக்க” என்று அடித்து கொண்டிருந்தவனை கார்த்தியிடம் விட்டுவிட்டு திகம்பரியின் குரல் கேட்டு ஓடிவந்து பார்க்க கண்ட காட்சியில் குத்தியவனின் மென்னியை முறுக்கி எடுக்க ஆரம்பித்தான் ரவி.. தில்லையும் சிவனாண்டியும் இடிந்து போய் சரிந்தார்கள் தரையில்..
சிவனாண்டி சற்றே சுதாரித்து தன் இரு கையிலும் சரிய போன ராயரையும் திகம்பரியையும் தாங்கி நின்றார் வழியும் கண்ணீரோடு..
“ஏன் என் குடும்பத்துக்கு மட்டும் இப்படி” என்று தில்லை அழ
“ம்மா முதல்ல அழுவுரதை நிப்பாட்டு.. பின்னாடி வனாவும் நந்தாவும் நிக்கிறாங்க போய் அவங்களை வர சொல்லு.. இன்னும் எத்தனை பேர் இங்க வந்து இருக்கானுங்கன்னு தெரியல...” என்று அவரை விரட்டினான் ரவி.
அவரும் சூழ்நிலையை புரிந்துக்கொண்டு புடவை தடுக்க தடுக்க ஓடி போய் இருவரையும் கூட்டிக்கொண்டு வந்தார்.
வந்தவர்களும் கலங்கி போய் நின்றார்கள்.. எல்லாம் ஒரு நிமிடம் தான்.. வனாவும் நந்தாவும் குத்தியவனின் மீது பாய்ந்து அவனை புரட்டி போட்டு எடுத்தார்கள். அதில் பெரும் காயம் கொண்டவன்
“என்னை விடுங்க” என்று சொல்ல
“ஏண்டா கொலை பண்ண வந்துட்டு அவ்வளவு ஈசியா நீ போயிடுவியா...” என்று நந்தா கர்ஜித்து அவனின் முகத்திலே இன்னும் சில குத்துகளை விட்டவன் தன் பாடிகாடுக்கு அழைத்து இவனையும் முன்பு வந்தவனையும் ஒரு அறையில் அடைக்க சொன்னவன் தன் செக்யூரிட்டிக்கு அழைத்து “இது எப்படி நிகழ்ந்தது என்று எனக்கு விசாரித்துவிட்டு சொல்லு” என்று நிமிட நேரத்துக்குள் எல்லாவற்றையும் செய்தான்.
அதற்குள் வனாவும் ரவியும் சிவனாண்டியிடமிருந்து ராயரையும் திகம்பரியையும் காருக்குள் ஏற்றினார்கள். கார்த்திக் இருவருக்கும் ரத்தம் வராத அளவுக்கு துணியால் இறுக்கி கட்டிவிட்டு காரை எடுக்க ஓடினான்.
சிவனாண்டி தன் கைகளையும் தன் சட்டையையும் பார்த்தவருக்கு நெஞ்சு நடுங்கி போனது.. அவ்வளவு ரத்தம் படிந்து இருந்தது அங்கு..
சுதாரித்து அவரும் அவர்களோடு வந்தார். தில்லையும் உடன் வர, “நீ புள்ளைங்களுக்கு காவலா இரு” என்று சொல்லிவிட்டு அவர் ஏறி உட்கார்ந்தார் காரில்.
ராயர் கொஞ்சம் தெளிந்து கத்தி குத்து வாங்கிய திகம்பரியை பார்த்தான்.. மனசெல்லாம் அவ்வளவு வலித்தது அவனுக்கு.. அவளால் கண்களை முழிக்கவே முடியவில்லை.. ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவள் போல இருக்கையில் சாய்ந்து இருந்தாள்.
“என்னால தான் உனக்கு இவ்வளவு கஷ்டமும்டி...” என்று கண்கள் கலங்கி போனான்.
பின் தன்னை சுதாரித்துக்கொண்டு கார்த்தியை மட்டும் தன்னுடன் இருக்க சொன்னவன் மற்ற அனைவரையும் வீட்டிலே இருக்க சொன்னான்.
“என்னடா பேசிகிட்டு இருக்க... இந்த சமயத்துல போய் எப்படி உன்னை தனியாய் விட முடியும்..” என்று நந்தா கத்த
“இந்த சமயம் தான் ரொம்ப முக்கியம்... உங்க அத்தனை பேரோட உயிரும் எனக்கு முக்கியம்.. அதனால எல்லோரும் எந்த சத்தம் கேட்டாலும் வீட்டை விட்டு வெளியே வராதீங்க.. இப்போ நான் போற கார் கூட விபத்துக்கு உள் ஆகலாம்.. என்னோட வந்தா நீங்களும் அதுல மாட்டனும். அதுக்கு தான் சொல்றேன்..” என்றவன்
”போற உயிர் எங்க ரெண்டு பேத்து உயிரா இருக்கட்டும்.. நீங்க ரொம்ப கவனமா இருங்க.. நம்மளோட ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிக்கப்பட்டுகிட்டு இருக்கு..” என்றவன் சற்றே திணறி
“நந்தா உன் கிட்ட துப்பாக்கி இருக்கு தானே...”
“ம்ம்” என்று தலை ஆட்டினான். அவனது சொந்த பாதுகாப்புக்காக அனுமதியோடு வாங்கி வைத்திருந்தான்.
“வனா என் டேபிளில் இன்னொரு துப்பாக்கி இருக்கு அதை நீ வச்சுக்கோ”
“ரவி நீ அலெர்டா இரு, ஏதாவது பிரச்சனை என்றால் உன் கிட்ட குடுத்ததை நீ யூஸ் பண்ணு..” என்றான்.
“என் கிட்ட இன்னொன்னு இருக்கு... போற வழில நான் இன்சுக்கு கால் பண்ணி வர சொல்லிக்கிறேன்.. போலிஸ பார்த்தா லேசா தயங்குவாங்க.. நீங்க பயப்படாதீங்க” என்றவன் “காரை எடு கார்த்திக்” என்று சொல்லி மயக்கம் ஆனான்.
அவனது நிலையை எண்ணி எல்லோருக்குமே கண்களில் நீர் பூத்தது.. மயக்கம் ஆகும் முன் திகம்பரியை தன்னோடு இருக்கி அவளின் நெத்தியில் முத்தமிட்டவன் அவளிடமே சரிந்து மயக்கமானான்.
அவனது அந்த செயலை பார்த்த தில்லைக்கு ஏதோ புரிவது போல இருக்க திரும்பி சிவனாண்டியை பார்த்தார்.
அவரது பார்வையின் அர்த்தத்தை புரிந்துக்கொண்டவர் கண்களை மூடி ‘ஆம்’ என்று தலை அசைத்தார் சிவனாண்டி.
ரவி இன்சுக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தை சொல்லி காரின் முன்னேவும் பின்னேயும் போலிசை போகும் படி சொல்ல, அவர் உடனே அதுக்கு ஏற்பாடு செய்தார். ஊரின் எல்லையை தொடும் முன்பே காவலர் வாகனம் மூன்று வர அவர்களின் பாதுகாப்பில், கார்த்திக் இருவரையும் காப்பாற்றியே ஆகணும் என்று வேகமாகவே சென்றான்.
மருத்துவமனைக்கு வந்து இருவரையும் சேர்த்தவன் ரத்த வகைக்காக அலைந்தான். ரத்தம் கொஞ்சம் அதிகமாகவே வெளிவந்து இருந்தது இருவருக்கும்.
கார்த்திக் அங்கு இங்கு என்று எல்லா இடமும் அலைந்தான். ஓரிரு பாட்டில் மட்டுமே கிடைக்க வேறு வழி இல்லாமல் வீட்டிற்கு கால் செய்தான்.
“இதோ இப்பவே வருகிறோம்” என்று நந்தா சொல்லிவிட்டு
அனைவரையும் கிளம்ப சொன்னான். “இங்க பாதி பேர், மருத்துவமனையில பாதி பேருன்னு இருந்தா அதிக ரிஸ்க் அதனால எல்லாருமே ஒரே இடத்துல இருப்போம்” என்று சொல்லி ராயரின் மொத்த எவிடன்சையும் ரவியை எடுத்துக்க சொல்லிவிட்டு ராஜையும், மதி, கந்தனையும் எழுப்பி காரில் ஏற்றிவிட்டு வீட்டை நன்றாக பூட்டிவிட்டு அனைவரும் தேவையான உடைகளோடு மருத்துவமனைக்கு விரைந்தார்கள் கூடவே நந்தாவின் செக்யூரிட்டி டீமோடு..
வீட்டில் இருந்தவர்களின் ரத்த வகை இருவருக்கும் ஒத்து போக சிகிச்சையை ஆரம்பித்தார்கள் மருத்துவர்கள்.
கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் கழித்து வெளியே வந்த மருத்துவர்கள் “பயமில்லை ஆனா தீவிர கண்காணிப்பில் இருக்கணும்.. அபாய கட்டத்தை தாண்டி விட்டார்கள்” என்று சுருக்கமாய் சொல்லிவிட்டு செல்ல எல்லோரின் மனதிலும் நிம்மதி பொங்கியது..
இருபத்தி நான்கு மணி நேரம் கழித்து இருவரும் கண்விழித்தனர். ராயர் தான் முதலில் கண் விழித்து திகம்பரியை பார்க்க வேண்டு என்று சொல்லி அடம் பண்ண வேறு வழி இல்லாமல் அவள் இருக்கும் அறைக்கு அழைத்து சென்றார்கள் செவிலியர்கள்.
அங்கு வந்து மயக்கத்தில் கண் மூடி துயில் கொண்டிருந்தவளின் தலையை வருடிவிட்டு சற்று எக்கி அவளை முத்தமிட வர போட்ட தையல் அதற்க்கு ஒத்துழைக்காமல் போக தவித்து போனான்.
பின் அவளின் கட்டு போட்ட கையை பிடித்து உதட்டுக்குள் பொத்தி வைத்தவன் அவளை வாஞ்சயுடனும் பெருகிய காதலுடனும் பார்த்தான்.
அவளின் அன்பை நினைக்க நினைக்க மனசெல்லாம் சில்லென்று பனி துளியும், மழை துளியும் சேர்ந்து தூவியது போல இருந்தது ராயருக்கு..
“ஏன் இவ இன்னும் கண் விழிக்கல சிஸ்டர்” என்று அருகில் இருந்தவர்களை தொனத்தி எடுக்க
“மயக்கம் தெளியுற நேரம் தான் மிஸ்டர் காசி கண் விழிச்சுடுவாங்க. நீங்க வாங்க” என்று அவனை கிளப்ப பார்க்க
“ம்கும் அவ கண் விழிக்கட்டும் அதுக்கு பிறகு நான் வரேன்” என்றான் பிடிவாதமாய்.
“நீங்க கம்ப்ளீட் ரெஸ்ட் எடுக்கணும் மிஸ்டர் இப்படி அடம் பண்ணா எப்படி” என்று அவர் அவனோடு மல்லு கட்ட
“முடியவே முடியாது... அவ எழுந்து வரட்டும் அதுக்கு பிறகு தான் எல்லாம்” என்று சொன்னவனின் பிடிவாதத்தை அறிந்திருந்தாலோ என்னவோ திகம்பரி கண்விழித்தாள்.
“ஐ கண்ணு முழுச்சுட்டா.. சீக்கிரம் அவளை புல்லா செக்கப் பண்ணுங்க சிஸ்டர்..” என்று சிறு பிள்ளை போல குதுகலித்து இன்ஸ்ட்ரக்சன் சொன்னவனை கண்டு அந்த சிஸ்டர் கடுப்பானார்.
“அதை நாங்க பார்த்துக்குறோம் நீங்க முதல்ல இங்க இருந்து கிளம்புங்க மிஸ்டர்” என்று அவனை விரட்ட
“முடியாது முதல்ல அவளை என் முன்னாடி செக் பண்ணுங்க இன்னும் வேற எங்க காயம் இருக்கான்னு எனக்கு தெரியனும்” என்று சொன்னவனை பார்த்து திகம்பரிக்கு சிரிப்பு வந்தது..
அதனுடே அவனது காயத்தையும் கவனிக்க மறக்கவில்லை அவள்.
சிஸ்டர் பாவமாய் அவளை பார்க்க
அவரது பாவனையை புரிந்து கொண்டவள் மென் நகையுடன் “ராய் நீங்க கொஞ்ச நேரம் வெளி இருங்க அவங்க வேலையை செய்ய விடுங்க” என்றாள்.
“அதை என் கண் முன்னாடியே பண்ண சொல்லுடி..” என்றான் பிடிவாதமாய்..
அதில் அவளது முகம் சிவந்து போனது.. கிட்ட தட்ட மூன்று வருடங்க ஆகிவிட்டது அவர்களுக்குள் எல்லாம் முடிந்து.. இப்போது எப்படி அவன் முன் அவளுக்கு கூச்சமாய் இருந்தது..
“ராய் ப்ளீஸ் போங்க” என்றாள் சிவந்தபடியே..
அவளது சிவப்பு.. அவளது உணர்வுகளை அவனுக்கு புரியவைக்க அதில் லேசாய் தலையில் அடித்துக்கொண்டவன்
“சாரிடி..” என்றவன் பின் “பத்து நிமிஷம் தான் அதுக்குள்ள முடிக்க சொல்லு” என்று விட்டு கண்களை மூடிக்கொண்டான்.
ஆனாலும் “செல்லம் எங்காவது வலிக்குதாடி..” என்று மூடி இருந்த கண்களில் கண்ணீர் திரண்டு வர கேட்டவனை கண்டு பெருமிதத்தில் மிதந்தவள்
“வலி மருந்து குடுத்து இருக்காங்க மாமா அதனால வலி தெரியல... உனக்கு வலிக்குதா மாமா” என்றாள் மனம் கொள்ளா வலியுடன்.
“ம்ஹும் எனக்கும் வலிக்கல நீ பார்த்துட்டு என்னை கூப்பிடு.. இப்போ போறேன்” என்றவன் கண்கள் கலங்கிய படியே செல்ல
“இப்படி அழுத மூஞ்சியாவா வெளிய போவ கண்ணை துடைச்சுட்டு போடா மாமா” என்றாள்.
“எனக்கு தெரியும் நீ ஒன்னும் சொல்ல வேணாம் போடி” என்று வீம்பாய் போனவனை கண்டு சிரிப்பு வந்து அவளுக்கு.
பின் மருத்துவ சோதனைகள் முடிந்து அனைவரும் வந்து அவளை பார்க்க
எல்லோரின் கண்ணிலும் கண்ணீர் நிறைந்து இருந்து..
“ப்ச் எனக்கு ஒன்னும் இல்ல எதுக்கு இப்போ எல்லோரும் அழுதுகிட்டு இருக்கீங்க... முதல்ல அழறதை நிறுத்துங்க எல்லோரும்” என்றாள்.
ஓரளவு அவளது தெளிவை கண்டு இவர்கள் தெளிந்தார்கள் என்றாலும் தில்லை மட்டும் அழுகையை நிறுத்தவில்லை.
“அக்கா எனக்கு எதுவும் இல்ல.. நீங்க அழாதீங்க ப்ளீஸ்” என்று அவரின் கைகளை பிடித்துக்கொண்டு சொன்னவளின் கைகளை தட்டிவிட்டு
“என் கிட்ட கூட மறைச்சுட்டீல்ல” என்று கலங்கியவரை கண்டு
“நான் என்னக்கா மறைச்சேன்.. எதுவும் தெரியலையே..” புரியாமல் கேட்டாள் அவள்.
தன் இடுப்பில் இருந்த தீஷிதனை காட்டி “இவன் என் பிள்ளை தானே.. எப்படி மனசு வந்தது என் கிட்ட இருந்து மறைக்க.. அதும் இவ்வளவு நாளா” என்று வேதனையுடன் கேட்டவரின் கைகளை மீண்டும் பிடித்துக்கொண்டவள்
“அக்கா..” என்றாள் பேச்சு வராமல்
“அக்கான்னு சொல்லாத அம்மா சொல்லு இல்லையா அண்ணின்னு சொல்லு” என்றார் கண்டிப்புடன்.
அதில் அங்கிருந்த அனைவரும் சிரித்துவிட்டார்கள்.
“அம்மா..” என்று அழைக்க, சட்டென்று அவளை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டார் தில்லை..
“ஏன் கண்ணு இப்படி இத்தனை வருஷம் மறைஞ்சு இருந்துட்ட. அவனை பிடிக்கலன்னா நீ என் கிட்ட சொல்ல வேண்டியது தானே... அப்பவே கிளம்பி வந்திருந்தா அவனை ரெண்டு அடி போட்டு உன் கிட்ட மன்னிப்பு கேக்க வச்சு இருப்பேன்ல சாமி..” தலையை வருடி விட்டு கேட்டவரை திகம்பரி இறுக அணைத்துக்கொண்டு ‘வேணாம்’ என்று தலை ஆட்ட
“எதுக்கு நீ தலை ஆட்டுரன்னு புரியுது.. இவனை அடிக்க கூடாது அதானே... அதனால தான் இவன் இந்த ஆட்டம் போட்டு கிட்டு இருக்கான்..” என்று அங்கு ஒரு ஓரமாய் திகம்பரியின் கட்டிலை விட்டு சில அடிகள் தள்ளி இன்னொரு கட்டிலில் படுத்து இருந்தவனை காட்டி முறைத்த படியே பேச
கூடி இருந்தவர்களின் முகத்தில் சிரிப்பு வந்தது.. ராயர் முறைத்து பார்த்தான் தன் அக்காவை..
