அத்தியாயம் 21

 
Admin
(@ramya-devi)
Member Admin

முகத்திலும் மனத்திலும் பெரும் கனல் மூண்டது அகத்தியனுக்கு. அது அப்பட்டமாக அங்கிருந்த மற்ற இருவருக்கும் தெரிந்தது. தமிழ் பயத்தோடு அவனுக்கு அருகில் அவனது கோவத்தை எண்ணி அமர்ந்து இருக்க, தாமரையோ மிகவும் மகிழ்ந்து போய் அமர்ந்து இருந்தார்.

“இன்னும் கொஞ்ச நேரம் தான்.. இவன் வெடிக்க ஆரம்பித்து விடுவான்.. ஏன்னா வச்ச நெருப்பு அப்படி” என்று மனதுக்குள் கருவிக் கொண்டார்.

அகத்தியன் கோவத்தை அடக்கிக்கொண்டு இருக்கிற விதமே தமிழுக்கு அடி நெஞ்சில் ஒரு பிரளயத்தை ஏற்படுத்தியது. “ப்ளீஸ் சித்தி இந்த வீடியோவை ஸ்டாப் பண்ணுங்க. உங்க கால்ல வேணாலும் விழறேன்” என்று கெஞ்சியவளை எகத்தாளமாக பார்த்தவர்,

“நீ இப்போ இந்த நிமிடம் உன் தாலியை கழட்டு நான் வீடியோவை ஸ்டாப் பண்றேன்” என்றார்.

தாலியையா என்று துடித்துப் போனாள். கணவன் கூடல் வேளையில் உறுத்துது என்று சொன்னாலே கழட்ட மறுப்பவள், இப்பொழுது பழிவெறியின் உச்சியில் நின்று கேட்ட தாமரைக்கு சம்மதம் கொடுப்பாளா?

“அது மட்டும் கேட்காதீங்க சித்தி.. ப்ளீஸ்” என்று கையால் தன் தாலியை இறுக்கி பிடித்துக் கொண்டாள்.

“அப்போ இந்த வீடியோவை சோஷியல் நெட்வொர்க்ல அப்லோட் பண்ணிடுறேன் நோ ப்ராப்ளம்” என்று அப்பட்டமாக மிரட்டினார்.

மருத்துவரிடம் தமிழ் இட்டுக்கட்டி ஒவ்வொன்றாக சொல்ல அதை கேட்டுக் கொண்டு இருந்த அகத்தியனுக்கு நெருப்பில் நிற்பது போல இருந்தது. தன் கோவத்தை கட்டுப் படுத்த முயன்றான். போக் ஸ்பூனை எடுத்து தட்டில் வைத்து அழுத்த, தட்டு உடைந்துப் போனது. உடைந்து போன தட்டின் இடைவெளியில் போட்டு இருந்த மேசையில் குத்தி ஆழமாக இறங்கி வளைந்து போனது.

அதிலே அவனது கோவம் உச்சியில் இருக்கிறது என்று புரிய பட்டென்று சித்தியின் கையில் இருந்த போனை வாங்கி தரையில் போட்டு உடைத்தாள் தமிழ்.

அதை எதிர் பார்க்காத தாமரை,

“ஏய்...” என்று ஆத்திரத்திலும் ஆங்காரத்திலும் தன்னை மீறி கத்தி, அவளை அடிக்க கையை ஓங்கினார். தமிழ் அசரவே இல்லை. அடி எவ்வளவு வேணாலும் அடி ஆனா தாலியை கழட்ட மாட்டேன் என்பது போல நின்றாள்.

“என்ன தைரியம் இருந்தா நீ என் போனையே போட்டு உடைப்ப. எங்க இருந்துடி உனக்கு இவ்வளவு தைரியம் வந்தது. இவ்வளவு நாள் பெட்டி பாம்பா இருந்துட்டு இப்ப படமெடுத்து சீறுரியா...” என்று சொல்லிக் கொண்டே அவளை அடிக்க வர, அவரின் கையை பிடித்து ஒரே தள்ளாக தள்ளி பின்புற இருக்கையில் போய் முட்ட வைத்த அகத்தியன்,

“கொன்னுடுவேன் உன்னை. யார் கிட்ட வந்து யார் தாலிய கேட்கிற... மனுசியாடி நீயெல்லாம்...” என்று டி போட்டு பேசியவனின் பேச்சில் முகம் சிவந்துப் போன தாமரை,

