அவனது தூக்கம் கலைய காரணம் அவனது நெஞ்சில் ஏதோ அழுத்திய உணர்வு வந்தது தான். விழித்து பார்த்தவனின் நாசியில் மல்லிகை பூ வாசம் வந்து மோதியது, கூடவே அவனது நெஞ்சில் பாரமும் உணர குனிந்து பார்த்தான்.
அவனின் மனைவி தான். “விட மாட்டா போல” வாய்க்குள் முணகிக் கொண்டவனுக்கு தன் ஆத்திரத்தை கட்டுப் படுத்த வழி தெரியவில்லை.
“விலகி போனாலும் நெருங்கி வந்து இம்சை பண்ணா நான் என்ன பண்றது?” என்று கடுப்படித்தவன் அவள் தூங்குவதை கூட சட்டை செய்யாமல் தன் மீது இருந்தவளை கீழே தள்ளி அவளின் மீது புயல் வேகத்தில் பரவி படர்ந்தான் மிக மிக வன்மையாக.
திடுதிப்பென்று தன் மீது பாரம் படர மூச்சு திணறிப் போனாள் தமிழ். என்ன நடக்குது என்று என்று ஒன்றும் புரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நடப்பு புரிய “ஐயோ...” என்று அலறினாள்.
“கத்துனன்னு வை அப்படியே கடிச்சு வச்சுடுவேன்டி. ஒழுங்கா வாயை மூடி இரு” என்று அதட்டியவன் அவளின் கன்னத்தில் மீசை உரச முத்தம் வைத்தான். அதில் திகைத்துப் போனவள்,
“ஏன் இப்போ இப்படி நடந்துக்குறீங்க?”
“ம்ம் உன் மாமியாருக்கு பேரன் வரம் வேணுமாம் அதுக்கு தான்” என்றான்.
“அப்போ ஏன் மேல இருந்த சந்தேகம் எல்லாம் போயிடுச்சா? கோவமெல்லாம் போயிடுச்சாங்க? என்னை மன்னிச்கிட்டீங்களா?” என்று அவனது கன்னத்தில் இருந்த தழும்பை வருடி விட்டாள். பட்டென்று அவளின் கையை தட்டி விட்டவன்,
“உன் மேல கொலைவெறியில இருக்கேன்டி... உன்னை மன்னிக்கிறதா?” பல்லைக் கடித்தவன் அவள் மீது இருந்து எழுந்து அமர்ந்தான். அவனுக்கு பின்னோடு இவளும் எழுந்து அமர்ந்தவள்,
அவனின் முதுகோடு சாய்ந்துக் கொண்டவள்,
“சாரிங்க” என்றாள்.
“ஒன்னும் தேவையில்ல போடி” எழுந்து செல்ல பார்க்க அவனது கையை பிடித்து இழுத்தவள் தனக்கு அருகில் உட்கார வைத்துக் கொண்டாள்.
“ப்ச் விடுடி” என்று முறைத்தான். அவனது கோவத்தை சட்டை செய்யாமல் அவனுக்கு தன் முந்தானையை போர்த்தி விட்டவள், தன் நெஞ்சோடு அவனை இழுத்துக் கொண்டாள்.
“என்னடி பயம் விட்டு போச்சா?” இயல்பாக தன்னிடம் நடந்துக் கொண்டவளை புருவம் சுறுக்கி பார்த்தான். ஏனெனில் ஒருமுறை கூட அவளாக அவனை நெருங்கியதே இல்லையே... அதனால் அவளிடம் கேட்டான்.
“என் புருஷன் கிட்ட எனக்கு என்ன பயம்?” கேட்டவள்,
அவனின் முகத்தை தன் பக்கம் திருப்பி கன்னத்தில் இருந்த தழும்பை வருடி விட்டவள் குனிந்து அந்த தழும்பில் முத்தமும் வைத்தாள்.
“ப்ச்” என்று அதிருப்தி காட்டினான்.
அதை அவள் கண்டுகொள்ளாமல் அவனது மார்பில் இருந்த காயத்தையும் தடவி விட்டு முத்தம் வைக்க பொறுத்துப் பார்த்தவன் அதற்கு மேல் முடியாமல் அவளின் இதழ்களை சற்றே ஆவேசமாக கவ்விக் கொண்டான்.
