அவள் எதுவும் சொல்லாமல் அவனது தோளை மட்டும் சுட்டிக் காட்டினாள் ஒற்றை விரலில். அதில் மெல்லிய புன்னகை வர, தன் தோளில் அவளை இழுத்து சாய்த்துக் கொண்டான். தமிழுக்கு கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.
இது காதலா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் கணவன் என்கிற பிடிப்பு அதிகம் வந்து இருந்தது.
அவனது புஜத்தொடு இரு கையையும் விட்டு கட்டிக் கொண்டவள் அவனது வலிமை மிகுந்த தோளில் சாய்ந்துக் கொண்டாள். அவளின் தலையோடு தன் தலையை வைத்து அழுத்தி அவளின் உச்சந்தலையில் முத்தம் வைத்தான் அகத்தியன்.
அந்த நிறைவான பொழுதை இருவரின் மனமும் அதிகம் நேசித்தது. ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விடவெல்லாம் இல்லை. ஆனால் “இது நல்லா இருக்கு அது நல்லா இருக்கு... சாப்பிடுங்க, சாப்பிட்டு பாருடி” என்று சொல்லி ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்டார்கள்.
அதை கெடுக்க வென்றே அவர்களுக்கு முன்னாடி வந்து அமர்ந்தார் தாமரை.
தங்களுக்கு என்றே ரிசேர்வ் செய்து இருந்த டேபிளில் யாரது அத்துமீறி அமர்வது என்று நிமிர்ந்து பார்த்த அகத்தியன் அங்கே தாமரை இருப்பதை பார்த்து சினம் எழுந்தது. தமிழ் நிமிர்ந்து பார்த்து விட்டு கணவனை ஒரு பார்வை பார்த்தாள்.
எங்கே மீண்டும் தாமரை எதாவது சொல்லி அதை அப்படியே நம்பி விடுவானோ என்று உள்ளுக்குள் அச்சமாக இருந்தது. ஆனால் அப்படி நம்பி விட்டால் இனி தன் வாழ்க்கையில் அவனுக்கான இடம் எதுவுமே இருக்காது என்று மட்டும் தீர்மானித்துக் கொண்டாள்.
அவளும் எவ்வளவு நாள் தான் தீக்குளித்துக் கொண்டே இருக்க முடியும். ஒவ்வொரு முறையும் தன்னை நிரூபித்துக் கொண்டே இருக்க முடியுமா?
இதுவும் நல்லதுக்கு தான்.. தாமரை வந்தால் தானே இவர் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியும்.. பெருமூச்சு விட்டவள் அமைதியாக இருந்தாள்.
“என்ன புருசனும் பொண்டாட்டியும் ரொம்ப ஜாலியா இருக்க மாதிரி இருக்கு?” என்று நக்கலுடன் கேட்டார் இருவரையும் பார்த்து. தமிழ் வாயை திறக்கவில்லை. அகத்தியன் மட்டும் தாமரையை கூர்ந்து பார்த்தான். ஆனால் எதுவும் பேசவில்லை.
“நான் உன்னை என்னவோன்னு நினைச்சேன் அகத்தியன். ஆனா இப்படி போயும் போயும் ஹோமோ செ..ஸ் வச்சு இருக்கவளோட குடும்பம் நடத்துற பாரு.. ஐ சேம் ஆன் யூ” என்று சொன்னவர், பின் புருவம் சுறுக்கி,
“ஒரு வேளை உன்னால முழுமையான பெண் கூட எதுவும் செய்ய முடியாதா? நீ அந்த மாதிரி ஆளா” என்று முடிக்கும் முன்பே,
“அவ்வளவு தான் உங்களுக்கு லிமிட் சொல்லிட்டேன்.. என்னை தான் இன்சல்ட் பண்ணிங்க பொறுத்துக் கிட்டேன். ஆனா அவரை இன்சல்ட் பண்ணா பொறுத்துக்கிட்டு இருப்பேன்னு நினைக்காதீங்க. உங்க வயசுக்கு தான் இவ்வளவு நாளும் மரியாதை குடுத்து அமைதியா இருந்தேன். ஆனா அந்த மரியாதை இனிமே இருக்காது. ஒழுங்கா அவர் கிட்ட சாரி கேட்டுட்டு இங்க இருந்து கிளம்புங்க” என்றாள் கோவமாக.
அகத்தியனை அப்படி பேசவும் ஏனோ அவளால் தாங்க முடியவில்லை. அவளே அதற்கு முன்னாடி அப்படி பேசி இருக்கிறாள் தான். ஆனால் தாமரையிடம் தன் கணவனை அவளால் விட்டுக் குடுக்கவே முடியவில்லை. பொங்கி விட்டாள்.
