அத்தியாயம் 1
“ஒன்னு ரெண்டு மூனு.....” என்று எண்ணிக்கொண்டு இருந்தவனை பார்த்து
“என்னடா பண்ணிக்கிட்டு இருக்க” என்று கேட்டான்.
“பார்த்தா தெரியலையா மாமா” என்றான் நக்கலாய் ரவி
“அது தெரியுதுடா, இப்போ இந்த சமயம் இது முக்கியமா”
“கண்டிப்பா என்ன ஏதுன்னு விசாரிக்கிறவங்களுக்கு பதில் சொல்லன்னுமுள்ள அதுதான் கடமையேன்னு கம்பி எண்ணிகிட்டு இருக்கேன். நீயும் எண்ணு மாமா, உன்ற அக்கா கண்டிப்பா கேக்கும் அதுக்கு பதில் சொல்லனும்ல” என்றவனை முறைத்தான் காசி விஷ்வநாத ராயர். அவன் ஊரறிந்த வழக்கறிஞர்.
அவனது உதவிக்காக இருப்பவன் தான் ரவி. ராயரின் கீழ் பல ஜூனியர் இருந்தாலும் ராயருக்கு ரவியும் கவியும் முதன்மையானவர்கள்.
இருவரும் அவனது சொந்தங்கள். ஒருத்தன் சொந்த அக்கா மகன். கவி அவனது ஒன்று விட்ட அக்கா மகள்.
“என்ன முறைப்பு இல்ல என்ன முறைப்புன்னு கேக்குறேன், மாசத்துல பாதிநாளு இதுலயே கழியுது.. ஒரு சைட்டு இருக்கா, ஒரு பிகரு இருக்கா, என் வாழ்க்கை எவ்வளவு ட்றையா போகுது தெரியுமா மாமா, உனக்கெங்க அது தெரிய போகுது.
நீதான் சாமியார் மாதிரி காவி கட்டிக்கிட்டு ஐம்புலன்களையும் அடக்கிக்கிட்டு இருக்கியே, உனக்கு இந்த பீலீங்க்ஸ் எல்லாம் புரியாது” என்று அனத்திக்கொண்டிருக்க, அதை கேட்டவன் காதில் ரத்தம் வருதா என்று கேலியாக தொட்டு பார்க்க, அதில் ரவி காண்டானான்.
“யோவ் மாமா ஆனாலும் உனக்கிருக்குற லொள்ளுக்கு” என்று அவனை அடிக்க வர
“டேய் கொஞ்ச நேரம் பொலம்பாம இருடா”
“என்னது பொலம்புரனா உசுர குடுத்து கத்திகதரிக்கிட்டு இருக்கேன் பொலம்பறன்னா சொல்ற உனக்கு போய் வாழ் நாள் பூரா அடிமையா இருக்கேன்னு சாசனம் எழுதிக்குடுத்தேன் பத்தியா என்னை சொல்லணும்.. உனக்கு இது தேவையாடா ரவி” என்று தன்னை நோக்கி தன் சுட்டுவிரலை நீட்டி அவனே தன்னை திட்டிக்கொள்ள
“டேய்” என்று ராயர் முறைக்க
“சரி சரி இப்போ என்ன பண்ணனும் சொல்லு செஞ்சு தொலைக்குறேன்” வேண்டா வெறுப்பாய் முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல அவனை ஆசையாய் தோளடு அனைத்து முதுகில் ரெண்டடி போட்டு “போய் ஏட்டு வந்துட்டாரான்னு கேட்டுட்டு வா மாப்பிள்ளை” என்றான் புன்னகையோடு.
“அவரை விசாரிச்சு என்ன மாமா பண்ண போற”
“போய் கேட்டுட்டு வா சொல்றேன்”
“என்னவோ பண்ணு ஆனா மறுபடியும் இந்த பக்கம் என்னை கூட்டிட்டு வந்த நான் உன்னை டைவர்ஸ் பண்ணிடுவேன் பார்த்துக்க”
“நீ என்னை..” நக்கலாய் கேட்டான் ராயர்.
“ஆமா உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு வக்கீல் நோட்டீசு குடுப்பேன்” என்றான் கெத்தாய்.
“அது ஓகே.. பட் எங்க அக்காவுக்கு என்ன பதில் சொல்லுவ”
“ஆமால்ல.. உன்னயாச்சும் சமாளிச்சுடுவேன் ஆனா அந்த காட்டேரிய எப்படி சமாளிக்கிறது.. பொறந்தவுடனே உனக்குன்னு என்னை தார வார்த்து குடுத்துடுச்சு... இனி நான் மட்டும் வீட்டுக்கு போனனா என்னை வீட்டுக்குள்ள சேர்த்துக்காம வெளக்கமாத்த கொண்டே அடிக்குமே..
ஆத்தி அதுவும் அது அடுச்சதுன்னா புத்தூர்ல கட்டு போடுற அளவுக்கு அடி வெளுக்குமே.. அதுகிட்ட அடிவாங்கி உசுரு போறத விட உன்கிட்ட மாட்டி கொஞ்ச கொஞ்சமா உசுரு போகட்டும்” என்றான் பாவமாய்.
“அது அந்த பயம் இருக்கட்டும் இப்போ நான் சொன்னத போய் செய்யி” என்றான் சிரிப்புடன்..
“உத்தரவுங்க ஆபிசர்” என்று நக்கல் பண்ணிவிட்டு தன் தாய் மாமா சொன்ன வேலையை கர்ம சிரத்தையாய் செய்தான்.
வந்தவனின் முகத்தில் இருந்த இருக்கம் கண்டு ராயர் அவனை கேள்வியாக பார்க்க ரவி அவனது காதில் சொன்ன விஷயம் கண்டு ஒரு கணம் திகைத்தான். பின்
“நாமா எதிர் பார்த்தது தானே.. நீ கவிக்கு போன போட்டு வர சொல்லு”
“நான் வரும்போதே போட்டுட்டேன் அவ வெளில தான் நிக்குறா.. இன்ஸ பார்க்க போயிருக்கா”
“ம்ம் மத்த ஏற்பாடெல்லாம் பண்ணியாச்சா” தாடையை தடவிய படி யோசனையோடு கேக்க
“ம்ம் நம்ம பசங்க எல்லாத்தையும் பக்காவா யோசனை பண்ணி வச்சுருக்காங்க” என்றான் ரவி.
“ஆனாலும் நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் ரவி, எப்போ வேணாலும் எதுவேணாலும் நடக்காலாம் சொல்றது புரியுதா”
“ம்ம் புரியாது மாமா”
அந்த நேரம் வந்து உதவி காவலாளர் இவர்களை பூட்டாத சிறையின் அறையிலிருந்து வெளியே கூப்பிட, இவர்கள் வந்தவுடன் காவலாளரை சந்திக்க கூட்டி சென்றார்.
கவி அதற்குள் எல்லா வேலையும் செய்திருக்க இன்ஸ் அவர்களிடம் கையெழுத்து வாங்கிட்டு
“இப்படி வரத கொஞ்சம் குறைச்சுக்கலாமே கே.வி.ஆர்”
“அதுக்கு நீங்க சரியா இருந்தா நான் எதுக்கு இங்க வரேன் இன்ஸு”
“அதுல்ல சார்”
“நடந்த விஷயம் உனக்கும் தெரியுமில்ல இனிமே நடக்க போறதையும் நீ தெருஞ்சு வச்சிருப்ப அப்படி இருந்தும் நீ என்னை இப்படி சொல்ற” சற்று கூர்மையாகவே அவரை கண்டு சொல்ல
“என்னால் எதுவும் செய்ய முடியாதுன்னு உங்களுக்கு தெரியாதா” குற்ற உணர்வோடு சொன்னவரை ரவி தோளோடு அனைத்து
“சரி விடு இன்ஸு, மாமா ஒரு கோவத்துல சொல்லிட்டாரு, இன்னும் நாலஞ்சு நாள்ல நாங்க உள்ள வருவோம் ஒரு ஏசிய மாட்டி வைய்யா ஒரே கொசு கடியா இருக்கு. கூடவே நல்ல சீட்டு கட்டா ஒன்னு வாங்கி வை உள்ள இருந்தத நானும் மாமாவும் அடிச்சு புடுச்சு விளையாண்டதுல கிழிஞ்சி போச்சு” சொல்ல
இன்ஸு அவனை முறைத்தார்.
“என்ன முறைப்பு இல்ல என்னை முறைப்புன்னு கேக்குறேன் வாடிக்கையாளர் திருப்தியா இருந்தாதான் உங்களுக்கு இங்க வேலையே.. ஞாயபகம் வச்சுக்கோங்க” அவன் சிலிர்க்க, அருகில் இருந்த உதவி காவலர் சிரித்துவிட இன்ஸ் அவரை பார்த்து முறைத்தார்.
“டேய் எப்போ பாரு இன்ஸு கிட்ட வம்புக்கு போய்கிட்டு” என்று ரவியை அதட்டியவன் “இன்சு கூப்பிடும்போது உடனே வந்து தொலை வெற எங்காவாது போய்டாத” அவருக்கான உத்தரவையும் போட்டான் ராயர்.
“உங்களுக்காக இரவு கூட காத்திருக்கிறேன் KVR..” என்றார் அவர் பவ்யமாக.
“யோவ் இன்ஸ் நீ என்ன ஐட்டமா இரவு கூட காத்துக்கிட்டு இருக்கேன்னு சொல்ற.. சொல்லவே இல்ல பத்தியா..” ரவி அவரை கலாய்க்க
“ஏன் சொல்லியிருந்தா நீ வரதுக்கா” என்று கேட்டபடி “மகனே நீ செத்த வா.. என்னையே கிண்டல் பண்றியா” என்று ரவியை அடிக்க பாய, அவரிடமிருந்து தப்பிய படி
“இன்ஸு நிசமாவே நீ அவளா..” கூவ
“டேய் உன்னை“ என்று அவனை வளைத்து பிடித்து முதுகிலே டின்னு கட்டினார் இன்ஸ்.
“முடுஞ்சா உங்க பஞ்சாயத்து” என்ற படி இருக்கையிலிருந்து KVR எழ
“ஆனாலும் உனக்கிருக்குற கொழுப்பு இருக்கு பாரு மாமா ரொம்ப ஓவரு, ஒரு குழந்த புள்ளைய போட்டு இந்த அடி அடிக்கிறாரு இந்த தொப்ப, நீ என்னன்னா கால் மேல கால் போட்டு ரசிச்சதோட இல்லாம முடிஞ்சுருச்சான்னா கேக்குற” என்று ரவி தாவி வந்து ராயரின் மேல் பாய அவனை ஒற்றை கையால் ஒதுக்கி விட்டுட்டு அவனது பின் புறமாய் கைகளை இறுக்கி பிடித்து ரவிக்கு வலிக்கும்படி செய்ய
“யோவ் விடுயா வலிக்குது”
“ஏண்டா இங்க எவ்வளவு சீரியஸா விசயம் போயிட்டு இருக்கு நீ அடிச்சு புடிச்சு விளையாடுற” என்று கைகளை இன்னும் முருக்க
“சத்தியமா இனி எப்பவும் விளையாட மாட்டேன். இப்போ உடு மாமு கை வலிக்குது” சிணுங்க
“வந்து தொலை” என்று இன்சிடம் தலையசைத்து விட்டு முன்னாள் நடக்க கவியும் ரவியும் அவனின் பின்னல் சென்றார்கள்.
காரில் ஏறி அமர்ந்தவர்கள் “கவி என்னாச்சு..” என்று நடந்த நிகழ்வுகளை ரவி கேட்க, கவி ஒன்று விடாமல் எல்லாத்தையும் சொன்னாள். அதுவரை இருந்த விளையாட்டு தனம் ஓடி போய் தனக்கே உரிய நிமிர்வுடன் எல்லாத்தையும் ரவி கேட்டான்.
“மாமூ நாம்ம திட்டபடி தான் எல்லாமும் நடக்குது” யோசனையாய் ராயரிடம் சொல்ல
“புரியுதுடா, நம்ம பசங்களுக்கு போன் போட்டு அங்க நடக்குற நிலவரத்தை கேளு.. கூடவே ஈசு இருக்கானான்னு கேளு”
“ம்ம் சரி மாமூ” என்றவன் அங்கு போன் போட்டு விவரத்தை சேகரித்துவிட்டு ராயரிடம் பகிர “ம்ம்” என்று எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டான்.
“மாப்பு”
“மாமூ”
“அக்காகிட்ட பேசிடு அது பதக்கு பதக்குன்னு உக்காந்துருக்கும்”
“மாமா சித்திகிட்ட நான் பேசிட்டேன்” என்று கவி சொல்ல
“சரி” என்றான்.
“மாமூ இப்போ எங்க போறது, அங்க போறதா இல்ல வீட்டுக்கு போறதா”
“வீட்டுக்கு போய்ட்டா பொறவு அக்கா வெளியே விடாது, அதனால கொஞ்ச நேரம் கார்லயே இருப்போம்.. கவி நீ சாப்டுட்டியா”
“இல்ல மாமா உங்க கூட சாப்டலாம்னு இருக்கேன், சாப்பிடலாமா”
“சரி உணவு விடுதிக்கு விடவா, இல்ல அக்கா குடுத்து விற்றுக்க”
“குடுத்து விட்ருக்காங்க கை கழுவீட்டு வாங்க” என்று கவி எடுத்து வைக்க, காரின் உள்ளே உட்கார்ந்து மூவரும் சாப்பிட தொடங்கினர்.
“அடச்சை எங்கம்மா நல்லி எலும்பு போட்டு கொளம்பு வச்சுருக்கும், கோழிய வறுத்து வச்சுருக்கும், ஆட்ட அவிச்சு வச்சுருக்கும்னு பார்த்தா, வெறும் சாம்பார குடுத்து விற்றுக்கு.. இன்சு அப்பவும் சொன்னாரு பிரியாணி வாங்கி தரேன்னு.
நான்தான் அதுல ஒரே ஒரு பீசுதான் இருக்கும் எனக்கு வேணாம் நீயே வாங்கி திண்ணுன்னு வந்துட்டேன்.. இப்போ அதுக்கு அனுபவிக்கிறேன்.. வீட்டுக்கு போய் இருக்கு அந்த தில்லையம்மாவுக்கு. ஒரு சின்ன புள்ளைக்கு கறி கஞ்சி குடுக்காம ஏமாத்தி காய்ச்சல் வர வைக்க பார்க்குது” என்று புலம்பியபடி சாம்பாரை ஊற்றி ஒருகட்டு கட்ட
பார்த்துக்கொண்டிருந்த கவிக்கும் ராயருக்கும் சிரிப்பு வந்தது.
அந்த நேரம் சரியாய் ராயரின் போன் அடிக்க எடுத்து பேசியவனின் முகம் கோவத்தில் சிவந்தது.. சாப்பாட்டை அப்படியே வைத்து விட்டு எழுந்து ஓட்டுனர் இருக்கைக்கு நிமிடத்தில் மாறியவன் வேகமாய் எடுக்க ரசத்தை குண்டானோடு குடித்துகொண்டிருந்த ரவியின் மேல் முழுவதும் அபிசேகம் ஆனது..
“சூப்புக்கு தான் வழியில்லன்னு ரசத்தையே சூப்பு மாதிரி நினைச்சுக்கிட்டு குடுச்சா இந்தாளுக்கு அது கூட பொறுக்கலை” புலம்ப கவி ஒரு கணம் சிரித்தாலும் ராயரின் பேச்சில் கவனம் வைத்தாள்.
“ஈசா நீ அங்கனவே இரு.. நான் பக்கத்துல தான் இருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்” என்றவன் அதிவேகமாக காரை செலுத்த.. அந்த வேகத்திலும் ரவி தன் சோத்து மூட்டையை மூடாமல் தின்றுக்கொண்டே வர,
கவி “கொஞ்சமாச்சும் இருக்குற நிலைமைய யோசிக்குற நீ.. இந்த நிலைமையிலும் உனக்கு உன் சோறு தான் முக்கியமா போச்சா”
“இல்லையா பின்ன அங்கன போயி அடிவாங்க.. ச்சேச்சே அடி குடுக்க வேணாம் அதுக்கு தான் பாடிய டெவெலப் பண்றேன்” என்றான்.
“டேய் எரும பாடிய டெவெலப் பண்றதுன்னா உடற்பயிற்சி மூலமாதான்.. இந்த மாதிரி தட்டு சோத்த தின்னு யாரும் பாடிய டிவெலப் பண்ண மாட்டாங்கடா” என்றாள் கடுப்புடன் கவி.
“அடியேய் இந்த ஐய்டியாவ இந்த வருஷம் தான் கண்டு பிடுச்சுருக்காங்க. அது தான் நானும் ட்ரை பண்ணிபார்க்கலாம்னு இந்த திட்டம் மட்டும் ஒர்க் அவுட் ஆச்சு உன் அண்ணன் வேல்டு லெவல் பேமஸ் ஆகிடுவேன்” காலரை தூக்கிவிட்டு சொல்ல அவள் தலையிலே அடித்துக்கொண்டு
“குண்டான் சோறு திங்குறதுக்கு இப்படி ஒரு புரளியா.. நீ எல்லாம் அடங்கவே மாட்ட”
“ஹா அது இப்போ தான் உனக்கு தெருஞ்சதா.. மாமாகிட்ட கேளு என்னை பத்தி அக்குவேறு ஆணி வேறா சொல்லுவாரு”
“எனக்கு உன்ற பெருமையெல்லாம் கேக்க நேரம் இல்ல சாமி நீயே வச்சுக்க”
“நீயே இப்படி சொல்லலாமாடி. நான் உன்ற அண்ணன் தானே”
“சத்தியமா கிடையாது..“ என்று அவளும் அவனுக்கு பலிப்புக்காட்ட
“ஏய் வேணாமுடி...” என்றபோதே இடம் வந்திருக்க
“ரவி” அவனை அலெர்ட் பண்ணினான் ராயர்.
“நான் தயார் மாமூ” என்று தன் தோரனையை நொடி பொழுதில் மாத்திக்கொண்டான்.
“கவி”
“மாமா”
“நீ இங்கனவே இரு.. நானும் ரவியும் எல்லாத்தயும் பார்த்துக்குறோம். இந்தா இது ரவியோடது..” என்று சொல்லி துப்பாக்கி ஒன்றை தூக்கி அவளிடம் போட்டான்.
“டேய் மாமா இத எப்போடா எடுத்த” அழுதுவிடுபவன் போல கேட்க
“நீ இவ்வளவு நேரமா கவி கிட்ட வெட்டியா பேசிகிட்டு இருந்தீள்ள அப்போ ஆட்டைய போட்டது” என்றான்.
“உன்னோடத குடுக்க வேண்டியது தானேடா.. நானே பச்ச புள்ள எனக்கு எதுவுமே தெரியாதுன்னு தான் எங்கம்மா சண்டையின்னு வந்தா நீ அடி வாங்காம இதை எடுத்து சுடுன்னு குடுத்து விட்டுச்சு.. அதை போய் ஆட்டைய போட்டுட்டியே மாமா.. இப்போ அவனுங்க அடிப்பனுன்களே நான் என்ன பண்ணுவேன்..
டி கவி உன் அண்ணண இப்போவே முழுசா பார்த்துக்க திரும்பி வருவனோ மாட்டானோ, எங்கேங்க அடிக்க போறானுங்களோ தெய்வமே என்னை மட்டும் காப்பாத்து. கூட வர இந்த துரோகிய காப்பாத்தாத நான் உனக்கு மொட்டை.. வேணாம் மொட்ட போட்ட க்ளாமர் போயிடும் அதனால் உனக்கு நான் பூ முடி எடுக்குறேன் ” என்று அழுதுக்கொண்டே ராயருடன் சென்றான் ரவி.
“என்னது பூ முடியா” அதிர்ந்தான் ராயர்.
“ம் ஆமா பொண்ணுங்க எல்லாம் எடுக்குறாங்கள்ள அதென்ன அவங்களுக்கு மட்டும் அதை பட்டா போட்டு குடுத்துருக்காங்களா, இதுக்குன்னே நானும் எடுப்பேன்” என்றான் கெத்தாய்.
அவனது தலையிலே இரண்டடி போட்டு “அதுக்கு முடி நீளமா இருக்கணும்டா எரும”
“நாங்களும் வளர்ப்போம் வளத்ததுக்கு பொறவு தான் பூ முடி எடுப்போம்” என்று சொன்னவனை கண்டு ராயர் கடுப்பாக
“ம்ஹும் புதுசா ஒன்ன செஞ்சா இந்த உலகம் ஏத்துக்காதே.. விடுடா விடுடா ரவி பயலே.. உலகம் காண்டுல இருக்கு பொறவு இந்த விசயத்த பத்தி விவாதிப்போம்” என்று முடிவுக்கு வந்துவிட்டு சுற்றிலும் கண்களை ஓட்டினான்.
அத்தியாயம் 2
“மாமூ தயாரா” என்றான்.
”ம்ம்” என்றவன் அவனிடம் ஒரு துப்பாக்கியை தூக்கிபோட “இது ஏதுடா மாமு”
“கல்ல துப்பாக்கி இப்போ நீ மூடிகிட்டு வரலன்னு வைய்யி நானே உன்னை சுட்டுடுவேன்” என்று கடுப்படித்தான் ராயர்.
“எதைய்டா மாமா”
“ம்ம்.. *” என்று கெட்ட வார்த்தை பேசியவனின் பேச்சை காதில் வாங்க முடியாமல் காதை பொத்தியவன்
“மன்னிச்சுக்க மாமு இனி வாயவே தொறக்க மாட்டேன்” என்றான் பாவம் போல்.
“அது... வந்த வேலைய பார்த்துட்டு தான் இனி உன்ற வாய் பேசணும்” என்று மிரட்டிவிட்டு இருவரும் முன்னோக்கி போக
“வா KVR நீ வருவன்னு எனக்கு தெரியும்” என்று ராயரை வரவேற்றான் நாதன்.
“நான் வருவேன்னு தெருஞ்சிருந்தும் நீ இன்னும் ஓடாம இருக்க அதிசயம் இல்லையாடா” ரவியிடம் அவனை சொல்லி ஏளனமாக கேட்க
அதில் நாதனின் முகம் கருகியது..
“என்ன நாதா.. மூஞ்சி செத்து போச்சு, மாமு உண்மைய தானே கேட்டாரு, அதுல உன் மூஞ்சி கருவிபோச்சா இல்ல தண்ணி ஒன்னும் விடலையா” ரவி கேலியாக கேட்க
“ரவி..” குரல் அதட்டி பேச
“டேய் நான் இருக்கும் போதே என் மாப்பிள்ளைய அதட்டுவியா. அதட்டுரதுக்கு நாக்கு இல்லாம போய்டும் நாதா.. கவனம் யாருகிட்ட பேசுறோம்னு இருக்கணும் வெளங்குதா..” அதில் தாழ்ந்து போன நாதன்
“KVR எல்லா எவிடன்சையும் குடுத்துடு நான் ஏட்டு பொண்ண விட்டர்றேன்” என்ற போதே
“நீ என்னடா வெண்ண விடுறது நாங்க ஆல்ரெடி பொண்ணை தூக்கியாச்சு” என்றான் கெத்தாக..
“KVR இது கொஞ்சம் கூட சரியில்ல” கொதித்து எழுந்தான் நாதன்.
“எது சரியில்ல மகனே நீ செஞ்ச வேலைக்கு உன்னயெல்லாம் மாமு இவனை அப்படியே விட கூடாது”
“டேய் இவனெல்லாம் சப்ப மேட்டரு, விடு இன்சு வந்து இவனை அள்ளிகிட்டு போகட்டும் நீ ஆரம்பி” என்றபோதே உள்ளுக்குள்ளிருந்து நாதனின் அடியாட்கள் சிலர் வர
“டேய் மாமு செம்ம வேட்டை போல இன்னைக்கு நமக்கு” என்று இருவரும் கை கோர்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டு தங்களை தாக்க வந்தவர்களை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து எரிந்தனர். கடைசியில் நாதன் தப்பிக்க பார்க்க இருவரும் சேர்ந்து அவனை பிடித்து அடித்து துவம்சம் பண்ணினர்..
“ஏன்டா பொட்ட புள்ளைங்கன்னா உனக்கு அவ்வளவு ஏளனமா போயிடுச்சா” என்று சொல்லி அவனின் மூஞ்சிலே நச்சென்று குத்தினான் ராயர்..
“என்ன மாமு தடவி குடுத்துகிட்டு இருக்க நகரு நான் இவனை பொலக்குறேன்” என்று கடும் கோவத்துடன் நாதனை வெளுத்து வாங்கிவிட்டான் ரவி.
இன்சு தயாராய் வர நாதனை அவரிடம் அல்லிகொடுத்துவிட்டு மூவரும் வீடு வந்து சேர்ந்தார்கள்.
வீட்டுக்கு வந்தவர்களை ஒரு முறைப்புடன் முற்றத்திலே அமரவைத்து தில்லையம்மா அவர்களுக்கு தலையில் எண்ணெய் வைத்து தேய்த்துவிட
“அம்மா வெண்ணி தண்ணீர் தயாரா இருக்கு வந்து குளிக்க சொல்லுங்க” என்று பாவாடை தாவணியில் சிட்டு போல் வந்து மதி கூற
“ஏய் இந்தா நீ கேட்ட கை செயின்” என்று தங்கத்தில் ஆன கை செயினை அவளிடம் வீசினான் ராயர்.
“ஹே மாமு வாங்கிட்டு வந்துட்டியா.. சூப்பரு, நல்ல செலெக்சன்” என்று தன் மீது வந்து விழுந்த டப்பாவை திறந்து பார்த்து கூற
“உனக்கு எதுதான் பிடிக்காது.. இனாமா என்ன குடுத்தாலும் ஈஈஈ ன்னு பல்லை காமிப்பியே” என்று ரவி அவளை வார
“டேய் அவளை நீ சொல்றியா.. நீ ரொம்ப யோக்கியம் இன்சு குடுத்த வீணா போன மோரையே அமிர்தம் மாதிரி குடுச்சவன் நீ. நீ அவளை சொல்ற“ என்று சரியான நேரம் பார்த்து பொதுவாய் சொல்வது போல தில்லையம்மவிடம் போட்டு கொடுத்துவிட்டு ராயர் கமுக்கமாய் உட்கார
மதி அவனை பார்த்து கண்ணடிக்க ராயர் குறும்பாய் சிரித்து ரவியை பார்க்க அவனோ தில்லையம்மா ‘எண்ணெய் தேய்க்கிறேன் என்கிற பெயரில் அவனின் தலையை மாவாட்டி, உச்சந்தலையிலே நல்லா நச்சு நச்சுன்னு அடிக்க’ ரவி சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு ராயரை முறைத்தான்.
மதி அவனை கண்டு உதட்டை சுழித்து பலிப்பு காட்ட பத்திக்கொண்டு வந்தது அவனுக்கு..
“எல்லாம் ஒன்னு கூடிட்டாங்க.. அதுவும் தில்லைய வச்சுகிட்டு இவங்க கிட்ட வம்புக்கு போக கூடாது.. போய்ட்டா அவ்வளவு தான். என் தொம்பிய நீ எப்படிடா பேசலாம் என்று வரிந்து கட்டிக்கிட்டு வந்துடும்.