வன்மையாக தன் இதழ்களை எடுத்துக் கொள்பவனை தடுக்கவே இல்லை அவள். அவளின் முழு ஒத்துளைப்பை பார்த்து புருவம் சுருக்கியவன்,
“என்னடி பிச்சை போடுறியா?” சவுக்கடியாய் கேட்டான் அகத்தியன்.
“நான் எங்க பிச்சை போடுறேன்... நீங்க தான் எனக்கு பாவம் பார்த்து முத்த பிச்சை போட்டுட்டு இருக்கீங்க” என்றாள் தமிழ்.
“நல்லா பேசவும் கத்துக்கிட்டடி...” பல்லைக் கடித்தான்.
“பின்ன அகத்தியன் பொண்டாட்டி இந்த தமிழ். வாய் பேசலன்னா தப்பா பேச மாட்டாங்க...”
“விவரம் தான். கல்யாணம் ஆன புதுசுல வாயே திறக்க மாட்ட தெரியுமா?”
“ம்ம் அது தான் நல்லா மிளகாய் அறைச்சீங்களே”
“எது நான் மிளகாய் அறைச்சனா? நீ தான்டி என்னை ஆறு மாசம் இந்த ஊரு பக்கமே வர விடாம பண்ணுன. அது மட்டுமா ஏன் வாழ்க்கையில நான் சரக்கு அடிச்சதே கிடையாது. ஆனா உன்னால அதையும் செய்தேன். உன்னை மறக்க முடியல, நீ பேசுனதை மறக்க முடியல, உன்னை அடிச்சு மிரட்டி டைவேர்ஸ் வாங்கினேன்னு இன்னும் உன் மாமியார் என்கிட்டே பேசவே இல்ல தெரியுமாடி?” என்றான்.
“என்ன சொல்றீங்க?” என்று திகைத்துப் போனாள். இவ்வளவு நாளும் ஒரே வீட்டில் தான் எல்லோரும் இருக்கிறார்கள். ஆனால் இதை அவள் கூர்ந்து பார்க்கவே இல்லை. தவறி விட்டோமோ என்று நொந்துக் கொண்டவள்,
“சாரிங்க.. உண்மையாவே எனக்கு தெரியல” என்றாள்.
“உனக்கு எது தான் தெரிஞ்சுது இது தெரிய” முறைத்தான்.
அவனது குற்றச்சாட்டில் வேதனைக் கொண்டவள்,
“உண்மைக்குமே என்னை எதுவுமே தெரியாத பிள்ளையா தான் தாத்தாவும் பாட்டியும் வளர்த்தாங்க ங்க.. பாட்டி ரொம்ப கட்டுப்பாடு. அவங்களை மீறி ஒரு பொன் கூட பேசமுடியாது தோழிகள் கிட்ட.. பிரெண்டுங்க எல்லாம் எங்கெங்கயோ போவாங்க. ஆனா எனக்கு எங்கயுமே அலவ்ட் கிடையாது. பாட்டி அதுல ரொம்ப ஸ்ட்ரிக்ட். சித்தி கம்பெல் பண்ணி பார்ட்டிக்கு கூட்டிட்டு போனா கூட பாட்டியும் தாத்தாவும் ஏன் கூடவே வருவாங்க. சித்தியோட சாயல் எதுவும் ஏன் மேல வந்துடக் கூடாதுன்னு” என்றவளை கூர்ந்து பார்த்தவன்,
“என்னடி சொல்ற?” என்று கேட்டான்.
