Notifications
Clear all

அத்தியாயம் 21-30

 
Admin
(@ramya-devi)
Member Admin

அத்தியாயம் 21

கண்களை மூடியவளின் நினைவுகளில் கடந்து சென்ற காலங்கள் எழ அதை மகிழ்வுடனே அசை போட்டாள்.

வார நாட்களில் மாலை நேர சந்திப்பு என்றால் ஞாயிறு மட்டும் முழு நாளும் அவளுடன் தான் அவன் இருப்பான். பெரும்பாலும் வீட்டில் தான் இருப்பார்கள்... அன்றும் அது போலொரு ஞாயிறு தான்.

திகம்பரிக்கு அசைங்மென்ட் வேலை இருக்க இவனோ அவளை எழுத விடாமல் தொனத்திக்கொண்டே இருந்தான்.

அவளது சாலை எடுத்து கைகளில் சுத்திக்கொண்டு அவளுக்கு அருகில் அமர்ந்துக்கொண்டு “உன் எழுத்து அழகா இருக்குடி.. ஆனா இப்படி எழுதாத சேர்த்து சேர்த்து எழுதுற அது நல்லாவே இல்ல.. தனிதனியா எழுத்து அதோட அசைங்மென்ட் எழுதும் போது கலர் யூஸ் பண்ணி எழுது இன்னும் கொஞ்சம் பெருசா எழுது” என்று அவளை வெருபேத்திக்கொண்டு இருந்தான்.

“ராய் நீ கொஞ்ச நேரம் சும்மா இரு நீ பேசுற பேச்சுல எனக்கு எல்லாமே மறந்து போய்டும் போல..” என்று அவள் அதட்டல் போட்டாலும் கொஞ்ச நேரம் தான் அமைதியாய் இருப்பான். பின்பு எப்பவும் போல

“ஏண்டி எப்போ பாரு சுடிதாரே போடுற.. உனக்கு வேற உடையே கிடைக்கலையா.. இந்த பாவாடை தாவணி புடவை எல்லாம் என்ன பாவம் பண்ணுச்சு..” என்று கேட்டவனிடம் கொஞ்சம் கூட விரசமே இல்லை.

அதை உணர்ந்து கொண்டவள் “இப்போ அது ரொம்ப முக்கியம் பாரு.. ப்ளீஸ் ராய் என்னை எழுதவிடு..” என்று விட்டு அவள் எழுத தொடங்க சிறிது நேரம் அவளையும் அவள் நோட்டையும் வேடிக்கை பார்த்தவன் அதுக்கு மேல் சும்மா இருக்க முடியாமல் அவளின் தோளை சுரண்டினான்.

“என்னடா...” அலுத்து போய் வந்தது அவளுக்கு.

“அது நீ சரக்கடிப்பியாடி..” கண்ணை சிமிட்டி கேட்டவனை கண்டு கொலை வெறி வந்தது.

“அடங்க மாட்டியாடா நீ..“ கடுப்படித்தவள் “ஏண்டா என்னை பார்த்தா சரக்கடிக்கிற மாதிரியா இருக்கு” முறைத்தாள்.

“இல்லடி உங்களை போல ரொம்ப பணக்காரவங்க பப்புக்கு போய் மட்டை அவாங்களே அது தான் நீயும்...” என்று இழுத்து நிருத்தியவனை கண்டு கோவம் வந்தது. ஆனாலும் அவனுக்கு அது தெரிய வேண்டும் என்று உறுதியை பார்த்தவளுக்கு 

“இல்லடா.. எனக்கு அதெல்லாம் பிடிக்காது.. முக்கியமா நண்பர்கள்னு யாரும் கிடையாது.. இருந்தா தானே ஊர் சுத்த, தேவை இல்லாத பழக்கங்களை பழகுறதுக்கு.. அதனால உன் பொண்டாட்டி சுத்த கூல் நாட் போர் ஹாட்..” என்றாள் தெளிவாக. அவளது அந்த பதிலில் 

“உனக்கு நண்பனா தான் நான் இருக்கேனே அப்புறம் எதுக்குடி நண்பன் இல்லன்னு சொல்ற..” கோவம் கொண்டான்.

“எது நீ நண்பனா.. அப்போ நீ என் புருஷன் இல்லையா..” அவனை மடக்கினாள்.

“அது நான் மூடா இருக்கும் போது தான். மத்தபடி நான் உன் நண்பன்” என்றவனை பார்த்து

“அப்போ நீ இப்போ மூடா இல்லையா..”

“ம்ஹும் நான் இப்போ உன் நண்பன்” என்றவன் அவளை நெருங்கி வந்து கன்னத்தில் கன்னம் உரசி பின்பு லேசாய் முத்தம் வைக்க

“அப்போ இதுக்கு பேரு என்னடா..” முறைத்தாள்.

“இது நான் உன் நண்பன்ற முறையில முத்தம் குடுத்தேன்.. அதுவுமில்லாம நாம இன்னைக்கு தானே அந்த உறவை அறிமுகம் படுத்துனோம் அது தான் சின்ன செலப்ரேசன்” என்று கண்ணடித்தவனின் அடாவடி தனத்தில் மனம் மயங்கி தான் போனது.

“நீ எனக்கு என்ன உறவா வந்தாலும் நீ என் கிட்ட நடந்துக்குறது புருசன்ர முறையில மட்டும் தாண்டா... ஆனா நீ அதுக்கு பல கலர் பேப்பர சுத்தி உன் காரியத்தை சாதிச்சுக்குற பத்தியா அங்க நிக்குரடா நீ..” கடுப்படித்தவளை கண்டு ‘ஈஈஈ’ என்று பல்லை காட்டி ஒன்னும் தெரியாத அப்பாவி போல சிரிக்க, அவளுக்கு அவன் மீது இன்னும் காதல் தான் பெருகியதே ஒழிய கொஞ்சம் கூட கோவமே வரவில்லை..

அவனது சேட்டையை ரசித்துக்கொண்டே எழுதிக்கொண்டிருந்தாள்.. அவள் எழுதுவது அவனுக்கு போரடிக்க

“ஏண்டி ஒரு நாள் தானே உன் கூட இருக்கேன் இப்பவும் இந்த புத்தகத்தை தூக்கி வச்சுக்கணுமா.. பிளீஸ் வாடி ஏதாவது விளையாடலாம்.” கெஞ்சியவனை கண்டு

“ம்ம் நான் இன்னைக்கு உன் கூட விளையாடுறேன்.. நாளைக்கு கிளாஸ்க்கு வெளியே நிக்கிறேன் சரியா” என்று கடுப்படித்தவள் “ஆமா நீ என்ன சின்ன பிள்ளயாடா.. விளையாட கூப்பிடுற”

“ஏண்டி சின்ன பிள்ளைங்க தான் விளையாடனுமா.. ஏன் நானெல்லாம் விளையாட கூடாதா..” என்றபடியே அவள் போட்டிருந்த கொண்டையை அவிழ்த்து விட்டு அவளது முடியோடு விளையாட, அவனது கையை தட்டிவிட்டுட்டு கூந்தலை அள்ளி முடிய, அதற்க்கு விடாமல்

“நீ எழுது நான் உன்னை தொந்தரவு பண்ணாமல் இதோட விளையாடுறேன்” என்றவன் அவளது பட்டு போன்ற கூந்தலில் விரலை நுழைத்து, முறுக்கி, பின்னி, கசக்கி என்று அவன் அதை போட்டு படாத பாடு படுத்துக்கொண்டிருக்க அவள் தலையிலே அடித்துக்கொண்டு எழுத ஆரம்பித்தாள்.

அதுவும் கொஞ்ச நேரம் தான். அவளது கூந்தலை வாசம் பிடித்தவன் அதை விட்டுட்டு “ஆமா நீ தலைக்கு என்ன போடுவ..“ அதி முக்கிய சந்தேகத்தை கேட்டவனை கண்டு கடுப்பாய் வந்தது.. ஒரு பத்தி கூட அவள் எழுதி முடிக்கவில்லை. அதற்குள் அவளை நோண்ட ஆரம்பித்தான்.

“என்னடா வேணும் உனக்கு சத்தியமா முடியல..” பாவமாய் கேட்டவளை கண்டு என்ன நினைத்தானோ..

“சரி விடு நீ டயர்டா இருக்க நான் உனக்கு போய் காபி போட்டு எடுத்துட்டு வரேன்” என்று கூறி கீழே செல்ல

“போய் அதை முதல்ல செய்யி” என்று கையெடுத்து கும்பிட்டாள்.

“போடி ரொம்ப தான் பண்ற..” முறுக்கிக்கொண்டு கீழே சென்றான்.

அவள் தொடர்ந்து எழுதி முடித்தவள் நேரம் பார்க்க கிட்ட தட்ட அவன் கீழே சென்று ஒரு மணி நேரம் ஆகி இருந்தது.

“என்ன இவ்வளவு நேரமா வராம இருக்கான்.. என்னை விட்டுட்டு கொஞ்ச நேரம் கூட இருக்க மாட்டனே..” சிந்தித்த படி கீழே சென்றவள் கூடமே வெகு அமைதியை இருந்தது.. “ராய்.. ராய்.. எங்க இருக்கீங்க..” அவனை கூப்பிட்டபடியே அவனை தேடினாள்.

ஒவ்வொரு இடமாய் தேடினாள். கடைசியாய் சமையலறைக்கு வந்தவள் அங்கு கண்ட காட்சியில் ராயரை என்ன செய்வது என்றே தெரியவில்லை.

அவ்வீட்டின் சமையல் செய்யும் நாயரின் வாயில் துணியை வைத்து அடைத்து, அவருக்கு உதவி செய்யும் கற்பகத்தின் கைகளை பின்னல் கட்டி போட்டு, டிரைவர் தாத்தாவை எடுபிடியாக்கிக்கொண்டு அவரின் உடையில் கலர் கலராய் கரை படிய விட்டு இரு கையிலும் ஏதேதோ கிண்ணங்களை ஏந்த விட்டு பாவமாய் மூணு பேரையும் நிற்க வைத்திருந்தான்.

பத்தாதுக்கு கீழே தரையில் மாவெல்லாம் சிந்தி, வீட்டில் இருக்கும் பாத்திரம் முழுவதும் சிங்கிள் கொட்டி வைத்திருக்க, சமையல் செய்யும் மேடை எல்லாம் வெங்காய தோல், கருவேப்பிள்ளை கொத்தமல்லி இறைந்து கிடக்க, மஞ்சள் போடி மிளகாய் போடி என்று எல்லாமே சிந்தி, பாலை பொங்க விட்டு அடுப்பை நாறடித்து என்று அவன் சமையலறையே அலங்கோலம் பண்ணி இருந்ததான். அவ்வளவு அட்டகாசம் செய்து வைத்திருந்தான்.

அவளது விலை உயர்ந்த சாலை தலையில் முண்டாசு போல கட்டிக்கொண்டு சட்டையை கலட்டி அங்கிருந்த சேரில் போட்டுவிட்டு, அவளது டேபிள் ராஜூடனும் நந்தாவுடனும் பேசிக்கொண்டே அவனது போனில் ஏதோ சமையல் விடியோ ஓடிக்கொண்டிருக்க, வெற்று மேனியுடன் கைகளில் கத்தியோடு வெங்காயத்தோடு போராடிக்கொண்டிருந்தவனை காண்கயில் அவளுக்கு மயக்கமே வந்து விடும் போல இருந்தது..

“ராய் உங்களளை தான்.. என்ன பண்ணி வச்சு இருக்கீங்க..” என்றவளை சட்டை செய்யாமல்

“மாமா என் கையால சமைக்கிற சாப்பாட்டை சாப்பிட உங்களுக்கு குடுத்து வைக்கல பாருங்க.. சரி எப்போ வருவீங்க” என்று தன் மாமனாரிடம் பேச்சில் மும்மரமாய் இருந்தான்.

“எதுக்கு வந்தவுடனே உன் சாப்பாட்டை சாப்பிட்டுட்டு ஹாஸ்பிட்டல்ல சேர்ரதுக்கா” நந்தா அவனை வாரி விட.

“போடா டேய் உனக்கு என் சமையல பத்தி என்ன தெரியும் நீ என் ரீகா கிட்ட கேட்டு பாரு அவ சொல்லுவாடா...” என்று பெருமை பீத்திக்கொண்டவனை பார்த்து

“அப்படியாடா ராசா உன் பின்னாடி தான் காளியாத்தா அவதாரத்துல என் தங்கச்சி நிக்குறா நீயே அவளை சொல்ல சொல்லு நான் என் காது குளிர கேக்குறேன்” என்று அவன் கடுப்படிக்க

“ஐ வந்துட்டாளா...” என்று திரும்பியவன் “எழுதி முடுச்சுட்டியாடி.. செம்ம போர்.. அது தான் உனக்கு சமைக்கலாம் என்று வேலை பார்த்துகிட்டு இருக்கேன். நீ அங்க அந்த சேர்ல உக்காரு இன்னும் கொஞ்ச நேரத்துல முடுஞ்சுடும்” என்று சொல்ல

“இது தான் நீங்க வேலை பார்க்குற அழகா...” என்று கேட்டு சுத்திலும் கண்களை ஓட்டி அதுவும் அங்கிருந்த மூவரின் மேலும் பார்வையை நிலைக்க விட, அதை புரிந்துக்கொண்டவன்   

“ஆங்.. அது இந்த நாயரு சும்மா சும்மா நோய்யின்னு நோய்யின்னுட்டே இருந்தாரு அது தான் வாயை அடச்சுட்டேன்.. இதோ இந்த கற்பகம் என்னை வேலை செய்ய விடாம அத எடுத்து தரேன் இத எடுத்து தரேன்னு சொல்லிக்கிட்டு பக்கத்துல வந்தாளா அது தான் கடுப்பாயிடுச்சு, பொறவு தாத்தா சும்மா தானே இருக்காரு அது தான் உதவிக்கு கூப்பிட்டுகிட்டேன் என்று ஒரொரு காரணம் சொன்னவனை என்ன செய்வது என்று தெரியவில்லை திகம்பரிக்கு..

நாயரின் வாயிலிருந்த துணியை எடுத்துவிட்டு “என்ன நாயரே இதெல்லாம்” கேட்க

“அம்மா நான் ஒண்ணுமே செய்யல.. பால் பொங்குது அடுப்பை அனைங்கன்னு சொன்னேன் அதுக்கு என் வாயில துணிய வச்சு அடைச்சிட்டாரும்மா..” என்க

“அது மட்டும் இல்லம்மா பாலை பொங்க விட்டு அடுப்பே நாரடுச்சுட்டாறு அதை தொடைக்க வந்த கற்பகத்தையும் கையை கட்டி போட்டுட்டாரு” என்று போட்டு குடுக்க

திகம்பரி ராயரை பார்த்து “என்ன மாமா இதெல்லாம்.” கண்களால் விசாரிக்க

“அது என் மேல எந்த தவறும் இல்ல.. நான் முதல் முதல உன் வீட்டுல சமைக்கிறேன்ல அது தான் முதல்ல பாலை காய்ச்சி பொங்க விட்டேன். அதுக்கு இதுங்க ரெண்டும் ஓவரா பேசுனுச்சுங்க.. அது தான் கட்டி போட்டுட்டேன்..” குறும்பு சேய்யும் கண்ணனை போல சொன்னவனை கண்டு சிரிப்பு தான் வந்தது திகம்பரிக்கு.. அதை கேட்டு கொண்டிருந்த நந்தாவுக்கு எந்த சுவரிலாவது முட்டிக்கொள்ளலாம் போல இருந்தது..

ராஜ் அடக்க முடியாமல் சிரித்து விட்டார்.

திகம்பரி எதுவும் சொல்லாமல் போக திரும்பி ராஜிடம் “மாமா நான் செஞ்சது சரிதானே..” என்று கேட்க

அவர் சிரிப்பை அடக்க முடியாமல் “நூறு சதவீதம் நீங்க செஞ்சது சரிதான் மாப்பிள்ளை” என்று மருமகனுக்கு சப்போர்ட் பண்ண அண்ணனும் தங்கையும் அவரை முறைத்தார்கள்.

“உங்க சப்போர்ட் இருக்குற வரை என்னை யாராலும் அசைக்க முடியாது மாமா..” என்று தலை குனிந்து மரியாதை செய்தவனை கண்டு நந்தாவுக்கு புன்னகை வந்தது.. ஆனாலும் அடக்கிக்கொண்டான்.

“அப்பா அண்ணா நான் பிறகு பேசுறேன்” என்று டேபை அணைத்தவள் ராயரை பார்த்து முறைத்து விட்டு மற்ற மூவரிடம் “நீங்க வேலையை பாருங்க” என்றுவிட்டு ராயரை இழுத்துக்கொண்டு தன் அறைக்கு சென்றாள்.

“ஏண்டா கொஞ்ச நேரம் வேலைன்னு சொன்னதுக்கா இந்த அட்டகாசம் பண்ணி வைப்ப” முறைத்தவளை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் அவளை அருகில் இழுத்து அவளின் கழுத்து வளைவில் தன் இதழ்களை புதைத்தவன் கண்களை மூடி அவளின் வாசனையை தனக்குள் நிரப்பியவன்

“நீ ஏன் என்னை ஒதுக்குற.. நீ இல்லாம என்னால இருக்க முடியாதுன்னு தெரியுமில்லடி” அவள் மீதே திருப்பியவனை கண்டு

“கொஞ்ச நேரம் தானேடா..அதுக்கு இப்படி தான் பண்ணி வைப்பியா...”

“இதுக்கு மேலேயே பண்ணுவேன்.. ஆனா நீ பாவம்னு தான் விட்டு வச்சுருக்கேன்..” என்றவனின் கைகள் அவளை இறுக்கி பிடிக்க மூச்சு திணறினாள்.

அவளது அவஸ்த்தையை உணர்ந்தவன் அவளை படுக்கையில் அமரவைத்து விட்டு கட்டிலுக்கு கீழே அமர்ந்து அவளின் மடியில் முகம் புதைந்து கொண்டான்.

“என்ன ஆச்சு மாமா.. ஏதாவது பிரச்சனையா..”

“அப்படியெல்லாம் எதுவுமில்ல.. ஆனா மனசு ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு” என்றவன் அவளது மடியில் இன்னும் அழுந்தி புதைத்துக்கொள்ள, தன்னோடு அவனை சேர்த்து எடுத்தவள் அவனது தலையை கொதி கொடுத்தபடியே

“ஏதும் சிக்கலான கேசா மாமா..”

இல்லை என்று மண்டையை உருட்டினான்.

“அக்கா மாமா பேசலையா..”

அதுக்கும் இல்லை என்று மண்டையை உருட்டினான்.

“அப்படின்னா வனா ஏதாவது சேட்டை பண்ணினா”

“ம்ஹும்” மெல்ல முணு முணுக்க

“பொறவு என்ன தான் மாமா ஆச்சு”

“எனக்கு உன் மேல படுத்துக்கணும் போல இருக்கு” என்றவனை கண்டு திகைத்து தான் போனாள்.

“மாமா”

“சாரி உடுத்திட்டு வா” என்றவனின் குரலில் முன்பு போல் இருந்த இலக்கம் இல்லை. மாறாக ஒரு கடினமும் இதை நீ செஞ்சே ஆகணும் என்ற உறுதியோடும். எனக்காக இதை செய்ய மாட்டியா.. என்ற ஏக்கமும் இருக்க ஒரு கணம் அவனை ஆழ்ந்து பார்த்தாள்.

பின் வேறு அறைக்கு சென்று அவள் புடவையை கட்டி முடித்து வந்து அவனின் முன்பு நிற்க, அவனோ அவளை ஏறெடுத்தும் பாராமல் அவளை படுக்கையில் சரித்து அவளின் அருகில் படுத்தவன் அவளின் மார்பில் முகம் புதைத்துக்கொண்டான். வேறு எதுவும் செய்ய முயலவில்லை.

இரு கரம் கொண்டு அவனை தன்னோடு புதைத்துக்கொண்டவள் அவனை மெல்ல தடவி கொடுக்க அவளின் முந்தானையை எடுத்து இருவருக்கும் சேர்த்து போர்த்திக்கொண்டவன் அவளை தவறாய் ஒரு தீண்டல் கூட தீண்டவில்லை.. ஏன் அவளை ஒரு பார்வை கூட பார்க்கவில்லை.

அவளுக்கு புரிந்து போனது அவன் ஏதோ மன உளைச்சலில் இருக்கிறான் என்றும்.. ஆறுதலுக்காக மட்டுமே அவன் தன்னை நாடி இருக்கிறன் என்றும் 

அவளது வருடலில் நினைவுகள் பின்னுக்கு தள்ளி போக ஆழ்ந்த நித்திரைக்கு போனான்.

அவன் ஆழ்ந்து உறங்குவது தெரிய அப்படி என்ன கஷ்டமாய் இருக்கும் இவருக்கு... என்று யோசித்தவளுக்கு சட்டென்று விஷயம் புரிபட

“அச்சோ இதை எப்படி மறந்து போனேன்” என்று தன் தலையிலே அடித்துக்கொண்டவள் தன் மீது படுத்திருந்தவனை இன்னும் இறுக்கி அணைத்துக்கொண்டாள்..

 

அத்தியாயம் 22

 

ஓரளவு தெளிந்து எழுந்தவன் அவளை அமர வைத்து அவளது தோள் வளைவில் முகம் புதைத்துக்கொண்டு எங்கோ வெறிக்க அவளுக்கு மனம் பிசைந்தது..

“மாமா”

“ம்ம் என்னால இன்னும் மறக்க முடியலடி.. எவ்வளவு தான் பாசம் ஊட்டி வளர்த்தாலும் என் அம்மாவை யாராலும் மீட்டு கொண்டு வரமுடியாது இல்லையா... எனக்கு என் அம்மாவின் வாசம் வேணும்டி..” என்றவனின் கண்கள் கலங்கி தேங்க

“நான் நீங்க வச்சிருக்குற உங்க அம்மா புடவை ஒன்னு கட்டிக்கிட்டு வரவாங்க..” பரிதவிப்பாய் கேட்டவளை கண்டு நெகிழ்ந்தவன்

“வேணாம்... இப்போ எனக்கு உன் வாசம் தான் வேணும்” என்றவன் அவளிடம் சரணடைய அவனை தாயாய் தாங்கிகொண்டாள்.

இன்றைய தினம் தான் ராயரின் பெற்றோர் மரணம் ஏய்த நாள்.. மூன்று வயதில் தொலைத்த தன் அம்மாவின் வாசனையையும், அன்பையும், ஆதரவையும் தன்னவளிடம் தேடினான். 

ராயரின் குடும்பம் மூத்த தலைமுறையில் உள்ள பெரிய மனிதர்களை இழந்து நிற்க மேற்கொண்டு என்ன செய்வது என்று திகைத்து மருண்டு நின்றது சில காலம்.. அந்த காலத்துக்குள் ராயர் சற்றே விலகிவிட்டான் எல்லாவற்றிலிருந்தும் எல்லோரிடமிருந்தும்...

அதாவது பாசம் இருக்கும். ஆனால் அவனுக்கு எப்போதுமே யாரையாவது சார்ந்தே இருக்கணும்... இந்த குணத்தை இயற்கையே மாத்தியதா இல்லை தானே நிஜம் உணர்ந்து தனித்து நின்ற பொழுதில் மாற்றிக்கொண்டானா என்று தெரியவில்லை.

தம்பி தன்னை விட சின்னவன் என்ற பொழுதில் இவனுக்கு விட அவனுக்கு தானே சற்று முக்கியத்துவம் இருக்கும், கூடவே புதிதான திருமணம் வேறு, மூச்சுவிட முடியா அளவு வேலை தில்லைக்கு.

எங்கிருந்து தொடங்குவது என்று மருண்ட அக்காவை பார்த்து இனி தன்னை தானே பார்த்துக்கொள்ள வேணும் என்ற விதை ஒன்று உள்ளத்தில் உன்றி போனோதோ என்னவோ தெரியவில்லை. மாமாவிடம் ஒட்டுதல் இருந்தாலும் அவனுக்கு அந்த சிறுவயதில் தன் தாயின் அரவணைப்புக்காக ஏங்கி தான் போனான்.

எதற்கு எடுத்தாலும் மற்றவரை சார்ந்து இருந்த சூழலை மாற்றிக்கொண்டவன் அவர்களை அதிகமாக நேசித்தான். அவனது அன்பு ஒரு சிறு அளவு கூட குறைவில்லை.

அந்த மாற்றிக்கொண்ட குணம் தன்னவள் தன்னிடம் வந்து சேர்ந்த உடன் அவனிடம் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது.. அதனாலேயே என்னமோ அவளை அவன் ஒரு கணம் கூட விட்டுட்டு இருக்க மாட்டான்..

ஊறுகாய் போல அவனுக்கு அவள் வேண்டும்..

இப்போதும் ஆறுதல் தேடும் சின்ன பிள்ளை போல அவளின் முந்தானையில் தன்னை சுருட்டிக்கொண்டவன் அவளிடம் தாய்மையின் அரவணைப்பை மட்டுமே யாசித்தான்..

அதை சரியாக புரிந்து வைத்திருந்தாள் திகம்பரி.

அவளுக்கும் அவனது இந்த குணம் ரொம்பவே பிடித்து போனது... யாரும் இல்லாமல் தனித்து நின்றவளுக்கு எல்லாமாகவும் வந்து நின்று அவளை திக்கு முக்காட வைத்து தன்னை முழுவதும் கொடுத்து காதலித்து கொண்டிருக்கும் ராயரை அவளுக்கு ரொம்ப ரொம்ப பிடித்து போனது..

அதுவும் பித்து பிடிக்கும் அளவுக்கு.. எதுக்கெடுத்தாலும் தன்னை சார்ந்து வாழும் அவனது அந்த குணம் அவளுக்கு தன் தனிமையை ரொம்பவும் போக்கியது.. தனிமையை வெறுத்தவளிடம் “இந்தா என்னை பிடி. என்னை அரவணைத்து உன் கிட்டக்கவே உன் மார்பு சூட்டிலே என்னை வைத்துக்கொள்” என்று தன்னை ஒப்படைத்து விட்டான்.

அவளும் அவனை காற்று கூட புகாமல் மழை வெயில் படாமல் தன்னுள் பொத்தி வைத்துக்கொண்டாள்.

இங்கு இருவருக்குமே மற்றவரின் அருகாமை இன்றி அமையாததாய் ஆகிப்போனது.

அவனை இப்படியே விட்டாள் நோஞ்சான் குழைந்தை அம்மாவின் மார்பை விட்டு வெளியே வர விரும்பாததை போல இப்படியே கிடப்பான் என்று புரிந்து அவனை வெளிய அழைத்து செல்ல பெரும் போராட்டம் பண்ணி அவனை விளக்கினாள் தன்னிடமிருந்து...

அதுவரை அவளிடம் சுகம் கண்டவன் அந்த சுகம் பறிபோனதில்

“நானெல்லாம் எங்கும் வரமாட்டேன்.. நீ வா, எனக்கு நீ தான் வேணும்” என்று அவளின் கையை பிடித்து இழுத்து அவளை படுக்கையில் தள்ளியவன் அவள் மீது படர்ந்துக்கொள்ள

அவனை தாங்கிய படியே “மாமா இப்படியே இன்னும் எவ்வளவு நேரம் இருப்பீங்க... வாங்க எங்காயாவது ஒரு மணிநேரம் மட்டும் போயிட்டு வருவோம்” என்று அவள் கூப்பிட

“அங்க போன உன் இதம் கிடைக்காது.. எனக்கு இது தான் வேணும்” என்றவன் அவளின் மார்பில் முகம் புதைத்துக்கொண்டு அங்கும் இங்கும் புரட்ட துடித்து போனாள்.

“மாமா என்ன பண்ற” அவனின் தலையை இருக்க பற்றிக்கொண்டாள் அசைய முடியாத படி..

“ப்ச் விடுடி..” என்று அவளிடமிருந்து விலகிக்கொண்டு சற்றே கீழே இறங்கி அவளது வயிற்றில் முகம் புதைக்க முனைய தடையாய் இருந்த ஆடை அவனை வெறுப்பேற்றியது.. அவள் அணிந்திருந்த புடவையை  சற்றே விலக்கிவிட்டு அவளது வெற்று வயிற்றில் முகம் புடைத்துக்கொண்டான்.

முன்னிருந்ததை விட அதிக இதம் அவனுக்கு கிடைக்க கண்களை மூடிக்கொண்டான் சுகமாய்.

அவளுக்கு தான் பெரும் அவஸ்தையாய் இருந்தது.. அவனது மூச்சு காற்று அவளது வயிற்றில் பட பட சிலிர்த்து போனது தேகம்.. கூடவே அவனது முறுக்கிய மீசையும் வயிற்றில் குத்தி தனியாய் அவளை இம்சை பண்ண, பெண்ணுக்குரிய சில உணர்வுகள் சட்டென்று மொட்டு விட, அவளது மூச்சுக்காற்றில் வெப்பம் ஏறியது..

இருகைகளால் அவனது தலையை பிடித்து கோதி விட்ட படியே அவன் கொடுக்கும் நூதன உணர்வுகளை தன்னுள் பதியம் போட்டுக்கொண்டாள்.