அதுவும் வேற, பெரிய பாச மரத்தை வளர்த்து காத்து வாங்கிகிட்டு இருக்குங்க ரெண்டும், இதில பூந்தோம் நமக்கு கறி சோறு கண்ணுல கூட காட்டி தொலையாது இந்த தில்லை.. நீ தில்லையம்மா இல்ல எனக்கு வந்த தொல்லையம்மா....” என்று தனக்குள் முனகிய படி அமைதியின் சிகரம் போல் போஸ் கொடுத்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தான் ரவி.
அவனின் மைன்ட் வாயசை கேட்ச் செய்த மதி, கவி, ராயரும் தங்களுக்குள் செய்கையில் அவனின் பாவனையை பார்த்து கேலி செய்து சிரிக்க
“அங்கு சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு” என்று திடிரென்று ரவி பாட
“என்னடா பட்டு பாடுற” தில்லை அதட்ட
“பாட்டு தானே தெய்வமே பாடுறேன்.. உன் தொம்பிய ச்சே உன் தம்பிய பத்தியா பேசுனேன்.. நீ உன் தம்பிய பத்தி பேசுனா மட்டும் ஆஜர் ஆகு. இல்லைன்னா எண்ணைய தடவி விட்டு போனமா கறிய போட்டு குழம்பு வச்சமான்னு இருக்கணும்”
“ம்ம்ம் நான் கறி குழம்பா வச்சு ஊத்துறேன்.. நீ என்ன பண்ற ஊர்ல இருக்குற எல்லா காவல் நிலையத்துளையும் போயி கம்பி எண்ணிட்டு வா” என்று கடுப்பாய் அவனது தலையில் அடிக்க
“ம்ம் அதை நீ இவன் கிட்ட என்னை சேர சொல்லும்போது யோசிச்சுருக்கணும், அப்போ மட்டும் உன் தொம்பிக்கு ஆளா இருக்கணும்னு நான் விரும்பிய பாடத்தை படிக்க விடாம சதி பண்ணுணீல்ல இப்போ அனுபவி” என்றவனின் வாயிலே ஒன்று போட்டார் தில்லை.
“மாமாவ அவன் இவன்னு சொல்லாதன்னு சொல்லியிருக்கேனா இல்லையா.. இப்படி தான் பேசி வைப்பியா” என்ற போதே சிவனாண்டி வந்தார்.
வந்தவர் தன் மேல் சட்டையை கழட்டிவிட்டு வேட்டியை காலை சுற்றி இருக்க கட்டிக்கிட்டு
“ராயரு வாயா” என்று அழைக்க
“இதோ மாமா” என்றவன் அவர் காண்பித்த இருக்கையில் அமர்ந்தான். அக்கா வைத்து ஊற வைத்திருந்த எண்ணையை மாமா அழுத்தி தேய்த்து விட ராயருக்கு சுகமாய் இருந்தது...
“மாமா உன் கையில என்னமோ இருக்கு, அவ்வளவு சுகமா இருக்கு இவ்வளவு நேரம் இருந்த கலைப்பு பதட்டம் எல்லாம் காணாம போயிடுச்சு..” கண்களை மூடி அவரின் தொடுகையில் லயித்து போனான்.. சிவனாண்டி முகத்தில் அவ்வளவு பெருமை.. விவசாயம் செய்து வைரம் பாய்ந்த கட்டையாய் இருந்தார் அவர்.. தில்லையம்மாவின் கணவர்.. ராயருக்கு சொந்த தாய் மாமா..
சிவகாமிக்கும் நடராஜருக்கும் மூன்று பிள்ளைகள்.. மூத்தவர் தில்லையம்மா.. அவர் பிறந்ததுக்கு அடுத்து வாரிசு பிறக்கவே இல்லை.. ஆண் குழந்தை வேணும் என்று தொடர்ந்து முயன்றதில் கிட்டத்தட்ட பதினைந்து வருடம் கழித்து ராயர் பிறந்தான். அவனுக்கு பிறகு இரண்டாண்டு இடைவேளியில் வனேந்திரன் பிறந்தான்.
தன் தாய் தந்தை இறந்த பிறகு தன்னோடு வசித்து வந்த சொந்த தம்பி சிவனாண்டியை சிவகாமியம்மாள் தன் பதினெட்டு வயதில் இருந்த மகள் தில்லைக்கு மனம் முடித்து வைத்தார். அடுத்த இரண்டு மாதத்திலே சிவகாமியும் நடராஜனும் ஒரு சாலை விபத்தில் இறந்து போக தாய்க்கு தாயாய் தில்லை இருக்க தந்தையாய் தோள் கொடுக்க சிவனாண்டி மாறினார் இரு பிள்ளைகளுக்கும்.
எப்போதுமே ராயரின் மேல் தனி பிடித்தம் தான் சிவனாண்டிக்கு.. ஏன் என்றெல்லாம் சொல்ல தெரியாது.. அவன் பிறந்ததிலிருந்தே அவனை தன் கைகளில் வைத்து வளர்த்தார். தில்லை எல்லோரையும் கவனித்தாலும் சிவனாண்டியின் பார்வை ராயரின் மேல் மட்டும் தான் இருக்கும்..
சிவனுக்கும் தில்லைக்கும் சின்ன வயதிலே திருமணம் ஆகிவிட்டது என்றாலும் இருவருக்கும் இரண்டு வருடம் கழித்தே குழந்தை பிறந்தது.. முதலில் பிறந்தவன் ரவி.. இரண்டாவது பிறந்தவள் மதி.. மூன்றாவது பிறந்தது கந்தன்.. அவன்தான் கடை குட்டி.. பத்தாவது படிக்கிறான்.
கவி கல்லூரி இறுதி ஆண்டு படிக்கிறாள்..
“மாமா வனா பேசுனானா எப்போ வரானாம்”
“நாளைக்கு காலையில இங்க வந்துடுவானாம் யாரும் வர வேணான்னு சொல்லிட்டன். யாரோ நண்பன் வந்து விடுறேன்னு சொல்லி இருக்காங்களாம் அப்படியே ஒரு வாரம் இங்க தான் இருப்பாங்க போல” என்று ஆண்டி சொல்ல
“ஓ சரி மாமா”
“ஏன்யா அடுத்து ஏதாவது வேலை இருக்கா” யோசனையுடன் கேட்டார்.
“இப்போதைக்கு எதுவும் இல்ல மாமா.. அப்படியே இருந்தாலும் கவி பார்த்துக்குவா”
“சரிய்யா.. உங்களையெல்லாம் ஒன்னாவச்சு பார்க்கவே முடிய மாட்டேங்குது அதுதான் வேற ஒன்னுமில்லைய்யா”
“நீ சொல்லி நான் என்னைக்காவது தட்டி கழிச்சுருக்கேனா.. நீ என்ன சொல்றியோ அதை செய்யுறேன் மாமா”
“எனக்கு அது போதும்யா வா குளிக்க வைக்குறேன்” என்று மதி குலைத்து வைத்திருந்த அரைப்பை எடுத்து பூசி தேய்த்து விட்டு குளிக்க வைத்தார் ராயரை..
தலையும் துவட்டி விட ராயருக்கு சுகமாய் கண்களை சொருகியது..
“ராயரு தூங்காதா அடி பட்ட இடத்துக்கு மருந்து பூசி விடுறேன், அக்கா சமச்சி வச்சிருக்கா சாப்பிட்டுட்டு தூங்கு வா” என்று கை பிடியிலே அவனை அழைத்து சென்று மருந்து போட்டுவிட்டு தலை வாழை இலை விரித்து அவரே அருகில் இருந்து பரிமாறினார்.
ரவியை தில்லையம்மா குளிக்க வைத்து விட்டு காயங்களுக்கு மருந்து பூசிவிட்டு அவனை சாப்பிட அமர வைத்து விட்டு, எல்லா வகைகளையும் மதுவும் தில்லையம்மாவும் எடுத்து வைக்க சிவனாண்டி ரவிக்கும் பரிமாறினார்.
கண்கள் சொக்க இருவரும் வீட்டின் பின் புறத்தில் இருந்த வேப்ப மரத்தின் நிழலில் கயிறு கட்டிலில் படுத்து தூங்க தொடங்கினர்.
கவியையும் சாப்பிட வைத்து அவளிடம் என்ன நடந்தது என்று கேட்க அவள் நடந்ததை சொல்ல எப்பொழுதும் போல தன் பசங்களை எண்ணி மீசையை முறுக்கி கொண்டார் சிவனாண்டி..
சும்மாவா ‘KVR வழக்கறிஞர்’ ன்னு வாசல்ல போர்டு மாட்டியிருக்கிறாரே.. ராயர் எப்போ வக்கீல் படிப்பை முடித்தானோ அப்பவே போர்டை தாயர் செய்து வீட்டின் முன்னிலையில் மாட்டிவிட்டார்.
ரவியை ராயருக்கு துணையாய் வழக்கறிஞர் பாடத்தை எடுக்க சொல்லி வற்புறத்தி சேர்த்துவிட்டு இன்று அவனிடமே ஜூனியராய் சேர வைத்தார்கள் தில்லையும், சிவனும்..
ரவி வெளியில் தான் பிடிக்காத மாதிரி காட்டிக்குவான்.. அவன் பன்னிரண்டாவது வகுப்பு சேரும்போதே கண் முன் உதாரணமாய் இருந்த ராயாரை கண்டு அவனது மனதில் சட்டம் தான் படிக்கணும்னு முடிவெடுத்துவிட்டான்..
ராயரின் வலது கை இடது கை எல்லாமே ரவி தான். ராயரின் பதினெட்டாவது வயதில் சரியாய் கல்லூரி சேரும் நேரம் வீட்டில் அவ்வளவு கஷ்டம்.. வருவோருக்கு இல்லை என்று சொல்லாமல் வாரிவழங்கிய குடும்பம் அவர்களுடையது.. அது இப்போதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது..
தொடர்ந்து இருவருடம் மழை பொழியாமல் போட்ட விதை யாவும் நெத்தாய் பதராய் போக வருகிறவர்களுக்கு பொன்னை வைக்கும் இடத்தில் பூவை வைத்து சமாளித்தார்கள்.. கோவில் கொடை.. தினமும் இல்லை என்று சொல்லும் அளவு குறைந்தது அம்பது பேருக்கு அன்னதானம்,
உறவு கூட்டம்.. கல்யாணம் வைப்பவர்களுக்கு சீர் தட்டு, கூலி ஆட்களின் குடும்பங்களுக்கு செய்ய வேண்டிய முறைகள், கூடவே ஐந்து பேருக்கும் உயர் தரமான கல்விக்கான கட்டணம் என்று தில்லையும் சிவனும் திணறி போக, ராயர் கொஞ்சமும் யோசிக்காமல் “நான் வேலைக்கு போறேன் மாமா” என்றவன் வேலைக்கு போக ஆரம்பித்தான்.
இந்த வயசுல என்ன வேலைக்கு போவ அதெல்லாம் வேணாம் என்று தடுக்க “என்னால முடியும் மாமா” என்றவன் பதினைந்து நாள் ஊரை சுற்றி வந்தான் எதில சேரலாம் என்று.. உள்ளூரில் வேலை பார்த்தால் அதிக பணம் வராது என்று கணக்கு பண்ணியவன் லாரியில் சென்றால் அதிக பணம் வரும் என்று அதிலே செல்ல முடிவெடுத்தான். அதை வீட்டில் சொல்லிய போது முடியவே முடியாது என்று அனைவரும் தடுக்க
“இப்போ இருக்க நிலமையில யாரவது சம்பாரிச்சு தான் ஆகணும் மாமா, நீங்க வெளில போனா இவங்க சிராம படுவாங்க, கூடவே அக்காவும் மதியும் இருக்காங்க அவங்க பாதுகாப்பு ரொம்ப முக்கியம். அதனால நீங்க இங்க இருங்க நான் போறேன்” என்றான் உறுதியாக.
“உன் படிப்புடா” மாமா ஆற்றமையாக கேட்க
“கண்டிப்பா சேருவேன் இப்போ இல்ல மூணு வருஷம் கழிச்சு” என்றவன் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த ஓட்டுனர் உரிமமும், தங்களது காரை ஓட்டிய பழக்கமும் இப்போது அவனுக்கு பயன் பட உடனடியாக சென்று விட்டான்.
அவனை அனுப்ப யாருக்கும் மனமே இல்லை ஆனால் வீட்டு சூழ்நிலைக்கு யாரவது ஒருவர் வேலைக்கு சென்றே ஆகவேண்டிய நிலை..
ராயரின் இந்த முடிவு சிவனுக்கும் தில்லைக்கும் பெரும் வருத்தத்தை குடுத்தது. படிக்க வேண்டிய வயசில் பாரம் சுமகிறானே என்று..
வண்டிக்கு சென்றவன் முதலில் இரு மாதம் மட்டுமே உதவியாளராக இருந்தான். பிறகு அவன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து வண்டியை லாவகமாக கையால அதுவும் அவன் சொல்பேச்சை கேட்டது..
ஒருவருடம் சாதாரண வண்டியை ஒட்டியவன் அதன் பிறகு கனரக வாகனத்தை ஓடுவதற்கு தனி உரிமம் வாங்கி அந்த வண்டியயை ஓட்ட ஆரம்பித்தான். சாதாரன வண்டியில் செல்லும் போது சம்பலம் சற்று குறைவு தான்.. அதுவும் லோடு எடுத்தாள் கிட்ட தட்ட பதினைந்து நாள் ஆகும் அதை இறக்க.
அந்த நாட்களில் தங்க இடம் இல்லாமல் குளிக்க வசதியில்லாமல் பெரும் கஷ்டம் தான். ஆனாலும் முழுதாய் முப்பது ஆயிரம் வருமே.. மாதம் இருமுறை லோடு எடுக்க செல்வான். அப்போ சம்பளம் அவனுக்கு அறுபது ஆயிரம் கூடவே படி காசு என்று தருவார்கள் அது அன்றாட பொழுதுக்கான செலவுக்கு குடுக்க,
இவன் அதுலயும் சிக்கனம் செய்து வீட்டுக்கு தேவையான பொருள் பிள்ளைகளுக்கு உண்பதற்கு தீனி என்று வாங்கிகொண்டு செல்வான். மாதம் ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வருவான் அதுவும் பணத்தை குடுப்பதற்க்காக மட்டுமே அவனது வருகை இருக்கும்.
கனரக வாகனம் ஓட்டும் போது அவனது சம்பளம் ஐம்பது ஆயிரம் ஒரு லோடுக்கு.. இதே போலவே மாதம் இரு லோடு எடுப்பான். இதுவும் லோடு இறக்க பதினைந்து நாள் ஆகும்.. கிட்ட சவாரி எல்லாம் இவன் எடுக்க மாட்டான்.
எல்லாமே தொலை தூர பயணம் மட்டுமே எடுப்பான். கிட்டது போனாள் அவ்வளவு கூலி கிடையாது என்ற காரணத்தால் தன் சுக துக்கத்தை ஒதுக்கிவிட்டு மூணு ஆண்டு காலம் ஓடினான்.
இவன் வீட்டுக்கு வரும் நாட்களில் தில்லை சமையலில் எல்லாத்தையும் செஞ்சு வைத்திருப்பார். அவன் கடிந்து கொள்ளுவான் இதை வச்சு வேற ஏதாவது பண்ணு இப்போ இது ரொம்ப அவசியமா நான் போற வழி முழுக்க அசைவம் தான் சாப்பிடுறேன் நீ புள்ளைங்களுக்கு ஆக்கி போடுக்கா என்பான்.
ஆனால் தில்லை கேட்கவே மாட்டாள். சிவன் ராயருக்கு கை கால் அழுத்திவிட
“ச்சு என்ன மாமா நீ போயி என்ற காலை தொட்டுகிட்டு விடு மாமா” என்று அவரை தடுப்பான்.
“இருக்கட்டும் கண்ணு நீ படு அங்கன தூங்கியிருக்கவே மாட்ட இங்கன கொஞ்சம் கண்ணு மூடு” என்று அவனை சட்டை செய்யாமல் அவனுக்கு பணிவிடை செய்வார். சின்ன வயதிலிருந்தே ராயருக்கு எல்லாமே செய்தவர் என்பதால் அது அவருக்கு தவறாய் படவில்லை. உழைத்து கலைத்து வரும் தன் மகனுக்கு சேவை செய்வதை விட வேறு என்ன சோலி என்று எண்ணுபவர் அவர்.
அத்தியாயம் 3
மாமன் மச்சான் என்ற உறவை தாண்டி இருவரும் மனதால் நெருங்கி இருந்தார்கள். சிவனுக்கு ஒன்று என்றாள் துடித்து போய்விடுவான் ராயர். அவன் மனதில் நினைக்கும் ஒன்றை சிவன் செயல் வடிவிலே செய்து முடித்து விடுவார். இருவரின் நெருக்கமும் அப்படி இருந்தது.
தவறிய மழை பின்பு வெளுத்து வாங்க பூமி செழித்து விவசாயிகளின் மனம் குளிர, போட்ட விதையை செழிப்புடன் ஆக்கி பல மடங்கு திருப்பி குடுத்தது.
ராயரின் வீட்டில் முன்பிருந்த நிலை திரும்ப ராயரை வீட்டிற்கு வர சொல்ல
“இல்ல இப்போ வந்தா சரியிருக்காது, நான் ஒரு யோசனை வச்சிருக்கிறேன் அதுக்கு உயிர் கொடுத்துட்டு வரேன்” என்று மறுத்து விட்டு மூன்று வருடம் ஓடினான்..
விவசாயம் செய்ய முடிந்ததால் ராயரின் பணம் தேவை படாமல் போக மிக பெரிய தொகை கை வசம் இருந்தது. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு திரும்பி வந்தான். வந்தவன் அந்த பணத்தோடு வங்கியில் கடன் வாங்கி இரு பெரிய லாரிகளை வாங்கி போட்டான்.
“எதுக்குடா இப்போ இது”
“அக்கா விவசாயத்தை நம்பி மட்டுமே இனி இருக்க முடியாது, அது தவறி போச்சுன்னா முன்ன மாதிரி என்ன செய்யிறதுன்னு முழிக்க கூடாது இல்லையா அதுக்கு தான். இந்த ஏற்பாடு.
என்னோட வேலை செய்ற நாலு பேரை கூப்பிட்டு இருக்கேன். கூடவே நம்ம ஊர்லருக்குற ரெண்டு பேரையும் சேர்த்துருக்கேன். ஆறுபேரும் மாத்தி மாத்தி வண்டி ஓட்டுவாங்க லோடு விசயத்தை நான் பார்த்துக்குறேன். ஒரு நிரந்தர வருமானம் நமக்கு வேணும்கா”
“சரியா வருமா ராயரு”
“அதெல்லாம் சரியாவரும் நீ போய் வண்டிக்கு பூஜை போட நம்ம அய்யருகிட்ட சொல்லிட்டு வா” என்று அவரை அனுப்பி விட்டு சிவன் ராயரிடம் தான் சேர்த்து வைத்திருந்த ஒரு தொகையை தர
“மாமா நான் பார்த்துக்குறேன் நீ இதை மத்த செலவுக்கு வச்சுக்க” அவரிடமே திருப்பித்தர
சிவன் எதுவும் பேசாமல் அவனையே பார்க்க
“நீ அடங்க மாட்டியே குடு” என்று வாங்கிகொண்டான். சிவனின் முகத்தில் அதன் பிறகே மலர்வு வந்தது.
இரண்டு லாரியில் ஆரம்பித்த அவர்களது நிலை ஒன்பது வருடத்தில் பல லாரிகளையும், பேருந்துக்களையும் வேன்களையும் கொண்டு ஒரு மிக பெரிய ட்ரான்ஸ்போர்ட் நிறுவனமாய் மாறியது.
அதில் எப்போதுமே சிவனுக்கு பெருமை தான்.
சட்டம் படித்து விட்டு முறையாய் சிறந்த வழக்கறிங்கரிடம் உதவி வழக்கறிங்கராக பணி செய்தவன் பின்பு அவரே இவனின் திறமையை கண்டு இனி நீ தனியாவே நடத்தலாம் என்று புன்னயுடன் கூறி அவனை ஒரு சிறந்த வக்கீலாய் உலகம் காண செய்தார்.
அதற்குள் ரவியும் சட்டம் படித்து விட்டு தன் மாமனிடமே உதவிக்கு வந்துவிட்டான்.
வனேந்திரன் கணிணி மென்பொருளியல் படித்துவிட்டு கல்லூரியில் வந்த வேலை வாய்ப்பிலே தேர்வாகி வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றான்.
வருடம் இருமுறை வந்து செல்வான். இந்த முறை நிரந்தரமாய் வந்து இங்கவே தொழில் தொடங்கலாம் என்று நினைத்தான். அவன் வரும் முன்னவே சிவனும் ராயரும் அவனுக்குரிய கட்டிடத்தை தயார் செய்து வைத்திருந்தார்கள்.
ராயர் சின்ன வயதிலே உழைக்க ஆரம்பித்ததில் வீட்டில் இருந்த அத்தனை பேருக்கும் அவனிடம் தன்னையறியாமலே ஒரு மரியாதை வந்திருந்தது.
வனாக்கும் அப்படியே.. தன்னை விட இரண்டு வயது தான் மூத்தவர் இருந்தாலும் அவரின் உழைப்பு, கஷ்டபட்ட காலங்களில் அவர் மட்டும் வேலைக்கு போகாமல் இருந்திருந்தால் இப்படி பட்ட வாழ்க்கை கிடைச்சிருக்குமா என்ற பிரம்மிப்பு எப்போதும் ராயரின் மேல் இருக்கும்.. அது தன்னை போலவே ஒரு மரியாதை ராயரின் மீது வந்துவிட்டது.
அது அவன் நினைத்தாலும் மாற்ற முடியாது. ரவி அதற்க்கு முற்றிலும் எதிர் பதம்.. டேய் மாமா.. வாடா மாமா.. அதுவும் ராயன் கேசில் வெற்றிபெற்று விட்டான் என்றாள் மாமு ஒரு முத்தம் குடு என்பான்.. அவனிடம் அடித்து விளையாடுவது, அவன் ஏதாவது திட்டும்போது கூட ‘ஈஈஈ’ என்று பல்லை காண்பித்துக்கொண்டு நிற்பான்.
திட்ட வந்தவன் இவனது இளித்த முகத்தை கண்டு எங்கிருந்து திட்டுவது தலையில் அடித்துக்கொண்டு அவன்தான் அங்கிருந்து நகர்வான்.
..
அடுத்த நாள் காலையில் வனாவை அழைத்துக்கொண்டு வருவதற்காக ராயர் வண்டியை எடுத்துக்கொண்டு போக
“யோவ் நில்லுயா” என்றபடி அடித்து பிடித்துக்கொண்டு வந்தான் ரவி.
“டேய் நான் தான் நீ வர வேணான்னு சொன்னேன்ல பொறவெதுக்குடா வந்த”
“ம்கும் ஆசைதான் எனக்கு.. உன் அக்கா தான் என் தங்க கம்பிக்கு ஒன்னும் தெரியாது நீ கூட போன்னு அடுச்சு எழுப்பி துரத்திவிட்டுச்சு” என்றவன் அவனின் பக்கத்து இருக்கையை நன்றாக சாய்த்து விட்டு காலை இரண்டையும் தூக்கி இருக்கையில் வைத்து குரங்கு குட்டி போல தூங்க ஆரம்பிக்க அவனை எட்டி ஒரு உதை விட்டான் ராயர்.
“டேய் ட்ரைவர் மாமா ஏண்டா இப்படி பண்ற தூக்கம் வருதுடா.. வீட்டுல இருந்தா தில்லையோட தொல்லை. வெளில வந்த உன் தொல்லை என்னை நிம்மதியாவே இருக்க விட மாட்டிங்களாடா அக்காவும் தம்பியும்” என்று கத்த
“செருப்பு பிஞ்சுடும் நாயே, நான் உன்னை கூப்பிட்டனா என்னோட வர சொல்லி, சரி அப்படியே வந்துட்ட வந்தவன் என்னோட பேசிகிட்டு வர வேண்டியதுதானேடா பக்கி தூங்கிட்டு வர, எனக்கு கார்ல தூங்குனா புடிக்காதுன்னு உனக்கு தெரியாதடா” இவன் எரிந்து விழ
“டேய் மாமா என்னை ஒரு ஓரமா தள்ளிவிட்டுட்டு போ, சின்னவன பிக்கப் பண்ணிட்டு வரும்போது திரும்ப என்னை அள்ளி போட்டுட்டு போடா தூக்கமா வருது ப்ளீஸ் மாமா” கெஞ்ச
“கார்ல ஏறுனதுக்கு பிறகு இறக்கி எல்லாம் விட முடியாது, நீ என்கிட்டே பேசிகிட்டே வா”
“டேய் உனக்கு கொஞ்சமாச்சும் மனசாட்சியே இல்லையாடா மாமா.. நைட்டும் என்னை தூங்க விடல இப்பவும் தூங்க விடல நீ உன் மனசுல என்னதான் நினைச்சுகிட்டு இருக்க” கொதித்து எழுந்தான்.
எழுந்தவனை மீண்டும் ஒரு உதை விட்டவன் “கருமம் புடுச்சவனே விஷயம் தெரியாதவன் கேட்டான்னு வைய்யி நம்ம ரெண்டு பேத்தோட மானம் போகும்டா நாயே..”
“ஆங் அப்படி என்ன சொல்லிட்டேன் நம்ம மானம் போற அளவுக்கு”
“நைட்டெல்லாம் தூங்க விடலன்னு, பொறவு இப்பவும் தூங்கவிடலன்னு சொல்றியே அது போதாதா” என்று எரிந்து விழ
“நீ ஏண்டா மாமா தவறான கண்ணோட்டத்துல பார்க்குற, என் பார்வையில இருந்து பாரு எதுவும் தவறா தெரியாது” என்று விளக்கம் சொன்னவனை கொலைவெறியுடன் நோக்கினான்.
“ஆக்சுவலி நான் என்ன சொல்ல வந்தேன்னா”
“நீ ஒன்னதத்தையும் விளக்க வேணாம் மரியாதையா வாய் மூடிட்டு உட்காரு”
“ம்ஹும் வாய மூடுனனா தூக்கம் வரும் பரவலையா”
“சனியன தூக்கி காருக்குள்ள போட்டது தப்பா போச்சு, ஏண்டா உசுர வாங்குற”
“எது நான் உசுர வாங்குரனா.. ஹலோ ஆபிசர் நல்லா குப்புருக்க அடுச்சு அலியபட்டோட டூயட் ஆடிகிட்டு இருந்தவனை நெஞ்சுல அடிக்காம, வீரமில்லாம முதுகுல அடுச்சு எழுப்பி விட்டுட்டு ஒரு காபி தண்ணி கூட குடுக்காம வெளிய தொரத்தி விட்டுச்சு உன் அக்கா..
சரி நானும் உசுர பணயம் வச்சு ஓடுற காருல ஸ்லிப் ஆகமா ஏறி பத்திரமா குந்துனா நீங்க என்னை காலால எட்டி உதைக்கிறீங்க, அதையும் பரவாலன்னு பொறுத்து போனா தூங்க வேணாமுன்னு சொல்றீங்க.. சரி நாம தூங்குனா ஆபிசருக்கும் தூக்கம் வருமேன்னு வந்த தூக்கத்தை அப்படியே துரத்தி அடிச்சுட்டு கொட்ட கொட்ட முழுசுகிட்டு பேசிக்கிட்டு வந்தா சனியனேன்னு மனசுல கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம என்னை பார்த்து சொல்றீங்க” என்று அவன் பாட்டுக்கு புலம்ப அவனை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல்
“சரிவா“ என்று ராயர் காரை விட்டு கீழே இறங்க
“இங்க எதுக்கு காரை நிறுத்துறீங்க ஆபிசர்”
“இதுக்கு மேல போனா போலீஸ் புடிக்கும் அதனாலதாண்டா எரும” பல்லைகடித்தான்.