“என்னடா முறைப்பு.. இப்பவும் என் பொண்ணுக்காகத்தான் உன்னை சும்மா விடுறேன்” என்றார் கெத்தாய்..
“ம்மா சும்மா சொல்லாதீங்க... நீங்க அவரை அடிக்க போறீங்க... எங்க போய் சும்மா சேம்பிளுக்கு ஒரு அடி குடுத்துட்டு வாங்க பார்க்குறேன்..” என்று திகம்பரி அவரை சீண்டி விட..
அதில் திகைத்தார் தில்லை... தில்லையால் ராயரை அடிக்க முடியுமா என்ன... அவன் அவர்களது குலசாமி ஆச்சே...
சிவனாண்டி வாய் விட்டு சிரித்தார் தன் மனைவியின் திருதிரு விழியால்..
அவரது சிரிப்பு தில்லைக்கு இன்னும் வெட்கத்தை கொடுக்க கையில் இருந்த பிள்ளையின் கழுத்தில் முகம் புடைத்துக்கொண்டார்.
“அப்பா” என்று சிவனாண்டியின் பக்கம் கைகளை நீட்டினாள் திகம்பரி...
“கண்ணு நீ எதையும் போட்டு மனசை குழப்பிக்காத நீ தான் இந்த வீட்டு மருமக.. உன்னோட இன்னொரு கேள்விக்கும் இதுல பதில் இருக்கு படி” என்று செய்திதாளை பிரித்து நீட்டினார் திகம்பரி படிக்கும் வகையில்.
அதில் “பிரபல வழக்கறிஞர் காசி விஷ்வ நாத ராயர் அவர்களை அமைச்சர் நாதனின் ஆட்கள் வீடு புகுந்து கொலை செய்ய முயன்றார்கள். அதில் அவருக்கு இரண்டு முறை கத்தி குத்தி நிகழ்ந்தது.. மேலும் KVRய் குத்த வரும் போது கொலையாளியை தடுக்க நினைத்த KVRன் மனைவி திகம்பரி அவர்களுக்கும் கத்தி குத்து ஏற்பட்டு இருவரும் மருத்துவமனையில் அவசர பிரிவில் தொடர் கண்காணிப்பில் வைக்க பட்டு இருக்கிறார்கள்.” என்ற செய்தியை வாசித்தவளின் விழிகள் நன்றி பெருக்குடன் சிவனாண்டியை பார்த்தாள்.
“ராயர் மேல தவறு இல்லன்னு நான் சொல்ல மாட்டேன் மா.. ஆனா அவன் உன்னை எந்த சூழலிலும் மறக்கவில்லை. அவன் உன்னை காதலிக்கிறேன் என்று முன்பே என்னிடம் சொல்லிவிட்டான்.
ஒரு வார இடைவெளியில் ஊருக்கு வந்து நீ கரு தரித்து இருந்தததையும் என்னிடம் சொல்லிட்டான். ஆனால் கொஞ்சம் நாள் வேணும் திருமணம் செய்ய” என்று கேட்க நான் சண்டை போட்டு உடனடியாக திருமணத்தை செய்ய வேண்டிய கட்டாயத்தை அவனுக்கு புரியவைக்க அவனும் ஒத்துக்கொண்டான். பொறவு மறுபடியும் சென்னை சென்றவன் “இனி என் வாழ்க்கையில் திருமணம் என்ற சொல்லே இல்லை” என்று காவி கட்டிக்கிட்டு திரிந்து கொண்டு இருந்தான்.
பொறவு நீ ரெண்டு வாரத்துக்கு முன்னாடி வந்ததுல இருந்து அவன் பழைய மாதிரி ஆயிட்டான்... அப்போ தான் முழுசா என்ன நடந்துச்சுன்னு என் கிட்ட சொன்னான்.
நாங்க யாரும் ராயரை தவறா நினைக்கல எங்க முன்னாடி உன் புருஷன் தலை குனியவும் இல்லை.. அவன் தலை குனியவும் மாட்டான்.
அவன் உன்னை ஏமாத்தணும்னு நினைக்கலம்மா.. காதலை சொல்லும் போதே உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு தான் சொல்லிருக்கான்.. அதோட உங்க அப்பா அண்ணன் சம்மதத்தையும் கேட்டு இருக்கான்... என் சம்மதமும் கேட்டு இருக்கான்.. யாருக்கும் மறைச்சு வச்சு அவன் உன்னை காதலிக்கல.. அதனால நீ தைரியமா இரு... எதுக்காகவும் உன் புருஷன் தலை குனியும் நிலை வராது... அதுக்கு நாங்க விடவும் மாட்டோம்” என்றார் கம்பீரமாய்.
அவர் அதை சொல்லி முடிக்கவும் இளவட்டங்கள் “ஓ” என்று கூச்சல் போட்டு தங்களின் மகிழ்வை வெளிபடுத்த திகம்பரி ராயரை ஏறெடுத்து பார்த்தாள்.
ராயரின் முகம் ஆயிரம் சூரியனின் ஒளியை உள் வாங்கி தன்னுள் வைத்துக்கொண்டு பிரகாசிப்பதை போல ஒளிர்ந்தது.
“ஈஈஈ” என்று இளித்தான் அவளை பார்த்து.
அவனது சிரிப்பில் திகம்பரிக்கு அவ்வளவு நிறைவு வந்தது.. இனி எங்கேயும் ஓட வேண்டாம்.. அவனின் மார்பிலே குடி இருக்கலாம் என்ற ஆசுவாசம் பிறந்தது...
குழந்தை லேசாய் சிணுங்கி அவளிடம் சரிய, காயத்தில் படாத படி தன் மகனை நெஞ்சோடு அனைத்து பிடித்து அவனின் உச்சி முகர்ந்தவள் ராயரை கண்களால் கட்டி போட்டாள். ராயருக்கு இப்பவே ஓடிபோய் தன் மகனுக்கு ஈடாய் தானும் அவளின் நெஞ்சில் பள்ளி கொள்ள வேண்டும் போல் வெறி வர..
அது முடியாமல் முக சுளிப்புடன் அவளை முறைத்தான். அவனது பார்வையின் பொருள் அங்கிருந்த அத்தனை பேருக்கும் புரிய சன்ன சிரிப்புடன் இருவருக்கும் தனிமை கொடுத்து விட்டு வெளியே வந்தார்கள்.
அத்தியாயம் 39
அனைவரும் வெளியே சென்ற பின் ராயர் திகம்பரியை பார்த்து ஒற்றை புருவத்தை தூக்கி “எப்படி” என்று கேட்டான்.
“இப்போ பதில் சொல்ல முடியாது...” என்று வீம்பாய் அவனுக்கு பதிலடி கொடுத்துவிட்டு கண்களை இருக்க மூடிக்கொண்டாள்.
“ஏய் ஏதாவது சொல்லுடி... இப்படி அம்போன்னு விட்டுட்டு நீ பாட்டுக்கு தூங்குற... இப்போ என்னால எழுந்து கூட வர முடியாது... ப்ளீஸ்டி..”
“சொன்னா சொன்னது தான்... நீங்க உங்க அறைக்கு போங்க... உடம்பு சரியானதுக்கு பிறகு பார்த்துக்கலாம்..” என்று இரக்கமே இல்லாமல் சொன்னவளை கண்டு பல்லை கடித்தான் ராயர்..
“இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு என் கிட்ட நல்லா அனுபவிப்படி..”
“அதை அப்போ பார்த்துக்கலாம் இப்போ கிளம்புங்க” என்றவள் எமெர்ஜென்சி பொத்தனை அழுத்த செவிலியர் வந்தார்கள்.
அவர்களிடம் ராயரை காண்பித்து “இவரு என்னை பார்க்க அடம் பிடுச்சு கேட்டா கூட நீங்க யாரும் கூட்டிட்டு வர கூடாது..” என்று அவனை பாராமலே அவள் சொல்ல
“ஏய் வேணாம்டி.. ஏற்கனவே பயங்கர கோவத்துல இருக்கேன்... இப்போ நீ இப்படி பண்றதுக்கும் சேர்த்து வச்சு என் கிட்ட நல்லா பட போற பாரு..” என்று எச்சரித்தான்..
“அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம்.. இப்போ நீங்க கிளம்புங்க காத்து வரட்டும்” என்றாள் நக்கலாய்.
“ஓய் என்ன ஏற்க்கனவே ரெண்டு நாள் மருத்துவமனையில சேர்ந்து இருந்தது மறந்து போச்சா...” என்றான் திமிராய்..