“ஏய் மரியாதையா பேசுடா” என்று அவர் ஆங்காரமாய் இன்னும் சத்தம் போட,

“உனக்கெல்லாம் எதுக்குடி மரியாதை.. மக முறையில இருக்கிறவளை கொடுமை பண்ணி வாழ விடாம துரத்தி அடிச்சி, அவளோட தாலியையே கேக்குறியே... என்ன ஜென்மம்டி நீஎல்லாம்.. அவளுக்கு யாரும் இல்லன்னு நினைக்காத நான் இருக்கேன். இன்னொரு முறை அவளை அதட்டி உருட்டுற வேலை வச்சுக்கிட்ட பொம்பளைன்னு கூட பார்க்க மாட்டேன். கழுத்தை அறுத்து போட்டுடுவேன்” எச்சரித்தவன்,

“நீ எந்த வீடியோவ வேணாலும் போடு. எனக்கு அத பத்தி எந்த கவலையும் இல்ல.. உன்னால என் முடியை கூட புடுங்க முடியாது. நான் ஆம்பளையா இல்லையான்னு என் பொண்டாட்டிக்கு மட்டும் தெரிஞ்சா போதும். அவளுக்கு மட்டும் நான் நிரூபிச்சா போதும். இந்த சமூகத்துக்கு நிரூபிக்கணும்னு எந்த அவசியமும் இல்ல” என்றவன்,

சொடக்கு போட்டு தாமரையை அழைத்தவன்,

“இது பேக் நியூஸ்னு க்ரியேட் பண்ணி உன் மேல மான ந(ஷ்)ட்ட வழக்கு போட்டு உள்ள தள்ள என்னால முடியும். அதுக்கு அபராதமா குறிப்பிட்ட பணத்தையும் பிடுங்க முடியும். அது மட்டும் இல்லாம நீ ஆண்டு அனுபவித்திட்டு இருக்கிற சொத்தை என் பொண்டாட்டிக்கும் சம உரிமை இருக்குன்னு சொத்துல பாதியை பிடுங்க முடியும்” என்றவன், தாமரையை ஏளனமாக பார்த்து “பிடுங்கவா... பிடுங்கி காட்டவா?” என்று ஆணித்தரமாக கேட்டவனின் வார்த்தைகளில் அச்சம் பிறந்தது தாமரைக்கு. ஏனெனில் அவனது தோணி அந்த மாதிரி இருந்தது.

“ரெண்டு அமைச்சர்களை கை வசம் வச்சுக்கிட்டா நீ என்ன பெரிய புடுங்கியா? உன் பருப்பு எல்லாம் இங்க வேகாது.. நீ இடையில தான் இந்த நிலைக்கு வந்து இருக்க. நான் பிறக்கும் போதே பார்ன் வித் கோல்ட் ஸ்பூன்... யாரை எங்க தட்டி எப்படி அடக்கி வைக்கணும்னு உன்னை விட எனக்கு நல்லா தெரியும். நீ தினமும் பப்புக்கு போறியே அந்த கதை எல்லாம் எனக்கு தெரியும். வித் எவிடன்சோட.. செம்பில் காட்டவா?” என்றவன் தன் போனை தட்டி ஒரு வீடியோவை ஓட விட்டான்.

அதில் அதித நெருக்கத்துடன் அறுபது வயது மனிதருடன் சல்லாபத்தில் மிதந்துக் கொண்டு இருந்தார் தாமரை.

“உன் வீட்டுல இருக்குறவங்க வேணா கண்டுக்காம இருப்பாங்க.. நீ தருதலைன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும்... ஆனா பொதுமக்கள் அப்படி இருக்க மாட்டாங்களே தாமரை... நீ போற வர இடமெல்லாம் கல்லெடுத்து அடிப்பாங்களே... என்ன பண்ணுவ... அது மட்டுமா போறவ வரவன் எல்லாம் ஐட்டம் ரேஞ்சுக்கு உன்னை கூப்பிடுவானுங்களே...” ராகத்துடன் சொன்னவன்,

“அப்படி கூப்பிட வைக்கவா?” அதித சீற்றத்துடன் சொன்னவனின் கூற்றில் அடி நெஞ்சில் இருள் சூழ்ந்தது தாமரைக்கு.

“அதோட மட்டுமா? அடுத்த எலெக்ஷனுக்கு உன் புருசனும் நிக்க முடியாது. உன் புள்ளையும் நிக்க முடியாது... நான் இறங்கணும்னு அவசியமே இல்லை. உன் செயல் மூலமாவே நான் நினைச்சதை சாதிச்சிக்குவேன்” என்றான் திமிராக.