“என்ன மாமு சொல்ற”
“கண்ண தொறந்து பாருடா முதல்ல”
கண்ணை திறந்து பார்த்தவனுக்கு ஒன்னும் தெரியவில்லை.. பின் கண்களை நன்றாக தேய்த்து விட்டு பார்க்க திருச்சி விமான நிலையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற வாசகம் கண்களில் பட பயத்துடன் ராயரை பார்த்தான் ரவி..
“மாமு”
“மரியாதையா வாய தொறக்காம வந்து சேறு, வீட்டுக்கு வா வந்து கும்முறேன். தூங்காதன்னு சொன்னா நல்லா குறட்டை விட்டு தூங்கிகிட்டா வர.. இல்லன்னா பொலம்பிகிட்டே வர” என்று கடித்துவிட்டு முன்னாள் போக
“யோவ் தனியா விட்டுட்டு போகாதயா எவனாவது அறிய வகை உயிரினம்னு கூட்டிட்டு போய்ட போறானுங்க” கத்திய படி அவனின் பின்னால் போக ராயரின் முகத்தில் சிரிப்பு வந்தது.
“மாமு இப்போ நீ சிருச்ச தானே..” என்று கேட்டவனை மூக்கு விடைக்க முறைத்தவன் பதில் சொல்லாமல் முன்னால் நடக்க
அவனை எட்டி பிடிக்க ரவி வேகமாய் நடக்க, அதைவிட வேகமாக ராயர் நடக்க
“யோவ் மாமு நில்லுயா”
“முடுஞ்சா என்னை புடுச்சுக்கோடா” என்றவன் வேகமாய் நடந்து போக
“உன்னயெல்லாம்” என்றவன் வேகமாய் ஓடி போய் அவனை பிடிக்க ராயர் அவன் எதிர் பார சமயம் அவன் அருகில் வந்ததும் அவனது காலை இடறிவிட அதில் தொப்பென்று கீழே விழுந்தான்.
கீழே கிடந்தவனை நக்கலாய் பார்த்துவிட்டு ராயர் நடக்க
“அடேய் யார கீழ தள்ளிவிட்டுட்டு போறன்னு தெரியுமா... ஒரு சிங்கத்த அதுவும் ஆண் சிங்கத்த இரு வரேன்” என்றவன் தன்னை கேலியாக பார்த்த யாரையும் கண்டுக்கொள்ளாமல் முன்பை விட வேகமாய் ஓடி போய் ராயரின் முதுகில் ஏறி தொத்திக்கொண்டு அவனை இரு கால்களாலும் இரு கைகளாலும் இறுக்கி கட்டிக்கொண்டான்.
“டேய் இது ஏர்போர்ட்டுடா”
“நான் மட்டும் என்ன மாட்டு சந்தையினா சொன்னேன்” என்றவன் ராயரின் முதுகில் இன்னும் நன்றாக தொத்திக்கொண்டு சவுகாரியமாய் அமர்ந்தவன்
“என்ன மாமு நீ இவ்ளோ மெதுவா நடக்குற.. ஆம்பள சிங்கம் நீ நொண்டி அடுச்சுகிட்டு நடக்குற வேகமா போ சின்னவன் கிளம்பி வீட்டுக்கே போயிட போறான்” நக்கல் அடிக்க
“ஒரு நாளைக்கு பத்து முறை தின்னுட்டு எரும கணக்கா இருக்கடா பக்கி, மரியாதையா கீழ இறங்கு பொணம் கணம் கணக்குரடா. நேரா இருந்த முதுகு தண்டு வளஞ்சுகிச்சு உன்னால”
“போ மாமா நீ தானே சொன்ன நான் உன்னை உப்பு மூட்டை தூக்குறேன்னு, இப்போ இப்படியா பேச்சை மாத்துவ”
“சண்டாள பாவி நீயெல்லாம் நல்லா வருவடா, நான் எப்போ டா சொன்னேன்”
“நீ மறந்துட்ட மாமா ஆனா எனக்கு ஞாபகம் இருக்கு”
“உனக்கு தானே நல்லா இருக்குமே” என்றவன் முன்புறம் இருந்த அவனின் கையை பிடித்து கடித்து வைக்க
“ஆஆ” என்று அலறி அடித்துக்கொண்டு ராயரின் முதுகிலிருந்து தொப்பென்று கீழே குதித்தான்.
“யோவ் அதுதான் எனக்கு கூட இல்லாம் உன் அக்கா உனக்கு வகை தொகையா ஆடு, கோழி, மீனு, முட்டை, நண்டு, காடை, கவுதாரின்னு நல்லா ஆக்கி போடுதே பொரவெதுக்குயா என்னை கடுச்சு வைக்குற”
“ம்ம் நீ எப்படி இருப்பன்னு எனக்கு தெரியாதுல்ல அதுதான் உன்னயும் கொஞ்சம் டேஸ்ட் பண்ணி பார்க்கலாம்னு” என்றான்.
“ம்ம் டேஸ்ட் பண்ணி பார்க்க நான் ஒன்னும் திங்குற பொருள் கிடையாது”
“ம்ம் அப்படியா பட் நான் சாப்டதுலையே நீதான் செம்ம டேஸ்ட்..” என்று நக்கல் பண்ண
“போயா யோவ் வந்திடும் நல்லா வாயில”
“கைய குடு” என்று வாழ்த்து தெரிவிக்க
“எதுக்கு”
“நீ மாசமா இருக்கல்ல அதுக்கு தான்”
ராயரை ஒரு முறை முறைத்தவன் பின் சிரித்து “நான் மாசமானா அதுக்கு காரணம் நீதான்னு இந்த உலகத்துக்கே தெரியும், நீ தான் என்னை நிமிஷம் கூட விட மாட்டிக்கிற.. படுக்க போனா நீயும் வந்து பக்கத்துல படுத்துக்குற, ஒரே கெணத்துல குளிக்கிறோம். எங்க போனாலும் என்னையும் இழுத்துகிட்டு போற” என்று அவன் செய்வதை ராயர் செய்வது போல சொல்ல
“இந்த வாயி மட்டும் இல்லனா நீ எல்லாம் பொலைக்கவே முடியாதுடா”
“ஹலோ வக்கீலுக்கு வாய் ரொம்ப முக்கியம் அதோட என் கேர்ல் பிரண்டுக்கு முத்தம் குடுக்கணும்.. உன்கிட்ட உழைக்கிறத விட அங்க தான் ஹெவியா உழைக்கிறேன் அதனால எனக்கு என் வாய் ரொம்ப முக்கியம்” என்று சொன்னவனை முறைத்தான்.
“உனக்கு தான் லிப்லாக் பத்தியெல்லாம் ஒண்ணுமே தெரியாதே..” என்று அவன் மேலும் நக்கல் பண்ண
ராயர் எதுவும் பேசவில்லை.
“ன்னா மாமா சைலன்ட் ஆகிட்ட எதுவும் ஞாபகத்துக்கு வந்துச்சா. இல்லையே அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லையே நீ தான் சாமியாராச்சே.. ஒரு வேல மடம் தொறந்ததுக்கு பிறகுதான் இதுக்கெல்லாம் ட்ரைனிங் எடுப்பியோ.. அப்போ கூட நீ என்கிட்டே வா நான் இலவசமாவே உனக்கு சொல்லி தரேன்..” என்று அதுக்கும் அவன் நக்கல் பண்ண
“உன்னயெல்லாம் பேச விட்டு பார்த்துகிட்டு இருக்கேன்ல என்னை சொல்லனும்டா பரதேசி” என்றவன் இடம் பொருள் ஏவல் என்று எதுவும் பார்க்காமல் வச்சு குமுறு குமுறுன்னு குமுற ரவியின் நிலைமை பரிதாபமாய் இருந்தது..
தலை களைந்து போட்டிருந்த சட்டை கசங்கி, பாக்கெட் ஒரு பக்கம் கிழிஞ்சி தொங்கிகிட்டு இருக்க, செருப்பு ஒன்னு பிஞ்சு போய், போட்டிருந்த பேன்ட் இடுப்பை விட்டு சற்றே கீழிறங்கி பார்க்க கந்தர கோலமாய் காட்சி அளித்தான்.
“மாமு”
“என்ன” கையில் போட்டிருந்த காப்பை இன்னும் மேல உயர்த்தி உறும
“ஹிஹிஹி ஒன்னும் இல்ல மாமா, காலையில காபி கூட குடிக்காம வந்துட்டனா அதுதான். ஒரு காபி கிடைக்குமா ரொம்ப டயர்டா இருக்கு மாமு” பச்சை பிள்ளை போல முகத்தை வைத்துக்கொண்டு கேட்க சிரிப்பு வரவா என்று இருக்க பல்லை கடித்து அதை அடக்கியவன் காபி ஸ்டாலை நோக்கி நகர்ந்தான்.
“ச்ச இந்தாளால என் இமேஜே போய்டுச்சு” என்று தலையை சரிசெய்தவன், இடுப்பிலிருந்த பேண்டை தூக்கி விட்டு பெல்டை போட்டு இருக்கியவன் தன்னை சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களை பார்த்தவன் ‘ஈஈஈ’ என்று இளித்து “சும்மா நாங்க இப்படி தான் அடிச்சு விளையாடுவோம், யூ கேரி ஆன்” என்று சமாளித்துவிட்டு ராயர் போன திசையில் ஓடினான்.
அவர்களை புகை படம் எடுத்துக்கொண்டிருந்த பத்திரிகையாளர் “இதை போய் நம்ம பத்திரிக்கையில் போட்டா செம்மையா விற்பனை ஆகும்” என்று எண்ணிய படி நகர அவரின் பாதையை அடைத்த படி இரு குண்டர்கள் வந்து நிற்க பயமானது அவருக்கு.
“யாரு நீங்க”
“நாங்க யார இருந்தா உனக்கென்ன, முதல்ல உன் கேமராவை குடு” என்றவர்கள் அவர் குடுக்கும் முன்னவே பறித்து அவர் எடுத்திருந்த காட்ச்சிகளை அளித்துவிட்டு அவரிடமே தூக்கி போட்டுவிட்டு
“உனக்கு எத்தனை முறை சொன்னாலும் நீ கேக்கவே மாட்டியா, KVR சார எதுக்கு பாலோ பண்ற.. இன்னொரு முறை உன்னை அவர் பின்னாடி பார்த்தேன் அங்கவே நீ செத்த” புரியுதா ஒழுங்கா ஓடி போய்டு” என்று மிரட்ட அவர் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டார்.
செக்கிங் முடிந்து வெளியே வந்த வனேந்திரன் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தான். தான் வர வேண்டாம் என்று சொன்னாலும் கேக்காமல் அண்ணா வந்திருப்பார் என்று அவனுக்கு தெரியும். அதனால் நண்பனின் வண்டியை வர வேணாம் என்று சொல்லிவிட்டான். நம்பிக்கையாக சுற்றிலும் பார்க்க அங்கே ரவியோடு சிரித்து பேசியபடி நின்றுக்கொண்டிருந்தான் ராயர். புன்னகையோடு தன் அண்ணனை நோக்கி வந்து அவனை கட்டிக்கொள்ள
“வாடா” என்று வரவேற்று தானும் தன் தமயனை இருக்க கட்டிகொண்டான்.
ரவியும் இடையில் வந்து பூர இரு மலைகளுக்கு இடையில் மாட்டிக்கொண்டால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது ரவிக்கு.
“டேய் யப்பா வந்தவுடன் ஆரம்பிச்சுடாதீங்கடா என்னை பொறவு வச்சு செஞ்சுக்கலாம் நான் எங்கேயும் போக மாட்டேன். உங்க கூட தான் இருப்பேன் இப்போ என்னை விடுங்கடா” என்று நசிந்து போனவன் அலற
புன்னகையுடன் அவனை விட்டனர் இருவரும்.
“ஆளு பலே கில்லாடி தான்.. என்ன உடம்பு தான் கொஞ்சம் வீக்கு, அதுவும் முட்டி போடுறது சாரால முடியாத காரியம்” என்று டபுள் மீனிங்கில் அவனை நக்கல் பண்ண
“ஆமா இவரு கூட இருந்து பாத்தாரு” ரவி பல்லை கடிக்க இருவரது பேச்சையும் கேட்டு சிரித்த வனா தன் அருகில் நின்ற பெண்ணை ராயருக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
“இது என் பிரண்ட் திகம்பரி”
திகம்பரி ராயரை நோக்கி கைகுடுக்க ராயர் அவளை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தவன் இரு கரம் குவித்து “வணக்கம்” என்று சொல்ல அவளின் முகம் சிவந்து விட்டது அவமானத்தில்.
“ஹிஹிஹி எங்க மாமு ஒரு சாமியாருங்க. பொண்ணுங்களை தொட்டு பேசமாட்டாரு, ஏன் பார்க்க கூட மாட்டாரு, நான் ரவி” என்று விளக்கமாய் ராயரை வாரிவிட்டு, தன்னை அறிமுக படுத்திக்கொள்ள தன் கைகளை திகம்பரி நோக்கி நீட்டியவனை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அவளின் பார்வை ராயரை நோக்கி மட்டுமே இருந்தது.
அத்தியாயம் 4
ராயரோ எதையும் கண்டுகொள்ளாமல் சுற்றிலும் வேடிக்கை பார்க்க திகம்பரி பல்லை கடித்தாள்.
தன் முன் ஒரு கரம் நீண்ட நேரம் நீட்டப்பட்டு இருந்ததை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் தன் பைகளை கையில் எடுத்தவள்
“போலாமா” என்று வனாவை பார்த்து கேட்க வனா ராயரை பார்க்க அவன் தலையசைத்து சம்மதம் சொல்லிவிட்டு ரவியை பார்த்தான்.
அவனோ நீட்டிய கைகளை மடக்காமல் அப்படியே நிற்க அவனின் காதோரம் வந்து “தொப்பி தொப்பி” என்று கூற அதில் காண்டானவன்
“நீ செத்தடி மாமா” என்று அவனை அடிக்க வர அவனது நோக்கம் புரிந்தவன் ஓட அவனும் பின்னாடியே தொரத்த இருவரும் ஓடிபிடித்து விளையாடியபடியே கார் பார்கிங் வந்துவிட்டனர்.
“மாப்பு செம்மையா மண்ணை கவ்வுனியா”
“மாமா வேணாம் நான் அழுதுருவேன்”
“அழுடா செல்லம், அழுதா கண்ணுக்கு அவ்வளவு நல்லதாம் அதனால அழு”
“யோவ் ஒரு சின்ன புள்ளைய அழ சொல்லி வேடிக்கை பார்க்குறியா நீயெல்லாம் நல்லா இருப்பியா.. இன்னைக்கு வைக்குற கறிகுலம்புல ஒனக்கு ஒரு பீஸ் குட கிடைக்காது இந்தா பிடி என் சாபம்” என்று முனிவர் போல பிடி சாபம் கொடுக்க
“ஹஹஹா எனக்கு எங்க அக்கா இருக்குற வரை கவலையே இல்லடா.. படவா”
“முதல்ல உங்க அக்காவ நாடு கடத்தணும்டா மாமா” என்றான் கோவமாக
“அப்பவும் எனக்கு என்ற மதி இருக்கா.. அவ என்னை பார்த்துக்குவா” என்று சொல்ல வனாவும் திகம்பரியும் வந்தார்கள்.
திகம்பரியின் பார்வை ராயரை முறைக்க அவனோ கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் ரவியின் மீது கைபோட்டுக்கொண்டு அவனை இன்னும் கலாய்த்துக்கொண்டு இருந்தான்.
“வனா போகலாமா” திகம்பரி பல்லை கடிக்க
“அண்ணா”
“போலாம் இருங்க” என்றவன் காரை எடுக்க ரவி சுத்தி வந்து முன் சீட்டில் அமர வர
“நீ போய் பின்னாடி உட்காரு, அப்படியே என் லக்கேஜேயும் எடுத்து வச்சுடு” என்று அவனுக்கு முன்னபே ஏறி அமர்ந்துவிட்டவள் இருக்கையில் நன்றாக சாய்ந்தபடி கண்களை மூடி தூங்க ஆரம்பித்தாள்.
அவளது இந்த செயல் வனாவையும் ரவியையும் திகைக்க செய்ய ராயரோ முக்கிய வேலையாய் போனை நொண்டிக்கொண்டு இருந்தான்.
“இந்த மாமு தெரியாம இப்படி இருக்கா இல்ல தெருஞ்சுகிட்டே ஆக்டிங் குடுக்குதா, கண்டுபிடிப்போம்” என்றவன் வனாவை பார்க்க
“பரி பின்னாடி வா அண்ணாவுக்கு முன்னாடி உட்கார்ந்துகிட்டு தூங்குனா பிடிக்காது..”
“பின்னாடி உட்கார எனக்கு பிடிக்காது வனா, சோ ப்ளீஸ்” என்றாள் கண்களை திறக்காமல்.
ரவி மூவரையும் மாத்தி மாத்தி பார்த்துவிட்டு வேறு வழியில்லாமல் பின்னால் ஏறி அமர்ந்தான்.
சற்று நேரம் கழித்து காரை எடுத்த ராயர் எதுவும் பேசாமல் ஓட்டினான்.
“என்னடா சத்தத்தையே காணம், மறுபடியும் தூங்குறியா” என்று பக்கத்து சீட்டில் திரும்பி பார்க்க அதிர்ந்து போனான்..
அதுவரை அவனையே பார்த்துக்கொண்டிருந்த ரவிக்கு “சாக்க கொற, சாக்க கொற“ வசனம் தான் நினைவுக்கு வந்தது.
“டேய்” என்று கத்த
அருகில் இருந்த வனாவிடம் “பயபுள்ள இப்ப தான் என்னை பார்க்குது” என்று நக்கலாய் முணங்க
அவனது நக்கல் புரியாமல் வனா முழிக்க
“நீயெல்லாம் தலைய நிமிர்த்தாம விடியுற வரை படிக்குற சங்கத்தை சேர்ந்தவன்னு தெருஞ்சும் உன் கிட்ட சொன்னேன் பத்தியா என்னை சொல்லணும், நீயே பயணம் பண்ணி சோர்வா இருப்ப, வா சாமி வந்து தூங்கு வா” என்றவன் அவனை மடியில் படுக்க போட்டு தாலாட்டு பாடாத குறையாய் அவனை தூங்க வைக்க கண்ணாடியில் ரவியை பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு சிரிப்பு வந்தது ராயருக்கு..
இவன் பார்வையில இருந்து மட்டும் தப்பிக்க முடியாது போல என்று எண்ணியவன்
“டேய் உன்னை யாருடா பின்னாடி போய் உட்கார சொன்னா” கோவமாய் இருப்பது போல ரவியை திட்ட
“மாமு ரீல் அறுந்து போய் கால் மணிநேரம் ஆயிடுச்சு.. நீ வேற பிட்ட போடு” என்று கோவமாய் முன் இருக்கையில் இருந்த பரியை பார்த்து கூற
“நீ என்ன வேணாலும் சொல்லிக்க எனக்கு காது கேக்காது” என்ற ரீதியில் அவள் அமர்ந்திருக்க
ரவி தான் பல்லை கடித்தான். “எதுக்காவது அசையுறாலா பாரு.. ஆமா இவள எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே, எங்க பார்த்தேன் இவள, அதுவும் மாமா கூட இவ்வளவு நெருக்கமா” தன் மண்டையை போட்டு பிறாண்டிக்கொண்டு இருக்க
திரும்பி தன் தம்பியை பார்த்தவன் அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை கண்டு
“ஏய் உன்னை யாருடி என் பக்கத்துல வந்து உட்கார சொன்னது” முறைத்துக்கொண்டே கேட்க
“ஏன் உன் பக்கத்துல வந்து உக்காரும்போது நீ கோமாவுல இருந்தியா” பரி நறுக்கென்று கேட்க ரவி மனதுக்குள்ளே “அதுதானே” என்று ‘சபாஸ்’ போட்டான்.
“என்னடி திமுரா என்னையே எதிர்த்து பேசுற”
”நீயென்ன இந்த ஊரு மகாராஜாவா எதிர்த்து பேசாம இருக்க” நக்கலாய் கேட்டவளை கண்டு இன்னமும் முறைத்தான்.
“ஆமா இப்போ எதுக்கு நீ என் வீட்டுக்கு வர”
“அது உன் வீடு மட்டும் இல்ல, வனாவோட வீடும் தான்.”
“இங்கவே ஒரு ஓரமா இறக்கி விடுறன் மரியாதையா நீ உன் விட்டுக்கு போ”
“போக முடியாதுடா, என்னடா பண்ணுவ”
“டான்னு சொண்ணினா பல்லை பேர்த்துடுவேண்டி”
“இந்தாங்க லாயர் சார் என் பல்லை பிடுங்குங்கன்னு காட்டிகிட்டு இருப்பேன் நினைப்பு தான் உனக்கு”
“ஏய் ரொம்ப பேசுரடி, யாருகிட்ட பேசுறன்னு தெரியுமா” ராயர் மீசையை முருக்க அதில் அவளின் இதயம் தொபுக்கடிர்னு அவனிடம் சரணடைய அதை வெளி காண்பித்துக்கொல்லாமல்
“ம்ம் தெரியுமே தி பேமஸ் KVR லாயர் கிட்ட பேசுறேன்னு நல்லாவே தெரியுது” என்றாள் நக்கலாக
“தெருஞ்சும் நீ இவ்வளவு நக்கலா பேசுறன..” என்று முடிக்கும் முன்னவே
“ஹாவ்... “ என்று கொட்டாவி விட்டு
“சாரி சார் தூக்கம் வருது” என்று அவனின் மூக்கை உடைத்துவிட்டு கண்களை மூடிக்கொள்ள ராயர் பல்லை கடித்தான்.
“ஏய் திமுரா, கண்ணை திறடி” உறும
“ப்ச்” என்று அவள் அவனை அலட்ச்சியம் செய்ய அந்த நேரம் வனா அசைய தன் கோவத்தை வண்டியில் காட்ட அது விரைவாய் பறந்து வந்து வீட்டை அடைந்தது...
இருவரையும் பார்த்துகொண்டு வந்த ரவி குழப்பத்துக்கு ஆளானான்.. “அப்போ பரிய ஏற்கனவே மாமுக்கு தெரியுமா? எவ்வளவு உரிமையா பக்கத்துல உட்காருரா. எப்படி சண்டை போடுறா... மாமனை கொஞ்சம் கூட அலட்டிக்காம எதித்து பேசுறா..”
ராயரின் வேகத்தை கண்டு பயப்படாமல் இது எனக்கு பழக்கம் தான் என்கிற தோரணையில் அசால்டாய் அவள் அமர்ந்திருந்த விதம் எல்லாமே அவனுக்கு பலத்த சந்தேகத்தை கொடுத்தது.
‘பார்க்கலாம் ஒரு வாரம் இங்க தானே இருக்க போறா’ என்று முடிவெடுத்தவன் இருவரையும் கண்களில் விளக்கெண்ணையை விட்டுக்கொண்டு உசாராய் அவர்களை கவனிக்க தொடங்கினான்.
--
“மாமா நம்ம கிழக்க காட்டுல வேலை பார்க்குற புண்ணிய கோடி மாடு கேட்டாரே உழவ குடுத்துட்டீங்களா” மத்திய உணவை உண்டுக்கொண்டே கேட்க
“இல்ல ராயரு நாளைக்கு அனுப்பிக்கலாம்னு பார்த்தேன்”
“அப்படியா சரி மாமா, அப்போ நானும் இவனும்” ரவியை காண்பித்து “போயிட்டு உழுதுட்டு வரோம்” என்றான்.
“நீ இருக்குறதே கொஞ்ச நேரம் தான் இதுலயும் நீ வேலை பார்க்கனுமா டா” தில்லை கேட்க
“தில்லை சும்மாவே இருந்தா போரடிக்குது.. நானும் இவனும் போறோம் சாயங்காலமா மாத்திக்க துணியும் சாப்பிட எதுவும் செஞ்சு மதிகிட்ட குடுத்து அனுப்பு”
“டேய் அதுக்கு இல்லடா” என்று மாமா சொல்ல வர
“விடு மாமா பாவம் முடியாதவாறு.. அவர் மட்டுமே உழுவ முடியாது.. டிராக்டர் குடுத்தாலும் மனுஷன் ‘என் பூமியில அது இறங்க கூடாதுன்னு’ இத்தனை வருசமா உறுதியா இருக்குறாரு. அவரோட அந்த உணர்வை நாம மதிக்கனுமுள்ள மாமா.. உடம்பு மத மதப்பா இருக்கு அப்படியே ஒரெட்டு போயிட்டு வரோம்” என்றான்.
“ஏண்டா மாமா போறதுன்னா நீ மட்டும் போவ வேண்டியது தானேடா எதுக்கு டா என்னை கோத்து விடுற..” நொந்து போய் கேட்க
“எனக்கு பொழுது போகனுமுள்ள ராசா அதுதான்.” என்று கண்ணடிக்க
“ஆனா இதெல்லாம் ஓவருடா மாமா” விரலை ஆட்டி அவனை சொல்ல
“டேய் என்னடா மாமா கிட்ட விரலை நீட்டி பேசுற கையை கீழ போடு” தில்லை குரல் கொடுக்க
“இது ஒன்னு அப்போப்போ இடையில பூந்துகிட்டு” முனுமுனுத்தவன் கையை கீழே இறக்க ராயர் அவனை பார்த்து பலிப்பு காண்பிக்க அவன் வெறியானான்.
“என்னால முடியாது நான் எங்கும் போக மாட்டேன்”
“சரி விடு ராயரு அவன் ரொம்ப பண்றான். நான் வரேன் உன் கூட” என்று சிவனாண்டி கூற
“இதெல்லாம் ஒரு பெரிய மனுஷனுக்கு அழகு இல்ல சிவனாண்டி, போகலன்னா போய் தான் ஆகணும், இல்லன்னா அடி போடுவேன்னு சொல்லி மிரட்டணும் அதை விட்டுட்டு இப்படி பொசுக்குன்னு காலை வாரி விட கூடாது” என்று ரவி சொல்ல
“எதுக்குடா உனக்கு இந்த மானம் கெட்ட பொழப்பு”
“ஹிஹிஹி இதெல்லாம் வாழ்கையில ரொம்ப சகஜம் பா, மாமு கெஞ்சும்னு நினைச்சேன் ஆனா அதை செய்ய விடாம நீ இடையில பூந்துட்ட, நீயேன் எப்போ பாரு எனக்கும் மாமனுக்கும் இடையில வந்து நுளைஞ்சுகிட்டே இருக்க, உனக்கு தெரியும் தானே எனக்கும் மாமனுக்கும் இடையில யாரு வந்தாலும் பிடிக்காதுன்னு பொறவெதுக்கு வர, நான் போகலன்னு சொன்னாலும் என் மாமான் என்னை விட்டுட்டு போய்டுமா என்ன” என்று தகப்பனை முறைக்க
“ராசா தெரியாம சொல்லிட்டேன். நீயே உன் மாமன் கூட போ நாங்க யாரும் வரல” பின் வாங்க
“அது” என்று கெத்து காண்பித்தவனை கண்டு “நல்ல வேலைக்கு இவன் பொம்பள பிள்ளையா பொறக்காம போய்ட்டான். இல்லன்னா இப்பவே எனக்கு என் மாமானை கல்யாணம் பண்ணி வையின்னு வயசுக்கு வந்தவுடனே சொல்லியிருப்பான்” முணுமுணுக்க
“இப்பவும் ஒன்னும் கெட்டு போகல மும்பைக்கு போய் ஒரு ஆபிரேசன் பண்ணினா போதும், மாமா என் கை பிடியில” சொன்னவனை கண்டு ‘ஆஆ’ என்று தில்லை வாயை பிளக்க
“அவனாடா நீ” மது அவனை கலாய்க்க
“அடிங்க நக்கலா, மாமா சொன்னதான் அதெல்லாம் இல்லன்னா நான் முழு ஆம்பளை தான்டி” என்றான்.