அதில் கோவமும் கூடவே வெக்கமும் எழ “இவனை.. ச்சை எப்போ பாரு புத்திய புல்லு மேய விட்டுகிட்டே தான் இருப்பான்” என்று திட்டியவள் கோவமாய் திரும்பி அவனை பார்த்தாள்.
“அது...” என்றவன் “அதென்ன மூஞ்சிய திருப்புற.. என்கிட்டயேவா... தொலைச்சு கட்டிடுவேன் பார்த்துக்க” அதட்டினான்.
“டேய் முதல்ல போடா.. போய் உடம்ப முதல்ல சரி பண்ணு அப்புறம் என்னை என்ன வேணா பண்ணு” என்று சொல்லிவிட்டு சிவந்த முகத்தை அவனுக்கு தெரியாமல் மறைத்துக்கொண்டு தூங்குவது போல பாவனை செய்தாள்.
அவளது புறக்கணிப்பு உண்மை என்று எண்ணி கொதித்து போனான் ராயர்.. உடல் நலமாகும் நாளுக்காக வெறியுடன் காத்திருந்தான் அவன்.
திகம்பரியின் ஊடல் எல்லோருக்கும் புரிய அவளின் எண்ணத்துக்காக அவளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
மருத்துவமனை முழுவதும் காவலர்கள் குவிக்க பட்டு ராயரின் மொத்த குடும்பமும் பாதுகாப்புடன் இருந்தார்கள்.
அடுத்த நாள் ரவியும் கவியும் ராயரின் கூலி படையோடும், அரசாங்க பாதுகாப்போடும் நீதி மன்ற வளாகத்துக்கு வந்தார்கள்.
ரவி ராயரின் சார்பில் வாதாடுவதற்கு போதிய மனுவை கொடுத்துவிட்டு வழக்கை எடுத்து நடத்தினான்.
மணல் கொள்ளையிலிருந்து பழங்காலத்து சிலை கடத்தல் வரை ஈடுபட்டு இருந்த நாதனையும், அவருக்கு சகாயம் செய்த மத்த அமைச்சர்களையும் விசாரித்தது நீதி மன்றம்..
கூடவே பாலியல் தொழிலுக்காக சில அனாதை சிறுமிகளை கடத்தும் வேலையிலும் இடுபட்டு இருந்ததால் நீதி தலைவர் பாரா பட்ச்சமின்றி அவர்களுக்கு கடும் தண்டனை அளித்து, பதவியையும் பறித்து, பாதிக்க பட்டவர்களுக்கு நீதி செய்தார்.
அதில் ஏக கடுப்பான அமைச்சர்களின் கூலி ஆட்கள் ரவியையும் கவியையும் தாக்க வர கூட நின்ற ராயரின் கூலி படையும் காவலர்களும் அவர்களை பலமாக தாக்கி இருவரையும் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தார்கள்.
பதவி போன பிறகு அவர்களால் எதுவும் செய்ய இயலாமல் போனது. கூடவே ராயர் தமிழகத்தில் மிக முக்கிய ஆளாய் கருதப்பட்டான். நந்தாவின் செல்வாக்கும் கூட இருக்க ராயரை அவர்களால் எதுவும் செய்ய முடியாமல் பல்லை பிடுங்கிய பாம்பை போல அடங்கிவிட்டார்கள்.
கிட்ட தட்ட மூன்று மாதங்களுக்கு திகம்பரி ராயரிடம் பாரா முகம் காட்ட, அதை ராயரால் தாங்கவே முடியவில்லை. இருக்க இருக்க அவனின் வேகம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.
மகனையும் அவன் தூக்கி கொஞ்சவில்லை. தன்னிலை வெடிக்கும் நாளுக்காக ராயர் காத்துக்கொண்டு இருந்தான். வீட்டில் இருக்கும் மற்றவர்கள் திகம்பரியின் முடிவில் ‘ஏன்’ என்று கேட்க
“சும்மா..” என்று சொல்லியவள் வேறு எதையும் சொல்லவில்லை.
அவர்களது ஊடல் கண்டு யாரு சந்தோசமாக இருந்தார்களோ இல்லையோ ரவி ரொம்ப சந்தோசமாய் இருந்தான்.
“அப்பாடா எங்க நீ என்னை விட்டு குடும்பஸ்தனா போய்டுவியோன்னு நினைச்சேன் மாமு.. நல்லா வேலை..” என்று ஆசுவாசமாய் கட்டிலில் சரிந்தவனின் மீது தாவி ஏறி
“ஏண்டா நானே இங்க ஒவ்வொரு பொழுதும் அவஸ்த்தையா கழிச்சுகிட்டு இருக்கேன். உனக்கு கொண்டாட்டமா இருக்கா.. இரு உன்னை என்ன பண்றேன்னு பாரு” என்று அவனின் தலை முடியை பிடித்து இழுத்து மாவாட்டி கயிறு கட்டிலில் இருந்த சட்டத்தின் காலிலே அவனது தலையை கொண்டு இடித்து முட்டி அவனை ஒரு வழி பண்ணினான் ராயர்.
அதை பார்த்துக்கொண்டு இருந்த வீட்டினருக்கு சிரிப்பு வந்தது. மேல் மாடியிலிருந்து அவர்களின் சேட்டையை பார்த்துக்கொண்டு இருந்த திகம்பரிக்கு என்னவோ போல் இருக்க வைத்த கண் வாங்காமல் ராயரையே பார்த்துக்கொண்டு இருந்தாள் அன்று போலவே.
அவளது பார்வையை உணர்ந்தவன் போல் ராயர் அண்ணாந்து பார்த்தான். அவன் பார்ப்பது உணர்ந்தும் அவள் பார்வையை விலக்கிக்கொள்ளவில்லை. அதிலே ஆச்சர்யமானவன் எப்போதும் நாம பார்த்த உடனே திரும்பிக்குவாளே இன்னைக்கு என்ன திரும்பிக்கல’ என்று எண்ணியவனின் மண்டையில் பளிச்சுன்னு ஒரு மின்னல் மின்ன ஆர்வமாய் அவளை பார்த்தான்.
அவனின் பார்வையில் இருந்த பிரகாசம் திகம்பரி உணர்ந்தாலும் அவனையே பார்த்தாள்.
“மாட்டி கிச்சு.. மாட்டி கிச்சு...” பாட்டு அவனின் நெஞ்சில் ஓட அதுக்கு ஈடாய் வாயில் வாட்டர் பால்ஸ் ஓடியது..
திடிரெனே ராயரின் முகத்தில் எறிந்த பல்பை பார்த்த ரவி..
“என்ன மாமு உன் மூஞ்சில ஒரு ஒளி வெள்ளம் தெரியுது... என்ன விஷயம்” என்றான் அவ்வளவு அடி வாங்கியும் அடங்காமல்.
நீயெல்லாம் ஒரு ஆளான்ற கணக்குல ராயர்
“பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க
ஊன் உருக, உயிர் உருக, தேன் தரும் தடாகமே
மதி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே
பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க
இடங்கொண்டு விம்மி, இணை கொண்டு இறுகி,
இளகி முத்து
வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு,
இறைவர்…”
என்று திகம்பரியை பார்த்த படியே இருந்தான். அவளது கண்களில் தெரிந்த காதலில் இவன் அலையில் சிக்கிய துரும்பாய் அடித்து சென்றான்.
இப்போதே அவளிடம் விறைய வேண்டும் என்று உள்ளம் துடிக்க வேகமாய் ரவியின் மீது இருந்து எழுந்தவன் கொஞ்சமும் தாமத்திக்காது தன்னை அத்தனை பேர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை கூட சட்டை செய்யாமல் தன்னவளிடம் ஓடினான்.
அவனது வருகைக்காவே காத்திருந்தவள் போல அறையின் கதவை திறந்து வைத்து விட்டு அதன் மீதே சாய்ந்து நின்றாள் திகம்பரி.
மேலே வந்தவன் கதவில் சாய்ந்து நின்று அப்போதும் அவனையே பார்த்துக்கொண்டு இருந்த திகம்பரியின் பார்வைக்கு பதில் பார்வை பார்த்த படி அவளை நெருங்கினான்.
அவனது பார்வையை தன்னுள் சேமித்தவள் கொஞ்சமும் தலையை குனியாமல் வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்தாள்.
அவள் கண்களில் வந்து போகும் உணர்வுகளை படித்தவன் அவளின் எதிர் புறம் சுவரில் அவளை போலவே சாய்ந்து நின்று அவளையே பார்த்தான் ராயர்.
இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று கவ்வி நின்றது..
ராயரின் பார்வை சற்றே அவளை ஆராய... அதில் சிவந்தவள் தலையை வலப்பக்கம் திருப்பிக்கொண்டாள்.