“என்ன ரொம்பதான் ரோஷம் வருது... புருஷன் வீட்டு சாப்பாடு பேச சொல்லுதோ” மேலும் நக்கல் பண்ணினார்.
“தேவையில்லாம பேசாதீங்க.. இதுநாள் வரை எங்க வாழ்கையில விளையாண்டது போதாதா...? இன்னும் விளையாட என்ன இருக்குன்னு இப்படி சுத்தி சுத்தி வந்து டார்ச்சர் பண்றீங்க?” இரைந்தாள்.
“ஏன்னா நீ நிம்மதியா இருக்குறது எனக்கு ரொம்ப உறுத்தலா இருக்கு. அதனால தான்” என்றார் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல்.
“ச்சீ நீங்க எல்லாம் ஒரு பொம்பளை தானா? அக்கா மகளை வாழ விடாம செய்யிறதுல உங்களுக்கு அப்படி என்ன மகிழ்ச்சி”
“நான் ஏன் அக்காவையே வாழ விடல... அவ பெத்து போட்ட உன்னையவா வாழ விடுவேன்” என்று ஏகத்தாளமாக கேட்டவரை பார்த்து அவ்வளவு ஆத்திரம் வந்தது தமிழுக்கு.
“இப்போ உங்களுக்கு என்ன தான் வேணும்?”
“சிம்பிள்... உன் கழுத்துல இருக்குற தாலியை இவன் கிட்ட கழட்டி குடுத்துட்டு என்னோட வா” என்றார்.
“இல்லன்னா?”
“வேற என்ன செய்வேன். இவன் ஒரு ஆம்பளையே இல்லன்னு பேக் நியூஸ் பரப்புவேன். இவனால எதுவும் முடியாதுன்னு நீ டாக்டர் கிட்ட சொன்ன வீடியோவை லீக் செய்வேன்” என்றார்.
தமிழுக்கு கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது. இப்பொழுது தான் இருவரும் நடந்ததை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விட்டு நட்பு இழைகள் ஒவ்வொன்றாக கோர்க்க ஆரம்பித்தார்கள்.
இந்த நேரம் இப்படி வந்து அந்த பொன் நூலிழைகளை எல்லாம் அறுத்து எறிவது போல வந்து நின்ற தாமரையை என்ன செய்வது என்று தெரியவில்லை.
அகத்தியன் மீது இருந்த கோவத்தை தீர்த்துக் கொள்ள வீம்புக்காக செய்த ஒரு செயல் இப்படி அவளை மீண்டும் துரத்தும் என்று அறியாமல் போனாள் தமிழ்.
அகத்தியன் வாயையே திறக்கவில்லை. ஆனால் தாமரை பேச பேச முகம் சிவுசிவுத்துப் போனது. அவனை ஏறிடவே அவளால் முடியவில்லை.
எதை மறப்பதற்காக ஆறு மாத காலமாக வீட்டு பக்கம் வராமல் அலைந்து திரிந்தானோ இப்பொழுது மீண்டும் அதே பிரச்சனை அவன் முன்னாடி விஸ்வரூபம் எடுக்க இருக்கிறது.
தமிழுக்கு தன் தலைவிதியை எண்ணி நொந்து போவதை தவற வேறு எதுவும் புரியவில்லை. அகத்தியனின் அடக்கப்பட்ட கோவம் வேறு அவளுக்கு கிலியை பரப்ப, தாமரையை பார்த்து கெஞ்சினாள்.
“ப்ளீஸ் அப்படி மட்டும் செய்துடாதீங்க... அது நான் ஏதோ விளையாட்டுக்கு கோவத்துல செய்தது. அதை தயவு செய்து எங்கயும் போட்டுடாதீங்க... அவர் குடும்பத்தால இந்த விசயத்தை தாங்கிக்கவே முடியாது”
“அப்போ நான் சொன்னது இப்போ இந்த நிமிடமே செய். உன் புருசனோட மானம் காப்பாத்தப் படும். இல்லன்னா ஒரே ஒரு பட்டன் தான்...” என்று அவரது செல்போனை காட்டி மிரட்டினார்.
அதில் மருத்துவரோடு தமிழ் பேசிய பேச்சு ஓடிக்கொண்டு இருந்தது. அவளாலே அதை காது குடுத்து கேட்கமுடியவில்லை. காதை பொத்திக் கொண்டாள்.