அவளிடம் பெரும் அமைதி நிலவ அதை உணர்ந்தவன் மெல்ல அவளை ஏறிட்டு பார்த்தான். கண்களை மூடியிருந்தவளின் உதடுகள் பற்களில் கடிபட்டுக்கொண்டு இருந்தது. அப்போது தான் தான் அவளை ரொம்பவும் படுத்துகிறோம் என்று புரிந்தது. ஆனாலும் விலகிக்கொள்ள மனம் வரவில்லை.

தன் நிலையிலிருந்து சற்றே மேலே வர அவளது உடம்பில் லேசாய் ஒரு நடுக்கம் பிறந்தது. அது எதனால் என்று புரிய ஆணாய் அவனுக்கு ஒரு கர்வம் தோன்றியது.. இன்னும் அவளை இது போல படபடக்க வைக்க வேண்டும் போல தோன்றியது.

அவளை சமிபீத்தவன் நடுங்கி கொண்டிருக்கும் இதழ்களை அவளது பற்களில் இருந்து எடுத்து விட, பட்டென்று அவனை கண் விழித்து பாத்தாள். அவளையே பார்த்து கொண்டிருந்தவனின் பார்வை வீச்சை தாங்க முடியாமல் மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.

மூடிய கண்களின் மீது முத்த மிட்டவன் அவளது இதழ்களை அவளது அனுமதி இன்றி சிறை எடுக்க மொத்தமாய் அவளது உடம்பு நெகிழ்ந்து போனது..

இன்று வரை எல்லை மீறாதவனின் கரங்கள் தன்னவளை உணர தொடங்க பட்டென்று கண்களை விரித்து அவனை பார்த்தாள்.

அவனது கண்களில் செல்ல சீண்டலும் கூடவே அதித காதலும் சற்றே மோகமும் தெரிய மூச்சுக்கு தவித்து போனாள் திகம்பரி..

அவளது படப்படப்பை இன்னும் கூட்டுவது போல காதில் ஏதோ சொல்ல சட்டென்று அவனை தன்னிடமிருந்து தள்ளிவிட்டாள்.

ஆனால் மறு கணம் அதே வேகத்தோடு அவனை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டவள் அவனது பேச்சு அவளை உணர்வுகளை அதிகரிக்க அதை தடுக்கும் விதமாய்

“எதுவும் பேசாத மாமா.. ப்ளீஸ்” கிசுகிசுக்க

“அது என்னால முடியாதுடி..” என்றவனின் குரல் மேலும் சீண்டலுடன் அவளது காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது..

அவனது பிடியில் விலக முடியாமல் ஆலைக்குள் மாட்டிய இலவம் பஞ்சாய், கரும்பாய் அவளது நிலை இருக்க எல்லைகளை கடக்காமல் அவளது பெண்மையை மதித்து அவளுக்கு ஆறுதல் கொடுத்தவனின் கரங்களும் உதடுகளும் அதற்க்கு விரோதமாய் அவளை படுத்தி எடுத்தது..

அவளது முகம் செஞ்சாந்து பூசியது போல இருக்க பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு தாள முடியாத வேட்டகை எழ, அவளிடம் தன்னை சரணடைத்தான்..

ஒரு வழியாய் அவனை தேற்றி அவனிடமிருந்து விலகியவள் “இப்போவாவது போகலாமாங்க..” கேட்க

“அதுக்கு அவசியம் இல்லடி அது தான் நீ மருந்து குடுத்துட்டியே..” கண்ணடித்தவன் அவளை எழுப்பி கீழே கூட்டி வந்து இருவரும் சாப்பிட்டார்கள்.

ஒவ்வொரு நாளின் பொழுதும் வெகு இனிமையாய் செல்ல மனதுக்கு அவ்வளவு சந்தோசமாய் இருந்தது இருவருக்கும்.

வாழ்க்கையில் எல்லாமே கிடைத்த திருப்தி இருவருக்கும்...

ராயர் தான் எப்போதுமே அவளது வீட்டுக்கு வருவான். ஒரு நாள் கூட அவளை அவன் வீட்டுக்கு அழைத்து சென்றது இல்லை. அவளும் அதை பெரிதாக எடுத்துக்கொண்டது இல்லை. அவளது மனதில் அது பதியவும் இல்லை.

ராயர் வந்து விட்டால் ரீகாவின் நேரம் எல்லாம் அவனது கட்டுப்பாட்டில் தான். அவன் மொத்தமாய் சுருட்டிக்கொள்வான் அவளையும் அவளது நேரத்தையும் சேர்த்து....

அவளுக்கு பாடம் படிக்க உதவுவான்.. ஏதாவது எழுத வேண்டும் என்றாள் எழுதி தருவான். தோட்டத்துக்கு கூட்டி வந்து தன் பழக்க பட்ட விவசாய வேலையை அவளையும் செய்ய வைத்து அவனும் ஒரு கை பார்ப்பான்.

சமையல் அறைக்கு சென்று நாயரையும் கற்பகத்தையும் படுத்தி எடுப்பான். வீடியோ காலில் நந்தாவை அழைத்து தன் கைபிடியில் திகம்பரியை வைத்து அவனை வெறுப்பேற்றுவான்.

தன் மாமானாரிடம் குசலம் விசாரித்துவிட்டு ரீகாவின் சேட்டையை அதாவது தான் செய்த சேட்டையை அவள் செய்தது போல சொல்லி அவரை சிரிக்க வைத்து அவரின் முன்னிலையிலே திகம்பரியிடம் மொத்து வாங்குவான்.

இடையிடையே நந்தாவும் ராஜும் சேர்ந்தது போல வருவார்கள். இல்லையென்றால் தனித்தனியாக வந்து பார்த்துவிட்டு சென்றார்கள்.

நந்தா தனித்து வரும் போதெல்லாம் ராயரிக்கும் நந்தாவுக்கும் ரத்த கலரி ஆகாமல் இருந்ததே இல்லை.

நாயும் பன்னியுமாய் இருவரும் அடித்துக்கொண்டு வீட்டில் இருக்கிற பொருட்களை போட்டு உடைத்துக்கொண்டு திகம்பரியின் கோவ பார்வையில் அடங்கி சிரிப்புடனே இருவரும் ஆர தழுவிக்கொள்ளுவார்கள் ஒருவரை ஒருவர்..

ராயருக்கு ரவியின் ஞாபகம் வரும் நந்தாவை சீண்டும் போதெல்லாம்.

அதே போல நந்தாவுக்கு தனக்கு ஒரு சகோதரன் இருந்தால் எப்படி இருப்பானோ அது போல ராயர் என்றொரு எண்ணம் வரும் ராயரின் மீது..

ஆக மொத்தம் இருவரும் உள்ளுக்குள்ளே பாசத்தை வைத்துக்கொண்டு வெளியே முறைத்துக்கொண்டு திரிந்தார்கள்..

ராஜ் கூட திருமணம் செய்து கொள்ளலாமே என்று பலமுறை கேட்டுவிட்டார் ராயரிடம். அனால் அவன்  தான் மறுத்து விட்டான்.

“நான் தனியா என் வக்கீல் தொழிலை நடத்தனும் மாமா.. அதில் நான் வெற்றி பெறனும். அதுக்கு பிறகு தான் திருமணம்” என்று உறுதியாய் மறுத்து விட அவரால் மேற்கொண்டு அவனை வற்புறுத்த முடியவில்லை. நந்தாவுக்கு ராயரின் மீது மதிப்பு வந்தது. இவன் விளையாட்டு பிள்ளை இல்லை என்று..

ஆக ராயரின் வருகையில் ரீகா சந்தோசமாக மிகவும் மகிழ்ச்சியாவே இருந்தாள். ரீகா மட்டும் இல்லாமல் அவள் குடும்பமும் சந்தோசமாய் இருந்தது..

எந்த கட்டுப்பாடும் இல்லாமல்... கட்டுப்பாடு இருந்தாலும் அதெல்லாம் நம்ம ராயரிடம் எடுபடாது என்பது வேறு.. நகர்ந்த காலங்கள் அனைத்தும் வசந்தகாலம் தான் அவர்களுக்கு.

சில நேரங்கள் அவனது இருசக்கர வாகனத்தில் வேகமாய் எங்காவது சென்று வருவார்கள். அப்போதெல்லாம் திகம்பரிக்கு அவ்வளவு பயமாய் இருக்கும்.. ஆனால் ராயருக்கு அது ரொம்ப பிடிக்கும்.. தன் பயத்தை அவன் அறிய விட்டது இல்லை திகம்பரி.. அவனது ஆசைக்கு முன் அவளால் எப்படி மறுக்க முடியும்..

காலை வேலையில் கால் பண்ணும்போது மறக்காமல் சொல்லும் விஷயம் “வண்டில வேகமா போகாதீங்க.. கொஞ்சம் சீக்கிரமா எழுந்து பழகுங்க..” என்பது தான்.

அடித்து போட்டது போல தூங்குவான் ராயர். பின் வேலைக்கு தாமதம் ஆகிவிட்டது என்று வண்டியில் பறப்பான். அவனது இந்த குணம் தெரிந்து மனம் பதை பதைப்புடன் தினமும் சொல்லுவாள்.

ஆனால் அவன் அதை கேட்டால் தானே.. ஒரு நாள் கூட கேட்டதே இல்லை.

“கோர்ட்டுக்கு போயிட்டு எந்த நேரம் என்றாலும் தகவல் சொல்லுங்க” என்று வற்புறுத்தி சொல்ல அதன் பிறகு தகவல் தினம் தோறும் தந்தான். அவனது தகவல் வந்த பின்பு தான் அவள் இயல்புக்கே திரும்புவாள்.

அதுவரை அவள் இறுக்கமாகவே மனம் தேவை இல்லாத பயத்துடனே இருக்கும்.. அது அன்பு நிறைந்த இதயம் அல்லவா அதனால் அப்படி தான் இருக்கும்..

அவளது பயம் வீண் என்று பலமுறை சொன்னாலும் அவள் கேட்க மாட்டாள். பின் ராயர் தான் இறங்கி வந்தான்.

அன்றைக்கு அவளது கல்லூரியில் சிம்போசியம் என்பதால் புடவையில் வந்தாள். முக்கியமான பிரசென்டேசன் அவள் கொடுக்க வேண்டும்.. அவனிடமிருந்து தகவல் வந்தது “ரீச்சுடு” என்று பின்பு ஆசுவாசமானவள் தன் வேளைகளில் மூழ்கி போனாள்.

தான் மேடை ஏறி நிகழ்ச்சி நிகழ்த்துவதை ராயர் புகை படம் எடுத்து அனுப்ப சொல்ல தன் தோழியிடம் எடுக்குமாறு புகைப்பட கருவியை கொடுத்துவிட்டு முதல் படியில் காலை வைக்க கையில் இருந்த செல் அலறியது.. அதுவும் ராய் என்று வர என்ன செய்வது என்று தெரியவில்லை. எப்போவும் கல்லூரி நேரத்தில் அவளை தொந்தரவே செய்ய மாட்டான். அதனால் லேசாய் கருக்கென்று இருந்தது..

தன் அருகில் துணைக்கு வந்த இன்னொரு தோழியிடம் “நீ பண்ணிகிட்டே இரு.. நான் ஒரு நிமிசத்துல வந்துடுறேன்” என்று கூறிவிட்டு பொறுப்பை அவளிடம் கொடுத்துவிட்டு தனியிடம் வந்து பேச, அவளது தலையில் இடியை இறக்கியது போனில் வந்த தகவல்.

“உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லடா.. ஏண்டா இப்படி என் உயிரை வாங்குற.. எத்தனை முறை சொல்றேன் கோவபடத கோவபடதன்னு சொன்னா எங்க கேக்குற...“ என்று அழுதபடியே அவனை திட்டியவள் வேகமாய் தன் ஆசிரியரை சந்தித்தவள் அவசரம் என்று சொல்லிவிட்டு ராயரின் வீட்டுக்கு கதறிக்கொண்டே அடித்து பிடித்துக்கொண்டு வந்து சேர்ந்தாள்.

அங்கே கட்டிலில் கை சிராய்ந்து கால் சிராய்ந்து, வலது கையிலும், தலையிலும் கட்டுடன் படுத்திருந்தவனை கண்டு உள்ளம் துடித்து போனது.

அவன் ஓய்ந்து போன தோற்றத்தை கண்டு இன்னும் கண்ணீர் வழிய, ஓடி வந்து அவனுக்கு வலிக்காத மாதிரி அணைத்துக்கொண்டாள்.

“என்ன ஆச்சு மாமா.. ஏண்டா இப்படி இருக்குற..” பேச கூட முடியவில்லை திகம்பரியால்.

“ப்ச்.. இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி ஒப்பாரி வைக்குற” என்று கடுப்படித்தான் ராயர்....

 

அத்தியாயம் 23

 

“என்னது ஒப்பாரி வைக்கிறனா.. விபத்தாகி போச்சுன்னு எல்லாத்தையும் அப்படியே போட்டுட்டு அடுச்சு பிடுச்சுகிட்டு வந்தா ஒப்பாரி வைக்கிறேன்னு சொல்றீங்க... ஏங்க இப்படி பேசுறீங்க...” என்று விசும்பியபடி கேட்டவளை கண்டு அவனுக்கு இன்னும் கோவம் தான் வந்தது..

“பின்ன என்னடி அடிபட்டு படுக்கையில கிடக்குறவனுக்கு முத்தம் குடுப்போம் கட்டி பிடிப்போம்னு ஏதாவது தோணுதா பாரு.. டிபிகல் வைப் மாதிரி மூக்க சிந்திகிட்டு இருந்தா பின்ன என்னத்த சொல்லுவாங்க... அழற மாதிரி இருந்தா தயவு செய்து என் முன்னாடி வந்து சீன் போடாத.. போ அந்த பக்கம் போய் ஒரு ஓரமா உக்கார்ந்து அழு..” கடுப்படித்தவனை கொலை செய்யும் அளவு கோவம் வந்தது திகம்பரிக்கு.

“இல்லாத சண்டை எல்லாம் உங்க வாயால தேவை இல்லாம பேசி வரவச்சு படுக்கையில படுத்துகிட்டு இருக்கும் போதே இவ்வளவு தெனாவட்டு ஆகாது.. இவ்வளவு பேசுறீங்க.. நிச்சயமா நல்லா தான் இருப்பீங்க சோ நான் காலேஜ் போறேன்” என்று சிலிர்த்துக்கொண்டு கிளம்பியவளின் கைகளை எட்டி பிடித்தவன் சுண்டி இழுக்க அவன் மீதே பொத்தெண்று வந்து விழுந்தாள்.

“ஐயோ என்ன பண்றீங்க ஏற்கனவே அடி பட்டு இருக்கு இதுல இது வேறயா..” என்று பதறிக்கொண்டு அவன் மீது எழுந்தவளை இருக்க கட்டிக்கொண்டு

“நான் கேட்டதை கொடுத்துட்டு பிறகு போ” என்று உடும்பு பிடியாய் இருந்தவனை கண்டு தலையிலே அடித்துக்கொண்டாள்.

“அடி பட்டு வலிக்கிற மாதிரி சீன போட்டாவது கொஞ்சம் இறக்க பட்டு ஏதாவது குடுக்கலாம். ஆனா நீங்க இப்படி வாய் பேசுறதுக்கு சத்தியமா நான் எதையும் குடுக்க மாட்டேன்” வீம்பு பண்ணினாள் திகம்பரி.

“உன்னை யாரு கேட்டா எனக்கு தேவையானதை நானே எடுத்துக்குவேன்” என்று அவளின் இதழ் நோக்கி குனிய

அவனின் இதழ்களை தன் வாயால் மூடியவள் “முதல்ல என்ன ஆச்சுன்னு ஒன்னு விடாம எல்லாத்தையும் சொல்லுங்க பிறகு நானே தரேன்” என்று கிடுக்கு பிடி போட்டவளை ஏமாற்றத்துடன் பார்த்தான்.

அவன் மாட்டேன் என்று தலை அசைக்க “அப்போ சரி நான் கிளம்புறேன்” என்றவளிடம்

“என்னடி இப்படி பட்டுபடாம பேசுற..” சிறு பிள்ளையாய் கேட்டவனை பார்த்து “உங்க வாயால இன்ன காரணம்னு சொன்னீங்கன்னா என் வாயால நீங்க கேட்டது கிடைக்கும்” என்று டீல் பேசினாள்.

“கண்டிப்பா சொல்லி தான் ஆகணுமா...” சிறுவனை போல முகம் சுருக்கினான்.

“ஆமா அதுவும் ஒரு சீன கூட விடாம..” என்றவளை முறைத்தவன் பின் “நான் சொன்னதுக்கு பிறகு நீ கோவ படமா நான் கேக்குறதெல்லாம் குடுக்குறேன்னு சொல்லு நான் சொல்றேன்” அவனது காரியத்தில் கண்ணாய் இருந்தான்.

“அப்போ பெரிய சம்பவம் ஒன்னை பண்ணிட்டு தான் இப்படி ஒண்ணுமே தெரியாத பிள்ளை போல இங்க வந்து படுத்து இருக்கீங்க சரிதானே..” வெடுக்கென்று கேட்க

“அதெல்லாம் பேச்சு கிடையாது... என் வாயால நான் சொல்லுறேன்.. நீ உன் வாயல நான் விரும்புற மாதிரி முத்தம் குடுக்குற இது தான் நமக்குள்ள இருக்குற டீல்” என்று சொன்னவனை கண்டு கோவம் தான் வந்தது திகம்பரிக்கு..

“ரொம்ப கோவ படாதடி...” கிண்டல் பண்ணிய படியே “அது என்னன்னா பொம்பள பிள்ளை சாப்பிட்டுகிட்டு இருந்த பர்கரை புடுங்கி ஒரு பையன் சாப்பிட்டானா.. எனக்கு தான் அநீதி எங்க நடந்தாலும் சும்மா இருக்க முடியாதே.. அது தான் நான் கோவ பட்டு அந்த பையனை ஒரு மிரட்டு மிரட்டிட்டு வந்தேன்.

அதுக்கு அவனோட அப்பா கோவிச்சுகிட்டு என்னை கொலை பண்ண வந்துட்டாரு.. அதுவும் ஒரு வெத்து வேட்டுகிட்ட சொல்லி. அது தான்டி என்னால ஆத்திக்கவே முடியல...” என்று கதை சொல்பவனை போல சொன்னவனை என்ன செய்வது என்று அவள் தான் விழிக்க வேண்டி இருந்தது..

“அந்த வெத்து வேட்டுக்கு கொலையும் பண்ண தெரியல ஒன்னும் பண்ண தெரியல..” என்று தெனாவட்டாய் மொழிந்தவனை

“உயிரு போற நேரத்துலயும் இந்த வாய் இப்படி பேசுது” என்று அவனின் வாய் மேலேயே ஒன்னு போட்டாள்.

“ஏண்டி நீயும் அடிக்க தெரியாம அடிக்குற.. அங்கெல்லாம் கையால அடிக்க கூடாது.. நான் உனக்கு அதை அப்புறமா சொல்லி தரேன். சரி அதை விடு ஏதாவது பழம் வாங்கிட்டு வந்தியா...” என்று அவளது கை பையை ஆராய

வலிக்காமல் அவனது தலையிலே ஒரு குட்டு வைத்தாள்.

“நானே அலறி அடுச்சுகிட்டு வரேன்.. இதுல உங்களுக்கு பழத்தை வேற வாங்கிட்டு வரேன்.. ஏன் மாமா இப்படி இருக்குற.. சத்தியமா உன் கிட்ட என்னால மல்லுகட்ட முடியல...” ஆற்றாமையாய் இருந்தது அவளுக்கு.

“ஹை இதே தான் அந்த ஃபாத்தி பொண்ணும் சொல்லுச்சு..”

“யாரு அது” கண்ணகி அவதாரத்தை எடுத்தாள் திகம்பரி...

“அது தான் சொன்னேனே வெத்து வேட்டுன்னு அது தான் இது..”

“அப்போ அவ தான் உங்களை கொலை பண்ண வந்தவளா...”

“ம்ம்ம் இத விட இன்னொரு கொடுமை என்னன்னா இதுக்கு இன்னும் ரெண்டு பேரு கூட்டு வேற..”

“அது யாரு மாமா”

“வருன்னு ஒன்னு, இன்னொன்னு வாசுகின்னு ஒன்னு.. இவிங்க மூணு பேத்துக்கும் நான் சாகுரதுல அம்பிட்டு சந்தோஷம்.. ஆனா அந்த எமனே வந்தாலும் என்னை ஒன்னும் அசைக்க முடியாதுன்னு பாவம் இதுங்க மூணுக்கும் தெரியல.. என்னாமா கூடி கும்மி அடிக்குதுங்க.. சில்லி கேர்ல்ஸ்” என்றவனிடம்

“எதுக்கும் கொஞ்சம் கவனமாவே இருங்க மாமா.. மூணு பெரும் பொல்லாத ஆளுங்க போல இருக்காங்க..” எச்சரிக்க

“அதை விடு நீ குடுக்க வேண்டியது குடு” என்று கேட்க

“நீங்க எதுல கவனமா இருக்கீங்களோ அதுல இருக்காதீங்க..” நொடித்த படியே எழுந்துக்கொன்டாள் அவன் சுதாரிக்கும் முன்.

“ஏய் வாடி..”

“வராங்க வராங்க.. முதல்ல கண்ணை மூடி ஓய்வு எடுங்க.. மத்தத பிறகு பார்த்துக்கலாம். நான் மத்தியம் என்ன செய்யிறதுன்னு பார்க்குறேன்.” என்று சொல்லி சமையலறை எங்கு என்று தேடி அதை நோக்கி சென்றாள்.

அங்கும் இங்கும் கடை பரப்பி இருந்த சமையலறையை கண்டவளுக்கு கிறுகிறுன்னு வந்தது.. “இப்படியாடா வச்சிருப்ப.. ச்சை காலை கீழவே வைக்க முடியல.. பாவி இதை கிளீன் பண்ணி முடிக்கவே என் ஜீவனே போய்டும் போல..”

அவனை திட்டியபடி தனது ஓட்டுனர் தாத்தாவுக்கு போன் பண்ணி காய்கறிகளையும், தேவையான மத்த சாமான்களையும்  வாங்கி வர சொன்னவள் அவனது வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

அவள் உருட்டும் சத்தமும், திட்டும் சத்தமும் கேட்க  அவளின் பின் சென்று கட்டிக்கொள்ளும் எண்ணத்தை தவிர்த்தான்.

இப்போ போனா.. என் மேல ஏறாத்தான்னு சாமி ஆடிடுவா... நோ இப்போ நல்ல பிள்ளையா தூங்குற மாதிரி ஆக்டிங் குடுப்போம். பொறவு போய் நம்ம கச்சேரிய வச்சுக்குவோம் என்று எண்ணியவன் கண்களை அழுந்த மூடிக்கொண்டான்.

சிறிது நேரத்தில் காதில் அவளது எந்த சத்தமும் கேக்காமல் போக ஒரு கண்ணை திறந்து என்ன செய்கிறாள் என்று பார்க்கலாம் என்று கண்ணை திறக்க அவனின் முன்னே காளி அவதாரத்தில் நின்றாள் திகம்பரி..

‘அய்யயோ மாட்டிகிட்டனே... உன்னை யாருடா கண்ணை தொறக்க சொன்னா.. அப்படியே தூங்கி போயிருக்க வேண்டியது தானே.. இப்போ எங்குட்டும் போயி தப்பிக்க முடியாதே..’ புலம்பியவன் அவளை பரிதாபமாக பார்த்தான்.

“அது எப்படிடா எல்லாத்தையும் செஞ்சுட்டு ஒண்ணுமே தெரியாத பிள்ளை மாதிரி முகத்தை வச்சுக்குற...” ஆத்து ஆத்து போனாள் அவனுடைய ரீகா..

“ஈஈஈ” என்று பல்லு முப்பத்திரெண்டையும் காட்டி இழித்தவனை கண்டு திட்ட கூட மனம் வரவில்லை அவளுக்கு....

“அப்படியே வெண்ணை திருடிய கண்ணன் தாண்டா... நீ” திட்டுவது போல கொஞ்சிக்கொண்டவள்

“என்னடா பண்ணி வச்சுருக்க வீட்ட,  வீடு வீடாவா இருக்கு.. குப்ப மேட்டுக்கு போனா போல இருக்குடா..” சலித்தவளை அருகில் இழுத்து தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தவன்

“நீ எதுக்குடி கஷ்டபடுற, நான் எதுக்கு இருக்கேன்.. அதெல்லாம் நான் பார்த்துக்க மாட்டனா.. நீ என்னை மட்டும் கவனிச்சுகிட்டா போதும் ரீகா. நிமிசத்துல உனக்கு நீ விருப்பப்பட்டத நான் சமைச்சிதறேன்..

பாரு சேலை எல்லாம் பாலா போகுது..” என்றவனின் கரிசனத்தில் உள்ளம் குளிர்ந்தவள் அவன் கை வளைவுக்குள்ளே திரும்பி அவன் முகம் பார்த்தவள் அவன் நெற்றியில் முத்தம் இட்டாள் அதித காதலுடன்.

“தாங்ஸ்” என்று கண்ணை சிமிட்டி சிரித்தவனை கண்டு “உண்மை காரணத்தை சொல்லுங்க மாமா” என்றாள்.

“நான் சொன்னது தாண்டி உண்மை..”

“அது இல்லைன்னு எனக்கு தெரியும். சொல்லுங்க” உறுதியாய் நின்றவளை கூர்மையுடன் பார்த்தான் ராயர்.

“அது எதுக்கு உனக்கு”

“நீங்களா சொல்றீங்களா.. இல்லை நான் வக்கீல் அங்கிள் கிட்ட கேட்டுக்கவா..” என்று தன் போனை எடுக்க விலகியவளை உட்கார்ந்திருந்த படியே இரு கரத்தால் அவளின் இடை பற்றி தன்னோடு நெருக்கியவன்

“நானே சொல்றேன்” என்றவன்

“அது ஒரு பொண்ணு விஷயம்.. காதல்னு சொல்லி ஒரு பொருக்கி அந்த பொண்ணை கெடுத்து அதை புகை படம் வேற எடுத்து, தன் நண்பர்கள் கிடையும் அந்த பொண்ணை பங்கு போட்டுக்க பிரிய பட்டு அந்த பொண்ணை மிரட்டினான்.. அந்த கேஸ் விசயமா கொஞ்சம் அவனை தனித்துவமா கொஞ்சம் கவனிக்க வேண்டி இருந்தது..

அது அவங்க அப்பனுக்கு பொறுக்கல சோ வண்டில போகும் போது தூக்க பார்த்தான். நான் கொஞ்சம் சுதாரிச்சதுனால அடி அவ்வளவா விழல” என்றவனை கண்டு அவளுக்கு பெருமையாய் இருந்தது.

ஆனால் அதைவிட அவன் இப்படி அடி பட்டு படுக்கையில் கிடப்பதை கண்டு மனம் கனத்து போனது..

“நீ செய்யிற விஷயம் சரியானது தான் மாமா.. ஆனா கொஞ்சம் உன்னையும் பார்த்துக்க.. உன்னை நம்பி தான் நானும் நம்ம பிள்ளைங்களும் இருக்கோம் அதை நினைவு வச்சுக்க..” விழிகள் கலங்க சொன்னவளின் அன்பில் நெகிழ்ந்தவன் அவளை தன்னோடு இருக்க அணைத்துக்கொண்டான்.

“நான் எங்க நீ என்னை புருஞ்சுக்காம கோவ படுவியோன்னு நினைச்சேன்டி.. ஆனா நீ.. தேங்க்ஸ் டி.. தேங்க் யூ சோ மச் டி..”

அழகான புரிதல் தானே காதலை இன்னும் வலுவாக்கும்..

அவனது எண்ணத்தை சரியாக புரிந்துக்கொண்டாள் திகம்பரி... அவனது எண்ணத்தை மட்டும் இல்லாது அவனையே முழுமையாக தெரிந்து புரிந்து வைத்திருந்தாள் அவள்.

இந்த நிமிஷம் அவன் என்ன நினைப்பான் என்பது முதல் அவளுக்கு எல்லாமே அத்து படி.. இப்படி அதித புரிதல் இருந்ததால் தான் அப்படி ஆபத்தானதோ என்னவோ..

“சரி கூடவே என்னமோ சொன்னியே அது என்னது” என்று குழந்தையை கேட்டு, அவளை வெட்க பட வைத்தவனின் நெஞ்சில் முகம் புதைத்துக்கொண்டவள் “நான் ஒன்னும் இல்லாதத சொல்லலியே.. வருங்காலத்துல நடக்க கூடியத சொன்னேன்” கூற

“அது என்னடி வருங்காலம்.. நாம இப்பவே அதை நிகழ்காலத்துல நடத்தி காட்டுவோமா..” என்று அவளை சீண்ட

“ப்ச் போங்க மாமா.. கிண்டல் பண்ணாதீங்க..”

“ஏண்டி என்னை பார்த்தா கிண்டல் பண்றவன்  மாதிரியா தெரியுது.. சீரியஸா பேசிகிட்டு இருக்கேன்” என்றவனை முறைத்து பார்த்தவள்

“அடி பட்டு கிடந்தாலும் உனக்கு முதலிரவு கொண்டாடனுமாக்கும்.. போயா அந்த பக்கம்” என்று அவனின் ஊரு பக்கம் பேசுவது போல பேசியவளை பார்த்து கண்கள் மின்னியது அவனுக்கு.