“ம்ம்ம்” மெல்ல செருமினான் ராயர். அதில் அவனை ஏறெடுத்து பார்த்தாள் திகம்பரி என்ன என்பது போல..
‘மௌனமே தொடரட்டுமே’ என்று இரு உள்ளமும் இருக்க, ஆனால் ஆணின் தேவை ராயரை சும்மா இருக்க விடவில்லை..
அவளை நெருங்கி வந்தான். அவனது நெருக்கம் கண்டு உள்ளுக்குள் பூகம்பம் எழுந்தாலும் அவனையே பார்த்தாள்.
அவளை இன்னும் நெருங்கியவன் அவளின் கண்களை வட்டம் போட்டு “இந்த பார்வையை தாண்டி இவ்வளவு நாளா மிஸ் பண்ணேன்.. எங்க பதுக்கி வச்சி இருந்த இந்த பார்வையை.. என்னை காந்தமா ஈர்குதுடி... நீ ரொம்ப தொலைவுல இருந்து பார்த்தாலும் என்னை உன் கிட்ட கொண்டு வந்திடுது...” என்று சொன்னவன் அவளது உதட்டில் தன் மீசை முடி உரச “நான் அந்த கண்ணுல கிஸ் பண்ணிக்கவா..” என்று அவளிடம் அனுமதி கேட்டான்.
முடியாதுன்னா இவன் அப்படியே விட்டுட்டு தான் மறு வேலை பார்ப்பான்...
“ம்ம்” என்றாள் முணங்கலாக
அவள் மீது முழுதும் சாய்ந்தவன் அவளின் கண்களில் முத்தம் இட்டவன் மெல்ல அவளது நாசியில் முத்தமிட
“இதுக்கு பெர்மிஷன் வாங்கல” என்றாள் திகம்பரி.. அதில் கடுப்பான ராயர்
“ஏண்டி உன்னக்கே இது ஓவரா தெரியல.. நானும் போனா போகுதேன்னு விட்டு புடுச்சா... உன்னையெல்லாம்..” என்றவன் சட்டென்று அவளை தன் கைகளில் தூக்கியவன் கதவை சாத்தும் பொறுமை கூட இல்லாமல் அவளை படுக்கையில் விட்டு அவளின் மீது படர... மூச்சு முட்டி போனது திகம்பரிக்கு..
இத்தனை நாள் அவள் பார்வையால் கூட ராயரை தீண்டவில்லை. இன்று ஒரு முடிவு கட்டலாம் என்று தான் திகம்பரி அவனை அப்பார்வை பார்த்தாள்.
“ஒரு நிமிஷம்“ என்று அவனை தேக்க பார்க்க
“முடியாது இனி ஒரு நிமிஷம் கூட என்னால முடியாதுடி” என்று முரட்டு தனம் காட்டியவனை முறைத்து பார்த்தாள்.
“என்ன முறைக்குர அக்சுவலி நான் தான் முறைக்கணும், ஆனா நீ அதை செஞ்சுகிட்டு இருக்க” என்றவன் அவளிடமிருந்து விலகி அருகில் உட்கார்ந்தான். பின் அவளையும் தூக்கிவிட்டு தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு கட்டிலில் சாய்ந்து அமர்ந்துக்கொண்டு
“என்ன ஆச்சு ரீகா... என்னை ஏன் இத்தனை நாள் அவாய்ட் பண்ண.. சொல்லுடி..” என்றவனை கண்டு அவள் எதுவும் பேசவில்லை.
அவளின் அமைதி கண்டு
“மூணு வருஷம் பிரிஞ்சி இருந்ததே என்னால தாங்க முடியல.. இப்போ பக்கத்துல இருந்து இந்த மூணு மாசம் என்னை கொன்னுட்டடி... நீ என்னை தேடி வரலன்னா கண்டிப்பா நானே உன்னை தேடி வந்திருப்பேன் தெரியுமா..
மாமா கிட்ட கூட சொல்லிட்டு கிளம்பலாம்னு தான் இருந்தேன். ஆனா இந்த நாதன் கேசு முடியட்டுமேன்னு இருந்தேன்.. இதுக்குள்ள உன்னையும் இழுக்க வேணாம்னு நினைச்சேன்.. ஆனா நீ என்னை முந்திகிட்டு என் கிட்ட வந்து சேர்ந்துட்ட... வந்தவ எதுக்குடி திரும்பி போன..
நீ இல்லாம அப்போ தாண்டி ரொம்ப தவிச்சு போனேன்.. மறுபடியும் நீ என் கைக்குள்ள வேணும்னு என் உடம்பும் மனசும் எப்படி துடிச்சது தெரியுமா... அப்படியும் எல்லாத்தையும் சரி பண்ணி கத்தி குத்து வாங்கியும் என் மேல உனக்கு இறக்கம் வரல இல்ல..” என்று வலியுடன் கேட்டவனை
அதிக வலியுடன் பார்த்தவள் “நான் மட்டும் உங்க கிட்ட முகம் குடுத்து பேசி இருந்தா என்ன நடந்திருக்கும் தெரியுமா... போட்ட தையல் பிருஞ்சு போற அளவுக்கு நீங்க கொண்டு வந்து விட்டு இருப்பீங்க... ஆப்ரேசன் நடந்த அன்னைக்கே என்னை வந்து பார்க்கனும்னு துடிச்சு போய் வந்தீங்க... உங்க மனதின் வேகம் உடம்பு தாங்கனும் இல்லையா...
உங்களுக்கு ஏதாவது ஒன்னுனா என்னால தாங்க முடியுமா... எனக்கு சோறு ஊட்டுறேன், தலை சீவி விடுறேன், குளிக்க வைக்கிறேன்னு என்னை பத்தி மட்டும் தான் நீங்க யோசிப்பீங்க... அதனால தான் உங்க கிட்ட பாரா முகம் காட்டுனேன்..
உங்களுக்கு வலிக்குதோ இல்லையோ எனக்கு வலிக்கும் அதனால தான் நான் உங்களை உங்க புன்னு ஆறும் வரை தள்ளி வச்சேன்.. எனக்கு மட்டும் ஆசையா உங்களை தள்ளி வைக்கனும்னு” என்றாள்.
“நீ அப்படி யோசிச்சியா சாரிடி... ஆனாலும் நீ என்னை கொஞ்ச மாச்சும் கிட்டக்க சேர்த்து இருந்திருக்கலாம்” என்று அவன் வழிய அதில் சிரித்தவள்
“அதான் இப்போ சேர்த்துக்கிட்டனே...” என்றாள் ரகசியமாய்..
“ஆமா தான்... சரி என் பார்வைய மறந்துட்டியாடி..” ஆவலாய் கேட்டவனை கண்டு
“ம்கும் மறக்கல”
“பொறவு”
“ம்ம்ம் இன்னும் கொஞ்ச நாள் நீங்க தள்ளி தான் இருக்கணும்” என்றாள் சிரிப்புடன்..
“எவ்வளவு நாள் வேணாலும் தள்ளி வச்சுக்க... ஆனா நீ என் கிட்டக்கவே இருக்கணும் சரியா” என்று பச்சை பிள்ளை போல கேட்டவனை கண்டு பாகாய் உள்ளம் உருகியது திகம்பரிக்கு..
“லவ் யூ டா மாமா..”
“ம்ம் நானும் தாண்டி.. லவ் யூ சோ மச்..” என்றான் காதலாய்.
வேறு திசையில் சென்ற பறவைகள் இன்று ஒரே கூட்டுக்குள்...
சற்று பொறுத்து அவர்களது மகன் ஓடி வர, தன் மேல் இருந்த ராயரை நகர்த்தி விட்டு திகம்பரி அவனை தூக்கி தன் மடியில் வைத்து கொஞ்சியபடி
“இந்தாங்க உங்க பிள்ளை..” என்று ராயரிடம் நீட்ட படுத்திருந்த படியே அவளை ஆழ பார்த்த படியே வாங்கினான்.
“நான் குடுக்கணும் அதானே.. இத்தனை நாள் இவனை கொஞ்சாம இருந்தீங்க.. டேய் பையா உன் அப்பாகிட்ட சண்டை போடுடா... ஏன் இத்தனை நாள் என்னை தூக்கலன்னு” என்று மகனை உசுப்பேத்தி விட
மகனோ திகம்பரிக்கு மேல் “போமா” என்றவன் தன் தந்தையின் மார்பில் சாய்ந்து அவளை பார்த்து கேலியாய் போக்கை வாயயை காட்ட
அதில் “பார்த்தியாடி என் மகன என் பொண்டாட்டி மாதிரியே என்னை விட்டு குடுக்கல” என்று அவன் மீசையை முருக்க, அதில் மனம் மயங்கியவள்
“அப்படியா ஆனா எனக்கொன்னும் அப்படி தெரியலையேடா...” என்றபடி அவனது நெஞ்சு முடியை பிடித்து இழுத்து விளையாடிய படியே கேட்டவளை இன்னொரு கையால் வளைத்து பிடித்தவன்
“இப்போ தெரியும் பாரு” என்றவன் அவளது கழுத்தில் முகம் புதைத்து தன் மீசையால் கோலம் போட்டு அவளை சிலிர்த்து கூச செய்தவன் மகன் புறம் திரும்பி அவனை ஒற்றை கையால் தூக்கி வயிற்றில் முகம் புதைத்து முகத்தை புரட்ட, குழந்தை தகப்பனின் மீசை செய்த குறுகுறுப்பில் கிளுக்கி சிரித்தான்..