“ஹ எனக்கு டவுட்டு தான்” மது அவனை சந்தேகமாய் பார்த்து சொல்ல
“செல்லம் எனக்கும் அந்த டவுட்டு இருக்குடி” என்று மதுவோடு ஹைபை கொடுத்த ராயனின் மீது தாவி அவனை கீழே தள்ளி உருட்டி விட்டு இவன் மேலே ஏறி அவனை மொத்த
“மது பார்த்தியா கன்பார்ம் பண்றான்” என்று சிரித்தபடியே அவனை மேலும் கலாய்க்க
“டேய் மாமா வேணாம்”
“நானும் வேன்னான்னு தாண்டி சொல்றேன், நீ தான் கேக்க மாட்டிக்கிற, ஐயோ நான் அப்படி பட்டவான் கிடையாதுடி ரவி” என்று நக்கல் பண்ண
“உன்னை என்ன பண்றேன்னு பாரு டியா சொல்ற..” மேலும் அவனின் மீது வாகாய் அமர்ந்து அவனது தலையை பிடித்து ஆட்டி மாவரைக்க
“ஐயோ விடுடி விடுடி” அப்பவும் அவனை வம்பிழுக்க, ரவி இன்னும் ஆட்ட சுற்றி இருந்தவர்கள் அனைவரும் அவர்களை பார்த்து சிரித்தனர்.
அவர்களையே பார்த்துக்கொண்டிருந்த திகம்பரிக்கு ஏதேதோ நிகழ்வுகள் நினைவில் வர தலையை உலுக்கி கொண்டாள்.
அவளின் மனதில் ராயரின் சேட்டைகள் விரிய இதழிலும் புன்னகை விரிந்தது..
அந்த நேரம் சரியாய் “தனியா சிருச்சா எங்க ஊர்ல பைத்தியம்னு சொல்லுவாங்க” என்று அவளின் அருகில் வந்து கேலியுடன் சொல்ல
“எங்க ஊர்லயும் அது தான் சொல்லுவாங்க.. ஆனா எங்க ஊர்ல இன்னொன்னையும் சேர்த்து சொல்லுவாங்க, ஆம்பள பொறந்ததே பொண்ணுக்காகதானாம்.. அவன் தான் முழு ஆம்பலயாம் மிஸ்டர் ராயர். இப்படி ஆம்பளையோட குடும்பம் நட...” முடிக்கும் முன்னவே
“இதுக்கு முன்னாடி நானு ஒருத்தி கூட குடும்பம் நடத்திகிட்டு இருந்தேன். வேணும்னா நீ அவகிட்ட கேளேன் நான் முழு ஆம்பளையா இல்லையான்னு” அவன் இடம் பார்த்து தாக்க
திகம்பரியின் முகம் சிவந்து போனது..
“முக்கியமா அபார்ட் கூட பண்ணி இருக்கா” கூடுதலாய் தகவல் சொல்ல
“ச்சீ” என்று முகம் சுருக்கி அவ்விடத்தை விட்டு போக
“என்னடி ச்சீ, ஏன் என் கூட குப்ப கொட்டுனது நீ தான்னு மறந்து போச்சா..” அடி குரலில் அவன் ஆவேசமாய் சொல்ல
“ஆமான்னா இப்போ என்ன செய்யிறதா உத்தேசம்” அவள் நக்கலாய் கேட்க
“என்ன செய்யிறதா இருந்தாலும் சத்தியமா உன்னை தொடுற வேலைய மட்டும் வச்சுக்க மாட்டேண்டி” அவன் ஆவேசமாய் சீர
“நானும் நீ வந்து தொடுன்னு சொல்லலையே” தனது நக்கலய் கை விடாமல் அவனை மேலும் உசுப்பேத்தி விட்டுக்கொண்டிருந்தாள் திகம்பரி.
“அதானே உன் வாயில இருந்து அந்த வார்த்தை வராதே... இதுக்காகவே உன்னயெல்லாம் வச்சு செய்யனும்டி, ஒரு நாள் மாட்டாமலா போவ அப்போ இருக்கு உனக்கு” பல்லை கடித்தான் அவளை தொட முடியாமல் இருக்கும் தன்னை நினைத்து.
“உனக்கு அந்த தில் இல்ல மாமா” ஆழ்ந்த குரலில் திகம்பரி சொல்ல,
அதில் சுய உணர்வுக்கு வந்தவன் தான் அவளிடம் பேசிய பேச்சுக்களை எண்ணி தன்னையே திட்டிக்கொண்டான். “மயக்குறா ராட்ச்சசி” பல்லை கடித்தவன்
“எனக்கு அந்த தில்லு இருந்ததை உனக்கு புள்ளய குடுக்கும்போதே தெரியலையா” நக்கலாய் கேட்க
“ஆனா இப்போ இல்லையேடா மாமா”
“டான்னு சொன்னினா கன்னம் பழுத்துடும்டி”
“சரிதான் போடா” என்றவள் நகர்ந்து நின்ருக்கொள்ள அப்போது தான், தான் அவளிடம் மிக நெருக்கமாக நின்றத்தை உணர்ந்தான்.
“ச்சே இவ கிட்ட வந்தா எல்லாத்தையும் மறக்கடிச்சுடுவா பாவி” என்று அவளை திட்டியவன் திரும்ப, ரவி அவனை ஆராய்ச்சியாக பார்த்துக்கொண்டிருந்தான்.
“இவன் வேற” முனங்கியவன்
“என்னடா யோசனையா பார்த்துகிட்டு இருக்க”
“இல்ல புதுசா வந்த புள்ளகிட்ட என்னமோ பேசிகிட்டு இருந்தியே என்ன பேசுன”
“அது ஒரு லூசுடா”
“அது லூசா இல்ல நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்னை லூசாக்குரீங்களா”
”ச்சேச்சே நீ என் தளபதிடா”
“எது நானு..” என்றவன் “சரி வச்சுக்க” எனவும்
“சோ சூப்பர் நான் எது சொன்னலும் மறுத்து பேசாம உடனே ஒத்துக்குற பார்த்தியா அங்க நிக்குரடா நீ.. சோ ஸ்வீட் ஐ லவ் யூ டா” என்று கொஞ்ச
“கடுப்பேத்தாம வா வந்து ஏறு பிடி” என்று அழைத்துக்கொண்டு புண்ணிய கோடி தாத்தாவுக்கு வயக்காட்டை உழுது குடுக்க சென்றார்கள்.
அத்தியாயம் 5
 
அவர்களது வயல்களை ட்ராக்டர் கொண்டு தான் உழுவார்கள்.. சொந்த ட்ராக்டரை வாடகைக்கு ஆட்களை வைத்து மற்றவர்களின் வயல்களுக்கு உழுது கொடுத்து கொண்டிருந்தார்கள்.. வசதி இல்லாதவர்களுக்கு மாடுகளை இலவசமாக கொடுத்து உழவ சொல்லுவார்கள். அதனாலே அவர்களிடம் எப்பவும் மூன்று சோடி காலை மாடுகள் இருக்கும்..
வீட்டு இள ஆண்பிள்ளைகள் மூவரும் ஓய்வாய் இருக்கும் சமயம் மாடுகளை அழைத்துக்கொண்டு வயலோடு உறவாட சென்றுவிடுவார்கள்.. இன்றும் அது போலவே இருவரும் போக வனாவும் வருவதாக சொல்ல நாளைக்கு வரலாம் இன்னைக்கு ஓய்வெடு என்றுவிட்டு ராயரும் ரவியும் தங்களது இரண்டு சோடி காளைகளோடு கிளம்பிவிட்டார்கள்.
படுக்கையில் இருந்த திகம்பரிக்கு “கடியாய்” இருந்தது.. ‘இவன் தான் என்னை தேடி வரவில்லை.. ஆனா பொண்ணா இருந்துகிட்டு நானே இவனை தேடி வந்துட்டேன்.. இருந்தும் இவன் பிடியில இருந்து கீழ இறங்குரானா பாரு.. அழுத்தம் மகா அழுத்தம்’ என்று புலம்பிக்கொண்டிருந்தாள்.
ஓய்வு எடுக்க உடம்பு கெஞ்சினாலும் உள்ளம் உலை கலமாய் கொதித்துக்கொண்டிருக்க எங்கிருந்து ஓய்வெடுப்பது..
அறைக்குள்ளே நடந்தவளால் அதுக்கு மேல் தன்னை கட்டுபடுத்திக்கொள்ள முடியாமல் வெளியே வந்தாள்.
அங்கே அனைவரும் உண்ட மயக்கத்தில் இருக்க சட்டென்று வெளியே வர அரவம் கேட்டு மது எழுந்து வந்து
“என்னக்கா எதுவும் வேணுமா” என்று கேட்க
“ம்ம் ஒண்ணுமில்ல மது சும்மா தான் தூக்கம் வரல அதுதான்”
“ஓ சரி இருங்க நான் போய் டீயும் வடையும் ரெடியாகிடுச்சான்னு பார்கிறேன்.. ரெடின்னா நாமளும் வயலுக்கு போகலாம் அங்க போனா உங்களுக்கு போரடிக்காது”
“ம்ம் சரி” என்றவள் அந்த முற்றத்திலே அமர்ந்தாள்.
உள்ளே சென்ற மது எல்லாவற்றையும் ஒரு கூடையில் வைத்து எடுத்துக்கொண்டு வர..
“அதுக்குள்ள ரெடியாயிடுச்சா” வியப்பாய் கேட்க
“அம்மா தூங்குறதுக்கு முன்னாடியே வேலை செய்றவங்க கிட்ட சொல்லிட்டு தான் தூங்குனாங்க அதுதான்”
“ஓ பரவலா சூப்பர்” என்று பாராட்டியவள் அவளோடு சேர்ந்து தெருவில் நடந்து செல்ல, வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்த பெருசுகள் அவளை வித்யாசமாக பார்த்தனர்.
“யாருமா அது” என்று அவர்கள் கேட்க “சின்ன மாமாவோட படுச்சவங்க தாத்தா. நம்ம ஊற சுத்தி பார்குறதுக்காக வந்திருக்காங்க” என்று சொல்ல
“அப்படியா சரிமா நல்லா சுத்தி காமி.. ஆமா உன் பேரு என்னமா”
“திகம்பரி தாத்தா”
“நல்ல பேரு தாயி.. எங்க பக்கத்து கொலசாமி பேரு.. நல்லா இரு” வாழ்த்த மனம் நெகிழ அவர்களுக்கு ஒரு இதழ் புன்னகையை கொடுத்துவிட்டு மேற்கொண்டு சென்றாள்.
தூரத்தில் இருக்கும் போதே அவனும் ரவியும் ஏரு உழுதுக்கொண்டிருப்பது தெரிய திகம்பரியின் பார்வை ராயரை மட்டுமே சுற்றி வந்தது.
தொலைவில் இருக்கும்போதே ராயரின் கம்பீரம் அவளை ஈர்க்க, கட்டுப்படுத்த முடியாமல் அவனை தன் கண்களால் மேய ஆரம்பித்தாள்.
அன்று இருந்தது போல இன்றும் அப்படியே இருந்தான். ‘இன்னும் கம்பீரம் கூடி போய் தான் இருக்கு.. கொஞ்சம் கூட அவன் எதுக்கும் அலட்டிக்கொள்ளாமல் அதே பிடியில் தான் இருக்கிறான் இன்றும்’ என்று பெரு மூச்சு விட்டவள் அவர்களின் அருகில் வரவும் அவளின் பார்வையை மாற்றிக்கொண்டாள்.
பேசிக்கொண்டே வந்த மதுவிடம் ஒப்புதலாய் தலையை அசைத்து உம் கொட்டிக்கொண்டு வந்தாள்.
குறிப்பிட்ட தூரத்தில் அவர்களை பார்த்துவிட்ட ரவி ராயரை அழைத்து காண்பிக்க, அவன் நிமிர்ந்து பார்த்தான்.
பார்த்தவனின் விழிகளில் நிறைந்து போனாள் திகம்பரி.. அவளோ அவனை கொஞ்சமும் சட்டை செய்யாமல் மதுவோடு உலக ஐக்கிய நாட்டு ஒப்பந்தத்தை பற்றி தீவிரமாக பேசுவது போல பேசிக்கொண்டு வர கடுப்பானான் ராயர்.
“அதானே உனக்காவது கொழுப்பு குறையராதாவது, திமுரு அஞ்சரடி முழுசும் திமுரு மட்டும் தான் நிறைஞ்சிருக்கு” முனுமுனுத்தவன் கரைக்கு ஏறி சென்றான்.
“சொன்னதே நான்தான் என்னை விட்டுட்டு போறான் பாரு” சத்தம் போட்டவனின் மீது பெரிய கல் வந்து விழ கப்பென்று வாயை மூடிக்கொண்டு கரை ஏறினான் ரவி.
“ஏன்ம்மா டீ பலகாரம் நான் எடுத்துட்டு வரமாட்டனா” குறைபட்டுக்கொண்ட புண்ணியகோடி தாத்தாவின் மனைவி கேட்க
“இருக்கட்டும் பாட்டி உங்களுக்கும் சேர்த்துதான் எடுத்துகிட்டு வந்தேன்” என்று எல்லோருக்கும் எடுத்துகொடுத்தாள் மது.
திகம்பரி தன்னுடையதை எடுத்துக்கொண்டு சுற்றி பார்க்க போக, அவளின் வாலாய் ராயரும் பின்னால் போக, ரவி தலையை சொரிந்துக்கொண்டு நின்றிருந்தான்.
“அவங்க பின்னாடி போறதா இல்ல இங்கனவே இருக்குறதா... சாமியார்னு நினைச்சேன் இந்த பயபுள்ளைங்க கடைசில எனக்கு காவி கட்டிவிட்டு இமயத்துக்கு தொரத்தி விட்டுடுங்க போல..
இதுங்க கிட்ட எச்சரிக்கையாவே இருக்கனும்டா ரவி பயலே.. இல்ல நீயும் இதுல கூட்டுன்னு பஞ்சாயத்து கூட்டி கேள்வி கேக்கும்போது ரெண்டும் ஈஸியா பழிய தூக்கி உன் மேல போட்டுடுங்க.. இதுங்க போற போக்க பார்த்தா ரொம்ப பாஸ்டா இருக்குங்க.. பஞ்சாயத்து கன்பாம்” என்று முனங்கிக்கொண்டான்.
அவளின் பின்னாடி வந்த ராயர் அவளையே உரித்து தின்னுவது போல பார்க்க, அவனுக்கு முதுகு காட்டி நின்றாலும் அவனின் குத்தும் பார்வையை உணர்ந்தாள் திகம்பரி..
உள்ளுக்குள் இருந்த ஆசையை மறைத்துக்கொண்டு “இங்க எதுக்குடி வந்த” உறுமினான்.
“சத்தியமா உங்களை பார்க்க வரல”
“அதெனக்கு தெரியும் நீயாவது என்னை தேடி வரதாவது, வனா என் தம்பின்னு தெரியாது உனக்கு, நான் இந்த ஊர்ல தான் இருப்பேன்னு உனக்கு தெரியாது. பொறவெதுக்குடி இங்க வந்த என்ன மறுபடியும் என்னை மயக்க பார்குரியா.”
“ஆமா இவரு பெரிய ரிஷ்ய சிருங்காரன் இவுகளை மடக்கி போடத்தான் நாங்க வந்திருக்குறோம் எங்களுக்கு வேற வேலை தான் என்ன சொல்லுங்க, ஊரூரா போய் ஆம்பளங்கள மயக்குறது தான் என் வேலை பாருங்க” என்று நக்கல் பண்ண
“நீ செஞ்சாலும் செய்வடி” சட்டென்று அவளை இடம் பார்த்து தாக்க, அவனது அந்த பேச்சில் முணுக்கென்று கண்கள் கலங்கி விட்டது அவளுக்கு..
அவனை தீர்க்கமாக பார்த்தவள் எதுவும் பேசாமல் ஒதுங்கி போய் நின்று அங்கிருந்த சிறு தோட்டத்தை பார்க்க அவளது கலங்கிய கண்கள் அவனை தாக்க அவளின் பின்னாடி வந்து நின்றான்.
“சாரிடி”
“செருப்பு பிஞ்சுடும் மரியாதையா இங்க இருந்து போடா” விழிகள் சிவந்து போய் ஆத்திரமாய் கூறியவளை கண்டு கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் “நீயா மன்னிச்சுடு, இல்ல”
“இல்லைன்னா என்னடா பண்ணுவ” இப்போது கண்களில் இருந்த கண்ணீர் உருண்டு அவளது கன்னத்தில் விழ
“வெறி சிம்பிள்” என்றவன் அருகே இருந்த மரத்தின் மறைவில் அவளை இழுத்தவன் அவளது உதடுகளை கடித்து இழுத்து முத்தமிட வர அவனது நோக்கம் தெரிந்து பட்டென்று அவனது புஜத்தில் அடித்து விலக பார்த்தாள்.
“நிஜமாவே சாரிடி” வருத்தத்துடன் கூறியவனை கண்டு மேலும் அடிக்க
‘நீ எவ்வளவு அடி வேணாலும் அடிச்சுக்கோ’ என்று அமைதியாக நின்றான் ராயர்.
“ஏண்டா இப்படி பேசுற, நான் அந்த மாதிரி பொண்ணா” விசும்பலுக்கு இடையே கேட்டவளை இறுக்கி அணைத்தவன் “சும்மாடி நான் அப்படி பேசலைனா நீ இன்னும் என்கிட்டே முறுக்கி கிட்டு தான் இருந்திருப்ப, அதுதான்” என்று விளக்கம் சொன்னவனை மேலும் இரண்டடி போட்டாள்.
“பொருக்கி நீ செஞ்சு வச்ச காரியத்துக்கு உன் முகத்துலேயே முழிக்க கூடாதுடா, ஆனா என்ன பண்றதுன்னு நானே தேடி வந்தா நீ சகட்டு மேனிக்கு பேசுவியா”
“அடியேய் அதை நான் சொல்லணும் நீ பேசுறியா, எத்தனை வருஷம் ஆச்சுடி உன்னை இப்படி என் கைக்குள்ள வச்சு பார்த்து, என்னால நம்பவே முடியல நீ என் பக்கத்துல தான் இருக்கியான்னு” என்றவன் அவளது கன்னத்தை கடித்து வைக்க
“அம்மா” என்று சன்னமாய் அலறினாள்.
“இன்னும் இப்படி கடிக்கிறதா நீ விடலையாடா வலிக்குதுடா பொருக்கி”
“இப்போ நம்புறேண்டி நீ என் பக்கத்துல இருக்கிறது நிஜம்னு” என்று சிரிக்க அவனது சிரிப்பில் தன் மனதை கொள்ளை கொடுத்தவள் அவனது மார்பில் சாய
“அசுக்கு புசுக்கு என்னை நீ தொட்டு பேச கூடாது, தள்ளி நில்லுடி” என்று மிரட்ட
“அப்படிங்களா சார் ரொம்ப சந்தோஷம். நீங்களும் வார்த்தை மீறக்கூடாது”
“ம்ம் அதெப்படி, கண்டிசன் உனக்கு மட்டும் தான் எனக்கு இல்ல” என்று ஜெகஜால கில்லாடியாய் இருந்தான் அவன்.
“கண்டிசன்னா கண்டிசன் தான் நீ ஒத்துகிட்ட, இனி என்னை நீ தொட கூடாது”
“அது என்னால முடியாதுன்னு உனக்கே நல்லா தெரியும் ப்ளீஸ்டி” கெஞ்சியவனை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் “ஆமா இது மா மரம் தானே” என்று கேட்க
“ஆமாம்” என்றவன் ”இப்போ மா மரத்தை பத்தி என்னடி ஆராய்ச்சி.. இந்த ரவி பய வேற வந்துடுவான் ப்ளீஸ்டி ஒரே ஒரு முத்தம்”
“ம்ஹும் நீ என்னை இத்தனை வருசமா படுத்திவச்ச பாட்டுக்கு அனுபவி ராஜா” கேலி பண்ண
“உன் பெர்மிசன் எனக்கு தேவை இல்லடி” என்று அவளை இழுத்து அணைக்க அந்த நேரம் “அம்மா” என்று சத்தம் போட்டு ஊரை கூட்டினால் திகம்பரி..
“ஐயோ என்னடி ஆச்சு” என்று பதறினான்.
“ஏதோ கடுச்ச மாதிரி இருந்தது” என்று சொல்லும் முன்னவே தூரத்தில் நின்றவர்களும் ஓடி வர திகம்பரியை அனைத்திருந்தவன் விலகி தாங்கி பிடித்து நிற்பது போல நின்றுக்கொண்டான். அவ்வளவு உஷாரா இருக்கானாம்..
“என்னமா என்ன ஆச்சு” பாட்டியும் மற்றவர்களும் விசாரிக்க
“என்னமோ கடுச்ச மாதிரி இருந்தது. பார்த்தா காஞ்சு போன செடியில இருந்த ஒரு குச்சி கால்ல குத்தியிருக்கு பாட்டி, நான் தான் வயல் வெளினால பாம்பு தான் கடிச்சுடுச்சோன்னு பயந்து அலறிட்டேன்.. பொறவு இவங்க தான் பார்த்து சொன்னாங்க” என்று ராயரை காட்டி யாருக்கும் தெரியாமல் கண்ணடிக்க
“அடிபாவி தப்பிக்க தான் இந்த ஐடியா பண்ணுனியா” மெல்ல வாயசைக்க
மீண்டும் கண்ணடித்து இதழ் குவித்து ‘ம்ம்’ என்க
“இல்லையே குச்சி குத்துன மாதிரி தெரியலையே இது எதுவோ ஆறடி மனுஷன் பண்ணுன சேட்டைய போல இருக்கே” என்று ராயருக்கு மட்டும் கேட்பது போல ரவி முனக அவனுக்கு அருகில் நின்ற திகம்பரிக்கும் கேட்டது.
அவன் அப்படி கேட்க ராயருக்கு பக்கென்று இருந்தது.. அதில் திகம்பரிக்கு சிரிப்பு வர இதழை கடித்து அடக்கிக்கொண்டாள்.
“என்ன நான் சொன்னது தான் நடந்ததா” என்று விடாமல் கேட்க
“டேய் ஒழுங்கா உன் வேலைய பாருடா இல்ல ஏதாவது கேசுல உன்னையும் கோர்த்து விட்டுடுவேன் பொறவு ஒன்னு ரெண்டுன்னு கம்பி எண்ணிக்கிட்டு இருக்கணும் பார்த்துக்க” என்று மிரட்ட
“என்ன மிரட்டுறியா”
“இல்ல ராசா உன்னை தூக்கி என் மடியில வச்சு கொஞ்சிகிட்டு இருக்கேன்” பல்லை கடிக்க
“என்ன மாமா கோவமா இருக்கியா” அப்பாவியாய் மிளிற்றியவனை கண்டு கோவம் பெருக
“இல்லவே இல்லடா பைய்யா நீ என் செல்லாம் இல்லையா, அது தான் உன்னை கொஞ்சுறேன்”
“நீ என்னை கொஞ்சுற இதை நான் நம்பனும்”
“நம்புடா”
“சரிவிடு நம்புறேன்”
“பரவாலையே உடனே நம்பிட்ட”
“வேற வழியில்லையே இல்லன்னா நீ ஜெயில்ல புடுச்சு போட்டுடுவ, தில்லையும் ஆண்டியும் என்னை இது தான் சாக்குன்னு தொல்லை விட்டதுன்னு ஜாமீன் எடுக்காதுங்க அதுதான்”
“இந்த முன் யோசனை உன்னை எங்கேயோ கொண்டு போக போகுதுடா படவா” என்றபடி திகம்பரியை பார்க்க அவள் மறுபடியும் ராயரை கண்டு முத்தமிட பதிலுக்கு சிரித்து வைத்தான்.. இவர்கள் இருவரின் சேட்டையும் கண்டு திகைத்த ரவி “ஆஆ” என்று வாயை பிளந்தான்.
அதை கண்ட ராயர் “வாய மூடுடா எரும முதுகு தண்டு வடமே தெரியுது” என்க
“அந்த அளவுக்கா தெரியுது” கப்பென்று வாயை மூடிக்கொண்டவன் ‘இதுங்க போக்கே சரியில்ல தில்லையம்மா உன் தம்பி தங்க கம்பின்னு நினைச்சுகிட்டு இருக்கீல்ல அதை உடச்சு உன் தம்பியோட வண்டவாளத்தை வண்டியில ஏத்தி இந்த ரவி பய யாருன்னு உனக்கு நிருபிக்கிறேன்’ என்று உள்ளுக்குள் சபதம் எடுத்துக்கொண்டான்.
“இப்போ நீ என்ன சபதம் போட்டன்னு எனக்கு நல்லாவே தெரியும்டா மரியாதையா அதை ஒரு ஓரமா மூட்டை கட்டி வச்சுட்டு இரு.. இல்லைன்னு வை மகனே உன் சாவு என் கையில தாண்டா” மிரட்டினான் ராயர்.
“மாமூ நான் உன் மருமகன்” பாவமாய் சொல்ல
“எல்லா நொன்னையும் எனக்கு தெரியும் மூடுடா, நீ யாரு எப்பேர் பட்ட ஆளுன்னு உன்னை விட எனக்கு நல்லாவே தெரியும்.. நீ நினைக்கிறது கனவுல கூட நடக்காதுடி, வீணா ஆசைய வளர்த்துக்காம வா வந்து உருப்படியாய் ஏரு உழு” என்றவன் அவனை கிளப்பிக்கொண்டு ஏரு உழ போக திகம்பரிக்கு சிரிப்பு வந்தது..
அத்தியாயம் 6
உழுது முடிக்கும் சமயம் வனாவும் வர அப்படியே பக்கத்தில் இருந்த அவர்களின் காட்டுக்கு சென்று இளநீர் குடித்துவிட்டு கிணறு நிறைய இருந்த தண்ணீரில் தொப்பென்று மூவரும் குதிக்க திகம்பரிக்கு திக்கென்று இருந்தது..
“என்ன மதி இப்படி குதிக்கிறாங்க பயமா இருக்காதா”
“சின்னவயசுலருந்து இவங்க பார்த்து பழகுன கிணருகா பயமெல்லம் இருக்காது..” என்று சொல்ல
“ம்ம்” என்றவளுக்கு சற்றே பயமாக தான் இருந்தது..