“ரீகா...” ஆழ்ந்து அவன் கூப்பிட உயிர் வரை சிலிர்த்ததை அடக்கியவள் “என்ன” என்றாள்.

“நீ சொன்னியே உன் வாயால சொன்னா என் வாயல முத்தம் குடுப்பேன்னு நான் முழுசா சொல்லிட்டேன்.. இப்போ நீ தான் குடுக்கணும்” என்றான்.

“அது காந்தி கணக்கு.. மிஸ்டர் காசி விஸ்வநாத ராயர்..” நக்கல் பண்ணியவளை கண்டு ஏளனமாய் சிரித்தவன்

“அப்படியா சொல்றீங்க மிஸ்ஸஸ் காசி விஷ்வ நாத ராயர்..” என்று இழுத்து சொல்லி வார்த்தையிலே அவளை சிவக்க வைத்தவன் அவளை ஆழ்ந்து பார்த்தான்.

அவனது பார்வையில் “முத்தம் குடுக்காம இங்க இருந்து ஒரு அடி கூட உன்னால் எடுத்து வைக்க முடியாது” என்ற உறுதி இருக்க திகம்பரியின் நெஞ்சம் படக்கு படக்கு என்று அடித்துக்கொண்டது..

அதுவும் அவனின் முரட்டு தனம் தெரிந்தும் தான் நக்கல் பண்ணியதை எண்ணி நொந்து போனவள்

“நா... நானே தரேன்.. ஆனா உங்க கை என் மேல பட கூடாது...  கூடவே நீங்க தர கூடாது நான் மட்டும் தரேன் சரியா” என்று பேரம் பேசியவள் அவனை பெரும் தயக்கத்துடன் நெருங்கி அவனின் இதழ்களை தீண்டி மென்மையாய் முத்தமிட்டவள் பின் விலகப்பார்க்க அதற்க்கு விடாமல் அவளை தன்னுள் ஆழ புதைத்தவன் அவளின் இதழ்களில் வன்மையாக கவி பாட தொடங்கினான்.

ராயருக்கு ஏனோ மென் முத்தங்களில் ஈடுபாடு இல்லை.. எப்போதுமே வன்மை தான்.

ரீகா பல முறை சொல்லியும் அவன் அதை கடைபிடிப்பதே கிடையாது.. அவனது கரங்களும் அவளை பதம் பார்க்க மீண்டும் அவளிடம் பெண்மைக்கு உரிய சில உணர்வுகள் எழ தவித்து போனாள்.

தொட்டு விட்டு சென்ற அவனது விரல்களின் ஸ்பரிசம் இன்னும் தன் மேல் இருப்பது போன்ற உணர்வில் மனம் குலைந்தவள் அவனை தேடி போனாள். அங்கே சமையலறையில் அவன் வேலை செய்து கொண்டிருக்க அவனை பற்றி எப்போதும் அவன் செய்வது போல அவன் உயரத்துக்கு எம்பி அவனது உதடுகளில் தன் இதழ்களை புதைத்தாள்..

அவளது செயலில் விழிகளை விரித்தவன் அவளுக்கு சிரமம் இல்லாமல் தன் உயரத்துக்கு அவளை தூக்கி கொண்டான்.

அதை உணர்ந்தவள் அவனின் முகத்தோடு முகம் புதைத்து உரசி சிலிர்த்து போனாள்.

“இப்படியே இருந்தா எப்படிடி சமைக்கிறது..” அவளை வம்பிழுக்க

“அதெல்லாம் தாத்தாகிட்ட சொல்லிட்டேன்” என்றவள் அவனிடமிருந்து சரிந்து இறங்கியவள் வாகாக அவனது நெஞ்சில் புதைந்துக்கொண்டு

“மாமா.. என்னை பிடிகுமாடா..” பதில் தெரிந்தே கேட்டவளை பார்த்து, அதுவும் அவளே தன்னிடம் அடைக்கலமாகி இருப்பவளை உயிரில் பொதிந்துக்கொள்வதை போல பொதிந்துக்கொண்டு

“உன்னை மட்டும் தாண்டி எனக்கு பிடிக்கும்... நீ யாருன்னு தெரியாதப்பவே அவ்வளவு பிடிக்கும்.. இப்போ நீ என் பக்கத்துல, என் கை வளைவுல இருக்க.. அப்போ உன்னை எவ்வளவு பிடிக்கும் இந்த மாமனுக்கு” என்று சொல்லி அவளை மகிழ்வித்தவன்..

ஒரு நாள் இதெல்லாம் வெறும் மாயை.. உன்னை முழுதாக மனதின் அடி ஆழத்திலிருந்து வெறுக்கிறேன் என்று சொல்லும் நிலைக்கு வந்திருந்தான் ரீகாவின் ராய்...

 

அத்தியாயம் 24

 

நாட்கள் இருவருக்கும் மிக அழகாய் சென்றது.. அவன் அடி பட்டு கிடந்த பின் அவனை தனியாக வசிக்க விடவில்லை திகம்பரி... நந்தாவிடமும் ராஜிடமும் முறையாக அனுமதி வாங்கிய பின் அவனை தன்னோடு தங்க வைத்துக்கொண்டாள்.

ராயரு எவ்வளவோ மறுத்து பார்த்தும் திகம்பரி கேட்கவில்லை.

“எனக்கென்ன கடைசில ஒரு நாள் என் கற்பு போச்சுன்னு ஒப்பாரி வைய்யி அப்போ இருக்கு” என்று கடுப்படிக்க

மெல்ல சிரித்து அவனை தன் அருகில் இழுத்து “உன் கிட்ட தானே போகுது போனா போயிட்டு போகுது போடா..” அதித காதலுடனும் குரும்புடனும் சொன்னவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தவன்

“நிசமா” என்பது போல தலை அசைத்து விழியாலே கேட்க

“ம்ம்” என்று கண்களை மூடி அவனுக்கு பதிலளித்தவளை கண்டு வாயை இரு கையால் மூடிக்கொண்டான்.

அதிர்ச்சி நீங்கி அவளை முறைத்த படியே “உன் கிட்ட எதுக்கும் கொஞ்சம் எச்சரிக்கையா தாண்டி இருக்கணும்.. முதல்ல என் கற்புக்கு இன்சூர் பண்ணி வைக்கணும்.. உன்னை எல்லாம் நம்பவே முடியாது..” சொன்னவனை ஏளனமாய் பார்த்தவள்

“ஐயோ இது அப்படியே ஒன்னும் தெரியாத பாப்பா.. இவங்க கற்பை நாங்க சூறை ஆடிட போறம் போடா பிராடு.. நீ யாருன்னு எனக்கு தெரியாதா.. எப்படா வாய்ப்பு கிடைக்கும்னு வாயில ஜொள்ளு வடிய காத்துகிட்டு இருக்குற கேட்டகரி தானே நீ...” என்று அவனை வார

“சரி விடுடி விடுடி... ஏதோ கொஞ்சமா கெத்து காமிக்கலாம்னு பார்த்தேன் அது உன் கிட்ட முடியாதுன்னு எனக்கு நொடிக்கொரு முறை நிருபிச்சுகிட்டு இருக்குற... ஆனாலும் நானும் அடங்க மாட்டிக்கிறேன் பாரு..” என்று அசடு வழிய சொன்னவனை இன்னும் ரொம்ப ரொம்ப பிடித்து போனது திகம்பரிக்கு.

“நீ இப்படி உண்மைய ஒத்துக்கும் போது எனக்கு உன்னை இன்னும் ரொம்ப அதிகமா பிடிச்சு போகுதுடா பைய்யா...” என்று அவனது கன்னத்தை கில்லி கொஞ்சியவளை தன் கை வளைவுக்குள் கொண்டு வந்து

“பிடுச்சுருக்குன்றத இப்படி தான் தள்ளி நின்னு சொல்லனுமாடி.. அவளது முகத்தோடு முகம் வைத்து உரசிக்கொண்டே கைகள் அவளது இடையை இறுக்கி பிடித்து எலும்பு நொறுங்க காதல் செய்தவனின் வன்மையில் வெட்கம் கொண்டவள் அவனது மார்பிலே தஞ்சம் கொண்டாள்.

“திகம்பரி நான் சீரியஸா கேக்குறேன் எனக்கு முழுசா நீ வேணும் தருவியா...” அவளது கண்களை ஆழ பார்த்த படி கேட்டவனை கண்டு கொஞ்சமும் யோசிக்காமல் அவனது இதழில் இதழ் பத்தித்து தன் சம்மதத்தை கொடுத்தாள்.

“ரீகா..” அவன் அதிர்ச்சியாய் அவளை பார்க்க

“நான் விளையாட்டுக்கு சொல்லல ராய்...” அவனை போலவே அவனது கண்களை ஆழ பார்த்து சொன்னவளை இன்னும் தன்னோடு நெருக்கி அவளை வதைத்தான்.

“இப்பவாச்சும் சார் என்னை நம்புறீங்களா..” நக்கலாய் கேட்டவளை பார்த்து

“நான் உன்னை சோதிக்கல ரீகா... எனக்கு நீ வேணும். இப்போவே இந்த நிமிசமே... என் காதில் கேட்ட சில காம வார்த்தைகளை நான் மறக்கணும். என் கண் முன்னாடி நடந்த...” தொண்டை கமற “அதெல்லாத்தையும் நான் மறக்கணும்... அதுக்கு நீ வேணும். எனக்கு உன் மூலமா தான் எல்லாத்தையும் தெருஞ்சுக்கணும், அதே போல எல்லாத்தையும் மறக்கணும்” என்றவனின் வாயை மூடியவள்

“வேணாம்“ என்று தலை அசைத்து அவனை தன்னோடு அணைத்துக்கொண்டவள் “எனக்கு சம்மதம்ங்க.. என்னால உங்க வலியெல்லாம் போகும்னா எனக்கு என்னை கொடுப்பதில் பரி பூரண சம்மதம்ங்க” என்று தன் சம்மதத்தை சொன்னவளை அவனால் உடனடியாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

ஏன் என்று பார்த்தவளை சந்திக்க முடியாமல் வேறு எங்கோ பார்வையை செலுத்தியவன் “எனக்கு இப்போ வேணாம் ரீகா...” என்று சொன்னவன் அவளை விட்டு விலகி சென்றுவிட்டான்.

அவனது நல் வளர்ப்பு அவனை தடுக்க அதை புரிந்துக்கொண்டவள் மென்மையாய் சிரித்துக்கொண்டாள்.

ஆனால் ஒரு நாள் கண்டிப்பாய் அவனுக்கு தான் தேவை படுவோம் என்று அறிந்தும் வைத்திருந்தாள் அவனுடைய காதலியாய்.

அந்த நாளும் வெகு விரைவிலே வந்தது... அதோடு சேர்ந்து ராயரின் பாரா முகமும் அவனது கோவமும் மிருகத்தனமும் வெளிப்பட்டது...

ஏதோ ஒரு நாளில் அவளை முழுவதும் அவன் வசமாக்கிக்கொண்டவன் தொடர்ந்து அவளை அணுக அவளும் அவனுக்கு மறுக்காமல் தன்னை கொடுத்தாள் மனமுவந்து.

ஒரு நாலா காலை வேலையில் ராயர் உடற்பயிற்சி செய்துக்கொண்டு இருந்தான். அவன் தண்டால் எடுக்க  முதுகில் ஒய்யாரமாய் குப்புற படுத்துக்கொண்டு பரிச்சைக்கு படித்துக்கொண்டு இருந்தாள் திகம்பரி.

“இப்படி ஆடிகிட்டே இருந்தா எப்படி என்னால படிக்க முடியும்” என்று முறைத்துக்கொண்டே படித்தவளை

“நீ இப்படி என் முதுகுல ஒட்டி உரசிகிட்டு இருக்கிறது எவ்வளவு சுகமா இருக்கு தெரியுமா... இந்த சுகம் எனக்கு வேணும் ரீகா... உன்னை நான் என் உயிர்ல சுமக்கிறது சுமையா தெரியல.. அதே போல தான் உன்னை நிஜமா என் தோள்ள சுமக்குறதும் கணக்கலடி...

உன்னை எனக்குள்ள புதைச்சுக்கணும். யாருக்கும் குடுக்காம எனக்கு மட்டுமே நீ வேணும். என்னை பைத்தியம் ஆக்குற ரீகா” என்றவன் சட்டென்று திரும்ப அவள் கீழே விழுந்தாள். விழுந்தவளின் மீது இவன் படர்ந்து அவளின் கண்களோடு கண்கள் வைத்து கதை பேசி காலை நேரத்தை இதமாகவும் அழகாகவும் மாற்றினான்.

இப்படி பல இனிமையான தருணங்கள் அவர்களுக்குள் நடந்தது.

ராயரின் செயலில் ரீகா பல சமயங்கள் ‘வாழ்ந்து’ இருக்கிறாள். மனம் ஒன்று பட்டு வாழ்ந்த வாழ்க்கை அவர்களது.

அதற்கு எந்த லைசென்சும் தேவை படவில்லை.  

--

“டேய் எங்கடா இருக்க” ஏக கடுப்பில் திகம்பரி பேச

“ஏய் வேலையா இருக்கேண்டி... அப்புறம் பேசுறேன்” என்று ராயரு சொல்ல, கடுப்பின் உச்சத்தில்

“எந்த முக்கியமான வேலையா இருந்தாலும் அதை அப்படியே விட்டுட்டு ஒழுங்கு மரியாதையா வீட்டுக்கு வா” என்றாள் அவனுடைய ரீகா.

“ஏண்டி அப்போ இன்னைக்கு காலேஜ் போகலையா..” அவனது பேச்சில் ஒரு ஆர்வம் இருந்ததோ...

“ம்ம்ம் ஆமா...” என்றாள் ஆவேசத்தை அடக்கியபடி.

“ஓ அப்போ உனக்கு மாமா தேவை படுறனா...” கண்களில் ஆசை மின்ன, தாபத்தின் எல்லையில் நின்றபடி கேட்டவனை ஒன்னும் செய்ய முடியாமல் பல்லை கடித்தவள் “ம்ம் ஆமா ரொம்ப ரொம்ப தேவை படுற அதனால கொஞ்சம் பிகு பண்ணாம வரியா..” என்று கூறவும் அவளது பேச்சில் லேசாய் அனல் வீச சட்டென்று சுதாரித்துக்கொண்டான்.

“ஹிஹிஹி இல்லமா மாமா கொஞ்சம் பிசியா இருக்கேன்.. சாயங்காலம் வந்து வேணா மாமாவை உனக்கு தரனே..” அவன் ஜகா வாங்க

“டேய் பொருக்கி... பண்ணாடா... வேகாத குச்சிவள்ளிகிழங்கு... அவிச்ச முட்டை...” என்று வர்ணம் வர்ணமாய் திட்டவும் அவனுக்கு பக்கென்று இருந்தது..

‘நாம என்ன தப்பு பண்ணினோம்.. இன்னைக்கு கூட காலை சிப்ட் கேட்டேன் அவ தான் ரொம்ப பிகு பண்ணிக்கிட்டு இருந்தா... சரி போனா போவுதேன்னு பாவம்னு விட்டேன்... அப்படி விட்டது தான் தவறோ...

இனி இருடி ஒரு நாளைக்கு மூணு சிப்ட் பார்க்குறேன்... பாவம் படிக்குற புள்ளையாச்சேன்னு ரெண்டோட நிருத்துனேன்ல என்னை சொல்லணும்டி.. இனி இந்த ராயரோட உன் மாமனோட புது அவதாரத்தை பார்ப்ப..’ என்று கறுவிக்கொண்டான்.

மறந்தும் தன் எண்ணத்தை அவளிடம் வாயை விடவில்லை. சொன்னால் கிட்டக்க கூட விட மாட்டாள். படிக்கவே விடாமாட்டிகுறடா என்று காது புளிக்க புளிக்க அனத்தி எடுப்பாள். இல்லையா முதுகுலையே அடி போடுவாள். அதுவும் இல்லையா விரல் நகங்களில் மூலம்  தழும்பை தன் வீரத்தின் திரு உருவமாய் இருக்கும் தன்னின் உடம்பை கீரிவிடுவாள்.

அதனால் இதெல்லாம் தனக்கு தேவை இல்லை என்று முன் ஜாக்கிரதையாய் முடிவெடுத்தவன் காரியத்தில் கண்ணாய் இருந்தான்.

அது தான் மூணு சிப்ட். அவளிடம் சொல்லாமலே நிறைவேத்திக்கொள்ள சபதம் எடுத்து விட்டான் நொடி நேரத்தில்.

“டேய் எரும இப்போ நீ வரல நான் கோர்ட்டுக்கு வந்து அத்தனை பேரின் மத்தியிலும் உன் மானத்தை வாங்கி விடுவேன்.. மரியாதையா வந்து சேரு.. நான் வரணும்னு கூட அவசியம் இல்ல அங்கிள் கிட்ட சொன்னா போதும் இப்பவே உன் மேல ஒரு கேசை போட்டு உள்ள தள்ளி விடுவாரு பார்த்துக்க” அவள் மிரட்ட

“ஏய் என்னடி ஒரு சின்ன பிள்ளைய ரொம்ப தான் மிரட்டுற.... என்ன அந்த ஆளு நீ சொல்றத மட்டும் தான் கேட்கிறாருன்ற ஏகத்தாளமா... பார்த்துகிட்டே இரு உன்னையும் அந்தாளையும் என் எதிர் கட்சி வக்கீல் கிட்ட சொல்லி ஜெயில்ல புடுச்சு போட சொல்றேன்” அவனும் வம்புவளக்க

“டேய் அதை எல்லாம் பிறகு பார்த்துக்கலாம் இப்போ நீ கிளம்பி வாடா..” சற்றே பதறி தான் இருந்தாள். அதை உணர்ந்த ராயர்

“என்ன ஆச்சு மா.. எனி திங் சீரிஸ் ரீகா”

“ம்ம்” என்றாள் புரியாத சில உணர்வுகளோடு..

“தோ இப்பவே கிளம்புறேன் நீ எதுக்கும் கவலை படாதடி.... இன்னும் பத்து நிமிசத்துல நான் அங்க இருப்பேன்” என்று சொல்லவும் முன்னை விட இப்போ அதிகமா பதறினாள்.

“மாமா சீரியஸ் தான். ஆனா ரொம்ப அவசரம் கிடையாது... அதனால நீ பொறுமையாவே வா... அரை மணி நேரத்துல வர வேண்டிய தூரத்தை பத்து நிமிசத்துல கடக்காத மாமா ப்ளீஸ்..” கெஞ்சியவளை கண்டுக்கொள்ளாமல் அவளை இன்னும் பதற வைக்கும் நோக்கத்தோடு போனை வைத்தவன் ஐந்தே நிமிடத்தில் வந்து சேர்ந்தான்.

அவனது இரு சக்கர வாகனம் வெளியே வந்து நிற்கும் சத்தம் கேட்டு பதறி அடித்துக்கொண்டு வந்து வந்தாள் திகம்பரி..

‘ஐயோ இவ்வளவு வேகமாவா வந்தாரு. அவங்களுக்கு அடி எதுவும் பட்டிருக்க கூடாது கடவுளே..’ கடவுளை வேண்டியபடி படியில் வேகமாய் வர, கட்டி இருந்த புடவையின் கொசுவம் தடுக்கி விழ போனாள்.

அவளை விட அதிக வேகத்தில் வந்தவன் நொடி நேரத்தில் அவளை தன் கைகளுக்குள் அள்ளிக்கொண்டு விட்டிருந்தான்.

“பார்த்து வர மாட்டியாடி எதுக்கு இவ்வளவு வேகம்” என்று கேட்டவனை கண்டு அவள் தான் அதிர்ந்து போனாள்.

“அதெப்படி டா நான் கேக்க வேண்டியத கொஞ்சம் கூட அலட்டிக்காம நீ கேக்குற..”

“நான் வந்தாலும் என் வேகத்துல ஒரு விவேகம் இருக்கும்.. ஆனா நீ அப்படியா இருக்குற... எங்க எனக்கு ஏதாவது அடி பட்டு இருக்குமோன்ற பயத்துல ஓடி வந்திருப்ப அப்போ எப்படி உனக்கு விவேகம் இருக்கும்..” என்று பாடம் எடுத்தவனை கண்டு உச்சி முதல் பாதம் வரை பார்க்க அவனிடமிருந்து விலகி நிற்க, அதை விரும்பாதவன் அவளை அப்படியே தங்களின் அறையில் இருந்த படுக்கையில் படுக்க வைத்தான்.

படுக்க வைத்துவிட்டு அவளின் அருகில் சென்று படுத்துக்கொண்டு “என்னடி ஆச்சு எதுக்கும் பதற மாட்டியே அதுவும் நான் கோர்டில் இருக்கும் போது எதுக்காகவும் என்னை கூப்பிட மாட்டியே இப்போ அப்படி என்னடி ஆச்சு”

என்றவனை நிதானமாய் தன் பார்வையில் நிறைத்தவள் அவனுக்கு எங்கேயும் அடி பட வில்லை என்று உறுதி செய்தவள்

“என்ன ஆச்சா... அதெப்படிடா எல்லாத்தையும் பண்ணிட்டு இப்படி ஒண்ணுமே தெரியாத பிள்ளை மாதிரி கேள்வி கேக்குற” என்று கடுப்படித்தாள்.

“சத்தியமா பிளீவ் மீ மா நேக்கு ஒன்னும் தெரியாது” என்று அவளின் மீது படர சட்டென்று அவனை தன்னிடமிருந்து தள்ளி விட்டவள்

“ஓ உனக்கு ஒண்ணுமே தெரியாது இல்லையா...” நக்கல் பண்ணியவள் “ஏண்டா ஒன்னும் பண்ண தெரியாதவன் செய்யிற காரியமாடா இது” அவன் மூஞ்சிலே தலையனைக்கு அடியில் இருந்த ஒரு கிட்டை தூக்கி வீச, அது என்ன என்பது போல எடுத்து பார்த்தவனுக்கு அதில் இருந்த இரு கோடுகள் அவனை திக்கு முக்காட வைத்தது..

“ஹுர்ரே...” என்று உற்ச்சாக மிகுதில் படுக்கையிலே எகிறி குதிக்க, அவள் தான் பயந்து போனாள்.

“ஐயோ பயமா இருக்கு முதல்ல இப்படி குதிக்குறதை விடுங்களேன்” என்று கெஞ்ச அவளை கொஞ்சமும் கண்டுக்கொள்ளாமல் குதி குதி என்று குதித்து பத்தாததுக்கு அவளை கைகளில் அள்ளியவன் அவளை மேலே போட்டு கேட்ச் பிடிக்க ரீகாவுக்கு வராத மசக்கையின் மயக்கம் அந்த கணம் வருவது போல இருந்தது.

“டேய் மாமா விடுடா கிறுகிறுன்னு வருது..” என்று தலையை பிடித்துக்கொண்டு கத்த அவனோ மேலும் ஒரு முறை தூக்கி போட்டு பிடித்த பின்பே அவளை கீழே விட்டான்.

அவன் கீழே விட்ட பின் தான் உயிரே வந்தது போல இருந்தது.

“ஏண்டா இப்படி முரட்டு தனமா நடந்துக்குற.. எத்தனை முறை சொல்றேன்.. என்னால உன் முரட்டு தனத்தை தாங்க முடியல மாமா” பாவமாய் சொன்னாள்.

“இதுக்கே இப்படின்னா இன்னும் எவ்வளவோ இருக்கே” என்று அசால்ட்டாய் சொன்னவனை கண்டு அவளுக்கு இன்னும் பயமாய் தான் வந்தது.

“ப்ளீஸ் மாமா”

“சரி விடு இப்போ வேணாம் ஆனா குழந்தை பிறந்ததுக்கு பிறகு ஒரு மூணு மாசம் வரை மட்டும் தான் உனக்கு ரெஸ்ட் பொறவு எப்பவும் போல தான்” என்று அவளது கன்னத்தை பிச்சி எடுத்து முத்தம் மிட அவளுக்கு வலி உயிர் போனது.

அவளது வயிற்றில் புடவையை விளக்கி விட்டு தன் முகத்தை புதைத்தவன் “டேய் கண்ணா அப்பாடா... அப்பாடா கண்ணா....” என்று குழந்தையிடம் சொல்லும்போதே அவனது குரலில் லேசாய் பிசிறு வந்து ஒட்டிக்கொண்டது..

அவனது நெகிழ்ந்த குரலை கண்டு மனம் மயங்கியவள் “ம்ம் ஆமாடா கண்ணா உனக்கு சிறந்த அப்பா... ஆனா உன் அம்மாவுக்கு சரியானா பொருக்கி புருஷன்” என்று கொஞ்சி சொல்ல அவளது அந்த கமெண்டில் நிமிர்ந்து அவளை பார்த்து கண்ணடித்துவிட்டு, அவனது கருவை பத்திரமாக குடியிருந்த வயிற்றில் மீசை முடிகள் உரச முத்தமிட்டு ஒரே நேரத்தில் தன் சிசுவையும், தன் சரி பாதியையும் சிலிர்க்க செய்தான்.

அவனது தலையை கோதி கொடுத்தவளுக்கு மனமெல்லாம் முழுமை பெற்றது போல் ஒரு உணர்வு...

தலைவனின் உயிர் தன் உயிரோடு...

தலைவனின் வம்சம் தன் உதிரத்தோடு... இதை விட வேறு என்ன வேண்டும்... நிறைவான காலங்கள்.. என்றும் நினைத்து இன்புறும் ஆனந்தமான நினைவுகள்...

ஆனால் அது கூட இவ்வளவு விரைவாக நிறம் மாறி போகும் என்று இருவரும் கொஞ்சம் கூட எண்ணி பார்க்கவில்லை... எல்லாமே சுபம் என்று என்னும் வேலையில் முற்றிலும் மாறு பட்டு போனது உள்ளங்கள் இரண்டும்...

உள்ளங்களின் வெடிப்பில் காணமல் போனதோ, அல்லது மறைந்து போனதோ... அதுவும் இல்லாமல் மறைக்கப்பட்டதோ... அறிந்து சொல்வார் யாரோ...

 

அத்தியாயம் 25  

 

“வயித்தை தள்ளிக்கிட்டு என்னால எல்லாம் காலேஜ் போக முடியாது ப்ளீஸ்டா புருஞ்சுக்கோ” கெஞ்சியவளை கண்டு

“அப்போ காலேஜ் அடுத்த வருஷம் போய்க்கோ” என்றான் முடிவாக..

“என்னது அடுத்த வருசமா... விளையாடாத ராய்.. இது எனக்கு பைனல் இயர். எவ்வளவு முக்கியம்னு உனக்கே தெரியும்..” என்றவளை கூர்ந்து பார்த்து

“அதை விட வாழ்க்கை ரொம்ப முக்கியம் ரீகா” என்றான்.

“ராய் ப்ளீஸ்...”

“நீ என்ன சொன்னாலும் முடியவே முடியாது... எனக்கு இந்த குழந்தை வேணும் திகம்பரி..” ஆணை இடும் குரலில் சொன்னவனை கண்டு லேசாய் உள்ளுக்குள் நடுக்கம் பிறந்து.. ஆனாலும் அதை விட அதிகமாகவே மகிழ்ச்சி பிறந்தது..

“நிஜமாவா சொல்ற மாமா” கண்களில் பெருகிய காதலோடு கேட்டவளை கண்டு “அப்போ இவ்வளவு நேரம் என்னை நீ சோதிச்சியாடி.. உன்னை இரு என்ன பண்றேன்னு பாரு” என்று அவளை துரத்தி பிடிக்க வயிற்றில் கருவை சுமந்தவள் ஓட அச்ச பட்டு அவனிடம் தானாகவே சிக்கினாள்.

“என்னடி அப்போ உனக்கும் சந்தோசமா...” அவளது முகத்தில் இருந்த சிரிப்பை பார்த்து கேட்க

“ம்ம் ரொம்ப ரொம்ப...” என்று அவனை கட்டிக்கொண்டு சொன்னவளை பார்த்தவனுக்கும் அவளின் தாய்மையும், குழந்தையை அவள் மறுக்காத மொழியையும் பார்த்து சந்தோஷம் பீறிட்டு ஆகாய கங்கை போல பொங்கியது ராயருக்கு.

அவளை தன்னோடு இருக்க அணைத்துக் கொண்டு அவளிடம் அவனது மகிழ்வை தெரிவித்தவன் அதே போல் அவளிடமிருந்து அவசர அவசரமாகவும் விலகிக்கொண்டான்.

“சரிடி நான் குளிச்சுட்டு வரேன் ரெண்டு பேரும் மருத்துவர் கிட்ட போயிட்டு வரலாம்..” என்று சொல்லியபடி வேகமாய் குளியல் அறைக்குல் நுழைந்தவனை

“மாமா நில்லு” அதிகாரமாய் சொன்னவளின் பேச்சில் ‘நீ நின்னே ஆகணும்’ என்ற கட்டளை இருக்க கண்டு

“எனக்கு வேலை இருக்கு திகம்பரி” என்றான் திரும்பாமலே..