அவனது இந்த அதிரடியில் தாமரைக்கு நெஞ்சு உலர்ந்துப் போனது. அவர் ஒன்றை நினைத்து இங்கே வந்தார், ஆனால் இங்கு நடப்பதோ வேறு.. கண்ணை கட்டிக் கொண்டு வந்தது.

அதிர்ந்து போய் அகத்தியனை பார்த்தார் தாமரை.

“என்ன ஷாக்கா இருக்கா.. இது ஒரே ஒரு நாள் சூட்டிங் தான். இதுக்கே ஷாக் ஆனா எப்படி... இன்னும் எவ்வளவோ சூட் இருக்கே.. அதெல்லாம் நீ பார்க்கணுமே... தினமும் ஒவ்வொன்னா ஷோசியல் மீடியாவுல அப்லோட் பண்ண சொல்றேன். மக்கள் எல்லோரும் பார்த்து இரசிக்கட்டும். நீயும் பார்த்து ரசி..” என்றவனை அச்சத்துடன் பார்த்தார்.

அவரது கண்களில் தெரிந்த பயத்தை கண்ட தமிழுக்கு பாவமாய் போனது. ஆனால் பாவப்பட்டு மீண்டும் அவரது வலையில் விழுந்து விட கூடாது என்பதில் கவனமாக இருந்தவள்,

“அதெல்லாம் எதுவும் வேணாங்க.. வாங்க நாம போகலாம்” என்றாள் தமிழ்.

அவளை முறைத்து பார்த்தான். அவனது பார்வையில் உள்ளுக்குள் கலக்கம் பிறந்தாலும்,

“அவங்க தான் அப்படி கீழ்தரமா நடந்துக்குறாங்கன்னா நாமளும் அப்படி நடந்துக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. நமக்குள்ள இனி அவங்க இன்டேர்பியர் ஆக மாட்டாங்க...” என்றவள்,

“என்ன சித்தி இன்டேர்பியர் ஆக மாட்டீங்க தானே” எழுத்தமாக தாமரையை பார்த்து கேட்டாள்.

தானாகவே தாமரையின் தலை ஆடியது.

“நான் சொல்லல... சித்தி ரொம்ப நல்லவங்கன்னு.. வாங்க நாம போகலாம்” என்று கணவனின் கையை பிடித்துக் கொண்டு வெளியே வந்தாள். வெளியே வரும் வரை அவளின் கை பிடியில் நின்றவன் அதன் பிறகு அவளின் கையை உதறி தள்ளினான் அகத்தியன்.

அவளுக்கு உள்ளுக்குள் நடுக்கம் எழுந்தது. ‘ஆகா மலை ஏறிட்டாரு போலையே... இனி என் கதி அதோ கதி தான்...’ என்று நினைக்கும் முன்பே அவளை விட்டுட்டு அவன் மட்டும் காரில் ஏறி போய் விட்டான்.

தாமரைக்கு முன்னாடி எதையும் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் தமிழின் அந்த செயலை மன்னிக்க முடியாதவன் அவளை நடு தெருவில் விட்டுட்டு போய் விட்டான்.

அவன் கோவப்படவில்லை என்றால் தான் ஆச்சரியம் என்று எண்ணிக் கொண்டவள் ஆட்டோவை பிடித்து வீட்டுக்கு வந்து விட்டாள். ஆனால் அதன் பிறகு அகத்தியனை வீட்டிலே பார்க்க முடியவில்லை. அலுவலகம் போகவும் ஒரு மாதிரி இருக்க அங்கே போகாமல் பள்ளிகூடத்துக்கு மீண்டும் வேலைக்கு சென்றாள்.

வீட்டில் அகத்தியனின் அரவமே இல்லாமல் போனது அடுத்து வந்த ஒரு வாரமும். அவனை எப்படியாவது சமாதனப் படுத்த வேண்டும் என்று உறுதி பூண்டவள் அவனின் அறையில் போய் இரவு தங்கிக்கொண்டாள்.

அவனுக்காக காத்திருந்து காத்திருந்து அப்படியே தூங்கியும் போய் விட இரவு பன்னிரண்டு மணிக்கு அறைக்கு வந்தவன் அங்கே தமிழ் நிம்மதியாக தூங்குவதை பார்த்து அவனது மனதில் புயல் அடித்தது.