“நிறுத்துங்க ப்ளீஸ்” என்று கெஞ்சினாள். ஆனால் தாமரை நிறுத்தவே இல்லை. வன்மம் கக்கும் விழிகளோடு தன் எதிரில் இருந்த அகத்தியனை நிமிர்ந்து பார்த்தார்.
“உன்னை வாழ விட மாட்டேன்டா” என்று அச்சுறுத்தினார்.
அவனோ அங்கு நடக்கும் எதையும் கண்டு கொள்ளாமல் உணவில் கவனமாக இருந்தான். அப்படி காட்டிக் கொண்டான். ஆனால் தமிழ் மருத்துவரோடு பேசிய வீடியோ ப்ளே ஆனதில் அவனது காது மடல் விரைத்துக் கொண்டது. காது மட்டுமா... மொத்த உடலும் விரைத்துக் கொண்டது.
அடக்கப்பட்ட கோவம் அவனில் தெரிய தாமரை இதை தானே எதிர்பார்த்தேன்... பூகம்பம் வெடிக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டேன் என்று மகிழ்ந்துப் போனார்.
“இனி இவளை அடித்து துரத்த வேண்டும் அது தான் பாக்கி... அதையும் அவனே செஞ்சிடுவான் போல... அவ்வளவு ஆத்திரம் வருது இவனுக்கு..”
“பின்ன யாருக்கா இருந்தாலும் அவனின் ஆண்மையை குறையாக பேசினால் கோவம் வரத்தானே செய்யும். அதனால தானே இந்த வீடியோவை தேடி கண்டு பிடிச்சு எடுத்தேன்.. இனி நீ எப்படி நல்லா வாழ்ந்திடுறன்னு நான் பார்க்கிறேன்டி” என்று மனதுக்குள் கருவிக் கொண்டார் தாமரை.
“உன்னை நல்லா வாழ விட்டுடுவனாடி உன்னை?” கொக்கரித்துக் கொண்டார் உள்ளுக்குள். அவருக்கு தமிழை எளிதில் விட மனமே இல்லை. ஆரம்பத்தில் அக்காவின் வாழ்க்கையை கெடுத்தார். பிறகு அவரின் மகளோட வாழ்வையும் கெடுக்க பார்க்கிறார்.
உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அவரை ஆட்கொண்ட பயம் தான் இன்று சைக்கோ தனமான இந்த வேலையையும் செய்ய வைத்தது. ஆம் எங்கே சொத்து தன் கையை விட்டு பொய் விடுமோ என்று அஞ்சி தான் தன் கணவன் செல்லாப்பவுக்கே தன் அக்காவை கல்யாணம் செய்து வைத்தார். ஆனால் தன் கணவனோடு அவரை வாழ விடாமல் கிராமத்துக்கு துரத்தி விட்டார்.
இதில் தாமரை கொஞ்சமும் எதிர்பாரா திருப்பம் செல்லப்பா கனகாவிடம் வலுக்கட்டாயமாக பழகி அவரை துன்புறுத்தி தன் ஆசைக்கு இணங்க வைத்து குழந்தையும் கொடுத்து விட்டார்.
அதில் மூர்க்கமான தாமரை தன் கணவனை அதன் பிறகு ஊருக்கே விடாமல் கண் கொத்தி பாம்பாக பார்த்துக் கொண்டார். பிரசவத்தில் அவரின் அக்கா இறந்து போய் விட்டார். இல்லை என்றால் தாமரையே என்றைக்காவது ஒரு நாள் அவரை கொன்று போட்டு இருந்தாலும் இருப்பார். ஏனெனில் அவருக்கு இன்செக்யூர் உள்ளுக்குள் வந்து விட்டது.
அவரின் அக்கா இறந்து போகவும் இனி தன் கணவன் தனக்கு தான் என்று எண்ணிக் கொண்டார். அது எல்லாம் தமிழ் இந்த வீட்டுக்கு வரும் வரை தான்.
தமிழ் தாத்தா பாட்டியோடு வீட்டுக்குள் நுழைய, செல்லாப்பாவுக்கு மகன் மீது மகளின் மீது அதிக பாசம் சுரந்தது.
துரதிஷ்ட்டவசமாக தன் கணவனின் பாசம் தனக்கும் தன் மகனுக்கும் கிடைக்காமல் போவதை உணர்ந்த தாமரை செல்லப்பாவை மிரட்டி உருட்டி தன் கைக்குள் வைத்துக் கொண்டார்.