அவர்கள் கிணறில் செய்யும் சேட்டையை பார்த்தபடி மதி இருக்க ஒரு பயத்துடனே அவர்களை பார்த்துக்கொண்டிருந்தாள் திகம்பரி..
அவளுக்கு நீச்சல் தெரியும் தான் ஆனால் இவ்வளவு பெரிய கிணறில் அவளால் ‘ம்ஹும்’ அந்த அளவு தைரியம் இல்லை அவளிடம்..
குளித்தவாறே திகம்பரியின் முகத்தை பார்த்தவனுக்கு பழசெல்லாம் நினைவுக்கு வர உடம்பு லேசாய் சூடாக்கி போனது.
“சரி நான் மேல போறேன்” என்று கூறிவிட்டு ராயர் முதலில் மேலேற வனாவும் “நானும் போறேண்டா” என்றபடி அவனும் மேலேற “நான் மட்டும் இருந்து இங்க என்ன பண்றது நானும் வரேன்” என்று அவனும் வர
ராயரு உடையை மாற்றாமல் “சரி நான் சுத்தி ஒரு பார்வை பார்த்துட்டு வரேன்” என்ற படி அங்கிருந்து கிளம்ப
“நீ போ மாமா எனக்கு சோர்வா இருக்கு நான் போய் மண்ணு மேட்டுல கொஞ்சம் உக்காருறேன்” என்றபடி ரவி அங்கே போக, ராயரு யாரும் கவனிக்காமல் திகம்பரியை “வா” என்று அழைக்க
“எதுக்கு” என்று அவளும் வாயசைத்து கேட்க பார்வையாலே மதியையும் வனாவையும் காமிக்க சட்டென்று புரிந்து கொண்டவள் “மதி அங்க மல்லிப்பூ தோட்டம் இருக்குல்ல நான் அதை பார்த்துட்டு வரனே” கேட்க
“நானும் வரவா கா” தவிப்பாய் வனாவை பார்த்தபடி கேட்டாள்.
“இல்லடா நீ இரு நான் போய்கிறேன்” என்று கூறிவிட்டு அவ்விடத்தைவிட்டு சென்றாள்.
“சரிங்க கா பார்த்து போங்க” ஆசுவாசமானவள்
சோல காட்டு பக்கம் போக வனாவும் பின்னாடியே சென்றான்.
அருகில் வந்தவளை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் மறுபடியும் கிணற்று பக்கம் போனான் ராயர்..
“உங்க கிட்ட ஒன்னு கேக்கணும்” என்றபடி அவளும் அவன் பின்னாடியே போக
“என்ன கேக்கணும்”
“அது வனாவும் மதியும் விரும்புராங்களா”
“ஏன் அது தெருஞ்சு நீ என்ன பண்ண போற” என்று சுல்லேன்று கேட்டவனை கண்டு முறைத்தவள்
“நான் எதுவும் பண்ண போறது இல்ல, உங்களை மாதிரியே உங்க தம்பியும் பழகி பார்த்துட்டு விட்டுட்டு போனா என்ன பண்றது, அதுதான் கொஞ்சம் மதியை எச்சரிக்கலாம்னு” என்று இவளும் பதிலுக்கு சூடாய் குடுக்க
அவன் முகம் கருத்து போனது.
“என்ன உண்மைய சொன்ன உடனே மூஞ்சி செத்து போச்சு..” மேலும் அவள் நக்கல் பண்ண
“ஏய் போதும் நிறுத்துடி சும்மா, நீ ரொம்ப யோக்கியம் நீ என்னை சொல்றியா” அவன் எகுற
“தோடா நான் எதுல கொறஞ்சு போய்டேன்.. உங்க தப்பை ஒத்துக்க மனசு வரல நீங்க செஞ்ச தப்பை என் மேல திருப்பிவிட பார்குரீங்களா”
“என் மனசருஞ்சு நான் எந்த தப்பும் பண்ணலடி” என்று கண்கள் சிவக்க சொன்னவனை அலட்ச்சியமாக பார்த்து
“என்னது எந்த தப்பும் பண்ணலையா.. பதினெட்டு வயசு பொண்ண மயக்கி அவளுக்கு புள்ளைய குடுத்துட்டு எஸ்கேப் ஆன ஆளுதானே நீ.. உன்னையெல்லாம் அப்பவே ரேப் கேசுல உள்ளதூக்கி போட்றுக்கணும்டா” அவளும் கோவப்பட
“போட்ருக்க வேண்டியது தானேடி.. நான் வேணான்னு சொன்னனா என் தொடுகையில மயங்கி போய் இருந்துட்டு...” என்று மேற்கொண்டு சொல்ல திகம்பரி தன் காதை அழுந்த மூடிக்கொண்டாள். லேசாய் கண்கள் கலங்கியது அவளுக்கு..
அவளது அழுத விழிகளை கண்டவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவளை அணைக்க வர அவனது கையை தட்டிவிட்டுட்டு அங்கிருந்து ஓட
கொஞ்சமும் யோசிக்காமல் அவளின் பின்னே சென்றவன் கிணறு வரும் சமயத்தில் அவளின் காலை இடறிவிட பொத்தென்று கிணற்றில் குப்புற விழுந்தாள். அவள் விழுந்த உடனே அவனும் நிமிடமும் தாமதிக்காமல் குதித்து அவளை கரம் பற்றி இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டான்.
விழுந்த சிறிது நேரத்தில் என்ன நடக்குது என்று புரியாமல் மூச்சுக்கு திணறி திண்டாடி தவித்துப்போனாள் திகம்பரி. அவளது தவிப்பை போக்குவது போல அவன் தன் அணைப்பில் அவளை கொண்டு வந்து இருக்க அணைக்க அவளுக்கு எதுவும் புரியவில்லை..
வாயிலும் மூக்கிலும் ஏறியிருந்த தண்ணீர் மேலே ஏறியிருக்க தொடர்ந்து இருமல் வந்து. மூச்சு சீராகாமல் பெருமூச்சு வாங்கினாள் திகம்பரி..
அவளின் அவஸ்த்தையை கண்ணுற்றவன் தன் மூச்சு காத்தை அவளுக்கு பரிசளிக்கும் விதமாய் அவள் முகம் நோக்கி குனிந்தவன் தன் வாய் வழி அவளுக்கு காற்றை உள் செலுத்த அவளும் அந்த காத்தை உள்வாங்கி தன் மூச்சு பையில் சேகரித்து இலகுவாக மூச்சு விட்டாள்.
அதன் பின்பே அவளுக்கு சுயம் தெளிந்தது.. சுயம் தெளிய ராயரின் வெற்று உடம்பை இறுக்க பற்றிக்கொண்டு
“ப்ளீஸ் டா என்னை எப்படியாவது மேல கொண்டு போய் விடுடா, எனக்கு பயமாய் இருக்கு” என்றபடி சுற்றிலும் கண்களை ஓட விட்டவள் கிணற்றின் ஓரங்களில் அச்சுருக்கொண்டிருக்கும் கிணற்றை வசிப்பிடமாக கொண்டிருந்த தேரையும், தவளையும் பார்த்து அலறியடித்துக்கொண்டு அவனின் மார்பில் முகம் பதித்து தன்னை காத்துக்கொள்ளும் நோக்கத்துடன் அவனிடம் சரணடைய அவளது பயம் அவனுக்கு சிரிப்பை வரவளைத்தது..
“ஹே அது ஒன்னும் பண்ணாதுடி”
“ப்ளீஸ் மாமா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு, அதை பார்க்கவே ஒரு மாதிரியா இருக்கு, அது எப்போ தாவும்னே தெரியாது என்னை மேல கூட்டிட்டு போடா” கெஞ்சியவளை கண்டு
“சரி நான் கூட்டிட்டு போறேன் ஆனா அதுக்கு நான் சொல்ற படி நீ கேக்கணும்” டீல் பேச
“டீல் பேசுற நேரமாட இது” பரிதாபமாய் கேட்டாள் தவளையை பார்த்தபடி..
“அந்த பக்கம் என்ன பார்வை என்ன பாரு” என்று அவளை தன் பக்கம் திருப்பியவன் தாபமாய் அவளை பார்க்க அவனது பார்வையின் அர்த்தம் புரிந்த திகம்பரி..
“ஐயோ இங்க வேணாம் மாமா.. வெளில வந்து தரேன் ப்ளீஸ்” கெஞ்ச
“ம்ஹும் எனக்கு இங்க தான் வேணும்” என்றவன் அவளது முகம் நோக்கி குனிந்து பயணத்தை தொடங்க அவளது விழிகள் ராயரை பார்க்காமல் மறுபடியும் தவளையே பார்த்தாள்.
‘ஐயோ அது வேற மேல தாவுற பொசிசன்லையே இருக்கே.. எப்போ தாவும்னு தெரியலையே.. இதுல இவருக்கு ஜலத்துகுள்ள ரொமான்ஸ் வேணுமாம்.. கடவுளே என்னை காப்பாத்து வாய் முணுமுணுக்க’ முணுமுணுத்த இதழ்களை தன்னுள் சுருட்டிக்கொண்டான் ராயர்.
கைகள் பயத்துடன் அவனை இருக்க பிடித்துக்கொண்டது.. ராயரின் கைகள் அவளை ஆராய அவனது கைகளில் நெளிந்த படி
“வேணாம் மாமா.. ப்ளீஸ்” என்று கெஞ்ச அவளது கெஞ்சல் செவிடன் காதில் ஊதிய சங்கு சத்தம் போல் ஆனது.
ஓரளவு திகம்பரி தெளிய.. பயம் லேசாய் விலக ராயரை தன்னிடமிருந்து பிரித்து தண்ணீரில் பிடித்து தள்ளிவிட்டாள். அவள் தள்ளி விடுவாள் என்று கிஞ்சித்தும் யோசியதவன் அப்படியே தண்ணீரில் மல்லாக்க விழுந்தான்.
“ஏய்” என்று கோவத்துடன் எழ, திகம்பறியோ படிகளில் சாய்ந்தபடி இரு கைகளையும் கட்டிக்கொண்டு அவனை திமிராக ஒரு பார்வை பார்த்தவள்
“இப்போ தெரியுதா மிஸ்டர் லாயர் சார்.. யாரு யார் பின்னாடி வராங்கன்னு” அழுத்தமாய் கேட்டவளை கண்டு கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்
“இப்பவும் சொல்லுவேன் நீ தான் என் பின்னாடி வந்த.. நான் தொட்டா உன்னால மறுக்க முடியாது அதுக்கு உதாரணம் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் கிட்ட உருகி நின்னீள்ள அதுதான்” என்றான் தெனாவட்டாய்.
“அதுக்கு பிறகு சார தள்ளிவிட்டது தெரியலையோ..” அவனை நக்கல் பண்ணினாள் அவளும்.
“அதுதான் நீயே சொல்லிட்டியே.. பிறகுன்னு.. தெரியுதா நான் தொட்ட நீ...” மேலே சொல்லாமல் விஷமமாய் சிரிக்க அவளுக்கு பத்திக்கொண்டு வந்தது.
பதில் எதுவும் பேசாமல் அவளே படிகளில் ஏறி மேலே போக, அவளின் விலகளை தாங்க முடியாதவன் மறுபடியும் அவளின் காலை தன் கைகளால் தட்டிவிட தண்ணீரில் மல்லாக்க விழுந்தாள்.
விழுந்தவளை வாரி எடுத்து மறுபடியும் தன் எண்ணம் போல வழி நடத்த அவனது தொடுகையில் உருகாமல் அவள் முறுக்கிக்கொண்டு இறுக
“ஏய் உன் பின்னாடி வந்தது நான் தான்.. நான் தான் உன்னை துரத்தி துரத்தி வந்து டார்ச்சர் பண்ணி என்கிட்டே வர வச்சேன்.. இதை நான் இல்லைன்னு சொல்வனா.. சும்மாடி உன்னை சீண்டி பார்த்தேன்.. எனக்கு தெரியாதா என் செல்லத்தை..” என்று அவன் சமாதானப்படுத்த
“சும்மா சொன்னேன்டா மாமா” என்று அவளின் முகம் பார்த்து முகம் முழுவதும் புன்னகையுடன் சொல்ல, அவளது இருக்கம் தளர்ந்து மெல்ல அவளது விழிகளில் அழைப்பு தெரிய..
“இது தான் என் செல்ல குட்டி” கொஞ்சியவன் அவளிடம் புதைய போக
“என்னங்க” என்று தடுத்தாள்.
“இன்னும் என்னடி” கடுப்பானான் அவன்.
“ப்ச் இப்போ எதுக்கு கடுப்பு.. “
“பின்ன எவ்வளவு நாளாச்சுடி” கண்சிமிட்டி சொல்ல
“குழந்தையை பத்தி எதுவும் கேக்கல” சற்றே தீவிரமாய் இருந்ததோ அவளது குரல்.
“எதுக்கு கேக்கணும்” அவனும் அதே தீவிர பாணியில் கேட்க
“அது உங்க குழந்தைங்க”
“அதை தான் சுமக்க மாட்டேன்னு சொல்லிட்டு இருந்தியே இப்போ என்ன அதை பத்தி” என்றவன் வலுகட்டாயமாய் அவனுக்கு வேண்டியதை அவளிடம் பெற்றுக்கொள்ள திகம்பரி வெருத்துப்போனாள்.
கண்கள் கலங்கியது அவனது விட்டேரியான பேச்சில்.. எவ்வளவு நாள் கழித்து சந்தித்து இருக்கிறோம்.. எப்படி இருக்குற, ஏன் என்னை இவ்வளவு நாள் பிருஞ்சி இருந்த.. எப்படி உன்னால என்னை விட்டு இத்தனை நாட்கள் இருக்க முடுஞ்சது என்று ஏதாவது கேட்பான் என்று எண்ணியவளுக்கு அவன் எதுவும் கேட்காமல் அவளிடமிருந்து வெறும் உடல் சுகத்தை மட்டும் எதிர்பார்க்கிரானே..
நான் தான் திரும்பி வந்து தவறு செய்து விட்டேனா.. இவன் இன்னும் திருந்தவில்லையா? மனதில் பாரம் ஏறி அமர உடம்பு இறுகிப்போனது..
அவனுக்கு அது தெரிந்தாலும் எதையும் கண்டுகொள்ளாமல் அவனுக்கு என்ன வேணுமோ அதை எடுக்க முனைய முற்றிலும் தன்னையே வெறுத்து போனாள் திகம்பரி..
அவனை பற்றி முழுதும் தெரிந்திருந்தும் இவ்வளவு தூரம் தேடிவந்து அவமான பட்டுட்டியேடி.. என்று உள்ளம் குமுறினாள்... விழிகளில் கண்ணீர் இறங்கியது.. அதை சுவைத்தவனின் உதடுகள் ஒரு கணம் இருகினாலும் மறுகணம் அவனது செயலில் முன்பை விட அதிக தீவிரம் காட்ட, அவளது மென் மேனி அவனிடம் சிக்கி தவித்து வலியில் துடித்தது..
அவன் அருகாமையில் அவளுக்கு எந்த சிந்தனையும் வர கூடாது.. அதுவும் அவன் அவளிடம் சரச மாடுகையில் அவன் மட்டுமே அவளுள் நிறைந்திருக்கணும்..
இது அவன் அவளோடு பழகிய நாட்கொண்டு அவன் அவளிடம் சொல்லி சொல்லி அவளை அந்த மாதிரியே பழக்க படுத்தி இருந்தான்.
அவன் அருகாமையில் அவள் இருக்கும் பொழுதுகள் போன் ஆப் பண்ணி தான் போட்டிருக்கணும்.. டிவி பார்க்க கூடாது, பாட்டு கூட கேட்க கூடாது.. ஏன் மத்த விசயங்களை பத்தி கூட அவனிடம் விவாதிக்க கூடாது..
அந்தளவு அவளை அவனிடம் நெருக்கி கொண்டு வருவான்.. அதையும் மீறி அவள் ஏதாவது செய்து இருந்தாள் அவன் ருத்ர மூர்த்தி தான்.. அந்த அளவு கோவம் வரும்.. இதோ இப்போது அவளது மேனி அவனிடம் படும் வேதனை போல ஏதாவது செய்து வைப்பான்..
இவ்வளவையும் செய்துவிட்டு அவளோடு அவன் பேச மாட்டான்.. முறையாய் அவள் தான் அவனிடம் கோவ பட வேண்டும்.. ஆனால் இங்கு எல்லாமே தலைகீழ் மாற்றம் தான்.
இன்றும் அவனை தவிர்த்து குழந்தையை பற்றி பேசியதால் அவள் மீது கட்டுகடங்காமல் கோவம் வர அதை அவள் மீதே காண்பித்தான்.
“இதுக்கு நான் இவனை தேடி வந்திருக்க வேணாம்” என்று நொந்தவள் ‘இவன் கொஞ்சம் கூட மாறவில்லை.. இத்தனை நாள் பிரிவு அவனை மாற்றி இருக்கும் என்று நினைத்தேன்.. இவன் முன்னர் எப்படி இருந்தானோ அதே போல் தான்.. ம்ஹும் அதைவிட அதிகமான பிடிவாதத்துடன் தான் இருக்கிறான்..’ என்று நினைத்தவளின் சிந்தனை வேறு எங்கோ இருக்க, அதை உணர்ந்தவன் மேலும் அவளை இறுக்கி பிடித்தான்.
அவனது இருக்கிய பிடி அவளை நோக செய்ய வாய் விட்டு ‘அம்மா’ என்றே கத்திவிட்டாள்.
“நான் கிட்ட இருந்தா என்னை பத்தி மட்டும் தான் நீ யோசிக்கணும்னு உனக்கு எத்தனையோ முறை சொல்லி இருக்கிறேன்.. ஆனா நீ இப்பவும் கொஞ்சம் கூட மாறல, உனக்கு நான் எப்போதுமே முக்கியமா இருந்தது இல்ல.. அதை தெருஞ்சும் அதை எல்லாம் மறந்து உன்கிட்ட பழையபடி இருந்தேன் பத்தியா என்னை சொல்லணும்டி”
“உன்னை யாருடி என் கண்ணு முன்னாடி வர சொன்னது.. நீ இல்லாம இவ்வளவு நாள் நான் நிம்மதியா இருந்தேன்.. அது பொறுக்கலையா உனக்கு, எதுக்கு இப்போ என்னை தேடி வந்த.. வேற யாரும் உன் கண்டிசனுக்கு ஒத்துக்கலையா.. இல்ல வேற எந்த ஆம்பளையும் என்னை போல..” என்று முடிக்கும் முன்னவே
“ச்சீ நீயெல்லாம் ஒரு மனுசன்னு உன் கிட்ட போய் இவ்வளவு நாள் நட்பு வச்சுகிட்டேன் பத்தியா என்னை சொல்லணும்.. நீயெல்லாம் மனுசனே கிடையாது.. அது தெருஞ்சும் நான்.. என்னை தான் சொல்லணும்.. என்னை தான் செருப்பால அடுச்சுக்கணும்” என்று வழிந்த கண்ணீரை துடைக்க கூட இல்லாமல் வந்த கோவத்தை கட்டு படுத்தாமல் அவனை பிடித்து அப்படியே கிணற்றில் தள்ளிவிட்டு விறுவிறுவென மேலேறி சென்றாள்.
“என்ன வார்த்தை சொல்லி விட்டான்.. இத்தனை வருசமா இவனையே மனசார நெஞ்சில் சுமந்ததுக்கு நல்ல வார்த்தை சொல்லிவிட்டான்..” துடைக்க துடைக்க கண்ணீர் பெருக விம்மல் வேற வர பார்த்தது..
“என்னடி அழுது சீன் போடுறியா, நீ என்ன அழுது சீன் போட்டாலும்..” என்று அவன் மேலும் பேச ஆங்காரமாய் திரும்பி அவனை பார்த்தவள்
“மரியாதையா இங்க இருந்து போயிடு.. உன்னை பார்க்கவே எனக்கு அருவெறுப்பா இருக்கு.. மனுஷ ஜென்மமே இல்லடா நீயெல்லாம்... நாலறிவு அஞ்சறிவு உள்ள ஜீவன் கூட தன் இணைய நம்புது.. ஆனா நீ... ச்சீ நீ அதுக்கும் கீழடா..”
என்றவளின் பேச்சில் சினம் எழுந்தாலும் அதையும் தாண்டி மனம் சுக்கு சுக்காய் உடைய அவளையே ஆழ்ந்து பார்த்தான்..
அவனது பார்வையை தாங்கி நின்றவள் கிஞ்சித்தும் தலையை குனியவில்லை.. அவ்வளவு நிமிர்வு அவளிடம்..
அத்தியாயம் 7
அவனது பார்வையை துச்சமாய் ஒதுக்கியவள் மேலேறி செல்ல, வந்த கோவத்தை அவளிடம் காட்ட வேண்டும் என்று அடங்காமல் திமிரிய நெஞ்சை அடக்க முடியாமல் தண்ணீரில் ஓங்கி குத்தினான்.
அதில் அவனது ஆத்திரம் குறையாமல் கிணற்று சுவரில் ஓங்கி குத்தி தன் ஆக்ரோசத்தை அடக்க முயன்றான். என்ன முயன்றும் அவனது சினம் தனியவில்லை.
அவ்வளவு கோவம் அவள் எப்படி என்னை உதாசீன படுத்தலாம்.. கண் மண் தெரியாமல் கோவம் வந்தது.. அடங்காமல் அவனது மூச்சு மேலும் கீழும் பொசுபொசு வென்று சென்று அவனது கோவத்தின் அளவை வெளிபடுத்திக்கொண்டிருந்தது..
அவனால் அவளது உதாசீனத்தை தாங்கமுடியாது என்பது தான் உண்மை... அந்த உண்மை அவனுக்கு ரொம்பவே கசந்தது.. முன்னர் போல எப்போதும் தன்னை மறுபடியும் அவள் சுத்தி வர வேண்டும் என்று அவனது மனம் பேராசை கொண்டது.. அதற்க்கும், அவளது அன்பிற்கும் தான் தகுதியானவன் தானா என்று அவன் சிந்திக்க மறந்தான்.
அவள் காட்டும் பேரன்பு மீண்டும் எந்த மாசு மருவும் இல்லாமல் தனக்கே தனக்கு மட்டுமே வேண்டும் என்று வெறியே வந்தது அவனுக்கு..
அவளை இவன் தேடி போக மாட்டானாம்.. இவளே தேடி வர வேண்டுமாம். அப்படி வந்தவள் அவனையே சுத்தி சுத்தி வர வேண்டுமாம்.. இவன் சரியானா காதல் பேராசை காரனாய் இருக்கிறான்.. (ப்பா இவன் கிட்ட நம்மாலா முடியல..)
அவனது முரட்டு தனங்களில் அவள் ஒவ்வொரு முறையும் மடிந்து போவது புரியாமலே அவளை விட அவன் அதிகமாய் அவளை காதலிக்கிறான் என்ற எண்ணம் அவனிடம் எப்போதுமே இருக்கும்..
அந்த தன்னகங்காரத்தை தான் திகம்பரி வெறுப்பாள். அவனது செயல்களில் மட்டும் இன்றி அவனது சொல்லிலும் அது அதிகம் இருக்கும்.. அதை அவளுக்கு புரிய வைத்திருந்தால் அவள் அவனை கொண்டாடி தீர்த்திருப்பாள். அவன் எதிர் பார்க்கும் பேராசை காரியாய் அவளும் இருந்திருப்பாள். ஆனால்....
இவனோ அதை அவளுக்கு புரிய வைக்காமல் அவன் விருப்ப படி தான் அவள் நடக்கணும் என்று ஒரு தளையை போட்டு வைத்து அவளை வதைக்கும் பிடிவாத காதல் காரனாய் இருந்தான்.
நான் சொல்லி புரிய வைத்து தான் நீ அப்படி இருக்கணும்னு எந்த அவசியமும் எனக்கு இல்லை போடி.. எதுவும் புரிய வைக்காமலே நீ காட்டும் கோவம் கூட எனக்கு போதும்டி என்ற ரீதியில் தான் அவனது மனப்பான்மையும் காதலும் இருந்தது.
காலம் எப்போது இருவரின் மன நிலையை ஒன்றாக்கி கட்டுமோ?...
கட்டளுக்கு பிறகு வரும் பெருநிலை காதலை இருவரும் தாங்கிக்கொள்ள முடியுமோ என்றும் தெரியவில்லை.
மேலே வந்த ராயரையும் தொப்பலாய் நனைந்திருந்த திகம்பரியையும் கண்டு ஒன்னு ஒன்னு ரெண்டு என்று கணக்கு போட்டு
“இங்க என்ன மாமா நடக்குது” என்று கேட்ட ரவியை முறைத்தவன் அவனக்கு பதில் எதுவும் சொல்லாமல் விருட்டென்று அவ்விடத்தை விட்டு அகன்றான்.
“நான் இப்போ என்ன கேட்டுட்டேன்னு இவரு இப்படி முறைச்சிக்கிட்டு போறாரு.. ஒரு வேல எசக்கு பிசக்கான நேரத்துல வந்துடமோ.. இல்லையே நாம யாருக்கும் கரடி வேலை பார்க்கிறது இல்லையே” வாய் விட்டு முணுமுணுத்தவனை கண்டு அருகில் இருந்த நபர் அவனது தலையில் கொட்ட.
“எவ அவ” என்று முறைத்துக்கொண்டு திரும்ப, அங்கே அவனை விட அதிகமாய் முறைத்துக்கொண்டு திகம்பரி நிற்பதை கண்டு ‘ஈஈஈ’ என்று இளித்து வைத்தான்.
“சாரிங்க அம்மணி மாமா எதாச்சும் எசகு பிசகா நடந்துகுச்சா உங்ககிட்ட.. அதுக்கு வாய்ப்பே இல்ல, நான் கூட கொஞ்சம் சபல படுவேன் என்ற மாமா காவி கட்டாதா சாமியாரு.. சாமியாருன்னு கூட சொல்ல கூடாது.. அவரு முனிவர், இல்ல மகான் இப்படி ஏதாவது சொல்லலாம் அவ்வளவு உத்தமரு” என்று பாராட்டு பத்திரம் வாசித்தவனை அப்படியே கிணற்றில் தள்ளிவிட்டுட்டு
“இன்னொரு முறை உன் மாமானுக்கு வக்காலத்து வாங்கிகிட்டு என் கிட்ட வந்த தொலைஞ்ச. இப்போ தண்ணில தான் தள்ளி விற்றுக்கேன், அடுத்தமுறை வாய் பேசுனன்னு வை மகனே சொத்துல விஷம் வச்சுடுவேன் பார்த்துக்க” என்று மிரட்டிவிட்டுட்டு
“அவனா சாமியாரு பக்கா திகம்பரி பொருக்கி அவன்.. முனிவராம்... வருது நல்லா பத்திக்கிட்டு, அத்தனையும் வேஷம் பொருக்கி பொருக்கி” என்று திட்டிய படி திரும்ப அங்கே புன்னகை முகத்தோடு நமட்டு சிரிப்போடு அவளையே பார்த்தபடி இருந்தான் ராயர்.