“எது ரத்தம் கசியரத நிறுத்துறதா..” என்றாள் நக்கலாக... அவனது அவசர விலகலே அவளுக்கு அவனின் நிலையை தெரியப்படுத்திவிட உள்ளுக்குள் துடித்து போனாள்.

அவளது அறிவை சற்றே மெச்சிக்கொண்டவன் ஆனால் பெரிதாக அவன் ஆச்சிரியம் எல்லாம் படவில்லை.. ஏனெனில் ரீகாவை பற்றி அவனுக்கு தெரியாதா... இல்லை அவனை பற்றி தான் ரீகாவுக்கு தெரியாதா..

“அதான் கண்டு புடுச்சுட்டீல பொறவென்னடி” என்று முறைத்து விட்டு அவன் செல்ல வேகமாய் வந்து அவனை தடுத்தாள்.

“ஏண்டா இப்படி பண்ற... ஒவ்வொரு முறையும் நீ இப்படி அடிபட்டு வரும் போதெல்லாம் என் மனசு படுற கஷ்டம் உனக்கு புரியவே புரியாதா... நீ இப்படியே பண்ணிக்கிட்டு இரு ஒரு நாள் நான் இல்லாமலே போக போறேன், நீ அடி பட்டு படுத்து கிடக்கும் காட்சியை பார்க்க முடியாமல்....” என்று கண்கள் கலங்கி வேதனையுடன் அவள் பேச....

“ஏய் கன்னம் பழுத்துடும் பார்த்துக்க... இன்னொரு முறை என் முன்னாடி இப்படி பேசி வைக்காத.. பொறவு சேதாரம் நீ எதிர் பார்க்காத அளவுக்கு இருக்கும்...“ என்று அவளை எச்சரித்த படியே உள்ளே செல்ல அவனை செல்ல விடாமல்

“ஆமா இப்படி நிதம் நிதம் என்னை கொல்றதுக்கு பேசாம நீயே உன் கையால என்னை கொன்னு போடுடா... என் பரிதவிப்பு உனக்கு கிண்டலா போச்சா...” வெடித்தவளை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல்

“சரி தான் போடி.. என் அன்பை புருஞ்சுக்காத உன்னிடம் பேசி எந்த பிரயோஜனமும் இல்லை...” என்று சொன்னது தான் தாமதம்

“எதுடா உன் அன்பு, இப்படி அடி பட்டு கை கால் முறிய மாசத்துக்கு மூணு விபத்துன்னு கணக்கு வச்சிகிட்டு அடி பட்டு வந்து படுத்துகிட்டு என்னை நடுங்க செய்யிறது தான் உன் அன்பா... அது தான் உன் அன்புன்னா அது எனக்கு தேவை இல்லை...

உண்மையான அன்புன்னா என்னன்னு தெரியுமா... ஐயோ நமக்காக வீட்டுல ஒருத்தி இருக்காளே நாம இல்லாம அவளால நிமிஷம் கூட இருக்க முடியாதே.. அப்படின்ற எண்ணம் உன் மனசுல பதிஞ்சு போய் இருக்கணும்..

அப்போ தானாவே உன் கை மிதமான வேகத்துல வண்டியை செலுத்தும்... நமக்கு தான் அப்படி ஒரு எண்ணமே இல்லையே... உனக்கு உன் வேகம் தான்.. உன் ஆசை தான் பெருசு...” என்று சொல்லி முடிக்கும் முன் ராயரின் கை திகம்பரியின் கன்னத்தை பதம் பார்த்திருந்தது...

“ஏய் இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன உன்னை என் கையாலே கொன்னுடுவேண்டி...” அவள் பேசிய பேச்சில் வெகுண்டு எழுந்தான்.

அவனுக்கா அவள் மீது அன்பு இல்லை.. அவள் மீது அன்பு இருக்கும் பட்ச்சத்தில் தானே தலை தெறிக்க தன் உயிரை பணயம் வைத்து அவளுக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு தெரியாமல் பதறி அடித்துக்கொண்டு கீழே விழுந்து மேலே விழுந்து புழுதியில் புரண்டு ரத்தம் வடிய அதை கொஞ்சமும் கவனிக்காமல் அரை மணிநேரம் கடக்க வேண்டிய தூரத்தை ஐந்தே நிமிடத்தில் கடந்து வந்தால்

இவள் இப்படி பேசியது அதுவும் ‘தான் ஒருநாள் இல்லாமல் போய்விடுவேன்’ என்று சொன்ன சொல்... அதை கேட்க அவன் முதலில் உயிருடன் இருப்பானா... செய்தி வந்து அவனிடம் சேரும் முன் அவனது உயிர் அவனை விட்டு பிரிந்திருக்கும் என்று கூடவா அவளுக்கு தெரியாது...

வேதனையின் உச்சத்தில் நின்றவனுக்கு கர்பிணி பெண்ணை அடித்தது கஷ்டமாய் இருந்தாலும் தவிர்க்க முடியாமல் எழுந்த கோவத்தை அவன் பின் எப்படி தான் தீர்ப்பான்...

அவனது உயிர் அவள் அன்றோ...

“நானும் அதை தான் சொல்றேன் மிஸ்டர் காசி விஸ்வநாத ராயர்.” என்றாள் கண்களில் கண்ணீருடன். அவனது வேதனை அவளுக்கு புரியாமல் போகுமா... அப்படியாவது இவன் திருந்துவான் என்று தானே தான் அவ்வாறு பேசுவது... ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் ப்ச்... வேதனையுடன் அவனை ஏறிட்டு பார்த்தாள் திகம்பரி..

“ஓ என்னோட வாழறதை விட உங்களுக்கு என் கையால சாகனும் இல்ல, எப்படிடி உன்னால இப்படி இவ்வளவு சுயநலமா இருக்க முடியுது... என்னால உங்களை விட்டு ஒரு நிமிஷம் கூட யோசிக்க முடியல...

இது என் ரீகாவுக்கு பிடிக்காது, இது என் ரீகாவுக்கு ரொம்ப பிடிக்கும்னு, பொழுதுக்கும் என் சிந்தனைகள் முழுவதும் உன்னை சுத்தி மட்டும் தான்டி வருது... ஆனா நீங்க ரொம்ப ஈஸியா செத்து போறேன்னு சொல்றீங்கல்ல...

ரொம்பவே சந்தோஷம். இனி ஒரு கணம் கூட என் வாழ்க்கையில உனக்கு சாரி உங்களுக்கு இடம் கிடையாது...“ என்று ஆத்திரமாக சொல்லி முடிக்கும் முன் ரீகா ராயரின் கன்னத்தை பார்த்து ஒன்னு விட்டாள்.

--

“என்னடா நினைச்சுகிட்டு இருக்க.. நீ எது சொன்னாலும் நான் சரி சரின்னு கேட்டுக்குவேன்னு நினைப்பா உனக்கு... என் மன ஆதங்கத்தை நான் வேற யார்கிட்ட போய் சொல்றது சொல்லுடா..

வேகமா வராதன்னு சொன்னது தப்பா...” என்று அவனது சட்டை காலரை கொத்தாய் பிடித்து கேள்வி கேட்டவளின் நிலையை புரிந்து கொண்டாலும் தன் நிலையிலிருந்து இறங்காமல் நின்றவனை கண்டு அவளுக்கு வெறுத்து போனது...

அவனை போடா என்று விட்டு விடவும் முடியவில்லை... அருகில் நெருங்கி அணைத்துக்கொள்ளவும் முடியவில்லை அவளால்.. கொஞ்ச நாள் விலகி இருக்கலாம் என்று முடிவெடுத்தவள் அதை அவனிடம் சொல்ல அதுக்கும் அவன் ஆடி தீர்த்து விட்டான்..

“ஏன் நான் அதுக்குள்ள சலிச்சு போய்ட்டானா இல்ல உன் அண்ணாகிட்ட சொல்லி அந்த கார்த்தியை கல்யாணம் பண்ணிக்க முடிவெடுத்துருக்கியா...” என்று சுருக்கென்று கேட்டான்.

அதில் அடிபட்ட உணர்வை அடைந்தவள் அதை அவனிடம் காண்பித்துக்கொல்லாமல் “என்னை பத்தி உன் அபிப்ராயம் இது தான்னா அதையே வச்சுக்கோடா” என்றவள் கலங்கிய கண்களை அவனிடமிருந்து மறைத்த படி அவ்விடத்தை விட்டு விலகி வேறு ஒரு அறைக்கு சென்று கதவை தாளிட்டுக்கொண்டாள்.

அவன் சற்று சுதாரித்து அவள் சென்று அடைந்த அறையின் கதவை தட்ட அவள் திறக்கவே இல்லை... வந்த ஆத்திரத்தில் பால்கனி வழியாக சுவர் ஏறி குதித்து அவளின் அறைக்குள் நுழைந்தான் ராயரு...

வந்தவன் கட்டிலில் சுருண்டு படுத்திருந்தவளை கண்டு இரசித்தவன் அவளின் பின் புறம் சென்று அணைத்து அவளோடு இழைந்த படி சேலையை விளக்கி தன் வாரிசு இருந்த வயிற்றில் கை போட்டு வருடி விட்டபடியே அவளது காதில் தன் நுனி நாக்கை சுழற்றி விட்டு அவளை படுத்தி எடுக்க,

தன்னில் அத்து மீறும் அவனது கையை பட்டென்று தள்ளி விட்டவள் அவன் புறம் திரும்பி முறைத்தாள். அதில் அவனது உதடுகள் இடம் மாறி போய் அவளது மூக்கில் உரச, அவளை கண்டு கண்ணடித்தவன் தன் நாக்கை இன்னும் சற்று கீழ் இறக்கி அவளின் உதடுகளை வருடி விட, பட்டென்று தன் வாயை திறந்து அவனின் நீட்டிக்கொண்டிருந்த நாக்கை கடித்து அப்படியே வைத்துக்கொண்டாள்.

அதில் வலி உயிர் போக பேசவும் முடியாமல் விடுவிக்கவும் வழி தெரியாமல் திணறி திண்டாடி போனான்.

அதை கண்டு ஒரு எள்ளல் பார்வையை அவன் மீது செலுத்தினால் திகம்பரி...

“என்ன பேச்சு பேசுன.. இப்போ அனுபவிடா பாவி..” என்று ஆத்திரத்துடன் கருவியபடி இன்னும் அதிகமாய் தன் கூறிய பற்களை கொண்டு அவனது நாக்கை கடித்தபடி அவனை பார்த்தாள்.

அவளது விழி வழி வந்த செய்தியை படித்தவன் அவளை கூர்மையாக பார்த்து தன் கைகளை அவள் மீது படர விட்டு நக்கல் பார்வை அவள் மீது செலுத்த இப்போது ஜெர்க் ஆவது அவளது முறையாய் போனது..

அவனது நாக்கை விட்டு விட மனம் இல்லாமல் மேலும் அவனது நாக்கை அழுத்திக் கடிக்க அதற்க்கு ஏற்றார் போல அவனது கைகள் முன்பை விட அதிக அழுத்தமாய்  அவள் மீது படர்வதோடு தனது இடத்தையும் மாற்ற, சட்டென்று தன் கைகளை கொண்டு அவனை கட்டு படுத்த முனைந்தாள்.

ஆனால் அவனோ அவளது இருகைகளையும் தன் ஒரு கையால் சிறை செய்துவிட்டு தன் வேலையை தொடர

இதுக்கு மேல் தன்னால் இவனோடு போராட முடியாது என்று உணர்ந்தவள் வேகமாய் அவனது நாக்கை விட்டு விட, அடுத்த நொடி அவனது அதரங்கள் வன்மையாய் அவளது இதழ்களை சிறை செய்துக்கொண்டது..

அவள் தான் அவனது செய்கையில் திகைத்து திணறி திண்டாடி போனாள்.

எப்படி எல்லாம் பேசிட்டு இப்போ வந்து செய்ற வேலையை பாரு என்று பொருமியவள் அவனிடமிருந்து தன்னை விலக்கிகொண்டவள்

அவனை எரிப்பது போல பார்த்தாள்.

அதற்க்கெல்லாம் அசைபவனா அவளுடைய ராயரு...

“என்ன பார்வை வேண்டி கிடக்கு நீ எதுக்கு என்னை விட்டு பிரியணும்னு நினைச்ச அதுக்கு தண்டனை தான் அது.. சோ அதுக்கெல்லாம் மன்னிப்பு கேக்க முடியாது.. இனி ஒரு முறை என்னை பிரியணும்னு நீ நினைச்சு கூட பார்க்க கூடாது...

அப்படி நீ நினைச்சு யோசிச்சா கூட என் கிட்ட இருந்து அந்த கடவுளே வந்தாலும் உன்னை காப்பாத்த முடியாது... புருஞ்சு நடந்துக்க பேபி....” என்று கூர்மையாய் அவளை பார்த்தபடி இடையை இறுக்கி பிடித்து அவளுக்கு வலிக்கும் படி சொன்னவனை கண்டு திகில் தான் எழுந்தது திகம்பரிக்கு.

--

திகம்பரி கரு சுமந்து இருப்பதை ராயரே நந்தாவிடமும் ராஜிடமும் சொல்ல நந்தா ஆடி தீர்த்து விட்டான். இடிந்து போன ராஜ் அமைதியாக இருந்து தன் வருத்தத்தை வெளிப்படுத்த திகம்பரிக்கு கஷ்டமாய் இருந்தது..

ஆனாலும் தன்னை புரியவைக்க வேண்டிய சூழலில் தான் தவற கூடாது என்பதால் ராஜின் காலடியில் அமர்ந்தவள் அவரின் கைகளை எடுத்து தன் கைகளில் வைத்து அடக்கிக்கொண்டவள்

“அப்பா... உங்க பார்வையில இது தவறுன்னு நீங்க நினைக்குறீங்க... என்னை பொறுத்த வரையில் இது காதலோட புனிதம்னு நான் நினைக்குறேன்... என் உணர்வுகளை புருஞ்சுக்கோங்க பா.. இதை தவறா பேசி என்னை காய படுத்தாதீங்க...

மனம் விரும்பி உண்டான, கடவுள் எனக்கே எனக்குன்னு கொடுத்த இன்னொரு உறவு... நான் எப்படி உங்களுக்கோ அது போல தான் இந்த கருவும் எனக்கு... ப்ளீஸ் பா...

நீங்க லேசா ஒரு பார்வை கேவலமா பார்த்தா கூட இந்த கரு எனக்கு மகிழ்வை கொடுக்காது பா... ஏதோ பாவம் செஞ்சது போல இருக்கும்... எனக்கு இந்த கருவை மகிழ்ச்சியுடன் சுமக்க ஆசை படுறேன்.. ஒவ்வொரு நிமிசமும் இதை மன பூர்வமா நான் உணரனும்...” என்று சொல்லிக்கொண்டிருந்தவளை

“ரொம்ப சந்தோஷம் திகம்பரி... அப்போ எங்க நிலைமையை கொஞ்சம் கூட யோசிச்சு பார்க்க மாட்டல்ல... வெளில கேக்குறவங்களுக்கு என்ன பதிலை சொல்றது.. இது அப்பாவுக்கு எவ்வளவு பெரிய தலை குனிவு. இது எதை பத்தியும் யோசிக்க மாட்ட அப்படி தானே...”  ஆங்காரமாய் கேட்ட தமயனை பார்த்தவளுக்கு விழிகளில் கண்ணீர் பொங்கியது.

“அண்ணா..” என்று ஒரு கரத்தை நீட்டி அவனை தன் அருகில் அழைத்தவளை கண்டு நந்தாவுக்கும் கண்கள் கலங்கியது...

எப்படியா பட்ட வாழ்க்கையை உதரிவிட்டு இன்று இப்படி இந்த நிலைமையில் வந்து நிர்க்கிறாலே.. அதுவும் தந்தை, தனயனிடம் தலை குனிந்து, இவளுக்கு இது தேவை தானா...

எப்படி வாழ்ந்தவள். எதுக்கும் தலை குனிந்து பழக்கம் இல்லாதவள் இன்று யாரோ செய்த தவறுக்கு இவள் தண்டனயாய் உரியவர்களிடம் தலை குனிந்து நிற்கிறாள்.

அந்த நிலையிலும் தன் தங்கையை திட்ட மனம் வராதாவன் தாவி வந்து தன் தங்கையின் முன் மண்டியிட்டு அவளை தன் நெஞ்சுக்குள் புதைத்துக்கொண்டான்.

தவறு செய்தாலும் அவள் அவனது உயிர் தங்கை ஆயிற்றே.. அவளது வருத்தம் அவனையும் வருத்துமே... பாசம் என்பதை முழுதாய் உணர்த்தியவள் அவள் தானே... இப்போது கூட அவனது கண்ணீருக்கு தங்கை தானே காரணம்..

முன்பெல்லாம் கிரெடிட் கார்ட் குடுப்பதோடு இருந்த உறவு, இன்று கண்ணீரை அவளுக்காக சிந்த வைத்து முழுவதும் மாற்றியது அவளது அன்பு தானே...

நேசம் என்பதை முழுவதுமாய் அறிந்து உணர்ந்த பின் அடிக்கடி கோவம், சிரிப்பு, கண்ணீர் என்று இருப்பது இயல்பு தானே...

விஷயம் கேள்வி பட்டு ராயரின் கன்னத்தில் பளார் என்று ஒன்னு விட்டான் நந்தா...

எந்த பிணக்கும் செய்யாமல் அதை மன பூர்வமாக ஏற்றுக்கொண்டான் ராயர்.

நந்தா பிளு பிளுவென்று பிடித்து அவனை வாங்கு வாங்கு என்று வாங்க, ராயரோ கொஞ்சமும் வாயை திறக்க வில்லை.

அதில் லேசாய் மனம் சமாதானம் அடைந்தவன் “எப்போ கல்யாணம்..” என்று கேட்டான்.

“இன்னும் ஒரு வருஷம் அதுக்குள்ள நான் தனியா நின்னுடுவேன்... அதுவரை...” என்று சொன்ன ராயரை

“டேய் உன்னை கொள்ளாம விட மாட்டேண்டா... அதுக்கு எதுக்கு டா இப்போ என் தங்கச்சியை இந்த நிலைமைக்கு ஆளாக்குன...” டிபிக்கல் அண்ணனாய் எகிறினான்.. ராஜ் வியப்புடன் நந்தாவை பார்த்தார்.

வெளிநாடுகளில் படித்தவன், இப்போது கூட லிவிங் லைபில் வாழ்பவன் ஆனால் தங்கை என்று வரும்போது அவன் காட்டும் கோவம் அவரை பிரம்மிக்க வைத்தது..

ஏனோ மனமெல்லாம் நிறைந்தது போல ஒரு உணர்வு நந்தாவை நினைத்தது...

“அதெல்லாம் நீ எப்பவாவது தனியா வாதாடிக்க.. இப்போ என் தங்கையை கல்யாணம் பண்ணு. அது தான் முக்கியம்” என்றான் கட்டளையாய்.

“விளையாடாத நந்தா எனக்கு இந்த வருஷம் தான் ரொம்ப இம்பார்டன்ட்... ஒரு வருஷம் கழிச்சு கண்டிப்பா உன் தங்கையை நான் கல்யாணம் பண்ணிக்குவேன்” என்றான் ராயர் உறுதியாக.

“அப்போ அது வரை என் மருமக பிள்ளை வளராம அப்படியே இருக்குமாடா... உன் பிரச்சனையை உன்னோடு.. அதையும் இதையும் குழப்பாத.. வர முகுர்த்தத்துல டேட் பிக்ஸ் பண்றேன். நீ உங்க வீட்டுல சொல்லிடு” என்று காரராய் சொல்ல ராயரின் பார்வை அனைவரையும் விடுத்து திகம்பரியை பார்த்தது..

அவனது பார்வையில் முதுகு தண்டு சில்லிட்டு போனது அவளுக்கு..

“நான் கேட்டனா.. நீயே தானே உன்னை குடுத்த.. இப்ப வந்து கழுத்துல கத்தியை வக்கிறது போல வச்சு தாலி கட்டுன்னு சொன்னா எப்படி...” என்று பார்வையிலே அவளிடம் கேட்க

அதை உணர்ந்தவளுக்கு மனதில் பலமாய் அடி பட்டது. அவனிடமிருந்து இப்படி ஒரு பதில் வரும் என்று கிஞ்சித்தும் எண்ணியிராதவள் அவனின் ஒற்றை பார்வையில் உயிரை விட்டாள் திகம்பரி...

ஆனாலும் அதை பெரிது படுத்தாமல் “இல்ல அண்ணா எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேணாம்.. அவரு கேக்குற நேரத்தை குடுங்க.. எனக்கும் படிக்கணும்.. பிறகு ஆர அமர பண்ணிக்கலாம்” என்று கலங்கிய கண்களை யாருக்கும் காட்டாமல் சொன்னவளின் தவிப்பை அப்படியே உணர்ந்த நந்தா அவளின் கைகளை இறுக்கி பிடித்து அவளை தேற்றுவது போல செய்ய,

அண்ணன் தன்னை புரிந்து கொண்டுவிட்டான் என்று உணர்ந்து சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள் திகம்பரி.. அவளது கண்களில் தெரிந்த யாசகம் அவனை கட்டி போட விழிகளில் இருந்து கண்ணீர் அவளது கன்னத்தில் விழ

அதை துடைத்து விட்டவன் “உன் விருப்பம் கண்ணம்மா..” என்று அவளை தோளில் சாய்த்தவனுக்கு மனமெல்லாம் பாரமாய் போனது..

நந்தாவால் ராயரை ஒரே பிடியில் கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்க முடியும்.. ஆனால் அதில் திகம்பரியின் காதல் நெஞ்சு காய பட்டு விடுமோ (ராயர் திகம்பரியை பார்த்த பார்வையின் அர்த்தத்தை நந்தாவும் உணர்ந்திருந்தான்) என்று பயந்தவன் அந்த விஷயத்தை அப்படியே விட்டு விட்டான்.

அண்ணா இவ்வளவு விரைவா தன்னை உணர்ந்து கொள்ளுவான் என்று எதிர் பார்க்காத திகம்பரிக்கு அண்ணாவின் திடீர் அரவணைப்பு தாயை நினைவுக்கு கொண்டுவர தன் தாயாய் அவனை பார்த்தவள் அவனோடு ஒன்றிக்கொண்டாள்.

“தேங்க்ஸ் அண்ணா..” என்றாள். அவளது குரலில் இருந்த வேதனையை உணர்ந்தவன்

“உன் சந்தோஷம் தான் என் சந்தோஷம் தான் திகம்பரி... ஆனா நீ யாருக்கோ உன் சந்தோசத்தை புதைத்துக்கொண்டு இருக்கிறாய். உன் முடிவு தான் எங்க முடிவும்... உன்னை சுத்தி தான் நாங்க.. அதனால எதுக்கும் அழமா எப்பவும் போல தையிரியாம இரு” என்றவனின் பார்வை ராயரை கூறு போட்டது..

நந்தாவின் பாசம் கண்டு ராஜ் மனம் மகிழ்ந்து போனார். ஆனாலும் உள்ளுக்குள் தான் சரியான தகப்பனாய் இல்லாமல் போய் விட்டோமே என்று வெகுவாய் வேதனையில் சுழன்றார்.

ராயருக்கும் வருத்தம் தான். ஆனால் இப்போது இருக்கும் சூழலில் திருமணம் என்பது அதை பற்றியே சிந்தனை இல்லாமல் எப்படி அதை செய்வது. அதுவும் இப்போது தான் சுயமாய் கொஞ்சம் கொஞ்சமாய் தனியாய் வாதாடி வருகிறான். அப்படி இருக்கையில் திருமணம் என்கிற சுமையை எப்படி சுமப்பது..

அவனை பொறுத்த வரையில் திகம்பரி அவனது வாழ்க்கையில் நுழையும் போது எல்லாமே சரியாய் இருக்க வேண்டும்.. கொஞ்சம் கூட அவள் முகம் சுருக்க கூடாது... திருமணத்துக்கு பின் காதல் இன்னும் கூடனுமே தவிர குறைய கூடாது..

அதுவும் ராயரோட வாழ்கிற வாழ்க்கை அவளுக்கு சொர்க்கமாய் இருக்கணும்... கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து அது வருத்தத்தில் முடிந்து விட்டால் அதை தாங்க ராயருக்கு திடம் இல்லை.. வெளியில் வேணால் அவன் கெத்து ஹீரோவா இருக்கலாம்.. ஆனால் உண்மையில் அவன் சரியான கோலை..

அதுவும் திகம்பரியின் விசயத்தில் அவன் படு கோலை.. அவளது லேசான முக சுருக்கம் கூட அவனை வால் கொண்டு வெட்டும் அளவு வலிமை வாய்ந்தது.. முக சுருக்கமே அவனை இந்த அளவுக்கு கொள்ளும் என்றாள் அவளின் மன சுருக்கம் கண்டு அதுவும் அவன் மீது வந்து விட்டால் அவனால் அதை தாங்கி கொள்ள முடியுமா... முடியாதே...

அவனது நினைப்பும் தவறில்லை.. இது அவனுடைய பக்கம்.. ஆனால் தன் பார்வை திகம்பரியை கூறு போட்து என்று தெரியாமல் ஒரு வாரம் ஊருக்கு சென்று விட்டான். அதன் பிறகு நடந்த நிகழ்வுகள் தான் இருவருடைய வாழ்க்கையையும் திருப்பி போட்டு விட்டது...

 

அத்தியாயம் 26

 

ராயர் ஊருக்கு செல்வதற்கு முன் திகம்பரியை அவனது வீட்டுக்கு அழைத்து சென்றான். போக மனமே இல்லாமல் இருந்தவளுக்கு அவன் உடும்பு பிடியில் வேறு வழி இல்லாமல் அவனோடு உடன் பட்டு செல்ல வேண்டிய நிலை அவளுக்கு..

அவளை அமர்த்தி அவளின் மடியில் முகம் பதித்தவன் “எனக்கு தெரியும் நான் எவ்வளவு பெரிய விஷயம் செய்திருக்கிறேன் என்று... ஆனா அதை தவறுன்னு நான் சொல்ல மாட்டேன் ரீகா.. எனக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் நீ.. உன் மூலம் கிடைத்த இந்த சின்ன உயிரும் எனக்கு பொக்கிஷம் தான். உன்னை எந்த சூழலிலும் என்னால் விட்டு விட முடியாது... நாளைக்கு எதாவது ஒன்னு நடந்து நீ என்னை விட்டு பிரிஞ்சு போய்டீனா பொறவு நான் இல்லவே இல்லை... இருக்கவே மாட்டேன் ரீகா...

என் கண் பார்வையில் நீ படித்த விஷயம் உன்னை எப்படி கூறு போடும்னு எனக்கு நல்லாவே தெரியும்.. ஆனாலும் நான் அந்த சமயம் அந்த பார்வை உன்னை பார்த்தேன் என்றால் அதுக்கு காரணம் இப்போ திருமணம் வேணாம் என்பதால் மட்டுமே..

உன்கிட்ட என்னால எப்பவுமே எதையுமே மறுக்க முடியாது... அது உனக்கும் தெரியும்.. உன்னை கட்டு படுத்த எனக்கு வேற வழி தெரியல மா.. நீ அந்த பார்வையில் அடிபட்டு போகும் முன்னவே எனக்கு வலில உயிர் போயடுச்சுடா..” என்றவன் அவளது முகம் பார்த்து அவளது கைகளை தன் கையில் வைத்து வருடி விட்ட படி

“நீ என் கிட்ட வரும்போது என் கிட்ட எல்லாமே இருக்கணும்... நீ எதுக்கும் தவித்து போய்விட கூடாது என்பதால் மட்டுமே... நான் இளகின பார்வை பார்த்தேன் என்றால் சத்தியமா நீ என்னை எப்படியாவது கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சுடுவ... உன் கெஞ்சலில் கண்டிப்பா நான் உன் வசம் தான்... பின்னே எப்படி நான் உறுதியாய் இருப்பேன் சொல்லு..

அதனால் மட்டும் தான் நான் உன்னை அப்படி பார்த்தேன் ரீகா... அது உன்னையும் உன் குடும்பத்தையும் எப்படி பாதிக்கும்னு எனக்கு புரியுது... சமுகத்தை நீ எப்படி எதிர் கொள்ள  போகிறாயோ என்கிற பயம் உன்னை விட எனக்கு அதிகமா இருக்கு.

அதுவும் நீ இருக்கும் ஸ்டேடஸ்க்கு கண்டிப்பா எவ்வளவு பெரிய இழுக்கு இல்லையா... ஆனா இதை எப்படி எதிர் கொள்வது என்று புரியலடா.. திருமணம் என்பது எவ்வளவு பெரிய விஷயம்.. அது இப்படி ஒரு வலுகட்டாயத்தில் செய்ய எனக்கு விருப்பம் இல்லடி.. திருமணம்ன்றது இதுக்கான லைசன்ஸ் இல்லடி.” என்று அவளது வயிற்றை தொட்டு காட்டி

“அதை முழுசா வாழனும். ஏனோ தானோன்னு வாழ எனக்கு விருப்பம் இல்லடி. திருமணம் ஆனா நாளில் இருந்து உன்னை முழு மனசா எனக்குள்ள நான் உள் வாங்கணும்.. நீ ஒரு நொடி கூட எனக்கு அலுத்து போக கூடாது.. அது அன்பாக இருந்தாலும் சரி. உன் தேவையாய் இருந்தாலும் சரி.. உன் தேவையை நீ கூறுவதற்கு முன்பே நான் நிறைவேற்றி வைக்கணும்.