“ஆமாங்க.. சித்தியோட போக்கு கொஞ்சமும் சரியில்லன்னு பாட்டிக்கு நல்லாவே தெரியும். ஆனா அதை தட்டி கேட்க முடியாத நிலையில தானே அவங்க இருந்தாங்க. கட்டுன புருஷனுக்கே அவங்க அடங்கல.. பிறகு எங்க இருந்து மாமியார் மாமனாருக்கு அடங்குவாங்க.. என்னையும் பல பார்ட்டிக்கு கூட்டிட்டு போறது எதுக்குன்னா அவங்க கட்சி வளர்ச்சிக்கும் தொழில் வளர்ச்சிக்கும் உதவ தான். அவங்களை மாதிரி என்னையும் பல பேரோட அனுப்ப முயற்சி பண்ணாங்க... ஆனா பாட்டி இரும்பு வளையமா இருந்து என்னை ஒவ்வொரு நொடியும் பாதுகாத்து உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க”
“பிரெண்டுங்க தான் சொன்னாங்க ரொம்ப லாம் வலிக்காதுன்னு... ஆனா நீங்க ஒவ்வொரு முறை செய்யும் பொழுதும் எனக்கு அப்படி வலிச்சது.. பேசி பழகலாம்னு பார்த்தா நீங்க முகத்தை தூக்கி வச்சுக்கிட்டே இருந்தீங்க” என்று அவள் குற்றம் சாட்ட,
“பின்ன என்னை வீட்டோட மாப்பிள்ளையா ஆக்குனா எனக்கு கோவம் வராதாடி.. ஏன் தன்மானத்தை அடமானம் வச்ச மாதிரி உன் வீட்டுக்கு என்னை மாப்பிள்ளையா கூட்டிட்டு வந்தாங்க... அந்த கோவத்தை நான் யார் கிட்ட காட்ட... உன்கிட்ட தான் காட்ட முடியும். அதோட உன் சித்தி முதலிரவு முடிஞ்சு வந்த உடனே எவ்வளவு கேவலமா பேச முடியுமோ அந்த அளவுக்கு கேவலமா பேசுனுச்சு. அதனால் தான் ஹெவியா பெர்பாம் பண்ண வேண்டியதா போச்சு...” என்றான் கடுப்பாக.
“ம்கும் என் சித்தி அப்படி பேசலன்னா தான் ஆச்சரியம்.அவங்க எப்பொழுதுமே அப்படி தான் பேசுவாங்க. நமக்கு நிச்சயம் ஆன பொழுதே ஒருத்தன் கிட்ட கிடந்து அடிமையா வாழாத.. உனக்கு யாரை பிடிக்குதோ அவனோட வாழு.. இருக்குறது ஒரு வாழ்க்கை என்ஜாய் பண்ணி வாழுன்னு பேசுவாங்க” என்று பெருமூச்சு விட்டாள்.
“ஆமா நீ ஏன் அவங்கசொல் பேச்சு கேட்கல”
“நம்மக்குன்னு ஒரு பாரம்பரியம் இருக்கு இல்லங்க... எவ்வளவு தான் நவநாகரீகமா வளர்ச்சி கண்டாலும் தன் வாழ்க்கையை முறை படுத்துவது இந்த குடும்பம் என்கிற அமைப்பு தான். அதை விட்டுட்டு நினைச்சபடி வாழ்ந்தா அடுத்த தலைமுறைக்கு இந்த குடும்பம என்கிற அமைப்பே காணாம போயிடும். அடுத்த சந்ததிக்கு நாம எதை குடுக்குறமோ இல்லையோ சரியான ஒழுக்கத்தை கத்து குடுக்கணும் இல்லையா?” என்றவளை ஆச்சரியமாக பார்த்தான் அகத்தியன்.
“உண்மையா இப்ப வளர்ந்து வருகிற ஜெனேரஷனை கண்டா பயமா இருக்கு... அவங்களுக்கு நல்லது சொல்லி குடுக்க பெற்றவர்கள் முதல்ல சரியா இருக்கணும் இல்லையா? தாமரை மாதிரி ஆட்கள் கிட்ட இருந்து அவங்களோட பிள்ளைங்க என்ன கத்துக்கிட்டு இருக்க முடியும்.. அவங்களே தவறான வழியில போனா பிள்ளைங்களுக்கு எங்கிருந்து சரியான கைடன்ஸ் கிடைக்கும்.. எனக்கு பாட்டியும் தாத்தாவும் இருக்கதுனால குடும்பத்தை பற்றியும் ஓரளவு நம்ம பாரம்பரியத்தையும் பற்றி தெரியும். அதே இது எத்தனை பேருக்கு இது கிடைக்காம போய் இருக்கு தெரியுமா?” என்றாள் பெருமூச்சு விட்டு.
“என் வாழ்க்கையை எப்படியாவது கெடுக்கணும்னு பார்த்தாங்க சித்தி.. ஆனா அதை அவங்களால செய்ய முடியல...” என்றவள்,
“அந்த வீடியோ” என்று தயக்கமாக ஆரம்பித்தாள்.