ராயர் தான் தன் மகனை பார்க்கவில்லை... மத்தபடி வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ராயரை குழந்தைக்கு பழக்க படுத்தினார்கள்..
முக்கியமாய் திகம்பரி.. அவள் அதை செய்யாமல் விட்டாள் தான் நாம ஆச்சர்யபடனும்..
அத்தியாயம் 40
நந்தா தான் சென்னைக்கு கிளம்புவதாக சொல்ல வீட்டில் இருந்த அத்தனை பேருக்கும் வருத்தம் வந்தது...
“இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு போகலாமே நந்தா.. கூட அப்பாவையும் கூட்டிட்டு போறேன்னு சொல்ற... துணைக்கு வேற யாரும் இல்ல அங்க.. அப்பா இங்கயே இருக்கட்டுமே..” சிவனாண்டி சொல்ல
“இல்ல ப்பா... அது சரி வராது... அதோட ரொம்ப நாள் இங்க இருந்துட்டேன்.. வியாபாரம் எல்லாம் அப்படியே தேங்கி போய் நிக்குது... நான் போய் தான் எல்லாத்தையும் சரி பண்ணனும்... அது இங்க இருந்தா முடியாது.. அது தான்” என்றான்.
“புரியுது.. ஆனா அப்பாவையாவது இங்க விட்டுட்டு போகலாமே தம்பி”
“மாசாமாசம் அவரை செக்கப்புக்கு கூட்டிட்டு போகணும்பா... அது ரெகுலரா காண்பிச்சுக்கிட்டு இருக்குற மருத்துவமனை..” என்றான் தயக்கமாய்.
சிவனாண்டி மேலும் ஏதோ சொல்ல வர
“மச்சானுக்கு பொண்ணு குடுத்த வீட்டுல எப்படி இருக்குறதுன்னு யோசிச்சுட்டு தான் இப்படி காரணமெல்லாம் சொல்லி கிட்டு இருக்காரு... அவரை அவர் போக்குல விடுங்க மாமா..” என்றவன்
“நீ போகும் போது ரவியையும் கூட்டிட்டு போடா..” என்றான் ராயர்.
“நானா நான் எதுக்கு மாமா நான் இங்க உன் கூடவே இருக்கேனே..” என்றான் ரவி
“இன்னும் எவ்ளவு நாள் என் கூடவே இருப்ப.. நாதன் கேசையே ஒன்னும் இல்லாம ஆக்குனவன் நீ. நீ எனக்கு அசிஸ்டண்டா.. இனி உனக்கு கல்யாணம் பண்ணனும் அதனால இனி நீ தனியா வாதாடு... கூடவே கவியும் சீக்கிரமா கார்த்திய கல்யாணம் பண்ணிக்கிட்டு அங்க வந்திடுவா..
பத்தாததுக்கு உன் கூட இருந்த உன் தோழன்களையும் கூட்டிக்கோடா.. உனக்கு உதவியா இருக்கும். அதோட நந்தாவோட தொழில் வழக்கறிங்கராகவும் உன்னை போட்டு இருக்கான் நந்தா. அதனால நீ இங்க இருந்தா சரி பட்டு வராது.. சென்னை போ..” என்று ரவியின் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றான் ராயர்.
அதை கேட்டு எல்லோருக்கும் ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும் ரவியை பிரிய வேண்டுமே என்று கலங்கி போனார்கள்.
நந்தாவோடு ரவியும் விடை பெற எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு வந்தவன் ராயரை கண்டவுடன் முகம் திருப்பிக்கொண்டான்.
திருப்பியவனின் கண்கள் கலங்கி போய் இருந்தது. அவனது முகத்தை பார்க்காமலே அதை உணர்ந்துக்கொண்ட ராயர் அவனை இழுத்து அணைத்துக்கொண்டான்.
“ப்ச் இது என்னாடா சின்ன புள்ள தனமா.. எதுக்கு போற வேலைக்கு தானே.. அதை நினைச்சு சந்தோச படாம அழுதுகிட்டு.. திகம்பரி எப்பிடியும் தொழில் பார்க்க சென்னை வந்து தான் ஆகணும்.. அப்போ கூட நானும் வருவேண்டா... உன்னை முழுசா அப்படியே விட்டுட்ட மாட்டேன்..
நந்தாவின் நிறுவன வழக்குகளை பார்த்துக்கொண்டு இருந்த சதாசிவம் அங்கிள் உனக்கு எல்லா உதவியும் செய்வார்டா... உன் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு முன்னேத்தி செல்லு ரவி.. உன் உறவுகள் எங்கேயும் போக மாட்டோம்.. உன் கூட தான் இருப்போம்” என்று திடமாய் அவனுக்கு தைரியம் சொல்லி அனுப்பினான் ராயர்.
மூவரும் பிரியா விடையுடன் விடை பெற்று செல்ல தன் அறைக்கு வந்தவனின் கண்கள் கலங்கி இருந்தது..
அவனது போராட்டத்தை உணர்ந்திருந்த தில்லையும் சிவனாண்டியும் குழந்தையை தங்களோடு வைத்துக்கொண்டு திகம்பரிக்கு ராயரை கண் காட்ட, சரி என்பது போல தலை ஆட்டி அவனை கவனிக்க சென்றாள் தன் சகோதரனையும், தந்தையையும், நண்பனும் சகோதரனுமான ரவியின் பிரிவில் எழுந்த கண்ணீரை துடைத்தபடி...
“யாரோ அவ்வளவு திடமா நின்னு ரவிக்கு அட்வைஸ் பண்ணாங்க அது யாருன்னு தெரியுமா மாமா..” என்று அவனை சீண்ட அவளது சீண்டல் தன்னை ஒன்றும் செய்யவில்லை என்பது போல இருந்தான் ராயர்.
அவன் கலையாமல் அப்படியே இருக்க அவனருகில் சென்று “மாமா” என்று அழைக்க
திகம்பரியை வேதனையுடன் நிமிர்ந்து பார்த்தான் ராயர்.
அவனது கண்களில் தென்பட்ட வேதனையை கண்டு
“ப்ச் என்ன மாமா ரவியை சமாதானம் செய்த நீங்க இப்படி உட்கார்ந்து அழலாமா..” என்று அவனின் முகத்தை துடைத்து விட்டவளின் கைகளை பிடித்துக்கொண்டு
“அவன் இவ்வளவு நாள் என் கைக்குள்ளே இருந்துட்டானா அது தான் என்னால தாங்க முடிலயடி.. எது செஞ்சாலும் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் இருப்பான் தெரியுமா.. முதல்ல என் பிள்ளை ரவி தான் அதுக்கு பிறகு தான் தீஷிதன்..” என்றான்.
“புரியுதுங்க.. மனசுக்கு பிடுச்சவங்க தள்ளி போனா கஷ்டமா தான் இருக்கும்...” என்றவள் தான் என்ன சமாதனம் செய்தாலும் ராயரை அவ்வளவு எளிதாக இதிலிருந்து வெளியே கொண்டு வர முடியாது என்பது புரிய
“சரி கொஞ்ச நேரம் படுங்க” என்றவள் அவளே அவனை படுக்கையில் சாய்த்து அவனது நெற்றியில் முத்தம் இட்டு போர்வை போத்தியவள்
“இப்படி மனசுக்கு பிடுச்சவங்களோட நினைவுகளை ஓட்டி பார்க்கிறது கூட ஒரு சுகம் தான்... அதனால நான் உங்களை டிஸ்டப் பண்ணல... இது ரவிக்குண்டான நேரம்.. நீங்க ரவியின் சேட்டையை நினைச்சு பார்த்தீங்கன்னா தானாவே வெளிய வந்துடுவீங்க..” புரிதலுடன் விலகியவளை பார்த்தவனுக்கு ரீகாவை நினைத்து பெருமையாய் இருந்தது.
