அவன் முரட்டுத்தனமாக அவளை தொட்டு உள்ளே இழுத்த வேகத்தில் அவன் மீதே வந்து மோதினாள். அதில் எரிச்சல் கொண்டவன் அப்படியே கதவின் மீது அவளை இருத்தியவன் கண்களில் அப்பட்டமாய் சினம் வெடித்தது.
“இதோ பார் ஒன்ஸ் நீ என் கம்பெனிக்குள்ள உள்ள நுழைச்சிட்ட அப்படின்னா எல்லாமே என்னோட முடிவு தான். இது என்ன ஒரு வார்த்தை கூட பேசாம என்னை மதிக்காம நீ பாட்டுக்க போற, அவ்வளவு திமிராடி உனக்கு” என்று அவளின் தோளை உலுக்கி அவனது கோவத்தை வெளிபடுத்த, அதுவரை பேசாமல் இருந்தவள்,
“லுக் மிஸ்டர் சர்வேஸ்வரன் நான் இங்க வந்தது உங்க கம்பெனின்னு தெரிஞ்சு கிடையாது. ஆனா வந்ததுக்கு பிறகு தான் தெரியும். மெயின் முக்கியமான பாயிண்ட் நீங்க இங்க இருப்பீங்கன்னு நினைச்சு கூட பாக்கல. அதுவும் இங்கே ஒரு எம்டியா நீங்க இருப்பீங்கன்னு நினைச்சு கூட பாக்கல. நான் இங்க ரெஸ்யூம் அனுப்பல.”
“தென் என்னோட ரெஷ்யூம் பார்த்து தான் எனக்கு உங்க அலுவலகத்துல இருந்து வேலைக்கான ஆஃபர் வந்தது. நான் அதை பயன்படுத்திக்கொண்டேன். அவ்வளவு தான். அதுக்காக நீங்க கண்படி பேசுறது எல்லாம் சரியில்லை. மத்தபடி நீங்க இங்க இருக்கீங்க, உங்கள வளைச்சு போடணும் என்ற தேவை எனக்கு எதுவும் கிடையாது. ஜஸ்ட் இது ஒரு ஜாப் அவ்வளவுதான். மத்தபடி எனக்கு வேற எந்த எண்ணமும் கிடையாது..” என்று சகி சொல்ல அவன் அதை சுத்தமாக நம்பவில்லை.
அது அவனது கண்களிலே நன்றாகவே தெரிந்தது. அவன் எதையும் நம்ப போவதில்லை இனியும் நம்ப மாட்டான் என்று இருந்தாலும் அவளுக்கு தன்னிலை விளக்கம் ஒரு முறையாவது சொல்லிவிட வேண்டும் என்று உயிர் துடித்தது. அவன் பேசிய கடுமையான சொல்லில் பெரிதாக காயம் பட்டுப் போனவள் அந்த காயத்தை அவனிடம் காட்டவில்லை.
தனக்குள்ளே ஒழித்து வைத்துக்கொண்டாள். அவன் கண் பட காட்டினால் அவனுக்கு இன்னும் அகம்பாவம் கூடும் என்பதால் தன் வலிகளையும் ரணங்களையும் அவனது கண்களுக்கு காட்டாமல் அமைதிகாத்தாள். ஆனால் அவளை அப்படியே விடாமல் பேசவைத்து சீண்டி விட்டுக்கொண்டு இருக்கிறான் சர்வா.
அதனால் அவள் சொல்லிவிட்டால். இனி நம்புவதும் நம்பாமல் போவதும் அவனது விருப்பம் என்று தோள்களை குலுக்கி கொண்டவள், எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் அவனது கைபிடியை நீக்கிவிட்டு அவள் பாட்டுக்கு தன்னுடைய பையில்களை எடுத்துக் கொண்டும் கிளம்பார்த்தாள்.
“மறுபடி மறுபடி சொல்லிட்டு இருக்கேன்லடி, ஒன்ஸ் நீங்க இங்க வந்துட்டா இனி என்னோட கட்டுப்பாட்டுக்குள்ள நீ இருக்கணும். உனக்கு என்கிட்ட தான் வேலை. என் கீழே தான் நீ வேலை பார்த்து ஆகணும்...” என்று அவன் சிறு ஏளனத்துடன் உறுதியாக சொல்லிவிட்டான்.