ஒரு கணம் திகைத்தவள் ‘இதை விட அதிகமாவே திட்டு வாங்கிட்டு ஈஈஈன்னு இழிக்கிரவன் தானே இவன் இதெல்லாம் அவனுக்கு உரைக்காது என்று சிலிர்த்துக்கொண்டு விழியாலே அவனை பஸ்பம் ஆக்கிவிட்டு ‘போடா’ என்று முறைத்துவிட்டு அவ்விடத்தைவிட்டு போக
“போடி ரொம்ப தான் பண்ற” அவனும் சிலிர்த்துக்கொள்ள
இருவரின் முக திருப்பளையும் பார்த்துக்கொண்டே தன் முகத்தில் வலிந்த தண்ணீரை துடைத்து விட்டு வாய் நிறைய வைத்திருந்த நீரை ராயரின் மூஞ்சி மேலே கொப்பளித்து அடித்தான் ரவி.
“டேய் எரும என்னடா பண்ற” அவனது சேட்டைலிருந்து தப்பிக்க பார்க்க, அதற்க்கு விடாமல் ரவி ராயரின் முகம் முழுவதும் கண்ணப்பர் போல வாயிலிருந்த தண்ணீரை முழுவதும் ராயரின் முகத்துக்கு அபிசேகம் செய்தான்.
“ஏண்டா உங்க ரெண்டு பேத்துக்குள்ள பஞ்சாயத்து பண்ண வந்த என்னைய, நீச்சல் தெரியாத இந்த சின்ன புள்ளைய தண்ணீல தள்ளிவிட்டு அந்தம்மா போவுது. ஏன்னு ஒரு வார்த்தை கேக்காம பல்லை காமிச்சுகிட்டு நிக்குற நீ, உன்னை” என்று அருகில் காய்ந்து போன குச்சியை எடுத்து அடிக்க வர அவனின் பிடியில் சிக்காமல் ராயர் ஓட தொடங்க
“டேய் மாமா நில்லுடா” என்று துரத்தியபடி “கடைசில இவனுங்க போதைக்கு என்னைய ஊறுகாயா மாத்தி போட்டுட்டானுங்களே” என்றபடி அவனின் பின்னாடியே இவனும் துரத்திக்கொண்டு போக பார்த்துக்கொண்டிருந்த திகம்பரிக்கு சிரிப்பு வந்தது.
சோள காட்டுக்குள் சென்ற வனாவும் மதியும் ஒருவரை ஒருவர் காதலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
“ஒருவழியா உன்கிட்ட வந்துட்டேன்டி, எவ்வளவு நாள் பிரிவு இல்ல” அவன் ஆசுவாச பட
“ம்க்கும் நான் எப்போ வர சொன்னேன், நீங்க எப்போ வந்திருக்குறீங்க போங்க மாமா” அவள் பொய் கோபம் காட்ட சிரிப்புடனே அவளை வாகாக அனைத்து
“இல்லடா அந்த இடத்துல கொஞ்சம் வேலை இருந்தது. அதுவும் கடைசில தான் சொல்றானுங்க என்ன பண்றது முடுச்சுட்டு தானே வர முடியும்” என்றவன் அவளை தன்னோடு இருக்க அணைக்க
“மாமா நானும் வேலைக்கு வரவ உன் ஆபிசுக்கு” ஆசையாய் கேட்க
“வா ஆனா வேலை நடக்காது பரவாலயா” என்றவன் குறும்பாய் அவளை சீண்ட
“ப்ச் போங்க மாமா, எனக்கு ஆசையாய் இருக்கு ப்ளீஸ்”
“சரி வா ஆனா அங்க நீ உன் மாமாவ எதிர் பார்க்க கூடாது சரியா”
“சரி ஆனா ப்ரேக் டைம்ல நீ எனக்கு மட்டும் தான் வேணும் அதுக்கு சரி சொல்லு” என்று காரியத்தில் கண்ணாய் இருந்தவளை மனம் முழுதும் நிரம்பி வழிந்த காதலுடன் நோக்கியவன்
“நான் முழுசும் உனக்கு தாண்டா”
“போய் சொல்லாத மாமா” தெரிந்துக்கொண்டே அவனை சீண்டி பார்க்க
“அப்போ நிருபிச்சுட வேண்டியது தான்” என்று அவள் முகம் நோக்கி குனிய அவனை தள்ளிவிட்டுட்டு ஓட பார்த்தவளை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக்கொண்டு அவளது கழுத்தில் முகம் புதைத்தவனை தள்ளிவிட மனமில்லாமல் தன்னில் சுமந்தவள் அவனின் ஆசை படி அவனோடு இழைந்தாள்.
“ம்ஹும் நேத்து பேஞ்ச மழையில பூத்ததெல்லாம் ஜோடி ஜோடியா சுத்துது நாமக்கு தான் ஒன்னும் மாட்ட மாட்டேங்குது இல்ல மாமா” என்று சோள காட்டில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ஆடிய பயிர்களை கண்டு மனம் வெதும்பி போய் ராயரிடம் புலம்பினான் ரவி.
“உன்னைனு மட்டும் சொல்லுடா எதுக்கு என்னையும் சேர்த்து இழுக்குற..” என்றவனின் பார்வை சற்று தூரத்தில் மல்லி செடியில் இருந்த மல்லியை பறித்தபடி இருந்த திகம்பரியின் மீது படிந்த படியே சொன்னவனை கண்டு இரண்டு காதிலும் புகை வராத குறையாய் காண்டில் பார்த்துக்கொண்டிருந்தான் ரவி பயல்.
“இங்க என்ன நடக்குதுன்னு சத்தியமா புரியல மாமா” மண்டையை பிய்த்துக்கொல்லாத குறையாய் சொன்னவனை கண்டு கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்
“தெரியலனா விட்டுடுடா, அதுக்கெல்லாம் நீ சரிபட்டு வரமாட்ட, கடைசி வரை நீ முரட்டு சிங்குல் தான். நீ தெருஞ்சிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு, நீ எல்லாம் இன்னும் வளரனும்” என்றவனை கொலை வெறியோடு பார்த்தான். அவனின் கொலைவெறி பார்வையை கொஞ்சமும் கண்டுக்கொள்ளாமல் திகம்பரியை பார்த்தவாறே
“வாடா பாவம் தனியா பூ பருச்சுகிட்டு இருக்கா.... ங்க உதவி பண்ணுவோம்” என்றவனை சந்தேகமாக பார்த்தான் ரவி.
“ஓ வாடி போடின்னு பேசுற அளவுக்கு பழக்கமா.. டேய் பயலே உசாருடா.. உன் மாமன் பிஞ்சுலேயே பழுதிருப்பன் போலடா” கொஞ்சம் உசாராய் அவர்களை கவனிக்க அதுக்கெல்லாம் நீ ஒரத் கிடையாதுடா என்பது போல திகம்பரி அவனிடம் சிக்காமல் இருந்தாள்.
ஆனால் அதற்க்கு எதிர் பதமாய் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் ராயர். அவனின் ஆளை முழுங்கும் பார்வையில் திகம்பரிக்கு எரிச்சல் வந்தது.
“இப்போ தான் சண்டை போட்டுட்டு வந்தேன் கொஞ்ச மாச்சும் ரோசம் இருக்கா பாரு.. ஒண்ணுமே நடக்காத மாதிரி வந்து வழியுறான்..” என்று பொருமினாள் திகம்பரி..
“இவன் கண்ணு முன்னாடியே இருக்க கூடாது.. இருந்தா முழுசா உரிச்சு பார்ப்பது போலவே பார்த்து வைப்பான் இம்சை.” முனகியபடி பூ செடியின் மறைவில் நின்றுக்கொண்டு பூக்களை பறித்துக்கொண்டிருந்தாள்.
“வாடா” என்று அவனை இழுத்துக்கொண்டு திகம்பரிக்கு மிக நெருக்கமாய் நின்றுக்கொண்டு பூக்களை பறிக்க ஆரம்பித்தான். அவள் பல்லை கடித்தால்.
“இப்போ தானே திட்டிட்டு வந்தேன் கொஞ்சம் கூட ரோசமே இல்லையாடா” மெதுவாய் அவனை முறைத்துக்கொண்டு கேட்டவளை கொஞ்சமும் கண்டுக்கொள்ளாமல் “நீ திட்டுனியா நான் கூட நீ ஏதோ பாட்டு பாடுனனுள்ள நினைச்சேன்.. திட்டுணீன்னா இனி சொல்லிட்டு திட்டு” என்று அவளை மேலும் வம்பிழுக்க
“போடா பரதேசி” திட்டிவிட்டு வேறு புறம் நகர்ந்து நின்ருக்கொண்டாள். அவள் செல்லும் இடங்களுக்கு அவனும் பின்னாடியே வர
“மரியாதையா தள்ளி நில்லுடா” பல்லை கடிக்க “இவ்வளவு போதுமாடி” என்று அவளை இன்னும் நெருக்கி நிற்க
“இப்போ நீ தள்ளி நிக்கல நான் பூ பறிக்கவே மாட்டேன் பார்த்துக்க”
“நீ எதுக்குடி கஷ்டப்பட்டு பூ பறிக்கிற, நான் எதுக்கு இருக்கேன் நான் பருச்சு தரேன் நீ தலையில வச்சுகிட்டா மட்டும் போதுமடி” என்று வழிய
“இப்படி பண்ணுணீனா பூகூட தலைல வச்சுக்கவே மாட்டேன்” என்று சொல்ல
“உனக்கெதுக்குடி சிரமம் நானே வச்சு விடுறேன்” என்று மேலும் வழிய அவள் தலையிலே அடித்துக்கொண்டாள்.
“தலை வலிக்க போகுதுடி” அவன் ரொம்பவும் கரிசனை பட, திகம்பரிக்கு பீபி எகிரனதோ இல்லையோ அருகில் இதையேல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ரவிக்கு பீபி சுகர் கொலஸ்ட்ரால் உப்பு இப்படி எல்லாமே எகிரியது..
“எவ்வளவு பல்ப் வாங்குனாலும் அடங்க மாட்றியே மாமா” ரவி தான் புலம்பிக்கொண்டிருந்தான். அதையெல்லாம் கொஞ்சமும் கண்டுக்கொள்ளாமல் திகம்பரியை பார்வையிலே திண்ருக்கொண்டிருந்தான் ராயர்.
ஒருவழியாய் வனாவும் மதியும் வர எல்லோரும் சேர்ந்து பூ பறித்துவிட்டு வீட்டுக்கு சென்றார்கள்.
இரவு உணவுக்கு எல்லோரும் ஒன்றாய் கூட பெண்களின் எல்லோரின் தலையிலும் பூ இருக்க திகம்பரி தலையில் மட்டும் பூ இல்லை. அதை கண்டவனின் கண்கள் சிவந்து போக திகம்பரியை எரிப்பது போல பார்த்தான்.
அவனது பார்வையை கண்டுகொள்ளாமல் அவள் இருக்க ரவியின் காதில் எதையோ முணுமுணுக்க திகம்பரிக்கு ‘ஐயோ’ என்று வந்தது.. இவன் நினைச்சதை நடத்தாமல் விட மாட்டானே..
ரவி பாவம் போல பார்த்தான் ராயரை..
“ம்ம்” என்று சிங்கமாய் உறும
“உனக்கு போய் வாக்க பட்டு வந்தேன் பத்தியா என்னை சொல்லனும்டா மாமா பயலே” என்று திட்டிக்கொண்டே
“ஏங்க திகம்பரி மேடம் உங்களுக்கு பூ பிடிக்காதா, அவ்வளவு ஆசையா பறிச்சீங்களே ஏன் வைக்கல” என்று ராயரை முறைத்துக்கொண்டே திகம்பரியிடம் கேட்டான்.
“பிடிக்கும் ஆனா இப்போ தலை வலிக்குது அதுதான் ரவி” என்று அவளும் ராயரை முறைத்துக்கொண்டே பதில் சொன்னாள்.
இதுக்கு என்ன சொல்லுவதுன்னு தெரியாம ராயரை பாவம் போல பார்த்தான் ரவி..
“வைக்க சொல்லுடா” என்று ராயர் உறும
“இவனுங்க கிட்ட மாட்டிகிட்டு நான் முழிக்குறேன். ச்சை என்ன வாழ்க்கைடா இது ரவி பயலே” தனக்கு தானே அவன் வறுத்த பட்டு கொள்ள, அதை கூட செய்ய விடாமல் ராயார் அவனை தொனத்தி எடுத்தான்.
“அவ்வளவு ஆசை பட்டுட்டு கொஞ்ச மாச்சும் வச்சுக்கோங்க திகம்பரி.. தலைவலிக்கு பூ நல்லது.. அதனோட வாசத்தை ஆழமா மூச்செடுத்து உள் வாங்கி வெளிய விட்டம்னா தலை வலி எல்லாம் பறந்துடும்” என்றவன் திகம்பரியே பேச விடாமல் தொடர்ந்து தில்லையிடம்
“அம்மா இவங்களுக்கு பூ குடுமா” என்று ஆணை போட அவரோ ரவி சொல்வது உண்மை என்று நம்பி “இவன் சொன்ன மருந்து நல்லா வேலை செய்யும் போல” என்று எண்ணி மூன்று முலம் பூவை கொண்டு வந்து திகம்பரியின் தலையில் அவரே சூடி விட
“ஐயோ அக்கா எதுக்கு இவ்வளவு பூ... வேணாம்” என்று மறுக்க
“நல்லா மூச்சுவிட்டு பூ வாசத்தை உள்ளுக்கு இழுத்துக்க திகம்பரி தலை வலி ஓடி போய்டும். என் பிள்ளை சொன்னா அது உண்மையாதான் இருக்கும்” என்று ரவிக்கு சான்றிதழ் வழங்க, ரவி தன் காலரை தூக்கி விட்டு கொண்டான்.
திகம்பரி ராயரை கண்டு முறைத்தாள். கூடவே கொசுறான ராயரின் பிரதிநிதியான ரவியை கண்டும் முறைத்து வைத்தாள்.
‘ரெண்டும் கைல மாட்டட்டும்’ என்று கறுவிக்கொண்டாள்.
அதை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் யாருக்கும் தெரியாமல் ராயர் திகம்பரியை பார்த்து கண்ணடித்து சூப்பர் என்று செய்கை செய்ய
“போடா பொருக்கி” என்று விட்டு சாப்பிட ஆரம்பித்தாள். அதில் ராயருக்கு செல்ல கோவம் எழுந்தது.
“சப்பா இதுங்க தொல்லை தாங்க முடியலடா ராமா” ரவி தன் பாட்டுக்கு புலம்பினான்.. என்ன ஒன்னு அவனது புலம்பலை கண்டு கொள்ள தான் அங்கு யாரும் முன் வரவில்லை. ஐயோ பாவம்....
அன்றிரவு எல்லோரும் படுக்க போக மதியோடு திகம்பரி தூங்க செல்ல அவளுக்கு கொடுத்த தலையணை பாய் போர்வையோடு அறையில் தூங்க செல்ல யாரும் அறியாமல் அவளிடமிருந்ததை பிடுங்கி கொண்டு ராயர் பயன் படுத்தும் தலையணை பாய் போர்வையை அவளது கைகளில் திணித்துவிட்டு கூர் பார்வை ஒன்றை அவள் மீது வீசிவிட்டு சென்றான்.
‘ம்கும் இதுல ஒன்னும் குறைச்சல் இருக்காது’ முணுமுணுத்தவள் அவனது பயில் படுத்து தலையனையை தலைக்கு வைத்து அவனது போர்வையை உடம்பு முழுவதும் போர்த்திக்கொண்டு தூங்கி போனாள்.
அதை கண்ட ரவி ‘ஆஆ’ என்று வாயை பிளந்தான்.
“என்னடா” அவனது விரிந்த வாயை கண்டு கேட்க ”இல்ல உனக்கு உன் பொருளை மத்தவங்க தொட்டாளே கோவம் வருமே இப்போ நீயே குடுக்குறியே அதுதான் சா(ஷா)க்கா இருக்கு” எனவும்
”டேய் அவ...ங்க நம்ம வீட்டுக்கு வந்த கெஸ்ட் சோ நாம தானே கவனிக்கணும் அதுதான்” என்று விருந்தோம்பலை முன் வைக்க
“நம்பிட்டேன்டா மாமா” என்றான் நக்கலாய்
“சோச்சோ நம்புடா ரவி பயலே... எனக்கு போய் தவறான எண்ணம் வருமா உன் மாமன் சொக்க தங்கம் டா”
“எது நீயி இதை நான் நம்பனும்” முறைக்க
“நம்புடா” என்றவன் வெட்ட வெளியில் கட்டிலில் படுத்திருந்த ரவியின் வயிற்றின் மீது தன் கட்டிலிலிருந்து தாவி வந்து ஏறி உட்கார்ந்து அவனது மீசையை பிடித்து இழுத்துவிட்டு சொல்ல
“கருமம் நம்பி தொலைக்குறேன் ஆனா டேய் மாமா இப்படி வெட்ட வெளியில வந்து பண்ணாதடா.. எவனாவது பார்த்தா என்னை தவறா நினைப்பாங்கடா” என்று கதற
“அப்போ நீ நம்பீட்ட”
“சத்தியமா மாமா” என்று அவன் தலை மீது கைவைத்து அவனே சத்தியம் பண்ண
“அப்போ சரி நான் தூங்குறேன்” என்று அருகில் கிடந்த கட்டிலில் அவன் தூங்க போக ரவிக்கு போன உயிர் திரும்பி வந்தது..
இதையெல்லாம் வாசலின் ஓரம் நின்று பார்த்துக்கொண்டிருந்த திகம்பரிக்கு சிரிப்பு வந்தது. ராயரின் முகத்தில் இருந்த புன்னகை அவளுக்கு ஒரு நிறைவை கொடுத்தது...
அத்தியாயம் 8
அடுத்த நாள் காலை கீழே ஏதோ சத்தம் கேட்க திகம்பரி கீழே இறங்கி வந்து பார்த்தாள். பெரிய முற்றத்தில் ராயர், ரவி, வனா மூவரும் ஒருவருக்கொருவர் வம்பிழுத்துக்கொண்டு உடற் பயிற்சி செய்துக்கொண்டிருந்தனர்...
மதி அவர்களுக்கு நாட்டுக்கோழி முட்டையை பச்சையாக கொண்டுவந்து கொடுக்க இடை இடையே அதை ருசிபார்த்த படி “நீ என்னை தாண்டாள் எடு” என்றபடி ஒருவரின் மீது ஒருவர் ஏறி விளையாண்டுக்கொண்டு வீட்டையே ரணகலபடுத்திக்கொண்டிருந்தனர். பத்தாதற்கு கந்தன் வேறு.. மூணு எருமை மாடுகளும் சேர்ந்து அந்த சின்ன எலியை போட்டு பாடாய் படுத்திக்கொண்டிருன்தனர்.
“விடு மாமா, கை காலெல்லாம் வலிக்குது, எனக்கு நீ கத்துகுடுக்குற உடல் பயிற்சி எதுவும் வேணாம் போ” என்று சிணுங்கி கொண்டே அவர்கள் செய்வதை காப்பி பண்ணி தானும் செய்துக்கொண்டிருந்தான்..
“அப்படியெல்லாம் விடமுடியாதுடி வா வந்து தலை கீழா நில்லு” என்று ரவி தூணோரம் சட்டென்று அவனது காலை மேலே தூக்கி தலைகீழாக பிடிக்க
“டேய் விடுடா அண்ணா பயமா இருக்குடா”
“அதெல்லாம் ஒரு பயமும் இல்ல நல்லா நில்லு வளையாதடா” என்று அதட்டல் போட்டு அவனை தலை கீழாக நிற்க பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தான்.
அதன் பின் ராயர் மும்மரமாக தண்டால் எடுத்துக்கொண்டிருக்க அவன் முதுகு மேல் பட்டென்று ஏறி ரவி நீட்டி படுக்க
“எரும கீழ இறங்குடா”
“ம்ம் முடியாது.. உன் பலம் என்னன்னு நான் சோதிக்கணும்”
“என்னையவே சோதிக்கிரியா இரு வரேன்” என்று அவனை அப்படியே பிரட்டி போட சட்டென்று கீழே விழுந்தான் ரவி..
அதை கண்டு கந்தன் சிரித்து “நல்லா வேணும் என்னை படுத்துனில” கொக்கரிக்க
“இருடா எலிக்குஞ்சு பயலே... உன்னை என்ன பண்றேன்னு பாரு” என்று அவனை அடிக்க வர அவனோ
“அம்மா அண்ணன் என்னை அடிக்க வரான் காப்பாத்துமா” என்று அடுக்கைகுள் புக
“அய்யய்யோ காலையிலேயே தொல்லை பாராட்டு பத்திரத்தை வாசிக்க ஆரம்பிச்சுடுமே” என்று அலறியவன் இரண்டு முட்டையை ஆட்டைய போட்டுட்டு பின் பக்கம் ஓடி விட்டான் ரவி..
“வனா வாடா உன்னை வச்சு தண்டால் எடுக்குறேன்” என்று ராயர் கூப்பிட
“பரவலா அண்ணா” என்று அவன் தயங்கினான்.. ரவி அவனிடம் உரிமையாக மேலே ஏறி படுத்து இருக்க அதை கண்டவனின் கண்களில் ஆசை வந்தது.. என்ன படித்து என்ன சொத்து இருந்தாலும் நாம் பாசத்துக்கும் அன்புக்கும் எப்பவும் அடிமை தானே...
நமக்குள் எழும் சின்ன சின்ன ஆசைகளை மறைக்க முடியாதே... அவனது கண்கள் ராயருக்கு காட்டி கொடுக்க
“வாடா” என்று அழைத்தான்.
“அண்ணா”
“டேய் உன்னை தாங்குவேன் வாடா” என்று வலுகட்டாயாமாக அவனை அழைக்க ஒரு வித குதுகலத்துடன் அவன் மீது வனா வந்து படுக்க ராயரோ அசால்ட்டாய் அவனை சுமந்தான்..
இரு கையையும் நிலத்தில் ஊன்றி, கட்டைவிரல் நுனியில் நின்று கீழே மேலே என்று ஏறி எழுந்து அவன் தண்டால் எடுத்த படி நிமிர எதிரே படியில் திகம்பரி வந்து கொண்டிருந்தாள்.
அவளை பார்த்தவுடன் வாயில் வாட்டர் பால்ஸ் ஊத்த அதை மறைத்தபடி அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அவளோ அவனை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் அடுப்படி பக்கம் போக ராயருக்கு ‘புஸ்’சென்று ஆனது..
“கொஞ்சம் கூட அசரமாட்டேங்குறாலே.. இவள எப்படி கரெக்ட் பண்றது” என்றவனின் நெஞ்சில் அவளை சுமந்து தண்டால் எடுத்த நினைவுகள் வர “ஒரு வேலை என்னை போல அவளுக்கும் அந்த நினைவுகள் வந்திருக்குமோ.. ஆகா அது தான் அம்மணி ஓடிட்டாலா வெட்க பட்டாலோ.. ச்ச முகத்தை ஒழுங்கா பார்க்க முடியலையே..” ஒரு வித குசியும் தவிப்புமாய் மனம் லயித்து போக வனாவின் உடம்பு பாரம் காற்றாய் தெரிந்தது ராயருக்கு..
அடுப்படிக்குள் நுழைந்தவளுக்கு ராயரின் நினைவுகள் மட்டுமே நெஞ்சில் வளம் வந்து கொண்டிருந்தது..
ஒவ்வொரு நிமிசமமும் காதல் காதல் மட்டுமே.. அவனது முரட்டு தனத்தில் காதலை கண்டு அவனுக்குள் ஒடுங்கி அவனோடு உயிராய் கலந்து ஒவ்வொரு காலை பொழுதும் ஒவ்வொரு இரவு பொழுதும் அவர்களுக்காகவே உதித்து மறைவது போல... என்ன நடந்தாலும் அது கடைசியில் காதலில் கொண்டு வந்து முடித்து..
அவ்வளவு அந்யோனியம்... உயிர் பிரிந்தாலும் பிரியாத நினைவுகள்.. அவ்வளவும் பசுமை.. இருவரும் சேர்ந்து வாழ்ந்த நாட்களில் திகம்பரி ஒரு நாள் கூட முகத்தை சுருக்கியது இல்லை.. அவன் எவ்வளவு பேசினாலும் அது அவனது காதலின் வெளிபாடு மட்டுமே என்று எடுத்துக்கொண்டு அவனது சிகை கோதி விட்டு நகர்ந்து விடுவாள் அப்பொழுதுகளில்.. அவ்வளவு காதல் அவனின் மீது..
ஒரு நொடி கூட தனிமையை அவள் அனுபவித்தது கிடையாது.. அந்த அளவு அவன் அவளை நாடி இருந்தான்.. அவள் தான் அவனுக்கு எல்லாமே என்று கொஞ்சம் கூட சுயநலமில்லாமல் அவளிடம் அவன் காதல் கொண்டிருந்தான்.
ஆனால்...
இப்போ எல்லாமே தலை கீழாக மாறி இருக்கிறது நிலை.. எல்லாமே நீதான் எனக்கு என்றவன் மொத்தமாய் அத்துக்கிட்டு சென்றவனை நினைக்கும்போது வேதனை நெஞ்சை கவ்வியது..
அவனிடம் முழுமையாக கூட கோவத்தை காட்ட முடியாமல் இருக்கும் தன் நிலை எண்ணி நொந்து போனாள் திகம்பரி...
அவளுக்கு அவன் இன்னும் கை பிள்ளைதானே.. கை பிள்ளை தாயை விலகி சென்றால் அதை தாயால் தாங்கிக்கொள்ள முடியுமா... தன்னை விட்டு சிறு அடி எடுத்து வைத்தாலே தாங்காது தாயின் மனசு..
பாசம் வைக்காமல் இருந்துவிட்டால் எதுவுமே தெரியாது.. ஆனால் ஆதியும் அந்தமும் நீதான் நீ மட்டும் தான் என்று எல்லாமுமாக இருக்க வைத்துவிட்டு ஒருநொடியில் அனாதயாகிவிட்டு சென்றால்... மனம் முழுதும் வலிதானே...
அந்த வலியை தான் ராயர் திகம்பரிக்கு கொடுத்து சென்றான்.
காலை சுற்றும் நாய் குட்டி போல தொட்டது தொன்னூருக்கும் அவனுக்கு அவள் வேண்டும்.. அவள் இல்லை என்றால் அவனுக்கு எதுவும் நடக்காது.. அவளை கொஞ்ச நேரம் காணா விட்டால் கோபத்தோடு அவளை தேடி வந்து அவளிடம் சண்டையிட்டு ஆஆ வென்று கத்தி தீர்த்துவிட்டு வாரி எடுப்பான் அவளை..
அவனது தேடலில் மனம் குளிர்வாள் அவள்.. அவன் தேட வேண்டும் என்பதற்காகவே அவள் சற்று நேரம் ஆட்டம் காட்டுவாள் அவன் கண்களில் தட்டு படாமல்..
அவனது ஒவ்வொரு தேடலிலும் தன் குழந்தை தாயை தேடும் இல்லையா, அதுபோலவே அவனை காணுவாள். அவன் அவளது முரட்டு குழந்தை.. அவனது செயல்களும் அப்படி தான் இருக்கும்..
கோவம் வரும்போது மட்டும் அவன் முரட்டு குழந்தை.. மற்றைய நேரங்களில் அவன் அவளது முந்தானையில் ஒளியும் மென்மையான அழகான காதல் குழந்தை..
அவனை இது அது என்று பிரிக்காமல் மொத்தமாய் அவளுக்கு பிடிக்கும். என்ன செய்தாலும் அவன் அவளது மனம் கவர்ந்தவன்.. இப்போது கூட அவளுக்கு அவன் மீது கோவம் இல்லை.. மாறாக சின்ன வருத்தம் தான்.. தன்னை புரிந்துக்கொள்ளவில்லையே என்று...