அவளுக்கும் நந்தாவின் பிரிவும், தந்தையின் பிரிவும் வலியை கொடுக்கும் தானே என்று உணர்ந்தவன் அவளை நிறுத்தி அருகில் அழைத்து தன் மேல் சாய்த்துக்கொண்டு
“உனக்கும் வலிக்கும்டி வா” என்று தன்னின் நெஞ்சை ஆறுதலாய் அவளுக்கு அளித்து ஓரளவு அவளின் வேதனையை போக்க பார்த்தான். கூடவே திகம்பரி சொன்னது போல ரவியின் ஒவ்வொரு செயலையும் எண்ணி பார்க்க ஆரம்பித்தான்.
--
இடை பட்ட காலத்தில் திகம்பரி அவ்வீட்டின் மருமகளாய் மாற அனைவருக்கும் அவளின் இருப்பு இன்றியமததாய் மாறியது..
வனாவுக்கு தொழிலில் உதவி செய்வது, தில்லைக்கு சமையலுக்கு உதவி செய்வது, கந்தனுக்கு படிப்பு சொல்லி கொடுப்பது, ராயருக்கும் சிவனாண்டிக்கும் மத்திய வேலை காட்டில் இருக்கும் போது உணவு எடுத்து செல்லுவது.. மதியோடு எங்காவது ஊர் சுற்றுவது, அவளை மேல் நிலை படிப்பு படிக்க உதவி செய்வது
ராயரின் கேசில் சில தகவல்களை திரட்டி தருவது, மகனை வளர்ப்பது என்று அவளது நேரம் ஓடிக்கொண்டே இருந்தது..
வீட்டில் அவளது ஒன்றுதல் கண்டு ராயருக்கு பெருமையாய் இருக்கும். பணக்காரி என்று அவள் எங்கேயும் காட்டிக்கொண்டது இல்லை.. இப்போது என்று இல்லை ராயரை காதலிக்கும் போதே அவள் அப்படி தான்.
பல ஆயிரங்களில் சுடிதார் போடுபவள் ராயர் வாங்கி தரும் சாதாரண சுடிதாரை விருப்பத்துடன் அணிந்துக்கொள்ளுவாள்.. அதிலயே ராயருக்கு அவள் மீது அதிக பித்தானது..
இப்போது சொல்ல தான் வேண்டுமா... அதும் தாலி கூட கட்டாத நிலையில் “நீ ஏன் இன்னும் எனக்கு தாலி கட்ட வில்லை” என்று அவள் இன்று வரையிலும் கேட்டது இல்லை அவனிடம்..
அதை பற்றி பெரியவர்கள் கேட்டபோது கூட “அது எங்களுக்கு அவசியம் அற்றது.. மனம் தான் எப்போதோ சேர்ந்து விட்டதே” என்று பதில் கொடுத்தவள் ராயரிடம் இப்படி கேட்டார்கள் என்று கூட அவள் காட்டிக்கொண்டது இல்லை.
எல்லாவற்றையும் எண்ணியவன் திகம்பரி இல்லை என்றாள் இந்த ராயர் இல்லை என்பதை நன்கு உணர்ந்துக்கொண்டவன் அவளை இன்னும் தன்னுள் புதைத்துக்கொண்டான்.
--
கவியின் வீட்டில் பேசி இருந்த சம்பந்தத்தை, சிவனாண்டியும் தில்லையும் நேரில் சென்று பேசி சரி செய்து, கார்த்தியை மாப்பிள்ளையாய் காட்டி கார்த்தியின் பெற்றோரும் வந்து அவர்களது திருமணத்தை உறுதி செய்ய ராயரின் ஊருக்கு வந்தார்கள். எல்லோரும் சேர்ந்து கவியின் வீட்டுக்கு சென்று பெண் பார்க்கும் படலத்தை ஏற்பாடு செய்ய.
கார்த்திக் பெண்ணோடு தனியாய் பேச வேண்டு என்று சொல்ல, கவி கார்த்திக்காக காத்திருந்தாள் தன் அறையில்.
வந்தவனோ “சாரி எனக்கு இங்க வருவது தெரியாது. ராயர் எனக்கு சொல்லாம, சர்ப்ரைஸ் பண்றேன்னு இந்த ஏற்பாடு பணிட்டான்.. சாரி நான் வரேன்” அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் மனபாடத்தை ஒப்பிப்பது போல ஒப்பித்தவனை கண்டு
“அப்போ உங்களுக்கு இந்த திருமணத்துல விருப்பம் இல்ல அப்படி தானே..” நக்கலாய் கேட்டாள் கவி.
“ஆமாம்” என்றான் ஜன்னலை வெறித்த படி..
“கல்யாணத்துல விருப்பம் இல்லன்னா என்னையும் பிடிக்கலன்னு அர்த்தம் இல்லையா”
“ஆமாம்” என்றான் இதுக்கும்.
“அப்போ என்னை பிடிக்காதவன் உயிரோட இருந்து ஒரு பிரயோஜனமும் இல்ல.. சோ நீ செத்துடு..” என்று துப்பாக்கியை அவன் நெற்றியின் மீது வைத்து சுட்டு விடுபவளை குறிவைக்க
அவளது செயலில் பதறியவன் “அடிபாவி என்னடி இப்படி அசால்டா கொலை பண்ண பார்க்குற...” என்று முறைத்தான் அவளை.
“நீ தானே என்னை பிடிக்கலன்னு சொன்ன அதான்” என்று அசால்ட்டாய் தோளை குலுக்கினாள்.
“அதெல்லாத்துக்கும் காரணம் நீ தான்” என்றான் வலியுடன்.
“பாடிகாட் அதெல்லாம் அப்போ இருந்த டென்சன்ல சொன்னது.. எனக்கு உன்னை சாரி உங்களை ரொம்ப பிடிச்சு இருக்கு அத்தான். என்னை வச்சு மேய்க்க உங்களால தான் முடியும்.. ப்ளீஸ் இந்த கல்யாணத்தை அச்செப்ட் பண்ணிக்கோடா..” என்றாள் காதலாய்.
“நிஜமாவாடி” என்றான் ஆர்வமாய்.
“ம்ம் உங்களை என் மனசுக்குள்ள எப்பவோ குழி தோண்டி புதைச்சு பத்திரமா வச்சு இருக்கேன் அத்தான்” என்றாள் கண்கள் முழுதும் காதலுடன்.
அவளது வார்த்தையை கேட்டு புண் பட்ட மனம் சிலிர்த்து எழ தாவி வந்து அணைத்துக்கொண்டான் அவளை.
அவனால் நம்ப முடியவில்லை அவள் காதல் சொன்னதை.
இன்னும் இருக்கமாக அனைத்து அதை தெளிவு படுத்திக்கொண்டவன்
“எப்போடி கல்யாணத்தை வச்சுக்கலாம்” என்றான் கண்ணடித்து காதலாய்.
“எனக்கு இப்போ இந்த நிமிஷம் கூட ஓகே டா பாடிகாட்” என்றாள் குசும்பாய்.
“உனக்கு இருக்குற கொழுப்பு இருக்கு பாரேன்.. பாடி காட்னு சொன்ன இந்த வாயை கடுச்சு வைக்கிறேன் பாரு” என்று அவளின் முகம் பார்த்து குனிய முகம் சிவந்து அவனது ஆசைக்கு கட்டு பட்டு நின்றாள் கவி...
கார்த்திக் கவியின் திருமணத்தோடு வனா மதி திருமணத்தையும் சேர்த்து செய்யலாம் என்று திகம்பரி சொல்ல
“நீ தான் என்னோட நிஜ தோழி” என்று வனா குறும்பாய் சொல்ல
“ஹலோ பாஸ் நான் உனக்கு தோழின்றதுக்கு முன்னாடி மதிக்கு அக்கா... சோ அதான் இந்த ஏற்பாடு” என்று வனாவை வம்பிழுக்க
“நீங்க சொன்னா சரியா தான் இருக்கும் அண்ணி” என்று அவனும் வம்பிழுக்க
“பாரு வனா திசிஸ் டு மச்.. நான் உன்னோட தோழி அதுக்கு பிறகு தான் அண்ணி” என்று அவனை முறைக்க
“ஹஹா இப்போ வழிக்கு வந்தியா... என் கிட்டயேவா” என்று அவன் சிரிக்க
“போடா எப்போ பாரு என்னை வம்பிளுத்துகிட்டே.. இரு உங்க அண்ணா கிட்ட சொல்றேன்”
“சொல்லேன் எனக்கென்ன எப்படியும் அவரு யாரு பக்கமும் பேசாம போனை காதுக்கு கொடுத்துட்டு இடத்தை காலி பண்ணிடுவார்.. பஞ்சாயத்து வச்ச நாம தான் முழிக்கணும்” என்று சொன்னவனின் பேச்சில் அண்ணனை பற்றிய பெருமிதமே இருந்தது.
அதை உணர்ந்த திகம்பரிக்கும் மனம் நிறைந்து தான் இருந்தது.