அவனது உறுதியில் இவளுக்கு கோபம் தான் வந்தது. ஏனோ அவனது பிடியில் தான் இருக்க விரும்பவில்லை தன்னை கட்டுப்படுத்தும் அவனை என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தாள். அப்படி பார்த்தவளின் நிமிர்வை அவன் வெறுத்தான்.
அவனது வெறுப்பை அவள் உணர்ந்தாலும் அதைக் கண்டு கொள்ளும் அளவுக்கு அவள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவளுக்கு தேவையானது இப்போதைக்கு ஒரு வேலை அவ்வளவுதான். அது யாரிடம் இருந்தால் என்ன என்று தான் அவளது எண்ணம் இருந்தது.
ஆனால் அதை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் எண்ணம் சர்வேஸ்வரனிடம் அதிகமாகவே இருந்தது.
தன் முன் மிக ராஜ தோரணையோடு நின்றவனை கடை கண்களால் கூட அவள் காணவில்லை. ஏனெனில் அவளுக்கு அவளின் தகுதி என்னவென்று தெரியும் என்பதால் அவனது தோற்றத்தை அவள் ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை.
அதுவே அவனது கோவத்தை சீண்டி விடுவதற்கு போதுமான காரணியாக இருக்க, அவளை எவ்வளவு தூரம் வைத்து செய்ய வேண்டுமோ அவ்வளவு தூரம் வைத்து செய்ய காத்திருந்தான் சர்வேஸ்வரன். ஏனோ அவளை பார்க்க பார்க்க அவனுக்கு தான் எப்படி ஏமாற்றப்பட்டு, அவமானப்பட்டு நின்றோம் என்பதே கண் முன் வர அவள் மீது கட்டுக்கடங்காமல் கோபம் பெருகியது.
அதை இந்த நொடியிலே இப்பொழுதே காட்ட அவனுக்கு ஆவேசம் பிறந்தது என்றாலும் அதை அடக்கி கொண்டவன், தன் விழிகளாலே அவளை எரித்தான். ஆனால் அவனது கோபத்துக்கோ ஆத்திரத்துக்கோ அவள் புறம் இருந்து எந்த எதிர்ப்பும் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் இருப்பதே அவனது கோபத்தை இன்னும் அதிகம் தோண்டிவிட்டது.
தன் உணர்வுகளை மற்றைப்பதே அவனது கோவத்தை இன்னும் அதிகமாக தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறோம் என்று தெரியாமலே இருந்தாள் சகி.
“உன்ன பாக்க பார்க்க எனக்கு அப்படியே அவ்வளவு கோவமா வருதுடி. ஆனா என்னால உன்கிட்ட அவ்வளவு கோபத்தை இந்த நிமிஷமே காட்டக் கூடாதுன்னு தோணுது. ஏன்னா உன்ன ஒவ்வொரு நிமிஷமும் வேதனைப் படுத்தி ரசித்து உன் வலிகளை என் கண்ணார நான் ரசித்து உணரணும்டி” என்று அவன் பல்லை கடிக்க அவனை ஏறிட்டு பார்த்தவள் மிக கம்பீரமாக,
“மிஸ்டர் சர்வேஸ்வரன் நான் இங்கே ஜஸ்ட் ஒரு வேலை பார்க்க மட்டும் தான் வந்திருக்கேனே தவிர உங்க ஆத்திரத்தையும் உங்க கோபத்தையும் கொட்டுற குப்பை தொட்டியா நான் இங்க வரல...” என்று அவள் நிமிராக சொல்ல, அந்த நிமிர்வுக் கூட அவனை இன்னும் கோபப்படுத்தியது.
அவளை அவளது அந்த நிமிர்வை உடைத்துப் போட வெறி வந்தது அவனுக்கு. பார்வையாலே அவளை கொன்று கூறுப் போட பார்க்க,
“இங்க பாருங்க மிஸ்டர், இந்த பழி வாங்குற படலம் எல்லாம் இங்க வேண்டாம்... சரிங்களா... எனக்கு ஒரு வேலை மிகவும் அத்தியாவசியம். இது உங்க கம்பெனி தான்னு தெரிஞ்சு நான் வர கிடையாது. சொன்னா புரிஞ்சுக்கோங்க இல்லையா என்னை இந்த வேலையை விட்டு நிறுத்துங்க. அதை விட்டு நீங்க பழி வாங்குறேன் பழம் பரிக்கிறேன்னு இருக்குறதுக்கு நான் ஆள் கிடையாது. எனக்கு நீங்க மட்டும் முக்கியம் கிடையாது. எனக்கு உங்களை தாண்டி எனக்கு எவ்வளவோ விசயங்கள் இருக்கு.” என்றவள் அவனை ஆழ்ந்து பார்த்து மிக மிக நிதானமாக,
“நான் உங்களை எப்பவோ கடந்து போயிட்டேன். அதனால என்ன ஒரு பெரிய விசயமா பாக்காம ஜஸ்ட் இக்னோர் பண்ணிட்டு உங்க வழியில நீங்க போங்க. நான் என் வழியில போறேன். அதுதான் நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது. முக்கியமா உங்க குடும்பத்துக்கு நல்லது. என்னால உங்க குடும்பத்துல குழப்பம் வரவேண்டாம்” என்று அவள் சொன்னாள்.