அப்படி இல்லாம நீ உன் தேவையை வாய் விட்டு கூறிய பின்பும் என்னால் நிறைவேற்ற முடியாமல் போய் அந்த கோவத்தை உன்னிடமே காட்டி என் மீதான உன் அன்பை சரித்து கொள்ள எனக்கு மனம் இல்லடா ரீகா...

இது எவ்வளவு பெரிய சுய நலம்னு எனக்கு புரியுது... ஆனா உன் அன்பு எனக்கு மாசு இல்லாம கிடைக்கணும் என்பதற்காக மட்டுமே இந்த சூழ்நிலையை எனக்கு சாதகமா பயன் படுத்திக்கிட்டு உன்னை... உன்.. மேல் தேவையற்ற..” சொல்ல கூட முடியாமல் தவித்து  

“மன்னிச்சுடுடி.. அதை கேக்க கூட எனக்கு தகுதி இல்லை..” என்று தவித்து போய் பேசியவனின் கண்களில் கண்ணீர் தடம் பதிக்க ஏனோ திகம்பரிக்கு மனசு கஷ்டமாய் போனது.

“நீ எது வேணாலும் சொல்லி என்னை காய படுத்தி இருக்கலாம் மாமா... ஆனா நீ என்னை பாத்தியே ஒரு  பார்வை என்னை எப்படி கூறு போட்டது தெரியுமா.. அதை என்னால என்னைக்கும் மறக்கவே முடியாது.. என் பெண்மை அந்த நிமிடம் கற்பழிந்து போனது போல இருந்தது... பிடித்த ஆண் கூட ஒரு பெண் வரை முறை இன்றி பழகினது எவ்வளவு தவறுன்னு நீ எனக்கு பொட்டில் அடித்து போல புரியவச்சுட்ட” சொன்னவளின் கண்களில் கொஞ்சம் கூட கண்ணீர் இல்லை. ஏதோ எல்லாம் மறுத்து போனது போல ஒரு உணர்வில் இருந்தாள்.

“இல்லடா அது...”

“நீ என்ன சமாதானம் செய்தாலும் என்னால் அவ்வளவு சுலபமா இதிலிருந்து மீள முடியாது மாமா... நீ மறுபடியும் என்னை தொடும் போது என் நெஞ்சில் நீ பார்த்த பார்வை மட்டுமே மீதம் இருக்கும். அதை தாண்டி என்னால் உன் தொடுகையை உணரவே முடியாது.. இதோ இப்போ கூட நீ என்னை தொடும் போது எனக்கு அருவெறுப்பா இருக்கு...

ஆனா அதை கூட என்னால உன் கிட்ட சொல்ல முடியல.. சொன்னா எங்க உன் மனசு கஷ்ட படுமொன்னு நான் சொல்லல...” என்றவளின் சொல்லில் முற்றும் முழுதாய் உடைந்து போனான் ராயர். சட்டென்று அவள் மீதிருந்து கைகளை விலக்கிக்கொண்டான்.

“எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் மாமா.. அதனால் தான் நீ எது பண்ணாலும் என்னால் உன்னை வெறுக்க முடியாது... இப்பவும் உன்னை எனக்கு பிடிக்கும்... முன்பை விடவும் எனக்கு உன்னை பிடிக்கும்..

இதோ இப்போ நீ சொன்னியே உன் அன்பு எனக்கு எந்த மாசு மருவும் இல்லாம எனக்கு வேணும்னு சொன்னியே அந்த சுய நலம் கூட எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சுருக்கு மாமா... ஆனா நீ பார்த்த பார்வையை என்னால மறக்க முடியல.. அதை என்னைக்கு மறக்குறனோ அப்போ தான் உன் தொடுகயை என்னால ஏத்துக்க முடியும் மாமா..

ஆனா ஒன்னு மாமா என் அன்பு எப்போதும் அது உன் மேல மட்டும் தான்.. இந்த குழந்தையை என் மன நிறைவோட தான் நான் சுமக்குறேன்.. எப்பவும் அப்படி தான். இது என் புனிதமான காதலில் உதித்த ஜனனம்..”

அவள் ‘என்’ என்ற வார்த்தை அவனை கிழித்து போட்டது... அது அப்போ என் குழந்தை இல்லையா... அடி பட்ட பார்வை ஒன்றை அவள் மீது வீச அதை உணர்ந்தாலும்

“இது மத்தவங்க கண்ணுக்கு வேற மாதிரி கூட படலாம்... உன்னால் உருவான குழந்தை தான் ஆனால் உன் பார்வையில் கூட அது தவறாய் படலாம். ஆனா இது எனக்கு புனிதம்.

நான் முழு மனசோட தான் உன் கிட்ட என்னை கொடுத்தேன்.. அன்றைக்கு அந்த நிமிடம் உன் பார்வையில் ‘நான் உனக்காக அலைந்தேன்’ என்று என்னை பார்த்தாயோ அப்பவே நான் செத்துபோய்ட்டேன். நான் வாழ்க்கையில மறக்க நினைக்குற நொடி எதுனா அது அந்த நொடி தான்.

ஆனா அது நான் உயிரோடு இருக்கும் வரை மறக்காதுன்னு புரியுது... உயிரா இருக்குற உறவோட உதாசீனம் எவ்வளவு வலிக்கும் தெரியுமா... உனக்கும் வலிக்கும்னு எனக்கு புரியுது.. ஆனா அதுல இருந்து என்னால மீள முடியல... சரி அதை எல்லாத்தையும் விடு...

நீ ஆசை பட்ட மாதிரி எல்லாத்தையும் முடுச்சுகிட்டு வா.. நான் காத்திருக்கிறேன்... இப்போ நான் கிளம்புறேன்..” என்றவள் அவனது பதிலை எதிர் பார்க்காமல் அவனிடமிருந்து மன வேதனையுடன் விலகிக்கொண்டு கிளம்பி விட்டாள்.

வெளியே காண்பித்துக் கொள்ளவில்லை என்றாலும் அவள் உள்ளுக்குள் நொறுங்கி போய் இருந்தாள்.

அதை அவள் மற்றவரிடம் காட்டிக்கொண்டது கிடையாது.  தன் வேதனைகளை யாரிடமும் காட்டாமல் ஆளுமையுடன் தான் இருந்தாள். அவளை விட அவளது காயம் மற்றவர்களை அதிக அளவில் காய படுத்தும் என்பதை அறிந்து வைத்திருந்தாள். முக்கியமா தன் வாழ்வில் அதிக இடம் பிடித்த மூன்று ஆண்களிடம் இருந்தும்..

ராயரிடம் கூட வெறும் வார்த்தையால் மட்டுமே சொல்லி இருந்தாள். அதுவும் மறக்க முடியாது என்று மட்டுமே..

ஆனால் உள்ளுக்குள் இருக்கும் உயிரை குடிக்கும் வலியை அவனிடம் அவள் காட்டிக்கொள்ளவில்லை.

அவளால் காட்டவும் முடியாது.. அவன் காய பட்டு போனாள் அவளுக்கு தானே வலிக்கும். அவனது அடிபட்ட நிலையை தான் அவளால் பார்க்க முடியுமா...

தன் பெண்மை கலங்க பட்டு போனதை எண்ணி அழுதவளின் அழுகையை யாரும் அறியாமல் போனது விந்தையிலும் விந்தை.. தலையணைக்கு மட்டுமே வெளிச்சம் போட்டு காட்டியவள் வெளியே இயல்பு போல காட்டிக்கொண்டாள்.

எந்த ஒரு பெண்ணுக்கும் அது கணவனே ஆனாலும் “நீயா தானே வந்து உன்னை கொடுத்த” என்கிற பார்வையையோ பேச்சையோ தாங்கவே முடியாது..

அது கொடுக்கும் வலி வார்த்தையில் அடக்கி விடவும் முடியாது... கல்யாணம் ஆகி ஒருவரை ஒருவர் அறிந்து தெரிந்து பழகி என்று இருந்தாலே தாங்க முடியாத நிலையில் இங்கு திகம்பரி திருமணம் ஆகாமல் பழக நேரம் இருந்தும் முழுமையாய் தெரிந்து கொள்ள முடியாமல் அங்கீகாரம் அற்ற உறவு முறையில் விளைந்த கருவுக்கு தாயாகி நின்ற நிலையில் உரியவனிடமிருந்து இப்படி பட்ட பார்வை வீச்சை தாங்க முடியுமா..

அதை தாங்க முடியாமல் தனக்குள்ளே உழன்று யாருக்கும் தெரியாமல் தன்னுள்ளே நொந்து போனாள். அப்போது கூட, அந்த சூழலில் கூட அவனை அவளால் வெறுக்க முடியவில்லை..

அதுவும் காதல் தான்... ராயரின் செயல் முரண் பட்டு நின்றாலும் அவனது நோக்கமும் காதல் தான்... ஒவ்வொருவருடைய பார்வையும் ஒவ்வொரு விதம்..

ஒருத்தருக்கு சரி என்று பட கூடிய விஷயம் இன்னொருவருக்கு தவறாய் படும்..

இங்கே எதுவும் சரியும் கிடையாது. தவறும் கிடையாது..

நம் எண்ணங்கள் மட்டுமே எல்லாவற்றிற்கும் காரணமாய் அமைகிறது..

நாம் பார்க்க கூடிய பார்வைகள் மட்டுமே நம்மை முடிவெடுக்க தூண்டுகிறது..

இங்கே திகம்பரியின் செயலும் தவறு... ராயரின் செயலும் தவறு... அங்கீகாரம் இல்லாத ஒரு உறவு எல்லை மீறும் போது எத்தகைய சூழலை எதிர் கொள்ள வேண்டும் என்பதை கவனிக்க தவறுகின்றார்கள்.

அப்படி ஒரு சூழல் வந்த பின்பு ராயர் அதை எதிர்க்கொள்ளவில்லை.. ஆனால் அதை ஒரு பெரிய விசயமாக எடுத்துக்கொள்ளாமல் தன் நிலையிலே நின்று காதலுக்கு இன்னும் வலு சேர்க்கும் வேலையை மட்டுமே பார்க்கிறான்.

தான் ஒரு தந்தை என்பதை அவன் உணர்ந்தும் அதை ஸ்கிப் பண்ணி கொள்வது தவறு... அவன் ஒரு வேலை தன் நிலையில் இருந்து இறங்காமல் அந்த குழந்தைக்கு அவன் முழு பொறுப்பும் ஏற்றுக்கொண்டிருந்தால் திகம்பரிக்கு அவளது செயல் தவறாய் பட்டிருக்காதோ... என்னவோ.

அவன் விலகி நிற்கும் போது தான் அவளது தவறு உச்சந்தலையில் ஓங்கி அடித்து புரிய வைத்து அவளின் நிலையை உணர வைத்திருக்கிறது..

இல்லை என்றால் அவள் இன்னும் தன் தவறை புரிந்து இருந்திருக்க மாட்டாளே.

நம்பி விட்ட தகப்பனுக்கும் அண்ணனுக்கும் அவள் என்ன பதில் சொல்லுவாள்.

அவர்களை ஏறெடுத்து தான் பார்க்க இயலுமா... காசு பணம் பின்னாடி ஓடிக்கொண்டிருந்த அப்பாவுக்கும் உடன் பிறந்தவனுக்கும் இது சம்பட்டியால் அடித்த அடி தான்.

வயது பெண்ணை தனிமையில் விட்டு சென்றது எவ்வளவு தவறு என்று புரிய வைத்து விட்டது திகம்பரியின் செயல்.

இனி வருத்தபட்டு என்ன செய்வது... சுதாரிக்கும் முன் எல்லாமே நிகழந்து முடிந்திருந்ததே...

தவறு என்று என்னும் போதே தன் வழிகளை கொஞ்சம் மாற்றிக்கொண்டால் பெரிய விபத்திலிருந்து வெளியே வந்து விடலாம். முக்கியமாய் இளம் வயதினர். பார்க்கும் போதும் பேசும் போதும் தெரியாத சில விஷயங்கள், பழகும்போது நம்மை வேறு ஒரு சூழலில் கொண்டு வந்து விட்டுவிடும். மீள நினைக்க கூட நம்மளை விடாது. எப்போதும் உள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். நம் உள் உணர்வுகள் எப்போதும் தவறாய் போகாது..

--

ராயர் அதன் பின் மன வருத்தத்துடன் ஊருக்கு சென்று விட, திகம்பரி தனக்குள்ளே சுருங்கி போனாள். நந்தா அவளை கரு களைப்பு செய்து விடு என்று வர்புருத்திக்கொண்டிருக்க ராஜோ தன்னுள் ஒடுங்கி போனார்.

நந்தாவின் செயல்கள் ராயருக்கு தெரிவிக்க பட கொதித்து போனான். அவனால் உடனேவும் வர முடியவில்லை.

ஊரில் சில நில தகராறு வர அதை பஞ்சாயத்து பண்ண ஓடிக்கொண்டிருந்தான் தன் மாமாவோடு.

அடுத்த மூன்று நாளில் திகம்பரி ரத்த வெள்ளத்தில் மருத்துவ மனையில் சேர்க்க பட்டாள். அதை தெரிந்து கொண்ட ராயர் துடித்து போனான். நந்தாவின் மேல் கட்டுக்கடங்காமல் கோவம் பெருகியது. சட்டென்று அவனால் வரவும் முடியவில்லை. தனக்கு இதற்க்கு முன் தகவல் சொன்ன நம்பிக்கையானவரை அந்த மருத்துவமனையில் தங்க செய்து அங்கு நடக்கும் விபரங்களை கண் காணிக்க சொன்னான்.

இரு நாட்கள் அந்த மருத்துவமனையில் இருந்தவள் பின் வீடு வந்து சேர்ந்தாள். ரொம்பவும் வாடி போய் இருந்தாள். இப்பவும் அவள் கண் முன் தன் உதிரம் உறைந்த இடங்கள் நினைவுக்கு வர தளர்ந்து போனாள்.

விழிகளில் நீர் நிறைந்து வழிந்தது. ஆதரவுக்கு யாரும் இல்லாமல் தவித்து தான் போனாள். அப்போது தான் தன் தாய்க்காக மிகவும் ஏங்கி போனாள் திகம்பரி. இந்த நேரம் பார்த்து ராயர் கூட அருகில் இல்லாமல் போய்விட்டானே என்று புலம்பினாள்.

அவன் வந்தால் நிகழ போகும் நிகழ்வுகளை அறியாமல் அவனது வரவுக்காக காத்திருந்தாள் அந்த பேதை.

நந்தாவுக்கும் ராஜுக்கும் இப்போதே போய் ஆகவேண்டிய நிலை. இனி எதுவும் வேணாம். என் பெண் மட்டும் போதும் என்று முடிவெடுத்த ராஜூ அதை முடித்துக்கொள்ள இப்போது தான் போயே ஆகவேண்டும் என்று நிலையில் திகம்பரியிடம் விடை பெற்று கொள்ள திகம்பரி உள்ளுக்குள் வலியை உணர்ந்தாள். ஆனாலும் சிரித்த முகமாக இருவரையும் அனுப்பி வைத்தாள்.

சரியாய் பதினைந்து நாள் கழித்து ராயர் பெரும் சீற்றத்துடன் கிளம்பி வந்தான். அவனது வேகத்திலும் கோவத்திலும் திகம்பரி சிக்கி சின்னா பின்னம் ஆகி போனாள்.

கல்லூரிக்கு போகாமல் வீட்டிலே படுத்திருந்தவள் ராயரின் வரவுக்காக காத்திருக்க அவளை ஏமாற்றாமல் அவனும் வந்தான்.

வந்தவன் “என்னமா உடம்பு பரவாலையா ஆமா எப்போ கல்யாணம்...” என்று நக்கல் பண்ணியவனை கண்டு ஒரு கணம் திகைத்து தான் போனாள் பெண்ணவள்.

“என்ன மாமா சொல்ற... கல்யாணமா யாருக்கு” என்றாள் ஒன்றும் புரியாமல்.

“ஆகா என்ன நடிப்புடி... உன்னை எல்லாம் அப்பவே..” தனக்குள் பேசிக்கொண்டவன்

“ஏண்டி என் பிள்ளைய கொன்ன... சுமக்க விருப்பம் இல்லனா என்னிடம் சொல்லி இருக்கலாமே.. அதை விட்டுட்டு நான் இல்லாதப்ப என் பிள்ளையை கொன்னுட்டியேடி பாவி.. அப்படி என்னடி உனக்கு நான் பண்ணினேன்... ஒரு வருஷம் கழித்து கல்யாணம் பண்ணிக்கலாம்னு தானேடி சொன்னேன்... அது பிடிக்கலன்னா சொல்லி இருக்கலாமே... உடனடியாவே கல்யாணத்தை முடுச்சு இருப்பனேடி இப்படி நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டியேடி...” ஆத்திரத்துடன் கத்தியவன் வருத்தத்தில் நின்று இறைஞ்சலில் முடித்தான்

“உன் கிட்ட இருந்து இப்படி ஒரு நம்பிக்கை துரோகத்தை எதிர் பார்க்கல திகம்பரி...” கண்கள் கலங்க சொன்னவன் அடுத்த நொடி மிருகமாய் மாறி இருந்தான். கொஞ்சம் கூட அவள் சொல்ல வருவதை அவன் காது கொடுத்து கேட்கவில்லை. அவளது பேச்சுக்கு முட்டுக்கட்டை இட்டவன் மேலும் அவளை வதைக்க ஆரம்பித்தான்.

“உனக்கும் அந்த கார்த்திக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்கான் உன் அண்ணன்.. அது நான் இருக்கும் வரையிலும் நடக்கதுடி.. அதுக்கு இந்த ராயர் ஒரு போதும் விட மாட்டான். எந்த வயித்துல என் பிள்ளையை சுமக்க மாட்டேன்னு கலைச்சுட்டு வந்தியோ அதே வயிற்றில் என் பிள்ளையை நீ சுமக்கனும்..” என்று வெறி வந்தவன் போல அவள் மீது படர்ந்தான்.

எவ்வளவோ தடுக்க நினைத்தும் அவனை தடுக்க முடியாமல் அவனோடு மல்லுக்கட்ட தெம்பு இல்லாமல் நடக்க போகும் நிகழ்வை எண்ணி அழுது கரைந்தால் திகம்பரி...

அதை கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல் ராயர் மிருகமாய் மாறி இருந்தான்.

எல்லாம் முடிந்து அவன் அவளை விட்டு மொத்தமும் விலகிப்போனான்.

“இனி உன் முகத்துலேயே விழிக்க மாட்டேன்டி... என் சிசுவை கொன்ன உனக்கு எப்பவும் இந்த ராயர் கிடையாதுடி... நீ யார வேணா கல்யாணம் பண்ணிக்கோ... ஆனா அது என் மகனோட மரணத்துலதான்னு நினைச்சுக்கோ...

உன்னால நிம்மதியா இருக்கவே முடியாதுடி... உன்னை பிரியவே கூடாது, வறுத்தபட வைக்கவே கூடாதுன்னு தான் நான் அப்படி ஒரு பார்வை பார்த்தேன் ஆனா அது நிலைக்கவே இல்லடி... எல்லாமே தலை கீழா போய்டுச்சு... என்னை உசுரோட கொன்னுட்டடி.. இனி நீ யாரோ நான் யாரோ... நீ உன் மனசுக்கு பிடிச்ச யாரை வேணா கல்யாணம் பண்ணிக்கோ...

இனி இந்த ராயர் உன் வாழ்க்கையில கிடையாது...” கண்கலங்க சொன்னவன் அவளின் நிலையை கவனிக்காமல் தன் வருத்தத்திலே சென்று விட்டான்.

அதன் பிறகு நடந்த எதையும் அறியாமலே சென்று விட்டான் ராயர்.

மீண்டும் ரத்த வெள்ளத்தில் மிதந்தாள் திகம்பரி.... அரை குறை நினைவுகளோடு....

 

அத்தியாயம் 27

 

நடந்ததை எல்லாம் நினைத்து பார்த்தவளின் கண்களில் கண்ணீர் சரம் தொடுத்து வழிந்தது... மனமெல்லாம் ரணமாய் இருக்க அவன் சென்ற பிறகு நடந்த சம்பவத்தை நினைத்து பார்க்க அஞ்சியவளாய் கண்களை இருக்க மூடிக்கொண்டாள்.

அதன் பிறகு நடந்த சம்பவங்கள் எவ்வளவு கனமாய் நகர்ந்தது என்று ஒரு கணம் ஓட்டிப் பார்த்தவளின் உடல் இன்னும் அந்த சம்பவங்களில் இருந்து வெளிவராமல் நடுங்கி தூக்கி வாரிப்போட்டது...

“என்ன நடந்ததுன்னு தெரியாமலே என்னை தூக்கி போட்டுட்டு போய்ட்டியேடா மாமா..” வேதனையுடன் முனங்கியவளை உசுப்பினார் காரின் ஓட்டுனர்.

“அம்மா நீங்க சொன்ன இடம் வந்துடுச்சு”

அதில் லேசாய் கலைந்தவள் அழுத விழிகளை அவரிடமிருந்து மறைத்த படியே பணத்தை எடுத்து நீட்டிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள்.

நுழைந்தவளின் கால்கள் அவளின் தகப்பனை நோக்கி சென்று அவரிடம் தஞ்சம் அடைந்தது.

“என்ன கண்ணு ஆச்சு... ஏண்டா ராயர் கிட்ட மறுபடியும் சண்டையா... நீ அவருகிட்ட உண்மைய சொல்லி இருக்கலாமே” என்று வாஞ்சையாய் அவளின் தலை கோதினார் ராஜ்..

“எல்லாம் தெருஞ்ச நீங்களே இப்படி கேட்டா எப்படி பா... என்னால முடியாது பா..” என்று பாவமாய் அவரை பார்த்தாள்.

“உன் வாழ்க்கையை கொஞ்சம் யோசிச்சு பாருடா.. உன்னையே நம்பி இருக்கிற...”

“அப்பா” என்று வேகமாய் அவரை இடைமறித்தவள் “என் வாழ்க்கைக்கு எந்த குறையும் இல்ல பா நான் மகிழ்வாக தான் இருக்கேன்.. மகிழ்வாக தான் இருப்போம்” என்று உறுதியாய் சொன்னவளை கண்டு எப்போதும் போல மனம் சோர்ந்தவர்

“உன் விருப்பம்னு என்னால இதுல சொல்ல முடியாது திகம்பரி...” அவரின் குரலில் அவ்வளவு வேதனை இருந்தது.

“நீங்க இதுல எப்போதும் போல தலை இட வேணாம்ப்பா.. நான் உருவாக்கின சூழல் நான் தான் சமாளிச்சு வரணும். கண்டிப்பா சமாளிச்சு வருவேன்” என்றவளை விழிகள் கலங்க

“உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக்குற பாப்பா..” என்று மன வேதனையுடன் சொன்னவர் கண்களை மூடிக்கொண்டு அவளின் தலையை வருடி விட்ட படி இருந்தார்.

மேற்கொண்டு அவளிடம் இதை பத்தி பேச முடியாது.. அந்த வயதிலே பேச முடியாமல் பண்ணியவள் இப்போது நிறுவனத்தை ஏற்று சிறப்பாக நடத்திவரும் ஒரு முதலாளியையா எதிர்க்க முடியும்.. அதிலும் அவள் அவரது செல்ல மகள் வேறு. ரெண்டடி போட்டு திருத்தும் வயதை கடந்து விட்டாளே... மனதில் பாரம் கூடி போய் இருந்தது ராஜுக்கு.

அவரின் வருடலில் விழிகள் கலங்க கண்ணீரை சொரிந்த படி அமர்திருந்தாள் திகம்பரி அவரின் காலடியில்.

மாடியிலிருந்து இதை பார்த்துக்கொண்டிருந்த நந்தாவுக்கு கோவம் உச்சியை தொட்டது.. ஆனால் தன்னால் எதுவும் செய்ய முடியாதே.. திகம்பரியை மீறி அவள் இட்ட கட்டளையை தாண்டி அவனால் செயல் பட முடியாதே..

அவளின் கட்டளை மட்டும் இல்லாமல் இருந்தால் ராயரின் கதை என்றோ முடிந்திருக்கும். அதை செய்ய விடாமல் தடுத்து தடுத்து நந்தாவின் வெறியை அதிகமாக்கி இருந்தாள் திகம்பரி..

அவனுக்கு கண்கள் சிவந்து எரிமலையின் சீற்றத்திற்கு உதாரணம் கூறுவது போல இருந்தது அவனது தோற்றம். உடன் பிறந்தவளின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் காதலையும் திருமணத்தையும் வெறுக்க வைத்திருந்தது.

இன்று வரை யாரையும் ஏறெடுத்து பார்க்காமல் ஒழுக்க சீலனாய் தவ புதல்வனாய் இருந்தான் நந்தா..

“நீ மட்டும் என் கண்ணுல மாட்டுங்க மிஸ்டர் காசி விஷ்வ நாத ராயர்.. அது தான் உங்களுக்கு கடைசி நாள்..” என்று வெஞ்சினம் கொண்டவன் தன் தங்கைக்காக வேதனை கொண்டான்.

--

இங்கு குல தெய்வ கோவிலுக்கு வந்தவனின் நிலையை கண்ட அத்தனை பேரும் பதறி போனார்கள்.. ஆனால் அவனோ வெஞ்சினத்தோடு தன்னை அடக்கிக்கொண்டு திகம்பரிக்காக காத்திருக்க தொடங்கினான்.

கேள்வி கேட்ட அத்தனை பேருக்கும் எதையோ சொல்லி சமாளித்தவன் தோண்டி தோண்டி கேட்ட ரவியிடம் மட்டும் எரிந்து விழுந்தான்.

அதிலே ஏதோ நடந்திருப்பதை உணர்ந்துக்கொண்ட ரவி காலையில் திகம்பரி நின்ற நிலை கண்ணுக்குள் வந்து போக அவளுக்காக வேதனை பட தொடங்கினான்.

வீட்டில் அத்தனை பேர் இருக்கும் போதே அந்த பெண்ணை அப்படி படுத்தி எடுத்தான். இப்போதோ ஒருவரும் இல்லை. யாரும் இல்லாத நிலையில் ராயரிடம் சிக்கிய திகம்பரியின் நிலை எப்படி இருக்கும் என்று சிந்திதத்தவன் மிக மோசமாய் தான் இருந்திருக்கும் என்ற விடையும் வந்தது.

ராயரின் கையில் வலிந்த உதிரம் அதுக்கு சான்று கூற ‘ஐயோ’ என்று வந்தது அவனுக்கு. இந்த ராயருக்குள்ள இப்படி ஒரு காட்டு மிராண்டி இருப்பான் என்று கொஞ்சமும் எதிர் பார்த்திருக்கவில்லை ரவி.

“எப்படி மாமா இவ்வளவு மோசமா நடந்துக்க உன்னால முடியுது..” என்று அவனை கோவத்தோடு பார்த்து கேட்டான் ரவி.

“எவ்வளவு மோசம்னு உனக்கு இன்னும் தெரியலடா... முழுசா தெருஞ்சுக்கோ அப்போ இன்னும் கோவம் வரும்” என்று அசால்ட்டாய் சொன்னவன் கோவிலினுள் சென்று அந்த தெய்வத்திடம் சண்டை போட ஆரம்பித்தான்.

“நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது. எனக்கு என் ரீகா வேணும்... இத்தனை வருஷம் அவ இல்லாம நான் கஷ்டப்பட்டது போதும். எனக்கு அவ வேணும்.. கண்டிப்பா வேணும்... நீ அவளை எனக்கே எனக்குன்னு குடுக்கணும்... குடுத்தே ஆகணும்” என்று சண்டயிட்டவனை கண்டு அந்த தெய்வம் அழகாய் புன்னகைத்தது..

“நீ இப்படி சிருச்சுக்கிடே இரு. அவ என் கையில மாட்டி இன்னும் சின்ன பின்னம் ஆகட்டும்.. அது தானே உனக்கு வேணும்.. நான் என் ரீகாவை காய படுத்த கூடாது.. அதுக்கு நீ தான் பொறுப்பு. இனி அவ விழிகளில் கண்ணீர் வழிய கூடாது..” என்றவனை கண்டு

“அது உன் கையில தான் இருக்கு” என்று அந்த தெய்வம் சத்தமின்றி சொல்ல பாவம் அது ராயரின் காதில் விழவில்லை.

சாமி கும்பிட்டு வீடு திரும்பியவர்கள் திகம்பரியை தேட அவள் இல்லாமல் போனது எல்லோருக்குமே சிறு வருத்தத்தை கொடுத்தது...

கார்த்திக் தான் அனைவருக்கும் “ஒரு எமர்ஜென்சி அதனால உங்க கிட்ட சொல்லிக்க முடியல.. கண்டிப்பா வேலையை முடித்துவிட்டு அவ உங்களுக்கு பேசுறேன்னு சொன்னா” என்று சொன்னவன் ராயரை வெட்டும் பார்வை பார்த்தான்.

