அத்தியாயம் 1.1
அன்றாடம் விடியும் காலை பொழுதினை குறுங்கண்ணோரம் பார்த்துக் கொண்டு நின்றாள் ஆதினி. எப்பொழுதும் போல ஒரு விடியல் தான். இதில் மட்டும் என்ன வேறுபாடு என்று ஆராய்ச்சியுடன் அந்த காலை வேளையை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள். வீட்டின் உள்ளே பேச்சுக்குரல் கேட்டது. “இன்றைக்கு என்ன நாள்னு மறந்து போச்சா…? வேலை தலைக்கு மேல கிடக்கு இப்படி அசமந்தமா இருந்தா எப்படிங்க… கொஞ்சமாச்சும் சுருசுருப்பா இருக்குறது இல்லையா” என்று அப்பாவிடம் கேட்ட தாயின் பேச்சில் எரிச்சல் மண்டியது […]