அவ்வளவு தூரம் அவள் படித்து படித்து சொல்வதை கொஞ்சம் கூட காதிலே வாங்கிக் கொள்ளாமல்,
“அதெல்லாம் எனக்கு தெரியாது. நான் உன்னை கட்டல் (ஷ்ட)படுத்தியே தீருவேன். என் மனசுல இருக்குற ரணம் இன்னும் அப்படியே தான் இருக்கு. அதுக்கு மருந்து போடாம நீ பாட்டுக்கு போனா எப்படி... என்னுடைய இத்தனை வருட கோவம் என்னத்துக்கு ஆகுறது.” என்று அவன் நக்கலாக கேட்டுக்கொண்டே அவளை தலையில் இருந்து கால் வரை உத்து பார்த்தேன்.
அன்றைக்கு பார்த்த அதே அழகு மாசு மறு அண்டாமல் இன்னும் அப்படியே இருக்க கண்டான். அது கூட அவனுக்கு ஆத்திரத்தை கிளப்பி இருக்க அவளிடம் அதை அப்படியே கொட்டி கவிழ்க்க எண்ணினான். ஆனாலும் நிதானத்தை கடைபிடிக்க முயன்று தன் பேன்ட் பாக்கெட்டில் தன் கரங்களை வைத்து கட்டுப் படுத்திக் கொண்டு நின்றான். ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்,
“உன்னோட காண்ட்ராக்ட்...” என்று ஒரு பைலை தூக்கி போட்டான். நேர்முகத் தேர்வில் பாஸ்ஆகி 2 வருட காண்ட்ராக்டிலும் அவள் கையெழுத்து போடப்பட்டு இருந்ததை எடுத்து காண்பித்தவன் ஏளனமாக அவளை பார்த்தான்.
சர்வாவின் ஏளன புன்னகையில் மனம் வெடித்துப் போனது என்றாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், ‘இரண்டு வருசம் தானே பரவாயில்லை. நான் இந்த நாட்களை சிரம பட்டேனும் கடந்துடுவேன்..’ என்று மனதில் தனக்கு தானே உறுதி கொடுத்துக் கொண்டவள், இந்த வேலையை விட்டு போகும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு,
“சரிங்க சார் நான் என்னோட வேலையை கண்டினியூ பண்றேன்...” என்று அவள் தன் முடிவை சொன்னாள்.
அதை கண்டவனுக்கு, “இப்படித் தான் நீ ஒவ்வொரு முறையும் உன்னோட பச்சோந்தி தனத்தை மாத்திக்கிறியா?” என்று அவன் கேட்க அந்த வார்த்தையில் அவள் துடிதுடித்துப் போனாள். கண்களை மீறி கண்ணீர் வர பார்க்க, ஆனால் அவன் முன்பு தன் கண்ணீரை காட்டிக் கொள்ளாமல்,
“நீங்க என்ன வேணா நினைச்சிக்கோங்க. எனக்கு இந்த வேலை முக்கியம் அதோட, நான் இந்த வேலையை விட்டா நீங்க தான் அக்ரிமெண்ட்ல இழப்பீடு தொகை போட்டு இருக்கீங்களே. என்னால இப்போதைக்கு அவ்வளவு பெரிய தொகை எல்லாம் பிறட்ட முடியாது. அதுக்காக மட்டும் தான் நான் இங்கே வேலை செய்ய ஒத்துக்கிட்டேன். மற்றபடி நீங்க சொன்ன பச்சோந்தி குணம் எனக்கு கிடையாது. இல்ல என் குணம் அப்படி தான்னு நீங்களே ஒரு கன்க்லூசன் வச்சி இருந்தா அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது” என்றாள் நிமிர்வாக.