“போடா நீயெல்லாம் எனக்கு இணையா..” என்று அவனின் பார்வையை அலட்ச்சியப் படுத்திவிட்டு தன் மாமாவிடம்

“மாமா எனக்கு ஒரு அவசர வேலை வந்திருக்கு இப்போ நான் போயே ஆகணும்” என்று சொல்ல தில்லைக்கும் சிவனாண்டிக்கும் பெரும் வருத்தமாய் போனது.

“என்னப்பா இது கோவில்ல இருந்து வீடு வந்து நுழைஞ்சும் நுழையாம இப்படி சொல்ற...”

“இல்ல மாமா ரொம்ப முக்கியமான கேசு... அது தான்” என்றான் சிறிதும் தயக்கம் இல்லாமல்.

“இல்ல ராயரு..” தில்லை ஏதோ சொல்ல வர அவரை முந்திக்கொண்டு “அம்மா மாமா எவ்வளவு முக்கியமான விசயமா போறாரு தெரியுமா. இப்போ போய் அது இதுன்னு சொல்லிக்கிட்டு...

இது அவரு வாழ்க்கையிலேயே சந்திக்க போற மிக முக்கிய சந்திப்பு இப்போ போய் அவர தடுத்துகிட்டு” என்று ராயரை கூர்மையாக பார்த்தபடி சொன்னவனின் பார்வையை கண்டு ராயர் லேசாய் திகைத்தாலும் அவனின் பார்வையையும் அலட்ச்சிய படுத்தினான்.

“கூடவே நானும் போகணும்... நான் போறது ரொம்ப ‘துணையா’ இருக்கும்...” என்று அதுவும் துணையாய் என்று சொன்ன சொல்லில் அழுத்தத்தை கூட்டி சொன்னவனை கண்டு

“யாருக்கு எனக்கா இல்ல அவளுக்கா” என்று பல்லை கடித்தான் ராயர். அவனின் வருகையின் நோக்கத்தை உணர்ந்து.

“அதான் உனக்கே தெரியுதே நான் யாருக்கு துணையா இருக்க போறேன்னு.. பொறவென்ன கேட்டுகிட்டு இருக்குறவன்..” அவனை முறைத்தபடி சொன்னவனை கண்டு பல்லை கடித்தான் ராயர்..

“இது என் விசயம் நீ தள்ளியே இருந்துக்கோ இல்ல அடிபட்டுடுச்சுன்னா ரொம்ப வலிக்கும்” என்று எச்சரித்தான் ராயர்.

“திகம்பரிக்கு வலிக்கிரத்தை விட கம்மியாதான் எனக்கு வலிக்கும்... அந்த பொண்ணாலயே அவ்வளவு வலியை தாங்கும் போது என்னால தாங்க முடியாதா போடா மாமா..” என்று சிலிர்த்துக்கொண்டவன் தன் உடமைகளை எடுத்து வைக்க ஆரம்பித்தான்.

“ரவி இப்போ இந்த பயணம் அவசியமா” என்று தன்னை தேடி வந்து பேசியவனை கண்டு அவ்வளவு ஆத்திரம் வந்தது ரவிக்கு..

“அவ உங்க தோழி அதை நினைவு வச்சுக்கோங்க மிஸ்டர் கார்த்திக்... எப்படி இப்படி ஒரு நிலமையில” என்று சொன்னவனின் கண்களின் முன் காலையில் திகம்பரி நின்ற கோலமே கண்ணில் வந்து எழுந்தது.. “திகம்பரியை வச்சு இவ்வளவு நாள் பார்த்துகிட்டு இருக்கீங்க... சத்தியமா நீங்க நல்ல தோழனே கிடையாது கார்த்திக்..” என்று கோவத்தோடு சொன்னவன் அவனை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் கிளம்பி வெளியே வந்தான் ரவி.

வந்த அன்னைக்கு இருந்த அவளின் கம்பீரமும் சென்ற அன்று இருந்த அவளின் அலங்கோலமும் ரவியின் மனதை பிசைய அதுக்கு முழு காரணமும்மாய் இருந்த ராயரின் மேல் பொல்லா கோவம் எழுந்தது.

ஏனோ அவள் மீது எந்த தப்பும் இல்லை என்று மனது கூப்பாடு போட்டது ரவிக்கு. ராயரிடம் தான் தவறுகள் இருக்கும் என்று உள் மனது கத்தி கூச்சல் போட்டது. அந்த எண்ணமே அவனை ராயரிடம் சரியாக பேச விடாமல் தடுத்தது.. இருவரும் அருகருகே இருந்தாலும் முந்தய கலகலப்பு எதுவும் இல்லாமல் அமைதியாகவே இருந்தார்கள்.

அங்கே தயாராக நின்ற ராயரின் அருகில் சென்று நின்று அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு மனதில் எடுத்த சில முடிவுகளோடு சென்னை கிளம்பினான்.

கார்த்தியோ ரவி பேசிய பேச்சில் கொஞ்சமும் வறுத்த படாமல் ரவியை நினைத்து பெருமைகொண்டான். எவ்வளவோ அவன் முயன்றாலும் அனைத்தையும் தடுத்து முட்டுக்கட்டை போட்டு இட்டிருந்த திகம்பரி இப்போது ரவியின் அதிரடியில் கண்டிப்பாய் எதுவும் செய்ய முடியாமல் கையை கட்டியபடி வேடிக்கை தான் பார்க்க முடியும். உனக்கு ராயரும் ரவியும் தான் சரி படும் என்று மகிழ்வுடனே எண்ணிக் கொண்டான்.

காரில் இருவரும் பயணிக்கும் நேரம்  முழுவதும் மௌனம் மட்டுமே நிறைந்திருந்தது. இருவருமே வேறு வேறு சிந்தனைகளில் மூழ்கி இருந்தார்கள் என்றாலும் நினைவுகள் என்னவோ திகம்பரியை மட்டுமே மையம் கொண்டு இருந்தது.

ரவியின் இந்த மௌனம் ராயருக்கு சிரிப்பைதான் வர வளைத்தது. அதுவும் திகம்பரியிடம் அவன் கொண்டுள்ள அக்கறை அவனை சிலிர்க்க செய்தது..

“என் மாப்பில்லைடா நீ...” என்று கொஞ்சிக்கொண்டான் மனதினுள்ளே..

இருவரும் ஒரு வழியாய் சென்னைக்கு வந்து இறங்கினார்கள். சிறு ஓய்வுக்கு பிறகு திகம்பரியை தேடி அவளது வீட்டுக்கு சென்றார்கள் இருவரும்...

எத்தனை வருடங்களுக்கு பிறகு இந்த வாசல் படியை மிதிக்கிறேன் என்று நினைவு கூர்ந்தவன் பழைய விஷயங்கள் லேசாய் வந்து போக முகம் சற்று இறுகி தான் போனது.. ஆனாலும் அதை தவிர்த்து விட்டு இன்று திகம்பரி மட்டும் போதும் என்ற முடிவோடு வந்து நின்ற நிலை அவனுக்கு கூச்சத்தை கொடுத்தாலும் அதை கூட கம்பீரமாய் மாற்றிக்கொண்டான் ராயர்..

அதை உணர்ந்து கொண்ட ரவி “ம்கும் இதுலல்லாம் ஒன்னும் குறையில்லை..” என்று நோடித்துக்கொண்டு அந்த வீட்டினுள் நுழைந்தான்.

பெரும் தயக்கம் வந்து ராயரை ஆட் கொண்டாலும் அதை எல்லாம் உதறிவிட்டு தன் மனம் கவர்ந்தவளை காணும் ஆசையோடும் நோக்கத்தோடும் உள்ளே விரைந்தான்.

திகம்பரியோடு சுற்றி திரிந்த இடங்கள் அவளோடு வாழ்ந்த இடங்கள் என்று மனதில் வளம் வர ஆசையோடு அவ்வீட்டை பார்த்தான்.

அவனின் கண்ணில் தெரிந்த காதலையும் ஏக்கத்தையும் பார்த்த ரவிக்கு “இவ்வளவு காதலை வைத்துக்கொண்டு பின் எதுக்கு அந்த பெண்ணை வதைக்கணும்” என்ற கேள்வி தான் எழுந்தது.

வெளி வாசலில் ஓட்டுனர் தாத்தாவை அவன் தேடிய சமயம் அவரே அவன் எதிரில் வந்தார்.

“தாத்தா எப்படி இருக்கீங்க” என்று ஆர்வமாய் விசாரித்தவனை கண்டு கொள்ளாமல் வாளியில் இருந்த தண்ணீரில் துண்டை நனைத்து வண்டியை துடைக்க ஆரம்பித்தார்.

“தாத்தா உங்க கிட்ட தான் பேசுறேன்...” என்று மறுபடியும் முகத்தில் வற்றாத சிரிப்போடு கேட்டவனை அப்போதும் கண்டு கொள்ளாமல் தன் வேலையை செய்துக்கொண்டிருந்தார்.

அவரது புறக்கணிப்பை நன்கு உணர்ந்து கொண்ட ரவி ராயரை பார்த்து தலை அசைக்க அப்போது தான் அவனும் புரிந்துக்கொண்டான்.

“பேச மாட்டிங்கள்ள... பரவால என் திகம்பரியே உங்களை என் கிட்ட பேச சொல்லுவா அப்போ இருக்கு உங்களுக்கு...” என்று செல்ல மிரட்டலோடு அவரை கடந்து போனான்.

ஆனாலும் திரும்பி வந்து அவரை கட்டிக்கொண்டு அவரின் கன்னத்தில் முத்தம் இட்டுவிட்டு

“இதை விட அதிகமா உங்களை பனிஷ் பண்ண போறேன் பாருங்க” என்று சொல்லிவிட்டு வீட்டின் உள்ளே சென்றான்.

அவனது அடாவடியை கண்ட ரவி வாயை பிளக்க தாத்தாவோ கண்களின் ஓரம் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டார்.

வீட்டின் உள்ளே நுழைந்த ராயரின் கண்கள் அங்கு சோபாவில் அமர்ந்திருந்தவரை கண்டு நிலைகுத்தி நின்றது அவ்விடத்தை விட்டு நகராமல்.

 

அத்தியாயம் 28

 

தன் கண்கள் காட்டும் காட்சியை நம்ப முடியாமல் திகைத்து நின்றான் ராயர்.. எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருப்பானோ... ரவி அவனை உலுக்காமல் இருந்திருந்தால் அவனை உசுப்பி நிகழ்வுக்கு கொண்டு வர சுதாரித்தவன் வேகமாய் உள்ளே வந்து அவரின் காலடியில் அமர்ந்து

“என்ன ஆச்சு மாமா.. ஏன் இப்படி, உங்களுக்கு போய் இப்படியா...” விழிகளில் வழிந்த நீரோடு உண்மையான அன்போடு அவரின் செயல் படாத ஒரு கையையும் ஒரு காலையும் வருடிவிட்டவன் சரி வர பேச இயலாமல் சற்றே கோணி இருந்த அவரது வாயையும் பார்த்தவனுக்கு பெரும் குற்ற உணர்வு வந்து ஆட் கொள்ள அதை தாங்க முடியாமல் அவரது மடியிலே முகம் புதைத்து கதரியவனை கண்டு திகம்பரிக்கு வருடி விட்டது போல ராயருக்கும் ராஜூ வருடிவிட்டார் அன்பின் மிகுதியினால்.

அவரின் மென்மையான குணம் கண்டு அந்த நொடியில் தான் மிகவும் சிறுத்து போனது போல உணர்ந்தான் ஊர் உலகம் போற்றும் சிறந்த அந்த வழக்கறிஞன். 

அவனது உடல் குலுங்க “வேணாம் தம்பி எப்பயோ நடந்து முடுஞ்சு போனதுக்கு இப்போ எதுக்கு இந்த அழுகை விடுங்க” என்று அவனை எழுப்பி தன் அருகில் அமர்த்திக்கொண்டு

“எப்படி தம்பி இருக்கீங்க... நல்லா இருக்கீங்களா.. கொஞ்ச நாள்லயே சிறந்த வக்கீலாயிட்டீங்கன்னு கேள்விப்பட்டேன் ரொம்ப சந்தோஷம் தம்பி..” என்று சந்தோச பட்டவரை கண்டு இன்னும் கூனி குறுகி போனான் ராயர்.

“எப்படி மாமா உங்களால கொஞ்சம் கூட கோவ படாம என் கிட்ட பேச முடியுது... உங்க பொண்ணுக்கு நிகழ்ந்த அக்கிரமங்கள் அனைத்தும் என்னால் நிகழ்த்த பட்டவை. ஆனாலும் கொஞ்சம் கூட வெறுப்பை காமிக்காம....” என்று முடிக்கும் முன்னவே

“என் பொண்ணே உங்களை வெருக்காதப்போ நான் மட்டும் எதுக்கு வெறுக்கணும் தம்பி...” என்று மென் புன்னகை சிந்தியவரின் ஒளியில் கூனி குறுகி கூசி போனான் ராயர்...

“உங்க அன்பால என்னை கொல்றீங்க மாமா... ஆனா உங்க அன்புக்கு கொஞ்சமும் தகுதியானவன் கிடையாது... நான் பாவி மாமா... எல்லா தப்பையும் சரியா செஞ்சுட்டு என் திகம்பரிய நட்டாத்துல விட்டுட்டு நான் மட்டும் கரை ஒதுங்கிட்டேன். எனக்கு மன்னிப்பே கிடையாது” என்று தலையிலே அடித்துக்கொண்டு அழுதவனை வருத்தத்துடன் பார்த்தார்..

காலம் தாழ்த்திய மன்னிப்பு.. கேட்டும் பயன் அற்றது என்று அவனிடம் சொல்ல முடியாமல் அவனின் தலையை தடவி விட்டார் ராஜ்...

சற்று சுதாரித்தவன் “சொல்லுங்க மாமா என்னதான் ஆச்சு... ஏன் இப்படி, எப்போ நடந்தது இது” என்று கண்களை துடைத்து விட்டுக்கொண்டு கேட்டவனை இறக்கத்துடன் பார்த்தவர்

“வேணாம் ராயரு இதை தெருஞ்சுகிட்டா நீ இன்னும் வறுத்த படுவ வேணாம் பா...” என்றார்.

அவரின் அந்த கூற்றில் அவனது பார்வை கூர்மை செய்தவன் “இதுல திகம்பரி சம்மந்த பட்டிருக்காளா மாமா” திடமாய் கேட்டவனை கண்டு மெச்சியவர் எதுவும் சொல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தார்.

அவரது அமைதி அவனை கொல்ல அவரை உலுக்கியவன் “சொல்லுங்க மாமா... எனக்கு உண்மை தெரியனும்... தெருஞ்சே ஆகணும்..” என்று கேட்டவனை கண்டு

“முடிந்த நிகழ்வுகளை எதுக்கு ராயரு திரும்ப திரும்பி பார்க்கணும்..” என்று வருத்தத்துடன் சொன்னவரை அழுத்தத்துடன் பார்த்தான்.

“மாமா ப்ளீஸ் சொல்லுங்க எனக்கு நடந்த நிகழ்வுகள் ஒன்னு கூட மறைக்காம சொல்லணும்... எப்போ நடந்தது இந்த நிகழ்வு” என்று அவரின் கையையும் காலையும் பார்த்து கேட்க

“சொன்னா நீ சிதைந்து போவ ராயரு..” என்று அந்த பொழுது கூட அவனுக்காக வறுத்த பட்டவரை கண்டு ரவி பிரமித்து பார்த்தான்.

தன் மாமனின் மீது இவ்வளவு அன்பு வைக்கும் அளவுக்கு அவருக்கு அப்படி என்ன செய்தான் தன் மாமா.. என்ற கேள்வி பிறந்தது...

அதே சிந்தனை தான் ராயருக்கும்...

அவருக்கு மட்டும் இல்லாமல் அவரது மொத்த குடும்பத்துக்கும் அவன் செய்தது நம்பிக்கை துரோகம் மட்டுமே... ஆனால் அவர் அவன் மீது கொண்டுள்ள பாசம் அவனை வேதனை தான் படுத்தியது.. ஆனாலும் அதை சற்று ஒதுக்கி வைத்தவன்

“சொல்லுங்க மாமா... என்னால எதையும் தாங்கிக்க முடியும்” என்றான் திடமாய்.

பெரும் மௌனத்துக்கு பிறகு “மூணு வருடத்துக்கு முன் திகம்பரியிடம் சொல்லிவிட்டு நீ ஒரு வாரம் உன்னுடைய ஊருக்கு சென்று இருந்த நேரம் எனக்கு ஸ்ட்ரோக் வந்தது ராயரு..” என்று முடிக்கவும்

பெரும் கலக்கத்துடன் “அப்போ... அப்போ..... உங்களை பார்த்து தான் திகம்பரிக்கு கரு கலைந்ததா...” திக்கி திணறி கேட்டான். ‘இல்லை என்று சொல்லுங்களேன்’ என்று பரிதவிப்புடன் பார்த்தவனின் விழிகளை சந்திக்காமல் அவன் உடைந்து போகும் நிலையை காண முடியாமல் எங்கோ பார்த்தபடி

“ஆம்” என்று தலையசைத்தார்.

அதில் பெரும் பிரளயமே வந்து தன்னை ஆட் கொண்டது போல உணர்ந்தவன் மண்டி இட்டு இருந்தவன் அப்படியே சரிந்து அவரின் காலடியில் வீழ்ந்தான்.

“அப்போ என் திகம்பரி அவளாய் விருப்பப்பட்டு கரு களைப்பு செய்ய வில்லையா...” என்று ஒரு ஆசுவாசம் எழுந்த அடுத்த நொடியே தான் அவளுக்கு செய்து விட்டு வந்த செயல் கண் முன் எழ துடிதுடித்து போனான்.

எவ்வளவு வேதனையில் இருந்திருப்பாள் ஒரு பக்கம் தன்னை பெற்றவர் செயல் படமுடியாமல் இருக்கும் நிலை.. இன்னொரு பக்கம் தன் உதிரத்தில் ஆசையாய் ஜனித்த கரு பார்வையில் படும் முன்னவே களைந்து போன நிலை....

இப்படியாப்பட்ட சூழலில் இருந்தவளுக்கு ஆறுதல் கூறாமல் மேலும் அவளை உடலால் வருத்தி போதாதற்கு தன் சொல்லாலும் வதைத்து எடுத்து விட்டு பழி முழுவதும் அவள் மீது செலுத்திவிட்டு சமுகத்தின் முன்பு அவளை மட்டும் குற்றவாளியாய் நிற்க வைத்து சிலுவையை சுமக்க வைத்த தனக்கு அதிக பட்ச்சமாய் என்ன தண்டனை இருக்க கூடும். என்று உள்ளம் குலுங்க நினைத்தவனுக்கு அன்று இரத்த வெள்ளத்தில் இருந்த திகம்பரி வந்து போனாள்.

பக்கத்தில் இருந்து பார்த்து கொள்ள கூட ஆளில்லாமல் ஐயோ கடவுளே... எவ்வளவு மா பாதகமான செயலை செய்து இருக்கிறேன்... என்னை விரும்பியது தவிர வேறு எந்த தவறும் செய்யாத தன் இதயத்தை அலங்கரித்தவளை தான் நடத்திய விதம் மனதை அறுக்க

தன் தலையில் அடித்துக்கொண்டு கதறினான் ராயர்..

ரவியும் ராஜும் அவனை சமாதான படுத்த விளைய அவர்களின் வார்த்தைகள் எதுவும் காதில் விழாமல் காற்றில் சென்றது...

அவனது கண் முன் எழுந்திரிக்க முடியாமல் படுக்கையிலே விழிகளில் வலிந்த கண்ணீரோடு தன்னிடம் மன்றாடிய அவனது திகம்பரி மட்டுமே வளம் வர, உதிர போக்கு மிகுதியில் இருந்தவளை கண்டு கொஞ்சமும் மலை இறங்காமல் அவளை அப்படியே விட்டுட்டு சென்ற தன் கோவமும் முரட்டு தனமான செயலும் அவனை கொல்ல மனம் முழுவதும் வலி மிகுந்து உதிரம் கசிந்தது...

அவ்வளவு கோரமான செயல் செய்து விட்டு வந்தவனையும் வருடங்கள் கடந்து அவனுக்காகவே தேடி வந்து காதல் செய்ய வந்தவளை இன்று மீண்டும் தன் வார்த்தை அம்புகளால் வதைத்து செயலால் காய படுத்தி விட்டு.. இப்போது நொந்து என்ன பயன்...

அழுது கரைந்தாலும் தன்னுடைய ரீகாவுக்கு தான் செய்த செயல் இல்லை என்று போய்விடுமா.. இல்லை மறைந்து தான் போய்விடுமா... தான் பார்த்த ஒற்றை பார்வையையே மறக்க மாட்டேன் என்று சொன்னவள் இன்று எல்லாவற்றையும் மறந்து தன்னை காண வந்தவளுக்கு எவ்வளவு பெரிய தண்டனையை தான் கொடுத்துள்ளோம் என்று உச்சந்தலையில் ஆணி அடித்து கூறியது போல உணர்ந்தவன் விழிகள் சிவக்க ராஜுவை ஏறெடுத்து பார்த்தவன்

“முழுசா சொல்லுங்க மாமா” என்றான் திடமாய் தன்னை காண்பித்துக்கொண்டு

அதை உணர்ந்த ராஜுவும் இன்றோடு எல்லாமே ஒரு முடிவுக்கு வரட்டும் என்று எண்ணி நடந்ததை சொல்ல ஆரம்பித்தார்.

“ஹாலில் டிவி பார்த்தபடி அமர்ந்திருந்தேன் திடிர்னு எனக்கு கை கால் இழுக்க வாய் ஒரு பக்கம் கோண உதவிக்கு அருகில் யாரும் இல்லாமல் போக நானே அந்த நிலையில் எழுந்து நிற்க ஆரம்பித்தேன்... ஆனால் என்னால் நிக்க முடியவில்லை.

படியில் வந்து கொண்டிருந்த திகம்பரி எனக்கு இப்படி ஆகவும் வேகமாய் “அண்ணா...” என்று கத்திய படி என்னை பிடிப்பதற்காக ஓடிவர கால் தடுமாறி மேல் படியிலிருந்து கீழ் படிவரை உருண்டு வந்து விழுந்தாள்.. அவளது குரல் கேட்டு திரும்பி பார்த்த நான் அவளை பிடிப்பதற்காக எட்டு வைக்க சட்டென்று தரையில் சரிந்தேன்.. நிமிட நேரத்துக்குள் இருவரும் அபாய கட்டத்துக்கு நெருங்கி விட்டோம்... என்று சொன்னவரின் கண்களில் கண்ணீர்.

“திகம்பரியின் குரல் கேட்டு வந்த நந்தா இருவரின் நிலையை பார்த்துவிட்டு துடித்து போனான்... கனம் கூட தாமதிக்காமல் இருவரையும் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தவிப்புடனும்... வேதனையுடனும் காத்திருந்தான் என் மகன்.

மேலிருந்து கீழ் விழுந்ததில் திகம்பரிக்கு வயிற்றில் அடி பட்டு இரத்த கசிவு ஏற்பட்டு கரு களைந்து விட்டது...” என்றார் வேதனையுடன்... அதை கேட்டுக்கொண்டிருந்த ரவிக்கு மனமெல்லாம் ரணமாய் போனது என்றாள் ராயருக்கு வெந்த புண்ணில் நெருப்பில் காய்ச்சிய வேல் வந்து பாய்ந்து போல் இருந்தது.

“இரு நாட்களுக்கு பிறகு திகம்பரி வீடு வந்து சேர்ந்தாள். ஆனால் அவளை மீட்டேடுக்க தான் எங்களால் முடியவில்லை. உங்களுக்கே தெரியும் இல்லையா திகம்பரி அந்த குழந்தையை எவ்வளவு நேசித்தால் என்று.. அது இல்லாமல் போகவும் ரொம்பவே மனம் உடைந்து போனாள்.

அதை விட என்னை நம்பி அவரது குழந்தையை விட்டுட்டு போன ராயருக்கு நான் என்ன பதில் சொல்லுவேன் என்று கதறி துடித்து போனாள் ராயர்..” என்று சொல்லவும் ராயருக்கு தன் செயல்களை நினைத்து தன் மீதே பழிவெறி வந்தது..

வறுத்த பட்டுக்கொண்டிருந்தவளை தானும் வறுத்த பட வைத்து விட்டோமே.. என்று காலம் கடந்து வருந்தினான்.

“நானும் நந்தாவும் உடனடியாக வெளிநாடு செல்ல வேண்டிய சூழல்... இந்த நிலையில் எப்படி நான் பயணிக்க முடியும் நந்தா வருத்தம் கொண்டாலும் திகம்பரியின் அநாதரவான நிலை எங்கள் இருவரையும் நிலை குழைய வைத்தது.. அவளை எங்களோடு அவ்வளவு தூரம் பயணிக்க வைக்க முடியாத சூழல்..  எங்களின் எமெர்ஜென்சி... கூடவே என்னோட மருத்துவமனை வாசம் என்று எல்லாமே திகம்பரிக்கு எதிராக முடிய அவளை தனியாய் விட்டுவிட்டு செல்ல வேண்டிய நிலை..” என்று வருத்தத்துடன் பேசினார்.

“அப்பவும் திகம்பரி ‘நான் சமாளித்துக் கொள்ளுவேன்’ என்று எங்களுக்கு தைரியம் கொடுத்து வழியனுப்பி வைத்தள். எங்களுக்கு தான் முழு மனதுடன் செல்ல முடியவில்லை. உன்னை அழைத்து விவரம் சொல்லி விட்டு செல்லலாம் என்று சொன்னதற்கு திகம்பரி ‘அவரே இத்தனை நாள் கழித்து இப்போது தான் ஊருக்கு சென்றிருக்கிறார்... இப்போது அவரை அழைக்க வேண்டாம்... கூடவே இந்த விஷயத்தை இப்போ அவரிடம் சொல்ல வேண்டாம்.. நேரம் வரும்போது நானே சொல்லிக்கொள்ளுகிறேன்’ என்று எங்களை தடுத்து விட்டாள்.

அவள் சொல்லுவதும் சரி தானே.. போனில் சொல்ல கூடிய விஷயம் இல்லையே இது.. என்று நாங்களும் அவளை தனிமைலையில் விட்டுட்டு வெளிநாடு சென்றோம் மொத்தமாய் வியாபாரத்தை முடித்துக்கொண்டு கூடவே எனது உடல் நலத்தையும் சரி செய்ய.

ஆனால் நாங்கள் சென்று சில நாட்களிலே திகம்பரி மறுபடியும் மாடியிலிருந்து ரத்த வெள்ளத்தில் கிடக்கிறாள் என்று செய்தி வர துடிதுடித்து போனோம்... போட்டது போட படி மீண்டும் நாங்க ஊர் திரும்பினோம்...” என்றவரின் கூற்றில் ஆக திகம்பரி நான் வந்ததை சொல்ல வில்லை.. முழுதுக்கும் காரணம் நான் என்று ஒருவரிடம் கூட மூச்சு விடவில்லை.. என்று அறிந்தவன் மூச்சு காத்துக்காக ஏங்கினான்... அவளது சுயநலமற்ற அன்பை எண்ணி தடுமாறி போனான்.

அவளின் மீது இன்னும் இன்னும் பித்தம் கொள்ள வைத்த அவளது இந்த செயல் அவனை காதலோடு கூசி குறுக வைத்து அவளது அன்புக்கு தான் தகுதியற்றவன் என்ற எண்ணத்தையும் விதைத்தது.

மேற்கொண்டு எந்த விளக்கமும் கேக்க பிடிக்காமல்

“எனக்கு திகம்பரிய இப்போவே பார்க்கணும் மாமா எங்க இருக்கா..” என்று கேட்டவனை மனம் கசிய பார்த்தவர்

“தெரியாது ராயரு..” என்றார் உண்மையாக.

“மாமா என்ன சொல்றீங்க...” தாவி வந்து ஆவேசமாய் அவரை உலுக்கினான்.

“ம்ம் நீ எப்படியும் அவளை தேடி வருவன்னு சொன்னா.. அதுவும் இன்னைக்கே வருவன்னு சொன்னா...” என்ற போதே ராயருக்கு அவளின் காதலின் மீதும் நம்பிக்கையின் மீதும் பொறாமை வந்தது..

தான் அவளிடம் அவ்வளவு நம்பிக்கை வைக்கவில்லயே... இதயம் கனத்து போனது ராயருக்கு..

“மாமா..” என்று அதிர்ந்தான்.

“ஆமா ராயரு நீ வருவன்னு உறுதியா சொன்னா... ஆனா உன்னை பார்க்க கூடாதுன்னு வைராக்கியமா கிளம்பிட்டா... கூடவே நந்தாவும் போய் இருக்கான்”

“ஓ கூட பாடிகாட கூட்டிட்டு தான் போயிருக்காளா... நான் பார்த்துக்குறேன் மாமா அவளை..” என்று முடிவாகவும் உறுதியாகவும் சொன்னவனை கண்டு “எல்லாம் சரியாகணும்” என்று எண்ணிக்கொண்டார் ராஜ்.

இருவரிடையே நடந்த சம்பாசனைகளில் ரவி தெரிந்து கொண்ட விஷயங்கள் ராயர் தான் திகம்பரிக்கு முதல் பாதகமானவன் என்று தெரிந்துக்கொண்டான்.