திகம்பரியின் மீது கொள்ளை கொள்ளையாய் காதல், அன்பு, பாசம் எல்லாம் இருந்தாலும் அதை மற்றவர்களின் பாசத்தோடு ஒப்பிட்டு நீ உசத்தி என்று அவன் யாரிடமும் காட்டியது இல்லை. அதை நன்கு உணர்ந்து கொண்ட ரீகா “எங்களது அன்பை” யாருக்கும் வெளிச்சம் போட்டு காட்டணும்னு எந்த அவசியமும் இல்லை என்ற புரிதல் அவளுக்கும் இருந்தது.
மற்றவர்களின் முன் நீயும் எனக்கு அவர்களை போல் தான் என்ற போக்கையே ராயர் கடை பிடிப்பான். அதை தான் வனா இங்கு சொன்னது.
நிச்சயம் செய்ய நல்ல நாள் குறித்து, எல்லா ஏற்பாடும் நடந்துக்கொண்டு இருந்தது. திகம்பரியோடு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சென்று நிச்சயத்திற்கு உடைகள் எடுத்தார்கள்.
விடிந்தால் நிச்சயம் என்கிற நிலையில் வந்து நின்றது.. குலதெய்வ கோவிலில் வைத்துக்கொள்ளலாம் என்று சிவனாண்டி சொல்ல அதன் படி முன் இரவே எல்லோரும் அங்கே சென்றார்கள். நிச்சயத்துக்காக ரவி, நந்தா, ராஜ், கார்த்தியின் குடும்பம் என்று எல்லோருமே வந்திருந்தார்கள்.
அடுத்த நாளும் விடிந்தது.. எழுந்ததிலிருந்தே திகம்பரியை இம்சை பண்ணிக்கொண்டு இருந்தான் ராயர். அவளை கிளம்பவே விடவில்லை.. அவளும் எவ்ளவோ தடுத்து பார்த்தாள். ம்கும் அவன் அடங்கவே இல்லை.
அவளுக்கு தலை சீவி விடுகிறேன் என்று தலை முடியை சிக்காக்கி விட்டான். புடவைக்கு கொசுவம் எடுக்குறேன் என்று புடவையை கசக்கி வைத்தான். மேக்கப் போட்டு விடுகிறேன் என்று அவளின் முகத்தை அலங்கோலம் செய்து வைத்தான். இது போதாது என்று அவள் போகிற இடமெல்லாம் சென்று அவளை இம்சை பண்ணினான்.
பூ, பழம், தேங்காய் என்று எடுத்து வைக்கும் தட்டுகளை கலைத்து வைத்தான். அவளுக்கு மூச்சு முட்டியது அவனது செயலில்..
“மாமா எல்லாரும் கோவிலுக்கு போய்ட்டாங்க நாம் மட்டும் தான் போகல.. தாமதமா போனா எல்லாரும் ஓட்டுவாங்க மாமா.. ப்ளீஸ்” கெஞ்ச
“அப்போ இப்பவே எனக்கு நீ வேணும்..” என்றான் அடமாய்.
“இப்போ கோவிலுக்கு போறோம் மாமா வந்து தரேனே.. என் செல்லம் இல்ல ப்ளீஸ் மாமா” கெஞ்சியவளை
“அப்போ இன்னைக்கு கண்டிப்பா.. வேணும்” என்றான் பிடிவாதமாய்.
“கண்டிப்பா தரேன் போதுமா”
“சோ என் பார்வையை மறந்துட்ட..” கொக்கி போட்டான் ராயர்.
“உன்னோட அன்பு என்னை எல்லாத்தையும் மறக்க வச்சிடும் மாமா.. இவ்வளவு நாள் நான் கேட்டதுக்காக என் விருப்பத்துக்காக என்னை விட்டு தள்ளி இருந்தியே அதுக்காகவே நான் என்னை தரலாம் மாமா” என்றாள் காதலாய் திகம்பரி.
“நிஜமாவாடி”
அவனது கன்னத்தை வருடி விட்டு “சத்தியமா..” என்றவள் கிளம்பப்போனாள்.
திரும்பியவளை பற்றி இழுத்து “ஐ லவ் யூ கண்ணம்மா” என்றான் அதித காதலாய்.
“நானும் தான் மாமா” என்றவள் கிளம்பி வந்தாள்.
அவனும் கிளம்பி வந்தான்.. தீஷி முன்னாடியே சென்றிருக்க இருவரும் ஒருவருக்கொருவர் பிறந்தது போல அவ்வளவு அம்சமாய் நடந்து வந்ததை கண்ட வீட்டவர்களின் கண்கள் அந்த காட்சியில் நிறைந்து போனது..
திகம்பரியை கைபிடியில் வைத்து அழைத்து வந்தவன் அங்கு போட்டிருந்த மனை பலகையில் அமரவைத்து தானும் அவள் அருகில் அமர்ந்தவனை கேள்வியாக பார்த்தாள் திகம்பரி..
நாம தான் வனா சார்புல தட்டை மாத்தணும் என்றான்.
“ஓ சரி’ என்று ஒப்புக்கொண்டவள் அய்யர் மனை ஓலை வாசிக்க அவளது கவனம் அதில் சென்றது..
நடராஜன் சிவகாமி தம்பதியின் இரண்டாவது மகன் வனாவுக்கும், சிவனாண்டி தில்லையம்மா அவர்களின் மகள் மதிக்கும் என்று அய்யர் சொல்லிக்கொண்டு இருக்கும் சமயம் யாரும் எதிர் பார்க்காத வகையில் திகம்பரியின் கழுத்தில் ராயர் தடிமானான தங்க சங்கிலியில் பிணைத்த தாலி செயினை அணிவித்து, கூடவே மஞ்சள் கிழங்கு வைத்து கட்டிய மஞ்சள் கையிற்றை தன் நெஞ்சில் சுமக்கும் ரீகாவின் கழுத்தில் மூணு முடுச்சு போட்டு கட்டினான்.
அதை கொஞ்சமும் எதிர் பார்க்காத திகம்பரி நிமிர்ந்து ராயரை பார்க்க, அவனோ அவளை தான் பார்த்துக்கொண்டு இருந்தான் அவள் முகத்தில் வரும் கலவையான உணர்வுகளை அவதானித்தபடி.
வார்த்தையே வர வில்லை அவளுக்கு.. அவளுக்கு மட்டும் இல்லை. அங்கிருந்த யாருக்குமே வரவில்லை.
“மாமா” என்றாள் உருகலாய்.
“நான் உன் புருசண்டி...” என்றான் கெத்தாய் ராயர்.
அவனது கெத்தில் மனம் நிறைந்தவள் “யாரு இல்லைன்னு சொன்னது” என்று மென்மையாய் சிரித்தாள்.
“மகிழ்ச்சியாடி” என்றான் வாஞ்சையாய்.. அவளின் கன்னம் மறைத்த முடிகளை காதின் பின் சொருகியபடி..
“ம்ஹும்” என்றவள் அவனின் மார்பில் தஞ்சம் புகுந்தாள்.
“நிஜமா சந்தோஷம் இல்லையா..” என்றான் கேலியாய்
“இல்லை” என்று தலை அசைத்தாள். அதற்க்கு நேர் மாறாய் அவனின் அங்கீகாரம் அவளை மிதக்க செய்தது..
“ச்ச்சோ இது தெரியாமா நான் உனக்கு தாலி வேற கட்டிட்டனேடி” என்று வருத்தபட்டவனின் கைகளில் பட்டென்று அடித்தாள் திகம்பரி.. அதில் மனம் கொள்ளா சிரிப்பை உதிர்த்தவன் தன்னோடு இருக்க அணைத்துக்கொண்டான் அவளை...
அந்த சமயம் சரியாய் எல்லோரும் அட்ச்சதையை அவர்களின் மீது போட்டு நீண்ட ஆயுளோடும், தீர்க்க சுமங்கலியோடும், குறையாத அன்போடும் குன்றாத வளத்தோடும் வாழ வேண்டும் என்று ஆசி வழங்க, தில்லையிடம் இருந்த தன் மகனை வாங்கி தன் இன்னொரு பக்கத்தில் இடுக்கிக்கொண்டு குறையாத சிரிப்போடு குடும்பமாய் அவர்கள் காட்சிக்கொடுக்க இளையவர்கள் அனைவரும் “ஓ” என்று கூச்சல் போட்டு தங்கள் வாழ்த்தையும் சந்தோசத்தையும் பகிர்ந்துக்கொண்டார்கள்.
என்றும் உயிராக தொடரும் அவர்களின் உறவு...
எல்லாரும் எல்லா வளங்களும் பெற்று இப்பூமியில் இன்புற்று வாழவேண்டும்...
குறைவில்லா நலனோடு வாழ்க வளமுடன்...
நன்றி..
வணக்கம்...