புரியவைக்க நினைக்கும்போது தனக்கு அது தேவையில்லை என்று முரட்டு தனமாய் அவளை விட்டு பிரிந்து சென்று, புரியவைக்க ஒரு வாய்ப்பை கூட அவளுக்கு குடுக்காமல் தன் பிரிவை அவளுக்கு பரிசளித்துவிட்டு அவன் வந்துவிட்டான்.
அவனை பிரிந்த அவள்... அந்த வலியை வார்த்தையால் சொல்ல முடியுமா.. முந்தானைக்குள் பதுங்கியவன், காலை சுற்றியவன் கேட்டது கேட்காதது என்று அவளுடைய எல்லாத்தையும் நிறைவேற்றியவன்.. பாசம் என்ற நூலில் தன்னை பிணைத்து அன்பு, நேசம், காதல் என்று எல்லாத்தையும் அறிமுகம் செய்துவிட்டு தனிமையில் தள்ளிவிட்டு, கிட்ட தட்ட மூன்று வருடங்கள் வெறும் தனிமை தனிமை மட்டுமே அவளுக்கு கிடைத்த வரம்.
புதைகுழியாய் நகர்ந்த வருடங்கள் மீண்டும் கிடைக்குமா அவளுக்கு அவனோடு சந்தோசமாய் மீண்டு வாழ... நகர்ந்து சென்ற நொடிகள் எப்போதும் கைகிட்டாதே.. அவ்வளவு வேதனை.. நின்றால், நடந்தால், பார்த்தால், கேட்டால், எல்லாமே அவனது நினைவுகள் தான்..
உடுத்தும் உடைகளிலிருந்து பார்க்கும் பொருட்களிலிருந்து விடும் மூச்சு காத்து உட்பட எல்லாமே அவன் தானே..
அவளது விரல்களை பார்க்கும்போது அவன் மென்மையாய் கை பிடித்து நகம் வெட்டும் நிகழ்வு தானே நினைவு வருகிறது..
முகம் கழுவி வெளிவந்து கண்ணாடி பார்க்கும் போது அவன் முத்தமிட்ட தன் முக ஈரத்தை துடைக்கும் நினைவு தானே வருகிறது..
உடுத்தலாம் என்று போனால் அவன் தேர்ந்தெடுக்கும் உடைகள் தானே கண் முன் விரிகிறது..
உணவு உன்ன அமர்ந்தால் உண்ணும் உணவினை ஊட்டிவிட்டு சிறு பிள்ளையாய் பாவித்த நொடி தானே வருகிறது..
அது எல்லாம் எவ்வளவு அழகான காலங்கள் அனைத்தயும் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டானே.. கண்கள் கலங்கியது.. எவ்வளவு கண்ணீர்.. எவ்வளவு தனிமை..
திணற திணற அன்பை வழங்கிவிட்டு நொடியில் அத்தனையும் பறித்துக்கொண்டு தன்னோடு எடுத்துக்கொண்டு சென்றுவிட்டானே..
வலிக்க வலிக்க கொடுத்து சென்ற தனிமை.. கண்ணீர் மட்டுமே துணை.. அவனது நினைவுகளை தன்னோடு சுமந்த பாரம்..
பிரிந்து விட்டு அவன் மட்டும் நிம்மதியாகவா இருக்க போகிறான்.. கிடையவே கிடையாது.. அவளுக்கு நல்லாவே தெரியும். அவள் இல்லை என்றால் அவன் வெறும் கூடு தான்.
அந்த கூட்டோடுதான் இத்தனை வருடம் வாழ்ந்துகொண்டிருந்தான் யாவரும் அறியாமல்.. கூடவே இருக்கும் ரவிக்கு கூட தெரியாது. அவனின் வேதனை.
திகம்பரியின் மூச்சுகாத்துக்காக அவன் ஏங்கும் ஏக்கம் அவன் மட்டுமே அறிவான்.. அவன் அருகில் இருக்கும் யாருக்குமே அது தெரியாது.. ஆனால் தொலைவில் இருந்தாலும் திகம்பரிக்கு அது நன்கு தெரியும். அவனது செயல்களை பற்றி நினைக்கும் நினைவுகளை பற்றி முழுவதும் அறிந்து வைத்திருப்பவள் ஆயிற்றே...
அவளது அருகாமையில் தான் அவன் தூங்குவான். வெயில் மழை காய்ச்சல் தும்மல் இமை சிமிட்டல் என்று எதுவானாலும் அவனுக்கு அவள் வேண்டும்..
எவ்வளவு அழகான வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.. எல்லாத்தையும் ஒரு நிமிடத்தில் கலைத்து விட்டு.. அன்பு கொண்ட இரு மனமும் இன்று வேதனையில்...
அவனால் அவளது உதாசீனத்தை தாங்கமுடியாது என்பதுதான் உண்மை.. அவளது சிறு முக சுருக்கம் கூட அவனை வதைக்கும்.. அதனாலே அவளிடம் அவன் பயங்கரமாக கடுமை காட்டுவான் அவன் காட்டும் கடுமையில் உண்மையில் அவனது பயம் தான் தெரியும்.. பயம் என்பதை தாண்டி பார்த்தால் அவனது அன்பு தெரியும்..
அதை திகம்பரி சரியாய் புரிந்துக்கொண்டுல்லாள்... அவளது புரிதல் தான் இங்கே தவறாய் போய் விட்டது....
நீண்ட நெடிய மூச்சி இழுத்துவிட்டு தன்னை சமன் படுத்தியவள் சமையலில் தில்லைக்கு உதவி செய்ய ஆரம்பித்தாள்.
அங்கிருந்த வாழை பூவை பார்த்தவள் அதில் ராயருக்கு வடை போட்டால் பிடிக்குமே என்று யோசித்து
“அக்கா வாழை பூ எதுக்கு வச்சிருக்கீங்க, அதுல என்ன சமைக்க போறீங்க”
“கூட்டு பண்ணலாம்னு வச்சுருக்கேன் திகம்பரி, உனக்கு அதுல ஏதாவது செய்ய தெரியுமா” ஆவலாய் கேட்க
“நான் அதுல வடை போடவா கா”
“அதுல வடை போடுவாங்களா” அவர் ஆச்சிரியமாய் கேட்க
“ம்ம் ஆமாக்கா நல்லா இருக்கும்”
“அப்போ சரி இரு பின்னாடி மரத்துல இன்னும் ரெண்டு பூ இருக்கு நான் போய் பருச்சுட்டு வரேன்” என்று வேகமாய் அதை பறித்து வேலைக்கு இருந்த ஆட்களிடம் அதை ஆய சொல்லிவிட்டு வந்து திகம்பரியிடம் பேசியபடி சமையளை செய்ய ஆரம்பித்தார்.
அவளும் அவரிடம் பேசியபடி செய்ய அவளின் வாந்துவமான பேச்சும் இயல்பாய் அடுப்படிக்கு வந்து உதவுவதும் தில்லைக்கு திகம்பரியை ரொம்ப பிடித்து போனது.. கொஞ்சம் கூட அலட்டல் இல்லாமல் மெத்த படுத்த பகட்டு இல்லாமல் இருந்தவளின் குணத்தில் தில்லை டோடல் பிளாட்...
சின்ன சின்ன கிண்ணங்களில் எதையோ ஊற்றி கொண்டிருந்த தில்லையிடம் “என்ன க்கா இது” கேட்க
“இது நல்லி சூப்பூடா இந்தா உனக்கு இது” என்று அவளிடம் ஒன்றை நீட்ட அதை ருசி பார்த்தவள்
“சூப்பரா இருக்கு கா, செம்ம டெஸ்ட்” என்று பாராட்டினாள்.
“நீ தான் சொல்ற நல்லா இருக்குன்னு வீட்டுல ஆறு தடி மாடுங்க இருக்குங்க ஒன்னும் வாய தொரக்காது நல்லா இருக்குன்னு சொல்ல...” என்று சொல்ல
“ஹஹஹா விடுங்க கா இவங்க எப்போவுமே இப்படிதான்.. வீட்டுல நாம செஞ்சு குடுத்தா கண்டுக்கவே கண்டுக்காதுங்க.. அதுவே ரெண்டு நாலு ஊருக்கு போங்க எப்போ வருவ எப்போ வருவன்னு நொச்சு பண்ணி, சோறு நல்லாள கொழம்பு நல்லாள வாயிலே வைக்க முடியல உனக்கு ஊரு தான் பெருசா போச்சா..
அப்போ நான் சாப்பாடு தண்ணீ இல்லாம செத்து போனா பரவாலையான்னு சண்டை பிடிக்கும்ங்க, பார்த்துகிட்டே இருங்க ரொம்ப பண்ணாங்கன்னா ரெண்டு நாள் கம்பி நீட்டிடுங்க” என்று சொன்னவளை இன்னும் இன்னும் பிடித்து போனது அவருக்கு..
“அப்படி தான் பண்ணும் போல திகம்பரி இதுங்க பண்ற டார்ச்சருக்கு” என்று வெள்ளந்தியாய் சிரித்தார் அவர்.
“ஆல் தி பெஸ்ட் கா” கை கொடுக்க அழகான நட்பு மலர்ந்தது அங்கே..
“சரி இதை போய் அவனுங்களுக்கு குடுத்துட்டு வரேன்” என்று நகர
“நீங்க இருங்க கா நான் போறேன்” என்று அவரிடம் வாங்கிக்கொண்டு கையில் ஒரு சிறிய டப்பாவை எடுத்துக்கொண்டு போனாள் திகம்பரி.
எல்லோருக்கும் எடுத்து குடுத்துவிட்டு மதிக்கு உதவி செய்ய பின் கட்டுக்கு சென்றவளின் பின்னே பதுங்கி பதுங்கி ராயர் வந்தான்.. அருகில் இருந்த அறைக்கு அவளை இழுத்து சென்றவன்
“ஏய் இது யாரு போட்ட சூப்புடி” அவளை அணைவாய் பிடித்தபடி கேட்க
“உங்க அக்கா தான்” என்றவள் “இப்போ எதுக்கு இங்க தள்ளிட்டு வந்திருக்கீங்க யாரவாது பார்த்தா தாப்பா போய்ட போகுது.. விடுங்க நான் போறேன்”
“அதெல்லாம் காவலுக்கு ரவி இருக்கான் நீ கவலை படாத” சமாதன படுத்த
“சரி இப்போ என்ன வேணும்” என்றவளின் பார்வை கதவிலே இருக்க
“நான் இங்க இருக்கேன்” கடுப்படித்தான் அவன். அவளின் பார்வை தன் மீது இல்லாமல் போனதால்.
“ஆரம்பிச்சுட்டான்டா” முணகியவள் அவனை பார்த்து
“சொல்லுங்க என்ன வேணும்”
“எங்க அக்கா போட்டா காரம் கம்மியாதான் இருக்கும் இதுல காரம் அதிகமா நான் குடிக்குற அளவுக்கு இருக்கு எப்படி இதுல காரம் வந்தது” அவளை பார்வையால் தின்றபடியே அவள் தான் போட்டிருப்பாள் என்று தெரிந்துக்கொண்டே அவன் கேட்க
“உங்களுக்கு அந்த காரம் சரியா இருக்காதுன்னு நான் தான் மேற்கொண்டு கொஞ்சமா மிளகு தூள் சேர்த்தேன்” என்றாள் கீழே குனிந்தபடி..
அவளையே பார்த்துக்கொண்டிருந்த ராயருக்கு சும்மா ஜிவ்வென்று இருந்தது.. அவளின் தொலையாத காதலை எண்ணி..
“அப்போ அம்மணி எதையும் மறக்கல” இரட்டை அர்த்தத்தில் கேட்டவனை கண்டு விலுக்கென்று நிமிர்ந்தவள் கண்களில் அனல் கக்கும் பார்வையை சிந்திவிட்டு
“சாரி மிஸ்ட்டர் நான் எதையும் மறக்கல ஆனா மறக்க வேண்டிய சூழல் வந்திடுச்சு” என்றவள் அவனை எதிர்பாரா நேரத்தில் விளக்கி விட்டு சென்றுவிட்டாள்.
அத்தியாயம் 9
அவளது விலகலில் சினம் கொண்டவன் அவள் வசமாய் சிக்கும் நேரத்துக்காக காத்திருந்தான். அறையை விட்டு வெளியே வந்தவனின் பார்வை தலையில் துண்டை போட்டு மூஞ்சியை தொங்கபோட்டுக்கொண்டு நின்ற ரவியை கண்டு
“ஐயோ இவன் வேற ஓவரா பெர்பாம் பண்ணி சாவடிப்பானே” அவன் காது படவே சொல்லிவிட்டு பலி கொடுக்கும் ஆடு போலவே அவன் போட்டிருந்த துண்டின் இரு முனையை பிடித்து இழுத்துக்கொண்டு
“ஏதாவது பேசுன கொலை பண்ணிடுவேன் பார்த்துக்க” என்று மிரட்டிவிட்டு நேற்று பாதியில் விட்ட உழவு வேலையை பார்க்க சென்றார்கள்.
கூடவே வனாவும் வர மூவரும் பேசிக்கொண்டே மாட்டை ஓட்டிக்கொண்டு சென்றார்கள்.
ராயரிடமிருந்து விலகி வந்தவளின் நெஞ்சில் சொல்லொன்னாத வலி எழ தாங்க முடியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது..
“என்னால உன்னை வெறுக்க முடியலடா, நீ என்ன பண்ணாலும் நான் உன்னை காதலிச்சுகிட்டு தான் இருப்பேன்.. உன்னை தவிர்த்து இந்த நெஞ்சுல யாருக்கும் இடம் இல்ல.. ஆனா நாம ஒண்ணா வாழ முடியாது மாமா... அந்த தகுதி எப்போவோ போய்டுச்சு.. நான் உன்னை தேடி இங்க வந்திருக்கேன்னா இனி உன்னை நினைச்சவுடன் என்னால பார்க்க முடியாதுன்னு தான். உன்னை மனசு பூர நிறைச்சு வச்சுக்க தான் நான் இங்க வந்தேன்.
உன் கூடவும் உன் குடும்பத்து கூடவும் கொஞ்ச நாலாவது இருக்கணும்னு ஆசை பட்டு தான் வந்தேன்.. ஆனா இப்போ உன் கூடவே இருக்கணும் போல இருக்கு.. ஆனா அது முடியாதே ராய்.. நான் போகணும் உன்னை விட்டு ரொம்ப தூரம் போகணும்.. உன்னை காணாதா தூரம் போகணும்..
உன்னை நினைக்கவே நினைக்காத உள்ளம் வேண்டும்.. அது நான் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் முடியாதுன்னு தெரியும் இருந்தாலும் அந்த வரம் வேணும் மாமா.. ஏதோ ஒன்று உன்னை எனக்கு நினைவுருத்திக்கொண்டு தான் இருக்கும் இவ்வுலகில்.. அதிலிருந்து எனக்கு விடுதலையே கிடையாது. என் தலைவிதி நான் காலம் முழுக்க தனியா தான் இருக்கணும்னு இருக்கு...
உன்னை ரொம்பவே இழந்து கொண்டிருக்கிறேன் ராய்.. உன்னை மீட்டெடுக்கும் வழி எனக்கு புலப்படவில்லை.. உன்னோடு என்னை சேர்த்து கட்டும் மாய கயிறு அறுந்து எங்கோ விழுந்து விட்டது..
மனம் முழுக்க தாங்க முடியாத பெரும் சுமையை சுமப்பது போல பாரமாய் இருந்தது திகம்பரிக்கு.. கண்முன் நடமாடும் தன் மன்னவனின் அருகாமைக்கு உள்ளம் ஏங்கியது.. அவனின் மார்பில் துயில் கொள்ள ஆசை கிளர்ந்தெழ தன்னை அடக்க முடியாமல் ஓடி சென்று பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டாள்.
குழாயை திறந்து விட்டு வெடித்து அழ ஆரம்பித்தாள். தன் சோகம் துக்கம் எல்லாவற்றையும் அதில் கரைக்க முயன்று தோற்றுப்போனாள். அழுதால் துக்கம் குறையும் ஆனால் இங்கே இவளுக்கு தான் இழந்து நின்ற ராயரின் அருகாமை எண்ணி எண்ணி வேதனை இன்னும் அதிகமானது தான் மிச்சம்..
கண்ணீர் வழியும் முன்னவே தன் கரங்களால் துடைத்த ராயரின் அன்புக்காக அவளது மனம் ஏங்கி தவித்தது..
அவனது அன்பு பசுமரம் போல இன்னும் மாறாமல் தானே இருக்கிறது.. அதை உணர்ந்தவளின் மனமும் முகமும் பூவாய் மாறியது.. அவனை நினைக்கும் போதே ஒரு வித கருவம் உள்ளுக்குள் பொங்கி பெருகியது..
என்னோட ராய்.. எனக்கு மட்டுமே சொந்தமான ராய்.. என்று வாய் விட்டு சொன்னவளின் மனசு அதுவரை இருந்த பாரம் சற்று விலகியது போல் இருந்தது... நீ எனக்கு வேணாம்.. அதுபோலவே நான் உனக்கு வேணாம்..
நாம் இருவரும் பிரிந்து இருந்தால் தான் உனக்கு நல்லது ராய்.. இங்கு வந்து உன்னோட நினைவுகளை என் நெஞ்சு முழுவதும் வாங்கி கொண்டு போகணும்னு தான் நான் வந்ததே.. அதை மட்டும் இனி சரியாக பார்க்கிறேன்டா.. இனி உன் கிட்ட கோவ பட மாட்டேன்.. நீ என்னை என்ன செஞ்சாலும் எனக்கு சம்மதம்..
உன்னை வறுத்த படுத்தி பார்க்க என்னால முடியாது.. உன் கண்ணுல இருக்க எனக்கான தேடல் போதும்... அதிலேயே என் ஜென்மங்களை கடந்து நான் உயிர்ப்புடன் வாழுவேன்டா மாமா... எனக்கு உன் சிரிப்பு போதும்..
‘உன் முகத்துல இருக்குற சிரிப்பு தானே என்னை உன் வசமாக்கியது. அதை வாடி போக விட மாட்டேன் நான் இங்கு இருக்கும் வரை’ என்று தன்னுள் உறுதி மொழி எடுத்துக்கொண்டவள் அவனது சந்தோசத்துக்காக அவள் இங்கிருக்கும் வரை நடிக்க முடிவெடுத்தாள்.
உள்ளுக்குள் எரியும் எரிமலையை அடக்கி தன் புன்னகையால் பூசி மொழுக ஆரம்பித்தாள் தன் உயிரில் கலந்த தீஞ்சுவையின் நாயகனுக்காக...
எல்லாமே அவனுக்காகதானே... இதையும் தன்னவனுக்காக செய்ய தொடங்கியது தன் உயிர் போகும் வலியை மறைத்து அந்த காதல் கொண்ட இதயம்.
மூன்று வருடம் சொந்தம் கொண்டாடிய உறவிடமும் அவளின் உயிரிடமும் இன்று யாரோ போல சொந்தமற்ற ஒரு விலகளை கொடுக்க வேண்டியது இருக்கே என்று அந்த உயிர் துடித்தது..
மனதோடு அவளுக்கு அவளே
“யாருக்கு யார் சொந்தம் ஆவதென்று தேவதைகள் வந்து சொல்வதில்லை..
விதியென்ற காட்டிலே திசை மாறும் வாழ்கையில்..
போகிற போக்கில் பாதைகள் கண்டு விடு...
எண்ணம் போல வாழ்க்கையே எவருக்கும் வாய்ப்பதில்லை..
வாழ்க்கை போல் எண்ணம் கொள் வாழ்வது துயரம் இல்லை..
ரோஜாவின் கண்ணீர் தானே அத்தராய் வாசம் கொள்ளும்...” சொல்லி தன்னை தானே தேற்றிக்கொண்டாள்.
இது அத்தனையும் ராயருக்காக அதனால உனக்கு உயிர் வலி எழுந்தாலும் பல்லை கடித்துக்கொண்டு அவனோடு நினைவிலே வாழ்ந்து விடு....
உன்னை நீங்கி போனாள் தான் ராயரின் வாழ்வு செம்மை படும்.. அவனோடு வளர்ச்சி பாதையில் நீ கருப்பு புள்ளியாய் போய்விடாதே.. என்று அறிவுருத்திக்கொண்டாள்.
மூளை அவனை விட்டு போக சொல்லுது.. ஆனால் பாலாய் போன மனது அவனிடமே சரணடைய சொல்லுது.. எதை ஏற்ப்பாள் திகம்பரி..
--
காலை நேர பரப்பில் இருந்த தில்லைக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய தொடங்கினாள் திகம்பரி. அவளது உதவி தில்லைக்கு இனிமையாய் இருக்க இருவரும் பேசிக்கொண்டே செய்தர்கள்.
அது அப்படி இது இப்படி இவனுக்கு இப்படி செய்தால் தான் பிடிக்கும் அவனுக்கு அப்படி செய்தால் தான் பிடிக்கும் என்று பட்டியல் போட்டுக்கொண்டே சமைத்துக் கொண்டிருந்தவரை வாஞ்சையோடு பார்த்தாள். எவ்வளவு அன்பான பெண்மணி...
“நீங்க கிடைக்க இந்த குடும்பம் குடுத்து வச்சு இருக்கணும் அக்கா” என்று நெகிழ்ந்து போய் கூற, தில்லை சட்டென்று அவளை திரும்பி பார்த்தார்.
“என்னக்கா நான் ஏதாவது தவறா சொல்லிட்டனா..”
“ம்ஹும் இல்லடா.. நாங்க யாரும் இங்க பிருச்சி பார்த்ததே இல்லை.. நீ முதல் தடவை சொன்னதும் எனக்கு எங்க அம்மா கடைசி நிமிஷம் சொன்னது தான் நினைவுக்கு வருது..”
“அக்கா” அவள் அதிர்ந்து போய் அவரை பார்க்க
“எனக்கு எப்போதுமே இந்த குடும்பத்துமேல பாசம் அதிகம் தான்.. அதுவும் அம்மா இல்லன்னவுடன் எல்லாமே என் கையில் தான்.. நான் கல்யாணம் பண்ணியும் அம்மாவுடன் தான் இருந்தேன். எல்லாத்தையும் அம்மா தான் பார்த்துக்குவாங்க. அதனால எனக்கு வீட்டு பொறுப்பை பத்தி எதுவும் தெரியாது. அம்மாவோட கடைசி நிமிசத்துல என்னை கூப்பிட்டு
“இது உன் குடும்பம், இந்த குடும்பத்தொட நல்லது கேட்டது எல்லாமே உன்னை தான் சேர்ந்தது, உனக்கு உன் பசங்க மட்டும் இல்லாம கூடுதல் ரெண்டு பசங்க இருக்காங்க. காசு பணத்தை விட பிள்ளைகளின் வளர்ப்பு ரொம்ப முக்கியம். அதைவிட அவங்க மனசு ரொம்ப முக்கியம். எதிலையும் கோட்டை விட்டுட கூடாதுன்னு எனக்கு சொன்னாங்க”
“அவங்க சொன்னவுடனே என்னையும் அறியாம நான் தான் இந்த குடும்பத்துக்கு எல்லாமே அப்படின்ற ஒரு எண்ணம் வந்துடுச்சு திகம்பரி... அப்போ எல்லா இடத்துலயும் என்னை வச்சு பார்க்காம என் அஞ்சு பிள்ளைகளை வச்சு பார்க்க ஆரம்பித்தேன்..”
“தானா அவங்களோட குணம் எனக்கு அத்துபடியானது.. இந்த பிள்ளை இந்த நேரம் இப்படி பண்ணும்... அந்த பிள்ளை இப்படி நடந்துக்கும்.. இந்த பிள்ளைக்கு இது தேவை, அந்த பிள்ளைக்கு அது தேவை அப்படின்ற ஒரு தெளிவு வர ஆரம்பிச்சது.. அதுக்கு பிறகு சிந்திக்கிற சிந்தனை முதற்கொண்டு எல்லாமே என் பிள்ளைகளாய் மாறி போய்ட்டாங்க.. அதனால தான் என்னால இப்படி இருக்க முடியுது.. இன்னைக்கு நீ சொல்ற சொல்லுல நான் எங்க அம்மாவுக்கு குடுத்த வாக்கை சரி வர செஞ்சுட்டேன்னு நினைக்குறேன் திகம்பரி” என்றார் நெகிழ்வாக.
“அதுல சந்தேகமே இல்ல கா” என்று தன்னோடு அணைத்துக்கொண்டாள்.
ஐந்து பிள்ளைகளை வைத்துக்கொண்டு சிவனாண்டியும் தில்லையும் தங்களது தனிமைக்காக தனியறை தேடியது இல்லை என்ற அவர் சொல்லாத சில விஷயம் கூட திகம்பரிக்கு புரிந்து போனது....
இருவருக்கும் இள வயது தானே அப்போது.. இருந்தாலும் கட்டுப்பாட்டோடு பிள்ளைகளுக்கு உதாரணாமாய் இருந்து அன்பை தவிர வேறதையும் கத்துக்கொடுகாமல் நல் வழியில் நடத்தி சென்று சாதனை பெற்றோராய் இருப்பது அவ்வளவு எளிய காரியம் இல்லயே..
“ஆனா இந்த வார்த்தை இந்த குடும்பத்தில் இருக்கிற எல்லாருக்கும் பொருந்தும் திகம்பரி.. மாமாவாகட்டும், ராயராகட்டும், வனா, ரவியாகட்டும் எல்லோருமே பொறுப்பா தான் இருப்பாங்க.. ஒத்த ரூவா செலவழிக்க கூட ஆயிரம் முறை யோசிப்பாங்க..
ஆனா எனக்கு அது வராது.. கையில இருந்தா செலவு பண்ணிடுவேன் நான்.. எனக்கு எந்த புள்ளையும் முகம் வாட கூடாது. வயிறு வாட கூடாது அவ்வளவு தான். அதனால் நான் கணக்கு பார்க்க மாட்டேன்..
ராயரும் சரி மாமாவும் சரி இன்ன நாள் வரை என் கிட்ட கணக்கு கேட்டது இல்லை.. அவங்களுக்கு தெரியும் நான் செலவு பண்றது எல்லாமே உணவுக்கு தான்னு.. நல்லா சாப்பிட்டா இன்னும் அதிகமா உழைக்கலாம்ன்றது என்னோட கருத்து ஆமா தானே திகம்பரி. சரியான ஊட்டம் இருந்தாதானே நிக்காம ஓட முடியும்”
“அதானாலே நான் கேட்டா இல்லைன்னு சொல்ல மாட்டாங்க ரெண்டு பேரும்.. அவங்க கிட்ட இருக்கோ இல்லையோ என் கையில காசு இருந்து கிட்டே தான் இருக்கும்.. எனக்கு குடுக்கனும்னே ரெண்டு பேரும் அப்படி உழைப்பாங்க” என்றவரின் கண்களில் கண்ணீர்.
“உனக்கு ஒன்னு தெரியுமா இடையில ஒரு மூனுவருசம் பஞ்சம் என்ன பண்றதுனே தெரியல.. நல்லா சாப்பிட்டு வளர்ந்த புள்ளைங்க எல்லாம். மண்ணுல போட்டது எல்லாம் பதரா போச்சு.