அதில் ரவி அதிகமாய் கோவம் கொண்டான் ராயரின் மீது... அதை எல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் ராயர் இருக்கவில்லை. அவனது சிந்தனைகள் முழுவதும் திகம்பரி மட்டுமே நிறைந்து இருந்தாள்.

“மாமா ஏதாவது குழு வாச்சும் குடுங்களேன். எனக்கு திகம்பரிய பார்த்தே ஆகணும்” என்றான் கெஞ்சலாய்.

“தெருஞ்சா நான் சொல்லியிருக்க மாட்டேனா தம்பி... எனக்கு அவங்க எங்க போயிருக்காங்கன்னு சொல்லல்ல பா..”

“பரவால மாமா நானே பார்த்துக்குறேன்” என்றவன் அவரின் உடல் நலன்களை விசாரித்துவிட்டு அவ்வீட்டை விட்டு வெளியே வந்து எங்கு செல்வது என்று யோசித்தான்.

எந்த இடத்திலிருந்து ஆரம்பிப்பது... எங்கே போய் இருப்பாள்... என்று சிந்தித்த படியே ஓட்டுனர் தாத்தாவை பார்த்தான்.

இப்போதும் அவர் அவனை கண்டு கொள்ளவில்லை.. தூசி இல்லாத காரை அழுத்தம் திருத்தமாக துடைத்து கொண்டிருந்தார்.

அவரது கோபத்திற்கான காரணம் புரிந்து கொள்ள முடிந்தது ராயரால்.. அநாதரவான நிலையில் திகம்பரியை தவிக்க வைத்து விட்டு இன்று அவளை தேடிவந்து என்ன புண்ணியம்... வேதனையுடனும் தன் மீது எழுந்த கோவத்துடனும் தன்னையே தண்டித்துகொள்ள ஆவேசம் பிறந்தது.. ஆனால் அதற்க்கு முன் திகம்பரியை பார்த்து பேசணும்..

அவளிடம் மன்னிப்பு கேக்கணும்... என்று எண்ணியவன் நேராக டிடெக்டிவ் ஏஜென்சிக்கு சென்று திகம்பரி பத்திய விவரத்தை கொடுத்து இப்போது எங்கே இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டவன் அவள் இருக்கும் இடமான ஊட்டியை நோக்கி ரவியுடன் பயணம் ஆனான்.

ஊட்டிக்கு செல்லும் வழியெல்லாம் ராயரின் கைகள் நடுங்க தொடங்கியது... மனம் அதிர திகம்பரியின் பெயரை உச்சரித்த படி திகம்பரி ஜெபம் செய்தான்.

அவனது நிலையை உணர்ந்து கொண்டாலும் ரவி அவனுக்கு எந்த ஆதரவையும் தரவில்லை.

அவளை பார்க்கும் வரை மூச்சுகாத்து கூட உள்ளெடுக்க சிரமபட்டான். அவளின் பூமுகம் காண மாட்டமா என்று ஏங்கி தவித்து போனான். கூடவே வெளிப்படையாக எழுந்த நடுக்கம் அவனை ஆட்டி படைக்க இரு கைகளையும் கோர்த்து அதனை அணைக்க பார்த்தன் அவனால் முடியவில்லை.

இன்னும் கொஞ்ச நேரம் அவளை பார்த்து விடலாம்.. கண்ணீர் மல்க அவளிடம் மன்னிப்பு கேக்கலாம், காலம் முழுவதும் தன் அன்பில் அவளை வைத்துகொள்ளலாம், அவளின் துயரத்தை வழித்தெடுத்து தன்னுள் பொத்தி வைத்துக்கொள்ளலாம் என்று எண்ணிய படி திகம்பரியே நோக்கி பயணபட்டுகொண்டிருந்தான்.

தான் இல்லாத சமயம் அவள் அனுபவித்த துன்பங்கள் கண் முன் உலா வர இதயத்தை யாரோ குத்தி கிழித்து தீ மூட்டி விட்டது போல பற்றி எரிந்தது ராயருக்கு...

எல்லாமே என் அவசரத்தில் எழுந்த விபரீதங்கள் அவளை கொஞ்ச மாச்சும் நம்பி இருந்திருக்கலாம். உன் திகம்பரி உனக்கு நம்பிக்கை துரோகம் செய்து இருப்பாளா என்று கொஞ்சம் கூட சிந்திக்க வில்லையேடா ராயரு என்று குமுறினான்.

அவள் தான் சொன்னளேடா.. இது புனிதம் என்று.. அப்படி பட்டவள் அதை தானே அழித்திருப்பாளா.. யோசிக்காமல் செய்த தவறு இன்று அவனை கொன்று குவித்தது.

அவள் இருக்கும் இடம் நெருங்க நெருங்க அவனது நடுக்கம் இன்னும் அதிகமானது... கூடவே ஒரு பரவசமும் வந்து ஒட்டிக்கொண்டது...

வீட்டை நெருங்கியவர்கள் கேட்டை திறந்து உள்ளே நுழையும் போது தோட்டத்தில் கேட்ட சத்தத்தை கண்டு ராயர் அங்கு திரும்பி பார்த்தான்.

பார்த்தவன் பார்த்தபடியே நின்றிருந்தான் கொஞ்சமும் கண்களை திருப்ப முடியாமல்...

 

அத்தியாயம் 29

 

ராயர் கிளம்பிய பின் தன் மகள் தன்னிடம் உரையாடிய உரையாடலை மறுபடியும் எண்ணி பார்த்தார் ராஜ்..

அவரது மடியிலிருந்து எழுந்துகொண்டவள் கண்களை அழுந்த துடைத்துக்கொண்டு “அப்பா நான் கிளம்புறேன்.. எப்படியும் ராய் என்னை தேடி வருவாரு... அவரு முந்துவதற்கு முன் நான் முந்திக்கனும்.. நான் போறேன் பா...” என்று கனத்த இதயத்துடன் சொன்னவளை ஆதுரமாக பார்த்தவர்

“இப்படி நினைக்கிறவ இத்தனை வருடம் கழித்து பின்ன எதுக்கு மா நீயே வலுகட்டாயமா ராயை போய் பார்த்தட்டு வந்த..” கேட்டார்.

“இனி பார்க்கவே கூடாதுன்னு தான் பா..”

“புரியல மா..”

“இனி நான் இங்க இருக்க போறது இல்ல பா... நானும் அண்ணாவோட அமெரிக்கா போறேன்... நான் இங்க இருந்தா ராய் என்னை எப்படியாவது ஏதோ ஒரு தருனத்துல என்னை தேடி வருவாரு... அது நடக்க கூடாதுன்னு தான்பா”

“என்ன மா சொல்ற..” ஒன்றும் புரியவில்லை அவருக்கு.

“ராய்க்கு அவங்க வீட்டுல கல்யாணம் செய்ய ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்காங்க பா... ஆனா ராய் இன்னும் ஒத்துக்கவே இல்லை. இப்பவும் அவரு என் நினைப்புல தான் இருக்காரு... அது தான் சொன்னேன். எப்படியும் ஏதோ ஒரு கணத்துல என்னை கண்டிப்பா தேடி வருவாரு. அவரோட வாழ சொல்லி என்னை கட்டாய படுத்துவாறு.. இதெல்லாம் நடக்கவே கூடாதுன்னு தான் நான் கிளம்புறேன்னு சொல்றேன்.” என்றவளை வேதனையுடன் பார்த்தவர்

“ஏன்மா இப்படி எல்லாம் பண்ற...” வெகுவாக வறுத்தப்பட்டார்.

“எனக்கு வேற வழி இல்லப்பா... என் ராய் நல்லா இருக்கணும் யாருக்கு முன்னாடியும் அவர் தலை குனிந்து நிற்க கூடாது... அவருக்கு ஒரு கரும் புள்ளியா நான் இருக்க கூடாது... காதலிச்சா கண்டிப்பா கல்யாணம் தான் பண்ணிக்கனுமா என்ன...

சேர்ந்து இருக்குறதை விட பிரிந்து இருக்கிறது தான் காதலுக்கு இன்னும் வலிமை சேர்க்கும் பா... என் காதல் யாரின் முன்பும் தாழ்ந்து போவதை நான் விரும்பல... அதுக்கு என் காதல் என்னிடமே யாருக்கும் தெரியாமல் பொக்கிசமாய் புதைந்து கிடப்பது மேல்” என்றவளை தீர்க்கமாக பார்த்தவர்

“அப்போ இப்போ எதுக்கு ராயை போய் பார்த்துட்டு வந்த”

“இனி பார்க்கவே போறது இல்லைன்னு முடிவெடுத்த பின் அப்படியே போக மனசு இல்லப்பா... அது தான்... இது தவறுன்னு எனக்கு புரியுது... மறந்து இருந்தவரை நானே தூண்டி விட்ட மாதிரி தான் இது.. ஆனா என்னால அப்படியே போக முடியல பா. மூணு வருடம் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கையை ஒரு வாரத்தில் வாழ்ந்துட்டு வந்துடலாம்னு நினைச்சேன். ஆனா அதுக்கு கூட உங்க பொண்ணுக்கு குடுத்து வைக்கல பா... எல்லாமே பாதி தான் கிடைக்கும் போல..” என்று சொன்னவளின் குரலில் இருந்த வலி அவரை வலிக்க செய்ய

“போதும் கண்ணம்மா... நீ வேதனை பட்டது” என்றவர் அவளை முழுவதும் புரிந்து கொண்டவராய் தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டார்.

மூன்று வருடத்திற்கு முன் ராஜின் உடல் முன்னேற்றத்துக்காக வெளிநாடு சென்றவரின் கையையும் காலையும் சரி செய்ய முடியாமல் போனது. பேச்சு மட்டும் சற்று பயிற்சி மேற் கொண்டு ஓரளவு சரியாய் வந்தது.

நந்தாவும் ராஜும் வெளிநாடு சென்ற வேலையில் ராயரின் செயலால் ரத்த போக்கில் கிடந்த திகம்பரி தன்னை சமாளித்து மருத்தவமனையின் அவசர எண்ணுக்கு அழைத்து சொல்லிவிட்டு நந்தாவுக்கும் தகவல் பரிமாறிவிட்டு கீழே இருந்த வேலை ஆட்களுக்கும் செய்ய வேண்டியவற்றை சொல்லிவிட்டு சரிந்தவள் தான்..

பாதி மயக்கத்தில் இருந்தவள் முழு மயக்கத்துக்கு சென்றாள். அவளை நேசிக்கும் மூன்று ஆண்கள் இருந்தும் அனாதையாய் ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்தாள். இதை பார்த்த ஓட்டுனர் தாத்தா வெகுண்டு எழுந்து ராய்க்கு அழைக்க முயல திகம்பரி தடுத்து விட்டாள்.

“வேணாம் தாத்தா... இந்த நிலமையில என்னை பார்த்தா என்னை விட அவரு தான் துடிச்சு போவாரு... அவரை வருத்தி பார்க்க என்னால முடியாது..” என்றவளின் அன்புக்கு ராயர் கொஞ்சமும் தகுதி இல்லை என்று நினைத்தார்.

ஓரளவு அவர்களுக்கு இடையில் என்ன நடந்திருக்கும் என்று உணர்ந்து கொண்டிருந்தார் அவர்.

யாருமில்லாமல் ஒத்தையாய் கஷ்ட பட்ட திகம்பரியை பார்த்து வேதனை கொண்டவருக்கு ராயரின் மேல் பொல்லா வருத்தமும் கோவமும் எழுந்தது..

அவர் வெறுத்தோ வேதனை பட்டோ கோவ பட்டோ என்ன ஆகா போவுது... அவர்களிடம் கை கட்டி சம்பளம் வாங்கும் சாதாரண ஊழியர். அவ்வளவு தான் அவர்களுக்கும் இவருக்கும் உள்ள உறவு.. இதில் இப்போது இல்லா விட்டாலும் எப்பாதாவது அந்த வீட்டு மாப்பிள்ளை ஆகுபவரிடம் கோவத்தை காட்ட முடியுமா...

ராஜ் தன் மகளை அனைத்து கொண்டு நடந்த நிகழ்வை எண்ணி பார்த்தார்.

திகம்பரியிடமிருந்து செய்தி வந்த பின் நந்தாவால் போட்டது போட்ட படி வர இயலவில்லை. தன் நண்பனான கார்த்திக்கை தான் வரும் வரையில் திகம்பரியை பார்த்துக்கொள்ள சொல்லி விட்டு அடுத்த வாரம் வந்து சேர்ந்தான் நந்தா.

வந்த வேகத்தில் திகம்பரியிடம் என்ன நிகழ்ந்தது என்று கேட்க அவளோ எதையும் சொல்லாமல் மறைத்து விட்டாள்.

ஆனால் அவ்வளவு லேசாக நந்தா விடவில்லை அவளை. அவளின் வாயாலே எல்லாவற்றையும் சொல்ல வைத்தான்.

“நான் சொல்றேன் ஆனா நீ ராயை எதையும் செய்ய மாட்டேன்னு சொல்லு” என்று உறுதி வாங்கிய பின் எல்லாவற்றையும் சொன்னாள் சில விசயங்களை மறைத்து.

“இவ்வளவு நடந்த பிறகுமா அவனை காதலிக்குற திகம்பரி” ஆற்றாற்று போனான் நந்தா..

“எது நடந்தாலும் நான் அவனை காதலிச்சுகிட்டு தான் இருப்பேன் அண்ணா...” என்றாள் உறுதியாக.

“அப்படி என்னமா அவன் மீது காதல்” என்றவனை ரசனையுடன் பார்த்தவள் மருத்துவ மனையில் இருந்து வீட்டுக்கு வந்து தன் படுக்கையில் அமர்ந்த படி அருகில் இருந்த கார்த்திக் கொடுத்த பானத்தை பருகிய படி

“நான் வெறுக்கும் என் தனிமையை போக்கி எனக்குள்ள அவனை விதைத்து என்னை விட்டு விலகி இருந்த என் அப்பாவையும் அண்ணனையும் எனக்கே எனக்குன்னு திருப்பி கொடுத்தவன் அண்ணா அவன்.. அவனை போய் எப்படி என்னால் வெறுக்க முடியும். அவன் என்னை வெறுக்கிறான் என்பதற்காக நான் அவனை வெருக்கனுமா என்ன.. என் காதல் என்னோடு அண்ணா... அதை பற்றி கேட்க அவனுக்கே உரிமை இல்லை.. என் நெஞ்சம் முழுவதும் அவன் மட்டும் தான் நிறைந்து இருக்கிறான். அவனை நீங்கி நான் வாழ்கிறேன் தான் ஆனால் நினைவில் அவனோடு தான் வாழ்கிறேன் அண்ணா..” என்றவளின் விளக்கத்தில் கார்த்திக் கூட பிரமித்து போனான்.

“நீ சொல்றது வாழ்க்கைக்கு ஒத்து வராது மா..” வேதனை பட்டான் நந்தா.

“என் வாழ்க்கையே அவன் தான் அண்ணா.. அவனை மறந்து இன்னொரு வாழ்க்கையா.. சத்தியாமா அது என்னால முடியாது. என் ஜீவன் வாழும் வரை, என் நிலை நான் மறக்கும் வரை என் வாழ்வு அவனோடு தான்..” என்றவளின் ஆழமான காதல் இவ்விரு ஆண்களுக்கும் புரிய வேறு எதுவும் பேசாமல் அவளின் போக்கில் விட்டு விட்டனர்.

புரியாமல் பேசினால் எப்படியாவது புரிய வைத்து விடலாம்.. எல்லாம் தெரிந்து அறிந்து இருப்பவளிடம் என்னவென்று புரிய வைப்பது..

திகம்பரியிடம் பேசியதை முழுவதும் தன் தந்தையிடம் வேதனையுடன் சொல்லிவிட்டான் நந்தா. அதை கேட்டு இன்னும் வருத்தம் கொண்டவர் தன்னுள் ஒடுங்கி போனார். ஆனால் அவரை அப்படியே விடாமல் திகம்பரியும் நந்தாவும் முன்பு போல, முன்பிருந்ததை விட அதிக கவனமாக பார்த்துக்கொண்டார்கள்.

அம்மூவரும் வேதனையை தங்களுக்குள்ளே புதைத்து மறைத்துக்கொண்டு மற்றவரின் புன்னகைக்காக சந்தோசமாய் இருப்பது போல அவர்களுக்குள்ளே நடித்துக்கொண்டும் வாழ்ந்துகொண்டும் இந்த மூன்று வருடத்தை ஒட்டி இருந்தார்கள்.

இதை எதுவும் அறிந்து கொள்ளாமல் போனான் ராயர்.

திகம்பரியின் மனதில் ராயரின் இடம் புரிந்து போக ராயரை வெறுத்து என்ன செய்வது என்று ராஜ் அவனை அப்படியே ஏற்றுக்கொண்டார். ஆனால் நந்தாவால் தான் அது முடியாமல் போனது.

ராய் எப்போது அவன் எதிரில் தோன்றுவான் என்று வன்மமாக காத்திருக்க தொடங்கினான் நந்தா. திகம்பரி தன் மேற் படிப்பை கரஸில் போட்டு விட்டு வீட்டிலிருந்த படியே கார்த்திக் சொல்லி கொடுத்த கணிணி மொழிகளை படிக்க ஆரம்பித்தாள்.

ஒரு வருடத்தில் அனைத்தையும் கற்றுக்கொண்டவள் கார்த்திக்கோடு வெளிநாடு சென்றாள். அங்கே தான் வனாவின் நட்பு கிடைத்தது. அது எதார்த்தமா அல்லது கார்த்திக் ஏற்பாடு செய்தானோ யாரறிவாரோ...

வனாவின் நட்பினால் மறுபடியும் ராயரின் நடவடிக்கைகள் அவர்கள் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் என்று எல்லாமே திகம்பரிக்கு தெரிய வந்தது.

அதன் படி அவனை பயன் படுத்தியே ராயரோடு ஒரு வாரம் இருக்கலாம் என்று எண்ணி திட்டம் போட்டு வந்தாள். ஆனால் அது முடியாமல் பாதியிலே திரும்பி விட்டாள். நந்தா வேணாம் என்று சொல்லி தடுக்க ராஜ் தான் போய்விட்டு வரட்டும் என்று அனுப்பி வைத்தார்.

“அவ சந்தோசமா திரும்பி வந்தா பரவால.. கண்ணீரும் கம்பலையுமா வந்தா என்ன செய்வீங்க. அவன் முரடன் பா. கண்டிப்பா திகம்பரி காய பட்டு தான் வருவா” என்று தன் தந்தையிடம் கோவபட்டான்.

அவன் கோவப்பட்டு கணித்தது போலவே திகம்பரி மனம் உடைந்து வந்தாள். அதன் பிறகு நொடி நேரம் கூட அவள் இங்கு இல்லாமல் நந்தாவை கூட்டிக்கொண்டு ஊட்டி வந்து சேர்ந்தாள்.

போகும் போது கூட தந்தையிடம் எந்த இடம் என்று சொல்லவில்லை.

“நீங்க எப்படியும் ராயிடம் சொல்லிவிடுவீங்க... பா.. அதான்” என்றவள் கிளம்பிவிட்டாள்.

எங்கே நந்தாவை இங்கே விட்டு வைத்தருந்தாள் ராயிடம் சண்டைக்கு போவானோ என்று பயந்து கையோடு அவனை இழுத்துக்கொண்டே சென்றாள்.

அதை உணர்ந்து கொண்ட ராஜும் நந்தாவும் அவளின் கோவ படாத செயலில் “இப்போ கூட அவனை வெறுக்க முடியலையா திகம்பரி” என்று கேட்க வைத்தது...

அதற்க்கு அவள் பரிதாபமாய் அழுத படி “முடியலையே என்னால” என்றாள்.

அவளின் காதலின் பித்து நிலை... இருக்க இருக்க அதிக மாகிக்கொண்டு இருப்பதை இருவரும் உணர்ந்துக்கொண்டார்கள். ஆனால் அவளின் காதலுக்கு கொஞ்சமும் தகுதி இல்லாதவன் ராயர் என்று கோவமும் கொண்டான் நந்தா.

இதற்க்கு தீர்வு தான் என்ன என்று திண்டாடி போனார்கள் இருவரும்.

நந்தாவுக்கு கூட ராஜின் மீது கோவம் தான். பெத்த பிள்ளையின் வாழ்வை சிதைத்தவனின் மீது எதுக்கு உங்களுக்கு இவ்வளவு அன்பு என்று

“நான் பெத்த பிள்ளையே அவனை வெறுக்கவில்லை. இன்னும் இன்னும் அதிகமாக தான் காதலிச்சுகிட்டு இருக்கா. அப்படியிருக்கும் போது என் கடமையை எனக்கு உணர்த்தியவன் மீது எனக்கு எப்படி கோவம் வரும். என்ன ஒன்னு திகம்பரி தனிமையில் படும் வேதனையை காணும் போது தான் ராயின் மீது வருத்தம் வருது.. அது கூட அவன் திரும்பி என் மகளிடம் வரும்போது காணாம் போய்விடும்” என்றவரின் பேச்சில் நந்தாவுக்கு எரிச்சல் தான் வந்தது.

“உங்களுக்கும் பயித்தியம் முத்திபோச்சு” என்று பல்லை கடித்து விட்டு சென்றுவிட்டான்.

திகம்பரி ராயை விட்டு இப்போதும் இத்தனை வருடம் பிரிந்து இருந்தாலும் அவனின் நடவடிக்கையை கணித்து கூறிய விதத்தில் ராஜுக்கு பெருமையே...

திகம்பரி கூறியது போல அடுத்த சில மணி நேரத்தில் ராய் திகம்பரியே தேடி வந்து விட்டான் அவளின் சொல்லை பொய்யாக்காமல்.

அதை எண்ணி நகைத்தவர் “திகம்பரி இனி உன்னால அமெரிக்காவை எண்ணி பார்க்க கூட முடியாது... உன் அதிரடி காதலன் உன்னை நோக்கி வந்துகொண்டு இருக்கான்” என்று சிரித்துக்கொண்டார்.

ராய் திகம்பரியை தேடி வந்ததில் அவ்வளவு மகிழ்ச்சி ராஜுக்கு.

--

ஊட்டியில் திகம்பரி இருந்த வீட்டின் தோட்டத்தில் இருந்து கேட்ட சத்தத்தில் திரும்பி பார்த்த ராயர் சில கணங்கள் அப்படியே நின்றுவிட்டான். பின்னாடி வந்து கொண்டிருந்த ரவி கூட திகைத்து நின்றுவிட்டான்.

தன் கண்கள் காட்டும் காட்சி பொய்யில்லையே என்று மனம் பதைத்தவன் கண்களை தேய்த்து விட்டுக்கொண்டு மறுபடியும் அக்காட்சியை கண்டான்.

அது பொய்யில்லை என்று தெளிவாக காட்ட உடல் சிலிர்த்து போனது ராயருக்கு..

“இது எப்படி சாத்தியம்... என்ன மாயம் இது... நிஜம் தானா... இல்லை கனவா... ம்கும் இது கனவு கிடையாது” என்று தன்னுள்ளே தவித்தவன் விரைந்து வந்து திகம்பரியின் கையில் இருந்த இரு வயது சிசுவை பறித்து அவனின் முகத்தையும் காதையும் சோதனை செய்தான்.

திடிரென்று தன் கையிலிருந்த குழந்தை பறிக்க படவும் அதிர்ந்து போனவள் அது யாரென்று காண திகம்பரிக்கு அச்சம் படர்ந்தது. அங்கு ராயரை கண்டு..

அவனோ அவளை கொஞ்சமும் சட்டை செய்யாமல் சிசுவயே ஆராய, உள்ளம் திக்கென்று அதிர்ந்தது அவளுக்கு.

ராயரோ குழந்தையிடம் தேடிய விஷயங்கள் ஒத்து போக சீற்றத்துடன் திகம்பரியை பார்த்தான்.

குழந்தை அச்சு அசல் திகம்பரி போல இருந்தான். ஆனால் அவனது காது ராயரை போல சற்று தலையை விட்டு விலகி பெரிதாக இருக்க, ராயருக்கு சந்தேகமே இல்லை. இது அவனுடைய குழந்தை என்று.

தூரத்தில் வரும்போதே ஓரளவு கணித்து விட்டான் தான். கார்த்திக்குடன் இனிமேல் தான் திருமணம் என்றவளின் கைகளில் குழந்தை என்றால் அதுவும் குழந்தையின் வளர்ச்சி படி கிட்டத்தட்ட இரு வயது இருக்கும்... எனவே ஒன்றோடு ஒன்று கூடி பார்க்கையில் அவனுக்கு சாதகமான பதிலே வர சிலிர்த்து போனான். அவ்வளவு மகிழ்வு அவனிடம்..

ஆனால் அதை திகம்பரி தன்னிடம் மறைத்து விட்டாள் என்று அவள் மீது சீற்றம் எழ கோவத்துடன் அவளை பார்த்தான்.

 

அத்தியாயம் 30

 

அவளது பயந்த தோற்றம் ராயரை கொல்ல அவனால் அவளிடம் கோவம் கொள்ள முடியவில்லை. உருகி போனது அவனுக்கு.

குழந்தையை அவள் விரும்பியே அன்று அழித்து விட்டாள் என்று அவனுக்கு கோவம் வந்தது. ஆனால் இன்று அந்த கோவம் மட்டு பட்டுபோனது ராயருக்கு தன் பிள்ளையை சுமந்து நின்று சோறு ஊட்டிக்கொண்டிருந்தவளை காணுகையில்.

இந்த சமுகத்தின் முன் கூனி குறுகி நின்று தன் கோவத்தின் விளைவாய் தோன்றிய கருவை கூட காதலின், காதலனனின் பரிசாய் உயிரில் சுமந்து ஆசையுடன் வளர்த்து வருபவளையா நான் அவ்வளவு பேச்சு பேசி, இப்படி பட்ட இக்கட்டில் தள்ளி விட்டு நிற்க்கிறேன். துணையாய் இருக்கும் நேரத்தில் முற்றிலும் ஒதுங்கி வந்து விட்டு தன் மகனின் பிறப்பை அவள் சொல்லவில்லை என்று இன்று கோவம் கொள்ள என்ன தகுதி இருக்கு எனக்கு என்று நொந்து போனான் அவன்.

அடி பட்ட பார்வை ஒன்றை வீசினான் ராயர் திகம்பரியை பார்த்து.. அதிலே அவளுக்கு ராயர் எல்லாவற்றையும் புரிந்து கொண்டான் என்று நன்றாக புரிந்தது.

அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை குனிந்து நின்றாள் ராயரின் ரீகா..

அப்படியே விட்டாலும் அது ராயர் இல்லையே... அவள் மீது ஆத்திரம் பெருகினாலும் அவளின் சூழ்நிலை உணர்ந்து கொண்டாலும் அவனால் தன் கோவத்தை முழுமையாக விட்டு விட முடியவில்லை.

“நீ எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை தராமல் இருந்திருக்கலாம் திகம்பரி...” முதல் முதலாய் அவளது பெயரை முழுமையாக உச்சரித்தான்.

அவனை ஏறெடுத்து பார்த்தவள் உடைந்த குரலில் “நம்பிக்கை இல்லாத ஒருவரிடம் என்னால எதையும் சொல்ல முடியாது மிஸ்டர் காசி விஷ்வ நாத ராயர்...” என்றாள் அதுவரை இருந்த பயம் விலகி சற்றே நிமிர்வுடன்.

‘பாரு நீ என்னை எந்த நிலையில் விட்டு சென்றாலும் நான் அந்த நிலையிலிருந்தே உனக்காக உன்னை மட்டுமே நேசித்துக் கொண்டுயிருக்கிறேன்.. இது தான் என் காதல். அந்த காதலின் பரிசு தான் உன் கைகளில் வீற்றிருக்கும் புது மலர். ஆனால் நீ அப்படி இல்லை’ என்று அவ்விடத்தில் கூட அவளால் கர்வம் கொள்ள முடியவில்லை.

அவளின் கர்வம் ராயரை கொன்று போட்டு விடாதா... என் காதலுக்கு உன் காதல் ஈடு இல்லை என்று அவளால் காட்ட தான் முடியுமா.. ராயருக்காக மட்டுமே வாழ்பவள் இல்லையா அவள்.. அவளால் எப்படி பார்வையில் கூட கர்வ பட முடியும்... அல்லது உடல் மொழியில் தான் காட்ட முடியுமா தன் கர்வத்தை... அப்படி காட்டினாள் இத்தனை வருடம் அவனை மனதில் சுகமாய் சுமந்த காதல் பழுதாகி விடாதா...

“நீ என்னை எவ்வளவு காய படுத்தினாலும் என் அன்பு என்றும் பொய்த்து போகாது” என்பதே அவளது காதல்... அந்த காதல் கொடுக்கும் நிமிர்வை கர்வத்தை கூட தன் காதலனிடம் காட்டாது அவனுக்காக யோசிப்பவள் இந்த காதல் யோகி..

அப்படியா பட்ட பெண்ணவளை பார்த்து “தப்பு தான் ஆனா இப்படி நீ துரோகம் செஞ்சு இருப்பன்னு நான் நினைக்கலடி...” என்று சொன்னான் ராயர்.