“உன் மக உந கண்ணெதிரில உயிரோட வாழ்ந்தா போதுமா இல்ல அவ படத்துக்கு மாலை போட்டு கும்பிட்டா போதுமா?” என்று ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார். செல்லப்பா ஆடி போய் விட்டார். அதன் பிறகு செல்லப்பா மகளின் பக்கம் திரும்ப கூட இல்லை. அவள் முழுக்க முழுக்க தாத்தா பாட்டியின் நிழலிலே வளர்ந்தாள்.
எட்டி நின்று கூட செல்லப்பா தன் மகளை பார்க்கவில்லை. ஏனெனில் பார்வை இதமாய் தன் மகளின் மீது விழுந்தாலே போதும். தன் மகளின் உயிருக்கு ஆபத்தாக போய் விடும் என்று எண்ணி பாசத்தை மறைந்து நின்று கூட அவரால் காட்ட முடியவில்லை. ஆனால் நெஞ்சு நிறைய அவருக்கு தமிழின் மீது பாசம் இருந்தது. அன்பு இருந்தது. அதுஒரு சந்தர்பத்தில் கூட வெளிப்பட்டு விட கூடாது என்பதில் அவ்வளவு கவனமாக இருந்தார் செல்லாப்பா.
யாருக்கும் தெரியாமல் தன் மகளுக்கு நல்ல வரனாக பார்த்துக் கொண்டு இருந்தார். அந்த நேரம் அகத்தியனின் வரன் தானாக அமைய தன் தகப்பனை வைத்தே எல்லாவற்றையும் சரியாக செய்துவிட்டார்.
தாமரையும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இங்க இருக்கிற பீடை வீட்டி விட்டு போனா சரி என்று தான் எண்ணினார். அதனால் தான் கல்யாணத்தில் எந்த குளறுபடியும் செய்யவில்லை.
செல்லப்பாவும் சற்றே துணிந்து தானே தன் மருமகனுக்கு யாருக்கும் தெரியாமல் அமைச்சர் பதவியை வாங்கி தர துடித்தார். ஆனால் அதையும் தெரிந்துக் கொண்டு தாமரை அவரிடம் கேள்வி கேட்க,
“நம்ம எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு இது அவசியம் தாமரை” என்று சப்பை கட்டு கட்டினார். ஆனால் தாமரைக்கு உள்ளுக்குள் பெரும் சந்தேகம் இருந்தது.
அகத்தியனுக்கு அமைச்சர் பதவி கிடைக்க கட்சியின் தலைமை இடத்துக்கு அடிமட்ட வேலை செய்து தருவதாக இவளுக்கு தகவல் கசிய,
“பலே கில்லாடி தான் இந்த செல்லப்பா.. மக மேல இருந்த பாசம் இப்போ அவ புருசன் மீதும் பாயுதோ.. விட மாட்டேன்” என்று கருவியவர் தமிழின் குடும்ப வாழ்க்கையை கெடுக்க சதி திட்டம் போட்டார். அவர் எண்ணியபடியே எந்த புரிதலும் இல்லாமல் தமிழும் அகத்தியனும் டைவேர்ஸ் செய்துக் கொண்டார்கள்.
ஆனால் இதில் எதிர்பாராத ட்விஸ்ட் இருவரும் மீண்டும் இணைந்தது தான். அதை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
இதோ களத்தில் இறங்கி விட்டார் இருவரையும் பிரிக்க... இனி என்ன ஆகுமோ... கோவத்தில் தமிழை அகத்தியன் உதறிவிட்டு போவானா? இல்லை கரம் பிடிப்பானா? என்று பார்க்க வேண்டும்.
அதே போல தாமரையின் மிரட்டலுக்கு பயந்து தாலியை கலட்டி கணவனின் கையில் கொடுப்பாளா? இல்லை அவரை எதிர்த்து நின்று போராடுவாளா? என்று பார்க்க வேண்டும்.
இருவரின் செயலையும் பொறுத்து தான் அவர்களுக்கு இடையே உள்ள புரிதலின் அளவு தெரியும்..
பார்ப்போம் பிரிந்த தம்பதியர் சேர்ந்து நின்று வெற்றி பெறுகிறார்களா? இல்லை சூது, வாது, சூழ்ச்சி நிறைந்த, வஞ்சகம் கொண்ட தாமரை வெற்றி பெறுகிறாரா என்று..
என்னங்க ரைட்டர்! இது எல்லாம் ரொம்ப தவறுங்க.....
இப்படியா வந்து தொடரும் போட்டு வைக்கரது🤧🤧😳😳
ஆன எங்க அக மேல நம்பிக்கை இருக்கு....
அவன் இந்த மரை கிழவிக்கு சரியான ரிவிட்டு அடிக்க போரான்🤭🤭🤭🤭😂😂😂😂😂