அடுத்த வேலைக்கு என்ன செய்யிறதுன்னு தவிச்சுகிட்டு இருக்குற சமயம் ராயரு.. என் பெரிய தம்பி “நான் இருக்கேன் இந்த குடும்பத்துக்குன்னு” பதினெட்டு வயசுல ஸ்டீரிங் புடிக்க ஆரம்பிச்சான்.
அவன் அங்க ராப்பகலா கஷ்ட பட்டு கண்ணு முழிச்சு குளிச்சு குளிக்காமா சாப்பிட்டு சாப்பிடாமா நாள் பூரா வண்டி ஓட்டி தான் இந்த குடும்பம் வயிறு நிறைய சாப்பிட்டது. சொகுசா இருந்துட்டு திடிர்னு கஷ்ட படனும்னா அது ரொம்ப கஷ்டம்.. அதுவும் இளமையில ரொம்ப கஷ்டம்..” என்று தில்லை சொல்ல
தன் மடியில் தலை வைத்து அவளின் கரங்களை பிடித்து விரல்களை எண்ணிக்கொண்டே “உனக்கு தெரியுமாடி அப்படி ஒரு கஷ்டம் வண்டி ஓட்டும்போது.. நேரத்துக்கு சாப்பிட முடியாது.. நேரத்துக்கு குளிக்க முடியாது.. அவ்வளவு நீட்டா இருப்பேன். ஆனா அங்க ரெண்டு நாளைக்கு ஒரு முறை அப்படி தான் குளிக்க முடியும், சாப்பாடும் அப்படி தான்..
நேரத்துக்கு உண்டு எழுந்து சொகுசா இருந்த எனக்கு வண்டி சூடு, காரமான சாப்பாடு, அழுக்கு உடை இதோட இல்லாம பஞ்சு மெத்தையில ஏசில தூங்குன நான் வெறும் கட்டாந்தரையில கொசுகடியோட, சரக்கு திருடு போகாம பாதி விழிப்போட வெறும் போர்வையை விரித்து தான் படுக்கணும். அவ்வளவு கஷ்டம்.
ஆரம்பத்துல இருந்தே கஷ்டபட்டா ஒன்னும் தெரியாது ஆனா இடையில வறுமை வந்ததுனா அது ரொம்ப கஷ்டம்டி.. அதுவும் ஔவை சொல்லியிருக்காங்களே வறுமையில் இளமை அந்த நிலமையில தான் நான் இருந்தேன்.. இவ்வளவு கஷ்டப்படனுமா பேசாம திரும்பி போய்டலாமான்னு தோணும்.. அதுவும் ஆரம்பத்துல எடுபிடியாதானே போனேன்..
ரொம்ப கேவலமா நடத்துவாங்க.. எங்கே இவனுக்கு கத்து குடுத்தா நம்மள பீட் பண்ணிடுவானோன்னு நினைச்சி எதுவும் கத்து குடுக்க மாட்டானுங்க.. அத பண்ணு இதை பண்ணுன்னு வெட்டியா வேலை வாங்குவாங்க..
இதெல்லாத்தையும் விட ஒரு கொடுமை என்றவன் அவளது முகம் பார்க்க முடியாமல் அவளது நெஞ்சில் தன் முகத்தை மறைத்துக்கொண்டு எழுந்த அவமான உணர்வை அடக்க முடியாமல் அவளது இடையை இறுக்கி பிடித்துக்கொண்டு “எதெல்லாம் தெருஞ்சுக்க கூடாதோ அதெல்லாம் அந்த வயசுலேயே கத்துக்கிட்டேன்” சொல்ல
திகம்பரிக்கு ஒரு கணம் உயிர் துடித்து அடங்கியது.. அவள் எதுவும் பேசாமல் அவனின் முகத்தை இன்னும் இறுக்கமாக தன் நெஞ்சுக்குள் இருக்கிக்கொண்டாள் கலங்கிய விழிகளோடு..
“ப்ளீஸ் மாமா, எனக்கு எதுவும் தெரிய வேணாம் நீ இவ்வளவு வேதனை படாத அதை தாங்க என்னால முடியாது” என்றவளுக்கு தலை அசைத்து மறுத்தவன்
“இது உனக்காக சொல்லல.. என் மனசுல இருக்குற ரணத்தை உன் கிட்ட இறக்கி வைக்குறேன்.. எனக்கு இதை தூக்கி சுமக்க முடியலடி. இதை நான் வேற யார் கிட்ட சொல்ல முடியும் சொல்லு..
அக்கா மாமா கிட்ட சொன்னா துடிச்சு போய்டுவாங்க, எல்லாம் அவங்கலாலதானேன்னு வேதனை படுவாங்கடி.. அவங்க வேதனை பட்டா உன் மாமனால தாங்க முடியுமா சொல்லு” என்று சொன்னவனை இன்னும் இருக்க அணைத்துக்கொண்டு
“நீ சொல்லு மாமா நான் கேக்குறேன்..” என்றவளின் இடை அவனின் கையில் சிக்கி கருத்து போனது அவனின் பிடி அந்த அளவு இருந்தது.. அந்த பிடியிலே அவனின் உள்ள கொதிப்பை அவள் உணர்ந்துக்கொண்டாள்.
“ஊருக்கு ஒதுக்கு புறமா இருக்குற உணவகத்துல வண்டிய நிறுத்தி வெட்ட வெளியிலயே என் கண்ணு முன்னாடியே அரங்கேறும்..” என்று முகம் இறுக சொன்னவனின் நிலையை கண்டு உள்ளே கதறினாள். விழிகளில் கலங்கிய நீர் அவனின் தலை மீதே விழுந்தது..
“அதெல்லாம் கொடுமடி... சின்ன பையன்னு விலகி போனா ரொம்ப சீண்டி பார்ப்பாங்க.. கேவலமா பேசுவாங்க.. கண்களை இருக்க மூடிக்கொண்டு இருந்தா “டேய் நீயெல்லாம் ஆம்பலயான்னு கேட்டு ரொம்ப அதிகமா இதுவரை நான் கேளாத வார்த்தை எல்லாம் அங்க கேட்டேன்.. புனிதமான ஒன்றை அவங்க கொச்சை படுத்தி ச்சே..
பல இரவு நான் வெந்து நொந்து போய் என்னை அடக்கி கொண்டு நெருப்புல இருக்குற மாதிரி இருந்தேன்டி” என்று அவன் வேதனையோடு சொன்ன சொற்கள் இன்னும் காதிலே ஒலித்துக்கொண்டிருக்கிறது.. அதை கிளறிவிடுவது போல தில்லையின் பேச்சு இருக்க திகம்பரியின் கண்களில் கண்ணீர் வந்தது தன் மனம் கவர்ந்தவனின் வேதனையை நினைத்து..
“அவ்வளவு கஷ்டபட்டான் திகம்பரி என் தம்பி. அவன் கிடைக்க தான் நாங்க குடுத்து வச்சிருக்கணும்.. அந்த வயசுல அததுங்க பொண்ணுங்க பின்னாடி ஊர் மேயுங்க. ஆனா இவன் பொறுப்பா குடும்ப பொறுப்பை எடுத்துகிட்டான். இப்ப வரையிலும் அவன் எனக்கு எங்க அப்பா ஸ்தானத்துல இருந்து எல்லாமே செஞ்சுகிட்டு இருக்கான். எது வாங்குனாலும் மூனா தான் வாங்குவான்.
வனா பேருக்கு என் பேருக்கு அதுக்கு பிறகு தான் அவன் பேருக்கு வாங்குவன். பிள்ளைங்கள பிருச்சி பார்க்காம நான் பெத்த மூனுக்கும் தாய் மாமன் சீருன்னு அவன் சம்பாரிக்க ஆரம்பிச்சதுல இருந்து வனாவுக்கு என்ன செய்வானோ அதை அப்படியே இதுங்களுக்கும் செய்வான் என் தம்பி.
அவன் மாமாவுக்கு உங்க அக்கா சிவகாமி இடத்துல இருந்து செய்யுறேன் மாமான்னு அவர் பேச்சுக்கு தடை போட்டுட்டு அவருக்கும் செய்வான். அவன போல ஒருத்தர பார்க்கவே முடியாது திகம்பரி..
அவ்வளவு பொறுப்பு.. என்ன வேலையா இருந்தாலும் எவ்வளவு பிசியா இருந்தாலும் இன்ன நேரத்துல இது இவங்களுக்கு தேவை படும்னு சரியா கணிச்சு வாங்கிட்டு வந்து நிப்பான்..” என்றவரின் கண்களில் கண்ணீர் கொட்ட அந்த பாச பெண்மணியை தாவி வந்து அணைத்துக்கொண்டாள்.. அனைத்துகொண்டவளின் கண்களிலும் கண்ணீர்.
அவனோடு முழுமையாக மூன்று வருடம் வாழ்ந்தவளாச்சே அவளுக்கு தெரியாதா அவனை பற்றி. இந்த நிமிடம் இப்படி இருப்பான் என்று கணித்து வைத்திருப்பவள் ஆயிற்றே.. அவனின் ஊனோடு உயிராக இரண்டென கலந்து உறவு கொண்டவள் அல்லவா அவள்..
தில்லையை காட்டிலும் ராயரை அதிகம் புரிந்து வைத்திருப்பவளும் அவளே.. தெரிந்து வைத்திருப்பவளும் அவளே அல்லவா....
அத்தியாயம் 1௦
காலை உணவை எல்லோருக்கும் எடுத்துக்கொண்டு தில்லையோடு மதி திகம்பரி மூவரும் வயலுக்கு சென்று நால்வருக்கும் பரிமாற.. திகம்பரி “நான் அப்படியே கொஞ்சம் நடந்துட்டு வரேன் கா” என்றவள் அப்படியே சுற்றி பார்க்க சென்றாள்.
“நீ போல டா மாமா” காதோரம் ரவி முணுமுணுக்க
“மூடு” என்றவன் போனவளையே குத்தும் பார்வை பார்க்க எப்போடா சாப்பிட்டு முடிப்போம் என்று அவஸ்த்தை பட்டான் ராயர்.. அதுவும் வாழை பூ வடையை பார்த்த பிறகு அவனுக்கு அவள் வேண்டும் என்று துடிதுடித்து போனான்..
இது அவனுக்காகவே அவள் எப்பொழுதும் ஸ்பெசலாக செய்வது.. இன்று இதை கண்டவுடன் தனக்கு அருகில் தன் கையில் அவள் வேண்டும் வெறியே வர அவசர அவசரமாய் ஆறு இட்லியை முழுங்கியவன் 5 வடையை உள்ளே தள்ளியவன் அப்போது தான் மூன்றாவது இட்டலியை சாப்பிட்டு கொண்டிருந்த ரவியை இழுத்துக்கொண்டு போக
“எங்கடா போறீங்க அவன் இன்னும் சாப்பிடலையே ராயரு”
“அக்கா அவனுக்கு வயிறு சரியில்ல, அது தான் நாங்க அவசரமா போறோம்.. நீ இருக்கிறத மாமாவுக்கும் வனாவுக்கு போடு..” என்று சொல்லிவிட்டு ரவியை இழுத்துக்கொண்டு போனான் திகம்பரி சென்ற பாதையில்..
“டேய் மாமா நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்டடா” ரவி கத்த
“சாபம் விட்டினா மதியம் வாங்கி தரலாம்ன்னு நினைச்ச கோழி பிரியாணி கட்டு பார்த்துக்க” அவனின் பலவீனமான இடத்தில் கைவித்தான் ராயர்.
“நிஜமா தில்லை வைக்குற சாம்பார்ல இருந்து எனக்கு மோட்சம் குடுப்பியா” கரரான குரலில் கேட்டான் ரவி..
“சத்தியமா வாங்கி தரேன். அதுக்கு நீ வாய் பேசாம நான் சொன்னத மட்டும் செஞ்சா போதும்” என்றவன் “நீ இங்கயே இரு” என்று சொல்லிவிட்டு வேட்டி மடிப்பில் வைத்திருந்த சில வடைகளை அவன் மேலே போட்டு விட்டு விரசா விரைந்தான் திகம்பரியிடம்.
“பார்ரா லஞ்சம் குடுத்து ஒரு சிங்கத்தை காவலுக்கு வச்சுட்டு போறத.” என்றவனின் குரலில் திரும்பி நின்று ரவியை முறைத்தான்.
“நீங்க போங்க ஆபிசர்.. நான் சும்மா இந்த புல்லு பூண்டு கூட பொலம்பிகிட்டு இருக்கேன்..” என்றவனின் பேச்சில் எழுந்த நகையுடன் தன்னவளை காண விரைந்தான்..
அவன் வருவான் என்று நினைக்காதவள் திடிரென அவன் அணைக்கவும் அவனது அணைப்பில் திகைத்து போனாள்.
“என்ன மாமா இதெல்லாம்” என்றவனின் பிடியில் இருந்து விலகிக்கொண்டே கேட்க
“இப்போ தான் தெருஞ்சதா நான் மாமான்னு” உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு நின்றவனை கண்டு அவனுக்கு தாயாய் மாறிபோனாள்.
“மாமா”
“நான் உன்னை ரொம்ப தவிக்க வச்சுட்டேன்ல.. சாரிடி..”
“பரவால மாமா விடு.”
“அப்படியெல்லாம் விட முடியாது எனக்கு என் திகம்பரி வேணும்” என்றான்.
‘அது கஷ்டம் மாமா’ மனதுக்குள் சொல்லியவள் “ஹஹஹா நான் வேற ஒருத்தன என்கேஜ் பண்ணிட்டேன் நீ ரொம்ப லேட்” என்று சொன்னவளை கண்டு கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்
“அப்படியா அப்போ சரி அவன ஒரு நூறு வருஷம் கழுச்சு உன்னை வந்து என்கிட்டே இருந்து கூட்டிட்டு போக சொல்லிக்கோ” என்றான்.
அவனது பதிலில் ஒரு கணம் ஸ்தம்பித்தவள் மறுகணம் “நீ இதை தான் சொல்லுவன்னு எனக்கு தெரியும்டா பிராடு”
“தெரியுதுல்ல பின்ன எதுக்குடி என் கிட்ட வந்து சொல்ற..” என்றவனின் முகம் அவளின் முகத்தோடு உரச
“வேணாம் மாமா இது தப்பு” என்று அவனிடமிருந்து விலக பார்த்தவளை “எப்படி தாப்பாகும் இப்போ வரை நீ என்னவள் தான்” என்று அவன் முரண்டு பிடிக்க
“நான் இன்னொருத்தனுக்கு சொந்தமானவள் ராய்” என்றால் வேதனையாக
“நீ என்னோட பிள்ளைக்கு தாய் அதை மறந்துடாத”
“அந்த குழந்தையையும் சேர்த்து ஒருவன் என்னை கட்டிக்க சம்மதம் சொல்லி நிச்சயமும் பண்ணிட்டான் மாமா”
“யாரு அவன்” நெருப்பாய் காய்ந்தான் ராயர்.
“கார்த்தி என் அண்ணாவோட தோழன்”
“உன் அண்ணனுக்கு ரொம்பவே கொழுப்பு தான்.. அப்பவே அவனை நல்லா கவனிச்சிருக்கணும் அப்போ உன் மூஞ்சிக்காக பாவம் பார்த்து விட்டேன் இல்லையா அது தான் நான் செஞ்ச தப்பு” என்று திகம்பரியின் அண்ணனான நந்தனை கருவினான்.
அதில் லேசாக உதடு வளைத்தாள்... ராயரின் பார்வையிலிருந்து அது தப்பித்துவிட்டது..
“அவன் நாளைக்கு இங்க வரன்” என்றாள் மொட்டையாக புன்னகையை மறைத்தபடி
“யாருடி”
“கார்த்திக்”
“அவன் எதுக்குடி இங்க வரான்” ரவுதிரமாய் கேட்க
“அவனும் ஒன் ஆப் தி பார்ட்னர் உங்க தம்பி கம்பெனில”
“வாட்”
“ம்ம் வனா சொல்லலையா”
“நாங்க இன்னும் அதை பத்தி பேசவே இல்லை” யோசனையாய் சொன்னவனை கண்டு
“இனி பேசி ஒன்னும் ஆகபோறது இல்லை.. லீவ் மீ” என்றாள்.
“அது மட்டும் இந்த ராயர் கிட்ட நடக்காதுடி” அவளின் இரு தோள்களையும் வலிக்கு மாறு பற்றி அவளை உலுக்கி கர்ஜிக்க
“நான் ஜஸ்ட் ஒரு விசிட்காக தான் இங்க வந்தேன்.. ஒன் வீக்ல மறுபடியும் கிளம்பிடுவேன்.. வீணா பழசை கிளராம போங்க ராயர்” என்றாள் இகழ்ச்சியாய்.
அவளது இகழ்ச்சியில் வெகுண்டவன் “என்னடி ரொம்ப பேசுற நீ எப்படி இங்க இருந்து போறன்னு நானும் பார்கிறேன்” கத்த அவனை பாவமாக பார்ப்பது போல் பார்த்துவைக்க அதில் அவனுக்கு பத்திக்கொண்டு வந்தது..
“நீ என்னை ரொம்ப சீண்டறடி” அவளது கண்களை பார்த்து சொல்ல அவளோ உதட்டை சுழித்து இன்னும் ஏளனம் செய்ய அவளது ஏளனத்தை தாங்க முடியாமல்
“இந்த கண்ணுல நன் காதலை மட்டும் தான் பார்த்தேன்.. ஆனா இன்னைக்கு நான் யார உயிரா நினைச்சுருக்கனோ அவளோட கண்ணு என்னை ஏளனமா பார்க்குது.. என்னாலா அதை தாங்க முடியாதுன்னு தெருஞ்சும் நான் மட்டும் சொந்தம் கொண்டாடிய இந்த கண்ணு என்னை வெளியே நிறுத்தி வைக்குது.. யாரோ போல பார்த்து வைக்குது” என்றவனின் பேச்சில் உள்ளம் உருக உயிர் கசிய உள்ளத்தால் மட்டும் அவனை காதலோடு பார்த்து கண்களில் நீ பேசும் மொழி புரியவில்லை என்ற கணக்காய் அவள் நிற்க அதையும் தாங்க முடியாமல் அவளின் மீது இருந்த தன் கைகளை எடுத்துக்கொண்டான்.
அவன் விலகவும் தன் உயிரே போனது போல் வலித்தது திகம்பரிக்கு. விழிகள் பட்டென்று கலங்க அவன் பார்த்து விட கூடாதே என்பதற்காக சட்டென்று அவனுக்கு முதுகு காட்டி திரும்பியவள் கண்களை துடைத்துக்கொண்டாள்.
இன்னும் அவன் முன்னே அழுது விடுவமோ என்று பயந்தவள் அவ்விடத்தை விட்டு செல்ல
உயிரை குலைக்கும் குரலில் அவன் தன் மனம் கவர்ந்தவளை உயிரில் சுமந்து கொண்டிருப்பவளை இத்தனை வருடமாக அவளை நினைவில் நீங்காமல் இருப்பவளை தான் அவளுக்கு நெருக்காமான சமயங்களில் கூப்பிடும் பெயரை சொல்லி தனக்கு எல்லாவுமாய் இருந்தவளை “ரீகா” என்றழைக்க அவனது வாயிலிருந்து இத்தனை நாள் கேட்க துடித்த பெயரை கேட்டவளுக்கு நடந்த கால்கள் அப்படியே வேரூன்றி போய் நின்றது..
துடைத்து விட்ட கண்களில் இருந்து மீண்டும் கண்ணீர் சுரக்க உதட்டை கடித்து அடக்க முயன்றாள்.. ஆனால் அவளால் முடியவில்லை.. கேவல் ஒன்று பெரும் சத்தத்தோடு வெளியே வர எங்கே அது அவனுக்கு கேட்டுவிடுமோ என்று அஞ்சிபோய் வாயை தன் இரு கைகளால் பொத்திக்கொண்டாள்.
“ரீகா” உயிரை கரைத்து அவன் அவளை அழைக்க ஓடிபோய் அவனது நெஞ்சில் முட்டிக்கொண்டு அழுது விடுவோமோ என்று பயந்து அவ்விடத்தை விட்டு ஓடி போக.. அவன் மறுபடியும் “ரீகா” என்றழைக்க அதற்க்கு மேல் அவனது அழைப்பை கடக்க முடியாமல் தரையில் மண்டியிட்டு தன் முகத்தை இரு கைகளால் புதைத்துக்கொண்டு பெரும் குரலெடுத்து அழுதவளை கண்டு கர்வம் கொண்டான் ராய்.
“ரீகா...” அவன் மறுபடியும் கூப்பிட கண்களில் நிறைந்த நீருடன் அவனை திரும்பி ஏறிட்டு பார்த்தாள். அவளருகில் செல்லாமல் அவளின் எதிர் புறம் வந்து நின்று
“நீ என்னை உணருர..” அவளை கூர்மையாக பார்த்தபடி சொல்ல
அவள் மௌனமாய் தலை அசைத்தாள்.
“நீ என்னை மறக்கல”
அதற்கும் “இல்லை” என்பது போல தலை அசைத்தாள்..
“நீ என்னை காதலிக்குற”
“ஆமாம்” என்பது போல் அவள் தலை அசைத்தாள்.
“எனக்கான தேடல் உன் கிட்ட இருக்கு” என்றவனை அதுவரை உணர்வுகளின் பிடியில் இருந்தவள் அதை உதறிவிட்டு வெடுக்கென எழுந்து நின்று அவனை எரித்து விடுவது போல பார்த்து “ஆனா அதுக்கு என்னால் இடம் கொடுக்க முடியாது மிஸ்டர் வக்கீல் சார்” என்றாள் நிமிர்வாக.
“ரீகா” அதிர்வாய் அவன் அழைக்க
“என்ன ரீகா... இல்ல என்ன ரீகான்னு கேக்குறேன்.... காலம் முடுஞ்சு போய் வந்த அன்பு எனக்கு தேவை இல்லை வக்கீல் சார்.. எனக்கான வாழ்வு கார்த்திகோடா தான். தயவு செய்து என் வாழ்கையில குறுக்க நிக்காம தள்ளி நில்லுங்க. நான் இனிமேலாவது நிம்மதியா வாழணும்னு நினைக்குறேன்” என்றவள் கையெடுத்து கும்பிட இதயத்தில் பட்டென்று நரம்பு உடையும் வலி எழ அதை வெளிக்காட்டாமல் நிமிர்வோடு தீர்க்கமாக அவளை பார்த்து
“நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்.. அது நீ நினைத்தாலும் மாத்த முடியாது.. நான் உன்னோட வாழ்ந்து காட்டுவேன் இது என்னோட சவால். முடுஞ்சா இதுல என்னை ஜெயித்து காட்டு” என்று சொன்னவனின் விழிகள் ஆக்ரோசத்தொடு மின்னின...
“உன் மனசு இதுல தோத்து போக தான் விரும்பும்.. உன் மனசு சொல்றதை கேளு.. வீணா என் கிட்ட முட்டி மோதாத.. பொறவு சேதாரம் ரொம்ப கடுமையா இருக்கும்.. ஏற்கனவே என்கிட்ட வாங்குன அனுபவம் இருக்கும்னு நினைக்குறேன்” என்று பழயதை ஞாபக படுத்துவது போல் அரக்கனாய் அவன் சொல்ல
அவன் நினைவு படுத்திய செயலை நினைவில் கொண்டுவந்தவளுக்கு உடல் தூக்கிவாரி போட்டது... பயத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவனின் அன்றைய கோவ முகம் இன்றும் இருப்பதை கண்டு மேலும் பயந்து போனாள்.
“என்ன நினைவுக்கு கொண்டு வந்துட்டியா..” என்று ஏளனமாய் அவளை பார்த்து கேட்டவன் “வருஷம் போய்டுச்சே இவன் இதே எல்லாம் மறந்திருப்பான் இது போல மறுபடியும் செய்ய மாட்டான்னு நினைச்சன்னா உன் எண்ணத்தை மாத்திக்கோ... நான் அதே ராய் தான்.. எனக்குள்ள இன்னும் அந்த மிருகம் இருக்கு” உருமி அவளின் தோளை பற்றி இறுக்கி பிடித்தவன்
“அந்த மிருகத்தை மறுபடியும் பார்க்கணும்னா நீ நினைச்சா எனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லை.. இப்பவே காட்டுறேன்” என்றவன் அவள் என்னவென்று உணரும் முன்னவே அவளை தன் வசம் ஆக்கியவன் அந்த புள் தரையில் அவளோடு சரிந்து உருண்டு அவளின் வடிவான இதழ்களை தன் இதழ்களால் சிறை பிடித்தான் வலிக்க வலிக்க.
அதில் அவளது கண்கள் கலங்கி அவனது கைகளிலே விழுந்து வழிய அதை கொஞ்சமும் சட்டை செய்யாமல் தன் கூறிய பற்களை கொண்டு அவளின் மெல்லிய சதை பற்றான கீழ் உதட்டை கடித்து தன் மொத்த ஆவேசத்தையும் அதனிடம் காட்ட
அவனது அழுத்தம் தாங்காமல் அவனிடம் நசுங்கி உதட்டிலிருந்து செந்நீர் கசிய அதையும் ஆவேசத்துடன் புசித்தானே தவிர அவளை அவன் விட வில்லை..
வலி தாங்காமல் அவனிடமிருந்து விலகி போக அதில் கோவமடைந்தவன் பின்னதலையில் லேசாய் அழுத்தி பிடித்த கரங்கள் வன்மையாய் அவளது முடிகளுக்குள் கையை நுழைத்து இறுக்கி அவளது மயிரிலைகளை கொத்தாய் பற்றி தன்னுடன் நெருக்கி பிணைக்க அவனது முரட்டு கரத்தில் சிக்கிய கூந்தல் வலி கொடுக்க மேலும் விழிகளில் நீர் வடிந்தது..
“அதே மிருக தனமான ஒன்றுதல்” என்று எண்ணியவளின் இதயம் லேசாய் பயத்திலும் விரக்தியிலும் நடுங்கியது..
ஒரு கட்டத்துக்கு மேல் சமாளிக்க முடியாமல் அவனது கைகளிலே சரிய... அவளை முரட்டு தனமாய் பற்றி
“இப்போ தெருஞ்சுருக்குமே.. நான் இன்னும் அதே மிருகம்னு” என்று நக்கலாய் அவளை பார்த்து பேசியவனை கண்டு எரிச்சல் தான் வந்தது திகம்பரிக்கு..
“நீ என்கிட்ட எப்படி நடந்துக்குறியோ அப்படி தான் உன் கிட்ட நான் நடந்துப்பேன்.. நீ என் கிட்ட திமிர் தனம் காட்டுனன்னு வையி.. இப்போ நடந்து சின்ன சாம்பிள் தான்.. பொறவு உடம்பு ரணகளமாயிடும் பார்த்துக்க.. ஏற்கனவே ரெண்டு நாள் மருத்துவமனையில இருந்ததை நினைவு வச்சுகிட்டு சூதானமா நடக்க பாரு...” என்றவன் அவளின் கன்னத்தை வலிக்க ஒரு அழுத்தம் அழுத்திவிட்டு செல்ல அந்த வலியில் மேலும் அவளது கண்கள் கலங்கியது...
கலங்கிய கண்களோடு அவனின் முதுகை வெறித்தவள் இன்னும் ஒரு வாரத்தில் இவ்விடத்தை விட்டு போய் விட வேண்டும் என்று தீர்மானமாக முடிவெடுத்தாள்.
அதை ராய் செயல் பட விடுவானா....