வருத்தமாய் புன்னகைத்தவள் “நான் அப்போ வந்து சொன்னா கூட நீங்க இதையும் அழிச்சுட்டு போய் கார்த்திய கல்யாணம் பண்ணிக்கோ என்று என்னை குத்தி தான் பேசி இருப்பீங்க... என்னை நம்பி இருக்க மாட்டீங்க மாமா..” என்றாள்.

“ரீகா...” என்றான் தவிப்பாய்.

“உங்க நம்பிக்கையை உங்களை பொறுத்த வரையில் நான் என்னைக்கோ அழிச்சுட்டேன் ராய்... அதை ஒட்ட வைக்க எனக்கு மனசு வரல.. இப்படியே இருந்திடலாம் என்று என்னைக்கோ முடிவு எடுத்துட்டேன்”

“அப்போ முற்றும் முழுவதுமா என்னை வெருத்துட்டியாடி...” அடிபட்ட பார்வை ஒன்றை அவள் மீது வீசினான்.

“வெருக்குறதா அதும் உங்களை அது நான் உயிரோடு இருக்கும் வரை என்னால முடியாது ராய்... இப்பவும் எப்பவும் என் மனசு உங்க கிட்ட தான்... என் மனசு எப்பவும் அதே ரீகா தான்... ஆனா சில சந்தர்ப்ப சூழ்நிலையால் நான் இன்று திகம்பரி கார்த்திக்கா மாற போகிறேன்... அவ்வளவு தான்.”

அதில் அதிர்ந்தவன் ஒரு குழந்தைக்கு தாயான பின்புமா... திகைத்தவன் “விளையாடாத திகம்பரி....” சீறினான்..

எங்கே தன் காதலி தன் கை விட்டு போய்விடுவாளோ என்று காலம் கடந்த பின் வந்து சீற்றம் கொள்ளுகிறான். அதை உணர்ந்தவள்

“விளையாடல ராய்... எனக்குள்ள சில கமிட்மென்ட் இருக்கு அதுல இது ஒன்னு...” என்றவளை ஆழமாக பார்த்து

“உன்னால அது முடியாதுடி” என்றான் அவளது காதலின் உச்சத்தை உணர்ந்தவனாய், அவன் மீது கொண்டுள்ள அசைக்க முடியாத காதலினாலும் அது கொடுத்த கர்வத்தினாலும் கம்பீரமாகவே சொன்னான்..

அவனது அந்த நேர நிமிர்வு அவளை பெருமை அடைய வைத்தது.. அது அவள் அவன் மீது கொண்டுள்ள காதலின் அடிப்படையால் வந்தது தானே...

‘அது எனக்கும் தெரியும் டா...’ எண்ணியவளின் மனம் ஏனோ உல்லாசமாய் இருந்தது.. வைக்கும் காதலை புரிந்து கொண்டு சரியான நேரத்தில் வெளிபடுத்துவது கூட ஒரு வகை அழகு தான்.. அது கூட காதலின் வெளிபாடு தானோ என்னவோ...

“முடியாது தான் ஆனா சகிச்சுகிட்டு வாழ பழகிக்குவேன் ராய்...” என்றாள் வேதனை அற்ற குரலுடன்.

“அப்படி என்ன அவசியம் வந்தது.. நீ அப்படி ஒன்னும் அவனை சகிச்சுகிட்டு வாழனும்னு எந்த அவசியமும் இல்லை.. அப்படி வாழ்றதுன்னு நீ முடிவெடுத்தா அந்த வாழ்க்கையை  என் கூட என்னை சகிச்சுகிட்டு வாழு அது போதும்” எரிந்து விழுந்தான் அவன்.

“அவசியம் தான். ஆனா அதை சொல்லுவதற்கு இல்லை... அதனால இதற்க்கு முன் நடந்ததை மறந்து விட்டு இப்போ இங்க கண்ட காட்சிகளையும் மறந்துடுங்க..” என்றவள்

“தொடர்ந்து இனி என் கிட்ட இப்படி பேச வேணாம்” கட்டளை போல கூறியவள் அவனிடம் அழுது கொண்டிருந்த தன் மகனை வேகமாய் ராயர் சுதாரிக்கும் முன் வாங்கிக்கொண்டாள்.

அவள் குழந்தையை பிடுங்கிக் கொண்டதில் மறைந்து இருந்த சினம் துளிர்க்க தொடங்கியது. கூடவே அவள் அவளை மறக்க சொன்னது அவனின் சினத்தை இன்னும் தூண்டி விட்டது.

“ரீகா வேணாம். இது வரை நான் என்னென்னவோ செஞ்சு அதுல நீ பல வலிகளை அனுபவிச்சு இருக்குறதுனால தான் உன்னை இப்போ எதுவும் நான் செய்யல.. அதுக்காக நீ செய்வதை எல்லாம் பொருத்துக்குவேன்னு நினைச்சுக்காதடி..” என்று எச்சரித்தவனை கண்டு மனதில் வலிதான் எழுந்தது.

“ம்ஹும் இது ரொம்ப கால தாமதமான முடிவு ராய்... புருஞ்சுக்க வேண்டிய நேரத்துல விட்டுட்டு இப்போ வந்து எல்லாத்தையும் சரி செய்ய முனையுறீங்க..” விரக்தியாய் பேசியவள்

“நீங்க இன்னும் எவ்வளவு வலியை குடுத்தாலும் நான் தாங்கிக்குவேன் ராய்... அதுக்காக நான் வருத்த படவே மாட்டேன். ஆனா என் முடிவு இது தான்” என்று திடமாய் சொன்னவளை கண்டு ரவி ஆச்சர்யமாய் பார்த்தான்.

ராயரோ “அப்போ என்னை இப்போ வரையும் காதலிக்குறேன்னு சொன்னது பொய்யாடி..” கோவத்துடன் கேட்டவனை பார்த்து

ஏளன புன்னகையை அவன் மீது வீசியவள் “இப்பவும் நீங்க என் மீது நம்பிக்கை வைக்கல..” என்றவளை காணும் போது அவளுக்காக அவன் வறுத்த படவே இல்லை..

உள்ளுக்குள் வருத்த பட்டானோ என்னவோ, ஆனால் வெளியே மட்டும் அவன் அலட்ச்சியமாய் தான் இருந்தான். அவனது அலட்ச்சியம் அவளை கொள்ளும் என்பது புரியாமல் கொஞ்சமும் படியாமல் தன் பிடிவாதத்துலையே நின்றான்.

ரவிக்கு திகம்பரியை பார்க்க பாவமாய் இருந்தது. ‘எதுக்காக இவங்க ராயரோட வாழ மாட்டேன்னு சொல்லுறாங்க.. இதுக்கு பின்னாடி என்ன காரணம் இருக்கும் என்று அவனது வக்கீல் முளை ஆராய தொடங்கியது.

ராயரின் மீது உயிரையே வைத்திருக்கும் பெண் பின் ஏன் அவரோடு வாழ மாட்டேன் என்று சொல்லுகிறது... கார்த்தி ஏதும் மிரட்டுகிறானா.. இல்லையே அவன் எப்போதும் போல ரொம்ப இயல்பா தானே இருக்கிறான்.. வேறு ஏதும் பிரச்சனையா.. வெளி தொடர்பில் எதும் பிரச்சனை இருக்குமோ.. என்று எல்லா பக்கமும் ஆராய்ந்து பார்த்துக்கொண்டே அவர்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான்.

திகம்பரியிடம் தனியாய் பேசி பார்க்கலாமா.. பேசினால் உண்மையை சொல்லுவாங்களா... சொல்லவில்லை என்றாலும் வரவைத்து விடுவேன்.. இவ்வளவு காதல் வைத்திருக்கும் பெண் சும்மாவெல்லாம் சேர்ந்து வாழுவதை அதுவும் மனம் கவர்ந்தவனை தவிர்க்காது.. அதற்க்கு பின் சரியான காரணம் இருந்தே ஆகணும்... அது என்ன என்று கண்டு பிடித்தே ஆகணும்... ராயருக்காக தன் மாமாவுக்காக இல்லை என்றாலும் அவனையே இத்தனை வருடம் நெஞ்சில் சுமந்து நிற்கும் திகம்பரிக்காக ஏதாவது செய்யணும் செய்தே ஆகணும் என்று உறுதிக்கொண்டான்.

அதன் விளைவாக திகம்பரியின் உடல் மொழிகளை கவனத்துடன் உள்வாங்கி கொள்ள ஆரம்பித்தான் ரவி. ரவியே இந்த அளவு யோசிக்கும்போது ராயர் யோசிக்காமல் இருப்பானா... அவனது கவனம் பாதி பிரிந்து அவளிடம் வாக்கு வாதத்தில் ஈடு பட்டாலும் மீதி கவனம் அவளது கண்களையும் உடல் மொழிகளையும் ஆராய்ந்து கொண்டிருந்தது.

இவர்களே மிக பெரிய தில்லாலங்கடி... ராயரின் ஒட்டு மொத்த அன்பிலும் வெறுப்பிலும் அறிவிலும் கூட இருந்து அனுபவித்தவள் வாழ்ந்தவள் அவளுக்கு தெரியாதா அவனை பற்றி.

எந்த கணம் என்ன செய்வான் என்று.. அவன் வழி வந்தவன் தானே ரவியும்..

இருவரையும் தூக்கி சாப்பிட்டு விடுபவளாய் எந்த கணமும் கொஞ்சமும் எந்த உணர்வையும் வெளிபடுத்தாமல் கண்களில் வர இருந்த கண்ணீரை கொஞ்சமும் உற்பத்தியாக விடாமல் நிமிர்வுடனே ராயரை எதிர்கொண்டாள்.

“உன்னை பிரிவது எனக்கு வருத்தம் தான்.. ஆனா சமாளிச்சுக்குவேன்” என்றவளின் கூற்றில் ராயரின் கோவம் அதிகரித்து தான் போனது...

அது எப்படி என்னை நீ ஒதுக்கலாம் என்று ஒரு கோவம்... என்னை வெறுத்தாலும் நீ என்னுடன் தான் இருக்கணும் வாழனும் என்கிற பிடிவாதம் அவனுக்கு எழுந்தது.

அதை தன் உடல் மொழியில் காட்டியவன் தன் விழிகளிலும் காட்டி திகம்பரிக்கு உணர்த்த தொடங்கினான்.

அதை புரிந்து கொண்டாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தன் மகனிடம் கவனத்தை செழுத்தியவள்

“இது தான் என்னுடைய முடிவு ராய்... இதுக்கு மேல என்னை தொந்தரவு பண்ணாதீங்க. நான் இப்போ நிம்மதியா தான் இருக்கேன். எனக்கு விரைவா திருமணம் நடக்க இருக்கிறது. இப்போ வந்து நாம சந்திச்சுக்கிட்டோம்னா கார்த்தி வெகுவா வறுத்த பாடுவாரு அதனால ப்ளீஸ் கிளம்புங்க” என்றாள் அழுத்தமாய் கொஞ்சமும் இளக்க மில்லா குரலில்.

அதற்கு கொஞ்சமும் மசியாமல் “சரி... நான் உன் காதலனா இங்க உன் கூட தங்கள உன் அப்பாவோட கெஸ்டா நான் இங்க தங்கலாமில்ல..” என்றவன் அவளின் அனுமதி இன்றி வீட்டின் உள்ளே நுழைந்து கூடத்தில் இருந்த சொகுசு இருக்கையில் கால் மேல் கால் போட்டு கம்பீரமாய் அமர்ந்தான்.

அவனை பின் பற்றி ரவியும் உள் நுழைந்து அவனருகில் அமர்ந்து கொண்டான். திகம்பரிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. குழந்தை வேறு ஒரு பக்கம் அழ ராயரின் வரவு அவளை படுத்த என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தாள். இது போதாது என்று நந்தாவின் கார் தோட்டத்தின் உள் நுழைந்து அதனிடத்தில் நின்றது...

மூச்சே அடங்கி விடும் நிலையில் திகம்பரி இருந்தாள்.

--

காரை விட்டு இறங்கி பேய் அடித்தது போல நின்றிருந்த தங்கையை கண்டு புருவ சுழிப்புடன் வந்தான் நந்தா..

“என்ன திகம்பரி தம்பி அழுதுகிட்டு இருக்கான். நீ எதையோ கண்டு அதிர்ச்சி ஆகி நிக்கிற மாதிரி நின்னுகிட்டு இருக்க. என்ன ஆச்சு. முதல்ல தீஷிதனை கவனி.. எப்படி அழறான் பாரு..” என்றவன்

“ஆமா யாரோட காரு அது. நம்ம வீட்டு வாசல் முன்னாடி நிக்குது...” என்ற போதே திகம்பரியின் உடல் தூக்கி வாரி போட்டது..

“ஹேய் திகம்பரி அதுக்கு நீ ஏன் இப்படி ஜெர்க் ஆகுற.. சரி அதை விடு” என்றவன் குழந்தையை தன்னிடம் வாங்கிக்கொண்டு உள்ளே போக உடலும் உள்ளமும் ஒரு சேர பதறி போனது திகம்பரிக்கு.

“கடவுளே எந்த அசம்பாவிதமும் நடக்க கூடாது... உன்னை மட்டும் தான் நான் நம்புறேன். எப்படியாவது ராயரை எந்த சேதாரமும் இல்லாம ஊருக்கு அனுப்பி வச்சுடு கடவுளே..” வேண்டியபடி நந்தாவை பின் தொடர்ந்து பயத்துடனே வீட்டுக்குள் நுழைந்தாள்.

வீட்டின் உள் நுழைந்த நந்தாவுக்கு தன் தங்கையின் பதற்றமும் திகில் நிறைந்த பார்வையின் அர்த்தமும் தெளிவாய் புரிய நந்தாவுக்கு ரத்தம் கொதித்தது. கைகள் முறுக்கேறி ராயரை கொள்ளும் ஆவேசம் பிறந்தது.

ஆனால் அதை எல்லாம் அடக்கிக்கொண்டு ராயரின் முன் கால் மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்தான் நந்தா..

போனவுடனே கைகலப்பு ஏற்படும் என்று எண்ணிய திகம்பரிக்கு நந்தாவின் இந்த பொறுமை திகைப்பை தான் தந்தது.

இது புயலுக்கு பின் வரும் அமைதியா. இல்லை பாய்ச்சலுக்கு ரெடியாய் இருக்கும் பதுங்களா என்று பிரித்து அறிய முடியாத படி இருந்தது நந்தாவின் நடவடிக்கை.

நந்தாவிடம் வந்த பின் அமைதியான தீஷிதன் அவனது கழுத்து வளைவில் பதுங்கி கொண்டு எதிரில் இருந்த தன் தகப்பனையும் தன் மாமானையும் பார்த்துக்கொண்டு இருந்தான் லேசாய் மிரண்ட படி.. அவனது மிரண்ட பார்வையை வைத்து அவனது தாய் மாமன் அவனின் முதுகை வருடிவிட்ட படியே கூர்மையான பார்வையை ராயரின் மீதும் ரவியின் மீதும் செலுத்தினான்.

நந்தாவை எதிர்கொள்ள முடியாமல் சில நிமிடம் தடுமாறிய ராயர், பின் தன்னை தானே திட படுத்திக்கொண்டு நந்தாவை நேர் பார்வை பார்த்தான்.

ரவி இருவரையும் ஆராய்ச்சி பார்வை பார்த்தான். வந்தவன் யாராய் இருக்கும் என்று அவனுக்கு புரியவில்லை.

ஆனால் திகம்பரிக்கு ரொம்ப வேண்டியவன் என்று மட்டும் தெரிந்தது. அவனது ஆளுமையான தோற்றமும் கூடவே திகம்பரியை தன் கை பிடியில் வைத்திருந்த படியே திகம்பரியின் மகனையும் அனைத்திருந்தான்.

யார் முதலில் ஆரம்பிப்பது என்று தயங்கியபடியே ராயர் இருக்க, நந்தாவோ அவனே ஆரம்பிக்கட்டும் என்று இருந்தான். இருவரது மௌன போராட்டத்தை கண்டு ரவிக்கு தலைவலி வர... திகம்பரி எப்போ இந்த இரு எரிமலைகளும் வெடிக்கும் என்று பதக்கு பதக்கு என்று காத்திருந்தாள்.

நந்தா இப்போதைக்கு வாயை திறக்க மாட்டான் என்று உணர்ந்த ராயர் அவனே முதலில் ஆரம்பித்தான்.

“நந்தா” என்று ஆரம்பிக்கும் முன்னவே அவனை கையை உயர்த்தி தடுத்தவன் திகம்பரியிடம் குழந்தையை கொடுத்து “உள்ளே போ” என்றான்.

அவளோ மாட்டேன் என்று பாவமாய் நின்றாள்.

“இப்போ கூட அவனை காப்பாத்தனும்னு ஏன் மா இப்படி துடிக்குற” என்றவனது பேச்சில் ராயருக்கு கண்கள் கலங்கியது.. அதை முறைத்து பார்க்கிறேன் வெறித்து பார்க்கிறேன் என்ற போர்வையில் கண்களை அகல விரித்து எதிரில் தெரிந்த தன் மனம் கவர்ந்தவளை பார்த்தான்.

எவ்வளவு இக்காட்டான நிலையிலும் அவன் மீது கொண்ட காதலை தோற்க்க விடாமல் காத்துக்கொண்டிருக்கிறாளே என்று எண்ணி பெருமை கொண்டான். கூடவே தன் செயல்களை அவளோடு பொருத்தி பார்த்து மருகினான். மன்னிக்க முடியாத பெரும் தவறை நிகழ்த்திவிட்டு இன்று அவள் வேண்டும் என்று கொஞ்சமும் அஞ்சாமல் நிற்கிறேனே என்று வேதனை கொண்டான்.

அவளை ஏற்கும் தகுதி தனக்கு இருக்கா என்று வேதனை கொண்டான். ஆனாலும் அதையும் தாண்டி அவள் தான் வேணும் தன் வாழ்வு முழுமைக்கும் என்று போர்க்கொடி தூக்கினான் ராயர்.

“அண்ணா” தவித்து போனாள் திகம்பரி..

“உன் விசயத்துல தலை இட எனக்கு எந்த உரிமையும் இல்லையா திகம்பரி” என்றவனது வார்த்தையில் இருந்த வலி அவளை கூறு போட

“ஏன் அண்ணா இப்படியெல்லாம் பேசுற..” கதற தொடங்கினாள்.

நந்தா இல்லை என்றால் இன்றைக்கு திகம்பரி இல்லையே... உடைந்து போன காலங்களில் எல்லாம் துணை நின்று தாயாய் மடி தாங்கி மன சுமையை எதுவும் சொல்லாமலே உணர்ந்து கொண்டு ஆதரவு தந்தவன் அல்லவா அவன்..

அவனுக்கு இல்லாத உரிமையா திகம்பரியிடம்...

“உனக்கு இல்லாத உரிமை வேற யாருக்கும் இல்லைடா..” என்று சொன்ன ராயர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் தன் இடுப்பில் இருந்த பெல்டை கலட்டி நந்தாவின் முன் நீட்டி

“நீ என்னை என்ன வேணாலும் செய்யலாம் அதுக்கு உனக்கு முழு உரிமையும் இருக்கு... உன் தங்கையிடம் மட்டும் இல்ல உன் தங்கையின் மனம் கவர்ந்தவனிடமும் தான்.” என்றவன்

“நான் செய்தது அதுவும் எனக்கு தெருஞ்சே நான் செய்தது. எல்லாமே முழுக்க முழுக்க தவறு தான்... தவறு மட்டும் தான்... அதை என்னால திருத்தி இருந்திருக்க முடியும். ஆனால் அதுக்கு கால அவகாசம் கேட்டு உன் தங்கையை நான் வருத்திவிட்டேன்... அது மட்டும் இல்லாமல் யாருக்கும் தெரியாமல் வந்து அவளை மீண்டும் வேதனை படுத்தியது எல்லாமே நான் தான். இன்று வரையிலும் நான் செய்த எந்த தவறுக்கும் உன் தங்கை என்னை தண்டிக்க வில்லை. அந்த தண்டனையை நீ தருவாய் என்று தான் நான் இங்கு வந்தேன்.” என்றவனை வெறுப்புடன் பார்த்தவன்

“நான் இங்க யாரையும் தண்டிக்க போறது இல்ல.. முக்கியமா உன்னை... என்னை பொறுத்த வரையில் என் தங்கையின் காதலன், என் நண்பன் எப்பவோ செத்து போய்ட்டான். இப்போ வந்திருக்கிறது வேறு யாரோ” என்றவனின் சொற்களில் ராயருக்கு மனம் நெகிழ்வு கொண்டது.

கடைசியாய் நந்தா தன்னை நண்பனாய் ஏற்றுக்கொண்டிருக்கிறான் அதுவும் அவனது வாயாலே சொல்லுக்கிறான். ராயரின் மனம் பூரிப்பில் மிதந்து.

ரவிக்கு ஒன்னும் புரியவில்லை. இவ்வளவு நேரம் சோகமாய் இருந்தவன் “இப்போது என்ன ஆச்சுன்னு ஒரே குஷியாய் இருக்கிறான் இந்த மாமா” என்று குழம்பி போனான்.

“நந்தா” என்று வேகமாய் ஓடி வந்து அவனை இருக்க கட்டி மேலே தூக்கி அவனது முகம் பார்த்து சிரித்தவனை கண்டு அங்கிருந்த மூவருக்கும் இருந்த நிலைமையை மீறி மெல்லிய புன்னகை வந்தது. அவனிடமிருந்து விலக பார்த்தவனை இன்னும் இறுக்கி அனைத்து

“டேய் மச்சான் உனக்கு இந்த காந்தி தாத்தா வேஷம் ஒத்துக்கல டா.. நாமெல்லாம் நேதாஜி வழிவந்த பரம்பரை டா.. அதனால இந்த அமைதியை விட்டுட்டு வா வந்து என்னோட சண்டை போடுடா..” என்று நந்தனை பழைய நிலைக்கு அழைத்தான்.

மூன்று வருடத்திற்கு முன் ராயரின் செயலால் நந்தாவின் குணம் கூட மாறி போனது. வெகுவாய் அமைதி காத்தான். முன்பு போல எதுக்கு எடுத்தாலும் குதிக்க வில்லை. ஆழ்ந்த அமைதி அவனிடம் வந்திருந்தது.

இப்போது கூட ராயரை கொள்ளும் வேகம் இருந்தாலும் அமைதி காக்க தொடங்கியதும் அதனால் தான். எதிராளியை பேச விட்டு அவர்களின் போக்கை உணர்ந்து அதற்க்கு ஏற்றார் போல தன் நடவடிக்கையை எடுக்க கற்றுக்கொண்டான்.

இழப்புகளில் இருந்து தானே மனிதன் பாடத்தை கற்று கொள்ளுகிறான்...

நந்தாவும் அவ்வகையே... தான் எதையும் இழக்காமல் இழந்த மற்றவர்களின் வாழ்க்கையிலிருந்து எல்லாவற்றையும் கற்றுக்கொண்டான்.

இப்படி வாழ கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாய் கண் முன் இருந்த தன் தங்கையின் வாழ்க்கையே போதுமானதாய் இருந்தது.

ஆனால் இப்படி தான் வாழ வேண்டும் என்ற எடுத்துக்காட்டு இல்லாமல் போனதால் தான் அவனுடைய வாழ்க்கையின் திசைகள் மாறி போனதோ என்னவோ...

ஆனாலும் இன்று வரையிலும் அதை கற்றுக்கொள்ளாமல் போனது அவனுடைய பாவங்களோ.. இல்லை தெரியாமல் செய்த தீவினைகளோ...

அதற்க்கு தான் மிக பெரிய இழப்பை சந்திக்க வேண்டி வரும் என்பதையும் கவனிக்க மறந்தானோ என்னவோ...

ராயரின் கூற்றில் அவனை முறைத்தவன் ஒரு உதறில் அவனை உதறி தள்ளியவன் வெட்டும் பார்வையுடன் ராயரை ஏறிட்டவன்

அவனது உற்ச்சாகம் எதுக்கு என்று புரிய விரக்த்தியான குரலில் “திகம்பரி உன்னை நம்பினாளோ இல்லையோ ஆனா நான் உன்னை முழுதா நம்பினேண்டா... ஆனா நீ இப்படி பாதியிலே எல்லாத்தையும் விட்டுட்டு போவான்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல..”

“உன்னை எனக்கு அவ்வளவு பிடிக்கும்டா... நீ திகம்பரிகிட்ட சொன்னியே காரணம் அதை என்னால ஏத்துக்கவே முடியலடா... அதெப்படிடா நீ அவ பக்கத்துல இருக்கும் போது நீ தான் இந்த வீட்டு மாப்பிள்ளைன்னு சொன்னவன் நீ ஏதோ ஒரு கோவத்துல எங்களை விட்டு திகம்பரியே விட்டு தள்ளி இருக்கும் போது வேற ஒருத்தனை என் தங்கையின் மாப்பிள்ளையா சொல்லுவேன்.

நீ யோசிக்கவே மாட்டியா.. திகம்பரிகிட்ட ஒரே ஒரு முறை தான் சொன்னேன். கார்த்திக்க உனக்கு பேசி இருந்தா இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்காதுன்னு... தப்பு தான். ஆனா முழுசா கேக்காமா அதை யாரோ தவறா கேட்டுட்டு உன் கிட்ட வந்து வேற விதமா சொல்லி இருக்காங்க..

அதை கேட்டு நீயும் பொங்கி இருக்குற.. உனக்கு சாதகமா திகம்பரியோட கரு களைந்து போய்டுச்சு.. ரெண்டையும் கூட்டி ஒண்ணுன்னு முடுச்சு போட்டு என் தங்கையோட மொத்த வாழ்க்கையையும் பாலாக்கிட்டியேடா...“ வேதனை நிறைந்த குரலில் கூறியவனின் கூற்றில் தலை குனிந்து போனான் ராயர்.

“நான் ஒரு முறை சொன்னதுக்கே திகம்பரி என் கிட்ட மூஞ்சு குடுத்து பேசல தெரியுமா... அவ்வளவு நேசம் உன் மேல.. ஆனா நீ அதை கொஞ்சமும் மதிக்காம மொத்தமா கொட்டி கவிழ்த்திட்டியேடா.. போடா” என்று தளர்ந்து போய் இருக்கையில் அமர்ந்து விட்டான். அவனிடம் அத்தனை துயரம் இருந்தது. கோவம் இருந்த இடம் முழுவதும் ராயரின் மீதான வேதனை தான் வந்து அமர்ந்தது..

அவனால் ராயரிடம் சண்டை போட முடியவில்லை. ஏதோ ஒரு காரணத்தை முன் நிறுத்தி தன் தங்கையின் வாழ்வு மலர்ந்து விடாதா என்று பரிதவித்து போனான் அந்த பாசம் மிகுந்த அண்ணன்.

திகம்பரியின் தனிமை கோலம் அவனை சிதைக்க ஆரம்பித்திருந்தது... அவளை அந்த நிலைமையில் நந்தாவால் பார்க்க முடியவில்லை. ராயர் திகம்பரியை விட்டு சென்ற பின் முன்பிருந்ததை விட இன்னும் அதிகமாக இருவரிடையே அன்பு வளர தொடங்கியது..

சிறு வயதில் தொலைத்த சகோதர பாசத்தை இப்போது மீட்டெடுத்து இருவரும் வாழ தொடங்கினார்கள். திகம்பரியின் கண் கொண்டே அவளது தேவையை உணர்ந்து கொள்ள முடிந்தது நந்தாவால். அந்த மாற்றங்கள் எல்லாமே ராயரின் முடிவால் வந்து விளைந்தவை..

நந்தாவின் கோவத்தை மட்டுமே கண்ட ராயரால் இந்த தளர்வை அவனிடம் பார்க்க முடியவில்லை.

இது எல்லாத்துக்கும் தான் ஒருவன் மட்டுமே காரணம் என்று புரிய நந்தாவின் முன் மண்டி இட்டவன்

“அறிவு கேட்ட தனமா நடந்துகிட்டேண்டா.. மன்னிச்சுடுன்னு என்னால கேக்க முடியல.. அதுக்குரிய தகுதியும் எனக்கு இல்ல.. உன் வலி தீர என்னை என்ன செய்யணுமோ செஞ்சுக்கோடா.. ஆனா இப்படி நொடிச்சு மட்டும் போய்டாதடா... சத்திமா என்னால பார்க்க முடியல... எனக்கு என் பழைய நந்தா தான் வேணும்... நீ வேணாம்” என்று அவனின் கைகளை பிடித்துக்கொண்டு கதரியவனை கண்டு எல்லோருக்குமே கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

“அந்த நந்தா செத்து போயிட்டாண்டா..” என்று நந்தாவும் கதற

திகம்பரியாலும் அழுகையை கட்டு படுத்த முடியவில்லை... இருவரின் நட்பும் அவளை குழைய வைத்தது... ரவிக்கு கூட இந்த பாச பிணைப்பை கண்டு விழிகள் கசிந்தது... கொல்லும் வெறி கூட இங்கு மழுங்கி போய் விட்டது...... பாசம் அதித தவறையும் மன்னிக்குமா..... இல்லை மறந்து விடுமோ......

 

 

Loading spinner

Quote
Topic starter Posted : October 24, 2025 10:35 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top