அவளின் முந்தானையில் தன் குளிரை போக்கியபடி அமர்ந்து இருந்தவன், அவள் பேசும் ஒவ்வொரு சொல்லையும் கூர்ந்து அவதனித்துக் கொண்டு இருந்தான். இப்பொழுது அவளிடம் ஏற்பட்ட தடுமாற்றத்தை உணர்ந்து, அவளின் கையை இறுக்கிப் பிடித்தான்.
“உன்னை பத்தி முழுசா தெருஞ்சுக்கமா அதை நம்பிட்டேன்டி” என்றான். அப்பொழுதும் அவன் சாரி கேட்கவில்லை. சாரி கேட்டால் தலையில் இருக்கிற கிரீடம் சரிந்துவிடும் இல்லையா?
“யாரு என்னை பத்தி சொன்னது” என்று கேட்டாள்.
“வேற யாரு உன் மாமியார் தான்.. நல்லா தலையில் அடிச்சு உரைக்கிற மாதிரி சொன்னாங்க” என்றான். அவளின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான்.
லேசாக சிரித்தவளுக்கு “இனி என் மேல சந்தேகம் வராது தானே” என்று கேட்டாள்.
“ம்ஹும்” என்றான். உள்ளுக்குள் ‘அப்பாடா’ என்றாலும் எதோ ஒன்று குறைவது போல இருந்தது அவளுக்கு. அதை மறைத்துக் கொண்டு அவனிடம் தூண்டில் வீசினாள்.
“என்னை எங்கயோ பார்த்து பிடிச்சு போய் தான் கல்யாணம் பேசுனதா சொன்னாங்க.. அப்படியாங்க” என்று கேட்டாள் ஆர்வமாக.
அவளது ஆர்வத்தை கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன், வெளியே “சச்ச... அப்படி எல்லாம் ஒன்னும் பிடிச்சு போகல... அம்மாவும் பாட்டியும் தான் நீ மருமகளா வரணும்னு ரொம்ப ஆசை பட்டாங்க. அதனால தான் நான் தலையை ஆட்டினேன்” என்றான். அதை கேட்டவளுக்கு மனதில் வெற்றிடம் தோன்றியது.
“உண்மையாவா?” நம்பாமல் அவனிடம் மீண்டும் கேட்டாள்.
அவளின் வயிற்றில் முகம் புதைத்து இருந்தவன், நிமிர்ந்து படுத்துக் கொண்டு அவளின் முகத்தை பார்த்து, “இது பொய் சொல்ல என்ன இருக்கு... அவங்க ரெண்டு பெரும் தான் உன்னை பார்த்து ஓகே சொன்னாங்க. எனக்கு உன் மேல பெருசா எந்த இன்ட்ரெஸ்டும் இல்ல” என்று அவளின் மனதை உடைத்து விட்டு,
“சரி இங்கயே எவ்வளவு நேரம் இருக்குறது.. உள்ள போய் தூங்கலாம்” என்று அவளின் மடியில் இருந்து எழுந்து உள்ளே போய் விட்டான். அவனோடு உள்ளே செல்ல அவளுக்கு மனம் வரவில்லை.
ஆனாலும் அவனிடம் கேட்க வேண்டிய கேள்வி இன்னும் இருக்கிறதே அதையும் கேட்டு விடலாம் என்று எண்ணியவள் அவனை தொடர்ந்து உள்ளே வந்தாள்.
“அப்போ இண்டரஸ் இல்ல... ஆனா இப்போ” என்று தமிழ் கேட்க,
“ப்ச்... இப்பவும் பெருசா எதுவும் வரல” உதட்டை பிதுக்கி விட்டு படுக்கையில் கவிழ்ந்து படுத்துக் கொண்டான். அவனது முதுகை வெறித்தவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் நிறைந்து விட்டது.
பாப்பாவுக்கு உடம்பு சரியில்ல தோழமைகளே அதனால தான் நேத்து யூடி குடுக்க முடியல சாரி...
🤣🤣🤣🤣, இப்ப அக ஓட டர்ன் அது தான் அவளை சுத்தல விடரான்😂😂😂😂