“என்னால முடியாதாடி” என்று கேட்டு அவளை வதைக்க வேண்டும் என்கிற உணர்வு அவனை போட்டு அட்டி படைத்தது. ஆனால் நிதானித்துகே கொண்டவன் அவளை நெருங்காமல் உப்பரிகைக்கு சென்றவன் சாய்வு இருக்கையில் கால் நீட்டி படுத்துக் கொண்டான்.

அவளை நெருங்க எண்ணவில்லை அவன். அதனாலே இந்த ஒதுக்கம். திடுதிப்பென்று தமிழுக்கு முழிப்பு வர எழுந்து அமர்ந்தவள் உப்பரிகையின் கதவு திறந்து இருக்க கண்டு அதை சாற்ற போனவள் அங்கே தலைக்கு கையை கொடுத்து வெற்று மார்போடு தூங்கிக் கொண்டு இருந்தவனை கண்டு மனம் கனத்துப் போனவள் அவனை நெருங்கி அவனது நெஞ்சில் தலை வைத்து படுத்துக் கொண்டாள்.

இதுநாள் வரை அவளை தேடி அவன் தான் வருவான். ஆனால் முதன்முறையாக அவனை தேடி அவள் வந்தாள். குளிந்த காற்றில் வெற்று மேனியாக படுத்து இருந்தவனின் தேகம் குளிர்ந்து போய் இருந்தது. தன் முந்தானையால் அவனுக்கு போத்தி விட்டாள்.

மிக மெல்லிய தூரத்து தெரு விளக்கு வெளிச்சத்தில் அவனின் முகத்தை பார்த்தவளுக்கு ஏனோ அவனின் மீது காதல் வந்தது.

“நான் இவரை சரியா புருஞ்சுக்கலையா? புரிஞ்சு இருந்திருக்கணும்” பெருமூச்சு விட்டவள் எம்பி அவனது இறுகிய முகத்தில் முத்தம் வைத்தாள். தன்னை அடித்து துரத்தினாலும் இனி இவனை விட்டு போகக் கூடாது என்று முடிவெடுத்தவளுக்கு அவள் அவனை அடித்து காயம் செய்த இடம் தெரிய அந்த தழும்பில் தன் ஈர இதழ்களை புதைத்தாள்.

விழிகளில் நீர் நெகிழ்ந்தது. அடக்கிக் கொண்டவள் அவனின் நெஞ்சில் மீண்டும் தலையை சாய்த்துக் கொண்டவளுக்கு தூக்கம் வர தூங்கிப் போனாள். அவள் தூங்கி சிறிது நேரம் கூட ஆகி இருக்காது. இவனுக்கு முழிப்பு வந்தது. அவனே மிகவும் கடினப்பட்டு தான் தூங்கினான். அதற்குள் விழிப்பு வர எரிச்சல் ஆனான்.

அவனது தூக்கம் கலைய காரணம் அவனது நெஞ்சில் ஏதோ அழுத்திய உணர்வு வந்தது தான். விழித்து பார்த்தவனின் நாசியில் மல்லிகை பூ வாசம் வந்து மோதியது, கூடவே அவனது நெஞ்சில் பாரமும் உணர குனிந்து பார்த்தான்.

அவனின் மனைவி தான். “விட மாட்டா போல” வாய்க்குள் முணகிக் கொண்டவனுக்கு தன் ஆத்திரத்தை கட்டுப் படுத்த வழி தெரியவில்லை.

“விலகி போனாலும் நெருங்கி வந்து இம்சை பண்ணா நான் என்ன பண்றது?” என்று கடுப்படித்தவன் அவள் தூங்குவதை கூட சட்டை செய்யாமல் தன் மீது இருந்தவளை கீழே தள்ளி அவளின் மீது புயல் வேகத்தில் பரவி படர்ந்தான் மிக மிக வன்மையாக.

Loading spinner
This topic was modified 5 days ago 2 times by Admin
Quote
Topic starter Posted : March 10, 2025 2:42 pm
(@gowri)
Eminent Member

ஸ்லிப்பர் ஷாட் மரை கிழவிக்கு 🤭🤭🤭🤭.....

Aww அகா 🙈🙈🙈🙈🙈

Loading spinner
ReplyQuote
Posted : March 10, 2025 4:09 pm
(@sairevw)
New Member

What happened?? Why didnt u post a new epi

Loading spinner
ReplyQuote
Posted : March 12, 2025 1:33 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top